வியாழன், டிசம்பர் 19, 2013

ஓரினச்சேர்க்கை போல…. விலங்குகளுடன் செக்ஸ். சட்ட அங்கீகாரம் உண்டா ?.ஓரின சேர்க்கையாளர்களுக்கு எதிரான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு நாட்டில் வாத பிரதிவாதங்களை ஏற்படுத்திவிட்டது. ஆண் - பெண் உறவு நிலைக்கு மாறாக, ஆண் சக ஆணுடனும், பெண் சக பெண்ணுடன் உடல் உறவு வைத்துக்கொள்வதை தான் ஓரினசேர்க்கை என அழைக்கப்படுகிறது.

உலகின் பல நாடுகளில் ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு ஆதரவாகவும், எதிராகவும் சட்டங்கள் உள்ளன. கடுமையான தண்டனை தரும் நாடுகளும் உள்ளன. சலுகைகள் தரும் நாடுகளும் உள்ளன. இந்தியாவின் சட்டம் ஓரினசேர்க்கையாளர்களுக்கு எதிரானது. இந்தியாவில் ஓரின சேர்க்கையில் ஈடுபட்டால், இந்திய தண்டனை சட்டம் 377வது பிரிவின் படி மாபெரும் குற்றம். இதற்கு 7 ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனை வரை தர இடமுண்டு.

இந்தியாவில் அதிகரித்து வரும் ஓரின சேர்க்கையாளர்களை பாதுகாக்கும் பொருட்டு ஓரினசேர்க்கையில் ஈடுபடுவது குற்றமல்ல என அறிவிக்ககோரி டெல்லியில் இயங்கும் நாஸ் என்ற அமைப்பு 2001ல் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தது. 2009 ஜீலை மாதம், டெல்லி உயர்நீதிமன்றம், ஓரின சேர்க்கை குற்றம்மல்ல, இருவரின் சம்மதத்துடன் தனிமையில் உறவு கொள்வது தவறல்ல என தீர்ப்பு வழங்கியது.

இந்த தீர்ப்பை எதிர்த்து இந்து, கிருஸ்த்துவ, இஸ்லாமிய கலாச்சார, மத அமைப்புகள் சில உச்சநீதிமன்றத்துக்கு சென்றன. உச்சநீதிமன்றம், கடந்த 11ந்தேதி ஓரின சேர்க்கை என்பது கிரிமினல் குற்றம். தற்போதைய நிலையில் ஓரின சேர்க்கைக்கு ஆதரவாக உச்சநீதிமன்றத்தால் சட்டம் இயற்ற முடியாது. இந்த முக்கிய பிரச்சனை பற்றி நாடாளமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும். ஓரின சேர்க்கைக்கு எதிரான சட்டத்தை நீக்குவது அல்லது சட்டத்தை தொடர்வது நாடாளமன்றத்தின் கையிலேயே உள்ளது என்றுள்ளார்கள் நீதிபதிகள். உச்சநீதிமன்றம் மக்கள் பிரதிநிதிகளிடம் ‘பொறுப்பை’ அனுப்பியுள்ளார்கள்.

ஓரினச்சேர்க்கை பற்றி, சமூகத்தின் பார்வை எவ்வாறாக உள்ளது என்பதை பார்க்கும் முன் இயற்கையின் நீதியை பார்த்துவிடுவோம்.


செக்ஸ் என்பது மனிதனின் அடிப்படை தேவை. உடலுக்கு உணவு எப்படி அத்தியாவசியம்மோ அதேபோல் குறிப்பிட்ட வயதுக்கு மேல் காமமும் அத்தியாவசியம். குறிப்பிட்ட வயதுக்கு பின் ஆண், பெண் இரு பாலரும் அதை அனுபவிக்க வேண்டும் என்கிறது காமசாஸ்திரம். கலவியில் எந்தந்த விதத்தில் ஈடுபடலாம் என்பதை அலசுகிறது காமசாஸ்திரம். இந்த நூல் இந்தியாவில் எழுதப்பட்டது என்பது குறிப்பிடதக்கது.

ஆண் பெண்ணோடு உடல் உறவு கொள்வது இயற்கை. அதற்கு மாறாக பண்டைய காலம் முதலே ஓரினச்சேர்க்கை என்பது உள்ளது. ஆண் தன் மனம் விரும்பிய ஆணுடனோ, பெண் தன் மனம் விரும்பிய பெண்ணுடனோ கலவியில் ஈடுபட்டுக்கொண்டு இருக்கிறார்கள். சமகாலத்திய பிரபலங்கள் பலரும் ஓரினச்சேர்க்கையாளர்கள். உலகம்மே கொண்டாடும் இந்தியாவின் தேச தந்தை என வர்ணிக்கப்படும் மகாத்மா காந்தியும் ஓரினச்சேர்க்கையாளர் தான். இந்தியாவில் 25 லட்சம் பேர் ஓரின சேர்க்கையாளர்களாக இருக்கலாம் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. (அவ்வளவு தானா ?.).

ஓரினச்சேர்க்கை மட்டுமல்ல, மனித இனம் மிருக இனத்துடன் கலவியில் ஈடுபடுவதும் பண்டைய காலம் தொட்டு இன்று வரை நடைமுறையில் உள்ளது. பழங்காலத்தில் நடைபெற்ற இந்த கலவியை சிற்பங்களும், ஓவியங்களும் பதிவு செய்துள்ளன. தற்காலத்தில் நடப்பவற்றை மீடியா பதிவு செய்து வருகின்றன. 

ஆடு, மாடு, கழுதையுடன் ஆண்களும், நாய்கள், மீன்கள், பாம்புகளுடன் பெண்களும் கலவியில் ஈடுபட்டு வருகிறார்கள். தன்னுடன் செக்ஸ் வைத்துக்கொண்டவனை நீதிமன்றத்தில் வந்து அடையாளம் காட்டியுள்ளது ஒரு ஆடு. ( நம்ப முடியாது தான் ஆனால் நிஜம் ). இப்படி மிருக இனத்துடன் ‘உறவு’ வைத்துக்கொள்பவர்கள் உலக அளவில் குறைவானர்கள் தான்.

ஓரினச்சேர்க்கையாளர்களாகட்டும், மிருகங்கங்களை புனர்பவர்களாகட்டும் இவர்களை மருத்துவ ரீதியாக குறைபாடு உள்ளவர்கள் என்கிறார்கள். ஒரு பெண் தன்னை ஆணாக மனதில் நினைத்துக்கொண்டு வாழும் போது கலவியில் ஈடுபட ஒரு பெண்ணை தான் தேடுவாள். அதேபோல் தான் ஒரு ஆண், மனதில் தன்னை பெண்ணாக கற்பனை செய்துக்கொண்டாள் அவன் கலவிக்கு ஆண் வேண்டும் தான் என நினைப்பான். இது அவர்களுக்கான ஹார்மோன் குறைபாடு என்கிறார்கள் மனநிலை மருத்துவர்களும், செக்ஸ்லாஜிஸ்டுகளும்.

அதேபோல், விலங்குகளுடன் உறவு கொள்வது என்பது, அந்த விலங்கு எதிர்ப்பு தெரிவிக்காது. எவ்வளவு வேகமாக உறவு கொண்டாலும் அது கத்தவோ, திருப்பி தாக்கவோ தாக்காது. இவர்களது வெறியை அதனோடு தீர்த்துக்கொள்ளலாம் என்பதாலே அதனுடன் ஈடுபடுகிறார்கள். இதனை மருத்துவர்கள் ஜீபிலியா என்கிறார்கள். இதுவும் ஒருவித குறைபாடும், காம வெறியும் தான் காரணம்.

இவைகளை சமூகத்தில் ஏற்றுக்கொள்வதில்லை. அதனால் ஓரினச்சேர்க்கையை அங்கீகரித்து சட்டமாக்குவது என்பது தேவையற்றது. இலை மறை காயாக இருப்பது அப்படியே இருந்துவிட்டு போகட்டும். ஓரினச்சேர்க்கையை எதிர்ப்பவர்களை கிண்டலடிக்கும் புரட்சியவாதிகளே ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்கள். அண்ணன், அப்பா, தம்பி, தாய், தங்கை, அக்கா, அண்ணி, மகள், மருமகள் என நெருக்கமான உறவுக்காரர்களில் யாராவது ஒருவருடன் கலவியில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்கள் விருப்பப்பட்டு கலவியில் ஈடுபடுகிறார்கள் என்பதற்காக அதை சட்டம் போட்டு அங்கீகரித்து விடலாமா?.

2 கருத்துகள்:

 1. //உலகம்மே கொண்டாடும் இந்தியாவின் தேச தந்தை என வர்ணிக்கப்படும் மகாத்மா காந்தியும் ஓரினச்சேர்க்கையாளர் தான்.//

  இதற்கு தங்களிடமுள்ள ஆதாரம் என்ன ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தோழர் கரிகாலன் அவர்களுக்கு, சமீபத்தில் தென்ஆப்ரிக்காவில் ஏலம் விடப்படுவதாக இருந்த காந்தியின் கடிதங்களை இந்திய அரசு 60 மில்லியன் ரூபாய் தந்து வாங்கியுள்ளது. அந்த கடிதங்கள் தென்னாப்பிரிக்காவில் காந்தி வழக்கறிஞராக இருந்தபோது அவரது நெருங்கிய நண்பர் ஜெர்மனியை சேர்ந்த ஹெர்மான் காலென்பெக்குடன் தான் நடத்திய “காதலை“ அந்த கடிதத்தில் விலாவரியாக எழுதப்பட்டுள்ளதாக அறிய வருகிறது. போதுங்களா இன்னும் விளக்கம் தேவையா??????

   நீக்கு