வெள்ளி, அக்டோபர் 21, 2011

வை.கோவை சீமான் வெறுப்பது ஏன்?.


 
வை.கோ மீதும், அவரின் பல முடிவுகள் மீது எனக்கு எதிர்மறையான விமர்சனங்கள்  உண்டு. ஆனால் அவர் ஈழ மக்களுக்காக எப்போதும் எந்த காம்பர்மைஸ்சும் செய்துக்கொள்ளாத தீவிர ஈழ ஆதரவாளர். வெளிப்படையாக சொல்ல வேண்டும்மென்றால் விடுதலைப்புலிகள் ஆதரவாளர்.
 
திமுகவில் இருந்து பிரிந்து வந்து மதிமுகவை ஆரம்பித்தபோது கட்சியின் கொள்கையாகவே விடுதலைப்புலிகள் ஆதரவு என்பதனை வைத்த தைரியசாலி. இராஜிவ்கொலைக்கு பின் தமிழகத்தில் சரிந்திருந்த விடுதலைப்புலிகள் செல்வாக்கை பட்டிதொட்டியெல்லாம் போய் பேசிப்பேசியே தமிழக மக்களின் மனதில் நல் விதமாக பதியம் போட்டவர். அரசியல் களத்தில் ஜெ வோடு கூட்டணியில் இருக்கும் போது வேண்டுமானால் அவர் அடக்கி வாசித்திருக்கலாம். மற்றப்படி அவரின் குரல் எப்போதும் ஈழத்துக்காக, விடுதலைப்புலிகளுக்காக ஒலித்துக்கொண்டே தான் இருக்கிறது. கிட்டதட்ட 30 ஆண்டுகளாக தன் நா வலிமையால் தைரியமாக குரல் கொடுப்பவர். அப்படி குரல் கொடுத்ததால் கடந்த காலங்களில் இதே ஜெ அரசாங்கத்தில் பொடா சட்டத்தில் வேலூர் சிறையில் ஒரு ஆண்டு இருந்தவர்.
 

ஆனால் சீமான் இன்று வந்த தமிழ் உணர்வாளர். ஈழத்துக்காக உணர்ச்சியாக பேசி, வார்த்தைகளை அடுக்கி இளைஞர்களிடம் பிரபலமான பாஸ்ட்புட் உணர்வாளர். தனது அரசியல் வளர்ச்சிக்காக ஈழ விரோதிகளை கூட கொண்டாடும் சீமானைப்போல என்றும் வை.கோ இருந்ததில்லை. வை.கோ என்றும் ஈழ போராட்டத்தில் சாதி பார்த்ததில்லை என்பதை உறுதியாக கூறலாம். பேச்சு திறமையில், அரசியல் அனுபவத்தில், ஈழ பிரச்சனையில், விடுதலைப்புலிகள் விவகாரத்தில் வை.கோ ஒரு யானை. சீமான் ஆடு. இந்த ஆடு தான் வை.கோவை கீழே தள்ளி தான் பெரிய யானை என காட்ட முயல்கிறது.
 
சீமானும் அவரது இயக்கத்தினரும் வை.கோ மீது எதிர்ப்பு காட்ட, விரோதமாக இருக்க காரணம் என்ன ?.
 
முதலில் 2011 சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியை விட்டு வை.கோ போனது சீமான்க்கு பிடிக்கவில்லை. அதோடு, தூக்கு தண்டனை விவகாரத்தில் முருகன், சாந்தன், பேரறிவாளன் தூக்குதண்டனையை ரத்து செய்வதில் தமிழ் உணர்வாளர்கள் குழு ஈடுபட்டுள்ளது. அதில் அதிக அக்கறை காட்டியது நாம் தமிழர் கட்சி, வை.கோ.
 
இந்த விவகாரத்தை வைத்து தன்னை மேலும் வளர்த்துக்கொள்ள முயலும் சீமான், என் பிணத்தின் மீது தான் உங்கள் தூக்குதண்டனை நிறைவேறும் என கூறியதாக வெளியான தகவல். அடுத்ததாக முருகன், சாந்தன் தங்களை தூக்கிலிட்டப்பின் எங்களது உடலை சீமானிடம் தர வேண்டும் என எழுதி தந்துள்ளதாக வந்த தகவல்.
 

இது சீமான் தரப்பு அப்படித்தான் எழுதி தர வேண்டும் என கேட்டு எழுதி வாங்கியதாக மதிமுக தரப்பு மறைமுகமாக குற்றம்சாட்டுகிறது. ஒரு விதத்தில் அது உண்மையாகவும் இருக்கலாம். காரணம், பேரறிவாளன் உடலை வாங்க அவரது குடும்பம் உள்ளது, சாந்தன் உடலை வாங்க அவரது குடும்பம் தமிழகத்தில் இல்லை அதனால் சீமான்னிடம் தரச்சொல்லி இருக்கலாம். ஆனால் முருகன்க்கு அந்த நிலையில்லை.
 
காரணம், முருகனின் மனைவி நளினி தமிழகத்தை சார்ந்தவர். நளினி சிறையில் இருந்தாலும், அவரது தாயார் அதாவது முருகனின் மாமியார் வெளியே உள்ளார். அவரிடம் தான் தன் உடலை தரக்கோரியிருப்பார். அதற்க்கு நிறைய காரணங்கள் உள்ளன.

ஒரு வகையில் சீமானிடம் தரும் முடிவில் இருந்தாலும் அதை வெளிப்படுத்தியிருக்க மாட்டார்கள். காரணம், போராட்ட களத்தில் சீமான் மட்டுமல்ல வேறு பலப்பல அமைப்புகள் அவர்களுக்கு உதவியாக இருந்தன. அவர்களை விட்டுவிட்டு சீமானிடம் மட்டும் தரச்சொன்னால் அவர்களின் ஆதரவை தாங்கள் இழக்க வேண்டி வரும் என்பதை உணர்ந்தவர்கள். அப்படிப்பட்டவர்கள் சீமானை மட்டும் ஆதரித்தார்கள் என்பதை தான் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
 
அதோடு, சமீப காலமாக சீமான்க்கு தமிழக உளவுத்துறை அதிக முக்கியத்துவம் தரத்தொடங்கியுள்ளன. அரசியல் ரீதியாக இதை எம்.என் தான் தரச்சொல்கிறார். காரணம், சீமான்க்கு வழிகாட்டியாக நிற்பது சசிகலா கணவர் நடராஜன் தான் எனக்கூறப்படுகிறது. 

மற்றவர்கள் கூறுவது போல் விஜயலட்சுமி விவகாரம்மெல்லாம் ஒரு சிறு பிரச்சனை அவ்வளவே. 

அதோடு, தேர்தல்க்கு முன்பே சீமான் அதிமுக ஆதரவாளர் என்பதை பல முறை நிறுபித்தார். அதை அவரோடு இருப்பவர்கள் உணர தவறிவிட்டார்கள். பாராளமன்ற சட்டமன்ற தேர்தல்க்கு முன் அவர் வெளியே கூறாமல் எம்.என்னை சந்தித்தார். அதோடு உளவுத்துறைகளின் உதவியும் சீமான்க்கு கிடைப்பதாக கூறப்படுகிறது. 

ஜெவுக்கு எதிரானவர்கள் சீமான்க்கு விரோதிகள். இது தான் வை.கோவை சீமான் எதிர்க்க காரணம். அதோடு வருங்காலத்தில் ஈழ போராட்டத்தில் தமிழகத்தில் தான் மட்டுமே என்ற நிலையை உருவாக்க சீமான் நினைக்கிறார். இதையே ஜெ, உளவுத்துறை போன்றவையும் விரும்புவதாக உணர்வாளர்கள் வட்டாரம் பேசுகின்றன.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக