ஞாயிறு, ஆகஸ்ட் 08, 2010

எந்திரனும்……….. குதிரை சவாரியும்.


சமீபமாக சன் குழும சேனல்களை பார்ப்பதையே விட்டுவிட்டேன். எப்ப பாத்தாலும் சன் டிவி கலாநிதிமாறன் வழங்கும் என மூச்சுக்கு முண்ணூறு முறை காவல்காரன், தோட்டகாரன், சிங்கம், எலி, புலி என விளம்பரத்தை போட்டு பார்ப்பவர்களின் உயிரை எடுப்பதால் தான் அச்சேனல்களை பார்ப்பதே கிடையாது. அதற்க்கு பதில் இசையருவி, விஜய், ஜெயா மேக்ஸ் என பார்த்துக்கொண்டிருக்கிறேன். சமீபமாக கலைஞர் குழுமமும் ரெட் ஜெயன்ட், கிளைட் நைன் வழங்கும், தமிழ்படம், ஆங்கிலப்படம், தெலுங்குபடம், மதாராசாபட்டினம், சித்தூர் பட்டனம் என விளம்பரமாக போட்டு பேதியாக்குவதால் எங்கள் வீட்டு டிவி ரிமோட் என்னை கண்ணாபின்னா வென திட்டுகிறது. அப்படியும் மலேசியாவில் எந்திரன் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியை ஞாயிறு அன்று மாலை சன்னில் பார்த்துக்கொண்டிருந்தேன். இசை வெளியீட்டு நிகழ்ச்சிக்கே இத்தனை பந்தா விளம்பரம்மென்றால் படம் வெளிவரும் நாளன்று தமிழகம் முழுவதிலிருந்தும் எந்திரன் தியேட்டர் வாசலில் இருந்து நேரடி ஒளிபரப்பு என சன் குழும சேனல்கள் அலறப்போவதை நினைத்தேன். 

கனவு காணாமல் என் கண் முன் விரிந்தது அக்காட்சிகள், எந்திரன் படம் உலகம் முழுக்க ரிலிஸ்சாக இன்னும் மூன்று தினங்களே உள்ளன. ஆனால் தமிழக மக்கள் தங்களது வீட்டில் சமையல் கூட செய்யாமல், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல், கணவன்மார்கள் அலுவலகம் செல்லாமல் எந்திரன் படத்தை பார்க்க வேண்டும் என்ற வாழ்நாள் லட்சியத்தில் தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, கேரளா, மேற்குவங்களம், டெல்லி என இந்தியா முழுக்கவுள்ள மக்கள் தங்கள் வாழ்நாள் லட்சியத்தை நிறைவேற்றிக்கொள்ள தியேட்டர் வாசலில் குடும்பத்தோடு வந்து டேரா போட்டு டிக்கட்க்காக க்யூவில் காத்திருக்கிறார்கள். 

இப்படி பல லட்சம் குடும்பங்கள் தியேட்டர் முன்பு, தேசிய நெடுஞ்சாலையில், கக்கூஸ் சந்துகளில் கூடாரம் அமைத்து தங்கியுள்ளதால் இந்தியாவில்; வாகன போக்குவரத்து முற்றிலும் தடையேற்பட்டுள்ளது, பள்ளி, கல்லூரி, அரசு மற்றும் தனியார் அலுவலகங்களுக்கு தமிழக அரசு விடுமுறை அறிவித்துள்ளது. வுpமான துறை ஊழியர்கள், எல்லை பாதுகாப்பில் உள்ள ராணுவ வீரர்கள், நக்சலைட்டுகள் என மத்தியரசு ஊழியர்கள் எந்திரன் படம் பார்க்க சம்பளத்துடன் கூடிய சிறப்பு விடுமுறையும், டிக்கட் வாங்க, உள்ளே திண்பண்டம் வாங்கி திண்ண சிறப்பு கடன் திட்டமும் வேணும் என போராட்டத்தில் குதிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறன்றன. மத்தியரசும் எந்திரன் திரைப்படம் வெளிவரும் நாளை தேசிய விடுமுறை நாளாக அறிவிக்கலாமா என பிரதமர் தலைமையில் கூடிய கேபினட் கூட்டம் ஆசேலாசித்து வருகின்றது.  

அதேபோல் அமெரிக்காவில் ரிலிசாக போகும் எந்திரன் திரைப்படத்திற்க்கு அந்நாட்டு அதிபர் ஓபாமாவுக்கு டிக்கட் கிடைக்கவில்லை என தன் அலுவலக ஹாட் லைனில் இருந்து சன் குழும தலைவர் உயர்திரு, டாக்டர், பத்மபூசன், ஆஸ்கார் நாயகன் கலாநிதிமாறனிடம் தன் குடும்பத்தார் படம் பார்க்க டிக்கட் வேண்டும்மென கேட்டு கெஞ்சியுள்ளார். 

படம் வெளியீட்டன்று, படம் பார்த்துவிட்டு வெளியே வந்த ரசிகர்களிடம் கருத்து கேட்டபோது, இது போன்ற ஒரு படம் இதுவரை உலகத்தில் வரவில்லை இனி வரப்போவதுமில்லை. அதிலும் குறிப்பாக இடைவேளைக்காக போடப்பட்ட எழுத்து இதுவரை உலகத்தில் கண்டு பிடிக்காத எழுத்து என கோயம்பத்தூர் குப்புசாமியும், சென்னை சரோஜாவும், ஐதராபாத் அம்மாஞ்சியும், கேரளா கேப்பக்கிழங்கு மாமியும், அமெரிக்காவின் ஹிலாரியும் சிலாகித்து சொன்னார்கள். படத்தை பற்றி நம் சிறப்பு செய்தியாளர் தரும் சிறப்பு தகவல், படம் பார்க்கும் ரசிகர்கள் ரஜினிகாந்த் ஆம்ஸ் காட்டும் போதும், ஐஸ்வர்யாபச்சான் அழும்போதும் ரசிகர்கள் ஒன்ஸ்மோர் கேட்டு அன்பு தொல்லை தருகிறார்கள். அதிலும் குறிப்பாக சன் பிக்சர்ஸ் என்ற பெயர் திரையில் வரும்போதுயெல்லாம் தமிழக மக்கள் கற்பூரம் ஏற்றி ஆராதனை செய்கிறார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் கேமராமேன் கன்னுகுட்டிடன் உங்கள் வீட்டுப்பிள்ளை……. நன்றி வணக்கம். 

கனவே காணாமல் நம் கண் முன் ஓடியதை கண்டதும் சாமி போதும்டா இந்த சேனல் என வேறு சேனல்கள் மாற்றியபடி வந்தேன். ஜீ டிவியில் தி வெதர் மேன் என்ற ஆங்கிலப்படம் போட்டுயிருந்தார்கள். 


ஆங்கிலப்படத்தில் சில சீன்கள் அப்பட்டமாகயிருக்கும். அப்படித்தான் அந்தப்படத்தில் ஒருயிடத்தில் பள்ளியறையில் நாயகன் மேல் காதல் நாயகி குதிரை சவாரி செய்வார். (அதுயென்ன குதிரை சவாரின்னு கேட்காதிங்கப்பா…….. நான் கல்யாணம்மாகத பையன் ……. அதப்பத்தி கல்யாணம் ஆனவங்கக்கிட்ட கேட்டு தெரிஞ்சிக்குங்க). அந்த காட்சியும், மேலாடையில்லாத நாயகியின் உடல் சவாரியின் போது ஜம்பாகுவதை காட்டினார்கள். ஆங்கிலப்படத்தை டப் செய்து போடுங்க வேணாம்ன்னு சொல்லல. ஆனா போடறதுக்கு முன்னாடி கொஞ்சம் அந்தப்படத்தை நீங்க பாருங்க. பாத்துட்டு அப்பறம் போடுங்க சாமிங்களா……. புண்ணியமா போகும். 

இல்ல பாத்துட்டு தான் போட்டோம்ன்னு சொன்னிங்கன்னா கொஞ்சம் காத கொடுங்க …………. அடுத்த வாரம் நம்ம ஷகிலா பேபி படுத்த ச்சீசீசீ நடிச்ச படத்த போட்டு இளைஞர்களுக்கு கொஞ்சம் கருணை காட்டுங்கப்பா புண்ணியமா போகும். ஏன்னா தொலைக்காட்சின்னாவே பெண்களுக்கானதா மாறிப்போச்சி நீங்களாவது இளைஞர்களுக்கானதா மாத்தி நடத்துங்க ரேட்டிங் பிச்சிக்கிட்டு போகும். அப்பறம்மென்ன தமிழ்நாட்ல நீங்கதான் அவுங்கள மாதிரி நம்பர் ஒன். 

புதன், ஆகஸ்ட் 04, 2010

ஆடையும் பயணமும்.சில தினங்களுக்கு முன்பு வந்தவாசியிலிருந்து திருவண்ணாமலைக்கு 2 மணி நேர பேருந்து பயணத்தில் வந்துக்கொண்டிருந்தேன். சில நேரங்களில் பஸ்சில் ஏறி அமர்ந்த சிறிது நேரத்தில் கண்ணுறங்கி விடுவேன். அன்றும் அப்படித்தான் உறங்கி விட்டேன். 

இதுங்கயெல்லாம் எதுக்கு தான் பஸ்ல வருதுங்களோ என ஒரு பெண் லேசாக முனுமுனுக்கும் சத்தம் காதில் விழ சடாரென விழித்துக்கொண்டேன். வாயை பேன்னு திறந்துக்கிட்டு தூங்கனதால திட்டறாங்களோ என யோசித்துக்கொண்டிருக்கும் போதே டீச்சர் இப்படி வாங்க என நம்மருகே நின்றுக்கொண்டிருந்த முனுமுனுப்பு பெண்மணியை பின்னாலிருந்து ஒரு பெண் அழைத்த போது புரிந்தது மு.மு பள்ளிக்கூட ஆசிரியர் என்பது. 

பின்னால் 5 அடி தள்ளி போய் பக்கத்தில் நின்றவர். இதுங்கயெல்லாம் பஸ்ல வந்து நம்ம உயிர வாங்குதுங்க…… படிச்சியிருந்தா தானே டீசன்ட் தெரியும் என சத்தமாகவே திட்டுவது கேட்டது. கொய்யால…. தூங்கறது தப்பா? எதுக்கா நம்மை இப்படி மறைமுகமா போட்டு தாக்குது என எண்ணியபடியே எதுக்காக திட்டறிங்க என கேட்டுடலாம் என யோசித்தபோது, பஸ்ல ஏர்றப்ப படிச்சவங்களுக்கு வழிய விட்டு நாம ஏறன பிறகு அப்பறம்மா ஏறலாம்மேங்கற எண்ணம்மிருக்கா என ஏசினார். தூங்கிக்கிட்டுயிருந்த நம்மை திட்டல என்பது புரிந்தது. 

பிறகு…….

பக்கத்தில் அமர்ந்திருந்தவரிடம் நைசாக கேட்டேன். எதுக்குங்க அந்தம்மா திட்டிக்கிட்டு வர்றாங்க?. அதுவென்னும்மில்லப்பா அந்த டீச்சர் பஸ் ஏறனாங்க. அப்ப இரண்டு பேர் அவசரத்தல இந்தம்மாவ இடிச்சிட்டாங்க. அதுக்கு தான் அந்தம்மா திட்டிக்கிட்டு வருது என்றார். 

அதோ முன்ன நிக்கறாங்களே அவுங்க தான் அந்த 2 பேர் என காட்டினார். 40, 45 வயதிருக்கும் அப்பெண்மணிகளுக்கு. உழைத்து வாழும் உழைப்பாளர் வம்சம் என்பது அவர்களின் உடை, உடல்வாகிலேயே தெரிந்தது. 

வர்கள் இடித்தது ஒரு தப்பா?.

பொதுவாக நகரவாசிகளை பார்த்தாலே கிராமத்தில் பிறந்து, வளர்ந்தவர்கள் மரியாதை தருவார்கள். அப்படிப்பட்டவர்கள் இவர்களை இடித்து விட்டு பஸ் ஏறுகிறார்கள் என்றால் பேருந்து புறப்பட்டு விடும் என்ற பயத்தால் அவசரத்தில் அப்படி செய்திருக்கலாம்.

இடித்து விட்டு பஸ் ஏறி ஏதோ கப்பலை ஓசியில் அவர்கள் மட்டும் வாங்கிவிட்டதை போல திட்டினார் அந்த ஆசிரியர் பெண்மணி. எப்படியும் இவர் ஒரு அரசுப்பள்ளியில தான் பணி புரிவார். அங்கே படிக்க வரும் பிள்ளைகள் 90 சதவிதம் ஏழை வீட்டு பிள்ளைகள். அவர்களை இவர் எப்படி நடத்துவார் என்பது இவரின் இந்த செய்கையே நமக்கு உணர்த்தியது. 

கிராமங்களில் இன்றும் ஆசிரியர்கள் மேல் மதிப்பும், மரியாதையும் வைத்து தங்களது நிலங்களில் விளையும் கடலை, தேங்காய், மாங்காய், நெல்லிக்காய், பூ உட்பட பலவற்றை தன் வீட்டு மகளுக்கு தந்து அனுப்புவதை போல மாலையில் தந்து அனுப்புவார்கள். அதற்கு காரணம் பெரும்பாலான ஆசிரியர்கள், தங்களிடம் படிக்கும் பிள்ளைகள் ஒருநாள் லீவு போட்டால் ஏன் எதுக்காக என சொந்தக்காரரை போல் அவர்கள் வீட்டுக்கே போய் விசாரித்து வீட்டில் பிரச்சனை என்றால் பிள்ளைகளை சமாதானப்படுத்தி அழைத்து வருவார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு மத்தியில் வகுப்பறையில் அமர்ந்து குடும்ப கதையும், அடுத்தவர்கள் பற்றி புறம் பேசுபவர்கள் ஏராளம். 

ஆசிரியர் ஆனவுடன் ஏதோ சந்திர மண்டலத்துக்கு சொந்தக்காரர் ஆனதை போலவும், தாங்கள் மற்றவர்களை விட வேறு பட்டவர்கள், சிறந்தவர்கள், தாங்கள் இல்லையேல் உலகே இயங்காது என்பது போல பேசுவதும் நடப்பதும் வேடிக்கையானது. 10 கி.மீ தூரம் நின்றுக்கொண்டு பயணம் செய்ய துப்பில்லாத இவர்கள் பள்ளியில் நின்று தான் பாடம் நடத்த வேண்டும் என்ற விதியை எந்தளவுக்கு கடை பிடிப்பார்கள் என்பதை யூகித்துக்கொள்ளுங்கள். 

ஜன நெருக்கடி, அதுவும் பேருந்தில் இட நெருக்கடி என்பது தவிர்க்க முடியாதது. பேருந்தில் பயணம் செய்ய நினைத்தாலும், பயணம் செய்தாலும் சில சங்கடங்களை பொருத்துக்கொள்ள வேண்டும். கிராமவாசிகளுடன், ஏழைகளுடன், கிழிந்த ஆடையுடன், அழுக்கான உடையுடன் பயணம் செய்ய வரும் பயணிகளுடன் பயணம் செய்ய முடியாதவர்கள் நடந்து போங்கள். இல்லையேல் அரசாங்கத்திடம் பாத்ரும் போய் வர டிஏ கேட்டு போராடுவதை போல பள்ளிக்கு வந்து செல்ல கார், வகுப்பறைக்கு செல்ல பேட்டரி கார் வேண்டும் என கேட்டு போராட்டம் செய்யுங்கள். அதை விட்டுவிட்டு இடித்துவிட்டு ஏறுவது குற்றம் என்று திட்டுவது எந்த விதத்தி;லும் நியாயமில்லை. 

கழுத்தில், காதில் தொங்கும் தங்கமும், உடுத்தும் உடையில் உள்ள வசிகரத்தை கண்டு மயங்கும் நீங்கள் இதற்க்கு முன் உன் தந்தை-தாய்;, உன் முன்னோர்கள், நீங்கள் பிறந்து வளர்ந்த இடத்தை பற்றி கொஞ்சம் யோசித்து பாருங்கள் உண்மை உங்களுக்கு உணர்த்தும். 

இன்று பணம், பொருள் வந்து விட்டது என்பதால் மற்றவர்களை விட நீங்கள் உயர்ந்தவர்கள் இல்லை. செய்யும் வேலையை பொருத்து மரியாதை தருகிறார்கள். அவ்வளவு தான். உனக்கு வேலையில்லை என்றால் உன் வீட்டு நாய்க்கூட உன் அருகில் வர தயங்கும். கிராமத்தான், படிக்காதவன் அப்படியல்ல. நீ விழுந்து விட்டால் ஓடி வந்து தூக்கி விட்டு உதவுபவன். அதனால் தான் உனது அப்பாவும்-அம்மாவும் உன்னை படிக்க வைத்தார்கள். 

புடித்துவிட்டு வேலைக்கு போய் நிறைய சம்பாதிக்கிறிர்கள். திருமணம் ஆகி கணவனுடன் தனிக்குடித்தனம் சென்று விட்ட உங்களை காண உங்களது அப்பாவும், அம்மாவும் இப்படி பேருந்தில் உங்களை பார்க்க வந்துக்கொண்டிருப்பார்கள். அவர்கள் கிராமத்து மனிதர்கள் பெண் படித்து விட்டாள், சம்பாதிக்கிறாள் அவளுக்கு தகுந்தார்கள் போல் மாற வேண்டும்மென மாற மாட்டார்கள். 

உங்களைப்போல் பகட்டாக வாழ பழகியவர்கள் அல்ல. உற்றார், உறவினர்களை மதித்து சக மனிதனின் சுக துக்கங்களில் கலந்து கொண்டு தோள்கொடுப்பவர்கள். பேருந்து பயணத்தில் உங்களைப்போன்ற ஆசிரியர் பெண்மணி திட்டியிருந்தால் உங்களிடம் திட்டுவாங்கிய அந்த பெண்களை போல் தான் அவர்களும் அமைதியாகயிருந்திருப்பார்கள். அவர்கள் படிக்காதவர்கள். மற்றவர்களின் கஸ்டத்தை புரிந்தவர்கள். உங்களைப்போல் படிப்பு என்ற திமிர் பிடித்தவர்களல்ல. 

மனிதரை மனிதராக பாருங்கள். மிருகமாக பார்க்காதிங்கள். நாளை உங்களை இந்த சமுகம் இதை விட கேவலமாக பார்க்க தொடங்கி விடும். 

திங்கள், ஆகஸ்ட் 02, 2010

மீண்டும் பெரியார் வர வேண்டும்.இறந்து போன மனுஷன் எப்படிய்யா வருவாரு என தலைப்பை படித்து விட்டு முனுமுனுப்பது கேட்கிறது. ராமசாமிநாயக்கர் என்ற வெண்தாடி வைத்த அந்த கிழவன் தன் செயல்களால் மக்களால் மரியாதையாக பெரியார் என அழைக்கப்பட்டார். தமிழகத்தில் எந்த இயக்கம், கட்சிகள் தோன்றினாலும் பெரியார் என்ற பெயரை உச்சரிக்காமல் இயக்குவதுயில்லை. காரணம் அந்த பெயருக்கு அவர் உருவாக்கிய கொள்கைக்கு இருக்கும் வலிமை அப்படி.

அந்த வெண்தாடி கிழவன் உடல் மண்ணுக்கு போனது, அவரது கொள்கைகள் காற்றில் கரைந்து வருகிறது. அந்த கொள்கைகள் கரையாமல் பார்த்துக்கொள்ளவும், அந்த கொள்கைகளை பரப்பவும் தேவை மற்றொருமெரு வீரியமான ஆசாமி.

அவர் யாராக வேண்டுமானாலும் இருக்கட்டும், இந்துவாக, முஸ்லிமாக, கிருஸ்த்துவராக, பௌத்தராக, ஆணாக-பெண்ணாக யாராக வேண்டுமானாலும் இருக்கட்டும் ஆனால் அந்த ஒருவர் இந்த சமுகத்துக்கு இப்போது தேவைப்படுகிறார். உங்களது செயல்பாடுகள் அந்த வெண்தாடி கிழவரதை போல் இருந்தால் இச்சமுகம் அவருக்கு தந்த பெரியார் என்ற பட்டத்தை, மரியாதையை இச்சகமுகம் இவருக்கும் தரும்.

ஏன் எதற்க்காக மீண்டும் அந்த வெண் தாடி கிழவன் போல் ஒருவர் வர வேண்டும் என கேட்கிறிர்களா ?.

நிறைய காரணங்கள் இருக்கிறது. சமுகத்தில் மாற்றம் தேவை. மக்களிடம், அரசியல்வாதிகளிடம், அதிகாரிகளிடம் மாற்றம் தேவை. அதனால் தான்.

இன்று பெரியார் கருத்துக்களை, கொள்கைகளை பரப்புகிறேன் என அவரின் சிஷ்யர்களாக, தளபதிகளாக இருந்தவர்கள் காமெடி செய்துக்கொண்டுயிருக்கிறார்கள். அதனால் தான் நாட்டில் பெண்களுக்கு எதிரான வன்முறையும், ஆன்மிகம் பெயரால் மோசடியும் அதிகமாக நடைபெற துவங்கியுள்ளன.

தீவிர ஆத்திகராக வலம் வந்து வீட்டை விட்டு வெளியேறி இந்துக்களின் புனித தளம் எனச்சொல்லப்படும் காசிக்கு சென்று தான் அனுபவ பூர்வமாக அறிந்ததை, பட்டு தெளிந்ததை பக்தியின் பெயரில் மயங்கி கிடந்த மக்களுக்கு எடுத்துச்சொல்லி தெளிவுபடுத்த நாத்திகராக மாறி தனது 94 வயது வரை மூத்திர சட்டியோடு உலகம் முழுக்க பயணமாகி பிரச்சாரம் செய்தவர் ராமசாமி.

கடவுள் சிலைகளை ஊர்வலமாக கொண்டு வந்து செருப்பு மாலை போட்டு செருப்பால் அடித்தவர், தூக்கி போட்டு உடைத்து கடவுள் என்பவர் மாயை அவர் கிடையாது அவர் பெயரை வைத்து வியாபாரம் செய்பவர்களை நம்பி ஏமாறாதிர்கள் என்றார்.


எதிரியையும் நண்பராக பாவித்தவர். தன் வாழ்நாள் முழுவதும் பிராமணியத்தை எதிர்த்து பிரச்சாரம் செய்தவர். மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணக்கும் என்பதை போல பிராமணிய வெறியர் என வர்ணிக்கப்படும் ராஜாஜியுடன் நல்ல நட்புடன் இருந்தார்.

கடவுள் எதிர்ப்பாளராகயிருந்தாலும் தீண்ட தகாதவர்கள் என கிராமத்தின் ஓரத்தில் ஒதுக்கி வைக்கப்பட்ட, தாழ்ந்தப்பட்ட மக்கள் கோயிலுக்குள் போகும் உரிமையை கிராமங்கள் தோறும் சென்று ஆதிக்க சாதியிடம்மிருந்து பெற்று தந்தவர்.

சமுகத்தில் உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்று யாரும்மில்லை என சாதி கட்டுமானத்தில் சிக்கி கிடந்த தமிழகத்தில் தாழ்ந்தசாதிக்காரன் வீட்டில் போய் உண்டு உறங்கி சமத்துவத்தை போதித்தவர். சாதி மறுப்பு திருமணங்களை ஆதரிக்க வேண்டும்மென கூறி போராடி சட்டமாக்கியவர்.

குடும்பத்தில், பள்ளியில், வேலை செய்யும் இடத்தில் என எங்கும் பெண்களுக்கு சரிசமம் தேவை என வலியுறுத்தி போராடியவர். அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதுக்கு என்ற நிலையை மாற்ற போராடி வென்றவர்.

அரசியலில், இயக்கத்தில், சமுகத்தில் பெரியமனிதராக உலாவருபவர்கள் நேர்மையாளராக, தவறு செய்யாதவர்களாக, மக்கள் சேவை செய்பவர்களாக இருக்க வேண்டும்மென வலியுறுத்தியவர்.

மக்களுக்காக தான் அரசாங்கம், அரசுக்காக மக்களல்ல என அரசின் தவறுகளை விடுதலை இதழில் எழுதி மக்களுக்கான உண்மையான விடுதலைக்காக குரல் கொடுத்து போராடியவர்.

காந்தி வாழும் போது உலக தலைவர்கள் அவரை கண்டு பயந்து, நடுங்கிய போது, காந்தியின் தவறுகளை அவரிடமே நேரடியாக சாடியவர். காந்தி சாதி பற்று உள்ளவர் என வெளிப்படையாக உண்மையை பேசி தான் யாருக்கும் அஞ்சியவன் அல்ல சொல்ல வேண்டியதை சொல்பவன் என உணர்த்தியவர்.

கள்ளு கடை கூடாது என்பதற்காக தன் தென்னந்தோப்பில் இருந்த நூற்றுக்கணக்கான தென்னை மரங்களை வெட்டி குடிக்கு எதிராக போரானார்.

மேல் சாதிக்காரர்களுக்கான இயக்கமாக உள்ள காங்கிரஸ் கட்சியை அழிப்பேன் என சபதமெடுத்து அதை தன் வாழும் போதே செய்து காட்டிய மாவீரன்.

கம்யூனிச நாடான ரஷ்யா மக்கள் மீதான தன் கட்டுப்பாடுகளை தளர்த்திக்கொள்ள வில்லையென்றால் அடுத்து வரும் சில ஆண்டுகளில் சிதறி சின்னாபின்னமாகி விடும் என தன் கணிப்பை சொல்லியவர்.

ஆதிக்க சாதியிடம் போராட முடியவில்லை என இந்து மதத்திலிருந்து பௌத்த மதத்திற்க்கு போக முயன்ற அம்பேத்கரை போக வேண்டாம் என் தோழா இங்கிருந்தே போராடு என் தோழா தடுத்தவர்.

இப்படி பல சொல்லிக்கொண்டே போகலாம். இதனால் தான் மக்களால், தலைவர்களால், உலகத்தால் அவர் தந்தை பெரியார் என அழைக்கப்பட்டார். அவர் சொன்னதை அப்போது மக்கள் பெரும்பாலானோர் கேட்டு தெளிவு பெற்றார்கள். இதனால் தான் அவர் இன்றும் வர்ணிக்கப்படுகிறார். பேசப்படுகிறார்.

அவர் பேசப்படுகிறார், ஆனால் அவரின் கொள்கைகள்…………………

தமிழகம் ஆன்மீகவாதிகளின் பிடியில் சிக்கி சீரழிகிறது. மக்கள் ஆன்மீக வியாரிகளிடம் ஓடிச்சென்று அழிகிறார்கள். மூளையை அடகு வைக்கிறார்கள். சாதி மறுப்பு திருமணங்கள் செய்தால் கவுரவ கொலைகள் நடக்கின்றன. சாதி சண்டைகள் ஊருக்கு ஊர் நடைபெறுகிறது. கோயிலில் மட்டுமல்ல அரசு அலுவலகத்தில் கூட தாழ்த்தப்பட்டவன் அதிகாரியானாள் தள்ளி வைக்கப்படும் அவலம் உள்ளது.

சாதி ஒழிய வேண்டும்மென பாடுபட்ட பெரியாரின் வாரிசுகள் தான் கடந்த 30 ஆண்டுகளுக்கும் ( ஜெ ஆட்சி காலம் நீங்கலாக ) மேலாக தமிழகத்தை ஆண்டுவருகிறார்கள். அவர்களின் ஆட்சி காலத்தில் தான் படிக்கும் மாணவர்களுக்கு சாதியை குறிப்பிட்டு மாணவர்களை பிரித்து விடுதிகள் கட்டி தங்க வைக்கப்படும் முறை விரிவானது.

திராவிட தளபதி என வர்ணிக்கப்படுபவரின் ஆட்சி காலத்தில் தான் பாட்டில் சாராயம் சட்டப்படி அனுமதிக்கப்பட்டது. ( மது விலக்கு கொண்டு வருவது பற்றி கலைஞர் பேசியுள்ளார். அமுலானால் தலைவர்க்கு தளபதி செய்யும் தொண்டாகயிருக்கும் ).

மக்களுக்காக தான் அரசாங்கம் என்ற நிலை போய் அரசாங்கத்துக்காக மக்கள் என்ற நிலையை உருவாக்கியுள்ளார்கள் அரசியல்வாதிகள். உழைத்து வாழ வேண்டும்மென ஊக்குவித்த பெரியாரின் பூமியில் சோம்பேறிகள் உருவாக்கப்படுகிறார்கள்.

இன்னும், இன்னும் சொல்லலாம். இதனையெல்லாம் மாற்ற வேண்டும். மக்களிடம், அரசியல்வாதிகளிடம், அதிகாரிகளிடம் மாற்றம் கொண்டு வர வேண்டும். அதற்க்கு பதவிக்கு, பணத்துக்கு ஆசைப்படாத தலைவன் தேவை. மக்களுக்காக மட்டுமே போராடும் தலைவன் தேவை. ஆட்சியாளர்களை அதட்டி கேள்வி கேட்கும் தலைவன் தேவை. அந்த தலைவன் வெண்தாடி கிழவரான பெரியார் போல் தேவை. அப்போது தான் சமத்துவம் கிடைக்கும். சிக்கி சீரழியும் பெரியார் பூமி மாற்றம்மடையும்.

ஆபத்தாக உருவாகும் ஆன்மீக வியாபாரிகள்.ஆன்மீகம் லாபகரமான வியாபாரம். அதனால் தான் புதுசு புதுசாக தினுசு தினுசாக ருத்திராட்ச மாலையை கழுத்தில் போட்டுக்கொண்டு ஆசாமிகள் பலர் சாமியார்களாகிறார்கள். நான் சாமியார், நான் சாமியார் என சொன்னால் நம்பமாட்டார்களே என தங்களை பிரபலப்படுத்த, பிரபலப்படுத்திக்கொள்ள சின்ன சாமியார்கள் நோட்டிஸ் போட்டு நான் சின்ன வயசுலயே அம்மன் அருள் பெற்றவன்(ள்), என் நாக்கில் நாற்காலி போட்டு சக்தி குடியிருக்கிறாள் என விளம்பரம் செய்கின்றனர். வசதியான சாமியார்கள் அதையே இணையதளங்கள் உருவாக்கி அதன் மூலம் விளம்பரம் செய்கிறார்கள்.

இவர்கள் பிரபலமாகும் வரை தான் பிரச்சனை. பிரபலமாகிவிட்டால் பணம், புகழ், அரசியல்வாதிகள் என இவர்களை தேடி வருபவர்கள் எண்ணிக்கை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து விடுகிறது. அப்புறம்மென்ன அதற்க்கு முன் அலுமினிய தட்டில் சாப்பிட்டவர்கள் பின் தங்க தட்டில் தான் சாப்பாடு, தங்க செருப்பு, தங்க சிம்மாசனம், விதவிதமான விலை உயர்ந்த கார்கள், வாட்ட சாட்டமான பாதுகாவலர் பாதுகாப்பு என பிரமாண்டம் உருவாக்கி கொள்கிறார்கள். குறிப்பிட்ட சில ஆண்டிலேயே 1000 கோடி, 2000ம் கோடிக்கு அதிபதிகளாகிவிடுகிறார்கள். நினைத்த நாட்டுக்கு பறந்து போய் ஜாலியாக ஜல்சா செய்கிறார்கள்.

