திங்கள், ஜூன் 27, 2011

அடங்காத காங்கிரஸ்சின் திமிர்.


இந்த கட்டுரை திமுகவுக்கு சார்பான கட்டுரை போல் தோன்றும். அப்படியல்ல…… உண்மைகள் உறங்கும் போது பொய்கள் தாண்டவமாடும் என்பார்கள். அப்படித்தான் திமுக மவுனமாகயிருக்க காங்கிரஸ் குதியாட்டம் போடுகிறது. பாலிமர் தொலைக்காட்சியில் மக்களுக்காக நிகழ்ச்சியில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனிடம் ஒரு நேர்காணல் நடத்தப்பட்டது. அதில் அவர் கூறிய கருத்துக்களை கேட்டபோது, காங்கிரஸ்காரர்கள் திமிர் இன்னும் அடங்கலயே என எண்ண தோன்றியது.

திமுகவால் தான் காங்கிரஸ் தோற்றது. நாங்கள் 63 இடங்கள் வாங்கியதில் தவறேயில்லை. எங்களுடைய பலத்துக்கு நாங்கள் 118 இடங்கள் வாங்கி நின்றிருக்க வேண்டும், அது மக்களுக்கும் நன்றாக தெரியும். காங்கிரஸ் தனித்து நின்றிருந்தால் மாபெரும் வெற்றி பெற்றிருக்கும். குறைந்தது 25 சட்டமன்ற தொகுதியில் வென்றுயிருப்போம் என்றவர். காங்கிரஸ்சால் திமுக தோற்கவில்லை. அவர்களின் குடும்ப ஆதிக்கம் தான் அவர்களை தோற்கடித்தது என்றார். தேர்தல் பிரச்சாரத்தின் போது ஈரோட்டில் நான் கலைஞரின் காலில் விழவேயில்லை. அப்படி விழுந்ததை காட்டினால் அரசியலை விட்டு விலகிவிடுகிறேன் என்றார். திமுக தமிழகத்தில் செத்த கட்சி அதை நான் விமர்சனம் செய்யமாட்டேன் என தேர்தல் முடிவுக்கு பின் அறிவித்தேன். அந்த நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறேன். திமுக செத்த கட்சி. தமிழகத்தில் இனி அதிமுகவுக்கு போட்டி காங்கிரஸ் தான் என்றவர். திமுகவுக்கு போட்டி திக தான். அவர்கள் இருவரும் தான் இனி யாரிடம் அதிக உறுப்பினர்கள் உள்ளார்கள் என சண்டை போட வேண்டும் என்றார் சிரித்துக்கொண்டே.

தற்போதைய முதல்வர் ஜெயலலிதா பற்றிய கேள்விக்கு, அவர் பக்குவப்பட்ட பெண்மணி அவர் தலைமை செயலகம் மாற்றம் பற்றி கூறிய கருத்து என்னை அது 100 சதவிதம் சரியென ஒப்புக்கொள்ள வைத்துவிட்டது என சிலாகித்தார். இதுவரை இளங்கோவன் பேசிய பேச்சுகளை வைத்து சில கேள்விகளை கேட்டார். காங்கிரஸ்சை பகைத்துக்கொண்டால் ‘உள்ளே’ போக வேண்டி வரும் என்பதால் தான் கூட்டணியை விட்டு போக மறுக்கிறார்கள் மானங்கெட்டவர்கள் என நான் பேசவில்லை. கொள்ளையடித்தவர்கள் உள்ளே போக வேண்டி வரும் என்றே பேசினேன் என்றார். அதிமுக ஆட்சியில் கொலை, கொள்ளை, கட்டப்பஞ்சாயத்து, நிலம் அபகரிப்பு எதுவும்மில்லை. சட்டம் ஒழுங்கு சரியாக இருக்கிறது. திமுக ஆட்சியில் இது கொடி கட்டி பறந்தது என திருவாய் மலர்ந்தார்.


அவரின் பதிலும் என் எதிர்விணையும்:
காங்கிரஸ்க்கு 63 இடங்களை ஒதுக்கி திமுக மாபெரும் தவறு செய்தது. அது தான் மக்களிடம்மிருந்து திமுகவை அந்நிய படுத்த மிக முக்கிய காரணம். 63 இடங்கள் கேட்கிறார்கள் என காங்கிரஸ் கூட்டணியை விட்டு வெளியே வருகிறேன் என கலைஞர் அறிவித்தபோது, தமிழகத்தில் திமுகவுக்கு மீது மிகப்பெரிய ஆதரவு அலை எழுந்தது. அதை பயன்படுத்திக்கொள்ள திமுக தவறியதோடு 63 இடங்களை தந்து மானங்கெட்ட கட்சி என்ற பெயரை சம்பாதித்தது. இது திமுக தொண்டர்களை அவமானத்தில் தள்ளியது. ஓன்னும்மில்லாத கட்சிக்கு 63 ஏன் தர வேண்டும் என்ற கேள்வி பாமரன் வரை எதிரொலித்தது. இது தான் திமுகவின் படு தோல்விக்கு முக்கிய காரணம். காங்கிரஸ்சை விட்டு வெளியே வந்திருந்தால் ஆட்சி அமைக்க முடியவில்லை என்றாலும் எதிர்கட்சி அந்தஸ்த்து அளவுக்காவுது வென்றிருப்பார்கள். காங்கிரஸ்சுடன் கூட்டணி வைத்ததன் விளைவு படு பாதாளத்துக்கு போய் இளங்கோவன் எல்லாம் திமுகவை செத்த கட்சி என விமர்சிக்கும் நிலைக்கு வந்துவிட்டது.

அதிமுக ஆட்சியில் கொலை, கொள்ளை, கட்டப்பஞ்சாயத்து எதுவுமே நடக்கவில்லை என பாராட்டு சான்றிதழ் வழங்குகிறார். இதை இன்னும் 1 ஆண்டு கழித்து சொல்லுங்கள் பார்க்கலாம். இப்போதே சொல்ல முடியாத அளவுக்கு தான் நிர்வாகம் உள்ளது என்பதை செய்திதாள்களை கண்டால் தெரியும். தலைமை செயலகம் மாற்றம் என்பது, 2001-06 ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது எடுத்த முடிவு. அப்போது, எந்த இடத்தில் என்பதில் தான் பிரச்சனை ஆரம்பமானது. திமுக ஆட்சி காலத்தில் வேறு ஒருயிடத்தில் கட்டினார்கள். கட்ட போகிறோம் என அறிவித்தபோதே, நான் புது சட்டமன்ற வளாகத்தில் கால் வைக்க மாட்டேன் என்றார். ஆக ஜெயலலிதா இன்று சொல்வதை போல, அரசு துறைகள் வேறு எங்கோ உள்ளது, இடப்பற்றாக்குறை போன்றவையே காரணம் என சொல்வது வடிக்கட்டிய பொய். திமுக கட்டிய கட்டிடத்துக்குள் போக கூடாது என்ற எண்ணம் தானே தவிர வேறுயில்லை.

ஈழ படுகொலையை எந்த தமிழனாலும் மறக்க முடியாது. இதற்க்கு முழு பொறுப்பும் இந்தியாவின் காங்கிரஸ் அரசு தான். அதற்கடுத்து தான் இலங்கை சிங்கள அதிபர் இராஜபக்சே. ஈழ படுகொலையை செய்த இந்திய காங்கிரஸ் அரசு, அதை லாவகமாக தமிழகத்தில் திமுக மீது திருப்பிவிட்டது. தமிழகத்தில் காங்கிரஸ்சை முதுகில் சுமந்ததன் பலனை திமுகவுக்கு கடைசியில் கற்று தந்து விட்டது காங்கிரஸ். காங்கிரஸ் வரலாற்றில் துரோகத்துக்கு தான் முதலிடம். அங்கு கூட்டணி வைக்காதிர்கள் என திமுகவை 10 ஆண்டுகளுக்க முன் எவ்வளவோ எச்சரித்தார்கள். ஆனால் அதை கேட்காமல் கூட்டணி வைத்ததன் பலனை இன்று திமுக அறுவடை செய்கிறது. திமுகவின் தன்மானம், கொள்கை போன்றவற்றை திகார் சிறையில் வைத்துள்ளது காங்கிரஸ்.

ஊழலின் ஒட்டு மொத்த உருவம் எதுவென்றால் அது காங்கிரஸ் தான். ஆனால் நாங்கள் ஊழலுக்கு எதிரானவர்கள், இந்தியாவுக்கே சுத்திரம் வாங்கி தந்தவர்கள் என இளங்கோவன் முதல் எல்லா காங்கிரஸ் தலைவர்களும் பேசுகிறார்கள். அப்படிப்பட்டவர்கள் எதனால் லோக்பால் அமைப்பில் பிரதமரை, ஜனாதிபதியை சேர்க்க மறுக்கிறார்கள். இந்த பதவிக்கு வருபர்கள் என்ன தேவதூதர்களா இல்லை இயந்திரமா ஊழலே செய்யாமல் போக.

1. போர்ஸ் ஊழலில் ஆதாரங்கள் பலயிருந்தும் சாட்சிகளை கைது செய்யாமலும், வங்கி கணக்கை திறந்துவிட்டவர்களும், வழக்கை முடித்துக்கொண்டவர்கள் காங்கிரஸ் ஆட்சியில் தான்.

2. காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோத, போபால் விஷவாயு தாக்குதலில் ஆயிரக்கணக்கான உயிர்கள் பலிவாங்கிய போது அதன் முதலாளிக்கு தனி விமானம் தந்து வழியனுப்பியவர்கள் காங்கிரஸ்காரர்கள்.

3. முத்ரா ஊழல், ஸ்பெக்ட்ராம் ஊழல் என வரிசை கட்டி காங்கிரஸ் மீது குற்றம் சாட்ட முடியும்.

3. கச்சதீவை இலங்கைக்கு தாரை வார்த்தவர்கள் இதே காங்கிரஸ்காரர்கள் ஆண்டபோது தான். இப்படி பலவற்றை பட்டியலிட்டுக்கொண்டே போகலாம். இதெல்லாம் வெளிவாராமல் போனதன் காரணம் புலனாய்வு அமைப்புகள் பிரதமர், ஜனாதிபதி போன்றோரின் கீழ் இருப்பதால் தான். அவை தனித்துயிருந்திருந்தால் பல ஊழல்களில் ஜனாதிபதிகளும், பிரதமர்களும் சிக்கியிருப்பார்கள். அப்படி சிக்ககூடாது என்பதால் தான் லோக்பால் என்ற அமைப்பின் கீழ் இவர்களை கொண்டு வர பயப்படுகிறார்கள் காங்கிரஸ்காரர்கள். இப்படிப்பட்டவர்கள் பேசுகிறார்கள் நாங்கள், இந்தியாவின் நலன் விரும்பிகள், சுதந்திரம் வாங்கி தந்தவர்கள் என்று.

காங்கிரஸ்காரர்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் சுதந்திரத்துக்காக போராடவில்லை என்றாலும் சுதந்திரம் கிடைத்திருக்கும். ஏன் எனில் காங்கிரஸ்சை போல் பல இயக்கங்கள், அமைப்புகள் சுதந்திரத்துக்காக தீவிரமாக போராடின. வலிமையான இயக்கம், பல பணக்காரர்கள், பத்திரிக்கையுலக முதலாளிகள் அந்த இயக்கத்தில் இருந்ததால் நீங்கள் மட்டும் போராடியதாக தகவல்கைள பரப்பினிர்கள். அதோடு,  அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்து மாற்று இயக்கங்கள், பல போராட்டகாரர்களின் வரலாற்றை மறைத்த இயக்கம் தான் காங்கிரஸ். ஆக நீங்கள் ஒன்றும் இந்தியாவை காக்க வந்த தேவதூதர்களில்லை இந்தியாவை விற்க்கும் சபாகேடுகள் என்பதை புரிந்துக்கொள்ளுங்கள்.

திங்கள், ஜூன் 20, 2011

மதுவை ஆதரிக்கும் பாலிவுட் நடிகர்.இந்தியாவில் தினம் தினம் குடிக்காரர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டு வருகிறது. அதிலும் குறிப்பாக தமிழகத்தில் அதிவேகமாக உயர்கிறது. தமிழகத்தில் நகரங்களில், குக்கிராமங்களில் டாஸ்மாக் கடை பந்தாவாக மெயினான இடத்தில் உள்ளது. இந்த டாஸ்மாக் வருமானம் தான் தமிழக அரசை இயக்கிக்கொண்டுயிருக்கிறது.

அரசாங்கம்மே குடியை ஊக்குவிப்பதால் இன்று 14 வயது பையன்கள் எல்லாம் பீர் குடிக்க ஆரம்பித்துவிட்டான். படிக்க வேண்டிய வயதில் வளரும் பருவத்தில் பிள்ளைகள் சீரழிகிறார்களே என இந்தியாவில் எந்த அரசியல் கட்சியும்(பாமகவை தவிர்த்து) இதுவரை கவலைப்பட்டதில்லை. மதுவை ஊக்குவிக்கிறார்களே தவிர அதை குறைக்கவோ, தடுக்கவோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதில் வரும் வருமானத்தை கவனத்தில் கொண்டு  இன்றைய காலகட்டத்தில் மதுவை தயாரிப்பவர்கள் மக்கள் பிரதிநிதிகள் அதனால் தான்.


இந்தியாவில் இலவசங்களை வாரி வழங்கும் அரசுகள் மக்களின் பொருளாதார நிலையை உயர்த்த உழைக்கவில்லை. இந்தியாவில் சில மாநிலத்தில் உள்ள அரசியல்வாதிகளுக்கு இளைஞர்கள் மேல் ஏதே கரிசனை அதனால் மதுவுக்கு தடை போட்டுள்ளனர். அப்படித்தான் மகாராஷ்ட்ராவில், இனி குடிக்கும் வயது 25 என ஒரு உத்தரவு போட்டது. உடனே பாலிவுட் நடிகர் இம்ரான், இது அரசியல் சட்டத்தில் உள்ள அடிப்படை உரிமையை மீறும் செயல். ஓட்டு போடும் வயது 18, கல்யாண வயது 21 ஆனால் குடிக்கும் வயது மட்டும் 25 என முடிவு செய்வது அநியாயம், அக்கிரமம் இதனை எதிர்த்து நீதிமன்றம் செல்ல போகிறேன் என கொக்கறிக்கிறார்.


இவரின் குடும்பத்தில் குடிப்பவர்களுக்கு ஏதாவது வியாதி வந்தால், பிரச்சனையில் சிக்கினால் காப்பாற்ற பணம்மிருக்கிறது. ஏழைகளின், நடுத்தர மக்களுக்கு பிரச்சனையென்றால் காப்பாற்ற யார் இருக்கிறார்கள்.

நடிகரின் இந்த பேச்சுக்கு மீடியாக்கள் முக்கியத்துவம் தருவது அதிர்ச்சியளிக்கிறது. வரபோகும் தலைமுறைக்கு நன்மையென்றால் மீடியாக்கள் குரல் கொடுக்க வேண்டும். தீமையானது என்றால் எதிர்க்க வேண்டும். அதை விட்டுவிட்டு பிரபலமானவர்கள் சொல்கிறார்கள் என்பதற்காக சரியா, தவறா என யோசிக்காமல் ஆதரிப்பது அவமானம். இம்ரான் தவறான ஒரு முடிவு எடுத்து வாதாடுகிறார். அதற்க்கு வடஇந்திய மீடியாக்கள் முக்கியத்துவம் தந்து ஒத்து ஊதுவது அவமானகரமானது.

குடிப்பவர்களின் எண்ணிக்கையை குறைக்க அந்த அரசு அப்படி ஒரு உத்தரவை போட்டுள்ளது நிச்சயம் வரவேற்க்க வேண்டியது. அதற்கான ஆதரவை மீடியாக்கள் உருவாக்கி தர வேண்டுமே தவிர எதிர்ப்பளைகளை உருவாக்கி தரக்கூடாது.

இன்றைய காலகட்;டத்தில், சாலை விபத்துகள், குடும்ப பிரச்சனைகள், சாதி மோதல்கள், கொலைகள் உட்பட பல குற்ற செயல்கள் நடக்கின்றன. இதில் அதிகம் பாதிக்கப்படுவது, அதில் சம்மந்தப்படுவது இளைஞர்கள். இவது தவறானது என யோசிக்கவிடாமல் அவர்களை செய்வது மதுவும் அதை வாங்கி தருபவர்களும் தான். மதுவை ஒழித்தால் நிறைய குற்றச்செயல்கள் குறையும். ஓட்டு மொத்தமாக மதுவை தடுப்பதில் சில சில நடைமுறை சிக்கல்கள் உள்ளதால் தான் குடிக்கும் வயதை 25 என முடிவு செய்யப்பட்டுள்ளது. இதை ஆதரிக்க வேண்டாம், உரிமை பேசிக்கொண்டு எதிர்க்காமல் இருங்கள் அதுவே அடுத்த தலைமுறைக்கு நீங்கள் செய்யும் மிகப்பெரிய உதவி.

உறவுகளை தீர்மானிக்கும் பணமும்-சுகமும்.


இன்றைய நவீன யுகத்தில் மனித வாழ்வை தீர்மானிக்கும் சக்தியாக பணம் பங்கு வகிக்க தொடங்கிவிட்டது. உறவு, காதல், மனைவி, கணவன், பிள்ளைகள் கூட முக்கியமல்ல பணமே முக்கியம், சுகமே லட்சியம் என்ற எண்ணத்திற்க்கு ஒவ்வொருவரும் வர தொடங்கிவிட்டனர். காலங்காலமாக மேல்தட்டு மக்களிடம்மிருந்த இந்த வழக்கம் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு நடுத்தர குடும்பங்களில் கிளை விட்டது. இன்று வெளிநாட்டு மோகத்தால் அதிவேகமாக பரவதொடங்கிவிட்டது.

இந்த வாரம் நக்கீரன் இதழில் வந்துள்ள ஒரு செய்தியை படித்துவிட்டு இன்னும் 10 ஆண்டுகளுக்கு பின் தமிழகம் எப்படியிருக்கும் என யோசித்தபோது அதிர்ச்சியாக இருந்தது.

ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த அமெரிக்காவில் பணிபுரியும் தமிழக இளைஞனுக்கும் அதே ஈரோட்டில் பிறந்து நன்கு படித்த பெண்ணுக்கும் திருமணம் ஈரோட்டில் நடந்துள்ளது. தம்பதிகள் வாழ்க்கையை அமெரிக்காவில் தொடங்கியுள்ளார்கள். ஒரு குழந்தையும் பிறந்துள்ளது. பின் கணவனுக்கு உடன் வேலை பார்க்கும் ஒரு குஜாரத்தி பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது, பெண்ணுக்கு பக்கத்து பிளாட்டில் தங்கியிருந்த தமிழ் இளைஞனுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. அவர்கள் மொழியில் அதற்க்கு பெயர் காதல். குடும்பத்தில் சண்டையோ சண்டை. கணவன் - மனைவியாக அமெரிக்கா சென்றவர்கள் தங்களது ஜோடிகளுடன் ஈரோடு திரும்பியுள்ளார்கள். இதை கண்டு அதிர்ந்த பெரியவர்கள் பஞ்சாயத்து நடத்த அமெரிக்காவுல இதெல்லாம் சகஜம் என்று 4 பேரும் காரணம் கூறியுள்ளார்கள். திருமண பந்தம் முறித்துக்கொண்டு காதலர்கள் தங்களது ஜோடிகளை பதிவு திருமணம் செய்துக்கொண்டு மீண்டும் அமெரிக்கா பறந்துவிட்;டார்கள்.

இதை படித்தபோது வேலைக்கு போனயிடத்தில் அந்நாட்டு கலாச்சாரம் எந்தளவுக்கு நம்மவர்களை மாற்றியுள்ளது என்பதை கண்டு அதிரவேண்டியுள்ளது. பிடித்தவர்களுடன் பிடிக்கும் வரை வாழலாம். பிடிக்காதபோது மற்றொருவருடன் சேர்ந்து வாழலாம் என்ற மேலை நாட்டு கலாச்சாரத்திற்க்கு எவ்வளவு வேகமாக அடிமையாகிறார்கள். அப்படி என்ன பிடிக்கவில்லை பிரிந்து போக?. கணவன்-மனைவி இடையே புரிந்துக்கொண்டு வாழந்தாலே போதும் பிரியவே நேராது. அப்படியிருக்க பிடிக்கல என சொல்வது அபத்தம். என் மனைவியை பிடிக்கவில்லை, என் கணவனை பிடிக்கவில்லை என இவர்கள் சொல்வது உடல்பசிக்காக தானே தவிர வேறில்லை. அதுமட்டுமல்ல, எப்படியும் ஒரு வேலை கிடைத்துவிடும் என்ற எண்ணம். மற்றவர்களை சார்ந்து வாழ வேண்டியதில்லை என்ற படித்த கர்வம். இவர்களை பிரிய வைக்கிறது.

வெளிநாட்டு மனிதர்களின் மனநிலை வேறு. மாற்றான் ஒருவனுக்கு பிறந்த பிள்ளையை தனது மனைவிக்கு பிள்ளை தனது பிள்ளையாக நினைத்து பாசம் காட்டுவார்கள். இந்தியர்கள் குறிப்பாக தமிழர்கள் மனநிலை வேறு. முதல் கணவன்க்கு பிறந்த குழந்தையுடன் நான் இவளை மனந்துக்கொள்கிறேன் என இந்த இளைஞன் கூறலாம் காலப்போக்கில் அப்பெண் சலித்துப்போன பின் குழந்தையிடம் பாசம் காட்டுவானா?, அப்பெண்ணை காலம் முழுக்க நன்றாக கவனித்துக்கொள்வான?. இன்று ஜோடி சேருபவர்கள் நீ வேண்டாம் நான் போறன் என ஒரு குறிப்பிட்ட வயதுக்கு மேல் முடிவு எடுத்து பிரிந்துவிட்டால் அதன் பின் மற்றவரின் நிலை….. இந்தியா என்ன வெளிநாடா முதியோர்களை காப்பாற்ற அரசாங்கம் தெருவுக்கு தெரு காப்பகம் திறந்து சேவை செய்ய.

இந்த போக்கு தொடரும் பட்சத்தில் வெளிநாடுகளில் தமிழ் பிள்ளைகளுக்கு அப்பா யார் என்ற பிரச்சனை வரும். அது கலாச்சார சீரழிவை நோக்கி தள்ளும். ஏற்கனவே வெளிநாடுகளுக்கு போய் அந்நாட்டு குடிமகனாகும் நம்மவர்கள் தங்களது பிள்ளைகளுக்கு தாய் மொழியில் பேச, எழுத, படிக்க கற்று தரவில்லை என்ற நிலையில் இருக்கிறது. இப்போது கலாச்சாரத்தையும் மறக்க வைக்கிறார்கள். இது பரவ பரவ இந்தியாவிலும் இதன் தாக்கம் அதிகமாகி பண்பாட்டை கேள்விக்குள்ளாக்கும் நிலை ஏற்படும்.

6 மாதம் ஒருவன் அ ஒருத்தியுடன் அடுத்த 6 மாதம் இன்னோருவன் அ இன்னொருத்தியுடன் வாழும் வாழ்க்கை வாழ்க்கையல்ல அதற்க்கு பெயர் வேறு……. பணம் சம்பாதிக்கலாம் அது நமது பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் மறந்துவிட்டல்ல என்பதை புரிந்துக்கொள்ள வேண்டும் இளைஞர்-இளைஞிகள். ஏன் எனில் வருங்காலம் உங்களது கரங்களில்……….

வியாழன், ஜூன் 16, 2011

அவளோடு நானிருந்த நிமிடங்களில்……அவள் காட்டிய பாசம் என் இதயத்தில் நிற்க்கிறது. அவள் சொன்ன நம்பிக்கை வார்த்தைகள் இன்னும் என்னை இயக்குகின்றன. அவளின் ஸ்பரிசம் என்னை விட்டு விலக மறுக்கின்றன. அவள் பேச்சு என் காதுகளில் ஒலித்துக்கொண்டே இருக்கின்றன. நான் தவறு செய்யும் போது தண்டனை அனுபவித்தவள் அவள். நான் சாதிக்கும் போது என்னை விட மகிழ்ந்தவள் அவள். நான் பேசவில்லையெனில் அவள் உண்ண மாட்டாள். நான் அழுகிறேன் என்றாள் அவளின் கண்ணில் நீh வடியும், நான் சிரிக்கிறேன் என்றால் அவளின் இதயத்தில் ஆனந்தம் பொங்கும். அவளின் இடுக்கிய கண்களால் என்னை இயக்கியவள். அவள் என்றும் என்னுள் இருப்பவள். அவள் என் ஆனந்தத்தின் வடிகால்.  என் கோபத்தின் குப்பைத்தொட்டி.

அவள் எங்கே இன்று?......... தவறு எங்கே, யாரால் நடந்தது?.

யாராலும்மில்லை…… என்னால் மட்டுமே நடந்தது. வார்த்தைகளில் கவனம்மில்லை என்றால் நம்முள் ஒருவராக இருப்பவர்கள் நம்மை விட்டு விலகி விடுவார்கள் என்பதற்க்கு அவள் ஒரு சாட்சி. உண்மை. நாங்கள் தற்போது விலகி நிற்க்கிறோம். விலகி தான் நிற்கிறோமே தவிர பிரியவில்லை. கண்கள் தான் சந்திக்க மறுக்கன்ற ஒழிய. ஏண்ணங்கள் எங்களை பிரிக்கவில்லை. நான் அவளை விட்டு விலகவும்மாட்டேன். என்னை விட்டு அவளும்  விலகவும்மாட்டால்…………. ஏன் எனில் அவள் என் காதலியல்ல…………..நண்பி.

விலகலுக்கு காரணம், நண்பர்களிடம் பேசும் போது வார்த்தைகளில் வர்ணனை தேவையில்லை. வார்த்தைகளில் கவனமும், உண்மையும் இருந்தால் போதும். கோபத்தை நண்பர்களிடம் தான் காட்ட முடியும். ஒருவரை பற்றி நன்கறிந்தயிடம் நட்பின் குடில். உன் உண்மையான நண்பர்கள் யாரென்றால் உன் முக பாவத்திலேயே உன் நிலையை அறிந்துக்கொள்பவர்கள். உனக்காக தன்னை அர்பரிணிக்காவிட்டாலும் உனக்காக துடிப்பவர்கள். அவர்களே உண்மையான உறுதியான நண்பர்கள்.


கால சுழலில் எது மாறினாலும், பேசிய வார்த்தைகளும், பழகிய நிமிடங்களும், உடன் இருந்த காலங்களும் மறக்க முடியாதது. அவை எல்லா மனிதர்களின் மனதின் ஒரு ஓரத்தில் உயிர் வாழ்ந்துக்கொண்டு தான் இருக்கும். எந்த காலத்திலும் அது மரணித்துவிடாது. ஒரு மனிதனை பாசக்காரனாக்குவது உறவுகள் மட்டுமல்ல நட்பும் அவர்கள் காட்டும் அந்த இனம் தெரியாத அன்பும் தான். அதனால் தான் நாங்கள் விலகியிருந்தாலும் பிரியவில்லை.

குப்புற விழும் கோலிவுட்.


தமிழகத்தில் ஆட்சி மாறும் போது எல்லாம் உச்ச நடிகர் முதல் சுண்டக்காய் நடிகர்-நடிகையர் வரை அப்படியே ஆளும் கட்சியினரின் கால்களில் உடனடியாக குப்புற விழுந்து விடுகிறார்கள். அதற்க்கு முன் ஆளும் கட்சியாக இருந்தவர்களை அதற்க்கு பின் திரும்பி கூட பார்ப்பதில்லை. உச்ச நடிகர் முதல் புதியதாக அறிமுகமாகவும் நடிகர்கள் வரை எல்லோரும் ஆட்சியாளர்களுக்கு ஏற்ப பல்டியடிக்கிறார்கள். இதற்க்கு இயக்குநரோ, கேமராமேனோ அவர்களுக்கு தேவைப்படுவதில்லை. அவர்களாகவே செய்கிறார்கள்.

2011 சட்டமன்ற தேர்தல்;க்கு முன்பு வரை, ரஜினி, கமல் முதல் எல்லா மெஜாரிட்டியான நடிகர், நடிகையர் பாராட்டு விழா நடத்துவது, விருது தருவது, யார் சிறப்பாக பேசினார்கள் என பட்டிமன்றம் வைக்கும் அளவுக்கு அப்போது முதல்வராக இருந்த கருணாநிதியை தலையில் தூக்கி வைத்து கொண்டாடினர். வாக்குபதிவின் போது, இரட்டை இலைக்கு வாக்கு செலுத்திவிட்டு மறுநாளே அதற்க்கு எதிர்ப்பான உதயகூ+ரியன் கருணாநிதியுடன் அமர்ந்து படம் பார்த்தார் உச்சநட்சத்திரம். காரணம், அவரே திரும்ப ஆட்சிக்கு வந்துவிட்டாள் என்ற பயம்.

ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தார். ஒடிப்போய் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தார் விஜய். அவராவது பரவாயில்லை. தேர்தல்க்கு முன்பே அதிமுக ஆதரவாளராகி போனவர். உலக நாயகன் கமல் கருணாநிதி முதல்வராக இருந்தபோது, வாரம் நான்கு முறை சந்தித்தவர். ஆட்சி மாற்றம் ஏற்பட்ட சில தினங்களிலேயே குடும்பத்தோடு போய் தற்போதைய முதல்வரிடம் ஆசி பெற்றார். ஜெயலலிதா ஆட்சி பொறுப்பேற்ற போது ரஜினி மருத்துவமனையில் இருந்தார். சிங்கப்பூரில் அவர் கண்விழித்து பேச தொடங்கிய உடனே ஜெயலலிதாவுக்கு போன் செய்து வாழ்த்து பெற்றார். இப்படி பலப்பல நடிகர்கள் ஆட்சி மாற்றம் வந்தவுடனே குப்புற கவிழ்கிறார்கள். இது ஒவ்வொரு முறை ஆட்சி மாற்றம் ஏற்படும் போதும் காணும்நிலை தான். இந்த முறை ஜெட் வேகத்தில் இந்த மாற்றம் நடந்தது.

ஏன், எதனால் இந்த நிலை?.

சம்பாதிப்பதை காப்பாற்றிக்கொள்ள, தங்களது தொழில்களை காப்பாற்றிக்கொள்ள, ஆளும் கட்சி ஆதரவாளர் என்ற பிம்பத்தை காட்டி பஞ்சாயத்து செய்ய, தங்களது இல்லீகல் தொழில்களை தடையின்றி செய்ய, வாங்கும் கறுப்பு பணத்தை பதுக்க……….. இப்படி பல வழிகளுக்காக தங்களை சினிமா நட்சத்திரங்கள் ஆளும் கட்சியாக யார் வருகிறார்களே அவர்களது காலில் விழுகின்றனர். தங்களை காப்பாற்றிக்கொள்கின்றனர்.இவர்கள் நடிக்கிறார்கள் என்பது ஆட்சியாளர்களுக்கும், மக்களுக்கும் நன்கு தெரியும். நடிகர்கள் நடிக்கத்தான் செய்வார்கள் என மக்கள் அதை பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. அரசியல்வாதிகள் ஆளுக்கொரு சேனல் வைத்திருப்பதாலும், படம் தயாரிப்பதாலும் ஆட்சி பொறுப்புக்கு வரும்போது சினிமா உலகம் காலில் விழும் போது கை கொடுக்கின்றனர். இப்போதும் அதுதான் நடந்தது. ஆனால் இந்த முறை ஜெயலலிதா, இவர்களை நாம் எட்டி உதைத்து போ என்றாலும் போகமாட்டார்கள். அதனால் இவர்கள் வழிக்கு நாம் போககூடாது என முடிவு செய்ததாலோ என்னவோ, பாராட்டு விழா எடுக்க ஆசைப்படுகிறோம் என கோலிவுட் வைத்த ஜாங்கிரியை வேண்டாம் என ஒதுக்கிவிட்டார். இதை கண்டு கோலிவுட் அதிர்ந்து நின்றாலும் ஜெவின் மனம் குளிரும்படியான வேலைகளை செய்ய தொடங்கிவிட்டனர். எப்படியும் அவரை பாராட்டு மேடையில் ஏற்ற தயாராகின்றனர்.

கோலிவுட்டின் நாடகம் ஆரம்பமாகிவிட்டது.

செவ்வாய், ஜூன் 14, 2011

சமச்சீர் கல்வியில் நடக்கும் நாித்தனம்.


நீதிமன்றங்களில் வழங்கப்படும் தீர்ப்புகளை விமர்சனம் செய்தால் அது நீதிமன்ற அவமதிப்பாகும் என்கிறார்கள். இருந்தும் உச்ச நீதிமன்றத்தின் ஒரு கருத்தை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. 

சமச்சீர் கல்வி திட்டம் என்பது உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தான் தமிழகத்தில் உருவாக்கப்பட்டது. கடந்த திமுக அரசு அதற்காக ஒரு குழுவை அமைத்து பாடத்திட்டங்களை உருவாக்கியது. அது ஏற்புடையதாக உள்ளதா என ஆராய்ந்து ஏற்றுக்கொள்ள ஒப்புதல் அளித்தது. 

கடந்த ஆண்டு முதல் 1 ஆம் வகுப்பு மற்றும் 6 ஆம் வகுப்பில் சமச்சீர் கல்வி பாடதிட்டம் நடைமுறைக்கு வந்து மாணவ சமுதாயம் படித்து முடித்துவிட்டது. இந்த ஆண்டு முதல் எல்லா வகுப்புக்கும் சமச்சீர் கல்வி அமல்படுத்தப்படும் என கடந்த ஆண்டே முடிவு செய்யப்பட்டு அதன் படி 200 கோடிக்கும் அதிகமாக செலவு செய்து பாடத்திட்டங்கள் அச்சடித்து பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டன. 

இந்நிலையில் தான் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு அதிமுக ஆட்சி வந்தது. வந்த உடனே முதல்வரான ஜெயலலிதா. சமச்சீர் கல்வி முறைக்கு தடை விதித்தார். அதற்க்கு அவர் கூறிய காரணம், பாடத்திட்டம் தரமானதாகயில்லை. தமிழ் பாடத்தில் திமுக தலைவர் கருணாநிதியின் புகழ்பாடப்பட்டுள்ளது என்றார். 

அந்த பாடத்தை நீக்குவதாக அறிவித்துவிட்டு சமச்சீர் கல்வி திட்டத்தை தொடர்ந்துயிருக்கலாம். ஆனால் அப்படி செய்யாமல் அத்திட்டத்தையே நிறுத்துவதாக அறிவிக்கப்பட்டது. திமுக தொடங்கிய திட்டத்தை நாம் செயல்படுத்த கூடாது என்ற அதிமுகவின் எண்ணம் தானே தவிர வேறுயில்லை. ( இதற்க்கு முன் ஒரு கட்டுரையில் பார்ப்பனியத்தின் சதி என்று கூறியிருப்பேன் அதுவும் ஒரு காரணம்)

இது சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்காக, தமிழக அரசை எச்சாித்த நீதிபதி, எதை வைத்து தரமானதுயில்லை என முடிவு செய்தீர்கள் என சரமாாாியாக கேள்வி கேட்டு இந்த ஆண்டே சமச்சீர் பாடத்திட்டத்தை அமுல்படுத்த வேண்டும் என உத்தரவிட்டார். அப்படி அவர் சொல்ல காரணம் தமிழக அரசியல் களத்தை நன்கு அறிந்ததாலே அப்படி ஒரு உத்தரவை அவர் சொல்லியிருப்பார் என எண்ணுகிறேன். 

இதனை எதிர்த்து கேவியட் மனுவாக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது தமிழகரசு. உச்சநீதிமன்ற நீதிபதிகள் மனுவை விசாாித்தவர்கள் சமச்சீர் பாடத்திட்டத்தை ஆராய தலைமை செயலாளர் தலைமையில் குழு ஒன்றை நியமித்துள்ளது. அதில் அரசின் பள்ளி கல்வித்துறையை சார்ந்தவர்கள் இருப்பார்கள் என அறிவித்தது. அடுத்து 2 வாரத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தில் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என கூறியுள்ளது. 3 வாரம் கெடு தந்துள்ளது. 

கொஞ்சம் கூட மாணவ சமுதாயத்தை பற்றி சிந்திக்காத நிலையை தான் நீதிபதிகளின் கருத்தில் காண முடிகிறது. காரணம். அதிமுக ஆட்சி சமர்ச்சீர் பாட திட்டத்தை நிறுத்தி பழைய பாட திட்டம் தொடர.......... அதற்காக பாட நூல்கள் அச்சடிக்க 15 நாள் லீவு விடப்பட்டது. இதனால் மாணவர்களின் படிப்பு 15 நாள் கெட்டுள்ளது.

ஜீன் 15ந்தேதி பள்ளிகள் திறக்கப்பட்டு பளளிகள் நடைபெறவிருந்த நிலையில் வழக்கு உச்சநீதிமன்றம் சென்ற நிலையில் 3 வாரத்திற்க்கு தீர்ப்பை ஒத்தி வைத்துள்ளது. 

இந்நிலையில் மாணவ சமுதாயம் இந்த 3 வாரத்திற்க்கு எந்த பாடத்தையும் படிக்காமல் அப்படியே இருக்கம் நிலை. இதனால் 21நாள் மாணவர்களின் படிப்பு பாழானது தான் மிச்சம். தீர்ப்பு வந்தபின் சமச்சீர் பாடத்திட்டம் என்றால் பரவாயில்லை உடனே பாடம் நடத்த தொடங்கிவிடலாம். பழைய பாடத்திட்டப்படி பாடம் நடத்த வேண்டும் என்றால் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பாட புத்தகம் அச்சடிப்பு தொடங்க வேண்டும், அந்த பாட புத்தகங்கள் பள்ளிகளுக்கு அனுப்பி மாணவர்கள் கையில் கிடைக்க வேண்டும் அதுவரை பாடம் படிக்காமல் விட்டத்தை பார்த்துக்கொண்டு இருக்க வேண்டும் என்ற நிலையை உருவாக்கி தந்துள்ளார்கள் நீதிபதிகள். 

தமிழகத்தின் அரசியல் நிலை தொியாமல் வழங்கப்பட்ட தீர்ப்பா அ பிராமணியத்தின் சதி திட்டமா ? அது அந்த நீதிபதிகளுக்கே வெளிச்சம்.

செவ்வாய், ஜூன் 07, 2011

பி.ஜே.பிக்கு உதவும் காவியுடை கார்ப்பரேட் பாபா.பாபா ராம் தேவ். காவியுடை தரித்த கார்ப்பரேட் தியான குரு. இவரை தான் தற்போது ஆங்கில, வடஇந்திய ஊடகங்கள் இந்தியாவின் நாயகனாக, நாட்டை சீர்படுத்த வந்த தேவதூதனாக அடையாளப்படுத்துகிறார்கள்.  ஊழலுக்கு எதிராக முண்டா தட்டுகிறார். ஊழலுக்கு எதிராக போராடுவதை வரவேற்க்கிறோம். ஆனால்….. பாபா பின்னால் இருப்பவர்கள் யார்? அவரின் நோக்கம்மென்ன ? என ஆராய வேண்டிய தருணம்மிது.

பாரம்பரிய கொள்ளைக்காரர்களான காங்கிரஸ்க்கு போட்டியாக உருவாகி ஆட்சியை பிடித்து கொள்ளையடித்த மத தீவிரவாதி கட்சியான பி.ஜே.பி தலைவர்களும், இந்துத்துவாவாதிகள் தான் பாபா பின்னால் அணி வகுத்து உள்ளார்கள். இவர்களின் குறி அடுத்து எப்படியாவது மீண்டும் மத்திய ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற வெறி. இதற்க்காக ஊழல்க்கு எதிராக கொடி பிடிக்க முயன்றார்கள். தாங்கள் முன்னின்றால் யாரும் உடன் வரமாட்டார்கள் என அறிந்தே கார்ப்பரேட் சாமியாரை களம்மிறக்கினார்கள்.

பாபா ராம்தேவ். அரியாணா மாநிலத்தில் பிரமாண்டமான முறையில் மாளிகை கட்டி அங்கிருந்து தியான வகுப்புகளை நடத்துகிறார். பலாயிரம் கோடிக்கு அதிபதி இந்த துறவி. மிக சமீபத்தில் பாரத் சுவா அபிமான் என்ற பெயரில் ஊழல் எதிர்ப்பு அமைப்பை ஆரம்பித்தார். அதற்க்கு முன் இவர் உலகத்தில் இந்து மதமே சிறந்தது. மற்ற மதங்கள் சரியானவை அல்ல என திருவாய் மலர்ந்தவர். அதோடு  இந்தியாவில் இந்தி மொழி மட்டுமே இருக்க வேண்டும் என சுதேசி சிக்சா என்ற பெயரில் அமைப்பு ஏற்படுத்தி அதன் மூலம் இந்தி மொழியை பரப்பி வருபவர். ஏற்கனவே ஆயுர்வேத மருந்து மோசடி சர்ச்சையில் சிக்கயவர். கறுப்பு பணத்துக்கு எதிராக களமிறங்கி ஊழலை ஒழிக்க இவர் வைக்கும் வாதம் நகைப்புக்குரியதாக உள்ளது. அதாவது ஊழலை ஒழிக்க 500 ரூபாய், 1000 ரூபாய் தாள்களை அச்சடிக்க கூடாது என்கிறார். மூட்ட பூச்சிக்கு பயந்து வீட்டை கொலுத்த சொல்லுகிறார்.

இந்த பாபா தான் ஊழல்க்கு எதிராக உண்ணாவிரதத்துக்கு நேரம் குறித்தார். ஊழல் என்றாலே காங்கிரஸ் பெயர் தான் நினைவுக்கு வரும். அந்த கட்சி ஆட்சியில் அவர்களிடம் போய் ஊழலை ஒழிக்க லோக்பால் சட்டமசோதாவை நிறை வேற்ற வேண்டும் என கேட்பது வேடிக்கையானது, விநோதமானது. ஆனால் அதைத்தான் பாபா செய்தார். 5 கோடி ரூபாய் செலவு செய்து பந்தல் அமைத்து பாடோபடமாக ஊழல்க்கு எதிராக உண்ணாவிரதம் இருந்தார். வேணாம் விட்டுடுய்யா என மத்திய காங்கிரஸ் அரசு கெஞ்சியது. முடியாது என வீம்பு செய்தவரை எதிர் பார்க்காத நேரத்தில் இரவு நேரத்தில் உண்ணாவிரத பந்தலுக்குள் புகுந்த டெல்லி காவல்துறையினர் அந்தயிடத்தை மல்யுத்த பூமியாக்கி எல்லோரையும் தூக்கி வெளியே போட்டது. பாபாவை டெல்லிக்கு வெளியே தூக்கிம் போய் கடாசிவிட்டு டெல்லிக்குள் நுழைய கூடாது என தடை போட்டு காவலுக்கு இரண்டு பேரை நிறுத்துவிட்டு வந்துவிட்டார்கள்.


இதை கண்டு கொதித்து போனது பி.ஜே.பி, அராஜகம் என்றது. காங்கிரஸ்சோ, பாபா பி.ஜே.பியின் கிளை என சாடியது. உண்மையில் பாபா காவியுடை தரித்தவர்களின் கீ. ஆட்சியை பிடிக்க அவரை பயன்படுத்துக்கிறார்கள். மற்றப்படி அவர் மக்களை காக்க வந்த தேவதூதன் அல்ல.

அதனால் பாபாவை வைத்து மோதிக்கொள்ளும் இந்த இரு கோஷ்டியுமே இந்த விவகாரத்தில் முதலில் வாயை முட வேண்டும். அடுத்து தாங்களை யோக்கியவான்களாக காட்டிக்கொள்ள அறிக்கை விடும் இவர்களும் ஊழலும் பிரிக்க முடியாதவர்கள். காந்தி காலம் முதலே பணக்காரர்களுக்கு பாய் விரித்தவர்கள் காங்கிரஸ்காரர்கள். காந்தி இறக்கும் வரை அன்றைய இந்தியாவில் பணக்காரராக விளங்கிய பிர்லா மாளிகையில் தான் தங்கியிருந்தார். நேரு காலத்தில் பல ஊழல்கள்,  இந்திராகாந்தி காலத்தில் அவரது இளைய மகன் சஞ்சய் காந்தி செய்யாத ஊழல்யில்லை. ராஜிவ்காந்தி காலத்தில் போபர்ஸ் ஊழல், நரசிம்மாராவ் காலத்தில், பங்கு சந்தை மோசடி, சோனியா காலத்தில், ஸ்பெக்ட்ரம், ஆதர்ஷ் வீடு, காமன்வெல்த் போட்டியில் ஊழல்.


இவர்களுக்கு போட்டியாக 2 முறை ஆட்சியில் இருந்த பி.ஜே.பியினர் கார்ப்பரேட் முதலாளிகளுகு கால் பிடித்துவிட்டு குளிர் காய்ந்தவர்கள். முத்திரை தாள் மோசடி, ராணுவ வீரர்களுக்கான சவப்பெட்டி ஊழல் என பட்டியலிட்டுக்கொண்டே போகலாம். அந்தளவுக்கு இரண்டு கட்சிகளுமே ஊழல் செய்வதில் போட்டி போட்டன. தற்போது இரண்டு கட்சிகளும் தாங்கள் ஏதோ யோக்கியவான்கள் போல் பேசுகின்றனர்.

கறுப்பு பணத்தை மீட்க வேண்டும் என குரல் கொடுக்கிறார்கள். இந்த அரசியல்வாதிகளிடமும், இவர்களின் பினாமிகளாக உள்ள தொழிலதிபர்களிடமும், சாமியார்களிடமும் தான் ஊழல் பணம் முதலீடு செய்யப்பட்டுள்ளது. வெளிநாட்டு வங்கிகளில் வைப்பீடு செய்யப்பட்டுள்ளது. அறிந்தும், அறியாதது போல் சும்மா பேச்சுக்கு அறிக்கை, அர்ப்பாட்டம் செய்துக்கொண்டுள்ளார்கள். ஆட்சியை பிடிக்க ஊழல் எதிர்ப்பு என்ற ஆயுதத்தை பி.ஜே.பியும், ஆட்சியில் நடப்பதை மறைக்க அதை அரசியலாக்கும்  இந்த அரசியல்வாதிகள் என்று திருந்துகிறார்களோ அன்று தான் இந்தியாவுக்கு விடிவுகாலம். இல்லையேல். இப்படிப்பட்ட கோமாளி நாடகங்களை நாம் பார்த்துக்கொண்டு இருக்க வேண்டியது தான்.

அரை நிர்வாணம் வேண்டி………. முழு நிர்வாண போராட்டம்………


லண்டனில் உள்ளது வெர்செஸ்டர் கல்லூரி. இக்கல்லூரி உலகின் பிரபலமான ஆக்ஸ்போர்டு பல்கலைகழகத்தின் நிர்வாகத்தின் கீழ் உள்ளது. இக்கல்லூரியில் ரெட் க்ராஸ், புளு க்ராஸ், என்.எஸ்.எஸ் போல பிரேக் க்ளப் என ஒரு குழு உள்ளது. இக்குழுவில் ஆண்-பெண் இருபாலரும் அடக்கம். இக்குழு கடந்த 3 ஆண்டுகளாக புதன்கிழமை தோறும் மதியம் 3 டூ 4 மணியளவில் கல்லூரியில் உள்ள லைப்ரரியில் கூடுகிறார்கள். படிக்கறதுக்காக இருக்கும் என நினைத்தால் உங்களைப்போல் ஒரு முட்டால் வேறுயாரும்மில்லை. பின்ன……… படிப்பவர்களின் மன உளைச்சலை, மன சஞ்சலத்தை குறைப்பதற்காக.

எப்பூடி………

குழுவில் உள்ள ஆண்-பெண் இருபாலரும். லைப்ரரிக்குள் வந்ததும் ஒவ்வொருவரும் சத்தமில்லாமல் தங்களது மேலாடைகளை கழட்டி அரை நிர்வாணமாகுவார்கள். ஆப்படியே நூலகம் முழுவதும் சுற்றி சுற்றி வருவார்கள். யாருக்கும் எந்த தொந்தரவும் தர மாட்டார்கள். 4 மணிக்கு உடைகளை அணிந்துக்கொண்டு கிளம்பிவிடுவார்கள். ஆரம்பத்தில் இக்குழுவில் ஒரு சிலரே இருந்துள்ளனர். இப்போது இக்குழுவில் 50க்கும் அதிகமானனோர் உள்ளானர்.

பெல் அடித்தபின் மெல்ல மெல்ல பிக்கப்பாகும் ஏ படங்களை போல நூலகத்தில் நடக்கும் ஷோவை பற்றிய தகவல் கல்லூரி வளாகத்தில் பரவியது. இதை காண ஜொல் விட்டுக்கொண்டு மாணவ - மாணவிகள் க்யூ கட்டி நின்று சக மாணவ-மாணவிகளின் அரை குறை அந்தரங்கங்களை ரசிக்கின்றனர். இதனால் வாரந்தோறும் புதன்கிழமையானால் லைப்ரரியில் மூச்சு விட முடியாத அளவுக்கு முண்டியக்கிறது கூட்டம். 

புள்ளைகளுக்கு என்னமா படிப்பு ஆர்வம் என மகிழ்ந்த பேராசிரியர்கள் குரூப்க்கு இது தெரியவர கையை பிடித்து இழுத்தும் பாடம் படிக்க வர மறுத்துள்ளார்கள். சில வயதான பேராசிரியர்களும் பசங்களோடு சேர்ந்துக்கொண்டு ரசித்துக்கொண்டுள்ளனர். எட்டி எட்டி பார்த்தும் சரியாக பார்க்க முடியாத யாரோ ஒரு பெருசு பசங்க கெட்டுப்போறாங்க என நிர்வாகத்திடம் போட்டு தர ஸ்டூடன்ஸ் படிப்பு பாதிக்கப்படுகிறது அதனால் அரை நிர்வாண போஸ் கூடாது என மெயில் மூலம் எச்சரித்து தடை செய்துவிட்டது. இதை கேட்டு கொதித்து எழுந்த பிரேக் பாஸ்ட் டீம். இது எங்கள் உரிமையில் தலையிடும் செயல். எங்களின் இந்த சேவையால் மாணவ-மாணவிகளின் மனம் அலை பாய்வது(!) தடைபட்டுள்ளது, மன அழுத்தம் குறைந்துள்ளது. இப்போது மாணவ-மாணவிகள் நன்றாக படிக்கிறார்கள்(!), எங்களால் அவர்களுக்கு எந்த தொந்தரவும்மில்லை அதனால் தடையை நீக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

தடை தொடர்ந்தால் அரை நிர்வாண சேவை வேண்டி முழு நிர்வாண போராட்டம் நடத்த வேண்டி வரும் என எச்சரிக்கையும் விடுத்துள்ளார்கள்.…………


தயாநிதியின் தள்ளாட்டம். கரையும் சன் மதிப்பு.


திமுகவின் இளம் தலைவர் என ஆங்கில, வட இந்திய ஊடகங்கள் சன் டிவியின் இரண்டாவது உரிமையாளர் தயாநிதிமாறனை வர்ணித்தது. திமுகவை புதிய பாதையில் கொண்டு செல்கிறார் என தூக்கி வைத்து கொண்டாடினார்கள். அந்த தயாநிதிமாறன் ஆந்திராவில் உடன் இருந்தே கூ+ழ்ச்சி செய்து மாமனாரிடமிருந்த முதல்வர் பதவியை பறித்து தனதாக்கி கொண்டது போல……… தாத்தாவிடம் உள்ள முதல்வர் பதவியை பறித்து தான் அந்த நாற்காலியில் அமர ஆசைப்பட்டார். கருத்து கணிப்புகளை வெளியிட்டார். அழகிரியை டம்மியாக்கினார். அதை சகித்துக்கொள்ள முடியாத அழகிரி அன் கோ. மதுரை தினகரன் அலுவலத்தை நொறுக்கி 3 பேரை உயிரோடு எரித்தார். உடனே இதற்க்கு பழி வாங்க தான் சார்ந்த கட்சியின் ஆட்சியவே கலைக்க முற்பட்டார் தயாநிதிமாறன். அரசியல் களத்தில் கத்து குட்டி தயாநிதியைப்போல் 100 தயாநிதிமாறனை கண்டவர் கருணாநிதி.

எரிவதை புடுங்கினால் கொதிப்பது அடங்கும் என்பதை உணர்ந்து மாறனிடமிருந்த மத்திய அமைச்சர் பதவியை பறித்தார். செத்தப்பாம்பாகி சீண்டுவார்யில்லாமல் கிடந்தார். சன் க்கு போட்டியாக கலைஞர் மீடியா உதயமானது. மோதல் தீவிரமானது. திமுகவை மறைமுகமாக பழிவாங்க முடிவு செய்தார்கள் மாறன் பிரதர்ஸ். காங்கிரஸ் கொம்பு சீவி விட்டது. 2ஜி ஊழல் விவகாரத்தில் மாற்று கட்சி முகாம்களுக்கே போய் டாக்மெண்டுகளை தந்தார்கள். தங்களது ஊடக நண்பர்கள், பாட்னர்கள் மூலம் விவகாரத்தை ஊதினார்கள். விவகாரம் பெரிதாகி, சிக்கலானது.

திடீர் திருப்பமாக இதயம் கனிந்தது, கண்கள் பனிந்தன. குடும்பங்கள் ஒன்றாகின. ஆனால் நீரில் ஒட்டாத எண்ணெய்யானார்கள் மாறன் சகோதரர்கள். போட்டியாகவுள்ள கலைஞர் தொலைக்காட்சி கூடாரத்தை காலி செய்ய முடிவு செய்தார்கள் மாறன் அன் கோ. அதற்கான காய் நகர்த்தல் வடநாட்டில் நடந்தது. அவர்கள் நினைத்ததை போலவே, ரெய்டு, ராஜினாமா, ராசா, கனிமொழி கைது என வரிசை கட்டியது. தேர்தலில் திமுக தோற்றது.

சந்தோஷமாக தான் இருந்தார்கள் மாறன் அன் கோ வினர். வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு என்பதை புரிந்து கொள்ள தவறிய மாறன் பிரதர்ஸ்சை புரிய வைத்து விட்டார் சட்ட நிபுணர் பிரசாந்த்பூஷன். 2ஜி ஊழல் விவகாரத்தில் தயாநிதிமாறன்க்கு பங்கு உள்ளது என நீதிமன்றம் சென்றார். பாஜகவை சேர்ந்த நாடாளமன்ற பொது கணக்கு குழு தலைவர் முரளிமனோகர்ஜோஷி, மாறன் காலத்தில் தான் 2ஜி ஊழல் ஆரம்பமானது என குற்றம் சாட்டினார். அதற்க்கு சாட்சியாக தொழிலதிபரான முன்னால் ஏர்செல் ஓனர் சிவசங்கரன் வந்து நிற்க்கிறார்.

அடுத்ததாக 2005ல் தனது அமைச்சர் பதவியை தவறாக பயன்படுத்தி அதி உயர் அழுத்தம் கொண்ட 320க்கும் அதிகமான இணைப்பு கொண்ட ஐ.எஸ்.டி வசதிகொண்ட தொலைபேசி எக்ஸ்சேஞ்ச் தயாநிதிமாறனின் போட்கிளப் வீடு டூ சன் டிவி அலுவலகத்துக்கு இடையே செயல்பட்டது. இதனால் அரசுக்கு 440 கோடி வருவாய் இழப்பு என்ற பூதம் கிளம்பியது. அய்யய்யோ அப்படியெல்லாம் இல்லை என்றது அமுல்பேபி. இதோ ஆதாரம் என பக்கம் பக்கமாக காட்டினார்கள். இல்லையே என் பெயரில் ஒரே ஒரு இணைப்பு மட்டும் தான் உள்ளது என சான்று காட்டினார். அது பொய் என முகத்திரையை கிழிக்கப்பட்டது.

திமுகவை நோக்கி வீசிய ஆயுதம் பூமராங் போல இப்போது அவர்களை நோக்கி அதி வேகமாக வருகிறது. அதை தவிர்க்க சோனியா, பிரதமர் மன்மோகன் என பலரை போய் பார்த்தார். மாறனால் முடிய வேண்டிய காரியம் முடிந்ததால் அவரை கழட்டி விட்டுவிட்டார்கள். திமுக தலைமை மவுனத்தை கடைபிடிக்கிறது. தப்பிக்க தங்களது தொழிலதிபர் திறமையை பயன்படுத்துகிறார்கள் மாறன் பிரதர்ஸ்.


இந்த பிரச்சனைகள் முடிவதற்க்குள் சன் டிவி மதிப்பு காலி பெருங்காய டப்பாவாகிவிடும் போல்யிருக்கிறது. மாறன்க்கு எதிராக பிரச்சனை கிளம்பாத போது சன் குரூப்பில் 1 ஷேர் மதிப்பு 540 ரூபாய். பிரச்சனை தொடங்கியபின் ஒரேநாளில் 310 ரூபாய்க்கு வந்துவிட்டது. வரும் நாட்களில் அது இன்னும் குறைய வாய்ப்புள்ளது. ஆக தற்போதைய நிலையில் மாறன்களுக்கு இழப்பு சுமார் 2500 முதல் 3000 ஆயிரம் கோடி என்கிறார்கள் பங்கு வர்த்தகர்கள். பங்கு மையமான செபியிடம் இந்த பிரச்சனை தீர்ந்து விடும், தொழில் பாதிப்பு அடையாது, முடங்காது என விளக்கம் தந்து அறிக்கை வெளியிட்டவர்கள். இது அரசியல் பழிவாங்கல் என காரணம் கற்பிக்கிறது மாறன் சார்பான ஊடக வட்டாரம். ராசா, கனி சிக்கியபோது அது ஊழல். மாறன் சிக்கினால் அது அரசியல் பழிவாங்கலாம். எப்புடீ………

கர்ப்பவதி என்னதான் வயித்தை மறைத்தாலும் ஒருநாள் பிள்ளை பிறந்தே தீரும். அதேபோல் மாறன் தன் ஊழலை என்னதான் மறைத்தாலும் வெளியே வந்தே தீரும். சோற்றில் மறைக்கப்பட்ட பூசணியை போல காங்கிரஸ் கட்சியின் ஊழல் வெளிவந்தால் சிறப்பாகயிருக்கும். வெளிவருமா?.

வியாழன், ஜூன் 02, 2011

விசாரணை வலையத்தில் சன் டிவியும் மாறன்களும்.


திமுகவை அழிக்க காங்கிரஸ்சுடன் ரகியமாக பணி செய்த மாறன் குரூப் தற்போது பழைய மோசடிக்காக நீதிமன்றம், விசாரணை என செல்ல போகிறார்கள். இதிலிருந்து தப்பிக்க தங்களது அரசியல், பண, தொழிலதிபர் செல்வாக்கை பயன்படுத்த தொடங்கியுள்ளது. 
மத்திய அமைச்சர் தயாநிதிமாறன் செய்த ஒரு மெகா மோசடி பற்றி தினசாி நாளிதாழ் வெளியிட்டு செய்தியை பாருங்கள்.

டெல்லி: ஏர் செல் சர்ச்சையில் சிக்கியுள்ள முன்னாள் மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் தயாநிதி மாறன் தற்போது மேலும் ஒரு மோசடி சர்ச்சையில் சிக்கியுள்ளார். தொலைத்தொடர்புத்துறை அமைச்சராகப் பதவி வகித்தபோது தனது வீட்டுக்கும், சன் டிவி தலைமையகத்திற்கும் இடையே தகவல்தொடர்புக்காக 323 இணைப்புகளைக் கொண்ட ஒரு சட்டவிரோதமான, பிரத்யேக எக்ஸ்சேஞ்சையே அமைத்துள்ளார். இதில் ஒரு இணைப்பிலிருந்து மட்டும் மாதம் ஒன்றுக்கு 48 லட்சம் தொலைபேசி அழைப்புகள் பேசப்பட்டுள்ளன. இந்த வகையில் மொத்தமாக ரூ. 400 கோடி அளவுக்கு பிஎஸ்என்எல்லுக்கு பேரிழப்பு ஏற்பட்டுள்ளதாக சிபிஐ கணக்கிட்டுள்ளது.
இப்படி ஒரு தனிப்பட்ட சட்டவிரோதமான எக்ஸ்சேஞ்ச் தயாநிதி மாறன் வீட்டில் இயங்கி வருவதாக முன்பே கூறப்பட்டது. ஆனால் அதை அப்போது தயாநிதி மாறன் மறுத்து விட்டார். அந்த சமயத்தில் அவருக்கும், திமுகவுக்கும், கருணாநிதி குடும்பத்திற்கும் நல்லுறவு இருந்தது. அதேபோல காங்கிரஸ் கட்சியும், திமுகவுடன் ஒட்டி உறவாடி வந்தது.இதனால் அந்தப் புகார் குறித்து விசாரிக்கப்படாமலேயே அமுக்கப்பட்டு விட்டது.
இந்த 323 இணைப்புகளையும் தனது பெயரில் இல்லாமல், பிஎஸ்என்எல் பொது மேலாளர் பெயரில் வைத்துள்ளார் தயாநிதி மாறன். தனது வீட்டுக்கும், சன் டிவி தலைமையகத்திற்கும் இடையிலான தகவல் தொடர்புக்காகக இப்படி ஒரு குட்டி எக்ஸ்சேஞ்சையே தனது வீட்டில் நடத்தி வந்துள்ளார் தயாநிதி மாறன்.
இந்த இணைப்புகளை தயாநிதி மாறன் குடும்பத்தினர் வர்த்தக நோக்கத்திற்காகப் பயன்படுத்தி வந்துள்ளனர். இந்த ரகசிய இணைப்புக்காக 3.4 கிலோமீட்டர் தூரத்திற்கு, அதாவது மாறன் வீட்டிலிருந்து சன் டிவி அலுவலகத்திற்கு ரகசியமாக கேபிள்களையும் பதித்துள்ளனர். பொதுச் சாலையில் இந்த கேபிள் போகிறது. இதுவும் சட்டவிரோதமான வேலையாகும்.
ராசாவுக்கு முன்பு தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக இருந்தபோதுதான் சத்தம் போடாமல் அரசின் பிஎஸ்என்எல் நிறுவனத்தை தனது குடும்பச் சொத்து போல பாவித்து இப்படி விளையாடியிருக்கிறார் தயாநிதி மாறன் என்பது சிபிஐயின் குற்றச்சாட்டு. இதுகுறித்து விசாரித்த சிபிஐ இதுதொடர்பாக மாறன் மீது நடவடிக்கை எடுக்குமாறு 2007ம் ஆண்டு செப்டம்பர் 10ம் தேதி கடிதம் எழுதியுள்ளது. அதில் தயாநிதி மாறனின் மோசடிகளை விரிவாக விளக்கியுள்ளது சிபிஐ.
என்ன கொடுமை என்றால் தயாநிதி மாறனின் வீடு உள்ள போட் கிளப் பகுதியிலிருந்து, அண்ணா சாலை வழியாக, இந்த ரகசிய இணைப்ப கேபிள்கள் போய் முடிந்த இடம் திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில். அங்குதான் அப்போது சன் டிவியின் தலைமையகம் இருந்துள்ளது. எனவே இந்த மெகா மோசடி குறித்து திமுக தலைமைக்கும் தெரிந்திருக்கும் என்றே கருதப்படுகிறது.
தனது சொந்த பயன்பாட்டுக்கு என்று கூறி வாங்கிய இந்த 323 இணைப்புகளையும், அண்ணன் கலாநிதி மாறன் நடத்தி வந்த சன் டிவியின் நிகழ்ச்சி ஒளிபரப்புகளுக்காக, பயன்படுத்தியுள்ளார் தயாநிதி மாறன். இந்த 323 இணைப்புகளில் முதல் 23 இணைப்புகள் 24372211 முதல் 24372301 வரையிலான எண்ணில் செயல்பட்டவை. அடுத்த 300 இணைப்புகள் 24371500 முதல் 24371799 வரையிலானவை. எல்லா தொலைபேசிகளும் 2437 என்ற எண்ணுடன் தொடங்கியதால் 323 இணைப்புகளும் ஒரே தொலைபேசி இணைப்பகத்தைச் சேர்ந்தவையாகச் செயல்பட்டன. 2007 ஜனவரி முதல் பல மாதங்களுக்கு இந்த இணைப்பகம் சன் குழுமத்துக்காகப் பயன்படுத்தப்பட்டது.
இவை அனைத்தும் சாதாரண தொலைபேசி இணைப்புகள் கிடையாது. ஐஎஸ்டிஎன் இணைப்புகளாகும். அதாவது படு விரைவாக தகவல்களைக் கொண்டு செல்லக் கூடியவை. செயற்கைக் கோள்களை விட மின்னல் வேகத்தில் தகவல்களை செலுத்தக் கூடியவை. உலகின் எந்தப் பகுதிக்கும் தகவல்களை அனுப்பினால் அவை அதி வேகமாக போய்ச்சேரக் கூடிய வகையிலான அதி நவீன இணைப்புகள்.
டிஜிடல் தகவல்களைக் கொண்டுபோய்ச் சேர்க்கவும் வீடியோ கான்ஃபரன்சிங் சேவை அளிக்கவும் ஆடியோ, விடியோ சேவைகளை அளிக்கவும் வல்லவை இந்த இணைப்புகள். சுருக்கமாகச் சொன்னால் சன் குழுமத் தொலைக்காட்சி நிறுவன சானல்கள் அனைத்தும் படு பளிச்செனவும், துல்லியமான சத்தத்துடனும் செயல்பட இந்த இணைப்புகள்தான் காரணம். இப்படிப்பட்ட இணைப்புகள் தமிழில் வேறு எந்த சானலுக்கும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. தயாநிதி மாறன் புண்ணியத்தால் இப்படி ஒரு அசாத்தியமான வசதியை சன் டிவி நிறுவனம் பெற முடிந்துள்ளது.
இந்த வசதியைப் பெற வேண்டுமானால் பல கோடி ரூபாய் பணத்தை வாடகையாக சன் டிவி நிறுவனம் செலுத்த வேண்டியிருக்கும். ஆனால் ஒரு பைசா கூட செலவில்லாமல் ஓசியிலேயே எடுத்து விளையாடியிருக்கிறார்கள் சன் டிவி குடும்பத்தார், தயாநிதி மாறன் மூலமாக.
வழக்கமாக யாராவது சிலர் தொலைபேசி இணைப்புகளை தவறாகப் பயன்படுத்தினாலே பெரிய அளவில் மோசடி வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிறையில் தள்ளப்படுவார்கள். ரகசிய தொலைபேசி இணைப்பகத்தை நடத்தி வந்தவர் கைது என்று செய்திகளில் படித்திருக்கிறோம். ஆனால் தயாநிதி மாறன் நடத்தி வந்த இந்த ரகசிய இணைப்பகம் எப்படி யாராலும் கண்டு கொள்ளப்படாமல் விடப்பட்டது என்பதுதான் ஆச்சரியமாக உள்ளது. சிபிஐ இதுகுறித்து புகார் கூறியும் கூட அதை மத்திய அரசு கண்டு கொள்ளாமல் இருந்துள்ளது பெரும் ஆச்சரியமாக உள்ளது. நியாயஸ்தனாக தன்னைக் காட்டிக்கொள்ளும் மன்மோகன் சிங்குக்கு கூடவா இது தெரியாமல் போயிற்று என்பதுதான் பெரிய ஆச்சரியமாக உள்ளது.
இந்த 323 இணைப்புகளில், 24371515 என்ற ஒரு தொலைபேசி மூலம் மட்டும் 2007 மார்ச் மாதத்தில் மட்டும் 48 லட்சத்து 72 ஆயிரத்து 27 யூனிட்டுகள் அளவுக்குப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அதாவது ஒரே ஒரு தொலைபேசி மூலம் ஒரு மாதத்துக்கு சராசரியாக 49 லட்சம் யூனிட்டுகள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அப்படியானால் 323 இணைப்புகள் வாயிலாக 2007 ஜனவரி முதல் ஏப்ரல் வரையில் 629.5 கோடி யூனிட்டுகள் பயன்படுத்தப்பட்டிருக்கும் என்று சராசரி கணக்கெடுப்பு தெரிவிக்கிறது.
ஒரு யூனிட்டுக்கு 70 பைசா என்ற கணக்கில் பார்த்தால் பி.எஸ்.என்.எல்லுக்கு இதன் மூலம் ரூ.440 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டிருக்கும் என்கிறது சி.பி.. சன் டிவிக்கு மட்டுமல்லாமல் மதுரையில் உள்ள தினகரன் நாளிதழ் அலுவலகத்திற்கும் கூட இந்த இணைப்புகளை மோசடியாக பயன்படுத்தியுள்ளனர் மாறன் சகோதரர்கள். அதுகுறித்து தற்போது சிபிஐ விசாரித்து வருகிறது.
தயாநிதி மாறன் செய்ததாக கூறப்படும் இந்த பகிரங்க மோசடி மற்றும் முறைகேடுகள் குறித்து நிச்சயமாக பிரதமருக்கும், சோனியா காந்திக்கும் தெரிந்திருக்கும் என்றே நம்பப்படுகிறது. அப்படி உள்ள நிலையில், ராசாவுக்கு பெரும் நெருக்கடி கொடுத்து அவரை பதவியை விட்டே ஓட வைத்த காங்கிரஸ் மற்றும் மத்திய அரசு தயாநிதி மாறன் விவகாரத்தில் மட்டும் பெருத்த மெளனம் காத்தது, காப்பது ஏன் என்பதுதான் புரியாத புதிராக உள்ளது.

தன்னை காபபாற்றிக்கொள்ள இப்போது தாத்தாவிடம் ஒடிவருகிறார். திமுகவை காலி செய்ய தயாநிதிமாறனை காங்கிரஸ் மேலிடம் பயன்படுத்தி்க்கொண்டது. மாறன் குரூப்பும் கட்சியை கலகலக்கவைத்தது. இப்போது தயாநிதியை காலி செய்ய சி.பி.ஐயை பயன்படுத்துகிறது. இதுதான் காங்கிரஸ் துரோக தனம்.