வியாழன், மார்ச் 31, 2011

மக்களின் உணர்ச்சியை பணமாக்கும் கிரிக்கெட்.


காலணி ஆதிக்க நாடாக நம்மை அடிமை படுத்தி வைத்திருந்த பிரிட்டிஸ் அரசு நமக்கு சுதந்திரம் வழங்குவதாக அறிவித்த போது இந்த தேசத்தை இரண்டாக பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. அன்று முதல் இந்துக்கள்-இஸ்லாமியர்கள் விரோதிகளாகி போனார்கள்.


1947ல் பிரிந்தவர்களை காலப்போக்கில் விரோதிகளாக வளர்த்துவிட்டார்கள் இரண்டு நாடுகளுக்கு இடையேயான அரசியல்வாதிகளும், பிஸ்னஸ்மேன்களும். இன்று பாகிஸ்தானில் குண்டு வெடித்தால் இந்தியாவில் கொண்டாடுகிறார்கள். இந்தியாவில் குண்டு வெடித்தால் பாகிஸ்தானில் பட்டாசு வெடிக்கிறார்கள். இத்தனை மாற்றங்களுக்கு காரணம் அரசியல்வாதிகள்க்கு இருந்த பதவி மோகம், வியாபாரிகளுக்கு இருந்த லாப நோக்கம்.  அது நாட்டை மட்டுமல்ல மக்களையும் இரண்டாக பிரித்துவிட்டது. மக்களின் உணர்ச்சிகளை வைத்து ஆயிரக்கணக்கான கோடிகளில் பணம் சம்பாதிக்கிறார்கள் இவர்கள்.


இந்தியர்கள்-பாகிஸ்தானியர்கள் அதிகமானோர் கிரிக்கெட் விளையாட்டுக்கு அடிமையாகி உள்ளார்கள். இவர்கள் மற்ற நாடுகளோடு விளையாடும் போது விளையாட்டாக பார்ப்பவர்கள் இந்த இரண்டு நாடுகள் நேரடியாக மோதிக்கொள்ளும் போது மட்டும் விளையாட்டை விரோதமாக பார்க்கிறார்கள். இதனை அரசியல்வாதிகள் அதிகமாக தூண்டிவிடுகிறார்கள். புhகிஸ்தான் அணியை இந்தியா வென்றால் வீரர்களுக்கு கோடி கணக்கில் பணம் தரப்படும் என்கிறார்கள் இந்தியாவை ஆள்பவர்கள். இந்திய அணியை வென்றால் நிலம் ஒதுக்கி தரப்படும் என அறிவிக்கிறார்கள் பாகிஸ்தானை ஆள்பவர்கள்.


மற்ற நாடுகளோடு இந்த நாடுகள் மோதும் போது மூடிக்கொண்டு வீட்டில் இருந்தபடியே பார்க்கும் இரண்டு நாட்டை சேர்ந்த ஆள்பவர்களும், வியாபாரிகளும் இந்தியா-பாகிஸ்தான் மோதிக்கொள்ளும் போது கேலரிக்கு வந்து உட்கார்ந்துக்கொள்கிறார்கள். மீடியாக்களும் இவர்களுக்கு உதவுகின்றன. மக்கள் நலனுக்காக, நாடுகளின் ஒற்றுமைக்காக பாடுபட வேண்டியவர்கள் பணக்காரர்களுக்கு ஒத்து ஓதுகிறார்கள்.

2011 ஆம் அண்டு உலக கோப்பையின் போதும் அப்படியே செமி பைனலில் இந்தியா-பாகிஸ்தான் மோதிக்கொண்டபோது இந்திய பிரதமர் சிங், பாகிஸ்தான் பிரதமர் கிலாணி, இந்தியாவை ஆட்டி படைக்கும் சோனியாகாந்தி, ராகுல்காந்தி, பண முதலைகள் முகேஷ் அம்பானி, சரக்கு மன்னன் விஜய்மல்லையா என பல வியாபார ஜாம்பவான்கள் லைன் கட்டி அமர்ந்திருந்தார்கள். இவர்கள் அனைவருக்குமே பணமே முக்கியம். மக்களின் உணர்ச்சியை தூண்டி அதை பணமாக்கும் பண பிசாசுகள்.

இந்த மேட்ச்சில் யார் வெல்வார்கள் என்று 10 ஆயிரம் கோடி பெட்டிங் நடந்ததாக கூறப்படுகிறது. இவையெல்லாமே கறுப்பு பணம் தான். இதனால் 10 கோடி கூட அரசுக்கு வருமானம்மில்லை. தனிப்பட்ட நபர்களுக்கு தான் இந்த வருமானமே. தனிப்பட்ட நபர்கள் கொழிக்க மக்களின் உணர்ச்சிகளை தூண்டிவிட்டு, நாடுகளுக்குள் விரோதத்தை வளர்த்துவிட்டு அதன் மூலம் கொழுக்கிறார்கள்.

மக்களே விளையாட்டை விளையாட்டாக பாருங்கள். அடிமையாகிவிடாதிர்கள்.

புதன், மார்ச் 30, 2011

விஜயகாந்த்தின் அஸ்தமனம் ஆரம்பம்.



அரசியல்வாதியாக ஒருவர் வேடம் தாித்தது முதல் அவர் யாராக இருந்தாலும்  அவரை பட்டி தொட்டி முதல் பட்டணம் வரை படித்தவர்கள் முதல் படிக்காதவர்கள் வரை பொதுமக்கள் அவரை கவனிக்க தொடங்கி விடுவார்கள். 

அப்படி கவனிக்கப்பட்டவர் நடிகர் விஜயகாந்த். கிராமங்களில் நல்ல ஆதரவு வட்டத்தை கொண்டுயிருந்தார். சினிமாவில் பேசுவதை போலவே ஊழலை ஒழிப்பேன், தவறு செய்பவர்களை தட்டிக்கேட்பேன். அதனால் எனக்கு வாக்களியுங்கள் என்றார். அதனை நம்பி கடந்த சட்டமன்ற தேர்தலின் போது அவருக்கு வாக்கு செலுத்தினார்கள் தமிழக வாக்காளர்கள். தமிழகத்தின் 3வது கட்சி என சொல்லும் அளவுக்கு வாக்குகளை ஒவ்வொரு தொகுதியிலும் பெற்றார். இந்திய அரசியலே அவரை திரும்பி பார்த்தது. 

அந்த நேரத்தில் தான் முன்னால் முதல்வர் ஜெ அறிக்கை ஒன்றை வெளியிட்டார். கறுப்பு எம்.ஜி.ஆர் என சொல்பவர் குடித்துவிட்டு சட்டமன்றம் வருகிறார் என அறிக்கை விட்டார். இதற்க்கு பதில் அறிக்கை விட்ட விஜயகாந்த் அவர் என்ன ஊத்தி தந்தாரா என பதில் அறிக்கை விட்டார். 

தேர்தல் கூட்டணி அமைப்பது தொடர்பாக சேலத்தில் மாநாடு போட்டார்,  பேச முடியாத அளவுக்கு தடுமாறினார்............ பேசி முடிக்கும் வரை தடுமாறிக்கொண்டுயிருந்தார். அப்படி பிரச்சாரம் செய்யும் போதே கூட்டணி வேண்டுபவர்கள் கை தூக்குங்கள் என்றார் ஆர்வத்தோடு கை தூக்கியவர்களிடம் கூட்டணி வைக்கறதா, வேணாமான்னு நான் முடிவு செய்யறன் என அடித்தார் அந்தர் பல்டி.


இன்று அதிமுகவுன் கூட்டணி அமைத்து தமிழகத்தில் பிரச்சாரம் செய்து வருகிறார்.  கடந்த 29ந்தேதி தருமபுாி தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்திற்க்க போனார். வேட்பாளர் பாஸ்கரை தனது டெம்போ டிராவலர் வேனில் ஏற்றியவர் பேசும் பாய்ன்ட் வந்ததும் அவரை உள்ளே அமர சொல்லிவிட்டு தடுமாற்றத்துடன் பேசிக்கொண்டுயிருந்தார். பேசும் போது வேட்பாளர் பாண்டியன்க்கு ஒட்டுப்போடுங்கள் என மைக்கில் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார். 

அப்போது வேனில் உள்ளேயிருந்த வேட்பாளர் மேலே எழுந்து அண்ணே என் பெயர் பாண்டியன் இல்லன்னே பாஸ்கர்ன்னே எனச்சொன்னார். இதில் கடுப்பான விஜயகாந்த் தலையிலும், தோள்பட்டையிலும் அடிப்போட அதிர்ந்து போன வேட்பாளர் கை கொண்டு தடுக்க மீண்டும் அடி  விழுந்தது. பட்டப்பகலில் பொதுமக்கள் முன்னிலையில் ஒரு கட்சியின் தலைவர், அடுத்த முதல்வர் எனச்சொல்லிக்கொள்பவர் பொதுயிடத்தில் எப்படி நடந்து கொள்ள தொியாத முட்டாளாக இருக்கிறார்.

எல்லா கட்சியிலும் தொண்டர்கள் முதல் இரண்டாம் கட்ட தலைவர்கள் எல்லாம் தங்கள் கட்சியின் தலைவரை கடவுளாக மதிப்பது வாடிக்கை தான். அதற்காக அந்த தலைவர்கள் எல்லாம் அவர்களை அடிப்பதுயில்லை. 

தமிழக அரசியல் கட்சிகளில் அதிமுக தலைவி ஜெ மட்டுமே, கட்சியினரை அடிமையாக வைத்திருக்கிறார் என்ற பேச்சு உண்டு. அதற்க்கு ஏற்றாற்போல் ஜெ காலில் வயது வித்தியாசம்மில்லாமல் இடம் பொருள் தொியாமல் காலில் விழுவதால் தான் அதிமுகவினரை பொதுமக்கள் யாரும் மதிப்பதில்லை. அப்படிப்பட்ட நிலை இன்று விஜயகாந்த் கட்சியின் தொண்டர்களுக்கும், விஜயகாந்த்க்கும் வந்துள்ளது.

விஜயகாந்தின் அஸ்தமனம் தொடங்கிவிட்டது.

வெள்ளி, மார்ச் 25, 2011

தேர்தல் ஆணையம் வருக்காலங்கில் சொல்ல போகும் விதிகள்.

2011 தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தினம், தினம் புதுசு புதுசாக அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. தேர்தல் ஆணையம். வரும் காலங்களில் தேர்தலை முன்னிட்டு முக்கியமான அறிவிப்புகள். இதேபோல் இருக்க வாய்ப்பு உண்டு.

1. தேர்தல் முடியும் வரை யாரும் திருமணம் செய்துக்கொள்ள கூடாது. 

2. ஊருக்கு போகிற கணவன் மனைவி, பிள்ளையை அழைத்து சென்றால் அவர் தான் தனது மனைவி, பிள்ளை என்பதற்கான அடையாளத்தை எடுத்துச்செல்ல வேண்டும்.
3. தேர்தல் முடியும் வரை கணவன் - மனைவி இருவரும் உறவு வைத்துக்கொள்ளகூடாது.

4. அலுவலகம் செல்பவர்கள் மதியம் சாப்பிட உணவு கொண்டு சென்றால் நீங்கள் தான்  உண்ண போகிறிர்கள் என்பதற்கான ஆவணத்தை காட்ட வேண்டும்.

5. மளிகை பொருட்கள் வாங்கினால் அது உங்கள் குடும்பத்திற்காக தான் வாங்குகிறிர்கள் என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.

6. தேர்தல் முடியும் வரை யாரும் உறவுக்காரர்கள் வீட்டுக்கு போக கூடாது. 

7. தேர்தல் காலங்களில் தொலைக்காட்சியை யாரும் பார்க்க கூடாது. 

8. பிள்ளைகள் யாரும் பள்ளிக்கு போக கூடாது.

9. அரசியல் கட்சிகள் யார் யாருடன் கூட்டணி சேர வேண்டும் என்பதை தேர்தல் ஆணையம் சொல்லும். 

10. கூட்டணியில் எந்த கட்சிக்கு எத்தனை சீட், யாருக்கு எந்த தொகுதி என்பதை தேர்தல் ஆணையம் தான் முடிவு செய்யும்.

11. தேர்தல் செலவுக்கு ஆணையமே பணம் தரும். தேர்தல் முடிந்த பின் ராசி வட்டி போட்டு திருப்பி தர வேண்டும். 

12. தேர்தல் அறிவிக்கப்பட்டது முதல் முடியும் வரை யாரும் சைக்கிள், கார் போன்றவற்றில் போககூடாது. 

13.. வேட்பாளர்கள் யாரும் வீடு வீடாக போய் வாக்கு கேட்ககூடாது.

13. மக்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை ஆணையமே சொல்லும்.

14. பொதுமக்கள், வேட்பாளர்கள் பாத்ரூம் போக வேண்டும் என்றால் தேர்தல் அதிகாாிகளிடம் அனுமதி பெற வேண்டும். பொதுமக்கள் 3 வேலையும் என்ன உணவு வீட்டில் சமைக்கிறிர்கள் என்பதை தேர்தல் அதிகாாிகளுக்கு எஸ்.எம்.எஸ் மூலம் தொியபடுத்த வேண்டும்.

15. பொது மக்கள் யாருக்கு வாக்களிர்க்கிறார்கள் என்பதை வீடியோ எடுப்போம். 

16. தேர்தல் காலங்களில் காதலர்கள் யாரும் சேர்ந்து ஊர் சுற்ற கூடாது, செல்போனில் கடலை போடக்கூடாது, எஸ்.எம்.எஸ் அனுப்ப கூடாது. 

17. தேர்தல் முடியும் வரை சினிமா தியேட்டர்கள் முடியே இருக்க வேண்டும். செக்ஸ் படம் பார்க்க மட்டுமே அனுமதி. அதுவும் குறிப்பிட்ட நேரத்தில் மட்டும். 

18. தேர்தல் முடிந்த பின் யார், யார்க்கு அமைச்சர் பதவி என்பதை ஆணையமே முடிவு செய்யும்.

19. வேட்பாளர்கள் தேர்தல் முடியும் வரை மனைவியுடன் நெருங்க கூடாது.  சின்னவீட்டில் ஜல்சா செய்ய தடையில்லை. 

20. வாக்காளர்களுக்கு பணம் தருவதை தடுக்க சிறப்பு படை அமைக்கப்படும். அதற்க்கும் அரசியல்வாதிகள் கவனிக்க வேண்டும்.

இந்த உத்தரவுகளை செயல்படுத்த வேண்டும். எங்கள் உத்தரவில் உச்சநீதிமன்றம் தலையிடாது. தலையிடக்கூடாது. அப்படி தலையிட்டால் உச்சநீதிமன்றத்தை கலைக்கச்சொல்லுவோம் என அறிவிப்பு தருவார்கள். 

சனி, மார்ச் 19, 2011

பாத்ரூம் போக தே. ஆ அனுமதி வாங்க வேண்டுமாம்.



போகிற போக்கை பார்த்தால் பொதுமக்கள் பாத்ரூம் போகவும், சொந்தக்காரர் வீட்டுக்கு போகவும், பள்ளிக்கூடத்துக்கு டிபன் பாக்ஸ் கொண்டும் போகவும், மார்க்கெட்டில் காய்கறி வாங்கவும் தங்களிடம் அனுமதி வாங்க சொல்லுவார்கள் போலிருக்கிறது தேர்தல் ஆணைய அதிகாரிகள். அப்படித்தான் இருக்கிறது அவர்களது செயல்பாடுகள்.

தேர்தல் தேதி அறிவித்த நாள் முதல் தமிழகம் முழுவதும் களம்மிறக்கப்பட்டுள்ள பறக்கும் படை அதிகாரிகள் பஸ் ஸ்டான்ட், காய்கறி மார்க்கெட், பத்திரப்பதிவு அலுவலகம், போக்குவரத்து நிரம்பிய சாலையில் நின்றுக்கொண்டு கார், பஸ், பேருந்து, இரயில், டூவீலர்களை மடக்கி செக் செய்கின்றனர். அதில் பணமோ, புடவையோ இருந்தால் உடனே அதுப்பற்றி விசாரிப்பவர்கள் இதுக்கு டாக்மெண்ட் இருக்கா என கேட்டு இல்லையென்றால் கைப்பற்றப்பட்டதை மாவட்ட தேர்தல் அலுவலர்களிடம் ஒப்படைத்துவிடுகிறார்கள். வுழக்கு போடுகிறார்கள்.

உதாரணத்திற்க்கு காஞ்சிபுரத்தில் இருந்து நாகர்கோயிலுக்கு பட்டுப்புடவை ஏற்றிக்கொண்டு போன வேனை மடக்கி இது ஒட்டுப்போடறவங்களுக்கு தரதானே என பிடித்து வைத்துக்கொண்டனர். விற்பனைக்கு என அவர்கள் டாக்மெண்ட்டுகளை காட்டியும் 12 மணி நேரத்திற்க்கு பிறகே விடுவிக்கப்படுகின்றனர்.

மிகப்பெரிய ஜிவல்லரி ஊழியர்கள் கலெக்ஷன் பணம் 25 லட்சத்தை வங்கியில் செலுத்த கொண்டும் போக அதை வாங்கி வைத்துக்கொண்டு அதுக்கான டாக்மெண்ட் தா என கேட்டு ரப்சர் செய்தனர். நிலம் பத்திரப்பதிவு செய்ய 7 லட்சத்தோடு பேருந்து மூலம் பத்திரபதிவு அலுவலகத்திற்க்கு சென்றவரை வழி மடக்கி உனக்கு பணம் வந்த வழி எப்படி என கேட்டு டார்ச்சர் செய்தனர்.

இப்படி தமிழகத்தில் உள்ள 234 தொகுதியிலும் இப்படி யாரையாவது பிடித்து தொல்லை செய்கிறார்கள். கைப்பற்றப்படும் பணம் கோடிகளில் இருந்தால் பரவாயில்லை சரியென விட்டுவிடலாம் 30 ஆயிரம், 50 ஆயிரம், 5 லட்சம், 20 லட்சம் என இருக்கிறது. 

இதை வைத்தா சட்டமன்ற தேர்தலலை சந்திக்க முடியும். குறைந்தது 10 கோடி செலவாகும் தேர்தலில் 30 ஆயிரத்தையும், 5 லட்சத்தையும் வைத்துக்கொண்டு என்ன செய்ய முடியும். தமிழகம் முழுவதும் கைப்பற்றபட்ட பணத்தில் 90 சதவிதம் வியாபாரியதாக இருக்கிறது. மீதி பொது மக்களுடையதாக இருக்கிறது. இன்றைய காலகட்டத்தில் நடுத்தர மக்களிடம் 50 ஆயிரம், 1 லட்சம் என்பது சர்வ சாதாரணமாகிவிட்டது. அப்படிப்பட்ட நிலையில் 20 ஆயிரம் கொண்டு போகிறவனை மடக்கி பணத்தை புடுங்கிக்கொண்டு டாக்மெண்ட் கொண்டு வா என கேட்பது என்ன நியாயம்? தங்களுக்கு அதிகாரம் இருக்கிறது என்பதற்க்காக தேர்தல் காலங்களில் அதிகாரிகள் பொது மக்களை, வியாபாரிகளை வஞ்சிப்பது எந்த விதத்தில் நியாயம்.

தேர்தல் ஆணையம் ஒன்றை புரிந்துக்கொள்ள வேண்டும். இன்றைய காலகட்டத்தில் ஒருயிடத்தில் இருந்து மற்றொருயிடத்திற்க்கு பணம் கொண்டு போய் சேர்க்க நூற்றுக்கணக்கான வழி இருக்கிறது. அரசியல்வாதிகள் ஆயிரக்கணக்கான வழியை யோசித்து வைத்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட நிலையில் ரோட்டில் நின்றுக்கொண்டு வருபவனையும், போகிறவனையும் நிறுத்தி டார்ச்சர் செய்வது எந்த விதத்தில் நியாயம்.


இதுப்பற்றி ஒரு அதிகாரிகள் வட்டாரத்தில் கேட்டபோது, அட பேப்பர்லயும், டிவியிலயும் படம் வறனுங்கறதுக்காக பண்றதுங்க என்றவர். இதுவரை பணம் எடுத்தும் போனாரு, பொருள் எடுத்தும் போனாருன்னு எந்த அரசியல்வாதியாவுது மாட்டியிருக்காறா சொல்லுங்க. மாட்டலங்கறதுக்காக அவுங்க எடுத்தும் போகலன்னு அர்த்தம்மில்ல. எடுத்தும் போறது தெரிஞ்சிம் இவுங்க கண்டுக்கறதில்ல. மீறி புடிச்சா ஆட்சிக்கு வரும் போது படிச்சவங்க வேலையில இல்லாதமாதிரி பண்ணிடுவாங்க. அதனால அதிகாரிங்க தங்களோட அதிகாரத்த அவுங்கக்கிட்ட காட்டறதில்ல. ஏமாந்தவன் பப்ளிக் தானே அதனால தான் அவன்க்கிட்ட இவுங்களோட அதிகாரத்த காட்டறாங்க என்றார். அந்த அதிகாரிகள் சொல்வதும் உண்மை தான்.

தேர்தல் ஆணைய அதிகாரிகளே முடிந்தால் கோடிகளில் செலவு செய்ய போகும் அரசியல்வாதிகளை பிடியுங்கள், வாக்காளனுக்கு பணம் தரப்போகும் அரசியல் கட்சியினரை பிடியுங்கள். பாவப்பட்ட மக்களை இம்சிக்காதிர்கள்.

வெள்ளி, மார்ச் 18, 2011

தெரியாது தெரியாது தெரியாது. -

இந்தியாவின் பிரதமராக 2004 முதல் அந்த நாற்காலியில் உட்கார்ந்துயிருப்பவர் முன்னால் உலக வங்கி தலைவரான பொருளாதார நிபுணர் என வர்ணிக்கப்படும் காங்கிரஸ் கட்;சியை சேர்ந்த நேர்மையானவர் என அடையாளப்படுத்தப்பட்ட மன்மோகன்சிங். மன்மோகன் சிங் அந்த நாற்காலியில் அமர வைக்கப்பட்டபோதே அவர் அமெரிக்காவின் அடிவருடி. இனி இந்தியா அமெரிக்காவின் ஒரு மாகாணம் போல் செயல்பட போகிறது என்ற குரல்கள் கேட்டன. காலப்போக்கில் அப்படியே நடந்து வருகிறது. அதை செயல்படுத்தி வருகிறார் சிங்.

முதலாவது, 2ஜி ஸ்பெக்ட்ராம் பிரச்சனை 2008ல் கிளம்பியது 2010ல் விசாரணை 2011ல் முன்னால் அமைச்சரவை சகா கைதானபோது செய்தியாளர்கள் பிரதமரிடம் கேள்வி கேட்டபோது, ஸ்பெக்ட்ராம் விவகாரம் பற்றி எனக்கு எதுவுமே தெரியாது என்றார்.

இரண்டாவது, காமன்வெல்த் விளையாட்டு போட்டிக்காக ஒதுக்கப்பட்ட பணத்தில் விளையாடோ விளையாடு என விளையாடிவிட்டார் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.பி கல்மாடி. இதுப்பற்றி மீடியா, அரசியல் கட்சிகள், உள்கட்சியினர் என பல தரப்பில் இருந்தும் கேள்வி எழுப்பியபோது எனக்கு எதுவும் தெரியாது என்றார் பிரதமர் சிங்.

மூன்றாவது, ஆதர்ஷ் வீடு கட்டும் திட்டத்தில் நடந்த முறைகேடு பற்றியும் தெரியாது என்றார். பிரதமரின் நேரடி கண்காணிப்பில் உள்ள இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவில் 4ஜி ஸ்பெக்ட்ராம்மில் நடந்த ஊழல் பற்றியும் தெரியாது என அறிவித்தார். நான்காவது, கேரளாவில் பணியாற்றும் போது பாமாயில் இறக்குமதி செய்ததில் ஊழல் செய்து சிக்கிய தாமஸ் என்பவரை மத்திய ஊழல் தடுப்பு கண்காணிப்பு ஆணையர் பதவியில் பிரதமர் சிபாரிசில் ஜனாதிபதி நியமித்ததை பிரச்சனையாக்கி நாடாளமன்றத்தில் பெரிய களோபரமே நடந்தது. உச்சநீதிமன்றம் அவரை பதவி நீக்கம் செய்ய சொன்னதும் அவர் மீது இருந்த வழக்குப்பற்றி எதுவும் தெரியாது எனச்சொல்லிவிட்டார்.

இன்று உலக நாடுகளின் கண்களில் விரலை விட்டு ஆட்டும் விக்கிலீக்ஸ், 2008ல் இந்தியாவில் பிரதமர் மன்மோகன்சிங் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தபோது எம்.பிக்களுக்கு பணம் தந்து தீர்மானத்தை தோற்கடித்தார்கள் என்ற தகவலை வெளியிட்டது. அப்படி நடந்தது எனக்கு தெரியாது என பதிலளித்துள்ளார் சிங்.

நாளை…………….

உங்க தலைவி சோனியாகாந்தியப்பத்தி சொல்லுங்க ? எனக்கு தெரியாது.

இந்தியா எப்படி இருக்கு? எனக்கு தெரியாது.

சாப்பிட்டிங்களா? தெரியாது.

உங்க செயலாளர் யார்? தெரியாது என சொல்லப்போகிறார் இந்தியாவின் பிரதமர் நாற்காலியில் உள்ள சிங்.

அவர்க்கு என்னதான் தெரியும் ?. ஊழலை ஒழிப்போம் என பேச தெரியும், சோனியாகாந்தி சொல்லி தந்ததை அப்படியே ஒப்பிக்க தெரியும், இலங்கையில் தமிழர்களை கொல்ல ஆயுதம் தர தெரியும், அதுப்பற்றி கேட்டால் அப்படி எதுவும்மே தரவில்லை என பொய் சொல்ல தெரியும். கேள்வி கேட்டால் தெரியாது என சொல்ல தெரியும்.

இந்தியாவில் இருப்பவன் முட்டால்கள் என்பது காங்கிரஸ்காரனுக்கு தெரியும். இந்தியாவில் கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை வைத்துக்கொண்டு வாழ்க, வளர்க்க சோனியாகாந்தி குடும்பம். ஓத்து ஊதும் சிங் குடும்பமும், கவடி தூக்கும் கூட்டணி கட்சிகளும் வாழ்க, வளர்க்க.

செவ்வாய், மார்ச் 08, 2011

காங்கிரஸ்சிடம் தோற்ற கருணாநிதி.


தமிழக மக்கள் விடிய விடிய பல நாடகங்களை பார்த்தவர்கள் தான். பார்க்கும் போதே க்ளைமேக்ஸ் என்னவென்று சொல்லிவிடுவார்கள். ஆனால் அரசியல் களத்தில் தற்போது திமுக நடத்திய நாடகத்தில் க்ளைமேக்ஸ் என்னவென்று தெரியாமல் தடுமாறிக்கொண்டு இருந்தார்கள். நாடக ஆசிரியரான திமுக தலைவரும் முதல்வருமான கருணாநிதி இருந்தார் என்பதால் க்ளைமேக்ஸ் தெரியாமல் இருந்தார்கள். க்ளைமேக்ஸ் வெளியே தெரிந்தபோது ஒட்டுமொத்த மரியாதையும் இழந்து போய்வுள்ளார் கருணாநிதி.

சில வாரங்களாக திமுக-காங்கிரஸ் இடையே சீட் தகராறு நடந்துவந்தது. காங்கிரஸ் அதிகமான சீட்க்கு ஆசைப்படுகிறது. 63 சீட் கேட்பதை ஏற்றுக்கொள்ள முடியாது, அதோடு தமிழகத்திற்க்கு ஒத்துவராத பல கண்டிஷன்களை போடுகின்றனர். இதனால் கூட்டணியில் இருந்து விலகுகிறோம்;. மத்திய அமைச்சர்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு வெளியில் இருந்து ஆதரிக்கிறோம் என நள்ளிரவு அறிக்கை விட்டார்.

7ந்தேதி காலை டெல்லிக்கு பிளைட் ஏறினார்கள் திமுக அமைச்சர்கள் 9 மணிக்கெல்லாம் ராஜினாமா கடிதத்தை தந்துவிடுவார்கள் என தகவல் பரப்பினார்கள். 9…….10…..11 என மணியானதே தவிர அமைச்சர்கள் யாரும் பிரதமரை சந்திக்கவில்லை. பிரதமர் பாத்ரூம் போனார் வரவில்லை. மாலை 6 மணிக்கு தான் வருவார் என்று காரணம் சொன்னார்கள். மாலை 6ம் வந்தது 7……8………என மணியானதே தவிர பிரதமரை இவர்கள் சந்திக்கவேயில்லை.

என்ன ஆனாது இவர்களுக்கு பசி எடுத்து ராஜினாமா கடிதத்தை தின்று விட்டார்களா என மக்கள் பேசிக்கொண்டிருந்த நேரத்தில் காங்கிரஸ் ஒரு நாள் டைம் கேட்டுள்ளது என்றார் துணை முதல்வாரன ஸ்டாலின்.

8ந்தேதி இரவு மத்திய அமைச்சர்களான திமுகவை சேர்ந்த அழகரி, தயாநிதிமாறன்னுடன் காங்கிரஸ் கட்சியின் மத்தியமைச்சர்கள் பிரணாப்முகர்ஜி, குலாம்நபிஆசாத் பேச்சு வார்த்தை நடத்தியதன் விளைவாக 63 சீட்க்கு திமுக ஒத்துக்கொண்டதாக குலாம் செய்தியாளர்களிடம் அறிவித்தார். உடன் அழகரி, தயாநிதிமாறன். அடுத்து கருணாநிதி ஒரு அறிக்கை விட்டார், பாமக ஒதுக்கப்பட்ட இடத்தில் இருந்து 1 தொகுதியை வாங்கி 63 தொகுதி காங்கிரஸ்க்கு தந்து 121 இடங்களில் திமுக போட்டியிடும் என அறிவித்து நாடகத்தை முடிவுக்கு கொண்டு வந்துவிட்டார்.

63 இடம் கேட்கிறார்கள் என அறிக்கை விட்ட கருணாநிதி ஒரு நாடகத்திற்க்கு பின் அதேயிடத்தை தந்துள்ளார். இது மக்கள் எதிர்பார்க்காத முடிவு தான் பள்ளத்தை தோண்டி திமுக அதில் போய் விழுந்துள்ளது. காங்கிரஸ் கட்சியை கழட்டி விட்டபோது மக்கள் மிகப்பெரிய அளவில் தமிழகம் முழுவதும் சந்தோஷப்பட்டார்கள். இலங்கை பிரச்சனையில் காங்கிரஸ்சை பழிவாங்க சரியான சந்தர்ப்பம் என கொண்டாடி மற்றவர்களுடன் சந்தோஷத்தை பறிமாறிக்கொண்டார்கள். அதோடு ஊருக்கு இரண்டு பேர் இல்லாத கட்சி திமுகவை மிரட்டுவதா என மற்ற கட்சியினரும் பேசினார்கள். திமுகவின் முடிவை வரவேற்றார்கள்.


அந்த சந்தோஷம் மறைவதற்க்குள் தமிழக மக்களுக்கு அதிர்ச்சியை தந்துவிட்டார் கருணாநிதி. எந்த பிரச்சனை எப்படியிருந்தாலும் எடுத்த முடிவில் திமுக உறுதியாக இருந்திருந்தால் தனித்து வெல்லும் அளவுக்கு தொண்டர்களும் பணியாற்றியிருப்பார்கள், மக்களும் ஆதரித்துயிருப்பார்கள். அது எல்லாவற்றையும் கெடுத்துக்கொண்டது திமுக.

63 சீட் தந்த முடிவு, சாணக்கியதனம் என வெளியே சொன்னாலும் இந்த முடிவு எதிர் கூட்டணியான அதிமுகவுக்கு சாதகமாக தான் முடியும். 65 ஆண்டுகாலம் அரசியல் வாழ்வில் பல ஏற்ற தாழ்வுகளை திமுகவும், கருணாநிதியும் சந்தித்துள்ளார்கள். அப்போதுயெல்லாம் எடுக்கப்பட்ட முடிவு மக்களிடம் வரவேற்ப்பு பெற்றது. தற்போது எடுத்துள்ள முடிவு வியாபார முடிவு, கொள்கையை கட்சியை அடகு வைக்கப்பட்ட முடிவு என மக்கள் விமர்சிக்க தொடங்கிவிட்டார்கள். அதுமட்டுமல்ல இந்த நாடகத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. கருணாநிதி தனது அரசியல் சாணக்கிய தனத்தில் தோற்றுள்ளார் என்பது எனது கருத்து.

மக்கள் கருத்து முடிவு தேர்தல் களத்தில் தெரியும்.

புதன், மார்ச் 02, 2011

நடிகர் விஜய்யின் பொய் முகம்.


இலங்கை அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு அரசியல்வாதியாக புதிய வேஷம் கட்டியுள்ள நடிகர் விஜய்யின் மறுபக்கத்தை வெளிச்சம் போட்டு காட்டிவிட்டது. சில மாதங்களுக்கு முன்னர், என்னை அழிக்க பார்க்கறாங்க, என் படத்தை ஒட விடமாட்டேன்கிறாங்க அதுக்கெல்லாம் முதல்வர் கருணாநிதி குடும்பம் தான் காரணம் என விஜய்யும், அவரின் அப்பா இயக்குநர் எஸ்.ஏ.சியும் கூப்பாடு போட்டார்கள்.

தன் தனிப்பட்ட கோபாதாபம், லாப-நட்டத்துக்கு தனது ரசிகர்கள் மூலம் திமுகவை பழிவாங்க முடிவு செய்த விஜய். அதில் மக்களையும் இணைத்துக்கொள்ள அரசியல் இயக்கம் தொடங்க முடிவு செய்தார். பணம் செலவு ஆக கூடாது ஆன கட்சி நடத்தனும் என ரசிகர்களிடம் சொல்ல பின்னங்கால் பிடறியில் ஓடி பின்வாங்கினார்கள் ரசிக சிகாமணிகள். இதனால் அசரவில்லை விஜய் அன் கோ. பெரியதாக ரியாக்ஷன் இல்லை என்றதும் ஜெயலலிதாவை போய் சந்தித்;தார் எஸ்.ஏ.சி. ஜெவோ, திமுகவுக்கு எதிரா பேசுங்க என கீ கொடுத்து அனுப்பியதன் விளைவு புறப்பட்டார்கள் அப்பாவும் மகனும்.

என் தனிப்பட்ட லாபத்துக்காக தான் இயக்கம் தொடங்கறன், திமுகவை எதிர்க்கறன், ஜெ வை ஆதரிக்கறன் என சொல்ல முடியாது என்பதால் தமிழக மீனவர்களை கொல்லும் இலங்கை இராணுவத்தை கண்டித்தும், அதற்க்கு ஒத்து ஊதும் மாநில அரசை கண்டித்து நாகையில் கூட்டம் நடத்தி இலங்கை இராணுவத்தை கண்டித்து, சினிமாவில் பேசுவதை போல வீரவேசமாக பேசிவிட்டு சென்னை வந்துவிட்டார். பின்னாலயே அறிக்கை வாயிலாக விஜய்யின் முகத்தை கிழித்துவிட்டது இலங்கை அரசாங்கம். தமிழர்கள் மேல் உண்மையில் விஜய்க்கு அக்கறையில்லை. அப்படியிருந்திருந்தால் தென்னிந்திய சினிமா உலகில், தமிழகத்தில் கேரளா நடிகையும், இலங்கைக்கு மிக வேண்டப்பட்டவருமான அசின்க்கு எதிர்ப்பு வந்தபோது எதைப்பற்றியும் கவலைப்படாமல் தனது காவலன் படத்தில் நடிக்க வைத்தார். அவரின் தமிழ் பற்று இதுதான் அதனால் அவர் பேச்சை நாங்கள் பெருசாக எடுத்துக்கொள்ளவில்லை.

விஜய் தமிழ் மக்களுக்கு பாதுகாப்பானவர் என்பது பொய் என்பதை செவிட்டில் அறைவதை போல வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது அந்த அறிக்கை. இந்த அறிக்கைக்கு பின்னால் இருக்கும் அரசியல் நமக்கு தேவையில்லை. ஆனால், அறிக்கை சாராம்சம் உண்மை தானே. தமிழர்களை அழித்த இலங்கை சிங்கள அரசியல்வாதிகளுடன் கும்மாளம் போட்ட நடிகை அசின்க்கு தமிழகத்தில் பல இயக்கங்கள் எதிர்ப்பு தெரிவித்தபோது காவலன் படத்தில் அசின் தான் எனக்கு ஜோடியா வேணும் என பிடிவாதமாக இருந்து அவரை தன்னுடன் நடிக்க வைத்து போராடிய இயக்கங்கள் முகத்தில் கரியை பூசியவர் தமிழர்களின் உரிமைக்காக குரல் கொடுக்கிறேன் என்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்.

தமிழகத்தை விட்டே துரத்த வேண்டும் என தமிழ் உணர்வாளர்களால் குறிப்பிடப்படும் கோல்மால் கட்சியான காங்கிரஸ்சுடன் இணைய பேச்சு வார்த்தை நடத்திய நடிகர் விஜய்யை அப்போதே புறம் தள்ளியிருக்க வேண்டும். செய்யாமல் விட்டதன் விளைவு இன்று தமிழர்களுக்காக போராடுகிறேன் என நாடகம் ஆடுகிறார்.

விஜய்யின் உண்மை முகத்தை சிங்கள அரசு புரிந்து வைத்துள்ளது. தமிழர்கள் புரிந்துக்கொள்ள வேண்டும்.