புதன், நவம்பர் 17, 2010

ஏழைகளை கடன்காரார்களாக்கும் கலைஞர் வீடு திட்டம்.


 
தமிழகத்தில் குடிசை வீடுகளில் கஸ்டப்படும் ஏழைகளுக்கு கான்கிரிட்டால் ஆனா வீடுகளை கலைஞர் வீடு கட்டி தரும் திட்டத்தின் மூலம் கட்டி தர அரசு முடிவு செய்து தமிழகத்தில் குடிசையில் வாழும் 21லட்சம் வீடுகள் கணக்கெடுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் இந்த ஆண்டு 3 லட்சம் வீடுகள் கட்டி முடிக்க வேண்டும்மென திட்டம் இயற்றப்பட்டு அதற்கான பணிகள் வேக வேகமாக நடந்து வருகின்றன. இந்த திட்டம் சிறந்த திட்டம் தான். அதனால் தான் இந்த திட்டத்தை காங்கிரஸ் எங்களது திட்டம் என குறுக்கு சால் ஒட்டி பெயர் தட்டி செல்ல முயல்கிறது.
 
ஆனால் இந்த திட்டம் ஏழை கிராமபுற மக்களை கடன்காரர்களாக மாற்றி வருகிறது. இது ஏதோ போற போக்கில் வைக்கப்படும் குற்றச்சாட்டல விசாhரித்துவிட்டு வைக்கப்படும் குற்றச்சாட்டு.
 
முதலில் திட்டத்தை பற்றி அறிந்துக்கொள்வோம், தமிழகம் முழுவதும் இந்த ஆண்டு தற்போது 3 லட்சம் வீடுகள் 75 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்டு வருகின்றன. இந்த வீடுகளை 200 சதுர அடியில் பயனாளிகள் கட்டிக்கொள்ள வேண்டும் அதற்கான சிமெண்ட், கதவு, ஜன்னல், ஆகியவற்றை மட்டும் அரசு தந்து விடும். அதற்கு 15 ஆயிரத்தை பிடித்துக்கொள்ளும். மீதி 60 ஆயிரத்தில் கருங்கல், செங்கல், மணல், மேஸ்திரி கூலி ஆகியவற்றை பயனாளிகள் ஏற்பாடு செய்துக்கொள்ள வேண்டும் அதற்கான பணத்தினை அரசு அதிகாரிகள் கண்காணித்து வீடு கட்ட கட்ட 4 தவணையாக பணத்தை தருவார்கள்.
 
இப்போது அரசு நிர்ணயித்துள்ள 75 ஆயிரத்தில் தான் பிரச்சனையே. அரசு இந்த திட்டத்தை போடும் போது 1 கருங்கல் விலை 4 ரூபாய், 1 செங்கல் விலை 3 ரூபாய், 1 மூட்டை சிமெண்ட் 170 ரூபாய், 4 யூனிட் மணல் 5 ஆயிரம் ரூபாய், ஆண் கொத்தனார் கூலி 250 ரூபாய், பெண் கொத்தனார் கூலி 150 ரூபாய், 1 டன் இரும்பு 25 ஆயிரம் இதையெல்லாம் கணக்கு போட்டு வீடு கட்ட 75 ஆயிரம் ஆகும் என கணக்கிட்டு 1 வீடு கட்ட 75 ஆயிரம் செலவாகும் என அரசு முடிவு செய்து அறிவித்தது.
 
ஆனால் இந்த திட்டம் நடைமுறைக்கு வரும்போது பெரிய பிரச்சனைகளை சந்திக்கிறது. திட்டம் தீட்டும் போது கட்டுமான பொருட்களின் விலையென்னவோ குறைவு தான். திட்டம் செயல்பாட்டுக்கு வரும்போது திட்டம்மிட்டே சிண்டிகேட் அமைத்து கட்டுமான பொருட்களான கருங்கல், செங்கல், சிமெண்ட், மணல், கம்பி வியாபாரிகள் திட்டமிட்டே விலையேற்றம் செய்துள்ளார்கள்.

 
தற்போது விலையேற்றத்தின் படி தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் 1 கருங்கல் விலை 8 ரூபாய், 1 செங்கல் விலை 6 ரூபாய், 1 மூட்டை சிமெண்ட் 250 ரூபாய், 4 யூனிட் மணல் 8 ஆயிரம் ரூபாய், ஆண் கொத்தனார் கூலி 300 ரூபாய், பெண் கொத்தனார் கூலி 150 ரூபாய், 1 டன் இரும்பு 35 ஆயிரம் என விலையேற்றம் செய்யப்பட்டுள்ளது. ஏல்லாமே திட்டமிட்டு டிமாண்ட் உருவாக்கி செய்யப்பட்ட விலையேற்றம். இதில் பாதிக்கப்படுவது பொதுமக்கள் தான்.
 
தற்போது இந்த விலைக்கும் கட்டுமான பொருட்கள் கிடைக்க விடாமல் செய்கிறார்கள். இதனால் தற்போது அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது கிராமத்து ஏழை பொது மக்கள் தான். மழையில் குடிசை வீட்டில் வாழ்ந்து கஸ்டப்படும் நமக்கு கான்கிரிட் வீடு கிடைக்கின்றதே என சந்தோஷப்பட்டு இருந்த குடிசை வீட்டையும் இடித்து விட்டனர். அதன்பின் விலையேற்றத்;தால் தற்போது அரசாங்கத்தில் தரப்படும் 60 ஆயிரத்தில் வீடு கட்ட முடியவில்லை என்பதால் ஏழைமக்கள் கந்து வட்டிக்கும், கழுத்தில், காதில் இருக்கும் தங்கத்தை அடகு வைத்தும் கடன் பெற்று வீடு கட்டி வருவதை பார்க்க முடிகிறது.
 
தற்போது கலைஞராகட்டும், துணை முதல்வர் ஸ்டாலினாகட்டும் கலைஞர் வீடு திட்டத்தில் திறந்து வைத்துள்ள வீடுகள் 75 ஆயிரத்தில் கட்டப்பட்டவையள்ள. 1லட்சத்து20 ஆயிரத்துக்கும் மேல் செலவாகியுள்ளது. மீதி 45 ஆயிரம் ஏழை மக்கள் வட்டிக்கு வாங்கிய பணம்.

 
திமுகவுக்கு நல்ல பெயர் கொண்டு வரவேண்டிய திட்டம் விலையேற்றத்தால் ஏழை மக்களை கடன்காரர்களாக்கி திமுக அரசுக்கு எதிராக சாபம் விட வைக்கிறது. இது அரசாங்கத்துக்கு தெரியாமல் இல்லை. அதிகாரிகளுக்கும் தெரியாமல் இல்லை.

சமீபத்தில் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் செங்கல், மணல், கருங்கல் விற்பனையாளர்களை அழைத்து பழைய விலையில் நியாயமான விலையில் விற்பனை நடக்கவில்லையெனில் பர்மிட் கேன்சல் செய்யப்படும் என எச்சரித்ததன் விளைவு பழைய ரேட்டில் அங்கு சிமெண்ட்டை தவிர எல்லாமே விற்பனை செய்யப்படுகிறது. அதை மற்ற மாவட்ட அதிகாரிகள் பாலோ செய்வதில் என்ன தயக்கம். தயக்கத்திற்க்கு காரணம் முதலாளிகள் தரும் கமிஷன். அரசியல்வாதிகள் மட்டும் தான் சம்பாதிக்க வேண்டுமா நாங்கள் சம்பாதிக்க கூடாதா என அதிகாரிகள் எண்ணியதன் விளைவு முதலாளிகளிடம் அதிகமாக சோரம் போய்க்கொண்டுயிருக்கிறார்கள்.

எதிர்கட்சிகள், பொதுமக்கள் விலையேற்றத்தை குறையுங்கள் என கேட்பதற்க்கு விலையேற்றமேயில்லை என முழு பூசணிக்காயை சோற்றில் போட்டு திமுக அரசாங்கம் மறைத்து வருகிறது. இது தொடர்ந்தால் மற்ற திட்டங்களில் திமுக அரசாங்கம் சம்பாதித்து வைத்துள்ள பெயர் இந்த திட்டத்தால் மக்கள் மத்தியில் கெட்டுப்போய்விடும். கத்தரிக்காய் முத்தினால் கடை தெருவுக்கு வரும் என்பதை போல இப்படியே தொடர்ந்தால் திமுக ஆட்சிக்கு டும் டும் கொடுப்பார்கள் கலைஞர் வீட்டு வசதி திட்டத்தால் பாதிக்கப்படும் ஏழை மக்கள் உஷார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக