சில ஆண்டுகளுக்கு முன் வடிவேல் நடித்த இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி படத்திற்க்கு பின் திரையரங்கில் போய் படம் பார்ப்பது அரவே இல்லாமல் போனது. ஆனால் சமீபத்தில் குள்ளநாி கூட்டம் படம் பார்க்கும் ஆவல் ஏற்பட்டு அப்படத்தை காண நேர்ந்தது.
என்ன திடீர் ஞானோதயம் என்கிறிர்களா? டிவியில் ஒளிப்பரப்பான பாடல்கள் கேட்டபோது சிறப்பாக இருந்தது ஒரு காரணம் என்றால் நாயகி ரம்யாநம்பீசன் மற்றொரு காரணம். உள்ளத்தை கொள்ளை கொள்ளும் அழகியாய் ஜொலித்ததால் படம் பார்க்க வேண்டிய ஆவல் என நினைக்கிறேன்.
ரம்யா நம்பீசனை ரசிக்க போனயிடத்தில் வயிறு குலுங்க, கண்ணீல் நிர் வரும் அளவுக்கு காமெடியில் கலக்கியிருந்தார்கள் படத்தில். லாஜிக் இல்லாமல் பார்த்தால் சிறப்பாக இருந்தது படம். சிலயிடங்களில் நடிப்பு என்பது அப்பட்டமாக தொிந்தது.
அதிலும் அந்த நண்பர்களின் செல்போன் பேச்சு, காதலர்களின் செல்போன் பேச்சு, மாமியார்-மருமகளின் போன் பேச்சு ரகளை பெரும் ரகளை.
குடும்ப படமா எல்லோரும் பார்க்கற மாதிாி எடுத்துயிருக்காங்க. ஆனா என்னை போன்ற பசங்க காதலியோட உட்கார்ந்து பார்த்தா நல்லா தான் இருக்கும். பாருங்க ரசிங்க..........
நானும் படம் பார்த்துட்டு வந்ததுலயிருந்து என் மொபைல் நம்பர்க்கு அந்த மாதிாி யாராவது போன் பண்ணுவாங்களான்னு அடிக்கடி எடுத்துயெடுத்து பாக்கறன் யாரையும் பண்ண மாட்டேன்கிறாங்க. இதுக்கு யாராவது ஐடியா தாங்கப்பா ..............
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக