திங்கள், மார்ச் 17, 2014

7. இந்தியாவி (ல்) ன் காதல்! ( சிலோன் முதல் ஈழம் வரை )




      சுதந்திரத்திற்கு பின் வளர்ச்சியில் கவனம் செலுத்திய பிரதமர் நேரு அணி சேரா கொள்கையை (பஞ்சசீல கொள்ளை) வகுத்து பிறநாட்டின் உள்விவகாரங்களில் தலையிடாமல் இருந்தார். ஆனாலும், 1963ல் இந்தியா மீது படையெடுத்த சீனா, நம் எல்லைகளை ஆக்ரமித்தது பின் சமாதான உடன் படிக்கை செய்துகொண்டோம். வெளிநாட்டு விவகாரங்களை அதுவரை IB (Intelegent Bears) என்ற புலனாய்வு அமைப்பு தான் கவனித்து வந்தது. சீன போரை அது முன்கூட்டியே சொல்ல முடியாததால் விமர்சனம் எழுந்தது. அதனால் பிரதமர்க்கு கட்டுப்பட்ட வெளிவிவகார புலனாய்வு அமைப்பை உருவாக்க முடிவு செய்தார் ஜவஹர்லால் நேரு. பிரதமர் ஜவஹர்லால் நேரு.  அதன்படி அமைப்பின் உருவாக்கத்திற்க்கான பணிகள் வேகமெடுத்தன. இறுதியில் 21 செப்டம்பர் 1968 ஆம் தேதி R&AW ( Research and Analysis Wing) என்கிற புதிய புலனாய்வு அமைப்பு உருவானது. அதனை ஆர்.என்.கவ் (R.N.Kao) என்பவர் தான் உருவாக்கினார். அது செய்யவேண்டிய பணிகளாக சிலவற்றையும் வரையறுத்தார். அவை வெளிநாடுகளில் வேவுபணி பார்ப்பது, நம் நாட்டுக்கு எதிராக ஏதாவது சூழ்ச்சி வலைகள் பின்னப்படுகிறதா என்பதை கண்காணிப்பது, நம் எதிரிநாடுகளின் நண்பர்கள் யார்?. எதிரிகள் யார்? நமக்கு எதிராக அவர்கள் ஏதாவது செய்கிறார்களா? அதோடு அரசியல் சூழ்நிலைகளை முன்கூட்டியே கனிப்பது அவைகளையெல்லாம் தலைமைபீடத்தில் இருப்பவர்களிடம் எடுத்துக்கூறுவது போன்றவை தான் அதன் தலையாய பணிகளாகம். இது பிரதமரின் நேரடிகட்டுப்பாட்டுத் துறை. இத்துறையின் செல்லக்குட்டிகளாக The Aviation Research Centre, The Radio Research Centre, Electronices & Tech. Services, National Tech. Facilities Organisation, Special Frontier Force Mfpait nray;gLfpd;wd.

      நேரு இறந்த பின் அமைச்சரவையில் இருந்த அவரது மகள் இந்திராகாந்தி இந்தியாவின் பிரதமரானார். அவரின் பார்வை விசாலமானது. இந்தியாவின் அண்டை நாடுகள் மட்டுமல்ல உலக நாடுகளின் அரசியலை நன்கு அறிந்து வைத்திருந்தர். எதிரிகளை சட்டென அடையாளம் காணும் திறனும், முடிவு எடுக்கும் திறன் அதிகம் பெற்றவர். நேருவின் கொள்கைகளை சற்று தள்ளியே வைத்து பார்த்தவர் வளர்ச்சியே முக்கியம் என பாடுபட்டவர். நாட்டு பற்றாளர்களையும், பல சுயநலமில்லாத அரசியல் அறிஞர்களை ஆலோசகராக பெற்றவர்.

      உலகில் சோவியத் யூனியன்னுக்கும் - அமெரிக்காவுக்கும் இடையே பனிப்போர் நடைபெற்றுக் கொண்டிருந்த நேரம் உலகின் பல நாடுகள் சோவியத் ஆதரவில் இருந்தது. அமெரிக்காவோடு நட்பு கொண்டிருந்த ஆப்கானிஸ்தானில் கலவரத்தை உண்டு பண்ணி தன்தடத்தை பதித்தது சோவியத்.  இந்தியாவும் சோவியத்தோடு அனுசரணையாக இருந்தது இது அமொரிக்காவுக்கு அச்சத்தை உண்டுபண்ணியது. தன்னுடன் நட்பு பாராட்டும் நாடுகளுக்கு பணத்தையும், ஆயுதங்களையும் கணக்கு வழக்கில்லாமல் வாரி தந்தது அமெரிக்கா. அதில் அதிக லாபம்மடைந்தது பாகிஸ்தான். இதனால் நம்மை எதிர்ப்பதை ஒரு கொள்கையாக வைத்துக்கொண்டது பாகிஸ்தான். சுதந்திரம் பெற்று தனித்தனி நாடானபின் நாம் யாருடன் நட்பு பாராட்டுகிறோமோ அதற்கு எதிர் பார்ட்டியிடம் நட்பு பாராட்டும் பாகிஸ்தான்.

      இந்தியா - பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பகை உண்டு. அமெரிக்கா உதவியோடு காஷ்மீரை தனதாக்கிகொள்ளலாம் என எண்ணியபோது கிழக்கு பாகிஸ்தான் மக்கள் தனி நாடு கேட்டு கலவரம் செய்தனர். உள்ளே புகுந்த பாகிஸ்தான் ராணுவம் தன் கிழக்கு பாகிஸ்தான் மக்களும் தன் ரத்தம் என எண்ணாமல் சுட்டு பொசுக்கியது. பல லட்சம் மக்கள் அகதியாக. பஞ்சாப் வழியாக இந்தியாவுக்குள் வந்தனர். இந்தியா பாகிஸ்தானுக்கு அறிவுரை கூறியும் கேட்காததால் இந்திய ராணுவம் பாகிஸ்தான் இடையே போர் மூண்டு அதில் இந்தியா வென்று வங்கதேசம் உருவாக்கி தந்தது. இதனால் இந்தியா மீது அதிக கோபத்தில் இருந்தது பாகிஸ்தான்.

ஆசியா கண்டத்தில் வல்லரசாக உருவான கம்யூனிச சீனா, கம்யூனிச நாடான சோவியத் ஆசிய கண்டத்தில் தலையிடுவதை விரும்பவில்லை. அதோடு சோவியத்தை இந்தியா ஆதரிப்பதை கண்டு கொதித்த சீனா இலங்கைக்கு உதவியது. அமெரிக்கா சீனா ஆதரவோடு இந்தியாவை எதிர்க்கவும் இலங்கை தமிழர்களை கொல்லவும் செய்ததை இந்தியா வன்மையாக கண்டித்தது. அதை காதிலேயே வாங்கவில்லை இலங்கை. இலங்கை அதிபர் ஜெயவர்தனா அமெரிக்கா பாசம் கொண்டவர். இந்தியா சோவியத் யூனியன் பக்கமிருந்ததால் அமெரிக்கா இந்தியாவுக்கு குடைச்சல் தர இலங்கைக்கு உதவி பண்ணியது. இதனால் குட்டி தீவான இலங்கையும் இந்தியாவுக்கு எதிராக செயல்பட்டது.

நமக்கு கீழே புள்ளி அளவில் இருக்கும் இலங்கையும் அமெரிக்கா, சீனாவோடு நட்பு பாராட்டி பணம், ஆயுதம் என வாங்கிக்கொண்டு அதற்கு நன்றியாக தன் மண்ணில் சில சலுகைகளை அமெரிக்காவுக்கு தந்தது இலங்கை. தன்னை சுற்றியுள்ள நாடுகள் நமக்கு வில்லன்களா இருக்காங்களே என கவலைப்பட்டார் பிரதமர் இந்திரா. மற்ற நாடுகளை விட இலங்கையை பார்த்து தான் இந்திராவுக்கு கோபமே. இலங்கைக்காக கச்சத்தீவையே தரைவார்த்தோம் ஆனா கத்திரிக்கா சைஸ் இருக்கும் அந்த நாடு நம்மை எதிர்க்கிறதே என மூக்கு மேல் கோபத்தை வைத்துக் கொண்டிருந்தார்.

கச்சத்தீவு இந்தியாவின் ஒரு பகுதி கச் என்பது சமஸ்கிருதத்தில் கடற்கரை எனப்படுகிறது. அதனால் கச்சத்தீவை கடற்கரைதீவு எனவும் கூறலாம். இந்தயாவின் பம்பன் - ரமேஸ்வரத்திலிருந்து 12 கி.மீ தொலைவில்வுள்ளது இத்தீவு. 82ஹெக்டர் பரப்பளவு கொண்ட இத்தீவில் மனிதர்கள் யாரும் தங்கி வாழ முடியாது. பாம்புகள் ஒரளவு வாழும் பகுதி. பாறைகள், முள் புதார்கள், மணல் திட்டுகள் அதிகம் கொண்டது. இத்தீவின் அருகே மீன் அதிகம் கிடைக்கும் என்பதால் மீன் பிடிக்க ராமநாதபுரம், தஞ்சை, புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் மீன் பிடிக்க போய்வருவார்கள். அதோடு சங்கு பிடித்தல், முத்து குளித்தல்க்கு பேர்போனது இத்தீவு. 1913ல் கட்டப்பட்ட கிருஸ்த்துவ ஆலயம் ஒன்றுவுள்ளது. 1921ல் அது அந்தோணியர்க்கு அர்பணிக்கப்பட்டது. அதோடு யாழ்பாண மாவட்டமும், மன்னார் மாவட்ட கடற்கரையும் இத்தீவுக்கு மிக அருகாமையில்வுள்ளது அதனால் அம்மீனவ மக்களும் அதிகம் மீன் பிடிக்கவருவார்கள்.

கச்சத்தீவு யாருக்கு என்பதில் ஆங்கிலேயன் காலம் முதலே இந்தியாவுக்கும்-இலங்கைக்கும் இடையே சண்டை இருந்து வந்தது. 1921 அக்டோபர் மாதம் இந்தியா - இலங்கை கடல் எல்லை வரையறையின் போது பிரச்சனையானது. இலங்கை தரப்பில் இருந்து வந்த ஹோர்ஸ்பெர்க் என்ற அதிகாரி கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமானது என்றார். ஆனால் இந்தியா சார்பில் கலந்துகொண்ட ஆங்கிலேயே அதிகாரிகள் அதை மறுத்து அத்தீவு ராமநாதபுரம் ராஜாவுக்கு சொந்தமானது. அதை அவர் குத்தகைக்கு விட்டுள்ளார் என்றுள்ளார்கள். அதனால் பிரச்சனை பெருசானது. இறுதியில் கச்சத்தீவு பிரச்சனையை ஒத்திவைத்துவிட்டு எல்லை வரையறுப்பை செய்துள்ளனர். ஆனாலும் அப்போது கச்சதீவு அடுத்த 3 மைல் தூரம் இலங்கை மீனவர்கள் போய் மீன் பிடிக்கலாம் என முடிவுசெய்துள்ளார்கள். ஆனாலும் அது பிரிட்டிஸ் அரசு அச்சட்டத்தை அங்கிகரிக்காததால் அது அப்படியே நின்றது.      

இந்தியா, இலங்கை நாடுகளின் சுதந்திரத்துக்கு பின்னர் மீண்டும் கச்சத்தீவை மையமாகவைத்து இரு அரசுகளும் மோதிக்கொண்டன. இந்திய பிரதமரான நேரு, கச்சத்தீவு தொடர்பான ஆதாரங்கள் மத்திய அரசிடம் இல்லை. அதுப்பற்றி தமிழக அரசிடம் கேட்டுள்ளோம் என்றார். இலங்கை பிரமராகயிருந்த டட்லியோ கச்சத்டதீவு எங்களோடது என்றார். அவர்கள் மோதிக்கொண்டாலும் ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும் அந்தோணியர் திருவிழாவில் யாழ்ப்பாண, தமிழக மக்கள் பெருமளவில் கலந்து கொள்வார்கள். அப்பொது இரு நாட்டு போலிஸாரும், கடற்படையினர் பாதுகாப்பு தருவார்கள். 1969 க்கு பின் கலந்து கொள்ளும் காவல்துறையினர் சீருடையில்லாமல் போய் பாதுகாப்பு தரவேண்டும் என முடிவுசெய்தனர். 


      மறுபக்கம் அரசுகள் கச்சத்தீவு பற்றின ஆதாரங்களை தேடிபிடித்து முன்வைத்தது. இந்தியா, கச்சத்தீவு ராமநாதபுரம் ராஜாவுக்கு சொந்தமானது. 1822 முதல் இத்தீவை ராஜா முத்துக்குளிப்பவர்கள், மீன் பிடிப்பவர்களிடம் வரி வசூலித்துவந்துள்ளார். அதேபோல் கச்சத்தீவு உட்பட 8 தீவுகள், 62 கடற்கரை கிராமங்களில் மீன் பிடிக்க முத்துச்சாமி, முகமதுஅப்துல்காதர் என்பவர்கள் பயன்படுத்தும் உரிமையை 1880 ஜீலை 21 முதல் ஆண்டுக்கு 175 ரூபாய் குத்தகை;கு மதுரை கலெக்டர் மூலம் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளனர். அந்த ஒப்பந்தம் முடிந்த பின்னர். 1895 ஆம் ஆண்டு முத்துச்சாமி பிள்ளைக்கு ஆண்டுக்கு 212ரூபாய் வீதத்தில் விட்ப்பட்டது. அதற்க்கு ராமநாதபுரம் ராஜா சார்பாக மேலாளர்.டி.ராஜராமராயர் கையெழுத்துட்டுள்ளார். 1913ல் ராஜாவுக்கும் - இந்திய ஆங்கிலேய செயலாளருக்கும் இடையே 15 ஆண்டுகாள ஒப்பந்தம் ஒன்று ரூபாய் 60 ஆயிரத்துக்கு போடப்பட்டது. அதன் மூலம் மீன் பிடித்தல், சங்கு எடுத்தல், முத்து குளித்தல் போன்றவற்றை அரசு பெற்றது. ஆனால் அடிப்படை நிர்வாகம் ராஜாவுடையது. இந்திய சுதந்திரத்துக்கு பின் 1947க்கு பின் ஜமின்தாரி முறை ஒழிக்கப்பட்டதால் கச்சத்தீவு தமிழக அரசின் கீழ் வந்தது என ஆவணங்களை காட்டினார்கள் இந்திய அதிகாரிகள்.

நான் காட்டமாட்டேனா ஆவணங்களை என கங்ஙணம் கட்டிக்கொண்டு இலங்கை சில ஆவணங்களை காட்டியது. அது, 1554 முதல் கச்சத்தீவு யாழ்ப்பாணத்தின் ஒரு பகுதி அதை போர்த்துகீசியர்கள் நிர்வாகித்தார்கள். 1717 களில் தயாரிக்கப்பட்ட வரைபடங்களை காட்டி பேசியது ஆனால் அதை நிராகரித்தார்கள் இந்திய அதிகாரிகள்.

இப்படி இரு தரப்பம் மோதிக்கொண்டாது. இந்திரா அம்மையார் 1974 - மே 18 ந்தேதி தார்பாலைவனத்தில் பொக்ரைன் என்றயிடத்தி;ல் அணுகுண்டு வெடிக்கவைத்தார்கள் விஞ்ஞானிகள். ஆப்போது அணுகுண்டு வெடிப்பில் 6 வது நாடாக இந்தியா இருந்தது. அணுகுண்டு வெடித்ததால் உலக நாடுகள் கண்டனங்களை வீசியது. இந்தியா மீது பொருளாதார தடைகள் விழுந்தன. இதை பயன்படுத்தி இந்தியாவை தனிமை படுத்த நினைத்த எதிரி நாடான பாகிஸ்தான் இந்தியாவை கண்டித்து ஐ.நா. சபையில கண்டன தீர்மானம் கொண்டு வர முயன்றது. அப்பொது ஐ.நாவின் 15 தற்காலிக உறுப்புநாடுகளின் தலைமை பொறுப்பிலிருந்தது இலங்கை. இலங்கையை வைத்து அத்தீர்மானத்தை முறியடித்தது இந்தியா. அதற்க்கு பிரிதிபலனாக அப்போது இலங்கை பிரதமராகயிரந்த சிறிமாபண்டாரநாயக்கா கச்சத்தீவை ஏக்க பார்வையுடன் பார்த்தார். உதவிக்கு பிரிதிபலன் பார்க்கிறார் என எண்ணிய இந்திராவும் சரியென்றார். சிறிமா இந்திராகாந்திஅம்மையாரை சந்தித்து பேசினர், கச்சத்தீவு இலங்கைக்கு 1974 ஜீன் 24 தேதி உடன்படிக்கை ஒன்றின் மூலம் பேசி முடிவெடுத்து. 1974 ஜீன் 28 ந்தேதி இரண்டு நாட்டு பிரதமர்களும் தங்களது நாடுகளில் ஒரே நேரத்தில் அறிவித்தார்கள். ஒப்பந்தத்தில், இந்திய மீனவர்கள் மீன்பிடிக்கவும், தங்கவும், வலைகளை உலர்த்தவும் கச்சத்தீவை பயன்படுத்தலாம் என்றும், அந்தோணியர் விழாவுக்கு எந்த விதமான கட்டுபாடுகள் இலங்;கையின் அனுமதிகள் இல்லாமல் இந்திய பிரஜைகள் போய் வரலாம் என்று ஒப்பந்த்தில் இடம் பெறவைத்தது இந்தியா. இலங்கையில் பெரிய சந்தோஷத்தை கொடுத்தது. ஆனால் அது தமிழகத்தில் பெரிய பிரச்சனையை உருவாக்கியது. நாராளமன்றத்தில் திமுக எம்.பியான இர.செழியன், இவ்வுடன்படிக்கை புனிதமற்ற ஒன்று என்றார். அதிமுக எம்.பியான மனோகரன், தாய்நாட்டு பற்றற்ற செயல் என்றார். மா.பெ.சிவஞானம் ஒப்பந்தம் அநியாயமானது என்றார். கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள் ஒப்பந்தத்தை கண்டித்து வெளிநடப்பு செய்தனர். அது எதையும் மத்திய ஆட்சியாளர்கள் சட்டைசெய்யவில்லை. 1976ல் ஒப்பந்த்தில் மாற்றம் கொண்டு வந்தனர். அதனால் நிலைமை இன்னும் மோசமானது. 1985 ல் இலங்கையின் ஜனாதிபதியான ஜெயவர்தனே 18.11.1985ல் கடல் பாதுகாப்பு சட்டத்தை கொண்டு வந்தார். அது மூலம் மீன் பிடித்தல் தடைபட்டது எல்லை தாண்டும் இந்திய மீனவர்கள் சுடப்படுவது தெடர்கதையானது. 1983 ஜøலை 24 இலங்கை கலவரத்தில் தமிழர்களை தேடித்தேடி அழிக்கிறது இலங்கை அரசும் ராணுவமும் என்ற தகவல் இந்திராஅம்மையாருக்கு போனதும் வெளிவிவகாரத்துறை அமைச்சராகயிருந்த நரசிம்மராவை அழைத்து பேசினார். ஆயிரம் ஆயிரமாக அகதிகள் வந்து கொண்டிருக்கிறார்கள் என அவரும் தகவல் சொன்னார்.  எனக்கு பக்கத்துலயிருக்கற தீவுல இனகலவரம் நடக்கிறது சரியில்ல என நரசிம்மராவ் அறிக்கை வெளியிட்டார்.

      அதை கண்டுகொள்ளாத அதிபர் ஜெயவர்த்தனா கலவரத்தை தீவிரமாக்க உத்தரவிட்டார். ஜøலை கலவரத்தின் 3வது நாள் நிலைமை படுமோசம் என தகவல் வர நரசிம்மராவை அனுப்பி (இலங்கை) வைத்தார். இலங்கை போன நரசிம்மராவ் ஜெயவர்தனாவின் அதிகார, அகங்கார பேச்சை அப்படியே இந்திராவிடம் சொல்ல அதை கேட்டு மூக்கு சிவந்தது இந்திராவுக்கு. இலங்கை தமிழ்பிரதேசங்களில் உணவுக்கு திண்டாட்டம் என தகவல் இந்திராவுக்கு எட்ட ஆகறது ஆகட்டும் நம்முடைய வான்படை தமிழர் பிரதேசங்களில் உணவு பொட்டலத்தை போடட்டும் என உத்தரவிட்டார். உத்தரவு நிறைவேற்றப்பட அதிர்ந்தது சிங்களஅரசும் அரசியல்வாதிகள் வட்டாரமும்,

    இதுதான் சமயமென இலங்கை நாடாளுமன்ற எதிர்கட்சி தலைவரான அமிர்தலிங்கம், தமிழக அரசியல்வாதிகள் சிலரின் உதவியோடு 1983-8-13 இந்திரா அம்மையாரை டெல்லியில் சந்தித்தார். தமிழர்களுக்கு உதவவேண்டும் என்ற கோரிக்கையை விடுத்தார். இந்திராவோ, நான் சொல்றமாதிரி கேளுங்க உங்க பிரச்சனை உலகம் முழுக்க தெரியனும். வர்ற அகஸ்ட் 15 இந்தியாவின் சுதந்திரதினத்துல விழாவுல தமிழ் மக்கள் பிரதிநிதியா டெல்லியில கலந்துக்குங்க என அழைப்பு விடுத்தார். நீங்கதான் சிறப்பு விருந்தினர் என சந்தோஷமாக அனுப்பினார்.

  இலங்கை திரும்பிய அமிர்தலிங்கம் இந்திய சுதந்திரதினத்தில் கலந்துகொள்ள ஆயத்தமானபோது ஏற்கனவே இந்திராவை அமிர்தலிங்கம் சந்தித்து திரும்பிய தகவலால் அவரை திரும்பவும் இந்தியா அனுப்பாமல் அடக்க நினைத்தது சிங்கள அரசு. அப்படியும் தடைகளை கடந்து சுதந்திர தினவிழாவுக்கு முன்நாளே டெல்லி வந்தவரிடம் இந்திரா விழவுக்கு நீங்க தாமதமா வந்தாபோதும் என உத்தரவிட்டார். குழம்பிய அமிர்தலிங்கம் விழா தொடங்கிய பின்னே மேடையை நோக்கி போனார். ஏற்கனவே மேடையில் வேறு நாட்டு தலைவர்கள் இருந்தனர். மேடையை நோக்கி வந்த அமிர்தலிங்கத்தை கண்ட இந்திரா எழுந்து இலங்கை தமிழ் மக்களின் ஒரே அரசியல் தலைவர் வருகிறார் என பெருமை படுத்தினார். அதோடு இலங்கை பிரச்சனையில் இந்தியா மத்தியஸ்து நாடாகயிருக்கும் என அறிவித்தார். இலங்கைக்கு அதிர்ச்சியில் வேர்த்துயிருக்கும் இந்திராவின் அறிவிப்பை கேட்டு.

      மத்தியஸ்துக்கு முன்பு இராஜதந்திர அதிகாரிகளிடம் பேசினார் இந்திரா. அதில் இலங்கை நம் சொல்லுக்கு படியாது அதனால ராஜதந்திர ரீதியில் ஒரு பக்கம் பேச்சு வார்த்தையும் மற்றொருபுரம் தமிழ் ஆயுத குழுக்களை போர் பயிற்சி தந்து மறைமுகமாக வளர்த்து விடுவோம் என முடிவு செய்தார்கள் அதற்கு முதற் காரணம் அதிபர் ஜெயவர்த்தனாவின் குணநலன்களையும் சிங்கள அரசின் குரங்கு சேஸ்டைகளை இந்திரா அம்மையார் நன்கு அறிந்ததால் தான் இந்த முடிவு.

      முதல் முயற்சியாக மத்தியஸ்துக்கு தனது குடும்பத்துக்கு விசுவாசமானவரும் இந்தியகொள்கை வகுப்பாளரின் தலைவரும் தமிழருமான எ.பார்த்தசாரதி நியமித்தார். 1983 ஆகஸ்ட் 25 இலங்கை பயணமான பார்த்தசாரதி சிங்கள - தமிழ் அரசியல்வாதிகளை சந்தித்து பேச ஆரம்பித்தார். கலந்துரையாடலுக்கு பின் üüமாகாண அடிப்படையில் பிரதேச வாரியாக நிர்வாக கட்டமைப்புக்கு அதிகாரம் வழங்கும் அய்ய்ங்ஷ்ன்ழ்ங் - இ தீர்வு திட்டத்தை உருவாக்கினர். அதை இலங்கை சிங்கள - தமிழ் அரசியல்வாதிகளிடம் கருத்து கேட்டதில் ஆரம்பத்திலேயே ஜெயவர்தனா தரப்பு எதிர்ப்பு தெரிவித்தது.

      இது நடந்து கொண்டிருக்கும் போதே தமிழ் ஆயுத குழுக்களை வளர்த்து விடும் சர்ச்சைக்குரிய ரகசிய திட்டத்தை கையிலெடுத்தது இந்தியா. இதற்காக இந்திரா இந்திய பாதுகாப்பு ஆலோசகரான ஆர்.என்.ராவ், ரா அமைப்பின் தலைவர் கிரிஷ்சாக்னா, பிரதமர் அலுவலக ஆணையர் சங்கரன்நாயர் ஆகிய மூவரையும் குழுவாக நியமித்து மூன்றாவது ஏஜென்சி என்ற பெயரில் இவ்விவகாரத்தை செயல்படுத்துமாறு கூறினார்.

      இலங்கை அரசியல் போராட்ட களத்தை நன்கு அறிந்திருந்த ரா அதிகாரிகள் இறந்துபோன தந்தை செல்வாவின் மகனான சந்திரகாசனை அழைத்து பேசினர். தமிழ் போராளி குழுகளுக்கு இந்திய ராணுவம் பயிற்சி தரும்அதன் மூலம் எல்லா அமைப்புகளும் ஒண்றினைந்து தமிழ் தேசிய விடுதலை இயக்கம் மூலம் சிங்கள ராணுவத்தை எதிர்த்து போராடலாம் தனி நாடு ஆகலாம் எனக்கூறயது.  அப்ப தனி நாடான நான்தான் அதற்கு தலைவர்.  நான் சொல்றவங்களுக்கு தான் பயிற்சி தரனும் என்ற உத்தரவாதம் வாங்கிக்கொண்டு போராளிக்குழு தலைவர்களை அழைத்து பேசிட்டு சொல்றன் என ரா அதிகாரிகளை அனுப்பி வைத்தார்.

      சந்திரகாசன் தனக்கு தோது படும், தன் பேச்சை மீறாத குழு தலைவர்களுக்கு ரகசிய அழைப்பு விடுத்தார். அதில் பஉகஞ, உடதகஊ, உதஞந மற்றும் அமைப்பின் தலைவர்களிடம் இந்திய ராணுவம் பயிற்சியும், ஆயுதம், பணம் தரும் அதன் மூலம் சிங்கள ராணுவத்தை எதிர்க்கலாம் என பேசி ஒ.கே வாங்கியவர். ரா அதிகாரிகளை போராளி குழு தலைவர்களை சந்திக்க வைத்தார். அதிகாரிகள் பயிற்சி பற்றி கூறி பயிற்சி போராளிகள் லிஸ்டை கேட்டது.

  இதனால் இக்குழுக்கள் அதிக இளைஞர்களை சேர்க்க இலங்கையில் தமிழ் பிரதேசங்களில் அலைந்தது, பண ஆசையும் காட்டியது.  இந்திய உதவி செய்யுது, இந்திய ராணுவம் நமக்கு பயிற்சி தர போகுது, நம்ம பசங்க அதுக்கு தயாராகறானுங்க விரைவில் நமக்கு விடுதலை எனற பேச்சு யாழ்பாணம், மட்டகள, திருகோணமலை என சுற்றி வன்னி கடுகாளுக்குள்ளாம் புகுந்தது. வி.பு இயக்கத்தின் தலைவரான பிரபாகரன் ஆச்சர்யமும், ஆனந்தம் பட்டவர், லண்டனிலிருந்த பாலசிங்கத்தை தொடர்பு கொண்ட பிரபாகரன் உடனே தமிழகம் திரும்பி இந்திய ராணுவ உதவி பயிற்சி பற்றி விசாரித்து தகவல் சொல்லுங்க என்றார்.

    1983 ஆகஸ்ட் 2வது வாரத்தில் சென்னை வந்த பாலசிங்கத்தை பேபி சுப்பிரமணியம் வரவேற்றார். பேபியின் நண்பரான அ.தி.மு.க அமைச்சர் காளிமுத்து மூலம் ஒரு ஹோட்டலில் தங்கி கொண்டனர். தமிழக அரசியல் பிரமுகர்களிடம் பேசியும் யாருக்கும் தகவல் தெரியவில்லை. அப்போது சென்னையில் கலாநிதி ராஜேந்திரன் என்ற தனது இலங்கை நண்பரை சந்தித்த பாலசிங்கததிடம், போராளிகள்க்கு இந்திய பயிற்சி தந்து ராணுவமா மாற்றுது. அதுக்கு தலைவர் சந்திரகாசன் தான் அவரை சந்திங்க உங்களுக்கும் பயிற்சி கிடைக்கும் என கூற இதில் வாக்குவாதமாகி இரு நண்பர்களும் நிரந்தரமாக பிரிந்தனர். பிரபாகரனும் சந்திரகாசன் மூலம் எதுவும் வேண்டாம் என்றார்.

      ரா அமைப்போடு எப்படி தொடர்பு ஏற்படுத்திக்கொள்வது என குழம்பிய நிலையில் பத்திரிகைதுறை நண்பர் ஐடியாபடி தமிழக புலனாய்வு துறையினரை சந்திக்க முடிவு செய்தார் பாலசிங்கம். அப்போதைய க்யூ பிராஞ்ச் எஸ்.பி அலைக்ஸாண்டரை அடிக்கடி சந்தித்தார்.  இதனால் இருவருக்கும் நட்பு மலர்ந்தது. பாலசிங்கத்திடம், ரா அதிகாரிகள் ஹோட்டல் ப்ளு டைமண்ட்டில் ஒரு தளத்தையே புக் பண்ணி அலுவலகமாக மாத்தி செயல்படறாங்க. இலங்கை விவகாரத்துல சந்திரகாசன் சொல்படி தான் செயல்படறாங்க.  சந்திரகாசன் சரியான நபர்யில்ல அதனால நீங்க உங்க தரப்பு கோரிக்கையை பிரதமர்க்கும், ரா தலைமைக்கும் விவரமாக எழுதுக்குங்க நிச்சயமா நல்ல பலன் இருக்கும் என்றார். அதன்படி பாலசிங்கம் வி.பு கள் அமைப்பு பற்றி விரிவாக கடிதம் ஒன்றை எழுதி அனுப்பு வைத்தார். இரண்டு வாரத்தில் ரா அதிகாரியொருவர் பாலசிங்கத்தை வந்து ரகசியமானயிடத்தில் சந்தித்தார்.

   நான் சந்திரசேகரன், ரா அதிகாரி. உங்க விடுதலைப்புலிகள் அமைப்புக்கு தேவையானது செய்யச் சொல்லி தலைமை உத்தரவு என்றவர். விடுதலைப்புலிகள் வரலாறு, அதன் கட்டமைப்பு, தாக்குதல்கள், போராளிகள் பலம், கொள்கை என பல கேள்விகளை அடுக்கடுக்காக வீசினார் சலிக்காமல் பதில் சொன்ன பாலசிங்கத்திடம் எல்லாம் ஓ.கே.  விடுதலை புலிகள் அமைப்புக்கு பயிற்சி தர்றோம் அதுக்கு முன்ன உங்க தலைவர் பிரபாகரனை நான் சந்திக்கனும் என கேட்ட சந்திரசேகரிடம், தலைவர் மேல துப்பாக்கி சூடு வழக்குயிருக்கு, அதோட பாதுகாப்பு பிரச்சனை வேறயிருக்கு என பாலசிங்கம் தயக்கத்தோடு சொல்ல கவலைப்படாதிங்க பிரபாகரன்க்கு எந்த சிக்கலும்மில்லாம நான் பாத்துக்கறன் பிரபாகரன் பாதுகாப்புக்கு நான் பொறுப்பு என்றவர் சந்திப்புக்கு அப்புறம் தான் பயிற்சியெல்லாம் என உறுதியாகி கூறியவர். நாயர் என்ற ரா அதிகாரியை அறிமுகப்படுத்தி இவர் மூலம் எங்கிட்ட தொடர்பு கொள்ளுங்க என சொல்லிவிட்டு போய்விட்டார். சந்திப்பு பற்றி பிரபாகரனுக்கு தகவல் அனுப்பியவர், நீங்க தமிழகம் வந்து ரா அதிகாரிகளை சந்திக்கனும் எனச்சொல்லி அனுப்பினார். தகவலை கேட்டு சற்று தயங்கினார் பிரபா. உடனே ரகு, மாத்தையா என இரண்டு மூத்த போராளிகளை சென்னைக்கு அனுப்பி பாலசிங்கத்தை சந்தித்து, பாதுகாப்பு பிரச்சனைகள் பற்றி அறிந்துவரச்சொன்னார்.

