திங்கள், ஆகஸ்ட் 15, 2011

தமிழ் உணர்வாளர்களின் திராவிட எதிர்ப்பு அரசியல்.இராஜிவ்காந்தி இறப்பு விவகாரத்தில் தூக்குதண்டனை கைதியாக வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகன், பேரறிவாளன், சாந்தன் ஆகியோரின் கருணை மனுவை ஜனாதிபதி ரத்து செய்துவிட்டார் என்ற தகவலால் தமிழ் உணர்வாளர்கள் ரத்தம் கொதித்து போய்வுள்ளனர். போராட்டம், மக்கள் எழுச்சி, சைக்கிள் பயணம், இணையத்தில் பிரச்சாரம் என உணர்வு பொங்குகிறது. ஆனால் ஒரு விவகாரத்தை திட்டமிட்டே திசை திருப்பி வருவதாக தோணுகிறது.

அதாவது, இதற்க்கு முன் கருணாநிதி ஆட்சியில் இருந்தபோது, ஈழ தமிழர்களுக்காக அவர் அறிவித்த ஒவ்வொரு விவகாரமும் எதிர்மறையாகவே விமர்சித்தார்கள். நாடகம் என்றார்கள். மத்தியரசிடம் கேட்க வேண்டிய விவகாரத்தை கருணாநிதியை நோக்கியே கேட்டார்கள் உணர்வாளர்களான அய்யா பழ.நெடுமாறன், சீமான் போன்றோர்.


இன்று ஜெ ஆட்சி நடைபெற்றுவருகிறது, தூக்குதண்டனை கைதிகளின் கருணை மனு ரத்து என்ற பதில் மாநில அரசுக்கு நிச்சயம் கிடைத்திருக்கும். காரணம் மாநில அரசு தான் தூக்குதண்டனையை நிறைவேற்ற போகிறது. அப்படியிருக்க இதுப்பற்றி ஜெ வாயை திறக்கவில்லை. ஈழ தமிழர்களுக்காக குரல் கொடுக்கும் ஜெ, ராஜிவ்காந்தி கொலை வழக்கில் இன்னும் விசாரணை முடியவில்லை அதனால் தூக்குதண்டனை நிறைவேற்ற ஜனாதிபதி ஒப்புதல் அளித்தது தவறு என இந்த தைரியலட்சுமி குரல் கொடுத்திருக்கலாம். ஆனால் அதுப்பற்றி மூச் விடவில்லை. அதோடு ஜெ வுக்கு சொம்பு தூக்கும் சீமான், நெடுமாறன் யாரும் ஒரு வார்த்தை கேட்கவில்லை. இதுவே கருணாநிதி ஆட்சியாக இருந்திருந்தால் இவர்களின் அறிக்கை, பேட்டிகள் தமிழகத்தை களோபரமாக்கியிருக்கும்.

தமிழக மக்களிடம் ஈழ மக்கள் மீதும், விடுதலைப்புலிகள் மீதும் ஒரு பாசம், ஈர்ப்பு சமீபகாலத்தில் வந்துள்ளது. ஈழத்தில் போர் உச்சத்தில் இருந்தபோது கருணாநிதி தலைமையிலான ஆட்சி நடந்துவந்தது. அப்போது ஈழ யுத்தத்தை தடுத்து நிறுத்தவில்லை என கோரிய தமிழ் உணர்வாளர்கள் அதை பெரும் பிரச்சனையாக பிரச்சாரம் செய்தார்கள். கருணாநிதி ஈழ எதிரி என திட்டமிட்டே பிரச்சாரம் செய்யப்பட்டன. ஜெ நல்லவர், தமிழ் உணர்வாளர்கள் என பிரச்சாரம் செய்தனர். அது கருணாநிதி ஆட்சியை பதம் பார்க்க ஒரு காரணமாகிவிட்டன. அவர்கள் எதிர்பார்த்தை போல ஜெ முதல்வராகிவிட்டார். ஈழத்துக்காக அவர் இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என தீர்மானம் இயற்றியதை,  பேசுவதுயெல்லாம் நாடகம் என தெரிந்தும் அவரை கொண்டாடுகிறார்கள் இந்த உணர்வாளர்கள்.


நாடகம் என அழுத்தம் திருத்தமாக கூற காரணம், பழையதை மறந்திருக்கமாட்டார் அய்யா பழ.நெடுமாறன், விடுதலைப்புலிகளை பலகீனப்படுத்திவிட்டு, தலைவர் பிரபாகரன் மீது பலப்பல குற்றச்சாட்டுகளை சுமத்திவிட்டு இயக்கத்தை விட்டு வெளியே வந்து சிங்கள அரசோடு கைகோர்த்த துரோகி கருணா கடந்த 2001-2006வரையிலான ஜெ ஆட்சியில் விடுதலைப்புலிகளுக்கு பயந்து ஜெ அனுமதியோடு தமிழகத்தில், பின் கேரளாவில் பாதுகாப்பாக புலனாய்வு துறையால் தங்க வைக்கப்பட்டார். இங்கு தங்கிக்கொண்டே கருணா காட்டிதர, புலிகளின் பல முக்கிய அரசியல் விவகார, ஆயுத, நிதி பிரமுர்கள் தமிழகத்தில் கைது செய்யப்பட்டார்களே அது எல்லாம் மறந்துவிட்டதா?, இன்று சிறையில் உள்ளவர்களுக்கு தூக்குதண்டனை வழங்க வேண்டும், பிரபாகரனை தமிழகம் கொண்டு வந்து தண்டிக்க வேண்டும் என ஜெ கேட்டது, பேசியது மறந்துவிட்டதா? அப்படிப்பட்டவர் இன்று எப்படி ஈழத்தாய் ஆனார் என்பதை சீமானும், நெடுமாறன் அய்யா அவர்களும் விளக்கினால் சிறப்பாகயிருக்கும்.

இந்த தைரியலட்சுமி, உண்மையில் ஈழ மக்களுக்காக குரல் கொடுப்பவராக இருந்தால் உடனே இந்த கருணை மனுவை ரத்து செய்தததை ஏற்றுக்கொள்ளமுடியாது என அறிக்கைவிடச்சொல்லுங்கள் நான் அவரை ஈழ மக்களின் தாய் என ஏற்றுக்கொள்கிறேன்.

திராவிட அரசியல், தமிழகம் பற்றி பேசும் இவர்கள் மறைமுகமாக பார்ப்பன, ஈழ எதிரி ஜெவுக்கு பல்லக்கு தூக்குவதை என்னவென்று சொல்வது………

வெள்ளி, ஆகஸ்ட் 12, 2011

உலகம் பதிய மறுக்கும் இந்தியாவின் மனித மிருகங்கள்……...


காட்டில் வாழும் விலங்குள் தங்களது பசிக்காக மட்டுமே வேட்டையாடும். சும்மா பொழுது போகவில்லை என்றோ, தன்னுடன் காட்டில் வாழும் மற்றொரு மிருகம் மீது குரோதத்தை ஏற்படுத்திக்கொண்டோ, தன் அதிகாரத்தை காட்டவோ சண்டைக்கு போகாது, அவைகளை கொல்லவும் செய்யாது. ஐந்தறிவுள்ள மிருகமே சரியாக வாழ்கிறது. ஆறறிவு கொண்ட எல்லாவற்றையும் அறிந்தவன் என பீற்றிக்கொள்ளும் மனிதன் தன் சக மனிதனை கொல்வதும், கொத்து கொத்தாக படுகொலை செய்வதுமாக உள்ளான்.

