ஸ்பெக்ட்ராமில் கூட்டு விளையாட்டு. திமுகவின் எதிர்காலம் ( http://anbanavargal.blogspot.com/2010/12/blog-post_20.html) என்ற தலைப்பில் கடந்த டிசம்பர் 20ந்தேதி எழுதிய பதிவை மீண்டும் வாசித்துப்பாருங்கள் அன்று நான் சொன்னது இன்று அப்படியே நடந்து வருகிறது.
திமுகவை அழிக்க காங்கிரஸ் செய்யும் சதியே ஸ்பெக்ட்ராம் விவகாரம் என்று தொிவித்திருந்தேன். அது படிப்படியாக வெளிப்படையாக நடை முறைக்கு வந்துக்கொண்டிருக்கிறது. சமீபமாக பத்திாிக்கைகளில் நம் எழுதியதை ஒட்டி கட்டுரை எழுதி வருகிறார்கள்.
காங்கிரஸ் ஏன் திமுகவை அழிக்க துடிக்க வேண்டும்?
தமிழகத்தில் காங்கிரஸ்சின் ஆட்சி கனவை முற்றிலும் கலைத்தது திமுக. தமிழகம் மட்டுமல்ல வேறு பல மாநிலங்களுக்கு திமுக ஆட்சி பிடித்தது தான் முன்னோடி. திமுகவை பார்த்து கட்சி தொடங்கிய பல பிற மாநிலத்தில் காங்கிரஸ்க்கு தண்ணீ காட்டி முடக்கினார்கள். காலப்போக்கில் காங்கிரஸ் அதை முறியடித்து கொஞ்சம் கொஞ்சம் மேலே வந்தது. இருந்தும் கட்டெறும்பு கதை தான் அதன் நிலை.
மற்ற மாநிலங்களில் இழந்த ஆட்சியை பிடிக்க முடிந்த காங்கிரஸ்சால் தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்க முடியவில்லை. அதற்க்கு காரணம் பொியார், அண்ணா ஊட்டிய வெறி, துரோக காங்கிரஸ்சை கருவறுக்க வேண்டும் என்ற கொள்கையை நாம் தொடர்ந்து மனதில் இருப்பதால் தான். அதை திமுகவில் இருந்து கட்சி ஆரம்பித்த எம்.ஜீ.ஆரும் சாியாக புாிந்துக்கொண்டு காங்கிரஸ்சை டம்மியாக்கும் பணியில் ஈடுபட்டு ஒரளவு சாதித்தார்.
காலப்போக்கில் காங்கிரஸ் தமிழகத்தில் ஆட்சிபொறுப்புக்கு வர முடியாது என உணர்ந்து காங்கிரஸார் திராவிட கட்சிகளின் முதுகில் சவாாி செய்தனர். இந்தியாவில் அரை காலி டாப்பாகி போன காங்கிரஸ்சை 200ல் மத்தியில் காங்கிரஸ் கட்சி திமுகவின் ஆதரவுடன் ஆட்சி பொறுப்புக்கு வந்தது. காங்கிரஸ் தலைவரான சோனியாகாந்தி திமுக தலைவர்களை விழுந்து விழுந்து கவனித்தார். கூழை கும்பிடு போட்டார். நம்மவுர் அதிமுக பிரமுகர்களை விட அதிகமாக குழைந்தார்.
வெளிநாட்டில் படித்துக்கொண்டிருந்த சீமான் வீட்டு சிட்டெறும்பு வாழையாடி வாழை வாாிசு பதவியை பெற இந்தியாவுக்கு வந்து காங்கிரஸ் எம்.பியானார். கட்சியின் பொது செயலாளர் ஆனார். ( அம்மா தலைவர், பையன் பொதுசெயலாளர். ). கட்சியை மாற்றி அமைக்க போகிறேன். இளைஞர்களுக்கு முக்கியத்துவம் தர போகிறேன் என மாநிலம் தோறும் இளைஞர் காங்கிரஸ்க்கு நிர்வாகிகளை நியமித்தார்.
புது செருப்பு கடிக்கும் என கிராமங்களில் ஒரு பழமொழியுண்டு. அதற்க்கேற்ப பொறுப்புக்கு வந்தவர்கள் அடுத்து நாங்கள் தான் ஆட்சியமைக்க போகிறோம் என கனவு கண்டார்கள் ராகுல் கால் வைத்த இடம்மெல்லாம் மண்ணை கவ்வினார்கள் காங்கிரஸார். கீழ விழுந்தாலும் மீசையில மண் ஒட்டலயே என தோல்வியை முடி மறைத்த ராசா வீட்டு கன்னுக்குட்டியின் பார்வை தமிழக தேர்தல் களத்தின் மீது திரும்பியது.
அதற்க்கு முன்பே ராகுல் காங்கிரஸ் தமிழகத்தில் திமுகவை ஒழிக்கும் அசைண்மென்ட்டை தொடங்கியிருந்தது. இந்த டீமின் தலைவர் காங்கிரஸ் கட்சியின் ராகுல், உறுப்பினர்களாக அம்பானி சகோதரர்கள், மாறன் சகோதரர்கள் நியமிக்கப்பட்டார்கள்.
ஸ்பெக்ட்ராம் விவகாரம் ஊதப்பட்டு, கிளறப்பட்டது, ஸ்பெக்ட்ராம் விவகாரம் திமுகவை நோக்கியே தள்ளப்பட்டது. அதற்க்கு வட இந்திய, பர்ப்பன மீடியாக்கள் நிரம்ப உதவின, உதவி வருகின்ற. டாக்மெண்ட்ஸ், ஆடியோ போன்றவை காங்கிரஸ் அரசின் உயர்மட்ட ஆதரவுடன் படிப்படியாக லீக் செய்யப்பட்டன. ஸ்பெக்ட்ராம் விவகாரத்தில் காங்கிரஸ்சின் 60 சதவித பங்குகள் முழுமையாக மூடி மறைக்கப்பட்டன.
திமுக அமைச்சர், கனிமொழி எம்.பி போன்றவர்கள் அடைந்த லாபம் மட்டும் காட்டப்பட்டன. ஒட்டு மொத்த ஊழல்க்கும் ராசா மட்டுமே காரணம் என ஜோடிக்கப்பட்டது. அதற்க்கு மத்தியரசின் கையில் உள்ள புலனாய்வு துறைகள், மத்தியரசின் அரசு துறைகள் நிரம்ப பணி செய்தன. திமுக அமைச்சர் மற்றும் காங்கிரஸ்க்கு எதிர்ப்பாகயிருந்த சில தொழிலதிபர்கள் கைது செய்ய வைத்தனர்.
சி.பி.ஐயை குற்றப்பத்திாிக்கை தாக்கல் செய்ய கால தாமதம் செய்ய வைத்து குழந்தையை புச்சாண்டியை காட்டி மிரட்டுவதை போல திமுகவை சி.பி.ஐ என்ற புதத்தை காட்டி மிரட்டி தமிழக தேர்தல் களத்தில் வாக்கு வங்கியே இல்லாத காங்கிரஸ் கட்சி 63 சீட்களை பெற்றது. அடுத்து தாயாளுஅம்மாளை கைது செய்வோம் எனச்சொல்லி ஆட்சியில் பங்கு என்ற அஸ்திரத்தை ஏவுகிறது.
காங்கிரஸ் நம்பிக்கை துரோக கட்சி. தான் வாழ யாரையும் அழிக்கும் குரோதமனம் கொண்டவர்கள் காங்கிரஸ்காரர்கள் என திமுக தலைவருக்கு பலர் பல வழியில் எடுத்து சொன்னார்கள் அதிகார, பண போதை திமுகவின் மேல் மட்டத்தை யோசிக்கவிடாமல் செய்துவிட்டது. சொக்க தங்கத்தை நம்பி ஏமாந்து போனார்கள். இன்று எங்கள் முன்னோர்க்கு நான் சளைத்தவளில்லை என்பதை சோனியா காட்டி விட்டார்.
ஸ்பெக்ட்ராம்மை கிளறி கிளறி தமிழகத்தில் ஆட்சி கனவில் உள்ளது ராகுல் காங்கிரஸ். அதுவும் ஆட்சி பொறுப்பை விட்டு அகற்றிய திமுக மூலமே ஆட்சியில் அமர காய் நகர்த்துக்கிறது. வரும் காலங்களில் திமுகவை ஒழித்து விட்டால் அதிமுகவை ஒழிப்பது சுலபம். அதன் பின் தனிக்காட்டு ராஜா நாம் தான் என ராகுல் நினைக்கிறார்.
அது எங்கு வேண்டுமானாலும் எடுபடலாம் தமிழகத்தில் ராகுல் மண்ணுக்குள் போனாலும் தமிழகத்தில் ஆட்சிக்கு வர முடியாது. திமுகவை மிரட்டி வேண்டுமானால் பின் கதவு வழியாக ஆட்சிக்கு வரலாம். ( நான் ராகுல் வாழ்க்கையை பத்தி இங்க சொல்லலைங்கோ.......) தனித்து நின்றோ, காங்கிரஸ் தலைமையில் மாபெரும் கூட்டணி அமைத்தேயொல்லாம் ஆட்சிக்கு வர முடியாது. திமுக, அதிமுக என்ற கட்சிகள் தமிழகத்தில் இருக்கும் வரை அந்த கட்சியை சார்ந்தவர்கள் மட்டுமே முதல்வர்களாக அமர முடியும்.