வெள்ளி, செப்டம்பர் 02, 2011

தூக்குக்கு எதிரான தீர்மானத்திற்க்கு பின்னால்.




கடந்த 15ந்தேதி தமிழ் உணர்வாளர்களின் திராவிட எதிர்ப்பு அரசியல் கட்டுரை வெளியிட்டுயிருந்த மறுநாள் அதாவது ஆகஸ்ட் 16ந்தேதி முருகன், சாந்தன், பேரறிவாளனை தூக்கில் போடச்சொல்லி மத்திய உள்துறை முறைப்படி தமிழக முதல்வருக்கு அனுப்பிய கடிதம் முதல்வரான ஜெவுக்கு கிடைத்தது. அதுப்பற்றி 25ந்தேதி வரை வாய் திறக்காதவர் அவர் தந்த ஒப்புதலுக்கு பின் 25ந்தேதி இரவு வேலூர் மத்திய சிறை கண்காணிப்பாளர்க்கு கடிதம் அனுப்பப்படுகிறது. அதில், அவர்களை தூக்கில் போட்டு உடனடியாக தகவலை அரசுக்கு தெரியப்படுத்துங்கள் என்று. இத்தகவல் தெரிந்தும் தமிழ் உணர்வாளர்கள் கொதித்தார்கள் ஆனால் முதல்வருக்கு எதிராக வாய்திறக்கவில்லை. கல்லூரி மாணவ-மாணவிகள், வழக்கறிஞர்கள், பல்வேறு இயக்கங்கள் ஆர்ப்பாட்டம், போராட்டம், உண்ணாவிரதம், மனிதசங்கிலி போன்றவற்றில் தீவிர கவனம் செலுத்தினார்கள். ராமதாஸ், வை.கோ, திருமாவளவன், பழ.நெடுமாறன், சீமான் போன்றோர் அவர்களை காப்பாற்ற கோரி முதல்வர்க்கு கோரிக்கை விடுத்தார்கள். அப்படியும் ஜெயலலிதா வாய் திறக்கவில்லை.

28ந்தேதி இரவு காஞ்சிபுரத்தில் தோழி செங்கொடி தீ குளித்து திறந்தார். அப்போதும் தமிழ் உணர்வாளர்கள் அரசுக்கு எதிராக யாரும்மே மூச்கூட விடவில்லை. அம்மா நீங்கள் தான் காப்பாற்ற வேண்டும் என கெஞ்சினார்கள். 29ந்தேதி சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் எனக்;கு அந்த அதிகாரம்மில்லை என அறிவித்த முதல்வர். இது கருணாநிதி செய்த சதியால் வந்த விணை என அரசியல் பேசினார். அப்போதும் அம்மா அவர்களை காப்பாற்ற உங'களிடம் அதிகாரம்முள்ளது அதற்க்கு முன் உதாரணங்கள் உள்ளது என்றார்களே தவிர வேறு ஒரு வார்த்தை கூட அவரைப்பற்றி கடுமையாக பேசவில்லை. முன்னால் முதல்வரான கலைஞர் கருணாநிதி, முதல்வருக்கு அதிகாரம்முள்ளது அவரால் முடியும் என அறிக்கை விட்டார். எதிர்கட்சி தலைவரான விஜயகாந்த் ஏதோ வேண்டா வெறுப்பாக அறிக்கை விட்டார். பல தலைவர்கள் தொடர்ந்து அறிக்கை விட்டார்கள். அதேநாள், சென்னை உயர்நீதிமன்றத்தில் மூவரின் சார்பில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. 30ந்தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என அறிவிக்ப்பட்டது.


29ந்தேதி இரவு தலைமைசெயலகம், போயஸ்கார்டன் பிஸி. வழக்கில் நிச்சயம் தடை என கிடைக்கும் என அறிவித்தார்கள் அவரது நலன் விரும்பிகள். இதனை ஆலோசித்த ஜெ நாம் இந்த நேரத்தில் தீர்மானம் இயற்றினால் தமிழர்களுக்கு ஐஸ் வைத்ததுபோலகிவிடும், நாம் தான் தூக்குதண்டனையை நிறுத்தியது போலகிவிடும் என யோசித்தே 30ந்தேதி ஜெ சட்டமன்றத்தில், தமிழக மக்களின் விருப்பத்திற்க்கினங்க ( இந்த இடத்தை நன்றாக கவனித்துக்கொள்ளுங்கள் அப்போதும் அவரின் விருப்பமல்ல ) மூவரின் தூக்கை மத்தியரசு நிறுத்த வேண்டும்மென தீர்மானம் கொண்டு வந்தார். அதேநேரம் சென்னை உயர்நீதிமன்றத்தில் பிரபல வழக்கறிஞர்கள் ராம்ஜெத்மலானி, கான்சிலோஸ், சௌத்ரி, வைகை, வை.கோ, தடா.சந்திரசேகர் ஆகியோர் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் வழக்கில் ஆஜராகி தூக்கு தண்டனையை 8 வார காலத்திற்க்கு இடைக்கால தடை பெற்று தந்தார்கள்.

இது ஒருபுறம்மிருக்கட்டும்.

சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றியதை ஒரு நாளிதழ் முதல்வர் ஜெவுக்கு சிறப்பு நன்றி தெரிவித்து செய்தி வெளியிட்டுள்ளது. இந்த தீர்மானம் குப்பை தொட்டியில் போடதான் பயன்படுமே தவிர அவர்களை காப்பாற்ற பயன்படாது என்பது அரசியல் சட்டம் தெரிந்த அனைவருக்கும் தெரியும். நன்றி தெரிவித்து  செய்தி வெளியிட்ட செய்தி ஆசிரியர்களுக்கும் தெரியும். காரணம் தூக்குதண்டனையை ரத்து செய்ய சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றினால் செல்லாது. முதல்வர் தனது அமைச்சரவையை கூட்டி தீர்மானம் இயற்றி அதை கவர்னரிடம் தந்தால் மட்டுமே தண்டனையை ரத்து செய்யவோ, குறைக்கவோ முடியும் இதுதான் நடைமுறை. இப்படித்தான் இதற்க்கு முன் சிலர் தமிழகத்தில் தூக்குதண்டனையில் இருந்து விடுதலை பெற்றுள்ளார்கள். இதை இன்று போராட்ட களத்தில்வுள்ள தலைவர்கள் வெளியே சொல்லாமல் இருக்கலாம். ஆனால் பொதுக்கூட்டம் ஒன்றில் பேரா.கிலானி இதை வெளிப்படுத்திவிட்டு போய்வுள்ளார்.

அதனால் தோழர்களே ஜெயலலிதாவிடம் போய் கூறுங்கள், சட்டமன்ற தீர்மானத்தை போல அமைச்சரவை தீர்மானம் ஒன்றை கொண்டு வாருங்கள் அவர்களை காப்பாற்றுங்கள் என்று. ஈழ விவகாரத்தில் கலைஞர்க்கு ஒரு பார்வை ஜெயலலிதாவுக்கு ஒரு பார்வை வைத்து அரசியல் செய்யாதீர்கள். இரண்டு பேரும் ஒரே தராசில் வைக்க வேண்டியவர்கள் தான். பல விவகாரங்களில் கலைஞரை நம்பலாம். ஜெயலலிதா நம்ப தகுந்தவரல்ல.


ஆனால் நீங்கள் கடந்த காலங்களில் கலைஞரிடம் காட்டிய எதிர்ப்பு வேகத்தை ஜெ விடம் காட்ட மறுக்கிறீர்களே ஏன்?. பயமா இல்லை பக்தியா ? பயம் என்றால் களத்திற்க்கு வராதீர்கள். பக்தி என்றால் வெளிப்படையாக சொல்லுங்கள் நாங்கள் தமிழர்கள் தான் ஆனால் பார்ப்பனியத்துக்கு கொடி பிடிக்கும் தமிழர்கள் என்று. பார்ப்பனர்களான சோ, சுப்பிரமணியசாமி, குருமூர்த்தி, வைத்தியநாதன் போன்றவர்கள் வெளிப்படையாக அவாளுக்கு ஆதரவாக இருக்கிறார்கள். நீங்கள் தமிழ் உணர்வு, திராவிட அரசியல் எனச்சொல்லிக்கொண்டு மக்களை ஏமாற்றிக்கொண்டு ஜெ வுக்கு கவாடி தூக்குகிறிர்களே நியாயமா?.

இல்லை நாங்கள் செய்தது இராஜதந்திரம், அதிகாரம் உள்ளவரிடம் அடங்கிபோனதால் தான் நமக்கு சாதகமாக அவர் மாறுகிறார் எனச்சொன்னால் கடந்த காலங்களில் அதிகாரத்தில் இருந்த திமுக அரசாங்கத்திடம் இப்படி நடந்துகொள்ளவில்லையே அது ஏன்? எதனால்? உங்களால் கூற முடியாது காரணம் பார்ப்பணிய பக்தி. வாழ்க உங்கள் அரசியல்.

2 கருத்துகள்:

  1. இதுபோன்ற இக்கட்டான நிலையிலும் கூட இதுபோன்ற ஆய்வுக்கட்டுரைகளை எழுதி உணர்வலைகளை சிதைக்காதீர்.....

    பதிலளிநீக்கு
  2. தோழர் சுரேஷ்க்கு நான் உணர்வுகளை கொச்சைப்படுத்தவோ, மழுங்கபடிக்கவோ முற்படுவில்லை. இதில் உள்ள விவகாரங்களை வெளியே சொல்லியுள்ளேன். அவ்வளவு தான்.

    பதிலளிநீக்கு