இதை சாதாரணமானவன் செய்தால் தெரியாமல் செய்த கொலை எனலாம், அதிகார போதையில், உலகத்தில் தான் தனித்து தெரியவேண்டும்மென்றும், மத காரணங்களை காட்டியும் மக்களை கொத்து கொத்தாக கொன்ற பல மனித மிருகங்கள் உலக பூமி பந்தில் வாழ்ந்தனர். வாழ்கின்றனர்.

அவர்கள் ஹிட்லர், முசோலினி, இடிஅமின், ஒசாமாபின்லேடன், இராஜபக்சே என வரலாற்று பக்கங்கள் கூறுகின்றன. அந்த வரிசையில் சேர்க்கப்பட வேண்டியவா முன்னால் இந்திய பிரதமர் இராஜிவ்காந்தி, அவரது மனைவி சோனியாகாந்தி. தெற்காசிய கண்டத்தில் தன்னை முடிசூடா மன்னராக வேண்டும் என்ற காரணத்திற்காக இலங்கை நாட்டில் தன்மானத்திற்காக, சுதந்திரத்திற்காக போராடிய மக்களுக்கு எதிராகயிருந்து அவர்களை அழிக்க முழு முதல் காரணமாக இருந்தவர் இந்த இராஜிவ்காந்தி.

89ல் அமைதிப்படை என்ற சாத்தான்படையை இலங்கை மண்ணுக்கு அனுப்பி தமிழர்களுக்காக உண்மையாக போராடிய விடுதலைப்புலிகள் மற்றும் அவர்களுக்கு ஆதராவாக இருந்தவர்கள் என தமிழர்களை அழிக்க ஆணையிட்டார். சாத்தான் வேதம் ஓத அதிகார போதையில் இருப்பவர்களின் அடிமைகளான இந்திய ராணுவத்தினர் ஈழத்தில் நடத்திய கோரதாண்டவத்தையும், இந்திய ராணுவத்தினர் வீரத்தை கேட்டால் அகிம்சையின் நாயகன் என உலகம் கொண்டாடும் காந்தியே துப்பாக்கியை எடுத்து அவர்களை சுட்டுயிருப்பார்.

ஈழ பூமியில் பலநூறு இளம் பெண்டிர் கன்னிக்கழிக்கப்பட்டனர், பிறந்த பிள்ளைகள் பால் குடிக்கும் மார்பில் மாண்புமிகு இந்திய வீரர்கள் கடித்து குதறினார்கள், சின்னஞ்சிறு பிள்ளைகளையும் சுட்டுக்கொன்றனர். காட்டி தரும் கயவர்கள் எல்லா இனத்திலும் உண்டு. அப்படிப்பட்ட தமிழ் பேடிகளை உடன் வைத்துக்கொண்டு வீர தமிழ் ஆண்மகன்களை ஈவு இரக்கம்மில்லாமல் விசாரணையின்றி சுட்டுக்கொன்றார்கள். உலகில் காக்கைக்கு குரல் கொடுக்ககூட ஆள்யிருந்தது. அநாதைகளான தமிழர்களுக்கு தான் உலகில் குரல்கொடுக்க யாரும்மில்லை.

10 ஆயிரத்துக்கும் அதிகமான தமிழர்களை கொன்ற அமைதிப்படை அரசியல் காரணங்களால் தோல்வியோடு ஈழ மண்ணை விட்டு கிளம்பியது. ஆனால் அவர்களால் ஏற்பட்ட காயம் மக்களின் மனதில் வடுக்களானதோடு ஈழ மண்ணில் உரமாக வீசப்பட்டன. அந்த உரத்தை உண்டு எழுந்தவர்கள் அடுத்த சில மாதங்களிலேயே காரணகர்த்தாவை தமிழக மண்ணில் மனித வெடிகுண்டாக வந்து சின்னாபின்னமாக்கினார்கள்.

ஊழலின் நாயகன், மனித ரத்தத்தை உறிஞ்சிய அந்த கொடூரனை வரலாற்று பக்கத்தில் மனித மிருகம் என பதிவு செய்திருக்க வேண்டும். அவரை கொன்றவர்களுக்கு உலக மக்கள் சிலை வைத்திருக்க வேண்டும் வைக்கவில்லை. காரணம், ஈழ தமிழர்களின் குரலை அந்த மண்ணை விட்டு போகாமல் பார்த்துக்கொண்டார்கள். அதனால் அவரை புகழ்கிறார்கள். அதற்க்கு காரணம், அதே குடும்பத்தின் ஆட்சிதான் தற்போதும் இந்தியாவை ஆள்கிறது. மனித பேயின் மனைவி தான் இந்தியாவை ஆட்டுவிக்கிறார், அவரது மகன்னிடத்தில் தான் சாட்டையுள்ளது. ரத்தம் குடிக்கும் வேலையை அன்று அவர் செய்தார். இன்று அவரின் மனைவியும், மகனும் செய்கிறார்கள்.


மனித பேயை கொன்றதால் கொன்றவர்களை பழி வாங்குகிறேன் என பிசாசுகள் புறப்பட்டது. ஈழ மண்ணில் மனித ரத்தம் குடிக்க ஆயுதங்களை வாரி வழங்கி பேயை கொன்ற சமுகத்தை கொத்து கொத்தாய் அழிக்கப்பட்டதை கேட்டு ரசித்தது பிசாசுகள். ஒரு லட்சம் பேரை கொன்று ரத்தம் பார்த்தும் ஆத்திரம் அடங்காமல் தன் கணவரை கொன்றவர்களுக்கு உதவி செய்தவர்களாய் குற்றம் சாட்டப்பட்டு தண்டனை அனுபவித்து வருபவர்களின் உயிர்களை தூக்கு தண்டனை மூலம் பறிக்க முடிவு செய்துள்ளது இந்த பிசாசு.

வரலாற்றின் கறுப்பு பக்கத்தில் இருக்க வேண்டியவர்கள் இந்தியாவின் பட்டு கம்பளத்தில் இருக்கிறார்கள்.

வியாழன், ஆகஸ்ட் 11, 2011

இந்தியாவில் தூக்கு தண்டனையை தடுப்பது எப்படி ?.ஒரு மனிதனை இன்னோரு சக மனிதனை சட்டத்தின் பெயரால் கொல்லும் கொடூரம் இன்னும் இந்தியாவில் தான் உயிர்ப்போடு உள்ளது. உலகத்தின் பல நாடுகளில் மரண தண்டனையை ஒழித்துவிட்டார்கள். காரணம், சட்டத்தின் பெயரால் குற்றவாளி என ஒருவருக்கு தூக்குதண்டனை நிறைவேற்றப்பட்டுவிட்டால் பின்பு அவர் நிரபராதி என தெரிந்தபின் அவரை மீண்டும் உயிர் பெறவைக்கும் சக்தி மனித குலத்திற்க்கு இல்லை என்பதால் தான் சட்டத்தின் பெயரால் ஒருவரை கொல்லும் சட்டப்பிரிவை நீக்கிவிட்டார்கள். ஆனால் இந்தியாவில் ஆட்சியாளர்கள் மனித உயிர்களை துச்சமாக பார்க்கிறார்கள். அதிகார  சிம்மாசனத்தில் அமர்ந்தபின் தங்கள் நலனை மட்டுமே பார்க்கிறார்கள். மக்கள் நலனை சிந்திப்பதில்லை.

உலகத்தில் பல வல்லரசு நாடுகள், வளராத குட்டி நாடுகள் என பலவும் தூக்கு தண்டனைக்கு எதிராக உள்ளன. ஆனால் மனித உரிமையை வாய்கிழிய உலக அரங்கில் பேசும் இந்தியா இன்னமும் மரண தண்டனை என்கிற சட்டத்தை நீக்காமல் வைத்துள்ளது. காரணம் கேட்டால், தண்டனைகள் கடுமையாக இருந்தால் தான் குற்றங்கள் குறையும் என்கிறார்கள். ஒருவர் தப்பு செய்ய எப்படி பல காரணங்கள், சூழ்நிலைகள் அமைகின்றனவோ அதேபோல், ஒரு குற்றவாளியை திருத்த ஆயிரம்மாயிரம் வழிகள் உள்ளன. ஆனால் அதை இந்தியாவில் எந்த நீதிமன்றமும், சிறைச்சாலையும் செய்வதில்லை. ஏன் எனில் இங்கு சட்டத்தை மதிப்பவர்களை விட சட்டத்தை தங்களுக்காக வலைப்பவர்கள் தான் அதிகமாக உள்ளார்கள்.

இந்தியாவில், கொடூர கொலை, அரசியல், அதிகார பிரமுகர்கள் கொலை செய்யப்பட்டால் மட்மே தற்போது தூக்குதண்டனை அ மரணதண்டனை என்ற நிலை. ஊழல் செய்தாலும் தூக்குதண்டனை என சட்டத்தில் இருந்திருந்தால் இந்நேரம் உலகத்துக்கு முன் மாதிரியாக இந்தியாவில் அனைத்து தூக்கு தண்டனை கைதிகளும் விடுவிக்கப்பட்டுயிருப்பார்கள்.

ஆனால் சட்டத்தை உருவாக்கியவர்கள் வருங்காலத்தில் நம்மை விட யோக்கியவான்கள் அதிகமானோர் இந்தியாவை ஆளுவார்கள் என கனவுலகில் இருந்தபடி சட்டத்தை உருவாக்கியிருப்பார்கள் போல……. அதனால் ஊழல், கறுப்பு பணம், அரசு சொத்துக்கள் சுரண்டல் போன்றவற்றை சேர்க்காமல் விட்டுவிட்டனர். இதனால் அது ஆளும் வர்க்கத்தினருக்கு சவுகரியமாகிவிட்டது. அதனால்தான் அந்த சட்டத்தை இந்தியாவை ஆளும் வர்க்கங்கள் கண்டுகொள்ளாமல் இருந்துவருகிறது.

அதனால் தோழர்களே தூக்கு தண்டனை என்கிற சட்டத்தை நீக்கச்சொல்லி போராடாதீர்கள், அந்த சட்டத்தில் ஊழல் செய்பவர்கள், அரசாங்க பணத்தை கொள்ளையடிப்பவர்கள், அரசாங்க வளத்தை சுரண்டுபவர்களுக்கும் தூக்கு தண்டனை என சட்டத்தில் திருத்தம் கொண்டு வாருங்கள் என போராடினோம் என்றால் தூக்குதண்டன, மரணதண்டனை போன்றவை சட்டம் சட்டப்புத்தகத்தில் இருந்த இடம் தெரியாமல் அழிக்கப்படும்…………

புதன், ஆகஸ்ட் 10, 2011

கவிதையோ கவிதை

அவளின் கண்ணீரும் காதல் பேசின................

என்னை துன்புறுக்கின்ற அவளின் வார்த்தைகளும், அவளின் முகமும். ................

என் காதல் வளர வளர .......... நிலாவே நீ தேய்ந்துக்கொண்டேயிரு.........


என் காதல் அவளின் கடற்கரை காலடி சுவடு போல மறைந்துவிட்டன........

காதல் நெருப்பாக தான் இருந்தது அவளை பார்க்கும் வரை............

அவளின் அழகு ரகசியம் இன்று தான் அறிந்தேன். அவள் என்னை காதலிக்கறாளாம்.......

நீண்ட நாட்களுக்கு பின் சந்தித்தோம். எங்களின் உதடுகள் மவுனமாக பேசின.........

நான் அழகாகிவிட்டேன் அவளை பார்த்தபின் நிலவு சொன்னது................