சனி, ஜனவரி 26, 2013

இஸ்லாமியர்களை குற்றவாளியாக்கும் இஸ்லாமிய இயக்கங்கள்.விஸ்வரூபம் படத்துக்கு எதிர்ப்பாக நின்றதன் மூலம் ஒரு மாபெரும் வரலாற்று தவறை செய்துவிட்டார்கள் சில இஸ்லாமிய இயக்கத்தினர். பமலின் விஸ்வரூபம் படத்தின் கரு ஆப்கானிஸ்தான் - அமெரிக்கா இடையிலான மோதல் பற்றியது. அதாவது ஏகாத்தியபத்தியத்துக்கும் - தீவிரவாதத்துக்கும் நடக்கும் மோதலை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட படம். ஆனால் இஸ்லாமிய இயக்கங்கள் இஸ்லாமியர்களை தீவிரவாதியாக சித்தரித்து கமல் படம் எடுத்துள்ளார் என எதிர்ப்பு குரல் கொடுத்தனர். பெரும் செலவில் எடுக்கப்பட்ட இப்படத்தை வியாபாரம் செய்ய வேண்டும் என்பதற்காக எதிர்ப்பு தெரிவித்த இஸ்லாமிய இயக்கங்களை சேர்ந்த முக்கிய பிரமுகர்களை அழைத்து படத்தை திரையிட்டு காட்டினார்.

கதைக்கரு மட்டுமல்ல படமும் இந்தியாவில் எடுத்ததல்ல. அமெரிக்கா, ஆப்கானிஸ்தான், ஏதோ கொஞ்சம் இந்தியாவில் எடுத்துள்ளதாக படத்தை பார்த்தவர்கள் தெரிவிக்கின்றனர். இது ஏற்கனவே படம் பார்த்தவர்களுக்கும் தெரிந்திருக்கும். அப்படியிருந்தும் விஸ்வரூபத்துக்கு எதிராக களம்மிறங்கினர். தமிழக உள்துறை செயலாளரிடம் படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என புகார் மனு தந்தனர். அரசாங்கமும் 15 நாட்கள் தடை விதித்துள்ளது. வரும் பாராளமன்ற தேர்தலை மனதில் கொண்டு முதல்வராக சிறுபான்மை இனத்தவர்களின் வாக்கை ஒட்டுமொத்தமாக பெற ஜெ இப்படி செய்துயிருப்பதாக சிலர் கூறி வருகின்றனர்.


ஆனால் இந்த தடை என்னை வேறு மாதிரியாக யோசிக்க வைக்கிறது. ஜெ தீவிரமான இந்துத்துவாவாதி. குஜராத்தில் இஸ்லாமியர்களின் ரத்தத்தை குடித்த அம்மாநில முதல்வர் நரேந்திரமோடியின் நண்பர். அவரை பிரதமராக்க துடிக்கும் நபர்களில் இவரும் ஒருவர். அப்படிப்பட்டவர் இஸ்லாமிய அமைப்பினர் தடை கேட்டு மனு தந்ததும் தடை விதித்துள்ளார்.

இந்தப்படத்தை வெளியிட்டால் சட்டம் ஒழுங்கு சீர் கெடும் என தடைக்கான காரணத்தை கூறியுள்ளது தமிழகரசு. இதன் உள்ளர்த்தம் படத்தை வெளியிட்டால் முஸ்லிம்கள் தாக்குவார்கள் இதனால் மாநிலத்தில் மக்களின் அமைதி கெடும் என்பதே. ஆக இந்த சொற்றொடர் மூலம் முஸ்லிம்கள் பயங்கரவாதிகள் என்பதை மறைமுகமாக மக்கள் மனதில் அதிமுக அரசு விதைத்துள்ளது. அது வெற்றியும் பெற்றுவிட்டது.

தற்போது கமல் ரசிகர்கள் இஸ்லாமியர்கள் மீது வருத்தத்தில் உள்ளார்கள். அவர்கள் மட்டுமல்ல சாதாரண பொது ஜனமும், படம்மே வெளியில வரல அதுக்குள்ள என்னப்பத்தி தான் சொல்றான்னு எதுக்குய்யா இவனுங்க தடுக்கனும்?, மைனாரிட்டின்னு சொல்லிக்கிட்டு இப்படி பண்ணா என்ன நியாயம் என பேச தொடங்கிவிட்டார்கள். இதனால் பிற சமூக மக்களிடம் இவனுங்களை ஒடுக்கனும்ப்பா என்ற கோபம் எழுகிறது. இந்த கோபம் எதிர்ப்பு காட்டிய சில இஸ்லாமிய இயக்கங்களை நோக்கிய கோபம்மல்ல. ஓட்டு மொத்த இஸ்லாமிய மக்களை நோக்கிய கோபம்.


இந்த கோபத்தை இந்துத்துவா வாதிகளும் பயன்படுத்திக்கொள்ள முயல்கின்றனர். இஸ்லாமியனை ஒடுக்க வேண்டும் எனச்சொல்வது இதனால். தீவிரவாதம் பற்றி படம் எடுத்தால் இவர்களுக்கு என்ன யார் குண்டு வைக்கிறார்களோ அவர்களைப்பற்றி தானே படத்தில் காட்டப்படுகிறது அதில் என்ன தப்பு?, குண்டு வைக்கிறவன பத்தி சினிமா எடுக்றத தடுக்கிறான்னா முஸ்லிம்ங்க தீவிரவாதிகளை ஆதரிக்கிறான்னு தானே அர்த்தம்? அப்ப இவனுங்களும் தீவிரவாதிங்க தானே என்ற  நச்சு கருத்துக்களை இஸ்லாமியர் அல்லாத மக்களிடம் விதைக்க தொடங்கியுள்ளார்கள். இது எவ்வளவு ஆபத்தானது.

இஸ்லாமிய இயக்கங்கள் அடுத்தடுத்து இப்படியே செயல்படும் போது பிரச்சனை மக்களின் கோபம் இன்னும் தீவிரமாகும். இதனால் இஸ்லாமியர்களை ஒரு விதமான வெறுப்பு பார்வையுடன் பார்க்க தொடங்குவார்கள், அவர்களை விட்டு விலக தொடங்கிவிடுவார்கள். காவி பயங்கரவாதிகளால் நெய் ஊற்றி வளர்க்கப்படும் எதிர்ப்புகள் மக்கள் மனதில் தேங்கிவிட்டால் நாளை ஒருநாள் காவி பயங்கரவாதிகள்  இஸ்லாமியர்களுக்கு எதிராக கிளம்பும் போது மற்ற சமூக மக்களின் பாதுகாப்பும், கருத்தாளர்களின் ஆதரவும் கிடைக்காமல் போய்விடும்.


இதனால் எதிர்ப்பு கோஷம் போடும் இயக்கங்கள் பாதிக்கப்பட போவதில்லை. பிற மத மக்களோடு நெருக்கமாக துவேஷம் இல்லாமல் வாழும் கோடிக்கணக்கான இஸ்லாமியர்கள் தான் பாதிக்கப்படபோகிறார்கள்.

இன்று நீங்கள் நடந்துக்கொள்ளும் முறை தான் நாளை இஸ்லாமிய சமூகத்துக்கான ஆதரவும் - எதிர்ப்பும் என்பதை புரிந்துக்கொள்ளுங்கள் தோழர்களே. இல்லையேல் மாபெரும் இழப்பு நிச்சயம் இஸ்லாமிய சமூகத்துக்கும் மக்களுக்கும் தான்.

48 கருத்துகள்:

 1. //இன்று நீங்கள் நடந்துக்கொள்ளும் முறை தான் நாளை இஸ்லாமிய சமூகத்துக்கான ஆதரவும் - எதிர்ப்பும் என்பதை புரிந்துக்கொள்ளுங்கள் தோழர்களே. இல்லையேல் மாபெரும் இழப்பு நிச்சயம் இஸ்லாமிய சமூகத்துக்கும் மக்களுக்கும் தான்.//
  மனிதகுலத்திற்கே இழப்புதான்

  பதிலளிநீக்கு
 2. பெயரில்லாசனி, ஜனவரி 26, 2013

  இதை எல்லாம் எடுத்து சொன்னா, நம்மலை திட்டுறானுவுக .. என்னவோ !

  பதிலளிநீக்கு
 3. பெயரில்லாசனி, ஜனவரி 26, 2013

  தற்போது கமல் ரசிகர்கள் இஸ்லாமியர்கள் மீது வருத்தத்தில் உள்ளார்கள். அவர்கள் மட்டுமல்ல சாதாரண பொது ஜனமும், படம்மே வெளியில வரல அதுக்குள்ள என்னப்பத்தி தான் சொல்றான்னு எதுக்குய்யா இவனுங்க தடுக்கனும்?, மைனாரிட்டின்னு சொல்லிக்கிட்டு இப்படி பண்ணா என்ன நியாயம் என பேச தொடங்கிவிட்டார்கள். இதனால் பிற சமூக மக்களிடம் இவனுங்களை ஒடுக்கனும்ப்பா என்ற கோபம் எழுகிறது. இந்த கோபம் எதிர்ப்பு காட்டிய சில இஸ்லாமிய இயக்கங்களை நோக்கிய கோபம்மல்ல. ஓட்டு மொத்த இஸ்லாமிய மக்களை நோக்கிய கோபம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஓ... அப்ப மற்றவங்களுக்கும் வருத்தம் உருவாகுதுங்குறீங்க.

   நீக்கு
 4. //பிற மத மக்களோடு நெருக்கமாக துவேஷம் இல்லாமல் வாழும் கோடிக்கணக்கான இஸ்லாமியர்கள் தான் பாதிக்கப்படபோகிறார்கள். //

  Unmai.

  பதிலளிநீக்கு
 5. Very true.

  biriyani saaptudu thoongaranavullukku enga puriya pogudhu.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பெயரில்லாசனி, ஜனவரி 26, 2013

   தயிர் சாதம் சாப்பிட்டுட்டு முடிச்சவிழ்க்கிறவனை விடவும் நல்லாவே புரியும்.

