வெள்ளி, மே 22, 2015

மீண்டு(ம்) ஜெ வந்தார் முகம் தயராக இருக்கட்டும்.தன் செருப்பு காலால் சட்டத்தை நசுக்கி அது தன் மயிருக்கு சமானம் என நிறுபித்தவர் ஜெ. இன்றள்ள நேற்றள்ள என்றும்மே அவர் சட்டத்தை கண்டு கவலைப்படுவது கிடையாது. சட்டத்தை வளைக்க எதால் வேண்டுமானாலும் அடிப்பார். அப்படி அடித்துதான் பல தீர்ப்புகளை வாங்கியுள்ளார்.

சட்டம் மட்டுமல்ல எல்லாம்மே அவருக்கு துச்சம் தான். எதைப்பற்றியும் கவலைப்படமாட்டார். தான் நினைத்தது நடக்க வேண்டும் என நினைப்பார். முதலமைச்சராக பதவிக்கு வருவதற்க்கு முன்பு நியமன எம்.பியாக எம்.ஜீ.ஆரால் நியமிக்கப்பட்ட போதே சட்டத்தை மீற தொடங்கியவர் அவர். எம்.ஜீ.ஆர் அமெரிக்காவில் மருத்துவமனையில் இருந்தபோது, அவரால் நிர்வாகம் செய்ய முடியாது என்னை முதல்வராக நியமியுங்கள் என கேட்டுக்கொண்டதில் இருந்து வெளிப்படையாக தொடங்குகிறது அவரது தரம் தாழ்ந்த அரசியல் விளையாட்டு.

எம்.ஜீ.ஆர் இறந்தபோது, ஜானகி தான் மோரில் விஷம் வைத்து அவரை கொன்றார் என அவரது மனைவி மீதே குற்றம்சாட்டினார். அதோடு, எம்.ஜீ.ஆர் உடல் அருகிலேயே இருந்து கட்சியை கைப்பற்ற அவர் நடத்திய டிராமா யாரும் யோசிக்க முடியாதது........ அதன்பின் பல யோசிக்க முடியாத அரசியல் விளையாட்டுகளை காண செய்தது தமிழகமும், இந்தியாவும்.

1990 ல் சட்டமன்றத்தில் முதல்வர் இருக்கையில் இருந்த கலைஞரின் கையில் இருந்த பட்ஜெட் நகலை பிடுங்கி அவரை அடிக்க முடியல அதற்கு திமுக அமைச்சர்கள் சிலர் ஜெவை பிடித்து தள்ள  சட்டமன்றத்துக்கு வெளியே வந்து என் புடவையை பிடித்து இழுத்தார்கள் என கூப்பாடு போட்டார்.

பின் ராஜிவ்காந்தியுடன் கூட்டணி வைத்தார் விடுதலை புலிகளால் ராஜிவ்காந்தி கொல்லப்பட இந்த கொலைக்கு திமுக தான் காரணம் என விவகாரத்தை திசை திருப்பி விட்டு திமுக நசுக்கப்பட்டு எதிர்த்து களமாட ஆளேயில்லாத தேர்தல் மைதானத்தில் விளையாடி 91ல் முதல் முறையாக முதல்வர் நாற்காலியில் அமர்ந்தார்.

காணாததை கண்ட குரங்கை போல ஆட்சியில் அமர்ந்தால் வரும் வருமானம், லஞ்சம் போன்றவற்றை பார்த்து திட்டங்களில் கோடிக்கோடியாய் கொள்ளை அடிக்க தொடங்கினார். கங்கைஅமரன் உட்பட பல பிரபங்களின் சொத்துக்களை பிடுங்கியது, ஏழைகளின் நிலங்களை பறித்தது, எதிர்ப்வர்கள், எதிரிகள் என கண்டறியப்பட்ட கே.கே.எஸ்.எஸ்.ஆர், ஐ.ஏ.எஸ் அதிகாரி சந்திரலேகா போன்றவர்கள் மீது ஆசிட் விச்சி, ரவுடிகளை வைத்து வழக்கறிஞர் சண்முகசுந்திரம் மீது கொலைவெறி தாக்குதல், கட்சிக்காரர்களை வைத்து பா.சி, மணிசங்கர்அய்யரை தன் கட்சியினரை வைத்து தாக்க வைத்தது என நேரடியாக ஜெ – சசி கும்பல் அராஜகத்தை தமிழகத்தில் நடத்தியது. ஜெ மீது ஊழல் விசாரணைக்கு கவர்னர் சென்னாரெட்டி உத்தரவிடப்போகிறார் என்றதும், என் கையை பிடித்து இழுத்தார் என பேட்டி தந்து அவருக்கு நெஞ்சுவலி வந்து சாக காரணமானர்.

ஆட்சி கட்டிலில் இருந்து இறங்கியபின் தொடுக்கப்பட்ட வழக்குகளில் இருந்து தப்பிக்க பல அந்தர் பல்டிகளும், இதற்கு நீதி வளைந்து கொடுத்த தன்மைகளை எழுதினால் நீதித்துறையை ஒருவரும் மதிக்கமாட்டார்கள்.

2000த்தில் தேர்தலில் நிற்க முடியாமல் சட்டம் தடுத்தபோது, ஒரே நேரத்தில் 4 தொகுதிகளில் வேட்பு மனுவை தாக்கல் செய்து அனுதாபம் தேடினார். எம்.எல்.ஏவாக இல்லாத சூழ்நிலையில் கவர்னர் பாத்திமாபீவிக்கு செட்டில் செய்து முதல்வர் பதவியில் அமர்ந்தபின் கொஞ்சம் மாற்றி அராஜகம் செய்ய தொடங்கினார். இதே காலக்கட்டத்தில் டான்சி நில கொள்ளையில் இருந்து விடுதலை, பிளசன்ட் டே ஹோட்டல் வழக்குகளில் இருந்து எப்படி விடுதலை செய்யப்பட்டார் என்பது வெளிப்படை.

கோடிகளை கொட்டி பழைய கால மகாராசக்கள் மகன்களின் திருமணம் நடப்பதை போல தன் வளர்ப்பு மகன் சுதாகரன் திருமணத்தை நடத்தினார். கிலோ கணக்கில் நகை வாங்கியதற்கு பணம் தராததால் பிரபலமான நகைக்கடை அதிபர் தற்கொலை செய்துக்கொள்ள காரணமானவர். ஆடம்பர திருமணம் செய்து வைத்து வைத்த வளர்ப்பு மகன் சுதாகரனை ஹெராயின் கேஸ் போட்டு சிறையில் வைத்து அடித்து உதைப்பதை போன் வாயிலாக கேட்டு ரசித்தவர். தனது ஆடிட்டர் பாஸ்கர் சரியாக கணக்கு போடாததால் தான் தன் மீது ஊழல் வழக்கு வர காரணம் என ஜெவே அவரை அடித்து உதைத்தது என விவகாரங்கள் நீளும்.

ஜெ மீதான முறைகேடு வழக்கை விசாரித்த ஒரு நீதிபதியின் மருமகன் மீது ஹெராயின் வழக்கு, மற்றொரு நீதிபதியின் வீட்டுக்கு மின்சாரம், குடிநீர் சப்ளை துண்டிப்பு என ஆட்டம் போட்டவர் ஜெயலலிதா. அதிகாரிகளை சட்டையால் அடித்து வேலை வாங்குகிறேன் என்றவர் எஸ்மா, டெஸ்மா சட்டத்தால் லட்ச கணக்கான ஊழியர்களை ஒத்த கையெழுத்தில் வீட்டு அனுப்பியவர் தற்போது அதே ஜெ தன் பார்வையை உணர்ந்து காலில் விழுந்து நக்கும் தன் அமைச்சர்களை கூட நம்பாமல் அதிகாரிகளை வைத்து ஆட்சி நடத்துகிறார்.

சட்டமன்றத்திலும் ஜெ சர்வாதிகாரி தான். தன் புகழ் பாடும் கவிதைகள், எதிர்கட்சி தலைவர்களை மிக கேவலமாக பேசுவதை ரசிப்பது மட்டுமல்ல எதிர்கட்சிகளின் நியாயமான கோரிக்கைகளை கேட்காதவர். சட்டமன்றத்தில் தாமரைக்கனியை வைத்து விரபாண்டி ஆறுமுகத்தை அடிக்க வைத்ததாகட்டும், காவல்துறை கயவர்களால் பத்மினி என்ற பெண் கற்பழிக்கப்பட்டதை கேள்வி கேட்டதற்கு பதில் சொல்லாமல் போனதையடுத்து சட்டமன்றத்துக்குள் எதிர்கட்சிகள் உண்ணாவிரதம் இருந்தபோது, மின்சாரம், குடிநீர் போன்றவற்றை நிறுத்தி அந்த கட்டிடத்திற்குள் வைத்து எதிர்கட்சி எம்.எல்.ஏக்களை பூட்டி ஜனநாயகத்தை கொலை செய்தார். 110 விதியின் கீழ் அறிக்கை வாசித்தல் தான் இந்த 4 ஆண்டுகளில் ஜெ செய்த சாதனை. இன்னும் பட்டியல் போடலாம் படிக்கத்தான் நேரம் இருக்காது. அவருக்கு எதிராக சட்டமன்றத்தில் குரல்கள் எழுந்தாலும், பத்திரிக்கை, தொலைக்காட்சிகளில் செய்திகள் வந்தாலும் அவர்களை நசுக்குவதை குல தொழிலாக வைத்துள்ளார். ஜனநாயகம், சட்டம், நன்னடத்தை விதிகள், சட்டமன்ற மாண்புகளை மிதித்தவர் ஜெ.

இதைத்தான் ஜெவின் தைரியம் என்கிறார்கள். என்னிடம் எதற்கும் துணிந்த பத்து ரவுடிகள் கையில் இருந்தால் நானும் என்ன வேண்டுமாலும் செய்ய முடியும். என்னை கண்டும் எல்லோரும் பயப்படுவார்கள். இதைத்தான் ஜெ செய்கிறார். அவர் ஆட்சியில் இருக்கும் போது காவல்துறையில் அவர் ஏவுவதை செய்து முடிக்கும் ஏவலர்கள் உள்ளார்கள். செய்கிறார்கள். எங்கே எதிர்கட்சியாக இருக்கும் போது செய்யச்சொல்லுங்கள் பார்க்கலாம் ?.

ஜெ எது செய்தாலும் அதை நியாயப்படுத்தி பேச சோ, குருமூர்த்தி போன்ற பார்ப்பன கும்பல்களோடு,  காவி கும்பல்கள், சட்டம் படித்தவர்கள் மட்டுமல்ல பத்திரிக்கையாளர்கள் வரை எல்லா இடத்திலும் நடுநிலை வேடம் போட்டுக்கொண்டு ஆட்கள் இருக்கிறார்கள். ஊழல் தவறுயில்லை என தன் கட்சி தொண்டர்களை, மக்களை நம்பவைத்த, மூளையை மழுங்கடித்த ஜெ போன்ற அரசியல்வாதிகளை ஆதரிக்கிறிர்களே இவர்களுக்கு வெட்கமாகயில்லையா?. 


கிடையாது. சாதி பாசம், அதிகார வெறி, பணம் இவைகள் அவர்களை வெட்கப்படவைக்காது. ஆனால் மக்களாகிய நாமெல்லாம் வெட்கபட வேண்டும். ஆனால் படமாட்டோம். மூஞ்சியில் காரி துப்பினாலும் துடைத்து தூரப்போட்டுவிட்டு குதுகலிக்கும் மனப்பான்மையை ஆண்டாண்டு காலமாக வளர்த்துக்கொண்டுள்ளோம்.

இதோ, காரி துப்ப மீண்டு(ம்) ஜெ வந்துவிட்டார். துப்புவதை வாங்கிக்கொள்ள தயாராகயிருங்கள். அதை நியாயப்படுத்த நியாயவான்கள் நிறையப்பேர் உள்ளார்கள் கவலைப்படாதீர்கள்.


வெள்ளி, மே 15, 2015

ஜெவின் சொத்து பட்டியலின் ஒரு பகுதி.
திமுக தலைவர் குடும்ப சொத்து மதிப்பு என ஒரு பட்டியலை அடிக்கடி வளை தளங்களில் வெளியிடுகிறார்கள். மிகப்பெரிய குடும்பத்துக்கு அவ்வளவு சொத்துக்கள் இருப்பது ஆச்சர்யமில்லை. ஆனால் நான் தனி மனுஷி எனக்கு குடும்பமா குட்டியா என பொன்மொழி உதிர்த்தவருக்கு உள்ள சொத்துக்களின் பட்டியலை படித்தபோது நிச்சயமாக மலைத்து போய்விட்டேன். 


1991 - 1996 ல் தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா வாங்கி குவித்த சொத்துக்களின் பட்டியலை அப்போது மகஇக சிறுவெளியீடாக வெளியிட்டுள்ளது. ஒரு தேடலின் போது அந்த பட்டியல் கிடைத்தது. அப்படியே உங்கள் பார்வைக்கு. அப்போதே அவ்வளவு கொள்ளையென்றால் இப்போது எவ்வளவு கொள்ளையடித்து இருப்பார்கள் என நினைத்தபோது அதிர்ச்சியாக இருந்தது. 

ஜெயா சசி கும்பலின் ஊழல் சாம்ராஜ்யம் குறித்த விபரங்கள்.

வாங்கிக் குவிக்கப்பட்டுள்ள விவசாய நிலங்கள்
 • மன்னார்குடி அருகே ரிஷியூரில் முப்போகம் விளையக்கூடிய 80 ஏக்கர் பூமி; இதில் ஜெயா சசிகலா வகையறாக்கள் ஓய்வெடுத்துத் தங்கிச்செல்ல பண்ணை வீடு.
 • வாழாச்சேரியில் 21 ஏக்கர் நஞ்சை நிலம்
 • மூவாநல்லூரில் 15 ஏக்கர் தென்னந்தோப்பு
 • இலஞ்சிக்குடியில் மா, பலா, தென்னை மரங்கள் கொண்ட 250 ஏக்கர் தோப்பு
 • வல்லத்திற்கு அருகிலுள்ள ஆலக்குடி கிராமத்தில் சிறு விவசாயிகளை மிரட்டி வளைக்கப்பட்ட 250 ஏக்கர் நிலம்
 • சிதம்பரனார் மாவட்டத்தில் அரசகுளம், வல்லக்குளம், கிளாங்குளம், கால்வாய், மீரான்குளம், சேரங்குளம் கிராமங்களில் பாமாயில் விதை விவசாயத்திற்காக 2000 ஏக்கர் நிலம்
 • பசும்பொன் மாவட்டத்தில் மாங்குளம், விளாக்குளம், புளியங்குளம், எஸ். காரைக்குடி, தெற்கு சந்தனூர், வடக்கு சந்தனூர் உள்ளிட்ட 25 கிராமங்களில் தாழ்த்தப்பட்டோருக்கு அரசு கொடுத்த நிலங்கள், மற்றும் களம் புறம்போக்கு, கால்வாய் ஓடை புறம்போக்கு, மேய்ச்சல் காடுகள் என கிராம பொது நிலங்கள் உள்ளிட்ட 13,000 ஏக்கர் பூமி
 • பட்டுக்கோட்டை அதிராம்பட்டிணம் சாலையில் பள்ளிக்கொண்டான் கிராமத்தில் 15 பம்ப் செட் கொண்ட 60 ஏக்கர் தென்னந் தோப்பும், நீச்சல் குளத்துடன் உள்ள மாளிகையும்,
 • அதிராம்பட்டிணம் மதுக்கூர் சாலையில் ராசியங்காட்டில் 6 பம்ப் செட் கொண்ட 20 ஏக்கர் தென்னந்தோப்பு
 • சென்னைக்கு அருகே பூண்டி ஏரியை ஒட்டியுள்ள வேளகாபுரம் கிராமத்தில் 50 ஏக்கரில் மாந்தோப்பு
 • தஞ்சை குருங்குளம் வட்டத்தில், உடையான்பட்டி கிராமத்தில் 230 ஏக்கர் முந்திரித் தோப்பு.
 • கும்பகோணம் ஒரத்தநாடு சாலையில் தட்டுமால் படுகை கிராமத்தில் 15 ஏக்கரில் தென்னந்தோப்பு
ஆடம்பர அடுக்கு மாளிகைகள் வீட்டு மனைகள்
 • தஞ்சையில் அருளானந்த நகருக்கும், பிலோமினா நகருக்கும் இடையே சசிகலாவின் கணவன் நடராசனுக்கும், சசிகலாவின் அண்ணன் மகன் மகாதேவனுக்கும் சொந்தமான பளிங்குக்கல் பதித்த இரு மாளிகைகள்
 • நாகை வெளிப்பாளையத்திலுள்ள 89 லட்ச ரூபாய் பெறுமானமுள்ள மேட்டு பங்களா
 • சென்னைக்கு அருகே கொரட்டூரில் 8 கோடி ரூபாய் செலவில் வளர்ப்பு மகன் சுதாகரனின் ஆடம்பர மாளிகை
 • சென்னையில் கிண்டி தொழிற்பேட்டையில் 3 கோடி மதிப்புள்ள 2 அடுக்கு பட்டை தீட்டிய கருங்கல் கிரானைட் மாளிகைகள்
 • மதுரையில் உள்ள பிரமாண்டமான தங்கம் தியேட்டர்
 • சென்னை லஸ் பகுதியிலுள்ள 1 கோடியே 13 லட்சம் மதிப்பு கொண்ட நாகேஸ்வரராவ் மாளிகை.
 • மதுரை கிருஷ்ணராய தெருவில் உள்ள 18 கோடி ரூபாய் மதிப்புடைய 37,114 சதுர அடி பரப்பு கொண்ட காலி மனையும், அடுக்கு மாடி கட்டிடங்களும்
 • மன்னார்குடியில் திவான் பங்களா
 • மகாபலிபுரத்தில் இருந்து 6 கி.மீ தொலைவில் திருப்போரூர் செல்லும் வழியில் பையனூர் கிராமத்தில் 50 ஏக்கர் தோப்பில் மையமாக அமைந்த நவீன வசதிகள் கொண்ட ஆடம்பர பங்களா
 • ஹைதராபாத்தில் 100 ஏக்கர் திராட்சை தோட்டம். அதன் நடுவில் கோட்டை போன்று வடிவமைக்கப்பட்ட ஆடம்பர பண்ணை வீடு; செகந்திராபாத் மேற்கு மர்ரேட்பள்ளி பகுதியில் இரண்டு அடுக்கு மாளிகை. இவ்விரண்டு மாளிகைகளிலும் பாதுகாப்பு வசதிக்காக நவீன மின்னணு சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளன.
ஆலைகள் தொழில்களில் முதலீடு
 • தஞ்சையில் நவீன வசதிகள் கொண்ட விநோதகன் மருத்துவமனை
 • திருவாரூர் அருகே வண்டாம்பாளையம் எனுமிடத்தில் கிட்டத்தட்ட ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள நெல் அரவை ஆலை. ராம்ராஜ் அக்ரோ மில்ஸ் என்ற இவ்வாலை சசிகலாவின் கணவர் நடராசனின் சகோதரர் சம்பந்த மூர்த்தி பெயரில் உள்ளது. இங்கிருந்து தான் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த லட்சக்கணக்கான நெல் மூட்டைகள் சமீபத்தில் கைப்பற்றப்பட்டன.
 • தஞ்சை அருகே விளாரில் நடராசனின் மூத்த அண்ணன் சாமிநாதனின் பெயரிலுள்ள ’’மருதப்ப மன்னையார் ஆலை’’.
 • தஞ்சை மேம்பாலம் அருகே சிறுவர் சீர்திருத்தப் பள்ளி மைதானத்தில் எஸ்.டி.எஸ்-ன் பினாமி சொத்தாக ’’டெம்பிள் டவர்’’ என்ற பெயரில் ஆடம்பர நட்சத்திர விடுதி.
 • நாகையில் 6 கோடி ரூபாய் மூலதனம் கொண்ட ’’இந்தியன் ஸ்டீல் ரோலிங் மில்’’.
 • ஸ்ரீ பெரும்புதூர் அருகேயுள்ள மாம்பாக்கத்தில் 15 கோடி ரூபாய் மூலதனம் கொண்ட ’’மைக்கம் லெதர் எக்ஸ்போர்ட்ஸ்’’ என்ற தோல் ஏற்றுமதி நிறுவனம்
 • திருத்துறைப்பூண்டியில் இராஜஸ்தான் பளிங்கு கற்களால் அழகு செய்யப்பட்ட மூற்று அடுக்குகள் கொண்ட அன்னை சந்தியா திருமண மண்டபம்.
 • சென்னை மகாபலிபுரம் சாலையில் பண்டிதமேடு எனுமிடத்தில் 255 ஏக்கர் பரப்பில் கட்டப்படும் ’’பரணி பீச் ரிசார்ட்ஸ் லிட்’’ எனும் சுற்றுலா ஓய்வு விடுதி.
 • ஊட்டியில் 1264.01 ஏக்கர் பரப்பு கொண்ட 45 கோடி ரூபாய் மதிப்புடைய கிரேக்மோர் எஸ்டேட்; கோத்தகிரிக்கு அருகில் 7.60 கோடி ரூபாய் மதிப்புடைய கோடநாடு தேயிலைப் பண்ணை.
 • மன்னார்குடிக்கு அருகில் சுந்தரக்கோட்டையிலுள்ள செங்கமலத் தாயார் மகளிர் கல்லூரி
 • கிண்டி தொழிற்பேட்டையிலுள்ள பத்து கோடி ரூபாய் மூலதனம் கொண்ட ’’ஜெயா பப்ளிகேஷன்ஸ்’’.
 • வினோத் வீடியோ விஷன், மெட்டல் கிங், ஃபிரஷ் மஷ்ரூம்ஸ், மார்பிள் மார்வல், ஜெயா கன்ஸ்ட்ரக்ஷன்ஸ், ஜெ.எஸ். ஹவுசிங் டெவலப்மெண்ட், ஜெ. ரியல் எஸ்டேட், ஜெ. ஃபார்ம் ஹவுஸ், க்ரீன் ஃபார்ம் ஹவுஸ், ஜெ.ஜெ. லீசிங் அண்ட் மெயின்டனென்ஸ், விக்னேஷ்வர் பில்டர்ஸ், லட்சுமி கன்ஸ்ட்ரக்ஷன்ஸ், கோபால் புரமோட்டர்ஸ், நமசிவாயம் ஹவுசிங் டெவலப்மெண்ட், ஐயப்பா பிராப்பர்டி டெவலப்மெண்ட், சீ என்க்ளேவ், நவசக்தி கன்ஸ்ட்ரக்ஷன் அண்ட் பில்டர்ஸ், ஓசியானிக் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ், க்ரீன் கார்டன் அபார்ட்மெண்ட்ஸ், சசி எண்டர்பிரைசஸ் உள்ளிட்ட 21 நிறுவனங்கள்
 • அந்நிய நாடுகளுடன் தொடர்புடைய ஜெ.ஜெ. டி.வி மற்றும் சூப்பர் டூப்பர் இன்வெஸ்ட்மெண்ட்ஸ் நிறுவனங்கள்.
அந்நிய நாடுகளில் போடப்பட்டுள்ள முதலீடுகள்
 • ஜெ.ஜெ. டி.வி. நிகழ்ச்சிகளை செயற்கைக்கோள் மூலம் ஒளிபரப்புவதற்காக 10 லட்சம் அமெரிக்க டாலர் (4 கோடி ரூபாய்) ரிம்சாட் என்ற அமெரிக்க நிறுவனத்தில் முன்பணமாக செலுத்தப்பட்டுள்ளது.
 • சென்னை அபிராமபுரம் இந்தியன் வங்கிக் கிளையில் மலேசியாவில் வசிக்கும் சுசீலா என்பவர், அந்நிய நாட்டில் வசிக்கும் இந்தியர் என்ற தகுதியில் 3.35 கோடி ரூபாய் முதலீடு செய்தார். இந்த தொகை பின்னர் இவ்வங்கியில் சசிகலாவின் நிறுவனமான பரணி பீச் ரிசார்ட்ஸ் லிட். வாங்கியிருந்த மூன்று கோடி ரூபாய்க்கு ஈடு செய்யப்பட்டது.
 • அந்நியச் செலவாணி மோசடியில் கைது செய்யப்பட்டுள்ள தினகரன் ’’டிப்பர் இன்வெஸ்ட்மெண்ட்ஸ் ஆஃப் விர்ஜின் இந்தியா’’ எனும் பெயரில் 35 கோடி ரூபாயை இங்கிலாந்திலுள்ள பார்க்ளெஸ் வங்கியில் முதலீடு செய்துள்ளார்.
 • நிலக்கரி இறக்குமதி ஊழலில் கிடைத்த பணத்தில் வெர்ஜின் தீவுஎன்றொரு தீவை விலைக்கு வாங்கி அங்கே ரூ.300 கோடியை டெபாசிட் செய்துள்ளதாகவும், அத்தீவை அரசுக்கு சொந்தமாக்க வேண்டும் என்றும் த.மா.கா தலைவர் பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
ஊழல்கள் மோசடிகள் முறைகேடுகள்
 • பத்து கோடி ரூபாய் லஞ்சம் பெற்று, 176 புதிய ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் தொடங்க அனுமதி அளிக்கப்பட்டது. இந்த அனுமதியை உயர்நீதி மன்றம் முறைகேடானது எனக் கூறி ரத்து செய்தது. இந்நிறுவனங்களில் பயிற்சி முடித்த 50,000 மாணவர்கள் தெருவில் நிற்கின்றனர்.
 • தரமற்ற நிலக்கரியை இந்தோனேஷியாவில் இருந்து இறக்குமதி செய்ய அனுமதி வழங்கியதில் 31 கோடி ரூபாய் ஊழல்.
 • தென் இந்திய கப்பல் போக்குவரத்தில் தமிழக அரசுக்கு சொந்தமான 100 கோடி ரூபாய் விற்பனை மதிப்பு கொண்ட பங்குகளை 47 கோடி ரூபாய்க்கு ’’எஸ்ஸார் ஷிப்பிங் கார்ப்பரேஷனுக்கு’’ விற்றதில் 50 கோடி ரூபாய் முறைகேடுகள்
 • தூத்துக்குடியில் இயங்கும் ஸ்பிக் உர நிறுவனத்தில் தமிழக அரசுக்கு சொந்தமான 50 லட்சம் பங்குகளை தரகு முதலாளி ஏ.சி. முத்தையாவுக்கு அடிமாட்டு விலைக்கு விற்றதில், கிட்டத்தட்ட 49 கோடி ரூபாய் முதல் 77 கோடி ரூபாய் வரை கமிஷன். இதில் கையெழுத்திட மறுத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி சந்திரலேகாவின் முகத்தில் திராவகம் வீசப்பட்டது. மதுசூதனன், சாராய உடையார், எம்.ஏ. சிதம்பரம், ஜெயா சசிகலா ஆகியோர்தான் இதற்கு சூத்திரதாரிகள் என்று திராவகம் வீசிய சுர்லா நீதிமன்றத்திலேயே கூச்சலிட்டான். அவனுக்கு பைத்தியம் என்று முத்திரை குத்தி தீர்த்துக்கட்ட சதித்திட்டம் தீட்டப்பட்டது.
 • ஜவஹர் வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் மதுரை மாவட்டத்தில் தாழ்த்தப்பட்டோருக்கான மயானங்களில் மேற்கூரைகள் அமைப்பதில் 10.5 லட்ச ரூபாய் கையாடல். இப்படி எல்லா மாவட்டங்களிலும் நடந்தது.
 • இலவச வேட்டி சேலை மற்றும் சீருடை வழங்குவதில் பலவித மோசடிகள் செய்தும், வேட்டி சேலைகளைப் பதுக்கி வைத்தும் 34 கோடி ரூபாய் ஊழல்
 • கர்ப்பிணிப் பெண்களுக்கான சொட்டு மருந்துகள் வாங்கியதில் ஐந்து கோடி ரூபாய் ஊழல்
 • தமிழ்நாடு மின்சார வாரியத்தில் மின் உபகரணங்கள் வாங்க ஏலம் விட்டதில் 400 கோடி ரூபாய்க்கு முறைகேடுகள்
 • தனியார் (ஆம்னி) பேருந்துகளுக்கு வரி குறைத்ததில் 6 கோடி ஊழல்.
 • கிராமங்களுக்கு சென்று கொண்டிருந்த தனியார் பேருந்துகளுக்கு, நகரங்களுக்கு திருப்பி விட்டு, உரிமங்களை மாற்றி உத்திரவிட்டதில் 50 கோடி ரூபாய் தனியார் பஸ் முதலாளிகளிடமிருந்து லஞ்சம். இதனால் தமிழக அரசுக்கு ஏற்பட்ட நட்டம் 170 கோடி ரூபாய்.
 • கிராமப்புறங்களுக்கு வண்ணத் தொலைக்காட்சி பெட்டிகள் வழங்கியதில், ஒரு பெட்டிக்கு 4300 ரூபாய் வீதம் கமிஷன் அடித்ததில் 19.48 கோடி ரூபாய் ஊழல்
 • அரசு போக்குவரத்து கழகங்களில் ஓட்டுநர் / நடத்துனர் நியமனத்தில் ஊழல். 10 ஆண்டுகளுக்கும் மேலாக தினக்கூலிகளாக வேலை செய்யும் நடத்துனர்கள், ஓட்டுநர்களுக்குக் கூட வேலை தராமல், பதவி ஒன்றுக்கு ரூ.30,000 முதல் ரூ.40,000 வரை கொடுத்தவர்களுக்கு மட்டுமே வேலை தரப்பட்டுள்ளது. 5 ஆண்டுகளில் இவ்வாறு வேலை வாங்கியவர்கள்பல ஆயிரம் பேர்.
 • தமிழ்நாடு மின்சார வாரியத்தில் உதவிப் பொறியாளர்கள் பணி நியமனம், 2000 தட்டச்சர்கள், இளநிலை உதவியாளர்கள் நியமனம், 500 விளையாட்டு வீரர்களுக்கான இட ஒதுக்கீட்டிலும் பேரங்கள் முறைகேடுகள்
 • 8000 தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் நியமனம் செய்வதற்காக பதவி ஒன்றுக்கு 50,000 ரூபாய் விலை
 • சென்னை புழலேரியில் போதுமான அளவு நீர் இருந்தும், அந்நீரைப் பொதுமக்களுக்கு வழங்காது ஏரியில் தண்ணீர் சப்ளை வால்வுகளை அடைத்து விட்டு, லாரிகளின் மூலம் தண்ணீர் வழங்கியதில் நாளொன்றுக்கு 8 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் சூறையாடல்
 • டான்சிக்கு சொந்தமான 3 ஏக்கர் நிலத்தையும், கட்டிடத்தையும் ஏலம் விடாது ’’ஜெயா பப்ளிகேஷன்ஸ்’’ நிறுவனத்திற்காக சுருட்டியதில் 3 கோடி ரூபாய் ஊழல் மற்றும் முறைகேடுகள். இதுவன்றி தமிழ்நாடு பாடநூல் நிறுவனத்தின் நூல்களை இங்கு அச்சிட்ட அதிகார முறைகேடு
 • சென்னையில் அண்ணா பல்கலைக் கழகத்திற்கு சொந்தமான 47.36 ஏக்கர் காலி மனையை ஜெ.ஜெ. டி.வி.-க்கு வளைத்துப் போடுவதற்கு வசதியாக, தரமணி திரைப்பட நகருக்கு மாற்றி அரசு ஆணை வெளியிட்டதில் அதிகார முறைகேடுகள்.
 • கோவில் கொள்ளைகள்
  • மன்னார்குடி இராஜகோபால சுவாமி திருக்கோவில் நகைகள் கொள்ளை போனது.
  • திருக்காரவாசல் தியாகராசர் சுவாமி கோவிலில் மரகத லிங்கம் திருட்டு
  • நாகப்பட்டினம் நீலயதாட்சி அம்மன் கோவிலில் கோமேதக லிங்கம் திருட்டு
  • மதுராந்தகம் ஏரி காத்த ராமர் கோவிலில் பல லட்ச ரூபாய் மதிப்புள்ள நகைகள் கொள்ளை
  • கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் கோவிலில் 1 கோடி ரூபாய் பெறுமான நகைகள் கொள்ளை
  • சிதம்பரம் கோவில் நடராசர் காலில் இருந்த வைரக் கொலுசும், 2.25 கிலோ வெள்ளிக் கிரீடமும் களவு போனது.
  • கும்பகோணம் சாரங்கபாணி கோவிலில் ரூபாய் 5 கோடி பெறுமான நகைகள் திருட்டு. மன்னார்குடி குடும்பத்திற்கு நெருக்கமான மதுசூதனன் என்பவனுக்கு இக்கொள்ளையில் தொடர்பிருப்பதாக விசாரணையில் தெரிய வந்தது.
  • தென் மாவட்டங்களில் மட்டும் சிறிதும், பெரிதுமான 400 கோவில்களில் திருட்டு நடந்திருப்பதாக செய்திகள் வெளிவந்தன.
  • எந்தவொரு கோவில் கொள்ளையிலும், திருட்டுப்போன தங்க, வைர நகைகள் முழுமையாக மீட்கப்படவில்லை. குற்றவாளிகளும் தண்டிக்கப்படவில்லை. கோவில் கொள்ளையர்களுக்கும், கோட்டைக் கொள்ளையர்களுக்கும் இருந்த தொடர்புக்கு இன்னும் என்ன ஆதாரம் வேண்டும்?
   

ஜெ “வாங்கிய“ தீர்ப்பு.
ஜெயலலிதா மீதான வழக்குகளில் வித்தியாசமான தீர்ப்பு தருவது உயர்நீதிமன்றம் முதல் உச்சநீதிமன்றம் வரை வழக்கமாகிவிட்டது.

அந்த வரிசையில் சொத்து குவிப்பு வழக்கில் கர்நாடகா உயர்நீதிமன்றம் குழப்பமான தீர்ப்பை தந்துள்ளது. 

முதல்வராக இருந்த காலத்தில் ஜெயலலிதா வருமானத்துக்கு அதிகமாக 66 கோடி ரூபாய் ஊழல் செய்து சொத்து குவித்த வழக்கு 18 ஆண்டாக நடந்துவந்தது. 2014ல் ஆவணங்கள் அடிப்படையில் கர்நாடகா கீழ்நீதிமன்றத்தில் நீதிபதி மைக்கல் டி குன்ஹாவால் ஆவணங்கள் அடிப்படையில் மிக தெளிவாக, விவரமாக தீர்ப்பு வழங்கப்பட்டது. ஜெ, சசிகலா, இளவரசி, சுதகாரன் நால்வரும் குற்றவாளிகள் என தீர்மானிக்கப்பட்டு 4 ஆண்டு சிறை தண்டனை, 100 கோடி அபராதம் என தீர்ப்பளித்து சிறையில் அடைக்கப்பட்டார்கள். ஜாமீன் பெற கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் குற்றவாளிகள் முறையிட்டபோது, அரசு தரப்பிடம் கருத்து கேட்டபின் ஜாமீன் தர முடியாது என நிரகாரித்தது உயர்நீதிமன்றம். அங்கிருந்து உச்சநீதிமன்றம் சென்றார்கள். இங்கிருந்து தான் ஆரம்பமானது குற்றவாளிகளை காப்பாற்றும் முயற்சிகள். 

முதல்வர் பதவியை பறிக்கொடுத்துவிட்டு சிறைக்கு சென்ற குற்றவாளிகள் ஜாமீன் கேட்கிறார்கள். இந்த வழக்கில் கொஞ்சம் கூட அடிப்படையை கடைப்பிடிக்கவில்லை. குற்றவாளிகள் தரப்பின் மனுவை ஏற்றுக்கொண்டு ஜாமீன் வழங்குகிறது நாட்டின் தலையாய நீதிமன்றம். இதை ஊடகங்கள், அரசியல் தலைவர்கள், வழக்கறிஞர் அமைப்புகள் எதிர்ப்பு காட்டினர். எந்த அதிகார அமைப்பும் இதை கண்டுக்கொள்ளவில்லை.
ஜாமீன் தந்ததோடு நிறுத்தாமல் 3 மாதத்தில் மேல்முறையீட்டு மனுவை விசாரித்து தீர்ப்பளிக்க வேண்டும்மென கெடு விதிக்கிறார்கள். அதன்படி கர்நாடகா நீதிமன்றத்தில் நீதிபதி குமாரசாமி தலைமையில் விசாரணை ஆரம்பமாகிறது. 

அந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் பவானிசிங் ஆஜராகிறார். இவருக்கு மேல்முறையீட்டில் ஆஜராக அதிகாரம்மில்லை என்கிறது சட்டம். இதை கர்நாடகா அரசு, திமுக பொது செயலாளர் அன்பழகன் மனுக்கள் தெரிவிக்கின்றன. சட்டம் அறிந்த நீதிபதி, எனக்கு 3 மாசம் தான் டைம் அதுக்குள்ள இதை விசாரிச்சி முடிச்சி தீர்ப்பு தரனும் என தெரிந்தே தவறு செய்கிறார். தவறை மறைக்க எனக்கு 3 மாசம் தான் டைம்மிருக்கு என கிளிப்பிள்ளை போல் இதை சொல்லிக்கொண்டே பவானிசிங்கின் “வாதங்களை“ பெற்றுக்கொள்கிறார்.

பவானிசிங் நியமன விவகாரம் உச்சநீதிமன்றம் செல்கிறது, இரண்டு நீதிபதிகள் விசாரிக்கிறார்கள் பவானிசிங் நியமனம் செல்லாது என்கிறார் ஒரு நீதிபதி, மற்றொரு நீதிபதி பவனிசிங்கை ஏற்கிறார். முரண்பட்ட தீர்ப்பால் விவகாரம் 3 பேர் கொண்ட பெஞ்ச்க்கு மாற்றப்படுகிறது. 

உச்சநீதிமன்ற தலைமைநீதிபதி தத்து, அவசரம் அவசரமாக தத்து 3 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் அமைக்கிறார். இரண்டு சிட்டிங்கில் அந்த பெஞ்ச் விசாரித்து முடித்து பவானிசிங் நியமனம் செல்லாது, அவரது வாதத்தை ஏற்ககூடாது, தீர்ப்பில் கவனமாக இருக்க வேண்டும் என தீர்ப்பளிக்கிறது. மே 11ந்தேதி மேல்முறையீட்டு மனுவின் மீது கர்நாடகா உயர்நீதிமன்ற நீதிபதி குமாரசாமி தீர்ப்பு வழங்கிவிட்டார். 

தீர்ப்பில் எத்தனை எத்தனை குளறுபடிகள் என்பதை பலரும் வெளிச்சம்போட்டு காட்டிவிட்டார்கள். ( தீர்ப்பில் கூறப்பட்டுள்ள சில பல கருத்துக்களை படிக்கும்போது அவர் எப்போது அதிமுக உறுப்பினர் ஆனார் என கேட்க தோன்றும் ) பாமரன் வரை இது வாங்கப்பட்ட தீர்ப்பு என வெளிப்படையாக பேசும் அளவுக்கு நீதித்துறையை கொண்டு வந்து நிறுத்திவிட்டார்கள் நீதி வழங்குபவர்கள்.

இந்த வழக்கில் ஜாமீன் வழங்கிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தத்து மீது ஊழல் புரிந்ததுக்கான ஆவணங்கள் கிடைத்துள்ளன. அதனை விசாரணை செய்ய வேண்டும் என்கிறார் முன்னால் உச்சநீதிமன்ற நீதிபதி கட்ஜீ. நீதிபதி குமாரசாமி, தப்பு தப்பாக தீர்ப்பு எழுதியவர் மீதும் வீடு ஒதுக்கீட்டில் குற்றச்சாட்டு உள்ளன என்கின்றனர். அரசு வழக்கறிஞர் என மோசடி செய்து உயர்நீதிமன்றத்தில் வாதாடிய வழக்கறிஞர் பவானிசிங் எப்படிப்பட்டவர் என்பதை அவர் வாதாடிய காலங்களில் மக்கள் தெரிந்துக்கொண்டார்கள். இந்த நீதியை வாங்க பிரதமர் மோடி அரசு உதவி உள்ளது என்பதை இலைமறை காயாக அந்த கட்சியினரின் பேட்டிகளே சொல்லாமல் சொல்கிறது. 

இப்போது நீங்களே முடிவு செய்துக்கொள்ளுங்கள் தீர்ப்பு வழங்கப்பட்டதா........ வாங்கப்பட்டதா என்று.............

நண்பர் ஒருவர் அடிக்கடி சொல்வார் நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும் நான் நன்றாக இருக்கிறேனா பார் என்பார். அதையேத்தான் இன்று அதிகாரத்தில் இருப்பவர்கள் பார்க்கிறார்கள் என்பதை மக்கள் உணர்ந்துக்கொண்டால் சரி.