திங்கள், ஜூன் 20, 2011

மதுவை ஆதரிக்கும் பாலிவுட் நடிகர்.



இந்தியாவில் தினம் தினம் குடிக்காரர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டு வருகிறது. அதிலும் குறிப்பாக தமிழகத்தில் அதிவேகமாக உயர்கிறது. தமிழகத்தில் நகரங்களில், குக்கிராமங்களில் டாஸ்மாக் கடை பந்தாவாக மெயினான இடத்தில் உள்ளது. இந்த டாஸ்மாக் வருமானம் தான் தமிழக அரசை இயக்கிக்கொண்டுயிருக்கிறது.

அரசாங்கம்மே குடியை ஊக்குவிப்பதால் இன்று 14 வயது பையன்கள் எல்லாம் பீர் குடிக்க ஆரம்பித்துவிட்டான். படிக்க வேண்டிய வயதில் வளரும் பருவத்தில் பிள்ளைகள் சீரழிகிறார்களே என இந்தியாவில் எந்த அரசியல் கட்சியும்(பாமகவை தவிர்த்து) இதுவரை கவலைப்பட்டதில்லை. மதுவை ஊக்குவிக்கிறார்களே தவிர அதை குறைக்கவோ, தடுக்கவோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதில் வரும் வருமானத்தை கவனத்தில் கொண்டு  இன்றைய காலகட்டத்தில் மதுவை தயாரிப்பவர்கள் மக்கள் பிரதிநிதிகள் அதனால் தான்.


இந்தியாவில் இலவசங்களை வாரி வழங்கும் அரசுகள் மக்களின் பொருளாதார நிலையை உயர்த்த உழைக்கவில்லை. இந்தியாவில் சில மாநிலத்தில் உள்ள அரசியல்வாதிகளுக்கு இளைஞர்கள் மேல் ஏதே கரிசனை அதனால் மதுவுக்கு தடை போட்டுள்ளனர். அப்படித்தான் மகாராஷ்ட்ராவில், இனி குடிக்கும் வயது 25 என ஒரு உத்தரவு போட்டது. உடனே பாலிவுட் நடிகர் இம்ரான், இது அரசியல் சட்டத்தில் உள்ள அடிப்படை உரிமையை மீறும் செயல். ஓட்டு போடும் வயது 18, கல்யாண வயது 21 ஆனால் குடிக்கும் வயது மட்டும் 25 என முடிவு செய்வது அநியாயம், அக்கிரமம் இதனை எதிர்த்து நீதிமன்றம் செல்ல போகிறேன் என கொக்கறிக்கிறார்.


இவரின் குடும்பத்தில் குடிப்பவர்களுக்கு ஏதாவது வியாதி வந்தால், பிரச்சனையில் சிக்கினால் காப்பாற்ற பணம்மிருக்கிறது. ஏழைகளின், நடுத்தர மக்களுக்கு பிரச்சனையென்றால் காப்பாற்ற யார் இருக்கிறார்கள்.

நடிகரின் இந்த பேச்சுக்கு மீடியாக்கள் முக்கியத்துவம் தருவது அதிர்ச்சியளிக்கிறது. வரபோகும் தலைமுறைக்கு நன்மையென்றால் மீடியாக்கள் குரல் கொடுக்க வேண்டும். தீமையானது என்றால் எதிர்க்க வேண்டும். அதை விட்டுவிட்டு பிரபலமானவர்கள் சொல்கிறார்கள் என்பதற்காக சரியா, தவறா என யோசிக்காமல் ஆதரிப்பது அவமானம். இம்ரான் தவறான ஒரு முடிவு எடுத்து வாதாடுகிறார். அதற்க்கு வடஇந்திய மீடியாக்கள் முக்கியத்துவம் தந்து ஒத்து ஊதுவது அவமானகரமானது.

குடிப்பவர்களின் எண்ணிக்கையை குறைக்க அந்த அரசு அப்படி ஒரு உத்தரவை போட்டுள்ளது நிச்சயம் வரவேற்க்க வேண்டியது. அதற்கான ஆதரவை மீடியாக்கள் உருவாக்கி தர வேண்டுமே தவிர எதிர்ப்பளைகளை உருவாக்கி தரக்கூடாது.

இன்றைய காலகட்;டத்தில், சாலை விபத்துகள், குடும்ப பிரச்சனைகள், சாதி மோதல்கள், கொலைகள் உட்பட பல குற்ற செயல்கள் நடக்கின்றன. இதில் அதிகம் பாதிக்கப்படுவது, அதில் சம்மந்தப்படுவது இளைஞர்கள். இவது தவறானது என யோசிக்கவிடாமல் அவர்களை செய்வது மதுவும் அதை வாங்கி தருபவர்களும் தான். மதுவை ஒழித்தால் நிறைய குற்றச்செயல்கள் குறையும். ஓட்டு மொத்தமாக மதுவை தடுப்பதில் சில சில நடைமுறை சிக்கல்கள் உள்ளதால் தான் குடிக்கும் வயதை 25 என முடிவு செய்யப்பட்டுள்ளது. இதை ஆதரிக்க வேண்டாம், உரிமை பேசிக்கொண்டு எதிர்க்காமல் இருங்கள் அதுவே அடுத்த தலைமுறைக்கு நீங்கள் செய்யும் மிகப்பெரிய உதவி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக