செவ்வாய், ஜூன் 25, 2013

அன்பே அழகானது. – பகுதி – 4.



கார்த்திகை விளம்பர நிறுவனம் என்ற போர்டு தொங்கிய கட்டிடத்துக்குள் மதன் நுழைந்ததும் அந்த அலுவலகத்துக்குள் இருந்தவர்கள் எழுந்து குட்மார்னிங் சார் என்றனர். மதன் அப்படியே நின்று ஒருமுறை திரும்பி வாசல் பக்கம் பார்த்தான், வணக்கம் வைத்தவர்களும் பார்த்தனர். யாரும் தன் பின்னால் இல்லை என்பதை கண்ட மதன் திரும்பி வணக்கம் வைத்தவர்களிடம் எனக்கு தான் வணக்கம் வச்சிங்களா என கேட்க எல்லாரும் சிரித்தனர்.

என்ன புதுசா எழுந்து நின்னு வணக்கம் வைக்கறிங்க என கேட்டபடியே மதன் உள்ளே வந்தான்.

சும்மா தான் சார் என்றாள் மஞ்சு. அருகே பாண்டியன், ரேவதி, கீதா, ஸ்ரீதர் நின்றிருந்தனர்.

மத்தவங்களுக்கு வணக்கம் சொல்ற மாதிரி சொன்னாலே போதும். ஸ்கூல் வாத்தியார்க்கு சொல்றமாதிரி எழுந்து நின்னு சொல்றதெல்லாம் வேணாம். வெளியாளுங்களுக்கு தான் நான் எம்.டி. மத்தப்;படி இங்க வேலை பாக்கற ஏழு பேர்ல நானும் ஒருத்தன் சரியா என கேட்க.

சரி சார் என தலையாட்டினர்கள் சிரித்தபடி.

பிரபு எங்க ?.

உங்க ரூம்ல சார் என்றாள் மஞ்சு.

கதவை திறந்து உள்ளே போனதும் ஃசேரில் அமர்ந்திருந்த பிரபுவிடம் ஒரு எம்.டி வர்றன் எழுந்து நின்னு வணக்கம் வைக்கறதில்லையா?.

செருப்ப கழட்டி தான் வைக்கனும்.

அப்பறம் என்ன மயிருக்கு மத்தவங்கள எழுந்து வணக்கம் வைக்க சொன்ன.

சத்தியம்மா நான் சொல்லலடா.

அப்பறம் என்ன புதுசா எழுந்து வணக்கம் வைக்கறாங்க என சந்தேகமா கேட்டதும்

அதுவா, இரண்டு நாளைக்கு முன்னாடி ஒரு கிளையண்ட் ஆபிஸ்க்கு வந்து பார்த்துயிருக்காரு. நீயும் இல்ல, நானும் இல்லன்னதும் எனக்கு கால் பண்ணாரு. நான் வேகமா ஆபிஸ்க்கு வந்தன். எல்லாரும் உட்கார்ந்தபடி எனக்கு வணக்கம் வச்சத பாத்தவரு இது என்ன ஆபிஸா? இல்ல டீ கடையா? ஒரு மேனேஜர் வர்றார் மரியாதை இல்லாம உட்கார்ந்துக்கிட்டு வணக்கம் வச்சா என்ன அர்த்தம், நீங்க சரியில்ல, உங்க எம்.டி வரட்டும் பேசிக்கறன்னு கோபமா கர்ஜித்தாரு. அத கேட்டு எல்லோரும் மரியாதை ராமன்களா மாறிட்டாங்க.

யார்ரா அந்த ஆபிஸர் ?.

உங்கிட்ட பேசுவாரு அப்ப தெரிஞ்சிக்க என சிரித்தவன் அதெல்லாம் இருக்கட்டும் என்னச்சொல்றான் உன் பையன்.

காலையில ஸ்கூல் போகும்போதே உம்முன்னு போயிருக்கான்.

ஏன்

ஃபைக்ல அழைச்சிம் போய் விடுன்னான், வேலையிருக்குடான்னு சொன்னன் அதான் கோபமா போயிருக்கான்.

மதியம் லஞ்ச்.

வாங்கிம் போய்த்தான் தரனும்.

அதுக்கு தான் நாங்க சொல்றத கேளுடாங்கறோம்.

டேய் சாமி காலையிலயே ஆரம்பிச்சி கடுப்பேத்தாத என்றபடியே கொஞ்சம் எல்லாரையும் உள்ளவரச்சொல்லு. பிரபு எழுந்து போய் தகவல் சொல்ல அடுத்த சில நிமிடங்களில் அக்கவுண்டன்ட் மஞ்சு, சீனியர் டிசைனர் பாண்டியன், டிசைனர்கள் கீதா, ரேவதி, விளம்பர பொறுப்பாளர் ஸ்ரீதர் என அனைவரும் அவன் முன் அமர்ந்திருந்தனர்.

எப்படி நடந்துக்கிட்டு இருக்கு வேலையெல்லாம் ?.

சார் இந்த மாசம் வர வேண்டிய பில் நிறைய பென்டிங் இருக்கு சார் என்றாள் மஞ்சு.

ஸ்ரீதரை பார்த்ததும், காலேஜ், ஸ்கூல் அட்மிஷன் இப்பத்தான் நடக்குது பாஸ். ஏப்ரல், மே, ஜீன் மாசம் பில் எல்லாம் ஜீலைல தான் தருவோம்ன்னு சொல்லிட்டாங்க.

அவுங்க ஜீலையில தந்தா எப்படி நாம ஆபிஸ்ச ரன் பண்றத்து என பிரபு கேட்க ஸ்ரீதர் மவுனமாகவே இருந்தான்.

அடிக்கடி கரண்ட் கட் பண்றதால பேட்டரி பேக்கப் நாலு மணி நேரம் கூட வரமாட்டேன்குது இதனால ஓர்க் நிறைய பென்டிங்ல கிடக்கு. பெரிய யூ.பி.எஸ்சா போட்டா நல்லாயிருக்கும் சார் என்றான் பாண்டியன்.

செய்துடலாம் பாண்டியா.

வேற ஏதாவது என கேட்டும் அனைவரும் அமைதியாக இருந்தனர். சரி நான் அழைச்ச விஷயம் வேற. இப்ப நாம விளம்பரம் டிசைன் செய்து தர்றது, அத பேப்பர்களுக்கு தர்றது, பிரஸ் மீட் அரேஞ்ச் பண்றதுன்னு இருக்கோம். நாம அடுத்த கட்டத்துக்கு போக வேண்டிய நேரம் வந்துடுச்சி. நாம புதுசா டிஸ்ப்ளே விளம்பரம் செய்யலாம்ன்னு ஓரு ஐடியா.

டிஸ்ப்ளே விளம்பரம்ன்னா என்ன சார் என ரேவதி கேட்க அனைவருக்கும் அறிந்துக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் அவர்களது முகத்திலேயே தெரிந்தது.

நகரத்தோட மையத்தல, மக்கள் நடமாட்டம் அதிகமாயிருக்கற பகுதியில இருக்கற பில்டிங்கோட மாடியில பத்துக்கு பத்து அளவுல எல்.இ.டி டிஸ்ப்ளே வச்சி விளம்பரம் ஓடவிடறது. நைட், பகல்ன்னு எல்லா நேரமும் ஓடிக்கிட்டு இருக்கும். சென்னை, மதுரை, கோயம்பத்தூர் பகுதியில வச்சியிருக்காங்க. இதல டெக்ஸ்ட் மட்டும் டிஸ்ப்ளே பண்ற மாதிரியும்மிருக்கு, வீடியோவ ஓடறமாதிரியும் இருக்கு. இப்ப வீடியோ ஓடறமாதிரி வச்சா தான் நல்லாயிருக்கும். நாம யாருக்கும் விளம்பரம் தர தேவையில்ல. நம்மை தேடி விளம்பரம் வரும் எப்படி என சொல்லி நிறுத்தியதும்.

சூப்பர் ஐடியா பாஸ் என குதுகலித்தான் ஸ்ரீதர்.

ஐடியா நல்லாத்தான் இருக்கு வருமானம் வருமா என இழுத்தான் பிரபு.

நல்லா சம்பாதிக்கலாம் சார் என பிரபுவுக்கு பதில் தந்தான் ஸ்ரீதர்.

ஓன் டைம் இன்வஸ்மென்ட். சிஸ்டத்தல ப்ரோகிராம் பண்ணிட்டோம்ன்னா ஆட்டோமேட்டிக்கா விளம்பரம் போய்க்கிட்டு இருக்கும். நமக்கு செலவுன்னு பாத்தா பில்டிங் வாடகையும், ஈ.பி பில்லும் தான் நீங்க ஓ.கேன்னு சொன்னா இறங்கிடலாம் எனச்சொன்னதும் அனைவரும் அமைதியாகவே இருந்தனர். மவுனத்தை கலைத்து என்ன பாண்டியன் ஓ.கேவா இறங்கலாமா என கேட்டதும் 

இறங்கலாம் தான் சார். ஆனா அத பாத்துக்க ஒருத்தர் போய்ட்டா இங்க வேலை அதிகமாயிடும் சார்.

பிரச்சனையில்ல பாண்டியன் யாராவது பசங்கயிருந்தா இரண்டு பேரை பாருங்க வேலைக்கு வச்சிக்கலாம்.

அப்ப ஓ.கே சார்.

அப்படியே டவுன்க்குள்ள எங்கயாவுது நல்ல இடம் கிடைக்குதான்னு பாருங்க.

சரி சார்.

ஒ.கே எல்லாரும் போய் வேலை பாருங்க என்றதும் அனைவரும் எழுந்துச்சென்றனர். கீதா மட்டும் சைலண்டாக எழுந்து சென்றது ஆச்சர்யமாக இருந்தது.

வெளியேற முயன்ற மஞ்சுவை அழைத்து அக்கவுண்ட்ல எவ்வளவு அமௌண்ட் இருக்கும்.

ஒரு லட்சம் இருக்கும் சார்.

ஓ.கே என தலையாட்டியதும் கதவை சாத்திவிட்டு சென்றாள்.

பிரபுவை பார்த்து மேனேஜர் சார் என அழைத்ததும்

சொல்லுடா என்றான் கோபமான குரலில்.

என்னடா அதுக்குள்ள கோபம்.

புதுசா ஒரு ஓர்க் ஸ்டார்ட் பண்றதுக்கு முன்னாடி எங்கிட்ட சொல்றதில்லயா என கேட்டான் அதே கோபமான குரலில்.

காலையில மதுரை கள்ளழகர் திருவிழா டிவியில ஓடிக்கிட்டு இருந்தது. அப்பத்தான் மதுரையில ஒரு இடத்தல டிஸ்ப்ளே விளம்பரம் ஓடறத பாத்தான். நாமளும் பண்ணலாம்மேன்னு ஐடியா வந்ததும் சென்னையில இருக்கற ஒருத்தர்க்கு போன் பண்ணி தகவல் கேட்டன் அவர் அவருக்கு தெரிஞ்சத சொன்னாரு. அதான் பண்ணா நல்லாயிருக்கும்மான்னு ஐடியா கேட்டன். நீ என்னவோ வேலைய ஆரம்பிச்சிட்டு ஓடிக்கிட்டு இருக்கறமாதிரி பேசற என்றதும் கொஞ்சம் சாந்தமானவனிடம் நெட்ல அதப்பத்தின தகவல்கள தேடி எடுத்து வை. நான் போய் யூ.பி.எஸ் பத்தி விசாரிச்சிட்டு வர்றன்.

டிசைன் வேலையும் பாக்கனும், இதயும் பாக்கனும்ன்னா என்னடா அர்த்தம்.

சார் நீங்க மேனேஜர் மட்டும்மில்ல பாட்னரும்கிறத ஞாபகத்தல வச்சிக்கிட்டு வேலையப்பாருங்க எனச்சொல்லிவிட்டு வெளியே வந்து கிளம்பினேன்.

யூ.பி.எஸ் மாடல்கள், ரேட், பேட்டரி, வாரண்டி பற்றி விசாரித்துவிட்டு, சில முக்கிய கிளையன்டுகளை பார்த்துவிட்டு அலுவலகம் வந்தபோது மதியம் மூன்றாகி இருந்தது. பசி வயிற்றை கிள்ள அப்போது தான் நினைவுக்கு வந்தான் ரஞ்சித். ஆஹா வேலை டென்ஷன்ல மறந்து போயாச்சே என நெஞ்சு பரபரக்க அலுவலகத்தில் இருந்து பள்ளியை நோக்கி வண்டியை விரட்டினேன். பள்ளி கேட் முன் வண்டியை நிறுத்தியதும் ஸ்கூல் விடற டைம் சார் வண்டிய ஓரம்மா விடுங்க என்றார் வாட்ச்மேன். அவர் சொல்லும் போதே மணியடித்தது பிள்ளைகள் ஓடிவர காத்திருந்த அவர்களது அம்மாக்களோடு ஒவ்வொரு பிள்ளைகளும் சென்றது.

ரஞ்சித்தை கண்கள் தேடியது. நெஞ்சு படபடவென அடித்துக்கொள்ள சார் என்ற குரல் காதருகே கேட்க திரும்பினேன். ஆட்டோ டிரைவர் மணி நின்றிருந்தவர், என்ன சார் நீங்களே வந்துயிருக்கிங்க.

இல்ல மணிண்ணே. காலையில லேட்டானதால மதியம் லஞ்ச் வாங்கி எடுத்துக்கிட்டு வர்றன்னு சொல்லியிருந்தன், வேலை டென்சன்ல மறந்துட்டன். இப்பத்தான் ஞாபகம் வந்தது. அதான் என இழுத்ததும் என்ன சார் இப்படி பண்ணிட்டிங்க. எங்கிட்ட சொல்லியிருந்தா நான் வாங்கி வந்து தந்துருப்பனே என்றார்.

பதில் சொல்ல முடியாமல் மீண்டும் பிள்ளைகள் வருவதை பார்க்க தொடங்கினேன். ஒரு பையனோடு ரஞ்சித் சிரித்து பேசிக்கொண்டு வருவது காண முடிந்தது. தூரத்தில் இருந்Nது என்னை பார்த்தவன் கை அசைத்தான். நானும் பதிலுக்கு கை அசைத்ததும் ஓடிவந்தான். தன்னுடன் வந்தவனை காட்டி டாடி நானும், இவனும் ஓரே க்ளாஸ். வினய்ன்னு பேரு என்றான்.

ஹாய் அங்கிள் என்றவன் ஆட்டோ நிக்குது அங்கிள் நான் கிளம்பறன். ரஞ்சித்க்கு டாட்டா காட்டிவிட்டு சென்றான்.

ரஞ்சித் என் முகத்தை பார்க்க நான் அவனிடம், ஸாரிடா. ஓர்க் டென்ஷன்ல மதியம் லஞ்ச்சோட வர்றன்னு சொன்னத மறந்துட்டன். நீயாவது எனக்கு ஒரு ஃபோன் பண்ணியிருக்கலாம்மில்ல.

என்மேல உனக்கு அக்கறையேயில்ல டாடி என்றான் மெல்லிய குரலில்.

பக்கென்றது. என்னடா இப்படி சொல்ற.

எதுவும் பேசாமல் தரையை பார்த்தபடி நின்றான்.

நான் குற்றணர்ச்சியுடன் வண்டியை ஸ்டார்ட் செய்து அவனை தூக்கி உட்கார வைத்துக்கொண்டு ஹோட்டலை நோக்கி சென்றேன். ஹோட்டலில் போய் அமர்ந்ததும் இட்லி தாங்க என்றதும் இட்லி வந்தது சாப்பிட்டுக்கொண்டே அடுத்து என்ன வேணும் என கேட்டதும் சோலாபூரி என்றான். அவனுக்கு சோலாபூரி, நான் ஒரு ஆனியன் ஊத்தப்பம் சாப்பிட்டுவிட்டு ஒரு ஐஸ்கிரிம் வாங்கி ரஞ்சித்திடம் தந்துவிட்டு அவனை அழைத்துக்கொண்டு ஆபிஸ் வந்தேன். இருவரும் சைலண்டாக வருவதை பார்த்து மஞ்சு அதியமாக பார்த்தாள். அறைக்குள் இருந்த பிரபு ரஞ்சித்தை கண்டதும் எனக்கு எங்கடா ஐஸ்கிரிம் ?.

ஒன்னு தான் அங்கிள் வாங்கி தந்தாரு.
இணையத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஓவியம். இதனை வரைந்தவர்க்கு நன்றி.


பிரபு என் மெயில் ஓப்பன் பண்ணி யூ.பி.எஸ்க்கான டீட்டய்ல் இருக்கு அத பிரிண்ட் அவுட் எடுத்துக்கிட்டு வா என்றதும் அவன் நீயும் வா ரஞ்சித் என்றபடி அவனையும் அழைத்துக்கொண்டு பிரிண்டர் அறைக்கு சென்றான்.

அவன் வெளியே சென்ற அடுத்த நிமிடம் கதவை திறந்துக்கொண்டு தயங்கி தயங்கி கீதா உள்ளே வந்தாள்.

என்ன கீதா?.

தயக்கத்துடனே ஒரு ஹெல்ப் சார்.

என்ன ?.

அம்மாவுக்கு உடம்பு சரியில்ல. ஆஸ்பிட்டல்ல சேர்த்துயிருக்கோம்.

சொல்லவேயில்ல. என்னாச்சி ?

கால்வலியால இரண்டு மாசம்மா கஸ்டப்பட்டாங்க. இரண்டு நாளைக்கு முன்னாடி நடக்க முடியாம போனதால சென்னைக்கு அழைச்சிம் போய் ஆஸ்பிட்டல்ல சேர்த்தோம். ஆப்ரேஷன் பண்ணனம்ன்னு சொல்லிட்டாங்க. ஆப்ரேஷன்க்கு பணம் தேவைப்படுது சார்.

எவ்ளோ ?

முப்பதாயிரம் சார்.

எப்போ வேணும்.

நாளைக்கு தந்தா நல்லாயிருக்கும் சார்.

அப்போது பிரிண்ட் எடுக்கப்பட்ட பேப்பர்களோடு பிரபு உள்ளே வந்தவனிடம் கீதாவோட அம்மாவ ஆஸ்பிட்டல்ல அட்மிட் செய்துயிருக்காங்கலாம். ஆப்ரேஷன்க்கு முப்பதாயிரம் தேவையாம் ?.

பிரபு கோபமாக கீதா பக்கம் திரும்பி ஏன் இப்படி பொய் சொல்ற என்றான் கோபமாக.

தொடரும்………………

திங்கள், ஜூன் 24, 2013

16 வயது முஸ்லிம் பெண்கள் திருமணத்துக்கு கேரளா அனுமதி.



16 வயதுக்குட்பட்ட இஸ்லாமிய பெண்கள் திருமணம் செய்துக்கொண்டு பதிவு செய்ய விண்ணப்பித்தால் ஏற்றுக்கொள்ளுங்கள் என கேரளா உள்ளாட்சி துறையின் முதன்மை செயலாளர் ஜேம்ஸ் வர்கீஸ் ஒரு உத்தரவை உள்ளாட்சி நிர்வாகங்களுக்கு அனுப்பியுள்ளார். இது அவரின் தனிப்பட்ட உத்தரவாக இருக்க முடியாது கேரளா அரசாங்கத்தின் உத்தரவாக தான் இதை கருத முடியும்.

எத்தனை அநியாயமான உத்தரவை கேரளா அரசாங்கம் செய்துள்ளது. 18 வயது என்பதே குழந்தை பெற்றுக்கொள்ளும் வயதல்ல என உலக சுகாதார நிறுவனம், மருத்துவ ஆய்வு அறிக்கைகள் குறிப்பிடுகின்றன. அதனால் திருமண வயதை 18 வயதில் இருந்து 20 வயதுக்கு உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கைகள் எழும்பி வரும் நிலையில் 16 வயதாக குறைத்திருப்பது அபத்தம்.

அதுவும் இஸ்லாமிய பெண்களுக்கு என குறிப்பிட்டுள்ளார்கள். இதை பார்த்து இந்து, கிரஸ்த்துவ, பிற இயக்கங்கள் எங்கள் மதத்திற்க்கும் இந்த உத்தரவு பொருந்தும் வகையில் திருத்தம் செய்ய வேண்டும் என கேட்டாள் செய்வார்களா ?.

இஸ்லாமிய இயக்கங்கள் கேட்டுக்கொண்டதால் இப்படி செய்தோம் என கேரளா சொல்லலாம். இஸ்லாமிய இயக்கங்கள் அங்கு மட்டுமல்ல தமிழகம், ஆந்திரா, மகாராஷ்ட்டிரா, டெல்லி என பல மாநிலங்களில் வாழும் இஸ்லாமிய பிற்போக்குவாதிகள் எங்கள் மத கோட்பாடுகளில் தலையிடாதீர்கள் என கேட்கிறார்கள். அவர்கள் சிறுபான்மையினம் என்பதால் அவர்கள் கேட்பதற்க்கு தலையாட்டிவிட வேண்டுமா என்ன ?.

இந்தியாவில் பன்முக கலாச்சாரம் கொண்ட மக்கள் வசித்து வருகிறார்கள். ஒவ்வொரு மதத்துக்கும் ஒவ்வொரு விதமான சடங்குகள் உள்ளன. 30 ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்தியாவில் குழந்தை திருமணங்கள் சர்வ சாதாரணம். அதிகளவில் இந்துக்கள் செய்தனர். அதற்கடுத்து இஸ்லாமியர்கள் செய்தனர். பெண்கள் நலனை கணக்கில் கொண்டு சட்டங்கள் போடப்பட்டு பெண்ணுக்கு திருமண வயது 18 என்றும், ஆணுக்கு 21 என்றும் வரையறுக்கப்பட்டன.

இஸ்லாமியர் சமூக பெண்கள் மட்டும் 16 வயதில் செய்து வைக்கப்படும் திருமணங்கள் பதிவு செய்ய அனுமதி வழக்கினால் மற்ற சமூகத்தவரும் கேட்பார்கள். தர மறுக்கும் போது வீணான சர்ச்சைகள் தான் வரும்.

இந்த உத்தரவை கேரளா திரும்ப பெற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இல்லையேல் இதனை முன்னுதாரணமாக காட்டி பிற மாநிலங்களிலும் உத்தரவை போடச்சொல்லுவார்கள் இஸ்லாமிய பிற்போக்குவாதிகள்.

இந்த உத்தரவு இஸ்லாமிய பிற்போக்கு ஆண்களிடம் அடிமைப்பட்டு கிடக்கும் இஸ்லாமிய பெண் சமூகத்தை இன்னும் அடிமை படுத்திவிடும். ஏற்கனவே இஸ்லாமிய மதத்தில் பெண்களை படிக்க அனுப்புவதில்லை, திருமணமும் அவர்கள் விரும்பியபடி நடப்பதில்லை, அவர்கள் உடலுக்கு, முகத்துக்கு மட்டும் முகமுடி போடவில்லை. அவர்கள் வாழ்க்கைக்கே இஸ்லாமிய பிற்போக்குவாதிகள் முக்காடு போட்டு வைத்துள்ளார்கள். அவர்களை இன்னும் இருட்டில் தள்ளவே இந்த உத்தரவு பயன்படும் என்பதை கேரளா உணர்ந்து திருந்தும்மா ?.

வியாழன், ஜூன் 20, 2013

லாலிபப் சாப்பிடத்தான் லாயக்கு ‘நடுநிலைவாதிகள்’ ?.



தமிழகத்தில் காலியாகும் ஆறு மாநிலங்களவை இடத்துக்கு ஏழு பேர் போட்டியிடுகிறார்கள். அதில் ஆளும் கட்சியான அதிமுக 4 இடங்களை பெற்று விடும், அதிமுக ஆதரவில் நிற்கும் சி.பி.ஐ டி.ராஜா வெற்றி பெற்றுவிடுவார். மீதியுள்ள ஒருயிடத்துக்கு தான் போட்டி. அந்த ஒருயிடத்துக்கு திமுக சார்பில் கனிமொழியும், தேமுதிக சார்பில் இளங்கோவனும் போட்டியிடுகிறார்கள். வெற்றி பெற இரண்டு கட்சிகளுக்கும்மே தனிப்பட்ட பலம்மில்லை. திமுகவிடம் 22 எம்.எல்.ஏக்கள் உள்ளார்கள். தேமுதிகவிடம் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் போக மீதி 22 எம்.எல்.ஏக்கள் உள்ளார்கள். வெற்றி பெற தேவை 34. இந்த இடத்தில் தான் சிறு கட்சிகளான காங்கிரஸ், பாமக, மமக, புத போன்ற கட்சி எம்.எல்.ஏக்களின் வாக்கு வலிமை பெறுகின்றன. 

இரண்டு கட்சிகளும் தங்களுக்கு தேவையான பலத்தை பெற ஆதரவை திரட்டுகிறார்கள். இதில் என்ன தவறுயிருக்கிறது. இதனையெல்லாம் ஏன் நடுநிலை முகமுடி போட்டவர்கள் மாய்ந்து மாய்ந்து விமர்சிக்கிறார்கள் என தெரியவில்லை. இவர்கள் விமர்சனம் திமுகவை நோக்கியே இருக்கிறது. பணம் தந்து வெற்றி பெற போகிறார்கள் என விமர்சனம் செய்கிறார்கள். தொலைக்காட்சி ஒன்றில் விவாதம் பார்க்க நேரிட்டது. மாற்றி மாற்றி கூட்டணி வைக்கிறார்களே இவர்களுக்கு கொள்கையே கிடையாதா என கேட்கிறார் விவாதத்தை நடத்தியவர். தேவையற்ற கேள்வியிது. 

எம்.எல்.ஏ, எம்.பி, கவுன்சிலர் தேர்தலில் நிற்பவன் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக தான் வாக்காளர்களிடம் வாக்கு கேட்டு வருகிறான், பணத்தை செலவு செய்கிறான், வாக்களிக்க விரும்புபவன் கேட்பதை, கேட்காததை செய்து தருகிறான். அதேதான் மாநிலங்களவை தேர்தலிலும் நடக்கிறது. இங்கு வாக்களிக்க போகிறவர்கள் எம்.எல்.ஏக்கள். அந்த எம்.எல்.ஏக்கள் கட்சி என்ன சொல்கிறதோ அதைத்தான் செய்ய போகிறார்கள். 

வாக்கு வைத்திருக்கும் கட்சிகளை நோக்கி தேர்தலில் நின்றுள்ள திமுக, தேமுதிக என்ற இரண்டு கட்சிகளும் போகின்றன. சில கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இதைப்பார்த்து திமுக பணத்தால் வாக்குகளை வாங்குகிறது என்கிறார்கள். இது அரசியல் தெரியாத அடிமுட்டாள் செல்லும் விமர்சனம். திமுக என்ற கட்சி ஐந்து முறை தமிழகத்தை ஆண்ட கட்சி, தமிழகத்தில் முதல்வர் நாற்காலி ரேசில் உள்ள இரண்டு கட்சியில் அதுவும் ஒன்று. மத்திய கூட்டணி ஆட்சிகளில் பதவியில் இருந்த கட்சி. தமிழகத்தில் அதிமுகவுக்கு அடுத்து வலிமையான வாக்கு வங்கியுள்ள கட்சி. தமிழகத்தில் எந்த கட்சி தோன்றினாலும், ஏற்கனவே இருக்கும் கட்சியாக இருந்தாலும் திமுக, அதிமுக என இந்த இரண்டு கட்சிகளில் ஏதாவது ஒன்றோடு கூட்டணி வைத்தால் மட்டுமே ஒரு எம்.எல்.ஏ, எம்.பியை பெற முடியும். இதுதான் எதார்த்தம். 


எங்களுக்கு வாக்களியுங்கள் என திமுக, தேமுதிக என இரண்டு கட்சிகளும் தங்களது பிரதிநிதிகளை அனுப்பி கேட்கின்றனர். திமுகவா, தேமுதிகவா என்ற கேள்வி எழும் போது லாலி பப் சாப்பிடும் குழந்தைகளுக்கும் தெரியும் சின்ன கட்சிகள் திமுகவையே தேர்வு செய்யும் என்று. அதன்படியே திமுகவுக்கு ஆதரவு தருகிறார்கள். இதில் என்ன குற்றம் இருக்கிறது. 

கனிமொழிக்காக வளைந்து கொடுக்கிறார், தன்மானம்மில்லை, சுயமரியாதையில்லை என மதிமுகவினர், நடுநிலை முகமுடி போட்டவர்கள் திருச்சி.சிவாவுக்கோ அல்லது டி.கே.எஸ். இளங்கோவன்க்கோ ஏன் சீட் தரல என கேட்கின்றனர். அடுத்தவன் வீட்ட ஏன் எட்டி பாக்கறிங்க. அது அவர்கள் கட்சி விவகாரம். யாரை தேர்தலில் நிறுத்த வேண்டும் என்பது அவர்கள் எடுக்கும் முடிவு. இதை எப்படி பார்வையாளராக உள்ள நாம் கேள்வி கேட்க முடியும். மகளுக்கு தருவது, மகனுக்கு தருவது, தெருவில் போறவனை அழைத்து வந்து தருவது என்பது கட்சி தலைமை எடுக்கும் முடிவு. இன்னார்க்கு தருவது எனக்கு புடிக்கவில்லை என்றால் அக்கட்சி தொண்டர்கள் தான் கேள்வி கேட்க முடியும். 

2ஜீ ஊழல் செய்தவருக்கு சீட் என கிண்டலோடு கேட்கிறிர்கள். ஊழல் வழக்குகள் அதிகம்முள்ள ஜெவை மக்கள் ஏற்றுக்கொண்டு இரண்டு முறை முதல்வராக்கியுள்ளனர். அப்படியிருக்கும் போது கனிமொழியை அவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்ன நிச்சயம். பல மாநிலங்களில் அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து பெரும் கார்ப்பரேட் நிறுவன முதலாளிகளை மாநிலங்களவைக்கு அனுப்பி வைத்த, அனுப்பி வைக்கும் நிகழ்வுகள் நடந்து வருகின்றன. அதையெல்லாம் கேள்வி கேட்க தெம்பில்லாத, முதுகெலும்புயில்லாதவர்கள் திமுகவை பிராண்டிக்கொண்டு இருக்கிறார்கள். 

அன்பே அழகானது. – பகுதி – 3.



கதைக்குள் போகும் ..............

இந்த தொடர் வல்லமை இணைய தளத்தில் வெளியிடுவதால். அதில் வெளிவந்த பின் ஒரு வாரம் அல்லது அடுத்த பாகம் வெளியிட்டபின்பே இனி எனது பக்கமான இதில் வெளியிடப்படும் என தெரிவித்துக்கொள்கிறேன். 

தொடர்கிறது............

கிச்சனை க்ளீன் செய்துக்கொண்டு இருந்தபோது காலிங்பெல் அடிக்கும் சத்தம் கேட்டது. வெளியே வந்து கதவை திறந்தபோது வணக்கம் சார் என்றார் 45 வயது மதிக்கதக்க ஒருவர்.

சொல்லுங்க.

எம் பேரு மணி சார். ஆட்டோ ஓட்டறன். உங்களை பாக்கச்சொல்லி பாண்டியன் சார் சொல்லி அனுப்பனாரு.

அப்படியா உள்ள வாங்க.

இருக்கட்டும் சார்.

ஓன்னும்மில்ல பையனை புது ஸ்கூல்ல சேர்த்துயிருக்கன். என்னால அவனை தினமும் அழைச்சிம் போக முடியாது. அதனால தான் ஆட்டோவுல அனுப்பலாம்ன்னு முடிவு பண்ணி பாண்டியன்கிட்ட சொல்லி வச்சியிருந்தன்.

உங்களப்பத்தி பாண்டியன் சார் சொன்னாரு சார். பையனை பத்திரமா அழைச்சிம் போய் அழைச்சி வருவன், நீங்க பயப்பட தேவையில்ல. பாண்டியன் சார் பொண்ணயும் நான் தான் ஸ்கூலுக்கு அழைச்சிம் போறன்.

ஓஹோ.

இந்த ஏரியாவுக்கு எத்தனை மணிக்கு வருவீங்க.

8 மணிக்குள்ள வந்துடுவன் சார்.

சரிங்க. காலையில வந்து அழைச்சிம் போயிடுங்க. சாயந்தரம் ஆபிஸ்சான்ட கொண்டு வந்து விட்டுடுடனும்.

சரி சார்.

மாசத்துக்கு எவ்ளோ?.

500 ரூபா சார்.

ஒகே.

திங்கட்கிழமை ஸ்கூல் ஸ்டார்ட் பண்றாங்க.

தெரியும் சார்.

இருங்க பையனை காட்டறன் எனச்சொல்லிவிட்டு உள்பக்கம் திரும்பி ரஞ்சித் கொஞ்சம் வெளியில வா.

என்னப்பா என கேட்டபடி வந்தான்.

இவன் தான். ஆறாவது சேர்த்துயிருக்கன் பேரு ரஞ்சித்.

யாருப்பா இவரு ?.

இனிமே இந்த அங்கிள் தான் உன்னை தினமும் அவரோட ஆட்டோவுல ஸ்கூல் அழைச்சிம் போய் அழைச்சி வந்து விடப்போறார், அவர் பேரு மணி எனச்சொல்லிவிட்டு நீங்க போய்ட்டு வாங்கண்ணே என்றதும் கிளம்பினார்.

அப்போ என்னை நீ ஸ்கூல் அழைச்சிம் போகமாட்டியாப்பா என வருத்தமாகவே கேட்டான்.

நைட்டே சொன்னனேடா. உன்ன அனுப்பிட்டு காலையில வீட்ல சின்ன சின்ன வேலை பாத்துட்டு அதுக்கப்பறம் கிளம்பனா சரியா இருக்கும். உன் கூடவே கிளம்பிட்டா இருக்கற வேலை பாக்க முடியாது அதனாலத்தான். தாத்தா பாட்டி வந்ததும் நானே உன்ன அழைச்சிம் போறன் என்றபோதும் அமைதியாகவே சோபாவில் அமர்ந்திருந்தான்.

அவனது வருத்தத்தை குறைக்க ஒன்னு செய்யறன் ஈவ்னிங் உன்ன நான் வந்து பிக்கப் பண்ணிக்கறன்.

வேணாம் நான் ஆட்டோவுலயே வந்துடறன் என அவன் சொல்லும் போது என் மனம் பாரமாகத்தான் இருந்தது. அவன் அம்மா இருந்திருந்தா பிரச்சனையில்ல என்னப்பண்றத்து என பெருமூச்சு விட்டப்படி மீண்டும் கிச்சன்க்குள் புகுந்தேன்.

மதியத்துக்கு லஞ்ச் செய்துக்கொண்டு இருந்தபோது செல்போன் ரிங் ஆகும் சத்தம் கேட்டது. யாருன்னு பாரு ரஞ்சித்.

தாத்தாப்பா என குரல் தந்தான். கை கழுவிவிட்டு வெளியே வரும்போது ஆன் பண்ணி பேசிக்கொண்டு இருந்தான்.

நல்லாயிருக்கன் தாத்தா. எப்ப ஊருக்கு வர்ற தாத்தா ?.

…………

சீக்கிரம் வா தாத்தா.

………….

என்னை அப்பா புது ஸ்கூல்ல சேர்த்துயிருக்காரு, புது டிரஸ் எடுத்து தந்தாரு. இன்னும் டூ டேஸ்ல ஸ்கூல் தாத்தா.

…………..

அப்பா இந்தா தாத்தா உங்கிட்ட பேசனுமாம் என்றபடி செல்போனை தந்தான்.

ஹலோ என்றதும்

எப்படிப்பா இருக்கா ?

நல்லாயிருக்கன்.

அவனை எதுக்கு வேற ஸ்கூல் மாத்தன ?

அந்த ஸ்கூல் நல்லாயிருக்குன்னு சொன்னாங    ;க அதான்.

நீங்க எப்ப ஊருக்கு வர்றிங்க ?.

நான் சொல்றத நீ செய் அதுக்கப்பறம் ஊருக்கு வர்றன்.

அதவிட்டுட்டு வேற ஏதாவது பேசுங்க. ஏம்ப்பா நானும் இரண்டு வருஷமா சொல்றன் நீ கேட்கமாட்டன்னா என்னப்பா அர்த்தம்.

அம்மாக்கிட்ட போனை தாங்க.

பெருமூச் விட்டவர் இந்தாடீ உங்கிட்ட பேசனுமாம்.

என்னப்பா எப்படியிருக்கற ?.

நான் நல்லாயிருக்கறன் நீங்க எப்படிம்மா இருக்கிங்க ?.

எங்கப்பா இந்த கால் மூட்டு வலி தான் அதிகமாயிருக்கு. உட்காந்தா எழுந்திருக்க முடியல, நடக்க முடியல.

டாக்டர்க்கிட்ட காட்ட வேண்டியதுதானே?

போனன் தைலம் மாதிரி ஒன்னு தந்தாங்க ஒன்னும் சரியாகல.

இங்கவாம்மா டாக்டர்கிட்ட காட்டி சரிப்பண்ணிடலாம்.

புள்ள தனியா பேரனை வச்சிக்கிட்டு கஸ்டப்படறான் போய் கூட இருக்கலாம்ன்னு சொன்னதுக்கு என் பேச்ச மதிக்காத அவன் வீட்டுக்கு நான் வரல என்னைக்கு நான் சொல்றத கேட்கறானோ அன்னைக்கு வர்றன்கிறார் உங்கப்பா. நான் என்னத்த பண்றத்து என சலித்துக்கொண்டபடியே டேய் எம்பேரன் கண்ணுலயே நிக்கறான் கொஞ்சம் கூட்டியாந்து கண்ணுல காட்டிட்டுத்தான் போயேண்டா. அவரும் ராத்திரியில எம் பேரன் என்ன பண்றானோ, ஏது பண்றானோன்னு புலம்பறாரு.

வேலை அதிகமாயிருக்கும்மா.

ஒரு மணி நேரத்தல வீட்டுக்கு வந்துடலாம் இதுக்கு போய் நேரம் இல்லைங்கறயேடா.

வர்றதுக்கு பாக்கறன். நீ உடம்ப பாத்துக்கம்மா.

அது கிடக்கட்டும் அவன்கிட்ட போனை தா என்றதும் ரஞ்சித் இந்த பாட்டி பேசனுமாம் என்றதும் ஓடி வந்து செல்போனை வாங்கிக்கொண்டான். நான் கிச்சனை நோக்கி நடந்தேன்.


நல்லாயிருக்கன் பாட்டி.

பூரி சாப்பிட்டன். அப்பா சுட்டு தந்தாரு. எப்ப ஊருக்கு வர்றிங்க என பேசிக்கொண்டு இருந்தான். கொஞ்ச நேரம் பொருத்து கிச்சன்க்குள் வந்து அப்பா நின்;றான்.

என்னடா சொன்னாங்க பாட்டி.

ஊருக்கு வரச்சொன்னாங்க என்றவன் சற்று கேப் விட்டு போகலாமாப்பா.

உம்.

எப்போ ?

அடுத்த சன்டே போகலாம் என்றதும் குதுகலமாக ஓடினான்.

தொடரும்……………

புதன், ஜூன் 19, 2013

மோடி….. தத்தளிக்கும் பி.ஜே.பி என்ற கப்பல்.



தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தலைமை பாரதிய ஜனதா கட்சி. அதன் பிரதான கூட்டாளி ஐக்கிய ஐனதா தளம். கூட்டணியின் ஒருங்கிணைப்பார் ஐக்கிய ஐனதா தளம் கட்சி தலைவர் சரத்யாதவ். இந்த இரு கட்சிகளுக்கும் இடையே சுமார் 17 ஆண்டுகால கூட்டணி பந்தம் இருந்து வந்தது. கடந்த வாரம் ஐக்கிய ஐனதா தளம் கூட்டணியில் இருந்து வெளியேறி 17 ஆண்டுகால கூட்டணிக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டது. பீகாரில் இரண்டு கட்சிகளும் தான் கூட்டணியாக ஆட்சி அமைத்திருந்தன. கூட்டணியில் இருந்து விலகிய ஐக்கிய ஜனதா தள கட்சியின் பீகார் முதல்வர் நிதிஷ்குமார், பி.ஜே.பியின் 11 அமைச்சர்களை நீக்க கவர்னரிடம் கடிதம் தந்துள்ளார். கவர்னர் பெரும்பான்மையை நிருபிக்கச்சொல்ல 19ந்தேதி நம்பிக்கை வாக்கெடுப்பில் சுயேட்சை எம்.எல்.ஏக்கள் நான்கு பேரின் ஆதரவோடு நிதிஷ் பெரும்பான்மையை நிருபித்துவிட்டார். காங்கிரஸ் துணை நின்று தன் ஐக்கிய ஜனதா தளத்துக்கு தன் ஆதரவை தந்துள்ளது.

17 ஆண்டு கால கூட்டணியை உடைத்துக்கொண்டு போக காரணம் நரேந்திரமோடி என குற்றம்சாட்டுகிறது ஜனதா தளம். 2014 நாடாளமன்ற தேர்தலை நரேந்திரமோடியை பிரதமர் வேட்பாளராக நிறுத்தி தேர்தலை சந்திக்க திட்டமிட்டது பி.ஜே.பி. கூட்டணி கட்சிகளுக்கும் சொன்னது. இதற்கு ஐக்கிய ஐனதா தளம் கடும் எதிர்ப்பு காட்டியதோடு கூட்டணியில் இருந்து விலகுவோம் என எச்சரித்தது. ஆர்.எஸ்.எஸ்., வீ.எச்.பி போன்ற பரிவார அமைப்புகள் நரேந்திரமோடி தான் என்பதில் உறுதியாக இருந்தன.

ஐக்கிய ஜனதா தளம் சிறுபான்மையின வாக்குகளால் தான் இரண்டாவது முறையாக பீகாரில் வெற்றி பெற்றுள்ளது. மோடி பிரதமர் என பிரச்சாரம் செய்தால் எம்.பி தேர்தலில் தோல்வி தான் வரும் என எண்ணுகிறார் நித்திஷ். அதனால் மோடியை எதிர்க்கிறார். இது வாக்கு பயமே தவிர மோடியை புறக்கணிக்க வேண்டும் என்ற எண்ணம்மில்லை. மோடி சிறந்த நிர்வாகி பிரதமராக அனைத்து தகுதிகளும் உள்ளது என கோத்ரா கலவரத்துக்கு பின் திருவாய் மலர்ந்தவர் தான் நித்திஷ்.

இதனை உன்னிப்பாக கவனித்துக்கொண்டு இருந்தது காங்கிரஸ். மோடியை முன்னிலைப்படுத்தி பாரதிய ஜனதா கட்சி தேர்தலை சந்தித்தால் வெற்றி என்பது எட்டாக்கனி என்பது காங்கிரஸ் எடுத்த சர்வேயில் வந்த தகவல். அதனால் பி.ஜே.பி தலைமையில் வலிமையான கூட்டணி அமையால் ஒரு புறம் சதுரங்க ஆட்டத்தை தொடங்கியது காங்கிரஸ். மற்றொரு புறம் மோடி இந்துத்துவாவாதி, சிறுபான்மை மக்கள் இந்தியாவில் வாழவே முடியாது என்ற பிரச்சாரத்தை செய்ய தொடங்கியது. இருந்தும் காங்கிரஸ் மீதான ‘அனைத்து மட்ட எதிர்ப்புகள்’ மோடிக்கு ஆதரவாக வேலை செய்கின்றன. மோடிக்கு உட்கட்சியிலும் எதிர்ப்புகள் இருப்பதை கண்டன. மோடியை முன்னிறுத்தும் காவி தலைமையும் இவைகளை உன்னிப்பாக கவனித்தன.

மோடியை பிரதமர் வேட்பாளர் என அறிவித்தால் தானே பிரச்சனை என கடந்த வாரம் பாரதிய ஜனதா கட்சி கோவாவில் நடத்திய நிர்வாக குழு கூட்டத்திற்க்கு பின் நாடாளமன்ற பிரச்சாரக்குழு தலைவராக மோடியை அறிவித்தது. எதிர்பார்த்த படியே பிரச்சனைகள் வந்தன. முதலில் பிரதமர் கனவில் இருந்த முன்னால் துணை பிரதமர் அத்வானி எதிர்ப்பு காட்டி தன் பதவிகளை ராஜினாமா செய்தார். ஆர்.எஸ்.எஸ் முதல் பல்வேறு பரிவாரா அமைப்புகள் சமாதானம் பேசி ராஜினாமாவை வாபஸ் பெற வைத்து ஒய்ந்த நிலையில் ஐக்கிய ஜனதா தளம் கூட்டணியை முறித்துக்கொண்டு போய்விட்டது.

கூட்டணியை முறித்துக்கொள்ளும் முன் காங்கிரஸ்சோடு மறைமுக பேச்சை துவங்கியிருந்தது ஐக்கிய ஜனதா தளம். பீகார்க்கு சிறப்பு நிதி தந்து கூட்டணிக்கு கை குலுக்கிய காங்கிரஸ் பி.ஜே.பி ஆட்சிக்கான ஆதரவை வாபஸ் பெற்றால் காங்கிரஸ் ஆதரவு தரும் என நம்பிக்கை தந்தது. பி.ஜே.பியை விட காங்கிரஸ் தான் சேப் என தாவ நேரம் பார்த்தது ஜனதா தளம். மோடி நியமன அறிவிப்பு வெளியே வந்ததும் அதையே காரணம் காட்டி கூட்டணியை விட்டு வெளியேறிவிட்டது. ஜனதா தளம் பற்றி பி.ஜே.பி கவலைப்படவில்லை. மோடி விவகாரத்தில் இனி பேச ஒன்றும்மில்லை என உறுதியாக சொல்லிவிட்டது.

9 ஆண்டுகாலமாக இந்திய ஒன்றியத்தை ஆளும் காங்கிரஸ் அரசாங்கம் விலையேற்றம், ஊழல் போன்றவற்றால் பெரும் எதிர்ப்பை சம்பாதித்து வைத்துள்ளது. மக்கள் மனதில் கோபமாக உள்ளது. இதனை பி.ஜே.பி போன்ற எதிர்கட்சிகள் பயன்படுத்திக்கொண்டு வலிமை பெறக்கூடாது என்பதில் கவனமாக உள்ளது. ஓவ்வொரு மாநிலத்திலும் வலிமையாக உள்ள கட்சிகளை பி.ஜே.பி தலைமையில் ஒன்றிணையாமல் பார்த்துக்கொள்கிறது. என்னுடன் கூட்டணிக்கு வா அல்லது தனித்து நில் என்ற திட்டத்தை செயல்படுத்துகிறது. அதோடு, மூன்றாவது அணி அமைக்க காங்கிரஸ் மறைமுகமாக பணியாற்றுகிறது.


மூண்றாவது அணி அமைக்கும் முயற்சியில், சந்திரபாபு நாயுடு, கம்யூனிஸ்ட்டுகள், முலாயம் சிங், ஜெ போன்றோர் உள்ளனர். இதன் மூலம் அதிருப்தி வாக்குகள் மூன்றாவது அணிக்கு செல்லும் இதனால் தான் சுலபமாக வெற்றி பெற்று  விடலாம் என எண்ணுகிறது. பி.ஜே.பி இதனை புரிந்துக்கொள்ளாமல் மோடி என்கிற மாய மந்திரமே போதும் என எண்ணுகிறது. காங்கிரஸ்க்கு எதிர்ப்பாக வலிமையான கூட்டணி அமைக்க வேண்டும் என்ற அக்கறை இல்லாமல் உள்கட்சி பிரச்சனையில் சிக்கி சின்னாபின்னமாகி வருகிறது.

கப்பலுக்கு கேப்டன் இல்லையென்றால் தான் சிக்கல். ஆனால் கேப்டனாக நியமிக்கப்பட்ட பின்பு ஒரு கப்பல் தத்தளிக்கிறது.