   நீக்கு
  2. ipa puriytha yaru theeviravathi mathiri pesurenganu

   நீக்கு
  3. அவனை நீ பிரியாணி சாப்பிட்டுத் தூங்குறவன்னு சொன்னா, அவன் உன்னை தயிர் சாதம் துண்ணுட்டு, முடிச்சவிழ்க்குறவங்குறான். இதில என்னையா தீவிரவாதம் இருக்கு? உண்மையைச் சொன்னா எதுக்குய்யா தீவிரவாதிங்குறே?

   நீக்கு
 6. ரொம்ப சரி.யோசியுங்கள் இஸ்லாமிய நண்பர்களே......

  பதிலளிநீக்கு
 7. very..............super /////////.....................kamal ....sir

  பதிலளிநீக்கு
 8. உங்களின் ஆரம்ப வரிகளிலே தவறு உள்ளது சகோதரரே.தன் நாட்டின் விடுதலைகாக போராடுபவர்கள் திவிரவதிகளா?நீங்களும் கமலை போல அமெரிக்க ஏகாதிபத்திய மீடியாக்களின் ஸ்பீக்கர்கள் தான் என்பது தெரிகிறது.நம் நாடு விடுதலை பெற நேத்தாஜி ஆயுதம் எடுத்து போராடினாரே.ஆடு போராட்டமா?திவிரவதமா? நாங்கள் ஒன்றும் படத்தை பார்க்காமல் தடை போடா சொல்லவில்லை.பார்த்துவிட்டு ரோட்டில் இறங்கி அராஜகம் செய்யவில்லை.நியாயமான எங்கள் கருத்தைதான் சொன்னோம்.எங்களை ஒடுக்க வேண்டும் என்ற உங்கள் மன ஆசையை பெருபான்மை நல்ல உள்ளம் கொண்ட இந்துக்கள் மீது திணிக்க முயற்சிக்க வேண்டாம்.உங்களின் அறிவுரை எங்களை மிரடுவது போல் உள்ளது நண்பரே.நாங்கள் மதசார்பற்ற நாட்டில் தான் உள்ளோம்மா?இல்லை பெருபான்மை சமுகத்திற்கு அடங்கி போகும் இரண்டம் தர குடிமக்களாக உள்ளோமா?இதுவரை நமது நாட்டில் நடைப்பெற்ற குண்டு வெடிப்புகளில் பாதிற்க்கு மேற்பட்டவை யார் செய்தார் என்பது தற்போது நாடு அறிந்துள்ளது.இதை பற்றி ஏன் யாரும் திரைப்படம் எடுக்கவில்லை.தயவுசெய்து இது போல் எழுதி தற்போது எங்களிடம் ஏற்பட்டிருக்கும் ஒற்றுமையை குலைக்க வேண்டாம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. intha padam India-vai maiya paduthiya padam alla. maraka ithu Afgan & Us sammantha patta padan. ungalukku yen intha veri

   நீக்கு
  2. தாலிபான்களை நேத்தாஜியுடன் ஒப்பிடுவதில் இருந்தே உங்கள் லட்சனம் தெரிகிறது. ஆப்கனிஸ்தானில் உயிரிழந்த அப்பாவிகளில் 75% தாலிபான்களால் கொல்லபட்டவர்கள்.
   இந்தியாவில் நடந்த தீவிரவாத தாக்குதல்கள் எத்தனை அதில் இந்து மதவாதிகள் நடத்தியது எத்தனை இஸ்லாமிய மதவாதிகள் நடத்தியது எத்தனை என்று ஒரு கணக்கு போட்டு பிறகு கூறுங்கள் எத்தனை சதவிகிதம் என்று சும்மா கைக்கு வந்ததெல்லாம் தட்டிவிடாதீர்கள்.

   நீக்கு
  3. பெலார்மின், உணர்வுள்ளவனுக்குக் கோபமும் வரும். உங்களுக்கு வராதுங்குறதுக்காக மற்றவனுக்கும் வரக்கூடாதுன்னு சொல்றீங்களா? ஒரு தமிழ் படம், ஆஃப்கான் யுஎஸ். சம்பந்தப்பட்டதுன்னா, அங்கேதான் ரிலீஸ் பண்ணணும். அனுமதிக்குறதா, வேண்டாமான்னு அங்குள்ளவன் முடிவு பண்ணிக்குவான். தொடர்ந்து, குறிப்பிட்ட சமூகத்தை மட்டுமே மையப்படுத்தி ஏன் இவ்வளவு திரைப்படங்கள்? இந்துத்துவா பயங்கர வாதத்தையோ சீக்கிய தீவிரவாதத்தையோ, சிங்கள தீவிரவாதத்தையோ ஏன், யூதத் தீவிரவாதத்தையோ, பயங்கரவாதத்தோட ஊற்றுக்கண்ணா இருந்து உலகத்தையே பயமுறுத்துற அமெரிக்காவையோ பற்றி, ஒன்றிரண்டு படங்களாவது வரட்டுமே.

   நீக்கு
  4. யார் போட்டுக்கொடுத்தக் கணக்கைச் சொல்லச் சொல்றீங்க, முத்து? இங்குள்ள ஆதிக்கச்சாதிக்காரங்களோட ஊடகம் சொன்ன கணக்கையா? கைலி உடுத்துட்டு, இந்துத்துவா அலுவலகத்தில குண்டு வெச்ச, அதே இயக்கத்தைச் சேர்ந்தவன் கணக்கையும் அவன் கணக்குல சேத்தானுங்களே அந்தக் கணக்கையா? தலிபானையும் நேதாஜியையும் முபாரக் எந்த இடத்தில ஒப்பிட்டாருன்னு சொல்றீங்க? நேதாஜியைப் பற்றி பேசுறதுக்கான அருகதை, நமக்கு இருக்கான்னு முதல்ல உங்க முன்னோடிகள் யாரையாவது கேட்டுட்டு அவரைப் பற்றி பேசுங்க.

   நீக்கு
 9. காவி பயங்கரவாதம் எப்போது தான் முஸ்லிம்களுக்கு அச்சுறுத்தல் இல்லாமல் இருந்தது. காந்தி படுகொலையை முஸ்லிம்களின் மேல் பழியை போட சூழ்ச்சி செய்ததிலிருந்தே துவங்கி விட்டது தங்களது திட்டத்தை.

  இந்த மாதிரியான போராட்டத்தின் மூலம் தங்களது எதிர்ப்பை பதிவு செய்யாமல் இருந்ததில் தான், திரும்ப திரும்ப "முஸ்லிம் என்றால் தீவிரவாதி" என்ற பிரச்சார பயங்கரவாதம் தொடர்ந்து சினிமாக்களில் சித்தரிக்கப்பட்டு பொது புத்தியில் ஆணி அடிக்கப்பட்டது. அச்சு ஊடகங்களில் "இஸ்லாமிய தீவிரவாதம் " முஸ்லிம் தீவிரவாதி" என்ற சொல்லாடல் பல காலமாக சொல்லப்பட்டு வந்தது. தீவிரவாதத்தை சுட்டும் போது ஏன் மதத்தோடு தொடர்புப்படுத்துகிறீகள்? தீவிரவாதியை அவன் சம்பந்தப்பட்ட இயக்கத்தோடு சொல்லுங்கள் என்று முஸ்லிம்கள் போராடியதன் பலன், இப்போதெல்லாம் முஸ்லிம்களின் உணர்வுகளைப் புரிந்துக் கொண்ட அச்சு ஊடகங்கள் அந்த போக்கை தவிர்த்து விட்டன.

  எனவே, ஜனநாயக நாட்டில் போராட்டம் மூலம் தான் கோரிக்கைகளை முன் வைக்க முடியும். ஜனநாயகத்திற்கு புறம்பான வன்முறைகளைத் தான் நாம் கண்டிக்க வேண்டும். முஸ்லிம்களுக்கு எதிரான இந்த மாதிரியான சினிமாக்களை எதிர்த்து போராடாமல் இருந்தால், தொடர்ந்து இது போல வரும் சினிமாக்களாலும் தான் முஸ்லிம்களைப் பற்றிய தவறான பிம்பம் உருவாக்கப்படும். ஜனநாயகத்தில் சட்டத்திற்கு கட்டுப்பட்டு போராடுபவர்களை கொச்சைப்படுத்தினால் தான் வேறு வகையான விளைவுகள் ஏற்படும்.

  விஸ்வரூபம் எங்கள் உணர்வுகளை காயப்படுத்துகிறது என்று கோரிக்கை வைக்கிறார்கள். கோரிக்கையில் உள்ள நியாயத்தையும் சட்ட ஒழுங்கு பிரச்சினையையும், (குடியரசு தின பாதுகாப்பு, மீலாடி நபி விடுமுறை) கருத்தில் கொண்ட அரசாங்கம் இரு வார தடையை ஆணையிடுகிறது. இந்த தடைஆணையை எதிர்த்து, கமல் நீதிமன்றம் போகிறார், இதன் மீதான தீர்ப்பை வரும் 28ந்தேதி நீதிபதி வெளியிடவிருக்கிறார். இதில் எங்குமே சட்டம் மீறப்படவில்லை.

  சில நேரங்களில் நடுநிலை என்ற பெயரிலும் துவேஷம் விதைக்கப்படுகிறது. நாம் தான் கவனமாக இருக்க வேண்டும்.

  பதிலளிநீக்கு

 10. ஆளாளுக்கு இஸ்லாமியர்களுக்கு அட்வைஸ் சொல்ல கிளம்பி விட்டார்கள்.
  இஸ்லாமியராக பிறந்து , இஸ்லாமுக்கு எதிராக கருத்து சொன்னால் முற்போக்கு முத்திரையும் , ஊடக வெளிச்சமும் கிடைக்கும் என கணக்கிட்டு , இஸ்லாமியர்கள் சிலரும்கூட இந்த அட்வைஸ் ஜோதியில் கலந்தது தனிக்கதை.


  இஸ்லாமியர்களின் நியாயமான உணர்வுகளுக்கு எதிராக இவர்கள் சொல்லும் கருத்துகளில் இருக்கும் அபத்தங்களை பார்க்கலாம்.

  பதிலளிநீக்கு
 11. பெயரில்லாசனி, ஜனவரி 26, 2013

  sani unga vaarthaigalai gavanitu payan padutungal...

  பதிலளிநீக்கு
 12. mean while kamalhasan has said,these small group of protestors not going to be representatives of whole muslim community,i wished to talk them again.. .PJ,JAWAHIRULLA all speaks about the film that its teasing the feelings of muslims. .but if we see pj's debate between bible and qur-aan ,pj said lot of fake things about jesus. .on that time pj's mara mandai out of order to think about christians' feelings. .although islam brothers not going to believe these leaders. ,they are operating only for there own wealth..

  பதிலளிநீக்கு
 13. இந்தப் படம் முழுக்க முழுக்க அமெரிக்க-ஆப்கன் பின்னணியில் எடுக்கப் பட்டிருப்பதாகவும் இந்தியப் பின்னணியில் ஒரு காட்சியும் இல்லை எனவும் பார்த்தவர்கள் தெரிவிக்கிறார்கள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதாவது, ஒரு தமிழ் படத்தை முன்வைத்து ஆப்கானிலோ அமெரிக்காவிலோ போய் போராடலாம் என்கிறீர்கள். தமிழை ஆட்சிமொழியாக்கச் சொல்லி ஒருவர்தான் குரல் கொடுத்திருக்கிறார். மிச்சமுள்ள பலகோடி தமிழர்களும் பேசாமலிருப்பதை வைத்து அவர்கள் இதை ஏற்கவில்லை என்று முடிவு செய்து விடலாமா?

   நீக்கு
 14. பெயரில்லாசனி, ஜனவரி 26, 2013

  தயிர்சாதம் சாப்பிட்டுட்டு முடிச்சவிழ்க்கிறவனை விடவும் நல்லாவே புரியும்.

  பதிலளிநீக்கு
 15. பெயரில்லாசனி, ஜனவரி 26, 2013

  உங்களின் ஆரம்ப வரிகளிலே தவறு உள்ளது சகோதரரே.தன் நாட்டின் விடுதலைகாக போராடுபவர்கள் திவிரவதிகளா?நீங்களும் கமலை போல அமெரிக்க ஏகாதிபத்திய மீடியாக்களின் ஸ்பீக்கர்கள் தான் என்பது தெரிகிறது.நம் நாடு விடுதலை பெற நேத்தாஜி ஆயுதம் எடுத்து போராடினாரே.ஆடு போராட்டமா?திவிரவதமா? நாங்கள் ஒன்றும் படத்தை பார்க்காமல் தடை போடா சொல்லவில்லை.பார்த்துவிட்டு ரோட்டில் இறங்கி அராஜகம் செய்யவில்லை.நியாயமான எங்கள் கருத்தைதான் சொன்னோம்.எங்களை ஒடுக்க வேண்டும் என்ற உங்கள் மன ஆசையை பெருபான்மை நல்ல உள்ளம் கொண்ட இந்துக்கள் மீது திணிக்க முயற்சிக்க வேண்டாம்.உங்களின் அறிவுரை எங்களை மிரடுவது போல் உள்ளது நண்பரே.நாங்கள் மதசார்பற்ற நாட்டில் தான் உள்ளோம்மா?இல்லை பெருபான்மை சமுகத்திற்கு அடங்கி போகும் இரண்டம் தர குடிமக்களாக உள்ளோமா?இதுவரை நமது நாட்டில் நடைப்பெற்ற குண்டு வெடிப்புகளில் பாதிற்க்கு மேற்பட்டவை யார் செய்தார் என்பது தற்போது நாடு அறிந்துள்ளது.இதை பற்றி ஏன் யாரும் திரைப்படம் எடுக்கவில்லை.தயவுசெய்து இது போல் எழுதி தற்போது எங்களிடம் ஏற்பட்டிருக்கும் ஒற்றுமையை குலைக்க வேண்டாம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ungal otrumai nalla vishayathirku yerpatirunthal varaverkalaam... suya vilambarathirkum makalai thoondi vittu kulir kaaya ninaikum suyanala kootam sonna poy kathaiyai nambi avargal pinal yosikkamal pogireergal... unmai veliye varumbodu.. ungal mugathai enge vaithu kolveergal... vendam anthha avamanam nanbargaley... 13 per padam parthu poy sonna kathaiyai 20 kodi makkalai namba vaithuvitaargal... intha avesam gnyayamana vishaythirku vanthirundal nanraga irunthirukkum

   நீக்கு
  2. hello mr.... ulagil athigam irrupathu islamiya theviravaathigale... summa comedy pannathiga... yella country layum theviravaatham irruku.. maximum theviravatham islamiya galal undakka pattathu... ithai neegal marukkirirgala

   நீக்கு
  3. hello mr.... ulagil athigam irrupathu islamiya theviravaathigale... summa comedy pannathiga... yella country layum theviravaatham irruku.. maximum theviravatham islamiya galal undakka pattathu... ithai neegal marukkirirgala

   நீக்கு
 16. Well said!! Summa aa uuna poraattaam!! there are lot of other useful things to fight for if they really want to!

  பதிலளிநீக்கு
 17. பெயரில்லாசனி, ஜனவரி 26, 2013

  அப்படி என்ன ஒட்டு மொத்த உலக முஸ்லிம்களை தீவரவாதியாகக் காண்பிக்கப்படுகிறது என்று தெரியவில்லை. அப்படியே காண்பித்தாலும் முஸ்லிம்களிடையே வாழும் தீவிர வாதியைத்தானே காண்பிக்கிறார்கள். இவர்கள் என்ன அவர்களுக்கு வக்காலத்து வாங்க. படத்தைத் தடை செய்யவேண்டும் என்று சொல்லும் உங்கள் கூட்டமைப்பில் தீவிர வாதிகள் இல்லையா? நெஞ்சைத் தொட்டு சொல்லுங்கள் முப்பது நாற்பது வருஷங்களுக்கு முன்பு ஒற்றுமையாக, அமைதியாக இருந்த ஜமாத்தை அது கூடாது இது கூடாது; அது ஷிர்க்கு இது ஷிர்க்கு; அங்கே போகாதே இங்கே போகாதே; தர்கா ஜியாரத் செய்யாதே என்று சொல்லி ஒரோர் ஊரையும் ஏன் ஒவ்வொரு குடும்பத்தையும் இரண்டாகப் பிளந்து வைத்திருக்கும் நீங்கள் அந்த தீவிரவாதிக்கு ஒன்றும் குறைந்தவர்கள் அல்லவே.

  உங்களுக்குள்ளேயே பல பிரிவு. சற்று சிந்தித்துப் பாருங்கள் நீங்கள் எங்கிருந்து வந்தீர்கள் என்று. உங்கள் தாய் கழகம் எங்கே இருக்கிறது என்று. சலாம் என்ற வார்த்தைக்கு அமைதி, சாந்தி, சமாதானம் என்றெல்லாம் பொருள். அந்த சலாம் என்ற வார்த்தையை உள்ளடக்கியதுதான் இஸ்லாம். முதலில் இஸ்லாத்தில் ஒற்றுமையைக் கொண்டுவாருங்கள். குக்கிராமத்திலும் இரண்டு பள்ளிவாசல்களை ஏற்படுத்தி வைத்திருக்கிறீர்களே அதனை ஒன்றாக்குங்கள் பிறகு தீவிரவாதத்தைப் பற்றி பேசலாம்.

  இப்படிக்கு
  உண்மை முஸ்லிம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மை முஸ்லிமே, அனாமதேயன் என்ற பெயரை விடவும் உங்களுக்குப் பொருத்தமான பெயர், அறிவிலியான் என்பது. “நீங்கள் எங்கிருந்து வந்தீர்கள்” என்று கேட்டிருக்கிறீர்கள் அல்லவா? அந்த நீங்களில் நானுமொருவன். ஆகவே, தயவு செய்து சொல்லுங்களேன். நான் எங்கிருந்து வந்தேன் என்று.

   நீக்கு
 18. படம் இன்னும் பார்க்கவில்லை. ஆனாலும் படம் பற்றி வந்துள்ள பலரது விமர்சனங்களை வைத்து பார்க்கும் அமெரிக்காவில் வெடிகுண்டு வைக்க இருக்கும் தீவிரவாதிகள் சதி முறியடிப்பு! இங்கேதான் பிரச்சனை. அமெரிக்கா என்ற ஒரு நாடு அனுமதியின்றி இன்னோர் நாட்டின் மீது பெரும்படை எடுத்து லட்சகணக்கான பேர்களை கொன்றால் அது போர், ஆனால் விமனப்படை கப்பல்படை என்றுஎந்த ராணுவபலமின்றி தங்களையே பலியாக்கி கொள்ளும் தாக்குதல் நடத்துவது தீவிரவாதம்?? இரு நாடுகளை சேர்ந்தவர்களையும் யுத்தவீரர்கள் என்று மீடியா சொல்லுமா? தாய்நாட்டிற்காக கத்தியும், சிறியரக துப்பாகிகளும் கொண்டு சண்டையிடுபவன் தீவிரவாதி, ஏதோ ஒரு நாட்டிலிருந்து வான்வழியே சரமாரி குண்டுகளை வீசுபவன் போர்வீரனா? இந்த பாரபட்சமே அமெரிக்காவின் பாவசெயலுக்கு ஆதரவாக தமிழ்பேசும் மக்களை திருப்பும்.கமல் படத்தில் கண்டிப்பாக தீவிரவாதி என்று அழைக்கபடும் அந்த போர்வீரனுக்கும் குடும்பம், பாசம் உண்டு என்பதை காட்டியிருப்பார். ஆனால் நம் மக்களுக்கு அது சரியாக சென்றடையுமா? மற்றபடி நம் இந்திய ஒற்றுமைக்கு இந்த படத்தால் எந்த பிரச்சனையும் வராது!

  பதிலளிநீக்கு
 19. சரியான நேரத்தில் வந்த நல்ல பதிவு நண்பா..

  மேலும் படத்திற்குத் தடை கோர அவர்கள் கூறும் மிக முக்கியக் காரணம் தீவிரவாதியான முல்லா ஓமர் போன்ற தாலிபான்கள் கோவை, மதுரை ஆகிய இடங்களில் தங்கியிருந்தார்கள் என கதையில் வருகிறது என்பதுதான். இது தமிழக முஸ்லிம்களுக்கு எவ்வளவு சாதகமான பாயிண்ட்.. கோவை, மதுரை குண்டு வெடிப்புகளை நடத்தியது வெளிநாட்டு தாலிபான்கள்தான். தமிழக முஸ்லிம்கள் இல்லை என்பதுதானே உள்ளடக்கம். முல்லா ஓமர் இங்கே வந்து குண்டுவைக்கவில்லையென்றால் இங்கேயுள்ளவர்கள் குண்டுவைத்ததாக இவர்களே ஒப்புக்கொள்கிறார்களா? இதைத்தான் ”எங்கப்பன் குதிருக்குள் இல்லை... “ எனச் சொல்வதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எவனுடைய அப்பனோ குதிருக்குள் இருப்பதாக உங்க, “தலை” தான் சொல்லுது. முல்லா ஒமர், இங்க குண்டு வைக்க வந்தான்னா, அவனுக்கு, இங்க அடைக்கலம் கொடுத்தவன் யாராக இருக்க முடியும்னு ஒரு கேள்வி இயல்பாவே உருவாகுமில்லையா? குண்டக்க மண்டக்க, லாஜிக் எல்லாம் பேசாதீங்க, ரசிகரே.

   நீக்கு
  2. ரொம்ப சரியா சொன்னீங்க நண்பரே.முல்லா உமர் இங்க வந்து தங்கிட்டு பொய் இருந்தா இதைவிட அவமானம் நம்ம நாட்டுக்கு இல்ல.ஏன்னா அமெரிக்க முல்லா உமர் தலைக்கு எத்தனையோ லட்சம் தர்றதா சொல்லி இருந்தாங்க.

   நீக்கு
 20. http://www.facebook.com/photo.php?v=524942300860856.. ayye ivanungala sonna ivanugaluku moookuku mela kovam,, illatha onnai itukati america kaikoolyana kamal solluvaan athai naanga paathukitu summa poganum,,, anjuvathum, adipanivathum,thalai vanunguvathum,, yengaluku thalaivaha irupathum allah oruvaney ..

  பதிலளிநீக்கு
 21. intha videovai paarunga http://www.facebook.com/photo.php?v=524942300860856 ayee ivanugala sonna ,,mooku mela kovam varum,, illatha ondrai america kailkooli CIA,MOSSAD pondra terrorist ullavu amaipu solra poiya ivan kadhai yedupaa,, paathu kitu summa irukanum,,

  பதிலளிநீக்கு
 22. இந்த கட்டுரையில் கூறியிருப்பதுபோல அல்ல விஷயம் ஒரு கலைஞர் திரைப்படம் எடுக்கும்போது யாரையும் புன்படுதஆ தவாறு கதை அமைக்கவேண்டும் அதிலும் தற்போது வரும் தமிழ் திரைப்படங்கள் அனேகம முஸ்லிம்களை குற்றவாளிகளாக சித்தரித்தே வருகிறது சரி இப்போ விஸ்வரூபம் பற்றி பாப்போம் அமெரிக்காவையும் ஆப்கானிஸ்தானையும் வைத்து படம் எடுக்கும் கமல் ஆப்கான் தீவிரவாதி ஏன் தமிழகத்தில் ஒளிந்திருந்ததாக கதையில் சொல்லவேண்டும்? அதுவும் கோவையும் மதுரையும் முஸ்லிம் தீவிரவாதிகளின் இடம் என்பதுபோல காட்டப்பட்டுள்ளது! மேலும் ஒரு உண்மை சம்பவத்தை படமாக்கும்போது அதில் சிரிதளவேண்டும் உண்மைகள் இருக்கவேண்டும் ஆப்கானையும் அந்த மக்களையும் கொடூரமானவர்களாக காட்டும் கமல் உலக ரவுடி அமெரிக்காவை நல்லவர்களாக(அமெரிக்க அரசை) தூகிபிடிப்பதன் நோக்கம் என்ன அப்போதானே அமெரிக்க ஆஸ்கார் அவார்டு கிடைக்கும் என்பதாலா? மதங்களை சார்ந்து படம் எடுக்கும் பொது ஒன்றுக்கு நூறுதடவை யோசிக்கவேண்டும் காட்சிகளை கவனமாக கையாளவேண்டும் காரணம் மதம் என்பது உணர்சிமிக்கது. மேலும் நான் கேட்கிறேன் கருத்து சுதந்திரம் பற்றி பேசும் மக்களே டேம்999படம் தமிழகத்தில் தடை செய்யப்பட்டபோது எங்கே போனது உங்களின் உரிமைக்குரல்கள்!? அதுவும் சென்சார் முடித்து வெளியே வருவதற்கு தயாரான திரைப்படம்தானே? கமலகாசன் குஜராத்தில் நடந்த கொடுமைகளை மோடியின் அட்டூழியங்களை திரைப்படமாக்க முடியுமா? அதற்க்கு துனிவுண்டா கமலுக்கு, அவர் நடித்து தயாரித்துள்ள மருதநாயகம் திரைப்படத்தை திரயிடாமல் தடுத்தவர்கள் யார் ஏன் அந்த உண்மை திரைப்படம் வெளிவரமுடியவில்லை என்பது யாருக்கேனும் தெரியுமா?

  பதிலளிநீக்கு
 23. மருத நாயகம் படத்தை எடுக்கவே விடாம யார் தடுத்தாங்களோ அவங்ககிட்ட கொஞ்சம் மோதிப் பாக்குறதுதானே? தடுத்தவங்களோட பேரைக்கூட சொல்லப் பயப்படுற “தலை” அவரு. சினிமாவில சிகரெட் புகையைக்கூட காட்டிடக் கூடாதுன்னு கருத்துச் சொன்ன ஒரு ஜாதித்”தலை”க்கு தான் நுழையறதை ஒவ்வொரு மாவட்டமா தடுத்துட்டிருக்காங்கன்னதும், கருத்து சுதந்திர சிந்தனை பீறிட்டுக் கிளம்பிடுச்சு. சிபிஎஸ்சி. பாடத்திட்டத்தில ஒரு ஜாதியைப் பற்றி, தவறாக் குறிப்பிட்டாங்கன்னு, போராட்டம் பண்ணாங்களே, உனக்கு வேண்டான்னா நீ அதைப் படிக்காதேன்னு, ஒரு டெல்லி கணேஷனும் ஒரு ரமேஷ் கண்ணனும் சொல்லக்காணோம்.

  பதிலளிநீக்கு
 24. எப்படி எல்லாம் யோசிக்கிறிங்க... தடை பண்ணலைனா மதவெறி ஜெயலலிதா, தடை செய்தா ஜெயலலிதாவோட சதி... உங்களுக்குளெல்லாம் மேல் டப்பா காலியாட....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நீ பதில் எழுதியிருக்குறதை நீயே வா...சிச்சுப் பாத்தப் பிறகுதான், டப்பா காலிங்குற முடிவுக்கே வந்திருப்பே இல்லையாட?

   நீக்கு
  2. கரெக்டா சொல்லி இருக்கேயேட, நீ ஒரு ஸ்பெஷல் டப்பா போல இருக்கு....

   நீக்கு
  3. பெயரில்லாமல் கருத்து எழுதும் தோழரும், விநோத்குமார் அவர்களும் கட்டுரையை பற்றி மட்டும் விவாதம் செய்தால் நன்றாக இருக்கும். அல்லது கட்டுரையை எழுதிய என்னை விமர்சனம் செய்யுங்கள். நீங்கள் சண்டை போட்டுக்கொள்ளாதீர்கள்.

   நீக்கு
  4. நீ எழுதியதை நீயே வா.... சிச்சுப்பாத்தேன்னுதானே, சொன்னேன். இதுக்குப்போய் கோச்சுக்கிறியே, வினூத்குமார்?

   நீக்கு
 25. இங்கே கோரமான கற்பழிப்புகளும் கொடூர கொலைகளும் நடகிறேதே அதை செய்வதெல்லாம் யாரு ? சமிபத்தில் டெல்ஹியில் பெண்ணை கொடூரமாக கற்பழித்து அவளின் பிறப்புறுப்பில் கம்பிவிடு சிதைடர்களே அது என்ன தனம்? மிருகத்தனம இல்ல குள்ளநரி தனமா? அமெரிக்க கரன் கொத்து கோத்த குண்டு போடுறேன் இவன் வெறும் கதிமட்டுமே வச்சிருக்கேன் அவன் தன் எதிர்ப்ப காட்ட வேற என்ன செய்வான்.

  பதிலளிநீக்கு
 26. காட்டு விலங்குகளை விடவும் மோசமாக, மனிதர்கள் என்பதற்கு எந்த அருகதையுமே இல்லாமல் குஜராத்தில் நடந்த இரத்தத் தாண்டவம்போல் உலகத்தில் எங்காவது ஒரு இடத்தில் நடந்ததாகக் காட்ட முடியாது. அவர்களது இனவெறித் தலைவன் ஹிட்லர் கூட இந்த அளவுக்கு காட்டுமிராண்டியாக நடந்துகொண்டதில்லை. இந்த லட்சணத்தில மற்றவங்கள தீவிரவாதிங்குறாங்க நாதாரிப்பசங்க.

  பதிலளிநீக்கு
 27. உங்கள் கருத்துக்கள் நடுநிலையாக இல்லை தோழரே, ஆண்டாண்டு காலமாக இருக்கும் பார்பீனியத்தின் தாக்கம் நம்முள் இருக்கிறது என்பதற்கு அடையாளமாக தான், உங்கள் சிந்தனை வெளிப்பட்டு இருக்கிறது.பார்பீனியத்தை புரிந்து கொள்ளாமல், உலகை,மற்ற மதங்களை புரிந்து கொள்ள முடியாது.

  பதிலளிநீக்கு