போகிற போக்கை பார்த்தால் பொதுமக்கள் பாத்ரூம் போகவும், சொந்தக்காரர் வீட்டுக்கு போகவும், பள்ளிக்கூடத்துக்கு டிபன் பாக்ஸ் கொண்டும் போகவும், மார்க்கெட்டில் காய்கறி வாங்கவும் தங்களிடம் அனுமதி வாங்க சொல்லுவார்கள் போலிருக்கிறது தேர்தல் ஆணைய அதிகாரிகள். அப்படித்தான் இருக்கிறது அவர்களது செயல்பாடுகள்.
தேர்தல் தேதி அறிவித்த நாள் முதல் தமிழகம் முழுவதும் களம்மிறக்கப்பட்டுள்ள பறக்கும் படை அதிகாரிகள் பஸ் ஸ்டான்ட், காய்கறி மார்க்கெட், பத்திரப்பதிவு அலுவலகம், போக்குவரத்து நிரம்பிய சாலையில் நின்றுக்கொண்டு கார், பஸ், பேருந்து, இரயில், டூவீலர்களை மடக்கி செக் செய்கின்றனர். அதில் பணமோ, புடவையோ இருந்தால் உடனே அதுப்பற்றி விசாரிப்பவர்கள் இதுக்கு டாக்மெண்ட் இருக்கா என கேட்டு இல்லையென்றால் கைப்பற்றப்பட்டதை மாவட்ட தேர்தல் அலுவலர்களிடம் ஒப்படைத்துவிடுகிறார்கள். வுழக்கு போடுகிறார்கள்.
உதாரணத்திற்க்கு காஞ்சிபுரத்தில் இருந்து நாகர்கோயிலுக்கு பட்டுப்புடவை ஏற்றிக்கொண்டு போன வேனை மடக்கி இது ஒட்டுப்போடறவங்களுக்கு தரதானே என பிடித்து வைத்துக்கொண்டனர். விற்பனைக்கு என அவர்கள் டாக்மெண்ட்டுகளை காட்டியும் 12 மணி நேரத்திற்க்கு பிறகே விடுவிக்கப்படுகின்றனர்.
மிகப்பெரிய ஜிவல்லரி ஊழியர்கள் கலெக்ஷன் பணம் 25 லட்சத்தை வங்கியில் செலுத்த கொண்டும் போக அதை வாங்கி வைத்துக்கொண்டு அதுக்கான டாக்மெண்ட் தா என கேட்டு ரப்சர் செய்தனர். நிலம் பத்திரப்பதிவு செய்ய 7 லட்சத்தோடு பேருந்து மூலம் பத்திரபதிவு அலுவலகத்திற்க்கு சென்றவரை வழி மடக்கி உனக்கு பணம் வந்த வழி எப்படி என கேட்டு டார்ச்சர் செய்தனர்.
இப்படி தமிழகத்தில் உள்ள 234 தொகுதியிலும் இப்படி யாரையாவது பிடித்து தொல்லை செய்கிறார்கள். கைப்பற்றப்படும் பணம் கோடிகளில் இருந்தால் பரவாயில்லை சரியென விட்டுவிடலாம் 30 ஆயிரம், 50 ஆயிரம், 5 லட்சம், 20 லட்சம் என இருக்கிறது.
இதை வைத்தா சட்டமன்ற தேர்தலலை சந்திக்க முடியும். குறைந்தது 10 கோடி செலவாகும் தேர்தலில் 30 ஆயிரத்தையும், 5 லட்சத்தையும் வைத்துக்கொண்டு என்ன செய்ய முடியும். தமிழகம் முழுவதும் கைப்பற்றபட்ட பணத்தில் 90 சதவிதம் வியாபாரியதாக இருக்கிறது. மீதி பொது மக்களுடையதாக இருக்கிறது. இன்றைய காலகட்டத்தில் நடுத்தர மக்களிடம் 50 ஆயிரம், 1 லட்சம் என்பது சர்வ சாதாரணமாகிவிட்டது. அப்படிப்பட்ட நிலையில் 20 ஆயிரம் கொண்டு போகிறவனை மடக்கி பணத்தை புடுங்கிக்கொண்டு டாக்மெண்ட் கொண்டு வா என கேட்பது என்ன நியாயம்? தங்களுக்கு அதிகாரம் இருக்கிறது என்பதற்க்காக தேர்தல் காலங்களில் அதிகாரிகள் பொது மக்களை, வியாபாரிகளை வஞ்சிப்பது எந்த விதத்தில் நியாயம்.
தேர்தல் ஆணையம் ஒன்றை புரிந்துக்கொள்ள வேண்டும். இன்றைய காலகட்டத்தில் ஒருயிடத்தில் இருந்து மற்றொருயிடத்திற்க்கு பணம் கொண்டு போய் சேர்க்க நூற்றுக்கணக்கான வழி இருக்கிறது. அரசியல்வாதிகள் ஆயிரக்கணக்கான வழியை யோசித்து வைத்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட நிலையில் ரோட்டில் நின்றுக்கொண்டு வருபவனையும், போகிறவனையும் நிறுத்தி டார்ச்சர் செய்வது எந்த விதத்தில் நியாயம்.
இதுப்பற்றி ஒரு அதிகாரிகள் வட்டாரத்தில் கேட்டபோது, அட பேப்பர்லயும், டிவியிலயும் படம் வறனுங்கறதுக்காக பண்றதுங்க என்றவர். இதுவரை பணம் எடுத்தும் போனாரு, பொருள் எடுத்தும் போனாருன்னு எந்த அரசியல்வாதியாவுது மாட்டியிருக்காறா சொல்லுங்க. மாட்டலங்கறதுக்காக அவுங்க எடுத்தும் போகலன்னு அர்த்தம்மில்ல. எடுத்தும் போறது தெரிஞ்சிம் இவுங்க கண்டுக்கறதில்ல. மீறி புடிச்சா ஆட்சிக்கு வரும் போது படிச்சவங்க வேலையில இல்லாதமாதிரி பண்ணிடுவாங்க. அதனால அதிகாரிங்க தங்களோட அதிகாரத்த அவுங்கக்கிட்ட காட்டறதில்ல. ஏமாந்தவன் பப்ளிக் தானே அதனால தான் அவன்க்கிட்ட இவுங்களோட அதிகாரத்த காட்டறாங்க என்றார். அந்த அதிகாரிகள் சொல்வதும் உண்மை தான்.
தேர்தல் ஆணைய அதிகாரிகளே முடிந்தால் கோடிகளில் செலவு செய்ய போகும் அரசியல்வாதிகளை பிடியுங்கள், வாக்காளனுக்கு பணம் தரப்போகும் அரசியல் கட்சியினரை பிடியுங்கள். பாவப்பட்ட மக்களை இம்சிக்காதிர்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக