ஞாயிறு, ஜனவரி 29, 2012

சுகமான சுமைகள்………… பாகம் 14.
ஏய் லூசு, இப்படியா எழுந்திருக்கறது என வலியிலும் திட்ட

ஸாரிய்யா என்றதும் கொஞ்சம் சமாதானம்மானவளிடம். நீ எங்க இந்தப்பக்கம்?.

பக்கத்தில் இருந்தவளை காட்டி இவளை பாக்கலாம்ன்னு வந்தன். நீயும் இங்கதானே படிக்கற அப்படியே உன்னயும் பாத்துட்டு போகலாம்மேன்னு தேடனன். பசங்க இங்க இருக்கறதா சொன்னானுங்க. அதான் வந்தன் என்றாள் தேவி. 

ஏய் நிறுத்து அவனை மட்டும் தான் பாக்க வந்தன்னா என்னை பாக்க வரல. அப்ப அவனோடவே பேசு நான் கிளம்பறோம் என ஜான் கிளம்ப. 

ஓ அய்யாவுக்கு கோபம்மெல்லாம் வருமா என தேவி ஜானை கலாய்க்க. 

பின்ன அவனை பாக்க வந்தன்னு சொன்னா இத கேட்கற என் சின்ன இதயத்துக்கு வலிக்காதா என ரொமான்ஸ் மூடுக்கு மாறினான். 

டேய் இது உனக்கு நல்லதுக்கில்ல சொல்லிட்டன். 

ஆரம்பிச்சிட்டியாடா. 

தேவி சிரித்துக்கொண்டே. விடுங்கடா.

ஸ்கூல் முடிஞ்சதுக்கப்பறம் ஒரே ஒருமுறை தான் சந்திச்சோம். பாக்கவே முடியல. வீட்டுக்கு வரவேண்டியதானேடா. 

எங்க போய் பாத்துட்டு வரலாம்ன்னு கூப்ட்டா இவன் வந்தா தானே என்றான் ஜான். 

என்னை பாக்கனும்கிற நினைப்பெல்லாம் இருக்க உனக்கு.

என்ன இப்படி கேட்டுட்ட தினமும் உன்னை நினைச்சி பாப்பன் தெரியுமா. 

பொய் சொல்லாத.

சத்தியமா என ஜான் சொல்ல தேவியின் முகத்தில் ஒரு சின்ன புன்முறுவல். 

இதை பாத்துக்கொண்டிருந்த நான் தேவிய மட்டுமாடா நினைக்கற என கேட்க என் பக்கம் திரும்பி முறைத்தான். தேவி புரியாமல் என்ன என்றாள். 

நான் உடனே ஒன்னும்மில்ல. நீ ஏன் காலேஜ் போகல?. 

எங்க ப்ரபஸர் ஒருத்தர் ஆக்சிடன்ட்ல நேத்து இருந்துட்டாரு. அதனால இன்னைக்கி லீவு விட்டுட்டாங்க. அதான் இங்க என் ப்ரண்ட்ட பாக்க வந்தன். அப்படியே உங்களையும் பாக்க வந்தன். 

இவுங்க எங்க படிச்சாங்க. இவுங்களப்பத்தி சொன்னதேயில்ல.

ஸாரிப்பா இவப்பேரு ப்ரியா என் பக்கத்து வீடு என ஆரம்பிக்கும்போதே. 

அகிலன் உள்ளே புகுந்து, கேள்ஸ் ஸ்கூல்ல படிச்சாங்க. இப்ப இங்கிலீஸ் லிட்டரேச்சர் பஸ்ட் இயர் சேர்ந்துயிருக்காங்க. தினமும் சைக்கிள்ள தான் வருவாங்க. க்ளாஸ்ல அதிகமா பேசமாட்டாங்க. வெளியில வந்தா நிறையப்பேசுவாங்க என ஒப்பித்தான். 

எப்படிடா என ஆச்சர்யமாக பார்த்தோம். 

இல்லடா இவன் தான் விசாரிக்க சொன்னான். அதான் என ஜானை கைகாட்ட, உடனே ஜான், முதல் நாள் சீனியர் பசங்க ராக்கிங் பண்ணும்போது அங்க இவுங்களயும் பாத்தம்மில்ல அதனால விசாரிக்க சொன்னன் என்றான். 

எங்கள் முன் முதல் முறையாக வாய் திறந்து எங்களையும் ராக் பண்ணானுங்க. நீங்க வந்து ரப்பா பேசனதால டென்ஷனாகி எங்களையும் விட்டுட்டானுங்க என்றாள். 

அப்படியா. உங்களை சீனியர்ன்னு நினைச்சிட்டோம் என்றான் ஜான். 

எங்களுக்குள் அறிமுகப்படலம் நடந்து முடிந்த பின். ஆமாம் உங்கள பஞ்சபாண்டவர்ன்னு காலேஜ்ல சொல்றானுங்க. எங்க மீதி இரண்டு பேர். 

சார்ங்க காதலிக்க ஆரம்பிச்சிட்டாங்க. அதான் க்ளாஸ்லயே இருக்கானுங்க என்றேன். சிறிது நேரம் பேசிவிட்டு நாங்க கிளம்பறோம் என்ற தேவி. 

என் ஸ்கூட்டி மக்கர் பண்ணுது. என்ன ப்ராபளம்ன்னு வந்து பாரு ராஜா என அழைத்தாள். எனக்கு சைக்கிள் ரிப்பேரே தெரியாது இதல எங்க ஸ்கூட்டி. இதோ இவனை அழைச்சிம் போ என்றதும் ஜான் நீ வா என்றவள் ப்ரியா நீ இங்கயே இரு நான் போய் வண்டிய எடுத்துக்கிட்டு வர்றன் அப்பறம் போலாம் என ஜானை அழைத்துக்கொண்டு கிளம்பினாள்.

நான் வாயாடியா என ப்ரியா அகிலனை முறைக்க.

என்ன சொல்வது என தெரியாமல் முழித்தவன் இல்ல அவன் தான் என இழுத்தான். 

விடுங்க மேடம். ஒரேயடியா பந்தா பண்றிங்களே, உண்மையைத்தானே சொல்லியிருக்கான் என சிரித்துக்கொண்டே கூறியதும். என் பக்கம் கோபமாக திரும்பினாள். மச்சான் நான் எஸ்ஸாகறன் கிசுகிசுத்தவன் நான் கிளம்பறங்க எனச்சொல்லிவிட்டு வேகமாக இடத்தை காலி செய்தான். 

சில நொடிகள் மவுனத்திற்க்கு பின் அப்பறம் ப்ளான் பண்ணி எல்லாரையும் அனுப்பிட்டிங்க. என்ன விஷயம் சொல்லுங்க. 

ஆச்சர்யத்துடன் என்னை நோக்கியவள். எப்படி கண்டுபிடிச்சிங்க என கேட்டாள். 

நான் பயங்கர டென்ஷன் பார்ட்டி கோபத்தல அடிக்க கூட செய்வன். அது தேவிக்கும் தெரியும். அப்படியிருக்கும் போது ஒரு வாயாடி பொண்ண தனியா இங்க விட்டுட்டு அதுவும் ஜானை கூப்ட்டுக்கிட்டு போறான்னா ப்ளான் இல்லாம வேற என்ன.  

இந்த வாயாடி உங்களை தனியா சந்திக்கனம்ன்னு தோணுச்சி அதான்..

எதுக்கு?. 

இல்ல சீனியர் பசங்க முன்னாடி ரவுடி மாதிரி பேசனிங்களா, நான் உங்கள ரவுடின்னு நினைச்சிக்கிட்டன். ஒருநாள் தேவி வீட்ல ஸ்கூல்ல எடுத்த குரூப் போட்டோவுல உங்களைப்பாத்தன். உங்களை காட்டி கேட்டப்ப உங்களைப்பத்தி சொன்னா அதுக்கப்பறம் தான் நான் நினைச்சது தப்புன்னு தெரிஞ்சது. 

நீங்க நினைச்சத விட ரொம்ப மோசமானவன்னு தெரிஞ்சதோ?

சேச்சே. இல்ல. நான் நினைச்சது தப்புன்னு உங்கள நேர்ல பாத்து ஒரு ஸாரி கேட்கலாம்ன்னு நினைச்சன் அதான் அவளை அழைச்சி வந்தன் என்றாள். 

பரவாயில்ல. நான் கூட உங்களை தனியா பாக்கனும்ன்னு எதிர்பார்த்தன். 

ஏன்?.

கீழ கிடந்த நோட் புக் எடுத்து தந்தன் நன்றின்னு ஒரு வார்த்தை சொல்லலயேங்கற கோபம்தான். 

இல்ல. உங்களை பாத்து பயந்துட்டன் அதனால தான். 

நான் பாக்கறதுக்கு பேய் மாதிரி இருக்கறனா என்றதும். 

இல்லைங்க என்றவளிடம் 

அதுயென்ன நான் வந்ததுயிலயிருந்து வாங்க, இல்லைங்க, போங்க, ஸாரிங்கன்னு என்னை ஏதோ பெரிய மனுஷன்க்கிட்ட பேசற மாதிரி பேசறிங்க. நானும் பஸ்ட் இயர் தான். இந்த மரியாதையெல்லாம் வேணாம். பேர் சொல்லியே கூப்பிடுங்க என சொல்லும் போதே ப்ரியா ஜானை பின்னால் உட்கார வைத்துக்கொண்டு ஸ்கூட்டியில் வந்து நின்றாள். 

வண்டியை விட்டு இறங்கிய ஜானை பார்த்து, இன்னைக்கு உன் மானத்த காலேஜ்ல வாங்கப்போறான் பாரு.

டேய் அடங்குடா என்றான் ஜான். 

ஏதாவது சொன்னான்னா வந்து சொல்லுடீ இவனை கொன்னுடறன் என ஜானை முறைக்க. 

அம்மா தாயே நீ கிளம்பு என ஜான் ஜகா வாங்கினான். 

வாடீ போலாம் என ப்ரியாவை அழைக்க அவளும் கிளம்பினால். 

எங்க போறிங்க என கேட்டேன். 

சினிமாவுக்கு.

ப்ரியாவை காட்டி அவுங்களுக்கு சினிமா புடிக்காதே என்றதும்

வாரா வாராம் சினிமாவுக்கு போறவங்க நாங்க எங்கக்கிட்டயேவா என தேவி மறுக்க.

அமைதியாக பின்னால் நின்ற ப்ரியா என்னை பார்த்தவள் தேவி நீ கிளம்புடீ. மதியம் வீட்டுக்கு வர்றன் என்றாள். 

எங்களை அதிர்ச்சியுடன் தேவியும் - ஜானும் பார்த்தார்கள். 

தொடரும் ……………….


வியாழன், ஜனவரி 26, 2012

சுகமான சுமைகள்………… பாகம் 13.
குரல் வந்த திசையை திரும்பி பார்த்தபோது சீனியர் மாணவர்கள் மூன்று பேர் அமர்ந்திருந்தனர். அவர்களின் எதிரே தாவணி போட்ட பெண் ஒருத்தியும், சுடிதார் போட்ட பெண் ஒருத்தியும் நின்றிருந்தனர். 

வாங்கடா இங்க என்றார்கள் எங்களை பார்த்து. 

மச்சான் ராக்கிங் பண்ணுவாங்கன்னு நினைக்கறன் என கிசுகிசுத்தான் ஜான். 

வா பாத்துக்கலாம். 

கிட்டே போனதும், சீனியர் உட்கார்ந்துயிருக்கறோம். வணக்கம் வைக்கமாட்டிங்களாடா?

ஸாரி சீனியர் நீங்க யார்ன்னே தெரியாது அதான் வணக்கம் வைக்கல. 

டேய் எங்கள தெரியலயா என ஒருவன் குரலை உயர்த்த. 

நிஜமா நீங்க யார்ன்னு தெரியல சீனியர். 

நொல்லக்கண்ணன்டா இவன் என சொல்ல மற்றவர்களும் சிரித்தனர்.

கடுப்பாகி, கண்ணு நல்லாதான் இருக்கு சீனியர். என் கண்ணுக்கு மனுஷங்க மட்டும் தான் தெரியறாங்க. மாடு, கழுதை, எறும்பு தெரியறதில்ல சீனியர் என்றதும் 

சுடிதார் போட்ட பெண் க்ளுக் என சிரித்தால். 

திமிரா பாத்தியா இவனுக்கு. எங்கள மாடுங்கறியா என ஒருவன் எகிற. 

உங்கள சொல்லுவன்னா சீனியர் பம்மியதும் 

மற்றொருவன் உங்க பேர் என்னடா ?.

பெயரை சொன்னதும். 

நீங்க பஸ்ட் இயர் ஸ்டூடன்ட் சீனியர்க்கிட்ட மரியாதை இருக்கனும், சொல்றத செய்யனும் புரிஞ்சதா?.

செய்யறோம் சீனியர் என்றான் ஜான். 

திரும்பி பாக்காம போங்கடா. 

திரும்பி நடக்க தொடங்கினோம். கொஞ்ச தூரம் வந்ததும் மச்சான் தைரியமா பேசிட்ட. எப்படீடா?. 

காலேஜ்க்கு வர்றதுக்கு முன்னாடியே இங்க படிச்ச ஒரு அண்ணன்க்கிட்ட ராக்கிங் பண்ணா என்ன பண்றதுன்னு கேட்டன். அவர் தான் ஆரம்பத்தலயே ராங்கா பேசிடு. அப்பறம் உன்கிட்ட கொஞ்சம் சாப்ட்டா நடந்துக்குவானுங்க. இல்லன்னா அவனுங்க படிச்சி முடிக்கற வரைக்கும் சீண்டிக்கிட்டே இருப்பானுங்கன்னாரு. அதான் கொஞ்சம் சவுண்டா பேசனன் ஒர்க்கவுட்டாகிடுச்சி. பயந்துயிருந்தோம் கலாச்சியிருப்பானுங்க என பேசியபடி வகுப்பை தேடி வந்து சேர்ந்தோம். ஒத்த நோட்டுடன் காலேஜ்க்கு வருவது என்பது புதுசாகயிருந்தது. ஸ்கூல் லைப்க்கு தலைகீழாக காலேஜ் லைப் இருந்ததால் அதை புரிந்துக்கொள்ள நாளானது. அடுத்த பெஞ்சில் இருந்த அகிலன், தயா, ரமேஷ் எங்கள் இருவருடன் நண்பரானார்கள். காலேஜ்ஜில் எங்களுக்கு வைத்த பெயர் பஞ்சபாண்டவர். 

தினமும் வீட்டுக்கு வந்து போவது கஸ்டாக இருக்கிறது என்று வீட்டில் போராடி அனுமதி வாங்கி ஜான் இருந்த ஏரியாவிலேயே அவன் தெருவுக்கு இரண்டு தெரு தள்ளி ரூம் எடுத்து தந்தான். ரமேஷ்சும் கிராமத்தில் இருந்து வருவதால் என் ரூம் மெட்டானான். 

ஒருநாள் மதியம் ஆபிஸ் ரூம் போய் ஸ்காலர்ஷீப்க்கு அப்ளிக்கேஷன் தந்துவிட்டு மாடிப்படி ஏறிக்கொண்டுயிருந்தேன். படியில் ஒருபெண் நோட் புத்தகங்களை தவறவிட்டுவிட்டு அதை எடுத்துக்கொண்டுயிருந்தாள். நான்கு படி தாண்டி கிடந்த இரண்டு புத்தகத்தை எடுத்து தந்தபோது தான் அவளின் முகத்தை பார்க்க நேரிட்டது. முதல் நாள் காலேஜ் வந்தப்ப ராக்கிங் பண்ண சீனியர் பசங்களோட பாத்த பொண்ணு மாதிரியிருக்கே என மனதுக்குள் எண்ணியபடி புக்கை தந்தபோது வாங்கிக்கொண்டு என் முகத்தை பார்த்தாள். அப்போது புரபஸர் ஒருவர் படியில் இறங்கி வர அந்தயிடத்தை விட்டு வந்துவிட்டேன். 

மறுநாள் முதல் வகுப்பே கட் என்பதால் நான், ஜான், அகிலன் மூவரும் ஒத்த நோட்டுடன் புங்கமரத்தின் கீழ் உட்கார்ந்து கதையளந்துக்கொண்டுயிருந்தோம். மச்சான் நம்ம க்ளாஸ்ல எல்லாம் மொக்க பிகர்களா இருக்காளுங்கடா. சைன்ஸ் குரூப்ல போய் பாரு. சூப்பர் பிகர்ங்க கலக்குதுங்க. அவனுங்க மூனு வருஷத்துக்கு கொடுத்து வச்சவனுங்க என ஜான் பீல் பண்ண. 

நமக்கு கொடுத்து வச்சது அவ்ளோ தான்டா என்றான் அகிலன். 

ஏய் அதான் இங்கிலிஸ் க்ளாஸ் கம்பய்ன் பண்ணி தானே வைக்கறாங்க. அப்ப பாருங்களேன்டா. 

ஏன்னடா மச்சான் இப்படி பேசற. அழக மணி கணக்க உட்காந்து ஆராதிக்கனும்டா வாரத்தல இரண்டு நாள் தான் கம்பைன் க்ளாஸ் இத வச்சிக்கிட்டு என்ன பண்றத்து. 

அதுக்கு என்ன பண்ணனும்கிற. 

மச்சான் என் கொள்கைய மறந்துட்டியேடா.

என்ன கொள்கை ?.

டேய். ஒரு ஃபிகரை கரெக்ட் பண்ணி காலேஜ் முடியற வரைக்கும் அவளோட 3 வருஷத்த ஓட்டனும்ன்னு காலேஜ் வந்தன்னைக்கே சொன்னனேடா என்றான் ஜான். 

மச்சான் சூப்பர் கொள்கை. நான் உன் கட்சியில சேர்ந்துக்கறன் என குதுகலித்தான் அகிலன். 

வேணாம்டா, அவன் மணிக்கு ஒரு பொண்ண சைட் அடிப்பான். பத்தாவது படிக்கும் போது சென்ட் அடிச்சிக்கிட்டு வந்து நான் ஒரு பொண்ண காதலிக்கறன்னு சொன்னான். 3 மாசத்துக்கப்பறம் அவ வேற ஒருத்தனை காதலிக்கறான்னு சொன்னவன், இப்ப வேற ஒருத்திய காதலிக்கறன்னு சொன்னான். ஹோட்டலுக்கு கூப்ட்டும் போய் செலவெல்லாம் பண்ணான். மச்சினிச்சி கூட கரெக்ட்டாகுதுன்னு அளந்தான். அடுத்த 6 மாசத்துல வந்து அவளுக்கு கல்யாணம் நிச்சியமாகிடுச்சின்னான். இதுவரை 5 பொண்ண காதலிக்கறன்னு சொல்லிட்டான். ஸ்கூல் முடிஞ்சி காலேஜ் வந்துயிருக்கான். பாரு வாரத்துக்கு ஒரு பொண்ணு காதலிக்குதுன்னு சொல்லி உயிர வாங்குவான். இவனைப்பத்தி தெரியாம செட் சேராத சொல்லிட்டன். 

போடாங்க. நான் உண்மையா தான் அவளுங்கள காதலிக்கறன். அவளுங்க அப்படி இருக்கமாட்டேன்கிறாளுங்க. 

மூடு. ஒருத்திய காதலிக்கும்போதே கூடயிருக்கற அவளோட ப்ரண்ட்டுக்கும் ரூட் போட்டா உன்ன காதலிக்கறவ பாத்துக்கிட்டு சும்மாயிருப்பாளா?. ஆதான் கழட்டி விடறா என்றதும்.  

ஏய் அடங்கு. காதலிச்சா இன்னோரு பொண்ணுக்கிட்ட பேசக்கூடாதா?. அவளுங்க என் பணத்தல ஜாலியா இருந்துட்டு வேற ஒருத்தன் கிடைச்சவுடனே பிரிஞ்சி போக ப்ளான் போட்டுக்கிட்டு சும்மாங்காட்டியும் நீ எங்கிட்ட மட்டும் தான் பேசனம்ன்னு சொல்றாத ஒத்துக்க சொல்றியா என கேட்டான் ஜான். 

உன்னப்பத்தி எனக்கு தெரியும். வாய மூடிக்கிட்டு சும்மாயிருடா என்றதும். 

டேய் காலையில வந்தா வா. இல்லன்னா விடு என்றவனை பார்த்து. ஒன்னுக்கூட சிக்காது பாரு என்றதும். 

டேய் பத்தே நாள்ள ஃபிகர்கள சைட் அடிச்சி அதல நல்லதா பாத்து ஒன்ன புடிக்கறன்னா இல்லையான்னு பாரு என சவால்விட்டான் ஜான். மச்சான் நான் உன்பக்கம்டா என்றான் அகிலன். 

இரண்டு பேரும் உருப்பட்டமாதிரி தான் என அவன்களை பார்த்து சொல்லிக்கொண்டுயிருக்கும் போது யாரே பின்னால் இருந்து என் கண்ணை இறுக்கி மூட யாரு என யோசித்தபடியே இருக்க ஜான் தான் மாச்சான் என கத்தியவன் திடீரென சைலண்டானான். 

யாராயிருக்கும் என யோசித்தபடி கண்ணை மூடிக்கொண்டுயிருந்த கை விரல்களை பிடித்தபோது வளையல்கள் தட்டுப்பட சடாரென எழுந்தேன். அப்பா என்ற பழக்கப்பட்ட ஒரு பெண்ணின் குரல் வரவும், கண்களை மூடியிருந்த கை விலகியிருந்தது. 

யாராது என பார்த்தபோது கால் முட்டியை தேய்த்தப்படி நின்றிருந்தாள் தேவி. அவளுடன் அவளும் …………..

தொடரும்………..


வெள்ளி, ஜனவரி 20, 2012

சுகமான சுமைகள்………… பாகம் 12.
என் மனதில் இருந்த காதல் பிசாசு எழுந்ததும், மஞ்சு கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டாளா?, அவளுக்கு முழு சம்மதமா?, இவ்வளவு சீக்கிரமாவா அவளாள என்னை மறக்க முடிஞ்சது?, நான் தான் அவளை மறக்க முடியாம தவிக்கறன்னா?, நான் காதலிச்சன்னு முத்துவுக்கு தெரிஞ்சா என்ன நினைப்பான்?, அவன்க்கிட்ட சொல்லிடலாமா?, சொன்னா எப்படி எடுத்துக்குவான் ?, எனக்கு பொண்ணு தாங்கன்னு கேட்டுடலாம்மா என மனம் பலவாறாக குழம்பி தத்தளிக்க ஆரம்பித்தது.

யாரோ என்னை உலுக்கியபோது தான் நினைவுக்கு வந்தேன். சுற்றிலும் பார்த்தேன். ஏழுமலை என் தோல் மேல் கைவைத்தபடியிருக்க அருகே ஜான், ஜீவா மட்டுமே என்னை பார்த்தபடி நின்றிருந்தனர். 

அவனுங்க எங்கடா?. 

முத்துவோட போயிருக்கானுங்க. வந்துடுவானுங்க. 

நீங்ககூட சொல்லவே இல்லையேடா?.

என்னத்த சொல்றது. இரண்டு நாளைக்கு முன்னாடி தான் சொன்னான். நீ மறந்துட்டன்னு சொன்ன. சரி எதுக்கு உங்கிட்ட சொல்லி சங்கடப்படுத்தனும்மேன்னு தான் விட்டுட்டோம். முத்துவுக்கும் எதுவும் தெரியாது. இப்ப சொன்னாக்கூட அவன் வேணான்னிடுவான். சொல்லட்டா என கேட்டான் ஜீவா. 

மனம்மோ தவியாய் தவித்தது. கண்ணீர் முட்டிக்கொண்டு வர. ஏன் கண் கலங்குவதை கண்ட ஜீவா. 

ஏய் என்னடா நீ. படிச்சவன்னு சொல்ற. இதுக்கெல்லாம் போய் அழுதுக்கிட்டு. டேய் முத்துவ கூப்ட்டு வா அவன்க்கிட்ட எல்லாத்தையும் சொல்லிட்டு நைட்க்கு நிச்சயத்துக்கு முன்னாடியே பொண்ண தூக்கலாம் என்றான். 

ஏழுமலை முத்துவை அழைக்க வேகமாக நடந்தான்.  

ஏழுமலை வேகவேகமாக முத்துவை அழைக்க போனான். 

மச்சான் சொல்றத கேளு, அது ஒரு வாழ்க்கையை தொடங்கப்போவுது விட்டுரு. முடிஞ்சது முடிஞ்சதா இருக்கட்டும் வீணா எதுக்கு இப்ப பழசை கிளருற. இப்ப ஏதாவது நீ முடிவு பண்ண அத இரண்டு பேருக்கும் பிரச்சனை. இரண்டாவது பொண்ணும் ஓடிப்போய்டுச்சின்னா ஊர்ல ரொம்ப கேவலமா பேசுவாங்க. அதல அவுங்க ஏதாவது பண்ணிக்கிட்ட வாழ்க்கை முழுக்க மனசுல சுமையா இருக்கும் சொல்றத கேளு. காலேஜ்ல சீட் கிடைச்சாச்சி. எல்லாமே இனிமே மறந்துடும் சொல்றத கேளு என கெஞ்சினான் ஜான். 

நான் மெல்ல, மாப்ள அவனை கூப்பிடுடா என்றதும் ஜீவா தயக்கத்துடன் ஏய் நில்லுடா என கத்த ஏழுமலை நின்றான். இங்க வா என அழைக்க வந்தவன் என்னடா?.

வேணாம் மச்சான். காதலிச்சோம். பிரிஞ்சாச்சி. மனசுல அந்த நினைவு இருக்குது. இல்லன்னு சொல்லல. ஆனா இனி மஞ்சு முத்துவோட மனைவிய ஆகப்போகுது. ஆத கெடுக்க வேணாம். இன்னைக்கு அவள போய் வான்னு கூப்பிட்டாலும் வராது. அதுக்கு குடும்பம் முக்கியம். அப்படியே வந்து இழுத்தும் போய் கல்யாணம் பண்ணிக்கிட்டா ஊர்ல ஒரு மாதிரியா பேசுவாங்க. அதனால சரியாவராது. அது நல்லாயிருக்கட்டும். இந்த விஷயம் யாருக்கும் தெரிய வேணாம். முத்துக்கு கூட தெரிய வேணாம். அவன் அப்பறம் ரொம்ப கஸ்டப்படுவான் என்றேன். 

மூவரும் அமைதியாக என்னை பார்த்தார்கள். வாங்கடா சரியாகிடும் எனச்சொல்லிவிட்டு கழனியை நோக்கி நடந்தேன். அவன்களும் வந்தான்கள். என் மனம் ஓரளவு அமைதியாக இருந்தது. 

ஏரிக்கரையை விட்டு இறங்கி எங்களது கழனிக்கு வரப்பில் நடந்து போனோம். மச்சான் இளநீர் சாப்பிடுறியாடா எனக்கேட்டுவிட்டு டேய் யாராவது மரத்தல ஏறி 4 இளநீர பிச்சி போடுங்கடா என்றதும் ஏழுமலை தான் ஏறினான். போதும் போதும் எனும்போதே 10 காய்களை தள்ளியவன். 

ஏன்டா இத்தனை ?

உங்கப்பன் தேங்காயை கூட பத்தரமா பாதுகாக்கறான் அதான் ஏறுடான்னதும் ஏறி தள்ளிட்டன் என்றான். 

பம்புசெட்ல கொடுவாயிருக்கும் எடுத்துவாடா எனச்சொல்லிவிட்டு நாங்கள் மூவரும்  தென்னமரத்தின் கீழே உட்காரும்போதே ஜீவா, இவன் பையன் குடிக்கற பழக்கத்த கத்துக்கிட்டானா ஜான் ?. 

இவனா சரக்கு பேரை கேட்டாலே எங்கப்பா அடிப்பாருன்னு ஓடறான். இவன் எங்க குடிக்கறது. இவன் பால்டப்பி பாஸ். 

அங்கவந்தும் கத்துக்கலயா ?. 

திங்கறதுக்கு மட்டும் செலவு பண்றான். சரக்கு பக்கம் மட்டும் வர்றமாட்டேன்கிறான். பீர் மட்டுமாவுது குடிடான்னு கேட்டாலே நடுங்கறான் என போட்டு தாக்கும்போதே ஏழுமலை கொடுவா கத்தியுடன் வந்து இளநீரை சீவி தந்தான். ஆளுக்கு இரண்டு என குடித்துக்கொண்டுயிருக்கும் போதே தூரத்தில் மஞ்சு மாட்டுக்கு பில் புடுங்கி எடுத்துக்கொண்டு வருவதை கண்டேன். இந்த வழியா தான் வந்தாகனும் என்ன பண்ணலாம் என யோசிக்கும் போதே ஜான் என்ன மச்சான் யோசிக்கற. 

ஒன்னும்மில்லடா.

என் பக்கம்மிருந்த ஜான், அது ஒன்னும்மில்ல மஞ்சு இந்த பக்கமா வருது. அதப்பாத்து சார் உர்ருன்னாயிட்டாரு. 

ஜான் திரும்பிபாத்துவிட்டு. அது மாட்டும் போகப்போகது. உனக்கென்னடா வந்துச்சி. நீ வேலையப்பாரு என்றான். 

மஞ்சு அருகில் வந்தவள் என்னைப்பார்தும் பெரியதாக எந்த ரியாக்ட்டும் காட்டவில்லை. அருகில் இருந்த ஜானை பார்த்ததும் ஆச்சர்யமாகி ஏய் ஜான் எப்படியிருக்கற?. 

ம். நல்லாயிருக்கறன். 

நீ எப்படியிருக்கற?. 

எனக்கென்ன. நல்லத்தான் இருக்கன். 

பாஸாயிட்டயில்ல?. அடுத்த என்ன படிக்கப்போற.

நானும் இவனும் பி.காம் சேரப்போறோம். 

அப்படியா?. எந்த காலேஜ்ல?.

இதைக்கேட்டுக்கொண்டிருந்த நான் காரணம்மேயில்லாமல் எந்த காலேஜ்ன்னு சொன்னா வந்து சேரவாப்போறாங்க. பெரிய இவனாட்டம் பதில் சொல்லிக்கிட்டுயிருக்கற. வாடா போலாம். 

ஏய் சும்மாயிருடா என்றான் ஜான். இதை வேடிக்கை பார்த்தபடி நின்றான்கள் அவன்கள் இருவரும். 

கல்யாணம்ன்னு சொன்னாங்க. வாழ்த்துக்கள் மஞ்சு. 

ம். 

பெரிய இவ. இவளுக்கு வாழ்த்து சொல்றான் வர்றியா இல்லையாடா என சிடுசிடுத்தேன். 

ஏண்டா இப்படி என கேட்கும்போதே ச்சீ வா என்றேன். 

மஞ்சுவின் முகம் இருண்டு போய், கண்ணில் நீர் கோத்தது. 

சரி நான் கிளம்பறன் மஞ்சுவிடம் கூறிவிட்டு வந்தவன். ஏன்டா இப்படி நடந்துக்கற?.

சில நொடிகள் அமைதியாக நடந்தபடியே, அதும் மனசுல எங்கயாவது ஒரு ஓரத்தல நான் இருப்பன்யில்ல அதுக்கூட இனிமே இருக்கக்கூடாதுன்னு தான் அப்படி பேசனன்.

அமைதியாக என்னை பார்த்தவன்கள், எதுவும் பேசாமல் நடக்க தொடங்கினார்கள். கிணத்தடிக்கு வந்திருந்தோம். 

தண்ணீ மேல வரைக்கும் இருக்குதுல்ல என ஜான் ஆச்சர்யப்பட நீச்சல் தெரியுமா ஜான் என கேட்டான் ஏழுமலை. 

தெரியாது. 

கத்துக்கறியா ?. 

அய்யோ எனக்கு கிணறுன்னாலே பயம் என்றான். 

குடிக்கறதுக்கு வீரன் மாதிரி பேசன. நீச்சல் கத்துக்கறியான்னு கேட்டதுக்கு நடுங்கற என ஜீவா கலாய்க்க. சிரித்துக்கொண்டுயிருந்தோம்.  

குறிப்பிட்ட தேதியன்று நானும் எங்கப்பாவும் காலேஜ்க்கு போனோம். ஜானும் அவன் அப்பாவுடன் வந்திருந்தான். சர்டிப்கெட் சரிபார்க்கப்பட்டு பணம் கட்டியதற்க்கு பில் தந்து ஆகஸ்ட் 5ந்தேதி காலேஜ் வந்துடு, வரும்போது பில் எடுத்துவா என்றார் கிளர்க். பிரின்ஸ்பால், எச்.ஓ.டியை பார்த்துவிட்டு கிளம்பினோம். 

ஆகஸ்ட் 5ந்தேதி கல்லூரி திறக்க காலேஜ்க்கு போனோம். கேட்டின் முகப்பில் புத்தம் புது மலராய் கல்லூரிக்கு வரும் இதயங்களை மூன்றாமாண்டு மாணவ செல்வங்கள் உங்களை அன்புடன் வரவேற்க்கிறார்கள் என்ற இரண்டு பேனர்கள் வரவேற்றன. வளாகத்துக்குள் பூத்து குலுங்கும் மரங்கள், சுடிதார், தாவணி, புடவை என கலக்கும் இளைஞிகள், ஜீன்ஸ் பேன்ட், டீசர்ட் என கலக்கும் இளைஞர்கள் ஒருபுறம் என பார்க்கும்போதே கண்ணுக்கு குளிர்ச்சியாக இருந்தது. 

மச்சான் சூப்பர் பிகர்ங்கடா. என்னம்மா கலர் ட்ரஸ்ல வலம் வருதுங்க. காலேஜ் லைப்ல ஏதாவது ஒன்ன கரெக்ட் பண்ணி 3 வருஷத்த ஓட்டனும்டா என்றான். 

நீ ஒரு ஆளை கரெக்ட் பண்றவனாடா என கேட்டபடியே நடக்க

ஏய் என்ற குரல் கேட்டு திருப்பினோம். அங்கு……..

தொடரும்………..

புதன், ஜனவரி 18, 2012

சுகமான சுமைகள்………… 11.


ஸாரி மேடம் என்ற தலைப்பில் இதுவரை எழுதி வந்த தொடர்கதையை தொடர்ந்து வாசித்து வரும் நண்பர்கள் கோரிக்கையை ஏற்று தலைப்பை சுகமான சுமைகள் என மாற்றியுள்ளேன். இத்தொடரை தொடர்ந்து வாசித்து ஊக்குவிக்கவும். கதை தொடர்கிறது. 

2 மாதம் ப்ராக்ட்டீஸ். கம்ப்யூட்டர் க்ளாஸ் என பொழுது ஓடியது. ர்pசல்;ட் வந்த அன்று காலையே நானும், ஜானும் ஸ்கூல்க்கு போயிருந்தோம். மதியம் 12 மணிக்கு ரிசல்ட்டை போர்டில் ஒட்டினார்கள். மனம் திக் திக் என அடித்துக்கொள்ள போர்டை போய் பார்த்தோம். எதிர்பாராத வகையில் நான் 923 மார்க் எடுத்திருந்தேன். மச்சான் நான் 985 என தோளை இறுக்கி பிடித்து சந்தோஷப்பட்டான் ஜான். அடுத்து ஆசையோடு மஞ்சுவின் ரிசல்ட்டை தேடியது கண்கள். இங்கிலீஸ்சில் பெயிலாகியிருந்தாள். 

அதான் பிட் தந்தாங்களே எப்படி பெயிலானா என யோசிக்க, விடு மச்சான் அவள மறந்து தொலை என்றான். 

அடுத்து என்னடா படிக்கபோற. 

தெரியலடா இனிமே தான் யோசிக்கனும். நீ?

நான் பி.காம் பண்ண போறன் என்றான் ஜான். 

சரி நாளைக்கு வீட்டுக்கு வர்றன். எந்தந்த காலேஜ்க்கு அப்ளிக்கேஷன் போடலாம்ன்னு யோசிச்சிவை நானும் என்ன சேர்றதுன்னு யோசிச்சி வைக்கறன் என சொல்லிவிட்டு வீட்டுக்கு சைக்கிளை எடுத்துக்கொண்டு கிளம்பினேன்.

அம்மா வாசலில் காத்திருக்க, அப்பா திண்ணையில் உட்கார்ந்திருந்தார். 953 மார்க்ம்மா. இதைக்கேட்டு சந்தோஷத்துடன் எழுந்த அப்பா 100 ரூபாய் தந்து இந்தா எல்லார்க்கும் லட்டு வாங்கி தா. 

நான் யாருக்கும் தரல. வேணும்ன்னா நீங்க தந்துக்குங்க…. காலேஜ்க்கு அப்ளிக்கேஷன் போடனும் காசு வேணும். 

100 ரூபாயை மீண்டும் பாக்கெட்டில் வைத்தபடியே ஏய் நேத்து யூரியா வாங்கனம்ன்னு பணம் தந்தயின்யில்ல அதலயிருந்து ஆயிரம் தந்துவுடு. மூணு, நாலு காலேஜ்க்கா அப்ளிக்கேஷன் போடு எனச்சொல்லிவிட்டு வெளியே போனார். வார்த்தையில் கோபம் தெரிந்தது. 

சாயந்தரம், புங்க மரத்தின் அருகே சென்றபோது ஏழுலை, ஜீவா, முத்துவும் அமர்ந்திருந்தனர். 

என்னடா படிச்சவனே பாஸ் பண்ணிட்டியா ?.

ம். 

அப்பறம் ஏன் உம்முனு இருக்க. 

ஒன்னுமில்லடா. 

பாஸ் பண்ணிட்ட எங்கள ஏதாவது கவனிக்கறது. 

என்னத்த கவனிக்கறது. பாஸ் பண்ணிட்டன்னு வீட்ல சொன்னதுக்கு 100 ரூபா தந்து லட்டு வாங்கி தாங்கிறாரு. அத வச்சி என்னத்த பண்றத்து அதான் வேணான்னிட்டன். 

ஜீவா உடனே பணம் வச்சிக்கிட்டே ஏண்டா உங்கப்பன் இப்படி கஞ்ச தனம் பண்றாரு. 

ஏன் உங்கம்மா தந்துயிருப்பாங்களே என கேட்டான் முத்து. 

காலேஜ்க்கு அப்ளிக்கேஷன் போடனம்ன்னு கேட்டதுக்கு ஆயிரம் ரூபா தந்துயிருக்காரு. நாளைக்கு கிளம்பும்போது பாத்தா தான் எங்கம்மா ஏதாவது தருவாங்களான்னு தெரியும். 

அண்ணே பெரியய்யா கூப்ட்டு வரச்சொல்லுச்சி என வந்து நின்றான் முத்துவின் பக்கத்து வீட்டு சிறுவன். 

இருங்கடா வந்தர்றன் என எழுந்து போனான். 

ஆமாம் கேட்க மறந்துட்டனே, உங்காளுது ரிசல்ட் என்னாச்சி என கேட்டான் ஏழுலை. 

நீ வேறடா. அவுங்க அப்பன் தூக்கு மாட்டனத பாத்து பயந்து போய் பிரிஞ்சிடலாம்ன்னுச்சி. எவ்ளோ கெஞ்சி பாத்தன் முடியாதுன்னு சொல்லுச்சின்னு தான் சொன்னனே. நானும் அதுக்கப்பறம் எதிர்ல வந்தாக்கூட பாக்கறதில்ல. ரிசல்ட் பாத்தன் இங்கிலிஷ்ல பெயிலாகிடுச்சி. இனிமே அதப்பத்தி பேசாதிங்கடா மனசு ஒரு மாதிரியாயிருக்கு என்றேன். 

நல்ல பொண்ணுடா. பாவம் அவுங்க அப்பன் பண்ண தப்பு. எல்லாம் தலைகீழ மாறிடுச்சி என்றான் ஜீவா. 

சரி நான் கிளம்பறன். அவன் வந்தான்னா சொல்லிடு எனக்கூறிவிட்டு வீட்டுக்கு வந்தேன். 

மறுநாள் ஜான் வீட்டுக்கு போயிருந்தேன். அவன் மட்டுமேயிருந்தான். எங்கடா யாரையும் காணோம். தெரிஞ்சவங்க வீட்ல பங்ஷன் அதுக்கு போயிருக்காங்க. எங்கப்பா மெட்ராஸ்ல ஏதாவது ஒரு காலேஜ்ல சேருடா ஊர் உலகம் பத்தி தெரிஞ்சிக்குவன்னு சொல்றாருடா என்னப்பண்ணலாம். 

எங்க வீட்ல அனுப்புவாங்களான்னு தெரியலயே?. 

முதல்ல அப்ளிக்கேஷன் போடுவோம் அப்பறம் பாத்துக்கலாம். 

கொஞ்ச நேரம் யோசித்துவிட்டு சரி நாளைக்கு காலையிலயே கிளம்பலாம் எனச்சொல்லிவிட்டு வந்தேன். 

இரவு வீட்டுக்கு வந்ததும் நாளைக்கு மெட்ராஸ்க்கு போறன். அங்க ஏதாவது ஒரு காலேஜ்ல சேர்ந்து படிக்கலாம்ன்னு இருக்கன். அவ்ளோ தூரம் எதுக்குடா போற என அம்மா தயங்க. சாப்பிட்டுக்கொண்டிருந்த அப்பாவே உன் இஸ்டம் என்றார். 

மறுநாள் நானும் ஜானும் சென்னைக்கு கிளம்பினோம். பஸ் ஸ்டான்ட் வரை வந்த ஜானின் அப்பா அங்க தங்கற மாதிரியிருந்தா எனக்கு தெரிஞ்சவங்க. அவுங்க வீட்ல போய் தங்குங்க நான் போன் பண்ணி சொல்லிட்டன். இதான் அட்ரஸ் என தந்துவிட்டார். இரண்டு பேருக்குமே சென்னை புதுசு. தாம்பரம் கிறிஸ்டியன் காலேஜ், பச்சையப்பா காலேஜ், ஜெயின் காலேஜ், மாநில கல்லூரி என தேடிதேடிப்போய் அப்ளிக்கேஷன் வாங்கி பி.காம் அ பொருளியல் என குறித்துக்கொடுத்தோம். நாளை வந்து பாருங்க என்றார்கள் தனியார் காலேஜ்ஜில். 

மாலை மடிப்பாக்கத்தில் இருந்த ஜானின் அப்பாவின் நண்பர் வீட்டுக்கு போனோம். நன்றாக கவனித்தவர்கள் ஹால்ல படுத்துக்குங்கப்பா என்றார். காலேஜ்ஜில் தந்திருந்த புத்தகத்தில் இருந்து பீஸ் மற்றும் ஹாஸ்டல் பீஸ் போன்றவற்றi கணக்கிட்டபோது மயக்கமே வந்தது. என்னடா இவ்ளோ பணம் போட்டுயிருக்கானுங்க. அதோட நம்ம செலவு வேறயிருக்கு. நம்ம ஊர்ல படிச்ச இதல கால்வாசிக்கூட ஆகாதேட என்றேன். முதல்ல சீட் கிடைக்குதான்னு பாக்கலாம் அப்பறம் பேசிக்கலாம் என்றான் ஜான். 

கிறிஸ்டியன் காலேஜில் ஜான்க்கு பி.காம் கிடைத்திருந்தது. எனக்கு கிடைக்கவில்லை. பச்சையப்பாவில் எனக்கு எக்கனாமிக்ஸ் கிடைக்க அவனுக்கு கிடைக்கவில்லை. சென்னை வேணாம்டா ஊருக்கு போகலாம் என பேசியபடி இருவரும் ஊர் வந்து சேர்ந்தோம். 

வீட்டுக்கு வந்ததும் என்னடா அப்ளிக்கேஷன் போட்டாச்சா. 

போட்டுட்டன். அங்க போய் படிக்கறதுக்கு பதிலா இங்கயே எங்கயாவது சேரலாம்ன்னு இருக்கன். 

ஏன் ?.

ரொம்ப காசு ஆவுது. 

பணம் வேண்ணா கட்டறன்.

வேணாம். இங்கயே ஏதாவது ஒரு காலேஜ்ல சேந்துக்கறன்.

ஏதோ பண்ணு என எழுந்து துண்டை உதறி தோளில் போட்டுக்கொண்டு வெளியே போனார். 

மறுநாள் நானும் ஜானும் வேலூர் முத்துரங்கம் கவர்மென்ட் ஆர்ஸ் காலேஜில் பி.காம்க்கு அப்ளிக்கேஷன் வாங்கி பில் பண்ணி பாக்சில் போட்டுவிட்டு வந்தோம். ஜீன் மாதம் இரண்டாம் வாரம் பள்ளியில் சர்டிப்கெட் வாங்க கிளம்பினோம். வழியில் மச்சான் பாஸ் பண்ணியாச்சி சுவீட் வாங்கிட்டு போகலாம் வாத்தியார்க்கு தரனும்டா என்றான் ஜான். 

நான் வாங்கல நீ வேண்ணா வாங்கு.

ஏய் ச்சீ வாங்கு. 

நான் யாருக்கும் தரல. நீ வாங்கிக்கிட்டு வாடா. 

ஜான் லட்டு ஒரு கிலோ வாங்கிக்கொண்டு வந்தான். சைக்கிளில் கிளம்பினோம். ஸ்கூல் உள்ளே மரத்தடியில் ஆனந்தும், குமாரும் நின்றிருந்தனர். 

அவன்களுக்கு கைகாட்டியபடியே அருகில் போய் சைக்கிளை நிறுத்திவிட்டு ஏன்டா நிக்கறிங்க.

க்ளாஸ் நடக்குதுடா. 

போங்கடாங்க. வாங்கடா என ஜான் அழைத்து போனான். ஒவ்வொரு வகுப்பாக போய் எங்களுக்கு பாடம் நடத்திய தமிழ் ஆசிரியர், இங்கிலீஸ் டீச்சர், அக்கவுண்ட்ஸ் சாரிடம் பாஸ் பண்ணிட்டோம் சார் என பாக்ஸை நீட்டினான்கள். நான் வெளியே நின்றேன். 

எச்.எம் ஒரு வகுப்பில் இங்கிலீஸ் கிளாஸ் எடுத்துக்கொண்டுயிருந்தார். நானும் அவனுங்களுடன் உள்ளே போனேன். 

சுவீட் எடுத்தவர் 

என்னை பார்த்து, ஃபெயிலா எனக்கு தெரியும்டா, என்னை எதிர்த்து பேசறவன்யெல்லாம் இப்படித்தான் போவான். மூஞ்ச பாரு என பேச 

சைலண்டாக நின்றேன். 

சுவீட் தந்த நண்பன்கள் கமுக்கமாக சிரித்தபடியே அவன் பாஸ் பண்ணிட்டான் சார்.

ஆச்சர்யமானவர். 

என்ன மார்க் ? 

923. 

இனிமேலாவது ஒழுங்காயிரு என்றார். 

பீ.டி சார் ரூம் அருகே வந்ததும் ஜானிடம் இருந்த சுவீட் பாக்ஸை வாங்கி நான் நீட்டினேன். 

ம். 

என்ன பண்ணப்போற ?

பி.காம் சார். 

நல்லா படிக்கனும். அடிக்கடி வந்துட்டு போ 

சரிங்க சார். 

பள்ளியை விட்டு வெளியே வந்தோம். ஆனந்த் தான் ஆரம்பித்தான் மச்சான் நாம நாளு பேருமே பாஸ் பண்ணியாச்சி இன்னைக்காவது எங்க கூட சேர்ந்து தண்ணீ அடிங்கடா என்றான்கள் ஜானும், ஆனந்த்தும். 

நான் பயந்து போய் இல்ல மச்சான் எனக்கு அந்த பழக்கமேயில்ல. அதோட ஊர்க்காரன் யாராவது பாத்தாலோ வீட்டுக்கு தெரிஞ்சாலோ அவ்ளோ தான். நான் மட்டான் என உண்மையிலேயே பயந்தேன். 

மச்சான் பீர் ஒன்னும் பண்ணதுடா என சமாதானம் செய்தான் ஆனந்த்.

டேய் சாமிகளா ஆளைவிடுங்க என தலைக்கு மேல் கையெடுத்து கும்பிட்டேன். என்னைப்போல் தான் குமாரும் பயந்தான். 

அந்த மயிரூ கதையெல்லாம் வேணாம் ஒழுங்கா வாங்கடா.

ஜான் என்னிடம் சும்மா டேஸ்ட் பண்ணி பாருடா. புடிச்சா குடி இல்லன்னா விடு. 

ஒருநாள் குடிச்சா அந்த பழக்கம் தொத்திக்கும்டா. 

ஒன்னும் ஆகாது வாடா என நச்சரிக்க தொடங்கினான் ஜான். 

கொஞ்சமா தான் குடிப்பன் என குமாரும் சபலத்தோடு சொல்ல என்னையும் வாடா என இழுத்தும் போனார்கள். இரண்டு பீர் வாங்கி வந்து ஒரு புதாரின் மறைவில் நின்றபடி முதல் முறையா குடிக்க போறிங்க நீங்க குடிங்கடா என ஆனந்த்தும், ஜானும் ஆளுக்கொரு பாட்டிலை ஓப்பன் பண்ணி எங்களிடம் தந்தான்கள். 

இரண்டு மடக்கு குடித்துவிட்டு ஏய் கசக்குதுடா எனக்கு வேணாம்டா என ஜானிடம் நீட்ட  அவன் வாங்கி கடகடவென குடித்தான். 

குமாரும் என்னைப்போல் தயங்கி தயங்கி கால்வாசி குடித்துவிட்டு போதும்டா என ஆனந்திடம் தர அவன் பாட்டிலை காலி செய்தான். 

வாய் நாற்றம் வரக்கூடாதுயென பபுள்காம் வாங்கி போட்டுக்கடா என்ற ஜான் மச்சான் நீ கிளம்பு என என்னை அனுப்பிவிட்டான். நானும் பீர் குடிச்சா இப்படித்தான் கசக்கும் போல என எண்ணியபடி வீடு வந்து சேர்ந்தேன். 

15 நாள் இருக்கும் ஒருநாள் போஸ்ட்மேன் வந்து அந்த கடிதத்தை தந்தார். வேலூர் முத்துரங்கம் காலேஜ்ஜில் பி.காம் சீட் ஒதுக்கப்பட்டுள்ளது இந்த தேதியல் வந்து சேர வேண்டும் பணத்தை உடனே கட்டவேண்டும், சர்டிப்கெட்டுடன் வாருங்கள் என கடிதம் சொன்னது. இதைப்பற்றி ஜான்க்கு போன் பண்ணி சொல்ல தலைவர் வீட்டுக்கு போய் அக்கா ஒரு போன் பண்ணனும் என்றேன். பண்ணிக்கடா என்றார்கள். அவன் வீட்டுக்கு போன் செய்தேன். ஜானின் அம்மா தான் எடுத்தார். 

ம்மா நான் ராஜா போசறன். 

எப்படிப்பா இருக்கற

நல்லாயிருக்கம்மா 

ஜான்யில்ல. 

அவன் உன்னை பாக்கதான் போறன்னு சொல்லிட்டு கிளம்பனாம்ப்பா. 

சரிம்மா என போனை வைத்துவிட்டு வீட்டுக்கு வந்தேன். 

சற்று நேரத்தில் பைக்கில் வந்த ஜான் மச்சான் பி.காம் கிடைச்சியிருக்குடா என்றான். எனக்கும் கிடைச்சிடுச்சிடா. கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் லட்டர் வந்தது உடனே வீட்டுக்கு போன் பண்ணன். அம்மா நீ இங்க வர்றன்னு சொன்னாங்க. அதான் வெயிட் பண்ணன். 

உள்ளேயிருந்து வந்த அம்மா, வாப்பா என அழைத்தார். 

வர்றன்ம்மா என்றவனிடம். 

இப்பத்தான் காலேஜ்ல சீட் கிடைச்சியிருக்குன்னு சொன்னான். உனக்கு எப்படிப்பா எனக்கும்தாம்மா. இரண்டு பேரும் ஒரே காலேஜ், ஒரு குரூப் என்றான் குதுகலத்தோடு. 

சந்தோஷம்ப்பா. டைம்மாயிடுச்சி இரண்டு பேரும் வந்து சாப்பிடுங்க. 

சாப்பிட்டுவிட்டு வெளியே வந்தோம். புங்க மரத்தின் கீழ் பசங்கள் அமர்ந்திருந்தனர். எங்களை பார்த்து கை காட்டி அழைத்தான்கள். 

வாடா ஊர் பசங்க அறிமுகப்படுத்தறன் என அழைத்து சென்றேன். இவன் ஸ்கூல் பிரண்ட் ஜான் என அறிமுகப்படுத்திவிட்டு அவன் ஏழுலை, இவன் ஜீவா, நந்தன், கார்த்தி என ஒவ்வொருவராக அறிமுகப்படுத்திவிட்டு காலேஜ்ல சீட் கிடைச்சியிருச்சிடா அதான் சொல்லிட்டு போலம்ன்னு வந்துயிருக்கான். 

இன்னும் எவ்வளவுதான்டா படிப்ப. ஏதாவது வேலைக்கு போடா என்றான் கார்த்தி. 

டேய் இப்ப படிச்சத வச்சிக்கிட்டு மாடு தான் மேய்க்கனும். கம்முனுயிருடா சாமி. சரி வாங்கடா ஏரிக்கரைக்கா போய்ட்டு நிலத்த காட்டிட்டு வரலாம் என கூப்பிட எல்லோரும் எழுந்து நடக்க தொடங்கினோம். ஏரிக்கரை மேல் பேசிக்கொண்டு நடக்க எதிரே மாடு ஓட்டிக்கொண்டு வந்த முத்து. எங்களை பாத்து மாட்டை இழுத்து பிடித்தவன் எங்கடா என்னை மட்டும் விட்டுட்டு போறிங்க. 

உன் மாமன் பொண்ணு சமைஞ்சியிருக்காலம் ஆலம் சுத்தபோறோம் என்றான் கார்த்தி நக்கலாக.

உன்னித மூடு. 

ஏய் இது நம்ம ராஜாவோட பிரண்ட் டவுன்லயிருந்து வந்துயிருக்காரு. அதான் சும்மா ஏரிக்கரை பக்கம் வந்தோம் என்றான் கார்த்தி. 

அப்படியா. உங்க பேர் என்னங்க. 

ஜான். 

இருங்கடா நானும் வர்றன் என பிடித்திருந்த மாட்டை செடியில் கட்டபோக.

கடுப்பான ஆனந்தன், டேய் எங்ககூட சுத்தவராம புதுமாப்பிளையா போய் ரெடியாகற வழியப்பாரு. 

உடனே ஜீவா, என்னடா புது மாப்பிளை அதுயிதுன்னு அவனை கலாய்க்கற. 

இன்னைக்கு நைட் இந்த நாதாரிக்கு நிச்சயதார்த்தம். பொண்ணு வீட்ல நடக்குது. இந்த நாய் நம்மக்கிட்ட சொல்லவேயில்ல. காலையில இவுங்கம்மா எங்க வீட்ல வந்து பேசிக்கிட்டுயிருந்தாங்க. அப்பத்தான் எனக்கே தெரியும். 

ஏய் சொல்லவேயில்ல என நான் கேட்க. 

டேய் சும்மாயிடா கூடவேயிருக்கற எங்களுக்கே சொல்லல இந்த நாயி. 

சும்மாயிருங்கடா. 1 வாரத்துக்கு முந்தி தாண்டா பேச ஆரம்பிச்சாங்க. ஓ.கேயாகிடுச்சி. காலையில சொல்லலாம்ன்னு பாத்தன். அதுக்குள்ள கரண்ட் வந்ததால கரும்புக்கு தண்ணி பாய்ச்ச போனான். இப்பத்தான் வர்றன். 

யார்ரா பொண்ணு என கேட்டேன். 

மஞ்சு. 

லேசான வெட்கத்துடன் அவன் சொன்ன அந்த பெயர். என் இதயத்தில் நெருப்பை சொருகியதைப்போல் இருந்தது. 

மஞ்சுவோட அக்கா ஓடிப்போய்ட்டாயில்ல. அதல மனசு ஒடிஞ்சி போன அவுங்கப்பன் சீக்கிரமா மஞ்சுவுக்கு கல்யாணம் பண்ண முடிவு பண்ணியிருக்காரு. எங்கய்யன் இருவது நாளைக்கு முன்னாடி டீ குடிக்கறயிடத்தல மஞ்சு அப்பன்க்கிட்ட பையன்க்கு கல்யாணம் பண்ணலாம்ன்னு இருக்கன்னும் சொல்லிக்கிட்டு இருக்கும்போது, அந்தாளு நானும் எம்பொண்ணுக்கு மாப்பிள பாக்கறன்னு சொல்லியிருக்காரு. பேச்சு வாக்குல உன் பொண்ண தர்றிய்யான்னு எங்கய்யன் கேட்க அவரும் சரிண்ணியிருக்காரு. இன்னைக்கு முறையா நிச்சயதார்த்தம் வர்ற தைல கல்யாணம் வச்சிக்கலாம்ன்னு சொல்லியிருக்காங்க என்றான். 

அவன் பேசுவது காதில் விழுந்தாலும் என் மனதில் ஒரமாக தூங்கிக்கொண்டிருந்த காதல் பிசாசு எழுந்துவிட்டது. 

தொடரும் ………………..


வெள்ளி, ஜனவரி 13, 2012

பானை போய் குக்கர் வந்தது டும் டும் டும்.....................பொங்கல் பண்டிகை வருகிறது என்றாலே 10 ஆண்டுகளுக்கு முன்பு  மார்கழி மாதம்மே பொங்கலை கொண்டாட மக்கள் தயாராகிவிடுவார்கள்.

நான் டவுசர் போட்ட பையனாக இருந்தபோது அப்பா, அம்மா, நான் என மூவரும் மண் சட்டி, அன்னக்கூடையுடன் செம்மண் பூமிக்கு செல்வோம். அங்கே தெருவாசிகள் பலர் எங்களுக்கு முன் மண் அள்ளிக்கொண்டுயிருப்பார்கள். அப்பா நல்ல மண்ணாக தோண்டி நிரப்பி தர அதை கொண்டு வந்து வீட்டின் முன் கொட்டுவோம். பொங்கலுக்கு 20 நாளைக்கு முன்பே அந்த மண்ணை சளித்து புது தரைப்போடுவார் அம்மா. அந்த தரையை நாய், மாடு மிதித்துவிடாமல் இரவு பகல் என பாதுகாப்பார்.

தரைபோட்டபின், அடுத்து வீட்டின் சுவற்றுக்கு சுண்ணாம்பு அடிக்க வீடு சுத்தம் செய்யப்படும். வீட்டின் கூரையில், அடுக்கி வைக்கப்பட்ட பானைகளில் யாருக்கும் தெரியாமல் மறைத்து வைத்து மறந்து போன 10 ரூபாய் தாள்கள், அதிரசம், முறுக்கு போன்றவை தூசு படிந்து கிடக்கும். மறந்துபோன அந்த காசுக்காகவே அம்மா விடு சுத்தம் செய்யனும் எனும்போதே நான் உதவறன்ம்மா என ஓடிவந்து நிற்பேன். வீடு சுத்தம் செய்யும்போதே போகிக்காக காத்திருக்காமல் பழையதை அப்போதே கொளுத்திவிடுவோம்.

பொங்கலுக்கு பத்து தினங்களுக்கு முன்பே பொங்கலுக்கு வீட்டின் பானையில் சேமித்து வைத்திருந்த நெல்லை குத்தி அரிசியாக்கி வைப்பார். அப்படியே பக்கத்து வீட்டு அக்கா, பெரியம்மா, அண்ணி, சித்திக்களுடன் அம்மா குழவன் வீட்டுக்கு சென்று போகி பொங்கல்க்கு 1 பானை, தை பொங்கல்க்கு 1 பெரிய பானை, 1 சின்னபானை, 2 சட்டி, மாட்டுப்பொங்கல்க்கு 1 பானை, கன்னு பொங்கல்க்கு 1 பானை என வாங்கிக்கொண்டு நடந்து வருவது அவ்வளவு சந்தோஷமாக இருக்கும்.

போகியன்று நிலத்தில் போய் பொங்கல் வைத்துவிட்டு வந்து மறுநாள் வரும் தை பொங்கலை வரவேற்க்க களிமண் கரைசலில் புது தரையில் லைன்போட்டு அதற்க்குள் சுண்ணாம்பில் கோலம்போடுவார். நீண்ட நாட்களுக்கு அழியாமல் இருக்கும் அது.

நள்ளிரவை தாண்டியும் அக்கம் பக்க வீடுகளில் உள்ளவர்களுடன் கதை பேசிக்கொண்டே அம்மா கோலம்போட நாளை புது டிரஸ் போடலாம் என்ற சந்தோஷத்தில் தூங்கியிருப்பேன்.

தை பொங்கலன்று விடியற்காலையே அம்மா எழுப்பி சுடுதண்ணியில் குளிக்க வைத்து புத்தாடை போடவைப்பார். குளிக்கும் நேரத்தில் அப்பா பூமி தாயை வேண்டிக்கொண்டு பொங்கல் வைக்க பள்ளம் தோண்டி அந்த மண்ணில் உருண்டை பிடித்து பள்ளத்தின் இரண்டு புறமும் அதை வைத்து அதன் மேல் பானையை எடுத்து வைத்து காய்ந்து போன துவரம் செடியை அடுப்பில் போட்டு தீ வைப்பார்.

குளித்துவிட்டு புது துணியுடன் வரும் என்னிடம், அடுப்பு அணையாம பாத்துக்க என அடிப்பின் அருகில் உட்கார வைப்பார். தை மாத குளிர்க்கு இதமாக அதை எரியவைத்துக்கொண்டு இருப்போம். சூரிய உதயம் தொடங்கும்போது பானையில் பொங்கல் பொங்கும். முன்னாடியே அம்மா சொல்லிவிடுவார் பொங்கல் பொங்கும் போது பொங்கலோ பொங்கல்ன்னு கத்தனம்ன்னு பொங்கும் போதே பொங்கலோ பொங்கல் என குரல் கொடுக்கும்போது அடுத்தடுத்த வீடுகளும் அதே குரல் கேட்கும். அன்று மதியமே எங்கவீட்ல தான் முதல்ல பொங்கல் பொங்குச்சி இல்லயில்ல எங்க வீட்ல தான் முதல்ல என என் வயது பிள்ளைகளுக்குள் சண்டை நடக்கும்.


காலமாற்றம் 10 ஆண்டுகள் பொறுத்து அதே விவசாயின் மகனாக பொங்கல் பண்டிகை எப்படி கொண்டாடப்படுகிறது என ஆராய்ந்தபோது அதிர்ச்சியாகதான் இருந்தது. நாளை பொங்கல் பண்டிகை. அதற்கான அறிகுறியே எங்கள் சுற்றுவட்டார பகுதியில் காணோம். சில வீடுகளின் முன்தான் புத்தம் புது தரையிருந்தது. பல கிராமங்களிலும் இதே நிலைதான். எதுக்கு புதுசா தரை போட்டுக்கிட்டு, பெயின்ட் அடிச்சிக்கிட்டு, பானை வாங்க போன குதிரை விலை சொல்றான். பொங்கல் வைக்க அடுப்பு தோண்டனும், நல்லாயிருக்கற தரைய யாராவது தோண்டுவாங்களா. அதான் குக்கர்ல பொங்கல் வச்சி படைக்க போறன் வேலை மிச்சம் பாரு என்றார்கள் தொலைக்காட்சியில் ஊரிப்போன தமிழச்சிகள்.

எவ்வளவு பெரிய மாற்றம். தங்களது வசதிக்காக, சவுகரியத்துக்கு கொண்டாடுவதாக மாறியுள்ளது தமிழனின் கலாச்சார, பண்பாட்டு பண்டிகையான பொங்கல் பண்டிகை.

தமிழனையும், உழவனையும் மதியதாக நாட்டில் பொங்கல் பண்டிகையை மற்றவர்கள் மதியாமல் போனதில் அதிர்ச்சியில்லை. ஆனால் அவனே அதை அசிங்கமாக, அவமானமாக நினைக்கும் போக்கை என்னவென்று சொல்வது.

பத்திரிக்கையுலகில் மீண்டும் உயரும் பார்ப்பன கைகள்.
சாதி, மதம், அரசியல், வேண்டியவா, வேண்டாதவர் எதையும் பார்க்ககூடாது பத்திரிக்கைகள். ஒரு பிரச்சனையை, செய்தியை, கருத்தை மக்களிடம் கொண்டும் போய் சேர்ப்பதே பத்திரிக்கைகளின் கடமை. ஆனால் உலகம் முழுவதுமே பத்திரிக்கைகள் அந்த காரியத்தை செய்வதில்லை. விறுப்பு வெறுப்புகளோடு தான் செய்திகளை அணுகும்போக்கு இன்றளவும் உள்ளது. அதையும் மீறி நடுநிலையோடு ஒரு ஏடு செய்தி வெளியிட்டால் அவர்களை நசுக்கும் பணியை இதே பத்திரிக்கை துறையே செய்கிறது. 

தமிழகத்திலும் அதே நிலைதான். தமிழகத்தில் செய்தித்தாள் தொடங்கியது முதல் 1900ம் வரை  அது பிராமணர்களின் கட்டுப்பாட்டில் தான் அதிகமாய் இருந்துவந்தது. அன்றைய காலக்கட்டத்தில் செய்திதாள்கள் உண்மை விளிம்பிகள் என்றே மக்கள் கருதினர். ஆனால் பத்திரிக்கையை நடத்திய பார்ப்பனர்கள் அவ்வாறு செயல்படவில்லை. அவர்கள் பத்திரிக்கைகள் மூலம் தங்களது சாதி கருத்துக்களை மறைமுகமாகவும், தங்களது சாதியை சேர்ந்த, போராடும்போது முக்கியத்துவம் தந்து வெளியிட்டு மற்றவர்களை நசுக்கும் பணியை திட்டமிட்டு செய்துவந்தது. 

அது, சுதந்திரத்துக்காக பாடுபட்ட நாளிதழ் என பெயர் பெற்ற சுதேசமித்தரனில் அதிகம். 1982ல் சுப்பிரமணியஐயரால் தொடங்கப்பட்ட சுதேசமித்ரன். தங்கள் சாதியை சார்ந்தவர்களின் கருத்துக்களை, அவர்களைப்பற்றிய செய்திகளை முக்கியத்துவம் தந்து வெளியிடுவது என்றேயிருந்தது. ‘அவாள்’களுக்கு எதிர்ப்பாக கருத்துக்கள் வரும்போது அதை மக்களிடம் போய் சேராமல் மறைப்பது, அதைப்பற்றி உள் நோக்கம் கொண்ட செய்திகளை வெளியிடுவது என இருந்தன. இது சுதேசமித்ரன் மட்டுமல்ல தேசபக்தன், இந்து, சென்னைமெயில் போன்றவையும் அப்படியே. காரணம், அதன் உரிமையாளர்கள் முதல் ஆசிரியர்கள், கிளர்க் வரை ‘அவாளா’கவே இருந்ததால் அவர்கள் நினைத்தது மட்டுமே செய்தியானது. 

விடுதலை போராட்ட களத்தில் பல வீரர்கள் இருந்தும் பார்ப்பனிய தலைவர்களை மட்டுமே தூக்கி வைத்து கொண்டாடின. 1920ல் திரு.வி.க வால் தொடங்கப்பட்ட நவசக்தி காங்கிரஸ்காரர்கள் செய்வது நன்மையே என்றன. 1900க்கு பின் படித்து வளர்ச்சியும், உயர்வும் பெற்ற பல சமுகங்கள் பார்ப்பனிய பத்திரிக்கைகளின்  இந்த தில்லாலங்கடி வேலையை புரிந்துக்கொண்டன. 

அதே காலகட்டத்தில் தமிழக அரசியலில் அவா ஆதிக்கமே அதிகமாய் இருந்தது. இதனாலயே பிராமணர்கள் அல்லாத மக்களுக்காக மெட்ராஸ் ஸ்டேட்டில் 1912ல் திராவிடர் சங்கம் உதயமானது. தனது கருத்துகள், கொள்கைள், பிரச்சாரங்கள், செய்திகளை பிராமணர்களின் கட்டுப்பாட்டில் இருந்த செய்திதாள்கள் கொண்டு செல்வதில்லை என்பதை உணர்ந்தே திராவிடர் சங்கம், 1917 பிப்ரவரியில் ஜஸ்டீஸ் என்ற ஆங்கில இதழை நடத்தியது. மக்களிடம் பிரபலமான இந்த இதழின் பெயராலயே பின்னர் திராவிடர் சங்கர் ஜஸ்டிஸ் கட்சி என அழைக்கலாயிற்று. அதே 1917 ஜீன் 1ந்தேதி திராவிடன் என்ற தினசரி பத்திரிக்கையும் திராவிடர் சங்கம் நடத்த தொடங்கியது. 

காங்கிரஸ்சில் இருந்து பிரிந்து வந்த பெரியார், 1924ல் குடிஅரசு என்ற வார இதழை தொடங்கி ஆதிக்கம் புரிந்த பிராமணாளுக்கு எதிர்ப்பாக தன் சாட்டையை சுழற்ற தொடங்கினார். அவரின் எழுத்துக்கள் எதிரிகளை வார்த்தைகளால் பொசுக்கியது. அதன்பின்னர் 1928ல் திராவிடன் இதழ் பொறுப்பையும் பெரியார் ஏற்றுக்கொண்டார். வார்த்தைகள் அனாலாய் வந்து விழுந்தன. 1933ல் புரட்சி, பகுத்தறிவு என்ற வார இதழ், உண்மை என்ற இலக்கிய இதழ், ஆங்கிலத்தில் மாடர்ன் ரேஷனலிஸ்ட் என்ற இதழையும் நடத்தி ஆரிய கூட்ட கருத்துக்களின் முனை மங்க செய்து அவர்களை ஒடுக்கினார். அவாள் சரி என எழுதும் விவகாரத்தை தயங்காமல், யோசிக்காமல் தவறு என எழுத்தால் தன் கருத்தை மக்களிடம் கொண்டு சென்று சேர்த்தார். 


பெரியாரின் தளபதிகளாய் இருந்த பேரறிஞர் அண்ணா - திராவிடநாடு, காஞ்சி, ஹோம்லாண்டு, கலைஞர் கருணாநிதி - முரசொலி, நாவலர் நெடுஞ்செழியன் - மன்றம், ஆசைத்தம்பி தனியரசு, என்.வி.நடராஜன் - திராவிடன், மதியழகன் - தென்னவன், சத்தியவாணிமுத்து - அன்னை, ஆதித்தனார் - தினத்தந்தி, டி.எம். பார்த்தசாரதி - மாலைமணி போன்ற என்னற்ற திராவிட இயக்க தினசரிகள், வார, மாத இதழ்கள் வெளிவந்தன. 

திராவிட தளபதிகளின் வீரிய எழுத்தை தாங்க முடியாமல் காங்கிரஸ் பேரியகத்தில் இருந்த திரு.வீ.க 1917 டிசம்பரில் தேசபக்தனை தோற்றுவித்தார். திராவிடன் இதழ்க்கு போட்டியாக கருத்து யுத்தம் செய்தது. அதேபோல் இந்தியன் எக்ஸ்பிரஸ், ஆனந்தவிகடன், கல்கி, தினமணி, தினமலர், துக்ளக் போன்றவை தொடங்கப்பட்டு அவா மொழி பேச தொடங்கின. 

நாடு விடுதலையடைந்த 20 ஆண்டுகளுக்கு பின் தமிழகத்தில் காங்கிரஸ் பேரியத்தின் ஆட்சி துடைக்கப்பட்டு திமுக, எம்.ஜீ.ஆர் காலத்து அதிமுக ஆட்சியில் இந்த பிராமணிய பத்திரிக்கைகள் பொட்டி பாம்பாய் அடக்கி வாசித்தன. அதேநேரத்தில் விற்பனைக்காக, தாங்கள் தமிழ் மொழியின் தீரர்கள், கீழ்தட்டு மக்களின் பிரதிநிதிகள் என்பதை போல கட்டுரைகள் எழுதின. தமிழ்மொழி மீதான காதல் முகமுடி போட்டுக்கொண்டு தினமணியும், பார்ப்பனிய கருத்துக்களை விசமாய் கக்கிக்கொண்டு தினமலரும் வெளிவந்தன. அவர்களின் கட்டுரைகளை, செய்திகளை ஆழ்ந்து படிக்கும் போது பிராமணர்களின் உள் அரசியல் விளங்கும்.

அடங்கிகிடந்த அந்த செய்திதாள்கள் இன்றைய போட்டி, வியாபார உலகில் மீண்டும் தங்களது கரங்களை விரிக்க தொடங்கியுள்ளன. இந்தியாவில் சி.என்.என்-ஐ.பி.என் குரூப், என்.டி.டி.வி குரூப், இந்து நாளிதழ் குரூப், எக்ஸ்பிரஸ் குரூப், டெக்கன்கிரானிக்கல் குரூப், டைம்ஸ் ஆப் இந்தியா குரூப் போன்ற பல செய்தி நிறுவனங்கள் தங்களது வக்கிர சாதி புத்தியை காட்ட தொடங்கியுள்ளார்கள். இந்தியாவை, அதன் மாநிலங்களை தங்களது அவா அ பிரமணிய ஆட்கள் அ இந்துத்துவா வெறி கொண்ட தலைவர்கள் மட்டுமே ஆளவேண்டும் என்ற குறிக்கோளில் இறங்கியுள்ளார்கள். 

தமிழகத்திலும் இந்த போக்கு அதிகமாகியுள்ளது. பிராமண சமுகத்தை சேர்ந்த ஜெயலலிதா முதல்வாரன பின் இதுவரை இலைமறை காயாக தங்களது சாதி பாசத்தை காட்டி வந்த பத்திரிக்கைள் தற்போது சாதாரணமாக புரிந்துக்கொள்ள முடியாத வகையில் நுணுக்கமாக வெளிப்படையாக சாதி வெறியை செய்திகளில் கட்டுரைகளில் காட்ட தொடங்கியுள்ளன. தங்களை மற்ற பத்திரிக்கைகள், பத்திரிக்கையாளர்கள், செய்தியாளர்கள் பின்பற்ற வேண்டும் இல்லையேல் நடுநிலை என்ற முகமுடியை போட்டுக்கொண்டு அவர்களை துரோகிகளாக, மோசமானவர்கள் என்ற பிரச்சாரத்தை செய்கிறது இந்த பார்ப்பன ஏடுகள். இதற்க்கு தங்களிடம் உள்ள அதிகாரத்தை பயன்படுத்துகின்றன. இதற்க்கு பயந்தோ அல்லது வியாபாரத்துக்காக பல திராவிட இதழ்கள் அவா மொழி பேசவும், பின்பற்றவும் தொடங்கியுள்ளன. 

திராவிட இயக்கங்ளை, பெரியாரின் கருத்துக்களை அழிக்க துடிக்கும் செய்தித்தாள்களை தான் தந்தை பெரியாரின் பிள்ளைகள், பேரன்கள் எனக்கூறிக்கொள்பவர்கள் தலை குப்புற நின்று ஆதரிக்கிறார்கள். 

இந்த பார்ப்பன பத்திரிக்கைகளிடம்மிருந்து சமுகத்துக்கு விடுதலை வாங்கி தந்த அந்த ‘கிழவன்’  இறந்தபின் சில காலம் அடக்கியிருந்தவர்கள் இன்று துள்ளி எழுகிறார்கள். இவர்களை அடக்காவிட்டால் நாளை அவா கருத்தே உன் கருத்தாகிவிடும் ஜாக்கிரதை.  

புதன், ஜனவரி 11, 2012

ஸாரி மேடம் ………….. 10.
ஒரு பொண்ண காதலிச்சன். அந்த பொண்ணு திடீர்ன்னு வந்து நாம பிரிஞ்சிடலான்னு சொன்னா அந்த கோபம் தான். என்னால அவளை மறக்க முடியல அதனால தான் படிக்க விரும்பம்மில்லன்னு சொன்னன் என இழுத்தேன். 

சைலண்டாக தலையை குனிந்தவர். காதலிக்கற அளவுக்கு நீ வளர்ந்துட்டன்னு இப்பதான்ப்பா தெரிஞ்சிக்கிட்டன்.

பீP.டி சார் உள்ளே வர, அவரிடம் அந்த பொண்ணு பிரிஞ்சிடலாம்ன்னு சொல்லுச்சாம். அந்த ஆத்திரத்தல அவர்க்கிட்ட கோபமா பேசிட்டன்னு சொல்றான் சார் என நிறுத்தியவர் அவனுக்கு கல்யாண ஆசை வந்துடுச்சி போல படிக்க விருப்பம்மில்லன்னு சொல்றான். கூப்ட்டும் போய் எங்க அக்கா பொண்ணு இருக்கு கட்டி வச்சிடறன் சார் என்றார். 

நீங்க வேற என பதறிய பி.டி சார். இந்த வயசுல எல்லா பசங்களுக்கும் வர்றது தான் சார். அதப்பத்தி எடுத்துச்சொன்னா கேட்டுக்க போறான். இன்னும் பள்ளிக்கூடம் 2 மாசம் தான் அதுக்கப்பறம் எக்ஸாம் வந்துடும். ர்pசல்ட் வந்ததும் வெளியூர்ல சேர்த்து படிக்கவையுங்க கல்யாணம் அதுயிதுன்னு அவன் வாழ்க்கையை வேஸ்ட் பண்ணிடாதிங்க என்றார். 

அப்பா வேண்டா வெறுப்பாக சலிப்பான குரலில் பாக்கலாம் சார் என்றார். 

படிப்போட அருமை அவனுக்கு இன்னைக்கு தெரியாது. நீங்க தப்பா முடிவு எடுத்து அவனை பள்ளிக்கூடம் விட்டு நிறுத்தாதிங்க. ஸ்கூல்க்கு வரட்டும் அவனை நான் பாத்துக்கறன். நீங்க எச்.எம் ரூம்க்கு வந்து ஒரு மன்னிப்பு கேட்டுடுங்க என எழுந்தார். 

தளர்ந்து போன நடையில் முகத்தில் சோகத்துடன் எச்.எம் முன் வந்தார். அவனை மன்னிச்சிடுங்க சார் ஏதோ தெரியாம பண்ணியிருக்கான் என்றார் அப்பா. 

முன்ன அப்படி பேசனிங்க. 

ஒரே பையன் சார். நானே அவனை திட்டியிருக்கேனே தவிர அடிச்சதில்ல என்க்கிட்ட அடிச்சன்னு சொன்னிங்களா பெத்த பாசம் சார் என்றார் தாழ்ந்த குரலில். 

ம். 

பின்னால் நின்றிருந்த நானும் ஸாரி சார் என்றேன். 

ம். ஒழுங்கா போய் படிக்கற வேலையப்பாரு. 

நன்றி சொல்லிவிட்டு வெளியே வந்தோம். 

பீ.டி சாரிடம், இவனை பாத்துக்குங்க சார் என்றவர் என்னிடம் 20 ரூபாய் தந்து மதியம் சாப்பிடு எனச்சொல்லிவிட்டு புறப்பட்டார். 

பீ.டி சார் அவரது ரூம்க்கு என்னை அழைத்து சென்றவர். 

ரூம்க்குள் நுழைந்ததும் என்னடாச்சி ?.

நடந்ததை சொன்னேன். முழுவதும் கேட்டவர் 

எந்த பொண்ணும் பிரியற முடிவு தான் எடுக்கும். அந்த பொண்ணும் சரியா தான் முடிவு எடுத்துயிருக்கு. கவலைப்படாத. இந்த வயசுல எல்லார்க்கும் ஒரு ஈர்ப்பு வரும் அது வயசு கோளாறு. அதுக்கு பேர் காதல்யில்ல. ஆனா அதை காதல்ன்னு தப்பா எடுத்துக்கிட்டு படிப்ப கெடுத்துக்கிட்டு, குடும்பத்த எதிர்த்து வீட்ட விட்டு ஓடிப்போய் வாழ்க்கையை கெடுத்துக்கறாங்க. நீயும் அப்படி போயிடாத. அதோட நீ காதலிக்கறன்னு சொன்னதுக்கு வேற அப்பாவா இருந்தா இன்னேறம் அடிச்சி உதைச்சியிருப்பாங்க. உங்கப்பா டீசன்டா உலகத்த புரிஞ்சி நடந்துக்கறாரு. உன்ன யார்க்கிட்டயும் விட்டு தரல. அவருக்கு நல்ல பிள்ளையா நடந்துக்க. ஸ்கூல் வந்து ஓழுங்கா படி, டிகிரிய வேற எங்கயாவது போய் படி. விழா காலத்துல மட்டும் ஊருக்கு போ. மஞ்சுவ மறக்கப்பாரு என்றதும். 

திடுக்கிட்டு அவள்னு எப்படி தெரியும் என குழப்பத்தோடு அவரை பார்த்தேன். என் பார்வையை புரிந்துக்கொண்டு பசங்க சொன்னானுங்க. அந்த பொண்ணுக்கிட்ட மறந்துடறன்னு சொல்லு. அப்பத்தான் அந்த பொண்ணும் நிம்மதியா இருக்கும். இரண்டு பேருக்குமே பேசனது, பழகனத மறக்கறது கஸ்டம்மா தான் இருக்கும். அதுக்காக அதையே நினைச்சி மனச போட்டு குழப்பிக்காத. ஒழுங்கா படிக்கற வேலையப்பாரு. உன் நல்லதுக்கு சொல்லிட்டன் அதுக்கப்பறம் உன் விருப்பம்போல செய் என பேசி முடித்தார். 

அமைதியாக நின்றேன்.  

சரி க்ளாஸ்க்கு போ, சாயந்திரம் க்ரவுண்ட்ல பாக்கறன் என்றார். 

வகுப்புக்கு வந்தேன். மற்றவர்கள் என்னை வித்தியாசமாக பார்ப்பதாக பட்டது. 

உட்கார்ந்ததும் ஸாரி மச்சான் என்றான் ஜான். 

ம் என தலையாட்டினேன். மனம்மோ, படிச்சி நல்லதா ஒரு வேலைக்கு போறவறைக்கம் காத்திருப்போம். அவள் காத்திருந்தா கல்யாணம் இல்லைன்னா…….. இல்லைன்னா என அடுத்து யோசிக்க மனம் மறுத்தது. 

லஞ்ச் டைமில் மஞ்சுவை தேடிச்சென்றேன். அவளும் தேவியும் அமர்ந்திருந்தனர். அருகே சென்ற நான் மஞ்சு முன் தலை குனிந்து உன்னை இனிமே தொந்தரவு பண்ணமாட்டன். நீங்க தைரியமா இருக்கலாம், நல்லா படிங்க எனச்சொல்லிவிட்டு பதிலை எதிர்பார்க்காமல் திரும்பி நடந்தேன். தேவி பின்னாடியே ஓடிவந்தவள் ஏய் என்ன இப்படி பண்ணிட்ட என்றாள். 

அவ தான் அந்த முடிவுக்கு முதல்ல வந்தா. அவ நினைக்கறதும் சரிதான். அவுங்கப்பா தூக்கு போட்டுக்கிட்டவற காப்பாத்தனாங்க. எங்க காதல் தெரிஞ்சி வேற ஏதாவது முடிவு எடுத்த நல்லாயிருக்காது. அந்த பழியும், பாவமும் எனக்கு வேணாம். அது அவளையும் தான் பாதிக்கும். ஊர்ல கடைசி வரை அவளை தான் திட்டுவாங்க. அவளை திட்டனா சத்தியமா எனக்கு வலிக்கும். அதனால இப்பவே இதுக்கு ஒரு முடிவு செய்துட்ட நல்லாயிருக்கும் அதான் அவ எடுத்த முடிவுக்கு கட்டுப்பட்டுட்டன். நானே நல்லா யோசிச்சி தான் இந்த முடிவ எடுத்தன். நான் காதலிச்சன்னு எங்கப்பாவுக்கு தெரியும், ஆனா யார்ன்னு தெரியாது. தெரிஞ்சா வேற ஏதாவது பிரச்சனை வந்துட்டா அதான் சொல்லல. எனக்கு மனசு கஸ்டமாதான் இருக்கு தேவி. ஆனா இந்த முடிவுக்கூட அவ நல்லதுக்காக தான் எடுத்தன். இன்னும் காலம்மிருக்கு. பாத்துக்கலாம் எனச்சொல்லிவிட்டு அவளை பாத்துக்க, நல்லவ அவ எனச்சொல்லிவிட்டு நடந்தேன். 

பள்ளி விட்டு இரவு வீட்டுக்கு வந்ததும் அம்மா, யார்ரா அந்த பொண்ணு என கோபமா வெடித்தார். 

……………….

கேட்கறன்யில்ல வாய்ல என்ன கொழுக்கட்டையா.

விடும்மா. அந்த பொண்ணு வேணாம்ன்னிட்டா. நானும் ஒத்துக்கிட்டன். இதுக்கு மேல எதுவும் கேட்காத என்றேன் சலிப்பான குரலில். 

அங்கதான் கேட்கள இங்கயாவது கேளுங்களேன் ?. 

தோல்க்கு மேல வளர்ந்தாச்சி. இனிமே என்னத்த கேட்கறது. அடிச்சி உதைக்கற வயசா அவனுக்கு. நல்லது கெட்டது அவனுக்கே தெரியும் நான் என்ன சொல்றது என திண்ணைக்கு போனார். அன்று முதல் நான் வீட்டில் இருந்தாள் அவர் திண்ணையிலும், நான் திண்ணையில் இருந்தால் அவர் வீட்டுக்குள் இருப்பதுமாக மாறியது. 

வகுப்பு, கிரவுண்ட் என ஓடியது. அவளின் எண்ணம் அடிக்கடி மனதில் வந்து இம்சித்தபடியே தான் இருந்தன. அந்த நேரத்தில் எண்ணத்தை மாற்றிக்கொள்ள சிரமப்பட வேண்டியதானது. இரண்டு முறை மஞ்சுவிடம் சில வார்த்தைகள் தேவிக்காக பேசவேண்டியதானது. பப்ளிக் எக்ஸாம் நெருங்க நெருங்க கிரவுண்ட் போவது நின்று போனது. வகுப்பின் கடைசி நாளன்று ஸ்கூலில் பார்ட்டி ஏற்பாடு செய்திருந்தோம். மைக் பிடித்த எச்.எம் என் பெயரை சொல்லி, அவனை மாதிரி உருப்படாதவங்க சிலப்பேர் தான் இந்த பேட்ச்ல இருந்திங்க. மத்தப்படி எல்லாம் நல்ல பசங்க தான். நீங்க நல்ல படிச்சி பெரிய ஆளா வரனும் என்றார். கடைசி பரிச்சை முடிந்ததும் பி.டீ சார் ரூம்க்கு போனேன். 

நல்லா எழுதியிருக்கியா ?

எழுதியிருக்கன் சார். 

லீவுல சும்மாயிருக்காம ஏதாவது டைப்ரடிங் கத்துக்க கம்ப்யூட்டர் கோர்ஸ் சேரு, தினமும் க்ரவுண்ட்க்கு வந்து ப்ராக்டிஸ் பண்ணு. 

சரி சார். 

வெளியே வந்தேன். வெளியே நின்றிருந்த ஜானும் நானும் நடக்க லீவுல என்ன மச்சான் பண்ண போற. 

தெரியலடா

எங்க போறதாயிருந்தாலும் கூப்டு மச்சான் நானும் வர்றன். 

ம். கிளம்பட்டா?

வீட்ல போய் என்ன பண்ணபோற. எங்க வீட்டுக்கு வா போலாம். 

இல்லடா அப்பறம் வர்றன். என்ன பஸ் ஸ்டான்ட்ல ட்ராப் பண்ணு என அவனுடன் கிளம்பினேன். 

பஸ்சில் வரும்போது மனமோ அடுத்து என்ன என்ற கேள்வியே எதிர்நோக்கியிருந்தது. 

தொடரும்………


குறிப்பு - இக்கதையை தொடர்ந்து வாசித்து வரும் சில நண்பர்கள் தலைப்பை மாற்றக்கோரியதால் அடுத்து வரும் பகுதியில் இருந்து  சுகமான சுமைகள்........... என்ற தலைப்பில் இத்தொடர் கதையை வெளியிடவுள்ளேன். தொடர்ந்து வாசிக்கவும். 

திங்கள், ஜனவரி 09, 2012

ஸாரி மேடம் ( பகுதி 9 ).
மதியம் 3 மணிக்கு படம் பார்த்துவிட்டு சைக்கிளில் ட்ரிபிள்ஸ் வந்துக்கொண்டிருந்தோம். படம் சூப்பர்டா என்றான் ஏழுமலை. 

செம ஃபைட் மச்சான். ஏய். பொங்களுக்கு நம்ம ஊர்ல டீவி டெக் எடுத்துவரும்போது இந்த படத்த கண்டிப்பா போடுனும்டா என்றான் ஜீவா. 

நான் அவன்களிடம் ஆமாம், தீபாவளிக்கு வீடியோ டெக் எடுத்து வரலியாடா ?.

ஏய் ஆளைப்பத்தியா. இப்ப டீவி டெக்குக்கு 300 ரூபா கேட்கறான். யார்க்கிட்டயிருக்கு அவ்ளோ பணம். கோயில்ல கூழ் ஊத்தனப்ப எடுத்து வந்துட்டு டீவி காரன் போகும்போது காசு தர நாங்க பட்ட கஸ்டம் எங்களுக்கு தான் தெரியும். மயிரு நீ கூட தர்றன்னு சொன்ன கடைசியில தரவேயில்ல. நாங்க தான் கடன் வாங்கி தந்தோம். அதனால இந்தமுறை விட்டாச்சி என்றான் ஜீவா. 

பொண்ணுங்கக்கிட்ட கேட்க வேண்டியதுதானே ?. 

அவளுங்க தானே. காசு தரும்போதே நான் சொல்ற படத்ததான் போடனும்கிறாளுங்க. அதான் அவளுங்கக்கிட்ட வாங்கறதில்ல. 

முதல்ல பொண்ணுங்க்கிட்ட காச வாங்கிக்கிட்டு அதுக்கப்பறம் நீங்க சொன்ன படம் கிடைக்கல, கேசட் சரியில்லன்னு டபாய்க்க வேண்டியது தான். 

உன் மயிருக்கு என்ன நீ சொல்லிட்டு போயிடுவ. அவளுங்க கேட்ட படத்த போடலன்னா தினமும் எங்களை தான் திட்டுவாளுங்க. அவளுங்கக்கிட்ட விளையாட்டு காட்ட நாங்க தயாரில்ல என்றான்கள் கோரஸாக. 

போங்கடா. அடுத்த முறை எங்கிட்ட சொல்லு நான் பணம் வாங்கி தர்றன் என பேசியபடியே சைக்கிளை மிதிக்க ஊர் எல்லையை நெருங்கியிருந்தோம். 

ஊருக்குள் நுழையும்போதே எதிரில் வந்த முத்து சைக்கிளை மடங்கியவன், கோயால என்னை விட்டுட்டு எங்கடா போனீங்க.

சினிமாவுக்கு.

கோத்தா என்னை கூப்ட்டா நாங்க வரமாட்டோமா ?.

உன்ன காலையில பாக்க முடியலடா . . 

ஒருத்தன் ஆள்யில்லன்னா தேடமாட்டீங்களா?

சரி விடு. இன்னோரு முறை போலாம். 

கோபாமாக ம் என்றவன். முக்கியமான விஷயம்டா மதியம் 12 மணியிருக்கும் மஞ்சு அப்பன் தூக்கு மாட்டிக்கிட்டான். 

நாங்கள் மூன்று பேரும் அதிர்ச்சியாகி ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டோம். 

நான் கூடுதல் அதிர்ச்சியுடன் என்னடா ஆச்சி.  

அந்த சந்திரா இருக்காளே. அவ புருஷனை விட்டுட்டு முன்ன காதலிச்சானே முருகன் அவனோட இன்னைக்கு எஸ்கேப். முருகன் வீட்டுக்கு தெரிஞ்சி சந்திரா வீட்டாண்ட வந்து சண்டை போட சந்திரா அப்பன் கயித்துல தொங்கிட்டான். நல்ல வேளை மஞ்சு சத்தம் போட உள்ளப்போய் காப்பாத்தனோம் என்றான். 

அந்தாளு தான் சொத்துக்கு ஆசைப்பட்டு தப்பு பண்ணான்னா, இவ அதுக்கு மேல தப்பு பண்ணி ஓடுகாலீ குடும்பம்ன்னு பேர் வாங்கி தந்துட்டாடா மச்சான். பாவம்டா என உச் கொட்டினான். 

என்னாச்சே என்றபடி நாங்கள் கலைந்தோம். இரண்டு நாள் மஞ்சுவை தெருவில் பாக்கவே முடியவில்லை. ஊரே இதைப்பற்றி தான் பேசிக்கொண்டுயிருந்தது. 

தீபாவளி லீவு முடிந்து பள்ளிக்கு போகும் போது மஞ்சுவுக்கு ஆறுதல் சொல்லியபடி செல்ல வேண்டும் என பார்த்தேன். குனிந்தபடியே வந்து பஸ் ஏறினால். பஸ்சிலும் பேசவில்லை. பஸ்சை விட்டு இறங்கியும் பேசவில்லை. க்ளாஸ்சில் உம்மென இருந்தாள். 

மதியம் லஞ்ச் டைமில் உங்கிட்ட பேசனும் என்றாள். தேவியும் அருகில் இருந்தாள். 

ஸாரி என்றேன். 

நான் தான் ஸாரி சொல்லனும். என்னை மன்னிச்சிடு. 

எதுக்கு

நாம பிரிஞ்சிடலாம், காதல் ஒத்துவராது என்றாள் படீரென. 

உங்கக்கா பண்ணத நினைச்சி கவலைப்படறியா. நாம கல்யாணம் பண்ணிக்க இன்னும் குறைஞ்சது 5 வருஷம்மிருக்கு. அதுக்குள்ள எல்லாம் மறந்திருக்கும். 

இல்ல. எங்கப்பா தூக்குல தொங்கனத நான் பாக்கலன்னா எங்கள விட்டு போயிருப்பாரு என அழுதவள். எனக்கு அவுங்க தான் முக்கியம். அதனால நாம பிரிஞ்சிடலாம். 

லூசு மாதிரி பேசாத. 

இல்ல இனிமே என்க்கிட்ட பேசாத, எல்லாத்தையும் மறந்துடு எனச்சொல்லிவிட்டு விறுவிறுவென கண்ணை துடைத்தபடி வெளியே போனாள். 

காலையில வந்ததும் எங்கிட்ட நான் அவனை மறுந்துட்டன்னு சொல்லுன்னு விஷயத்த சொன்னா. நான் நீ பண்றத்து தப்புன்னு சொன்னன். ஆனா அவ பிடிவாதமாயிருந்தா. உங்கிட்ட நேர்ல சொல்லமாட்டன்னா. நான் தான் எதுவாயிருந்தாலும் நீயே அவன்க்கிட்ட சொல்லுன்னன். நான் திரும்ப பேசிப்பாக்கறன் எனச்சொல்லிவிட்டு அவளும் போனாள். 

மனம் சோர்ந்து போய் அப்படியே உட்கார்ந்தேன். என்ன மச்சான் ஆச்சி என்றான். மஞ்சு அவுங்க அக்கா ஓடிப்போய்டுச்சி. அதனால அவுங்க வீட்ல பிரச்சனை அதனால காதல் வேணாம்ன்னிட்டு போறா என்றேன். 

அது பாதிக்கப்பட்டுயிருக்கு. கோபத்தல வேணாம்ங்குது பேசிக்கலாம். வா முதல்ல சாப்ட்டுட்டு வரலாம். 

நான் வரல நீ போய்ட்டு வா. 

வா மச்சான். எல்லாம் சரியாகிடும்.

மனசு சரியில்ல. நீ போய்ட்டு வாடா.

நீ சாப்பிடலன்னா நானும் சாப்பிடல என்றபடி அமர்ந்தான். 

இவள எப்படி சமாதானம் செய்யறது. சாயந்தரம் பேசிப்பார்க்கலாம் என எண்ணியபடி சாப்பிடாமலே இருந்தேன். 

மதிய வகுப்பு முடிந்து எல்லோரும் புறப்பட மஞ்சு நில்லு என்ற என் குரலை கேட்டும் நிற்காமல் போக கையை பிடித்து இழுத்து நிறுத்தினேன். 

கைய விடு. இன்னோரு முறை கைய புடிச்ச அவ்ளோதான் என பொறித்தவள். விடுன்னா விட்டுடனும். சும்மா தொல்லை பண்ணாத என கோபத்தை காட்டிவிட்டு போனாள். 

எனக்கு கோபம் சர்ரென ஏறியது. அந்த கோபத்தை கிரவுண்ட்டில் பந்தில் காட்டினேன். மாஸ்டர் அமைதியாக பார்த்துக்கொண்டிருந்தார். 

பஸ் ஸ்டான்ட்க்கு போனபோது பஸ்க்காக காத்திருந்தாள். நான் அவள் அருகில் போனதும் தூரப்போய் நின்றுக்கொண்டாள். 

கோபம் வர பல்லை கடித்தபடி அவளை நெருங்கிய எண்ணியபோது பஸ் வந்துவிட்டது. நான் முன்னால் ஏறுவதை பார்த்து அவள் பின்னால் ஏறினால். 

மறுநாள் சனிக்கிழமை. ஸ்பெஷல் க்ளாஸ் மட்டுமே. ப்ரேயர்கூட கிடையாது. முன்னால் அவள் என்னை உதாசீனப்படுத்தியது கோபத்தை வரவைக்க சைக்கிளை எடுத்துக்கொண்டு வீட்டைவிட்டு 8 மணிக்கே கிளம்பிவிட்டேன். 9 மணிக்கெல்லாம் கிரவுண்டில் நான் மட்டும் விளையாட தொடங்கினேன். அவள் மீதான கோபத்தை பந்தில் காட்டிக்கொண்டிருந்தேன். 

10 மணிக்கு பெல் அடிக்க க்ளாஸ்கள் தொடங்க நான் மட்டும் பந்திடம் கோபத்தை காட்டிக்கொண்டுயிருந்தேன். என் கோபத்தின் தன்மையை பேஸ்கட் போர்டில் டமால் டமால் என விழுந்து காட்டியது. பெல் அடித்து அரைமணி நேரம்மிருக்கும் எச்.எம் கூப்பிடறாரு என ஜீவா வந்து நின்றான். 

என்னவாம் என்றேன் கோபத்தோடு. 

…………

நீ க்ளாஸ்க்கு போ நான் போய் பாக்கறன். 

அவர் க்ளாஸ்ல தான் இருக்காரு. 

நின்றேன். நீ போ நான் வர்றன். 

அவர் கோபமாயிருக்காரு பாத்துடா எனச்சொல்லிவிட்டு நடந்தான். 

பந்தை அங்கேயே போட்டுவிட்டு க்ளாஸ் ரூம்மை நோக்கி போனன். 

கிரவுண்ட்ல என்னடா பண்ற. 

விளையாடிக்கிட்டு இருந்தன் சார். 

ஸ்கூல்க்கு வந்தியா விளையாட வந்தியா 

இன்னைக்கு க்ளாஸ்க்கு வரல சார்.

க்ளாஸ்க்கு வராதவன் வீட்ல இருக்கவேண்டியது தானே எதுக்கு வந்து உயிர வாங்கற

ஸ்கூல்க்கு தான் வந்தன். க்hளஸ்ல இருக்க புடிக்கல அதனால விளையாட போனன் சார். 

நான் பதிலுக்கு பதில் பேசியதால் கோபமாகி கம்பை எடுத்து பட்டக்சில் அடித்துக்கொண்டு எறும்ம மாடு மாதிரி வளர்ந்துயிருக்கு புத்தியிருக்கா பாரு, நீயெல்லாம் மாடு மேய்க்கதான் லாயக்கு என விளாசினார். மற்ற க்ளாஸ் பசங்கள் ஜன்னல் வழியாக எட்டி பார்க்க வாத்தியார்கள் வெளியே வந்து நின்றனர். முட்டி போடுடா என்றார். 

சார் உங்க இஸ்டத்துக்கு அடிக்காதிங்க. நான் என்ன தப்பு பண்ணன்னு அடிக்கறிங்க. நான் ஸ்கூல்க்கு வராம தான் விளையாடிக்கிட்டு இருக்கறன். ஸ்கூல் கட்டடிச்சிட்டு போய் விளையாடல என கோபமாக கத்தினேன். 

திரும்ப கம்பால் அடிக்க வர கம்பின் ஒரு முனையை கையால் பிடித்தேன். இன்னும் கோபமாகி கம்பை இழுக்க நான் இழுக்க சார் நான் உங்கக்கிட்ட படிக்க விரும்பல. எதுக்கு சும்மா அடிக்கறிங்க என மஞ்சு மீதான கோபத்தை அவரிடம் காட்டிவிட்டு நின்றேன். 

நீ சரிப்படமாட்டா திங்கட்கிழமை வரும்போது உங்கப்பாவை கூப்ட்டுக்கிட்டு வா என்றார். 

அவ்ளோ தானே நான் அழைச்சிக்கிட்டு வர்றன் சார் என்றபடி நடந்தேன். ஸ்டான்டில் நிறுத்தியிருந்த சைக்கிளை எடுத்துக்கொண்டு கிளம்பினேன். ரொம்பத்தான் ஓவரா பேசிட்டமோ, எங்கயிருந்து இந்த தைரியம் வந்தது எல்லாம் அவளாள தான், படிப்பு போச்சா, வீட்ல கேட்டா என்ன சொல்றது என யோசித்தும் பயந்தபடி வீடு வந்து சேர்ந்தேன். 

வீட்டு திண்ணையில் அமர்ந்திருந்த அப்பா என்னடா சீக்கிரம் வந்துட்டா

திங்கட்கிழமை சார் உன்னை அழைச்சி வரச்சொன்னாரு என கோபமாக சொல்லியடி உள்ளே போய் பையை தூக்கி போட்டுவிட்டு உட்கார்ந்தேன். 

எதுவும் பேசாமல் அமர்ந்திருந்தார். 

அம்மா மட்டும் என்னடா ஆச்சியென்றால் பதில் பேசாமல் வீட்டிலிருந்து வெளியே வந்தேன். 

திங்கட்கிழமை அப்பா என்னுடன் கிளம்பினார். பஸ்க்கு காத்திருக்கும் போது அவளை பார்த்தேன். சைக்கிளில் மஞ்சு எங்களை க்ராஸ் செய்து போனாள். 

ஸ்கூலில் ப்ரேயர் முடிந்ததும் எச்.எம் ரூம் முன்னாடி நின்றிருந்தோம். 

தன் அறைக்குள் போக வந்தவர் எங்கப்பாவை பார்த்து உன் பையனுக்கு படிக்க விரும்பம்மில்லையாம். டீசி வாங்கிக்கிட்டு போய்யா. 

என்ன சார் பண்ணான். 

ஏன் அவன்க்கிட்ட கேட்கலயா, கூப்டதும் வந்துட்டிய்யா, புள்ளைய கண்டிச்சி வளக்கமாட்டியா, இவனை புள்ளையா பெத்ததுக்கு எறுமைய பெத்துயிருந்தின்னா பாலாவது தந்துயிருக்கும், உருப்படாத நாய், எச்.எம்மான என்னையே எதிர்த்து பேசுது, உனக்கெல்லாம் எங்கயிருந்து சோறு போடபோகுது, பாத்து இருய்யா நாளைக்கு உன் தலையில கல்ல போட்டு கொன்னுடப்போகுது என்றதும் எனக்கு சுர்ரென கோபம் வந்தது. அட்டனன்ஸ் எடுக்க வந்து ஆசிரியர்கள் இதை வேடிக்கை பார்த்தபடி நின்றனர். 

சார் நிறுத்துங்க சார். சும்மா திட்டாதிங்க. நீங்க கேள்வி கேட்டிங்க. பதில் சொன்னன். நான் ஒன்னும் ஸ்கூல் கட்டடிச்சிட்டு போகல. ஸ்கூல்குள்ளயே வராம கிரவுண்ட்ல தான் இருந்தன். நீங்க தான் என்னை கூப்ட்டு அடிச்சிங்க. எங்கப்பாவ கூப்ட்டு வரச்சொன்னிங்க வந்துயிருக்காரு. சும்மா திரும்ப எதுக்கு சார் திட்டறிங்க என்றதும். 

எங்கப்பா என்னை முறைத்தவர் எச்.எம் பக்கம் திரும்பி அவன்தான் ஸ்கூல்க்கே வரலன்னு சொல்றான் அப்பறம் எதுக்கு அவனை கூப்ட்டு அடிச்சிங்க. நான் என்ன அடிக்கறதுக்கா அனுப்பிவச்சன். அவன் தப்பு பண்ணதா இருக்கட்டும் சார். நீங்க கேள்வி கேட்டுயிருக்கிங்க பதில் சொல்லியிருக்கான். அதல என்ன தப்பு என கோபமாக கேட்க. 

உன் பையன் படிக்க விரும்பலங்கறான் என கத்தினார். 

அது அவனோட விருப்பம் சார். படிச்சா நல்லாயிருக்க போறான். இல்லன்னா கழனி காட்ல கஸ்டப்படபோறான். நீங்க அடிக்கறதுக்கு முன்னாடி என்னை கூப்ட்டு சொல்லியிருக்கனும். அத விட்டுட்டு அடிச்சா என்ன சார் அர்த்தம். என் முன்னாடியே இவ்ளோ மோசமா திட்டறிங்க. உங்க பையனை போய் இப்படி வீட்ல திட்டிப்பாருங்க. போய்யான்னிட்டு போவான் என்றவர். இப்ப என்ன உன் பையன் தப்பு பண்ணிட்டான் டீசி தர போறன்னா தாங்க. அதவிட்டுட்டு அவனை கேவலாம பேசற வேலை வச்சிக்காதிங்க. பசங்கக்கிட்ட அன்பா சொல்லனும் சார். அதவிட்டுட்டு இப்படி மோசமா பேசனா படிக்கமாட்டானுங்க. நடிக்கதான் செய்வானுங்க என்றதும். 

இதோ அப்பானே கேட்டுட்டான் டீசி தந்துவிடுய்யா என பியூனை பாத்து வெறுப்பாக கூறியதும், எச்.எம் பின்னால் நின்றிருந்த பி.டி சார் முன் வந்து அவரிடம் சார் நீங்க உள்ள போங்க நான் பாத்துக்கறன் என்றார். எச்.எம் முறைத்தபடி ரூம்க்குள் போனார். 

பீ.டி சார் டேய் உங்கப்பாவ அழைச்சிக்கிட்டு என் ரூம்க்கு வா என நடந்தார். நாங்கள் பின்னாடியே போனோம். 

எங்கப்பாவிடம் உட்காருங்க சார் என்றார். 

இல்ல சார் பரவாயில்ல.

உட்காருங்க சார். 

எச்.எம் எப்பவும் அப்படித்தான் கோபப்படுவாரு. இவன் ரொம்ப நல்ல பையன் சுமாரா படிப்பான். யார்க்கிட்டயும் எந்த வம்புக்கும் போனதில்ல. இவன் மேல இதுவரை எந்த புகாரும் வந்ததில்ல. நான் அவனை விளையாட வெளியூர் அழைச்சிக்கிட்டு போயிருக்கன் மத்த பசங்க மாதிரியில்லாம ரொம்ப ஒழுக்கமா நடந்துக்குவான். வாத்தியார்ங்களுக்கு பயந்து மரியாதையா நடந்துக்கறவன் அன்னைக்கு ஏன் அப்படி நடந்துக்கிட்டான்னு எனக்கே ஆச்சர்யமாகிடுச்சி. சனிக்கிழமை ஸ்கூல் உள்ள வராம க்ரவுண்ட்ல இருந்திருக்கான். கூப்ட்டு அவர் கேட்க இவன் கோபமா பதில் சொல்லியிருக்கான். எச்.எம்மயே எதிர்த்து பேசறியான்னு  அடிச்சியிருக்காரு. ஏன் அப்படி பேசனான்னு பசங்கக்கிட்ட விசாரிச்சன். உங்க பையன் ஏதோ ஒரு பொண்ண காதலிச்சியிருக்கான். அதான் பிரச்சனை என்னன்னு கேளுங்க நான் எச்.எம்ம பாத்துட்டு வந்துடறன் என எழுந்து வெளியே போனார். 

என்னை பார்த்து முறைத்தார். 

தொடரும்..........