வெள்ளி, ஜனவரி 06, 2012

ஸாரி மேடம் ( பகுதி 8 ).




தினமும் சாயந்தரம் கிரவுண்ட்டில் ப்ராக்டிஸ் முடித்துவிட்டு நான் ஸ்டாப்பிங்கில் பஸ்க்கு காத்திருப்பதும், டியூஷன் முடிந்து அவள் வருவதும் பஸ்சில் கண்ணாலயே பேசிக்கொள்வதும், மதிய நேரங்களில் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவதுமாக நாட்கள், மாதங்களாக கரைந்தன. 

மஞ்சு அவளது அக்கா சந்திராவுக்கு கல்யாணம் என தேவி, ஜான் உட்பட அவளுடன் படிக்கும் சில நண்பர்களை அழைத்திருந்தாள். அன்று தனியாக பள்ளியில் இருந்து வரும்போது தான் அவளிடம் கேட்டேன். ஏய் உங்கக்கா வடக்கால தெருவுல இருக்கற முருகனை காதலிக்கறது. ஊர்ல அரசல் புரசலா தெரியும். அப்பறம் எப்படி உங்க மாமாவுக்கு கல்யாணம் செய்து வைக்காறாங்க. உங்கக்கா எதுவும் முரண்டு புடிக்கலயா?. புடிச்சா ஆனா அம்மா தான் அவன் வேற சாதி, நாம வேற சாதி ஊரை விட்டு ஒதுக்கி வச்சிடுவாங்கன்னு மிரட்டி வச்சியிருக்கறா. ஆக்காவுக்கு துளியும் விருப்பமில்ல அதனால தான் அவசர கல்யாணம். 

ஏய் எங்கிட்ட பொய் சொல்லாம சொல்லு. உங்க தாத்தா சாகறதுக்கு முன்னாடி அவர் பேர்லயிருந்த சொத்து எல்லாத்தையும் உங்க மாமன் பேர்ல எழுதி வைக்க இருந்தாறாம். ஊங்க அப்பா தான் அவன் ஊதாரி குடிச்சே அழிச்சிடுவான்னு உங்கம்மா பேர்ல எழுதி வாங்கனதோடு, நான் அவனை ஏமாத்த மாட்டன் எம்பொண்ண அவனுக்கு தான் தருவன்ன சொல்லி தான் எழுதிக்கிட்டு அதுக்கு பதில் தான் உங்கக்காள உங்க மாமனுக்கு கல்யாணம் பண்ணி வைக்கறதா பேசிக்கறாங்க. உண்மையா?.

அப்படியெல்லாம் யார் சொன்னது. 

எங்கப்பா தானே நாட்டாமையா பஞ்சாயத்து பண்றாரு. அவர்க்கிட்ட வந்து பத்திரம் எழுத போகனும்ன்னு உங்கவீட்டு ஆளுங்க எங்கப்பாவ வந்து கூப்ட்டாங்க. எங்கப்பா தான் உங்க மாமன் பேரை சொல்லி அவனை ஏமாத்தன பாவத்துக்கு நான் ஆளாக விரும்பல. நீங்களே முடிச்சிக்குங்கன்னு சொல்லி அனுப்பனத கேட்டன். அதான் உண்மையான்னு கேட்டன். 

தெரியல. ஆனா பாவம் எங்கக்கா என்றவளை பார்த்து. நாளைக்கு உங்கப்பன் சொல்றான், உங்காத்தா சொல்லுதுன்னு என்னை விட்டு போகமாட்டயில்ல என கேட்டதும். 

விசும்ப தொடங்கினால். அவளை சமாதானம் செய்ய பெரும்பாடாகிவிட்டது. 

மஞ்சுவின் அக்கா சந்திராவுக்கும், அவளது தாய்மாமன் குமாருக்கும் கல்யாணம் சிம்பளாய் நடந்து முடிந்தது. 

அடுத்த இரண்டாவது மாதம் தீபாவளி வந்தது. பள்ளிக்கு தொடர்ந்து 4 நாட்கள் லீவும் வந்தது. குதுகலத்தோடு ஜானிடம் மச்சான் வீட்டுக்கு வந்துடுடா என்றேன். வர்றன்டா என்றான். தேவியிடமும் வா என்றபோது எங்க வீட்ல தீபாவளி இல்லையா என கேட்டவளிடம் ஏய் கிராமத்தல ஜாலியா இருக்கும் வா என்றபோது தனியா போக விடமாட்டாங்க முடிஞ்சா வர்றன் என்றாள். 

தீபாவளியன்று விடியற்காலை 6 மணிக்கே இன்னைக்காவது சீக்கிரம் எழுந்திருடா என திட்டியவர் எழுந்த என்னிடம் தலைக்கு நல்லெண்ணெய் வச்சிக்கடா என உட்கார வைத்து கை, கால், தலை, கண், காது என எண்ணெய் விட்டு தேய்க்க தொடங்கினார். அரை மணி நேரம் சூடு பறக்க தேய்த்தவரிடம் கண்யெல்லாம் எரியுது என்றபோது அவ்ளோ அழுக்கு கண்ணுல என்றார். 

7 மணிக்கு தான் விட்டார். டேய் ஒரு மணி நேரமாவுது உடம்புல எண்ணெய் ஊரனும் அப்படியே கழனிக்கா போய் வா என்றார். இவருக்க வேற வேலையில்ல என்றபடி தெருவில் இருந்த ஒரு வேப்பமரத்தில் ஒரு குச்சியை உடைத்து வாயில் வைத்தபடி வீட்டில் இருந்து வெளியே வந்தேன். புங்கமரத்தின் கீழ் எண்ணெய் தேய்த்துக்கொண்டு ஏமுழலையும், ஜீவாவும் அமர்ந்திருந்தனர். 

அவர்கள் அருகில் போனதும் ஜீவா என்னை பார்த்து வாடா படிச்சவனே. நீயென்ன வாயில வேப்பங்குச்சி வச்சியிருக்கற ?. 

ஃப்ரஸ் வீட்டுக்குள்ள இருக்குடா என்றபடி அவர்கள் எதிரில் அமர்ந்தேன். 

சரி இன்னைக்கு என்ன ஐடியா என ஜீவா கேட்டான் ? 

நீ வேற அவுங்கப்பன் அவனை வெளியில அனுப்பிட்டா உலகம்மே இருண்டுடம்டா என ஏழுமலை கிண்டலடிக்க. 

நீங்க வேறடா அந்தாளு காலையிலயே தொள்ளைப்பண்றாரு. எங்கிட்ட காசுயில்ல எங்கம்மாக்கிட்ட தான் வாங்கனும். அதுக்கப்பறம் தான் முடிவு பண்ணனும். சரி நீங்க எங்க போறதா திட்டம் ?. 

இன்னைக்கு நம்ம தலைவர் விஜயகாந்த் நடிச்ச தாயகம் படம் வருது. அதுக்கு தான் போகலாம்ன்னு இருக்கோம். நீ வர்றியா?. 

படத்துக்கு போறன்னு எங்கப்பனுக்கு தெரிஞ்சா அவ்வளவு தான். நான் வரல.

லவ் பண்ண மட்டும் தெரியுது. வீட்ல பொய் சொல்ல தெரியாதா ?. 

லவ்வா யாரு என அதிர்ச்சியை வெளிக்காட்டிக்கொள்ளாமல் கேட்டேன். 

டேய் டேய் அடங்குடா. நீ மஞ்சுவ லவ் பண்றத்து தெரியும்டா. அவள நீ பக்கறதுயென்ன, அவ உன்ன பாக்கற பார்வையென்ன எங்களுக்கு தெரியாதா?.

நீங்க எப்படா பாத்திங்க ?.
அடங்குடா ஊர்ல. ஒரு தும்பல் விழுந்தா கூட எங்க காதுக்கு வந்துடும். நீ லவ் பண்றத்து எங்களுக்கு தெரியாம போயிடும்மா என்ற ஏழமலையை பாத்துடா சொத்துக்காக அவுங்க அப்பன் பொண்ணு காதலை ஜாதியை காட்டி பிரிச்சவன் ஜாக்கிரதை என்றவன். அங்கப்பாரு உங்காளு வருது. 

திரும்பி பார்த்தேன். மஞ்சு, அவளது தெருவில் உள்ள காஞ்சனா, ராதிகா ஆகியோருடன் நடந்து வந்துக்கொண்டிருந்தாள். உடனே அவன்களிடம் டேய் ஏதாவது துண்டுயிருந்தா தாங்கடா. 

முதுவ மறைச்சி என்னத்த பண்ணப்போற மூடிக்கிட்டு இரு என்றனர் இருவரும். டேய் அசிங்கம்மாயிருக்குடா. 

டேய் சும்மாயிரு. ஏதாவது பேசன. மஞ்சுக்கிட்ட ஏதாவது பேசவேண்டியிருக்கும் ஜாக்கிரதை என்றவன்களை பார்த்து வாயை மூடிக்கொண்டேன். 

அவர்கள் மூவரும் அருகில் வந்ததும் ஏய் ராதிகா எங்க போறிங்க என கேட்டான் ஜீவா. ச்சீ வாய மூடுடா காலையில கேட்குது பாரு. நீ ஒழுங்கா மூடு பப்பரபான்னு தெரியுது பாரு கையை விரித்து சொல்லியபடி நடந்தாள். 

எனக்கும், ஏழுமலைக்கும் சிரிப்பை அடக்காமல் இது தேவையா என்றோம். அவன் லுங்கியை சரிபண்ணிக்கொண்டு இருந்தான். 

அவள்கள் எங்களை கடந்து காட்டு பக்கம் போனாள்கள். 

நீயும் பின்னாடியே போறியாடா என ஜீவா கேட்க. 

நீ பட்டா அசிங்கம் பத்தாதா. நான் பின்னாடி போனன்னு வச்சிக்க சாகற வரைக்கும் அவ என் மானத்த வாங்குவா. அதுக்கூட பராவியில்ல நாளைக்கு ஸ்கூல் போனதும் மஞ்சு சண்டைக்கு வருவா வேண்டாம்டா சாமீ இந்த விளையாட்டு என்றேன். 

சரி அதவிடு இன்னைக்கு படத்துக்கு போறோம். நீ உங்கப்பன்க்கிட்ட டேம் போறன்னு சொல்லிட்டு வா பாத்துக்கலாம். போறது நம மூணு பேர் தான் யாருக்கும் தெரியாது என்றான் ஏழுமலை. 

வீட்டில் குளித்துவிட்டு சாமி படத்து முன் வைத்திருந்த புது பேன்ட் சர்ட்டை எடுத்து போட்டுக்கொண்டு பட்டாசு கட்டுகளோடு வெளியே வந்தேன். 

தெருவில் இருந்த குட்டி பசங்களோடு பட்டாசு வெடிக்க தொடங்கினேன். நேரம் போனதே தெரியவில்லை. 9 மணிக்கு டேய் சாமி கும்பிடனும் வாடா என அம்மா அழைத்த பின்பே போனேன். அப்பா கற்புறம் ஏற்றி தீபாரதனை செய்தார். சாமி கும்பிட்டதும் சாப்பிட உட்கார்ந்தோம். சுட சுட இட்லியை வாழை இலையில் எடுத்து வைத்து வெள்ளாட்டு கறி குழும்பை ஊற்றினார்கள். வாய் நமநமக்க காரமாக சாப்பிட்டுக்கொண்டே பசங்கயெல்லாம் டேம் போறனுங்க நானும் போறன்ம்மா என்ற பொய்யை உதிர்த்தேன். 

ஊர் கெட்டுப்போய் கிடக்கு எதுக்குடா அங்கயெல்லாம் என்றார் அம்மா. அப்பாவோ, தீபாவளியதுவும்மா எல்லாம் குடிச்சிட்டு ஊரை சுத்துவானுங்க. இவன் வெளியில போறங்கறான் உருப்படறதுக்கு அர்த்தமாடீ என்றபடி சாப்பிட்டார். இலையை மடித்துவிட்டு கை கழுவிவிட்டு வந்தவர் சொம்பை தரையில் வைத்தபடி போறயிடத்தல பிரச்சனைய வாங்கி வராம இரு என 50 ரூபாய் தந்துவிட்டு நகர்ந்தார். அம்மாவிடம் 50 ரூபாய் வாங்கிக்கொண்டு வெளியே வந்தேன்.  

திண்ணையில் மிச்சம் வைத்துவிட்டு போன பட்டாசுகள் கிடக்க நாலு லட்சுமி வெடிகளை எடுத்து பாக்கெட்டில் போட்டுக்கொண்டு ஒரு தீப்பெட்டியோடு கிளம்பினேன். ஏழுமலையும், ஜீவாவும் சைக்கிளோடு காத்திருக்க கிளம்பினோம். தெரு முக்கில் பாக்கெட்டில் இருந்த ஒரு லட்சுமி வெடியை எடுத்து கீழே வைத்து நெருப்பு வைக்க தீ குச்சியை கிழித்தேன். ஏய் இரு இரு என குரல் கேட்டு திரும்பினேன். மஞ்சுவின் அக்கா ரோட்டில் நின்றுக்கொண்டிருந்தாள். 

நான் போய்டறன் அப்பறம் வை. 

என் காதலுக்கு பெரிய வெடி இவாள் தான் வைக்க போகிறாள் என தெரியாமல் அவள் போகும் வரை காத்திருந்தேன். 

தொடரும்………..


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக