புதன், ஏப்ரல் 06, 2011

தமிழர்கள் மீது பாசமும், பிணைப்பும் எங்கள் குடும்பத்திற்க்கு உள்ளது. - ராகுல்


தமிழகத்துடனும், தமிழர்களுடனும் என் குடும்பத்திற்க்கு நெருங்கிய தொடர்பு உள்ளது. பிண்ணி பினைந்த பாசமும், நேசமும் உள்ளது என பிரச்சாரத்திற்க்கு வந்தயிடத்தில் உளறியிருக்கிறார் காங்கிரஸ்சின் வருங்கால நட்சத்திரம் என அழைக்கப்படும் நிழல் பிரதமர் ராகுல்காந்தி. 

இதையெல்லாம் கேட்க வேண்டிய தலையெழுத்து தமிழனுக்கு விதிக்கப்பட்டிருக்கிறது. இவர்க்கும், இவரது குடும்பத்திற்க்கும் தமிழர்கள் மீதும், தமிழகத்தின் மீது பாசமும், பிணைப்பும் உள்ளதாம். 

ஏன்ப்பா ராகுல் சில சந்தேகம் ...........

உங்களது இந்த பாசம் தான் ஈழத்தமிழர்கள் 1 லட்சத்திற்க்கும் அதிகமானோரை கொல்ல வைத்தது. 

இந்த பாசம் தான் உலக நாடுகளில் வாழும் தமிழர்களை தேடி தேடி கொல்கிறது.

இந்த பிணைப்பு தான் பதவியை தேடி கூட்டணி கட்சியை அழிக்கிறது. 

இந்த பிணைப்பு தான் 2ஜி ஊழலில் தமிழன் ஒருவரை மாட்ட வைத்துவிட்டு அதிகமாக கொள்ளையடித்த உங்கள் கட்சியும், உங்கள் குடும்பமும் தப்பித்துக்கொண்டது.

இப்படி தமிழர்கள் மீது உங்களுக்கும், உங்கள் குடும்பத்திற்க்கும் உள்ள பாசம், பிணைப்பு பற்றி எங்களுக்கு தொியும். அதனால் வரும் தேர்தலில் காங்கிரஸ்க்கு தக்க பாடம் கற்று தர தயாராகவே உளளார்கள் கவலைப்பாடாதீர்கள் ராகுல்.

1 கருத்து:

  1. //தமிழர்கள் மீது பாசமும், பிணைப்பும் எங்கள் குடும்பத்திற்க்கு உள்ளது. - ராகுல் //

    தமிழர்கள் மீது (கொலைப்) பாசமும், ( துரோகப்) பிணைப்பும் எங்கள் குடும்பத்திற்க்கு உள்ளது - என்றல்லவா வந்திருக்க வேண்டும்.

    //இந்த பிணைப்பு தான் 2ஜி ஊழலில் தமிழன் ஒருவரை மாட்ட வைத்துவிட்டு அதிகமாக கொள்ளையடித்த உங்கள் கட்சியும், உங்கள் குடும்பமும் தப்பித்துக்கொண்டது.//

    2ஜியில் கொள்ளையடித்த 70 சதவீத கமிசன் ராகுல், சோனியா பெயர்களில் இத்தாலி மற்றும் சுவிஸ் வங்கிகளில் இடபட்டு இருப்பதாக ஒரு தகவல்........... எல்லாரும் களவாணிப் பயலுகள்

    பதிலளிநீக்கு