      சென்னை வந்த போராளிகளுள் மாத்தையா மட்டும் பாதுகாப்பு சம்மந்தமாக ஏகப்பட்ட கேள்விகளைக் கேட்டார். தலைவருக்கு எதுவும் நடந்திடக்கூடாது என மிரட்டவும் செய்தார். அதில் கோபமான பாலசிங்கம் நீண்ட கடிதம் எழுதி அனுப்பி வைத்தார். கடிதத்தை படித்த பிரபாகரன் உடனே பயணத்திற்கான ஏற்பாடுகளை செய்ய சொன்னார். இதில் சந்தோஷமான பாலசிங்கம், நாயர் மூலம் சந்திசேகரனிடம் பிரபாகரன் தமிழகம் வருகிறார் அதனால சந்திப்ப பண்டிச்சேரியில வெச்சிக்கலாமா என கேட்க ஒ.கே என்றனர். பாண்டிச்சேரியில் ரகசியமாக ஒரு வீட்டை வாடகைக்கு பிடித்தனர் அங்கு அடேல், பாலசிங்கம் சில போராளிகளுடன் கார் பயணமாக பாண்டிச்சேரி போய் தங்கினார்கள்.

      1983 அக்டோபர். பிரபாகரன் இயக்கத் தளபதிகளோடு பாண்டிச்சேரி வந்து சேர்ந்தார். ரா அதிகாரி சந்திரசேகரன் - பிரபாகரன் சந்திப்பு ரகசியமாக நடந்தது. சந்திப்புக்கு பின் முதல் கட்டமாக 200 போராளிகளை அனுப்புங்க பயிற்சி தரப்படும் என்றார். எந்த விதமான பயிற்சி என பிரபாகரன் கேள்வி எழுப்பினார். இராணுவ வீரனுக்கான எல்லா பயிற்சியையும் கற்றுத் தரப்படும் என்றார். பயிற்சி பெற போகும் போராளிகளோட பெயர் பட்டியலை அனுப்புங்க எனச்சொல்லி விடைப்பெற்றனர் ரா அதிகாரிகள்.

      சந்தோஷமான பிரபாகரன் திறமையான போராளிகளை தேர்ந்தெடுத்தார். கற்பூரம் போல் குப்பென பற்றிக்கொள்ளும் இளைஞர்களை பயிற்சிக்காக தேர்ந்தெடுத்தார். அதில்  ரகு, மாத்தையா, சங்கர், பேபி, எனப் பட்டியலில் 200 பேர்களை சேர்த்து அனுப்பிவைத்தார்கள். பட்டிலை ஏற்றுக்கொண்டது ரா அமைப்பு. ரா அதிகாரி நாயர் மூலம், விடுதலைப்புலிகளுக்கு, உத்தரபிரதேசத்தில் உள்ள இராணுவ தலைமையாகமான பொக்ரான்ல பயிற்சி. ரயில் மூலம் டெல்லி போகனும், அங்கியிருந்து ராணுவ டிராக் மூலம் பொக்கரன் போவார்கள் என்றார்கள். புதிய கனவுகளோடு பயணம்மானார்கள் புலி வீரர்கள். பெரிய ராணுவ தளபதிகள் விடுதலைப்புலிகளுக்கு தனியாக பயிற்சி தந்தார்கள். நிலப்படம் வரைதல், வெடி பொருட்களை கையாளுதல், கண்ணி வெடி பயன்படுத்தல், டாங்கி பயிற்சி, விமான எதிர்ப்பு ஆயுதங்கள் பயிற்சி, ராணுவபுலனாய்வு, அலைவரிசைகளை ஒட்டு கேட்டல், செய்திகளை மறித்தல், நவீன தொழில் நுட்ப பயன்பாடு.

      தாக்குதல், மரபு வழி ராணுவ பயிற்சிகள் அனைத்தும் ராணுவ அதிகாரிகள் கற்றுதந்தனர். மாத்தையா ராணுவ அதிகாரிகளோடும், ரா அதிகாரிகளோடும் நெருங்கி உறவாட ஆரம்பித்தார். பயிற்சிகளை வெகுவேகமாக புலி வீரர்கள் கற்றுக் கொண்டார்கள். எனது வீரர்களுக்கு தரப்படும் பயிற்சியை காண வேண்டும் என ஆவலுடன் சந்திரசேகரனிடம் பிரபாகரன் கேட்க ஏற்பாடு செய்துதந்தார். பொக்ரானில் பயிற்சியை பார்த்த பிரபாவிடம், தம்பீ சூப்பர் என இந்தியா மீது பாச மழை பொழிந்தவர்களிடம் திரும்பி மெல்ல புன்னகைத்தவர் இவுங்கள எதிர்க்க வேண்டிய சூழ்நிலை நமக்கு வரும் ஜாக்கிரதை என்றார்.

      பயிற்சியோடு அரசியல் பணிகளையும் விடுதலைப்புலிகள் செய்தனர். தமிழக மக்கள் ஆதரவு இருந்தால் மட்டுமே நம்மால் சுதந்திர நாடு பெற தீவிரமாக போராட முடியும். அவர்கள் உதவியில்லா விட்டால் பல சிக்கல்களை சந்திக்க வேண்டி வரும் என உணர்ந்தனர். இதனால் தமிழகம் முழுவதும் விடுதலைப்புலிகள் இலங்கை மண்ணில் தமிழ் மக்கள் படும் துயரங்களை பொதுயிடங்களில் புகைப்பட கண்காச்சி வைத்து மக்கள் ஆதரவை திரட்டினர். இதனை அப்போது தமிழகத்தின் முதல்வராகயிருந்த எம்.ஜீ.ஆர் ஊக்குவித்தார்.

      இலங்கையிலே, மத்தியஸ்தராக ஜி.பி. தந்த சமரச தீர்வு திட்டத்தை 1984 ஜனவரி 10-ந் தேதி நடந்த அனைத்து கட்சி கூட்டம்மூலம் தீர்வு திட்டத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என அறிவித்தார். சமரச திட்டம் தோல்வியில் முடிந்ததால் போர் பயிற்சி பெறும் வீரர்களை அதிகமாக ஊக்கவிக்கும் பொருட்டு ஆயுதங்களை வழங்கும் பிரச்சனைக்குரிய விவகாரத்தை கையிலெடுத்தது இந்தியா. இதில் அதிக லாபமடைந்தது சந்திரகாசனும், டகஞப குருப்பும் தான்.  உமாமகேஸ்வரன் நிறைய இளைஞர்களை சேர்த்து பயிற்சிபெற்றவர், அதிகமாக ஆயுதங்களையும், ராவிடமிருந்து பணத்தையும் பெற்றார். இப்படி சந்திரகாசன் கை காட்டிய அமைப்புக்கு நிறைய கிடைத்தது. சந்திரகாசன் ராவிடமிருந்து பண கிடைத்தது.