சரி எங்கிருந்து இவர்களுக்கு இவ்வளவு பணம் வந்தது, வருகிறது. ஏழை தரும் 5 ரூபாய், 10 ரூபாயால் இவர்கள் இத்தனை கோடிகளுக்கு அதிபதியாக முடியாது. ஆனால், ஏமாந்த இளிச்சவாயன்கள், கொள்ளையடிப்பவர்கள், கொலை செய்பவர்கள், ஏழை மக்களிடம் லஞ்சம் வாங்கும் பெருச்சாளிகள், அரசாங்கத்தை, தொழிலாளிகளை ஏமாற்றி பிழைக்கும் தொழிலதிபர்கள், உடல் உறுப்புகளை காட்டி பணம் பறிக்கும் சினிமா கும்பல்கள், பணக்கார-பதவியாளுக்கு சல்யூட் அடிக்கும் அதிகாரிகள் கும்பல், ஆள்பவர்கள், ஆளபோகிறேன் என்பவர்கள், ஆள்வதை இழந்தவர்கள்யெல்லாம் கடவுள் என இந்த சாமியார்களை வணங்கி இவர்கள் காலடியில் கொட்டும் பணம் தான் இவர்களிடம் கோடிகளாக குவிந்துக்கிடக்கின்றன.

ஏமாற்றி பிழைக்கும் இந்த சாமியார்களின் முகத்திரையை எத்தனை எத்தனை முறை கிழித்தாலும் இவர்களை ஒடுக்க முடிவதில்லை. காரணம் மேலே சொன்ன இந்த பேர்வழிகள் தெரிந்தே அரவணைத்து ஆதரவு தருவதால் தவறே நடக்கவில்லை என்பதை போல மீண்டும் மக்கள் முன் பிரசன்னமாகி பேசி சொகுசாக வாழ்கிறார்கள் இந்த சாமியார்கள்.


நித்தியானந்தா. சில ஆண்டுகளிலேயே மல்டி மில்லியனர் ஆன இளம் சாமியார். ரஞ்சிதா என்ற நடிகையுடன் கட்டிலில் சிங்கம் மான் மேல் பாய்வதை போல காமத்திற்க்காக பாய்ந்ததை வெளிச்சம் போட்டு காட்டப்பட்டதை பார்த்து மக்கள் காறி துப்பினார்கள். சட்டம் தேடியது, சட்டத்துக்கு பயந்து ஒடி ஒளிந்து பின் கைதாகி சிறையில் புலம்பி பின் பெயிலில் வெளியே வந்து இன்று அதே ஆசிரமத்தில் அமர்ந்து பிரசங்கம் செய்கிறார். அதற்க்கு ஜே ஜே என கூட்டம். அந்த கூட்டத்தில் இருந்தது அன்னடம் காய்ச்சிகள் அல்ல. கோடிகளில், லட்சங்களில் புரளும் சினிமா நட்சத்திரங்கள், தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள். இவர்கள் தற்போது நித்திக்கு பிரச்சார பீரங்கிகள், நித்தியை காக்குகள் நந்திகள்.


நித்தியாவது கட்டில் வித்தை மட்டும் தான் காட்டினார். கட்டில் வித்தையோடு கத்தி வித்தை காட்டிய காஞ்சி கம்பெனி அதிபதிகளான சங்கராட்சியார்கள். மாமிகளோடு செய்த கட்டில் வித்தைகளையும், கரன்சி வித்தைகளையும் பகிரங்கப்படுத்திய சங்கரராமன் என்பவரை ரவுடியை ஏவி கடவுளின் வீடு எனச்சொல்லப்படும் கோயிலியே வெட்டி கொன்றார்கள். சட்டத்தின் முன் நிறுத்தி சிறைக்குள் தள்ளப்பட்டு பின் வெளியே வந்த சங்கராட்சாரியார் கம்பெனி தற்போது சைலண்டாக மீண்டும் வியாபாரம் நடத்தி வருகிறது. கொலை வழக்கு நடந்து வருகிறது. இருந்தும் ஆட்சி-அதிகாரத்தில் உள்ளவர்கள், அதிகாரத்தை வளைப்பவர்கள் கூவி கூவி நல்லவரு என காலில் விழுகிறார்கள்.


இவர்கள் மட்டுமல்ல மக்கள் முன்பு அமர்களாக அமர்ந்து வாயிலிருந்து லிங்கம் எடுக்கிறேன் என கண் கட்டு வித்தை நடத்தும் புட்டர்பதி சாய்பாபாவுக்கும் இப்படி பல பிரச்சார பீரங்கிகள் உள்ளார்கள். அரசாங்கமே நல்லது செய்ய பணம்மில்லைங்கிறியாமே?. நான் தர்றன் இந்தா என அரசாங்கத்துக்கு கோடிகளை தெருக்கோடியில் குப்பைகளை கொட்டுவது போல கொட்டுகிறார். சின்ன வயது பெண்களை கற்பழித்து கொலை செய்த சாமியார், ஹவாலா மோசடி செய்யும் சாமியார்கள், தங்கத்தை காட்டி கொள்ளையடிக்கும் சாமியார்கள் என ஊருக்கு ஊர் இவர்கள் உருவாகி தனி அரசாங்கம் நடத்துகிறார்கள். இவர்களை பிரமாண்டப்படுத்த பல மைக் செட் இல்லாத பல வாய்கள் ஊர் சுற்றி வருகிறது.

ஆதிகாலத்தில் மழை, புயல், கூ+ரியன், நிலா போன்றவற்றுக்கு பயந்த மனிதன் நாகரீகம் வளர்ந்து கூட்டமாக வாழ தொடங்கிய போது சில அறிவு ஜீவியான மனிதர்கள், வருங்காலத்தில் மக்கள் கூட்டம் நிறைய தவறு செய்ய ஆரம்பித்துவிடும். உதாரணமாக அடுத்தவன் மனைவியை அபகரிப்பது, ஏமாற்றுவது, கொலை செய்வது, கொள்ளையடிப்பது, ரவுடிஷம், ஊழல் போன்றவற்றில் ஈடுபடுவார்கள். அதை குறைக்க வேண்டும் என்றால் மனிதன் நல்லவனாக இருக்க வேண்டும் அவன் தவறு செய்யக்கூடாது இதைச்சொன்னால் யாரும் கேட்கமாட்டார்கள் என்பதை யூகித்தே கடவுள் என்ற ஒரு பிம்பத்தை ஆதிகாலத்தில் முன்னோர்கள் உருவாக்கி தவறு செய்தால் கடவுள் தண்டிப்பார் என்றார்கள்.


கால சுழற்சியில் தங்களை உயர்சாதி என அடையாளப்படுத்திய சோம்பேறி பூணுல் சக்திகள், கடவுள் என்ற பிம்பத்தை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என யோசிக்க தொடங்கியது. வருங்காலத்த சொல்றன், நிகழ்காலத்த விளக்கறன் என ஓதி சம்பாதிக்க ஆரம்பித்தார்கள். மக்கள் கூட்டத்தில் தவறுகள் அதிகமாக நடக்க தவறு செய்பவர்கள் கடவுளுக்கு காணிக்கை தந்தால் மன்னிப்பார் என அளந்தார்கள். பூணுல் சக்திகள் திட்டத்தில் உண்டியல்கள் உருவானது. தவறு செய்யும் நபர்கள் அதிகமாக அதிகமாக தங்களது பாவத்தை போக்க கடவுளிடம் கெஞ்சி, கொஞ்சி தவறை மன்னிக்க வேண்டும் என தவறின் தன்மைக்கு ஏற்ப பணமாக, பொன்னாக, பொருளாக உண்டியல் மூலம் கடவுள்க்கு பங்கு தர ஆரம்பித்தார்கள். தவறுக்கு ஏற்றாற்போல் காணிக்கைகள் மாறின. கோழிகள் அறுப்பட்டன, ஆடுகள் வெட்டப்பட்டன, தேகத்தில் வளறும் முடியை காணிக்கையாக வெட்டி தந்தார்கள், பரிகாரம் செய்தார்கள். லாபம் மொத்தமும் என்னவோ பூணுல் சக்திகளுக்கு தான்.

காலம் மாற மாற இது நல்ல லாபகரமான தொழில் என தெரிந்துக்கொண்டதோடு கடவுள், பாவம் என்ற ஆயுதத்தை ஏவினால் எவ்வளவு பெரிய ஆளாகயிருந்தாலும் தொபுக்கடிர் என விழுந்து விடுவான் என்பதை உணர்ந்து பலரும் சாமியார்களாக உருவாகி நான் கடவுளின் பிரதிநிதி உங்கள் கோரிக்கையை என்னிடம் வையுங்கள் நான் கடவுளிடம் கொண்டு போய் சேர்க்கிறேன் என கிளம்பினார்கள். இவர்களிடம், அரசியல்வாதிகள் அதிகாரம் வேண்டும்மென்றும், அதிகாரிகள் பதவியுர்வு வேண்டுமென்றும், பணக்காரன் மேலும் பணம் வேண்டும்மென்றும் கோரிக்கை வைத்தார்கள், வைக்கிறார்கள்.

இதை அப்படியே பிடித்துக்கொண்டு அரசியல்வாதிகளை, அதிகாரிகளை, பணக்காரர்களை ஆட்டிப்படைக்க ஆரம்பித்துள்ளார்கள் இந்த ஆன்மீக வியாபாரிகள். இன்று அரசியல்வாதிகளை விட வேகமாக வளர்ந்து கல்வி நிறுவனம், தொழில் நிறுவனம் என உள்நாட்டில் வெளிநாட்டில் சொத்துக்களை வாங்கி கொழிக்கிறார்கள். ஆயிரம், இரண்டாயிரம் கோடி என சர்வசாதாரணமாக புழங்குகிறது இவர்களிடம். இந்த வளர்ச்சி ஏதோ 20 ஆண்டு, 30 ஆண்டுகளில் வந்தது அல்ல. அதிகபட்சம் 10 ஆண்டிற்க்குள் வந்தது.

தினமும் வேர்வை சிந்தி உழைப்பவர்ள், மூட்டை தூக்கி பிழைப்பவர்கள், கல் உடைத்து வாழ்பவர்கள், ஒட்டுநராகயிருந்து கஸ்டப்பட்டு சம்பாதிப்பவர்களால் கூட 10 ஆண்டுகளில் 1 கோடி சம்பாதிக்க முடியாது. ஆனால் கடவுள் என்ற பிம்பத்தை காட்டி பயமுறுத்தி மல்டி மில்லியனராகி வாழும் இவர்கள் இன்று ஆட்சி-அதிகாரத்தில் உள்ளவர்களை ஆட்டி வைக்கிறார்கள். இது தொடர்ந்தால் நாளை இவர்கள் நாட்டை பிடித்து உலுக்க போகும் பெரு வியாதிகாரர்காக மாறிவிடுவார்கள். இவர்களை அடக்கவில்லை என்றால் ஆபத்து மக்களுக்கு தான்.