ஞாயிறு, ஜூன் 16, 2013

விலைவாசி உயர்வு. ஆபத்தை நோக்கி எதிர்காலம்.



விலைவாசி உயர்வு என்பது தவிர்க்க முடியாதது. ஆண்டுகள் மாற மாற விலைவாசி உயர்வு இருக்கத்தான் செய்யும். ஆனால் கடந்த ஐந்து விலைவாசி உயர்வு என்பது ஜெட் வேகத்தில் இருக்கிறது.

டீசல் விலையேற்றினால், வாகனங்களின் வாடகை உயர்கின்றன, வாகனங்களின் வாடகை உயர்ந்தால் பொருட்கள் விலைகள் உயர்கின்றன. ஒவ்வொன்றும் சங்கிலி தொடர் போல. ஒரு பொருள் உயர்ந்தால் அதனை சார்ந்த மற்ற பொருட்களின் விலையும் உயரும் என்பது இயற்கை. தற்போது உணவு பொருட்கள் விலை உயர்வு என்பது தவிர்க்க முடியாததாகியுள்ளது.

மளிகை பொருட்கள் முதல் காய்கறிகள் வரை உயர்ந்துக்கொண்டே வருகின்றன. ஏழை மக்கள் மட்டுமல்ல நடுத்தர மக்களும் இனி காய்கறிகளை வாங்க முடியாத அளவுக்கு விலை உயர்ந்து வருகின்றன. வருங்காலத்தில் சோற்றில் தண்ணீர் ஊற்றித்தான் சாப்பிடவேண்டும் போல் இருக்கும் என நினைத்தால் அதற்கும் ஆப்பு வரும் போல. தற்போது ஒரு கிலோ அரிசியின் விலை 45 இந்த ஆண்டின் இறுதியில் 100 ரூபாயை நெறுங்கினால் ஆச்சர்யப்படுவதற்கில்லை. இந்த உயர்வு என்பது இனி குறைய வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது. எதனால் இந்த விலை உயர்வு ???????????????.

நீர் பிரச்சனை.


தமிழகம் கீழ்நிலப்பகுதி. தமிழகத்தை சுற்றியுள்ள கர்நாடகா, கேரளா, ஆந்திரா போன்றவை மேல்நிலப்பகுதி. நமக்கு தேவையான நீர் மேல் நிலப்பகுதிகளில் இருந்து தான் வரவேண்டும். ஆனால் இந்த மாநிலங்கள் நமக்கான நீரை தர மறுக்கின்றன. அவர்கள் மீதும் குற்றமில்லை. நியாயமான காரணம் மழையில்லை. மனிதன் இயற்கையை அழிக்க தொடங்கியதால் மழை பொய்த்து போனது. பெய்யும் குறைந்தளவு மழை தேவையை பூர்த்தி செய்யும் அளவில் இல்லை. அதோடு கீழ்நில பகுதிகளுக்கு நீர் அனுப்பும் பாதைகள் பராமரிப்பு இல்லாமல் கிடக்கின்றன. மற்றொருபுறம் அரசியல் செய்யப்படுவதால் நீர் திறப்பு என்பது ஒவ்வொரு ஆண்டும் கேள்விக்குறியாக உள்ளது.

கீழ்நில பகுதிகளில் அணைகள் பலயிருந்தாலும் அதற்கு தேவையான நீர் வராத அளவுக்கு நீர் வழி பாதைகள் அடைக்கப்பட்டு வீடுகளாகவும், தொழிற்சாலைகளாகவும், அரசாங்க கட்டிடங்களாகவும் உருவமாறிவிட்டன. சராசரி மழையளவு குறைந்ததால் விவசாயிகள் தண்ணீர்க்காக நிலத்தடி நீரை உறிஞ்ச தொடங்கினர். பற்றாக்குறை தொடங்கியது.

தொழில்துறை முன்னோக்கி, விவசாயம் பின்னோக்கி.

இந்தியாவின் அடிப்படையே விவசாயத்தை நம்பி தான். 70 சதவிதம் மக்கள் விவசாயத்தை நம்பியே உள்ளார்கள். ஆனால் இந்திய ஒன்றிய ஆட்சியாளர்கள், அதிகாரிகள், அரசியல்வாதிகள் விவசாயத்துக்கு முன்னுரிமை தரவேயில்லை. சுதந்திரம் அடைந்தது முதல் தொழில்துறையை தான் கட்டிக்கொண்டு தொங்குகின்றனர். நேரு முதல் மன்மோகன்வரை தொழில்துறைக்கு முக்கியத்துவம் தருகிறார்கள். பாரம்பரிய விவசாயத்தை திட்டமிட்டே அழித்தது அரசாங்கம். விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதை பார்த்தும் கொள்கையை மாற்றவில்லை மேலை நாட்டு அடிமைகள்.

தொழில்துறையை விவசாயத்தோடு இணைத்தார்கள். புதிய புதிய இயந்திரங்களின் வருகை விவசாயத்தை முன்னேற்றவில்லை. விவசாயத்தை அழிக்கவே செய்தது. தொழில்துறையின் வளர்ச்சி விலை நிலங்களை வாகனம் மற்றும் உதிரி பாக, இரும்பு பொருட்கள் தொழிற்சாலைகளாக, வணிக வளாகங்களாக மாறின. தொழிற் பேட்டைகள் அதிகரிப்பால் குண்டு குழியுமான சாலைகள் இருவழிப்பாதை, நான்கு வழிப்பாதை, தங்கநாற்கர சாலை என மேம்படுத்தப்பட்டன. இதனால் சாலையோர விளை நிலங்கள் எல்லாம் விலை மனைகளாக உருமாறின.

இதனால் ரியல் எஸ்டேட் தொழில் வேகவேகமாக வளர்ச்சியடைந்தன. சாலையோற நிலங்கள் எல்லாம் வீட்டுமனைகளாக உருமாறியதால் இங்கு பயிர் செய்யப்பட்ட நிலக்கடலை, கரும்பு, சோளம், கம்பு போன்ற பயிர்கள் எல்லாம் நன்றாக விளையும் நிலத்துக்கு மாற்றப்பட்டன. அங்கு ஏற்கனவே விலைந்த நெல், பணப்பயிர்கள் எல்லாம் குறைத்துக்கொள்ளப்பட்டன.

கேலி செய்யப்படும் விவசாயம். 

தொழில்துறை முன்னேற்றம், சமூக மாற்றம், பொருளாதார வளர்ச்சி, படிப்பு போன்றவை விவசாயத்தை ஏதோ கேவலமான தொழிலாக சித்தரிக்க வைத்துவிட்டது. ஒரு பெரும் நகரத்தில் உள்ள கல்லூரியில் மாணவர்கள் மத்தியில் ஒரு விவசாயின் மகனோ, மகளோ சேர்ந்து படித்தால் அவர்களை ஏளனமாக பார்க்கும் நிலை தான் உள்ளது. நான் ஒரு விவசாயி என்றால் அவனை கேவமான ஜந்துவாக பார்க்கின்றனர் அதிகாரிகள் முதல் அனைத்து தரப்பினரும். ஒரு சாதாரண மெக்கனிக்குக்கு இருக்கும் மரியாதை கூட விவசாயிக்கு கிடைப்பதிலை என்பதே நிஜம்.

இதுமட்டுமல்ல உழவன் கடினமாக உழைத்து மனிதனுக்கு தேவையான உணவு பொருட்களை உருவாக்கினால் அந்த பொருளுக்கான விலையை அவன் வைப்பதில்லை. இடைத்தரர்கள் தான் விலை வைக்கின்றனர். இது வேறு எந்த தொழிலிலும் கிடையாது. இதனால் விவசாயியும் தனது மகன் இந்த தொழிலுக்கே வரக்கூடாது என முடிவு செய்தே வளர்க்கப்படுகிறான். இதனால் விவசாயம் குறைந்தே வருகிறது.


வேலை உறுதி திட்டம்.

விவசாயம் செய்வது குறைந்து வந்த நிலையில் தான் அரசாங்கம் ஏழைகளை உயர்த்த, நிரந்தர வருமானத்தை உறுதி செய்கிறோம் என வேலைக்கு உணவு திட்டம் என்ற ஒன்றை கொண்டு வந்தது. சில ஆண்டுகளுக்கு பின் பெயர் மாற்றம் செய்து வேலை உறுதி திட்டம் என ஒன்றை கொண்டு வந்தது. அந்த திட்டத்தின் படி ஒரு குடும்பத்தில் ஒரு நபருக்கு நூறு நாளைக்கு வேலை. கூலி 100 ரூபாய் என்றதும் மக்கள் விவசாய நிலங்களில் வேலை செய்வதை விட்டுவிட்டு இந்த வேலைக்கு சென்றனர்.

இங்கு வேலையே செய்யாமல் கூலி வாங்கிக்கொண்டு வந்தனர். தொழிலாளர்கள் சோம்பேறிகாளாக மாறினர். இதனால் விவசாயம் படுத்துக்கொண்டது. கொஞ்ச நஞ்ச விவசாயிகள் விவசாயம் செய்யாமல் விட தொடங்கினர். தங்களிடம்மிருந்த பொன் விளையும் பூமிகளை ரியல் எஸ்டேட் தரகர்களிடம் விற்றனர்.

அரசாங்கம் தரும் பொய் கணக்குகள்.


2000ல் ஒரு விவசாயி 5 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து 50 ஆயிரம் சம்பாதிக்கிறார். அதே விவசாயி 2005ல் 4 ஏக்கர் நிலத்தில் 50 ஆயிரம் சம்பாதிக்கிறார். அதே விவசாயி 2013ல் 2 ஏக்கர் நிலத்தில் 70 ஆயிரம் சம்பாதிக்கிறார். இது உண்மையா பொய்யா என கேட்டால் என்ன சொல்வீர்கள். பொய் என்று தானே சொல்வீர்கள். ஆனால் அரசாங்கம் இதனை உண்மை என்கிறது. அவர்கள் தரும் புள்ளி விவர கணக்குகளும் அப்படித்தான் உள்ளன.

இப்படி நம்முன் அரசாங்கம் திறந்த டாஸ்மாக், இலவச அரிசி, விலையில்லா பொருட்கள் என பல பிரச்சனைகள் இருந்தாலும் நம்மிடம், பேராசை, பொறாமை, சீக்கிரம் பணக்காரனாக வேண்டும், உழைக்காமலே பணம் வரவேண்டும் என்ற எண்ணம் மேல்தட்டு மக்கள் முதல் உழைக்கும் மக்கள் வரை வந்துள்ளது. இதனால் தமிழகத்தில் சோம்பேறிகளை அதிகமாக்கியுள்ளது. கிராமங்களில் இது அதிகமாகியுள்ளது. இவைகள் மாறினால் தான் நம்மால் சிறப்பான எதிர்காலத்தை அமைத்துக்கொள்ள முடியும். இல்லையேல் வருங்காலம் என்பது அனைத்து தரப்பினருக்கும் வேதனை தரக்கூடியதாக இருக்கும்.

திங்கள், ஜூன் 03, 2013

கலைஞர் - 90 வயது இளைஞர்.



ஏசி அறையில் உட்கார்ந்துக்கொண்டு ஃபைல் புரட்டுபவர்களே மாலையானதும் அப்பாடா எவ்வளவு வேலை என அலுத்துக்கொள்கிறார்கள். தினமும் விடியற்காலை எழுந்து யோகா செய்துவிட்டு, அன்றைய தமிழ், ஆங்கில செய்தித்தாள்கள் அனைத்தும் வாசித்துவிட்டு அதுப்பற்றி பேச வேண்டும் என்றால் அந்த காலை நேரத்திலேயே சம்மந்தப்பட்டவர்களை தொடர்பு கொண்டு பேசிவிட்டு சி.ஐ.டி காலணி வீட்டில் இருந்து கோபாலபுரம் வந்து உணவு உண்டுவிட்டு அறிவாலயம் சென்று கட்சி நிகழ்வுகள், சந்திப்புகள், உலக அரங்கில், இந்திய அளவில், தமிழகத்தில் நடந்த நிகழ்வுகள் பற்றி தன் கருத்தை செய்தியாளர்களிடம் பதிவு செய்துவிட்டு மதிய உணவுக்கு பின் முரசொலி வழியாக உடன்பிறப்புகளுக்கு கட்டுரை எழுதிவிட்டு மீண்டும் இல்லம் திரும்பி, உறங்க செல்லும் போது இரவு 11 மணியை தாண்டிவிடுகிறது. இதில் எத்தனை எத்தனை பணிகள். ஆட்சியில் இருக்கும் போது இதைவிட கூடுதல் பணிகள். ஆனால் எப்போதும், எதற்காகவும் சோர்ந்ததில்லை. அவரது உடலுக்கு வேண்டுமானால் வயது 90 ஆகியிருக்கலாம். ஆனால் அவர் மனம் என்றும் 16 தான். அத்தனை சுறுசுறுப்பு. தேனீயே இவரிடம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் எனச்சொன்னால் மிகையாகாது.

இந்த உழைப்பு இன்று நேற்றல்ல அவர் பள்ளி படிக்கும் காலத்திலேயே தொடங்கியுள்ளது. 14 வயதில் கையெழுத்து பிரதி நடத்தியது முதல் அவரது சுறுசுறுப்பு தொடங்குகிறது. பத்திரிக்கையாளர், இலக்கியவாதி, சினிமாக்காரர், அரசியல்வாதி, குடும்பதலைவர், ஆட்சியாளர் என பல பரிமாணங்கள் அவரிடம் உண்டு. பலரும் சொல்வதைப்போல அவர் அரசியல்வாதியாக இல்லாமல் சினிமாக்காரராக மட்டும் இருந்திருந்தால் அவரது கதை, திரைக்கதை, வசனத்துக்கு நூற்றுக்கணக்கான தேசிய விருதுகளை வாங்கியிருப்பார். இலக்கியவாதியாக மட்டும் இருந்திருந்தால் இந்தியாவின் மிக முக்கிய இலக்கியவாதியாக இருந்திருப்பார். அவர் அரசியல்வாதியாக இருப்பதால் அவரின் சாதனைகள் பின்னுக்கு தள்ளப்பட்டு அவர் மீது விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன.

அரசியலிலும், ஆட்சி நிர்வாகத்திலும் இவரைப்போன்று ஒரு அரசியல்வாதி இனி இந்த தமிழ் மண்ணில் பிறக்க முடியாது. அரசியல் வாழ்க்கைக்கு வந்தபோது திராவிடர் கழகத்திலாகட்டும், திராவிட முன்னேற்ற கழகத்திலாகட்டும் அந்த காலத்து சாதி அரசியலில் இவரை விட மேல்சாதியினர் என அழைத்துக்கொண்டு பலர் கோலோச்சினர். அவர்கள் மத்தியில் தன்னை உழைப்பால் வளர்த்துக்கொண்டவர் கலைஞர். ஜனநாயக பூர்வமான விவாதத்துக்கு கட்சியிலும், ஆட்சியிலும் எங்கும் கலைஞர் தடையாக இருந்ததில்லை என்பதே வரலாறு. இவரைப்போல் நிச்சயம் சோதனைகளை சந்தித்த அரசியல்வாதிகள் யாரும்மில்லை. சோதனைகள் என்னும் கடலில் நீந்தி சாதனைகள் படைத்தவர் இவர். இவருடைய சாணக்கிய தனம் இல்லாமல் போயிருந்தால் திமுக அழிக்கப்பட்டுயிருக்கும்.

இந்திய அரசியலில் விமர்சனங்களை அதிகம் எதிர்க்கொண்டவர் யார் என்றால் அது கலைஞர் தான். கருணாநிதியின் தலைக்கு கோடி ரூபாய் பரிசு அறிவித்த வடநாட்டு சாமியரையும் பொருட்படுத்தவில்லை, நடிகை குஷ்புவுடன் இணைத்து எழுதிய கட்டுரையையும் அவர் பொருட்படுத்தவில்லை. தரம் தாழ்ந்த மாற்று விமர்சனத்துக்கும் அவர் பேனா மட்டும்மே பதில் சொல்லும். இதை இந்தியாவில் வேறு எந்த அரசியல்வாதியிடமும் காண முடியாது. விமர்சித்தவர்கள் பிரச்சனை என வந்தாலும் தயங்காமல் உதவுபவர் கலைஞர்.

விஞ்ஞான வளர்ச்சியில் ஃபேஸ்புக்கில் உலவும் கலைஞரை படுமட்டமாக விமர்சனம் செய்தார்கள். மற்ற கட்சி தலைவர்கள் போல் அவர்கள் மீது புகார் தரவில்லை. அபத்தமான விமர்சனங்களை ஒதுக்கிவிட்டு நியாயமான கேள்விகளுக்கு பதில் மட்டுமே இன்றளவும் தந்து வருகிறார்.

47 வயதில் திமுக தலைவர் என்ற பதவியில் அமர்ந்தவர் 90 வயது வரை அந்த பதவியில் வீற்றுள்ளார். 1952ல் தனது 37வது வயதில் சட்டமன்றத்துக்குள் நுழைந்தவர் 12வது முறையாக தோல்வியே காணாமல் வெற்றியை மட்டுமே சுகித்து கொண்டு இருக்கிறார். ஐந்து முறை முதலமைச்சர் என்ற பதவியில் அமர்ந்து ஆட்சி செய்துள்ளார். 2006 தேர்தலுக்கு பின் பின்னரவில் அதிகாரத்தில் இருந்த ஜெ போட்ட உத்தராவல், கலைஞர் கைது செய்யப்பட்டபோது இந்தியாவே அதிர்ந்தது. அப்போது மைய அமைச்சரவையில் திமுக அங்கம் வகித்திருந்தது. அதிமுக ஆட்சியை கலைக்க பி.ஜே.பி தலைமையிலான மைய அரசு முடிவு செய்தது. அப்போது எதிர்கட்சி தலைவியாக இருந்த சோனியாவும் ஒப்புக்கொண்டார். மாநில ஆட்சியை மைய அரசு தன் அதிகாரத்தை கொண்டு கலைப்பதை எதிர்ப்பது எங்கள் கட்சியின் கொள்கை. கொள்கையை விட்டு தரமுடியாது அதனால் ஆட்சி கலைப்புக்கு ஒப்புக்கொள்ள மாட்டோம் என கொள்கைக்காக எதிர்கட்சியான ஜெ ஆட்சியை கலைக்காமல் தடுத்தவர் கலைஞர். அவரை, கட்சியின் தலைவர்களை, தன் மகளை அடித்த, கொச்சைப்படுத்திய அதிகாரிகளை மன்னித்தவர் கலைஞர்.

கடந்த 20 ஆண்டுகளாக இந்திய அரசியலை தீர்மானிக்கும் சக்தி கலைஞர் தான். எமர்ஜென்சிக்கு பின் தோல்வியில் துவண்டு கிடந்த இந்திராவை நோக்கி, நேருவின் மகளே வா நிலையான ஆட்சி தா என இந்திராவுடன் கூட்டணி வைத்தவர், ஜனதா என்ற அமைப்பு உருவாகி ஆட்சியில் உட்கார காரணமானவர். வாஜ்பாய் பிரதமராகவும், சரிந்து கிடந்த காங்கிரஸ்சை ஆட்சியதிகாரத்தில் உட்கார வைத்தவர் கலைஞர். பிரதீபாபட்டீல், பிரணாப் என இரண்டு ஜனாதிபதிகளை உருவாக்கியவர் கலைஞர்.

2ஜீ ஊழல், கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்கள் நடத்திய கொள்ளை போன்ற பல காரணிகளால் ஆட்சியதிகாரத்தை திமுக இழந்து இன்று சட்டமன்றத்தில் எதிர்கட்சியாக கூட இல்லாமல் இருந்தாலும் 2014 நாடாளமன்ற தேர்தலில் திமுக எந்த கூட்டணியில் அங்கம் வகிக்கும் என மில்லியன் டாலர் எதிர்பார்ப்புடன் காத்துக்கிடக்கிறது பல மாநில கட்சிகள். காரணம், பாராளமன்ற தேர்தலில் இவர் எங்கு இருக்கிறாறோ அந்த பக்கம் தான் வெற்றி காற்று வீசும் என்பது வரலாறு. நம்பகமான அரசியல் தலைவர். பாதியில் ஆட்சியை கவிழ்க்கமாட்டார்.

மதவாத கட்சியான பி.ஜே.பியோடு கூட்டணி வைத்தாலும் அதை நியாயப்படுத்துவதில் வல்லவர். துரோக கட்சியான காங்கிரஸ்சுடன் கூட்டணி வைத்தாலும் அதை சமன் செய்பவர் கலைஞர் ஒருவர் தான். அவரை தவிர வேறு யாராலும் அதை செய்ய முடியாது.

சோதனைகள் இன்று பல திமுகவை கூ+ழ்ந்து ஆட்சி, அதிகாரம் கொண்டு மிரட்டினாலும் எத்தனை பெரும் சக்தியையும் எதிர்க்கும் ‘வல்லமை’ கலைஞரிடம் மட்டுமே உள்ளது. அந்த வல்லமை அவரது உழைப்பு. இந்த 90வது பிறந்தநாளிலும் இன்னும் அதிகமாக உழைக்க வேண்டும் என உறுதி எடுத்துக்கொள்வார் ஏன் எனில் அவர் கலைஞர்.

சனி, ஜூன் 01, 2013

அன்பே அழகானது. – தொடர் கதை. பகுதி – 2.



டாடி ….

டாடி ……….

என்னடா ?

ஃபைக் ஓட்டனா காது கேட்காதா டாடி?

எத்தனை முறை சொல்லியிருக்கன் அப்பான்னு கூப்டுன்னு.

ஸாரி.

சரி எதுக்கு கூப்ட்ட.

எங்க போறோம் ?

என்னடா கேள்வியிது. ஆறாவது சேர்ந்துயிருக்க புது ஸ்கூல் அதனால உனக்கு யூனிபார்ம் எடுக்க போறோம்.

அது தெரியும். கிளம்பும்போது என்ன சொன்னிங்க.

என்ன சொன்னன்?

ஐஸ்கிரிம் சாப்பிட்டுட்டு அப்பறம்மா டிரஸ் எடுக்கலாம்ன்னு சொன்னிங்கயில்ல.

ஆமாம் அதுக்குயென்ன இப்போ.

முதல்ல ஐஸ்கிரிம் பார்லர் அதுக்கப்பறம் டிரஸ்.

நீ ஓழுங்கா ஐஸ்கிரிம் சாப்பிடமாட்ட. டிரஸ் மேலப்படும். அப்படியே துணிக்கடைக்கு போன அசிங்கமா இருக்கும். அதனால போகும் போது வாங்கிதர்றன் வீட்ல வந்து சாப்பிடு.

வீட்ல வந்து சாப்பிடறன். ஆனா இப்ப வாங்கித்தா.

டிரஸ் எடுக்க போறப்ப அத வேற கைல எடுத்துக்கிட்டு போகனும்டா.

டிரஸ் எடுத்ததுக்கப்பறம் காசுயில்ல, சளி புடிக்கும்ன்னு சொல்லுவீங்க.

அதெல்லாம் சொல்லமாட்டன்டா.

உங்களப்பத்தி எனக்கு தெரியும்.

கேடிடா நீ.

நான் உன் பையன்ப்பா என்றவனிடம் வேறு எதுவும் பேசாமல் ஃபைக்கை ஐஸ்கிரிம் பார்லர் முன் நிறுத்தியதும் நீ வெளியில இருப்ப நான் வாங்கி வந்துடறன் என 200 ரூபாய் வாங்கிக்கொண்டு ஓடிய ரஞ்சித் நான்கு ஐஸ்கிரிம் கப்புகளை வாங்கிக்கொண்டு மீதி சில்லறையை தன் பாக்கெட்டில் போட்டுக்கொண்டு வருவதை மதன் பார்த்தான்.

அருகே வந்த ரஞ்சித்திடம் மீதி பணத்த எங்கிட்ட தாடா.

உங்;கிட்ட காசுயில்லாதப்ப தர்றன் என்றபடியே வண்டியில் ஏறி உட்கார்ந்தான்.

உனக்கு வர்ற வர்ற கொழுப்பு அதிகமாயிடுச்சிடா.

அதுக்குத்தான் சாப்பாட்டுல ஆயில் குறைக்கச்சொல்றன்.

அவன் நக்கலடிப்பதை கேட்டு டேய் பேசாம வா என்றதுக்கு ம் என்றான்.

குழந்தை ஏசு மெட்ரிக்குலேஷன் பள்ளியின் அலுவலகத்தில் சொன்னப்படி அவர்கள் குறிப்பிட்ட துணிக்கடைக்கு சென்று மூன்று செட் யூனிபார்ம், டை, சூ வாங்கிக்கொண்டு வீட்டுக்கு வர இரவு 8 மணியானது. கதவை திறந்துக்கொண்டு உள்ளே வந்ததும் டேய் தோசை சுடறன் சாப்பிட்டுட்டு அதுக்கப்பறம் ஓரே ஒரு ஐஸ்கிரிம் சாப்பிடு. மீதிய நாளைக்கு சாப்பிடுவ.

நோ டாடி. இப்ப டூ, டுமாரோ டூ.

நைட்ல சாப்பிட்டா சளி பிடிக்கும் காலையில சாப்பிடுடா.

காலையில சாப்ட்டா கோல்டாகாதா?.

ஆகாது.

ஏன்?.

கேள்வி கேட்காம அத கொண்டு வந்து பிரிட்ஜ்ல வை.

பிரிட்ஜ்ஜை திறந்து அதை வைத்தபடியே நான் தூங்கனதுக்கப்பறம் நீ எடுத்து சாப்பிடமாட்டயில்ல.

நீ அதிகமா என்னை நக்கல் அடிக்கறடா எனச்சொன்னதை அலட்சியவன்.

தோசைக்கு சக்கரை வச்சி தாப்பா.

ம் என்றதும் ஹாலுக்கு சென்று டிவியை போட்டுக்கொண்டு உட்கார்ந்துவிட்டான். ஆதித்யா, போகோ, நிக் என மாற்றி மாற்றி பார்த்துக்கொண்டு இருந்தவன் முன்னால் தோசை தட்டை வைத்ததும் ரிமோட்டை தொடைக்கு கீழே வைத்துவிட்டு சாப்பிட தொடங்கினான். நானும் அவன் அருகில் உட்கார்ந்து சாப்பிட தொடங்கினேன். எதையும் கண்டுக்கொள்ளாமல் சாப்பிட்டு முடித்துவிட்டு தட்டை தந்தான். நான் பாத்திரங்களை கழுவி வைத்துவிட்டு வரும்வரை டிவி முன்பே உட்கார்ந்து இருந்தவனிடம் டைம்மாகிடுச்சி ரஞ்சித் படுக்கலாம்.

இன்னும் கொஞ்ச நேரம்ப்பா.

ர்pப்பீட்டட் புரோகிராம்டா நாளைக்கும் போடுவான் வா என்றதும் டிவியை ஆப் செய்துவிட்டு பெட்ரூம்க்குள் நுழைந்தான். நான் கதவை லாக் செய்துவிட்டு பெட்ரூம்க்கு வர அவன் கட்டிலில் படுத்திருந்தான். அவனுக்கு பெட்ஷீட் போர்த்திவிட்டு பக்கத்தில் அமர்ந்தேன்.

ஸ்கூல் எப்பப்பா ஓப்பன்.

இன்னும் இரண்டு நாள் இருக்கு.

தினமும் நீ அழைச்சிம்போய் விடுவியாப்பா.

காலையில ஆட்டோவுல போய்டு. ஈவ்னிங் நான் வந்து உன்னை அழைச்சி வர்றன்.

காலையில உன்னோட பைக்லயே வர்றன்ப்பா.

எனக்கு ஆபிஸ் பத்து மணிக்குடா. உனக்கு ஸ்கூல் 8:30 மணிக்கு ஸ்டார்ட்டாகிடும். அதனால நீ காலையில ஆட்டோவுல போய்டு. மதியம் லஞ்ச்ச பாக்ஸ்ல எடுத்தும் போய்டு. தாத்தா பாட்டி ஊர்லயிருந்து வந்ததுக்கப்பறம் பாட்டி தினமும் மதியம் லஞ்ச் எடுத்துவருவாங்க.

போப்பா தாத்தாவும் - பாட்டியும் வந்துடுவாங்கன்னு நீயும் தான் சொல்ற. அவுங்க வரவே மாட்டேன்கிறாங்க.

வருவாங்கடா செல்லம் இப்ப நீ தூங்கு என்றதும் அவன் சோகமாக கண்ணை மூடிக்கொண்டான். அவன் தூங்குவது உறுதியானதும் கட்டில் டிராயரை சத்தம் வராமல் திறந்தேன். அதில் லேமினேஷன் செய்யப்பட்ட போட்டோவில் ஜோடியாக நானும் என் மனைவியும் சிரித்துக்கொண்டு இருந்ததை பார்த்ததும் மனம் பாரமானது.

தொடரும்……………