      விடுதலை புலிகளுக்கோ ஆயுதங்களை தவிர வேறு பண உதவி கிடைக்கவில்லை. இதனால் இலங்கை தமிழ் பகுதிகளில் வரி வசூலிப்பை செய்தது விடுதலை புலிகள் அமைப்பு. சிங்கள அரசிடம் தமிழ் பிரதேசங்களுக்குள்ள வராதிங்க எங்க மக்களை நாங்களே பார்த்துக்கறோம் என்றதால் அதிர்ந்து போய் கடுப்பான அரசு ராணுவத்தை ஏவியது. போர்பயிற்சி பெற்ற சிலரை மட்டும் அனுப்பி தாக்குதலை தடுங்க போதும் என அனுப்பி வைத்தார் பிரபாகரன்.  வரி வசூலில் வரும் வருவாயை வைத்து வீரர்களுக்கான செலவுகளை செய்ய ஆரம்பித்தார்.

      ஆயுத குழுக்களுளில் இருந்த சில நூறு போராளிகளுக்கு மட்டும்மே இந்திய ராணுவம் பயிற்சி தந்தது. ஆனால் எல்லா பெரிய அமைப்பிலும் ஆயிரக்கணக்கில் போராளிகள் இருந்தனர். இதனால் அந்த அமைப்புகள் தமிழகத்தில் ரகசியமாக பயிற்சி முகாம்களையும், சென்னையில் வெளிப்படையாக அரசியல் அலுவலகத்தையும் திறந்தனர். இந்த பயிற்சி மையங்களுக்குள் போக தமிழக காவல்துறைக்கு கூட அனுமதியில்லை.

EPRLF தஞ்சை - 3 கேம்ப், தென்னாற்காட்டில் - 2 கேம்ப், திருச்சி-1, ராம்நாட் - 1 என பயிற்சி முகாம்களை வைத்திருந்தது.

      TELO அமைப்பினர், கர்நாடகா, உ.பி.டெல்லி, ஆகிய இடங்களில் ரா உதவியோடு பயிற்சி மையம் வைத்திருந்தது.

      PLOT தஞ்சையில்-புதுகை-4, திருநெல்வேலி-1, திருச்சி-1, தஞ்சை கிழக்கு - 1 என 18 பயிற்சி முகாம்க  2336 வீரர்களுக்கு பயிற்சி தந்தது.

      அதோடு TEA -2 கேம்ப், TELO சங்கர் குரூப், TELO ராஜன் குரூப், RELO -1, NLFT - 1, ECRP - 1 என பல பயிற்சி முகாம்கள்.

      இதில் அதிகமான கட்டுப்பாடான பயிற்சி முகாம் விடுதலை புலிகளுடையது.  தமிழகத்தில் திருச்சி, மதுரை, ராம்நாடு, தஞ்சை, விழுப்புரம், கோவை, ஈரோடு, கோபி என பல பகுதிகளில் பயிற்சி முகாம்கள், ஒவ்வொன்றிலும் நூற்றுக்கணக்கில் வீரர்கள். இந்திய தளபதிகளிடம் பயிற்சி பெற்ற புலி தளபதிகள் பயிற்சியாளராக இருந்தார்கள். இந்திய ராணுவத்தின் உதவியோடு பயிற்சி மையம் அமைப்பதற்கு முன்பே சில பயிற்சி முகாம்களை பிரபாகரன் தமிழகத்தில் ரகசியமாக அமைத்திருந்தார். அப்படி அமைக்கப்பட்ட முதல் பயிற்சி மையம் சேலம் மேட்டூரில் அமைத்திருந்தது.

      இந்திய ராணுவம் தமிழ் போராளிகளுக்கு பயிற்சி தருகிறது என்பதை அரசல்புரசலாக அறிந்திருந்ததால் தமிழ் பகுதி இளைஞர்கள் மேல் சிங்கள இராணுவம் தாக்குதல் தொடுத்தது. பல்கலைக்கழகங்களை மூட செய்தது. மாணவர்கள் வீதி போராட்டத்திற்க்கு வந்தனர். ஆயுதக்குழுக்கள் உதவி செய்ததால் மாணவர்கள் போராட்டம் வலுப்பெற்றது. தமிழ் பகுதிகளில் மாணவர்கள் பள்ளி, கல்லூரிகளை புறக்கணித்தனர். மக்கள் மத்தியிலும் ஆதரவு அலை வீசியது. போராட்டத்தை ஒடுக்க ராணுவம் தன் பலத்தை காட்டியது.



அதில் மாணவர்கள் 5 பேர், மாணவிகள் 4 பேர் சுடப்பட்டு இறந்தனர். இதற்கு பெரிய போராட்டம் நடந்த மாணவர்கள் குழு திட்டமிட்டது. இதனால் 1984-ஜனவரி-9 யாழ்பாண கல்லூரியை மூடியது. இதனால் மாணவ-மாணவிகள்  படிப்பை தொலைத்து போக்கிடம் தெரியாமல் முழித்தனர். மீண்டும் பல்கலைகழகத்தை திறக்க கேட்டு மாணவ-மாணவிகள் உண்ணாவிரதம்மிருந்தனர். உண்ணாவிரதத்தை கலைக்க போலிஸை பயன்படுத்தியது அரசாங்கம். அதை தங்களுக்கு சாதகமாக்கி கொண்டனர் தமிழ் போராளிகள். அப்போது யாழ்பாண பகுதியிலிருந்து எல்.டி.டிஇயின் தளபதியான விக்டர் மொழி பற்றுள்ள மாணவர்களையம் மாணவிகளையும் கண்டு அவர்களை தமிழகம் அனுப்ப தயாரானர். அப்போது நடந்த தாக்குதல் ஒன்றில் மாணவர்களுக்கு காயம்பட்டது. அவர்களையும் சேர்த்து படகு மூலம் 22.1.1984 தமிழகம் அனுப்பினார். அந்த குழுவில் தென்றலாக 4 பெண்களும் வந்தனர்.

      அக்குழு மதுரையிலிருந்த பிரபாவை சந்தித்தது. அதில் அழகான அந்த பெண்ணை பார்த்ததும் ஒரு வித ஈர்ப்பு பிரபாவுக்கு வந்தது. வரண்ட அவரின் இதயத்தில் பூ பூக்க ஆரம்பித்தது. யார் அந்தப்பெண் என விசாரித்தார். மதிவதிணி எனச்சொல்லி அவருக்கு அறிமுகம் செய்யப்பட்டது. பிரபாகரனிடம் மதிவதிணி, இவளுங்க என் ப்ரண்ட்ஸ் பேரு வினோஜா, ஜெயா, லலிதா. நான் பூங்குடு பக்கத்துல இருக்கற மதுவேலி. அம்மா சின்னம்மா, அப்பா எராம்பு வாத்தியார். அவர எராம்பு மாஸ்டர்ன்னு கூப்பிடுவாங்க..  பிரதானிய யுனிவர்சிட்டியில விவசாய அறிவியல் பிரிவுல படிக்கறேன் என்றவர். நம்ம மக்களுக்காக போராடலாம்ன்னு வந்தன் என்றார். எல்லாவற்றையும் விசாரித்தபின்,  அமைப்புல பெண்கள் பிரிவுன்னு தனியா கிடையாது. அதனால நீங்க மதுரையில தங்க முடியாது. சென்னையில இருங்க என்றவர், அடேலுக்கு தகவல் அனுப்பினார். அப்பெண்களை சென்னையில் உள்ள அடேலிடம் ஒப்படைக்கச்சொல்லி வழி பாதுகாப்புக்கு ஒரு போராளியையும் அனுப்பிவைத்தார். அப்படியும் பிரபாகரன் மனம், மதிவதினி, மதிவதினி என்றது. சென்னை சென்ற நான்கு இளைஜிகளும் அடேலுடன் தங்கிக்கொண்டனர். அமைப்பை பற்றி அடேல் அவர்களுக்கு விளக்க தலைவர் பிரபாகரனை பற்றி கூறும்போது ஆவலோடு அதை மட்டும் சலிக்காமல் விரிவாக கேட்டார் மதிவதினி.

      மதுரையிலிருந்த பிரபாகரன் சென்னைக்கு பயணமானார். மதியின் மனமோ தலைவனை காண எண்ணியது. திடீரென தலைவனை பார்த்ததும் பெண்மைக்குரிய வெட்கம் காதல் தீ குப்பென பற்றி எரிய ஆரம்பித்தது. இதை உமாமகேஸ்வரனுக்கு தெரிந்து கிண்டலடிக்க தொடங்கினார். விடுதலைப்புலிகள் இயக்கத்தில் குழப்பம், கேள்விகள் தடுமாறிவிட்டார் பிரபாகரன். மன்னனை காக்கும் மதியுக மந்திரியாய் நின்றார் பாலசிங்கம். இயக்கத்தின் முக்கிய தளபதிகள் சென்னைக்கு வரவைக்கப்பட்டனர். விவாதம் அணல் பறந்தது குறிக்கிட்டு பேசிய அடேல், கல்யாணம் ஆனாலும் பிரபாகரன் சிறப்பா செயல்படுவாரு இயக்கம் சிதையாது என வாக்குறுதி தந்தார். விடுதலைப்புலிகள் அமைப்பின் விதியில் மாற்றம் செய்யப்பட்டது. ஐந்து ஆண்டுகள் இயக்கத்தில் பணியாற்றியிருந்தால் அவர்கள் திருமணம் செய்து கொள்ளலாம் என்ற மாற்றத்தோடு பிரபாகரன்-மதிவதினி காதல் அங்கீகரிக்கப்பட்டது.


  உடனே மதியின் தாய்-தந்தை சென்னைக்கு வரவைக்கப்பட்டு சம்மதம் கேட்கப்பட்டது. அரசாங்கம் தேடற ஆளாச்சே என தயங்கினர். மதிவதினியின் உறுதியால் திருமணத்துக்கு சம்மதித்தனர். 1.அக்.1984 சென்னை திருப்போரூர் முருகன் கோயிலில் பிரபாகரன்-மதிவதினி திருமணம் நடந்தது. புது வீட்டுக்கு குடிபோயினர்.

      அந்த நேரம் பிரபாவுக்கு டெலோ சபாரத்தினம் பெண்களை தனது இயக்கத்துக்கு கொண்டு வருகிறார். அவர்களை சரியாக பராமரிப்பதில்லை வேறு சில தொந்தரவுகளும் அவர்களுக்கு தருகிறார்கள் என்ற தகவல் வந்தது. அப்போது விடுதலை புலிகள் இயக்கத்தில் பெண்கள் பிரிவு கிடையாது. பெண்கள் அதிக அளவில் ஆயுதம் ஏந்த தயராகயிருப்பதை அறிந்தவர் மைய குழுவில் சாதக-பாதகங்களை அலசியபின் பெண்கள் பிரிவு ஒன்றை தொடங்கினார். அமைப்புக்கு வரும் பெண்களை அடேலிடம் அனுப்பிவைத்தார் திருவான்மியூர் வீட்டின் மொட்டை மாடியில் அரசியல் பயிற்சி தரப்பட்டது. அதன்பின்பே ராணுவ பயிற்சி. மதுரையில் பெண்களுக்கான முதல் ராணுவ பயிற்சி மையத்தை ஆரம்பித்தார்.

      அந்த நேரம் தமிழ் போராளிகளுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. 1984-அக்-31 பிரதமர் இந்திரா அம்மையார் சீக்கிய பாதுகாவலனால் சுடப்பட்டார். 18 தோட்டாக்களை உள்வாக்கிய அந்த இரும்பு தேக பெண்மணி இறந்துபோனார். கலைஞர் இந்திய தீபகற்பம் தண்ணீரில் மிதக்கவில்லை. கண்ணீரில் மிதக்கிறது என துக்க செய்தி வெளியிட்டார். அந்த துக்க வரிகள் அத்தனை உண்மை. இந்திராவுக்காக இந்தியாவே அழுதது. கூடவே வங்கதேசம் மற்றும் இலங்கை தமிழ் மக்களும் அழுதனர். உலக நாடுகளின் தலைவர்கள் பலர் டெல்லிக்கு வந்தனர் ஜெயவர்தனாவும் போயிருந்தார். நாட்டில் சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் நடந்துக்கொண்டுயிருந்தது. அதே வேகத்தில் கூடிய காங்கிரஸ் காரிய கமிட்டியும் அமைச்சரவையும் இந்திராவின் புதல்வர் பைலட் இராஜிவ்காந்தியை பிரதமர் ராஜிவ்காந்தியாக முடிசூட்டியது.

எவ்வளவு வேகத்தில் இராஜிவ் பதவியில் ஏற்றப்பட்டாரோ அதே வேகம் பிரச்சனையை கையாள்வதில் காட்டினார். குறிப்பாக இலங்கை இனப்பிரச்சனையில் அவர் காட்டிய வேகத்துக்கு கிடைத்த பரிசு மரணம் அதுவும் கொடூர மரணம்.

முந்தைய பதிவு. 6. விடுதலைப்புலிகள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக