வேலூர் பேருந்து நிலையத்தில் இருந்து கிளம்பிய அந்த பெங்களுர் செல்லும் பேருந்து குறைந்த பயணிகளோடு கிளம்பியது. இரண்டு பேர் சீட்டில் நானும் கவிதாவும் அமர்ந்திருந்தோம்.
அனல் காற்று வீசியதால் ஜன்னலை மூடியிருந்தேன். நீ எங்க வரமாட்டியோன்னு நினைச்சன் என்றாள்.
அப்பா வேணாம்ன்னு தான் சொன்னாரு. அம்மா தான் அடம் பிடிச்சி அனுப்பிவச்சாங்க.
அதிருக்கட்டும், எதுக்கு உங்கம்மா வரல?
உங்கிட்டதானே சொன்னாங்க உடம்பு சரியில்லன்னு. ஒரு வாரம் பொருத்து போகலாம்ன்னு அப்பா சொன்னாரு. அம்மா தான் அவுங்க இரண்டு பேரும் போகட்டும். உடம்பு சரியானதும் நான் போய் அழைச்சிக்கிட்டு வர்றன்னு சொன்னாங்க. அப்பாவும் ஒத்துக்கிட்டாரு.
அங்க போய் தான் நாம தனியா இருக்கபோறோம்ன்னு நினைச்சன். இப்ப உன் கூட தனியா டிராவல் பண்றது எவ்ளோ ஜாலியா இருக்கு தெரியுமா.
நீ ஜாலியா இருக்கற. உங்கக்காவ நினைச்சா தான் பயமாயிருக்கு.
அதெல்லாம் ஒன்னும் சொல்லாது.
அது சொல்லலனாலும், உங்க மாமா, அவரோட அப்பா – அம்மா கேட்பாங்களே.
கேட்டா கட்டிக்கபோறவர்ன்னு சொல்றன் என்றவளை பார்த்ததும். விடு பிரச்சனை வரும்போது பாத்துக்கலாம். நீயா ஏதாவது கற்பனை பண்ணாத என தோளில் சாய்ந்துக்கொண்டாள்.
பெங்களுரூ பேருந்து நிலையத்தில் இறங்கி ஆட்டோ பிடித்து அவரிடம் அட்ரஸ்சை ஒப்பித்ததும் ஒரு வீட்டு முன் வந்து ஆட்டோ நின்றது. வெளியவே ப்ரியாவும் அவரது கணவரும் நின்றிருந்தார்கள்.
நீங்க தானே ராஜா என அருகில் வந்து கை தந்தவரிடம் எப்படி சார் இருக்கிங்க.
சூப்பரா இருக்கன். உங்க நண்பரால ஒரு சுத்து பெருத்துட்டன் என சிரித்தவர், என் மச்சினிச்சி என்ன சொல்றாங்க.
அவுங்களயே கேளுங்க.
எப்படி இருக்கறிங்க.
நல்லா இருக்கன் மாமா.
எங்க அம்மாவ காணோம்.
அவுங்களுக்கு உடம்பு சரியில்ல. அதனால தான் என்னையும், துணைக்கு இவரையும் அனுப்பிவச்சாங்க.
அமைதியாக இருந்த ப்ரியா வாங்க வீட்டுக்குள்ள போகலாம் என்றார். உள்ளே செல்லும்போதே ப்ரியாவின் மாமியார் வாம்மா என கவிதாவை அழைத்தவர். வாப்பா என அழைத்தவர் கல்யாணத்தல பாத்தது எப்படிம்மா இருக்கற. இந்த தம்பியக்கூட கல்யாணத்தல பாத்தது என்றவரிடம் ம்மா இவர் ப்ரியாவோட பேமிலி ப்ரண்ட் என அறிமுகப்படுத்தினார் ப்ரியாவின் கணவர்.
பு;ரியா பசங்களுக்கு முதல்ல சாப்பாடு போடு. மீதிய அப்பறம் பேசிக்கலாம் என்றவர் நான் பஜார் வரை போய்ட்டு வர்றன் என கிளம்பினார்.
அவர் படியை விட்டு இறங்கியதும், நீ எதுக்கு இங்க வந்த என ப்ரியா என்னிடம் கேட்டதும் அதிர்ச்சியுடன் அவளை பார்த்தேன்.
ஏய் என்னடா கேள்வியிது என ப்ரியாவின் கணவரும் அதிர்ச்சியாகி கேட்டார்.
நீங்க சும்மாயிருங்க. இவன் வந்ததும் போய் கொஞ்சறிங்க, மனசுல என்ன நினைச்சிக்கிட்டு இருக்கிங்க என்றதும் உண்மையிலேயே தன் மனைவி கோபமாக இருக்கிறாள் என உணர்ந்து பாவமாக என்னை பார்த்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தார்.
நான் அமைதியாக இருந்தேன்.
கவிதா தான் என்னக்கா இப்படி பேசற.
நீ வாய மூடுடீ.
உங்களுக்குள்ள எதுக்கு சண்டை. நான் வந்தது தப்பு தான்.
நீ வந்தது தப்புயில்ல. இவக்கூட வந்தது தான் தப்பு. இரண்டு பேரும் தனியா வந்துயிருக்கிங்க. நீ யார்ன்னு கேட்டா என்ன சொல்றது. இதனால பின்னாடி எவ்ளோ பிரச்சனை தெரியுமா?.
இல்ல. உங்கம்மாவும் வர்றன்னாங்க. கடைசியல உடம்பு சரியில்லன்னு நின்னுட்டாங்க அதுக்கு நான் என்ன பண்ணமுடியும்.
அவுங்க வரலன்னதும் நீங்க கிளம்பி வந்துட்டிங்களாக்கும் என்றபடி உள்ளே போக திரும்பினாள்.
அவர் வரலன்னு தான் சொன்னாரு என கவிதா பேச தொடங்க நான் கையை பிடித்து அழுத்த அமைதியானாள். அதை பார்த்துவிட்டு உள்ளே சென்றாள்.
உள்ளேயிருந்து வெளியே வந்த ப்ரியாவின் கணவர், நான் ஆபிஸ் வரைக்கும் போய்ட்டு வந்துடறன் என சொல்லியபடி சமையலறையில் இருந்த ப்ரியாவிடம் சென்றார்.
சாப்டுட்டு போங்க என்றபடி உள்ளேயிருந்து ப்ரியா வெளியே வர ஹாலில் நின்றபடி இருந்த எங்களை கண்டுக்கொள்ளாமல் டைனிங் டேபிள்க்கு சென்றனர்.
மனம் குறுகுறுத்தது. ச்சே. கேவலமான ஜந்துவா மாத்திட்டாங்களே. இப்படி அசிங்கப்படவா இங்க வந்தோம் என மனதில் நினைத்தபடி இருந்தேன். இல்ல நான் ஆபிஸ்ல சாப்பிட்டுக்கறன் என்றபடி அவர் எங்களை கடந்து சென்றார். சாயந்தரம் பேசலாம் கவிதா எனச்சொல்லிவிட்டு போய்விட்டார்.
அவரை வழியனுப்ப ப்ரியா வெளியே சென்றதும், அருகே நின்றிருந்த கவிதாவிடம் இதுக்கு தான் நான் வர்றமாட்டன்னு சொன்னன். நீ தான் வா வான்னு கூப்ட்ட. இங்க கிடைக்கற மரியாதைய பாத்தியா?. நீ இருந்துட்டு வா நான் கிளம்பறன்.
ஸாரி என சொல்லிவிட்டு அமைதியாக நின்றாள். ப்ரியா உள்ளே வர ஸாரிங்க நான் வந்தது தப்பு தான் மன்னிச்சிக்குங்க எனச்சொல்லிவிட்டு ஃபேக்கை எடுத்துக்கொண்டு கதவை நோக்கி நடந்தேன்.
ஏய், இப்ப என்ன கேட்டுட்டன்னு போற.
நீங்க கேட்டது சரிதான். என்னால உங்க மனசு கஸ்டப்பட்டுயிருந்தா மன்னிச்சிடுங்க என்றபடி பதிலை எதிர்பார்க்காமல் கதவு அருகே சென்றதும் எங்கப்பா ஃபேக்கோட கிளம்பிட்ட.
என்ன சொல்வது என கொஞ்சம் தடுமாற. இல்லம்மா, இப்பத்தான் வீட்லயிருந்து போன் வந்தது. அப்பாவுக்கு உடம்பு சரியில்லையாம். அதான் என தயங்கி தயங்கி சொன்னதும்.
அப்படியா என கேட்டவர். அவசரப்படாத. உள்ள வந்து உட்காரு. ப்ரியா தம்பிக்கிட்டயிருந்து ஃபேக்க வாங்கிம் போய் உள்ள வைம்மா.
இல்லம்மா கிளம்பறன்.
நான் சொல்றன்யில்ல வாப்பா.
இல்லம்மா என தொடங்கியதுமே தம்பி வீட்டு போன் ஒயர் அறுந்து இரண்டு நாளா ஒர்க்காகல என லேசாக சிரித்தார்.
பொய் சொல்லி மாட்டிக்கிட்டோமே என அவமானமாக இருந்தது.
முதல்ல உள்ள வா என உள்ளே அழைத்து சென்று சோபாவில் அமரசொன்னவர். ப்ரியாவை பார்த்து காபி போட்டு எடுத்து வாம்மா என்றார்.
என்ன எம்மருமக திட்டுச்சா?.
அய்யய்யோ அப்படியெல்லாம் இல்லம்மா.
சிரித்தவர். திட்டியிருக்கும். இல்லன்னா கிளம்பியிருப்பியா. வாழ வந்த வீட்டுக்கு தன் கூட படிச்சவன் வந்து நின்னா எந்த பொண்ணுக்கும் அதிர்ச்சியா தான் இருக்கும். மாமனார், மாமியார் என்ன சொல்லுவாங்களோங்கற பயம் ஒவ்வொரு பொண்ணுக்கும் இருக்கத்தான் செய்யும். அதோட வயசு பிள்ளைங்க நீங்க இரண்டு பேரும் தனியா வந்துயிருக்கிங்க. வேற மாதிரி நினைக்க வாய்ப்புயிருக்குயில்ல. அது நல்லாவா இருக்கும். அப்பறம் அதப்பத்தியும் தப்பா நினைக்க தோணும்மில்ல அதனால கோபப்பட்டுயிருக்கும். நீ அது இடத்தலயிருந்து யோசிச்ச பாருப்பா.
இல்ல இவர் நான் வரலன்னு தான் சொன்னாரு. நான் தான் என கவிதா தயங்க.
என்ன இரண்டு பேரும் காதலிக்கறிங்களா என சாதாரணமாக கேட்டதும் இருவருக்குமே அதிர்ச்சியானது.
தலையை குனிந்துக்கொண்டோம். உங்களாளயே பதில் சொல்ல முடியலயே. நான் என் மருமகக்கிட்ட இதே கேள்வியக்கேட்டா அவ என்ன பதில் சொல்லுவா சொல்லுங்க. இதை யோசிச்சி தான் கோபப்பட்டுயிருப்பா என்றவர் அதெல்லாம் மனசுல வச்சிக்காதிங்க. நீங்க காதலிக்கறது ப்ரியா வீட்டுக்கு தெரியுமா?.
தெரியாது.
உன் மேல நம்பிக்கை வச்சிதான் அனுப்பியிருக்காங்க. அந்தளவுக்கு அவுங்க குடும்பத்தல ஒருத்தனா இருக்கற. நானும் உன்ன நம்பறன். நான் உன்ன என் பையனாவே நினைச்சிக்கறன். நீ எப்ப வேண்ணாலும் இங்க வரலாம். தங்கலாம். எதுவும் நினைச்சிக்க மாட்டன் என சொல்லும்போதே ப்ரியா காபி டம்பளரோடு வெளியே வந்தார்.
பசங்கள எதுக்கும்மா திட்டற. கூட படிக்கறவங்க வீட்டுக்கு வர்றது சகஜம். அதுவும் உன்னை பாக்க இவ்ளோ தூரம் வந்துயிருக்கு இந்த தம்பி. அதப்போய் திட்டிக்கிட்டு. நான் எதுவும் தப்பா எடுத்துக்க மாட்டான். இன்னோன்ன தெரிஞ்சிக்க நமக்கு என்னதான் வேண்டாதவங்களா இருந்தாலும் வீட்டுக்கு வந்தவங்கக்கிட்ட கோபமா நடந்துக்கறது தப்பு. அத மனசுல வச்சிக்க. பிள்ளைங்கள கூப்டும் போய் சாப்பாடு போடு என சொல்லிவிட்டு அவரது ரூம்க்கு போனார்.
நாங்கள் அமைதியாக நின்றிருந்தோம்.
குளிச்சிட்டு வாங்க சாப்பிடலாம் என சொல்லிவிட்டு ப்ரியா சமையல் கட்டுக்கு போனார்.
குளிச்சிட்டு வாங்கன்னு சொல்லிட்டு போறாங்க. ஏதாவது ரூம் இருக்கா இல்ல ஹால்ல தான் தங்கனும்மா என கவிதாவிடம் கேட்டதும்.
இரு வர்றன் என உள்ளே சென்றவள் ப்ரியாவோடு வெளியே வந்து மாடியில் இருந்த ஒரு ரூம்க்கு அழைத்து சென்று இது கெஸ்ட் தங்கற ரூம் என்றதும் ஃபேக்கை கட்டிலில் போட்டுவிட்டு அப்பாடா என அமர்ந்தேன். இருந்தும் ப்ரியா நடந்துக்கொண்ட விதம் மனதில் நெருடலாகவே இருக்க அதனால் அதன் முகத்தை பார்க்காமல் தரையை பார்த்தபடி அமர்ந்திருந்தேன்.
நீ என் ரூம்ல தங்கிக்கடீ என கவிதாவிடம் சொன்ன ப்ரியா குளிச்சிட்டு வரட்டும் நாம கீழ போலாம்.
நீ போக்கா நான் இதே வந்துடறன்.
ப்ரியா அவளை முறைத்துவிட்டு செல்வது தெரிந்தது. ப்ரியா அறையை விட்டு சென்றதும் அருகே அமர்ந்த கவிதா என்னப்பா கோபம்மா.
வேற சந்தோஷமாவா இருக்கும்.
ஸாரி என்னால தான் இவ்வளவும்.
என்னால இங்க ஒரு வாரம்மெல்லாம் இருக்கமுடியாது. இரண்டு நாள்ள நான் ஊருக்கு கிளம்பிடுவன். நீ வேண்ணா இருந்துட்டு உங்கம்மா வரும்போது வா.
இப்ப எதுக்கு ஊருக்கு போகனும்கிற.
இந்த அவமானத்தோட இங்க இருக்க சொல்றியா.
ஏய் அது உன் ப்ரண்ட்.
அது அடிச்சா வாங்கிக்குவன். தன்மானத்தை சொரண்டி பாக்கற மாதிரி பேசனா கேட்டுக்கிட்டு இருக்கமாட்டன்.
சரி சரி டென்ஷனாகாத என கவிதா கூல் செய்ய முயன்றாள். நான் கோபமாக முகத்தை வேறு பக்கம் திருப்பிக்கொண்டேன்.
ரிலாக்ஷ்சா இரு. கோபப்படாம குளிச்சிட்டு வா நான் கீழ அக்கா ரூம்ல போய் ரெடியாகறன்.
என்னதுயிது.
என்னதுயிதுன்னா?.
இல்ல உங்கக்கா இரண்டு முறை குளிச்சிட்டு வாங்க சாப்பிடலாம்ன்னு சொல்லிட்டு போகுது. நீ என்னடான்னா அக்கா ரூம்ல போய் குளிக்கறங்கற.
புரியலயே
இல்ல……. குளிச்சிட்டு வாங்கன்னு தானே சொன்னாங்க.
ஆமாம்.
அதனால என இழுத்ததும்.
அதனால இப்ப என்ன என கவிதா திரும்ப கேட்க.
பாத்ரூம்மை காட்டி டக்கென கண்ணடித்ததும்.
மூஞ்சியப்பாரு. நாயே ஏன் உன் புத்தி இப்படியெல்லாம் போகுது என அடிக்க வந்தாளின் கையை பிடித்துக்கொண்டு நீ தானே அங்க போனா ஜாலியா இருக்கலாம்ன்னு சொன்ன.
நான் சொன்ன ஜாலி வேற. நீ நினைக்கற ஜாலி வேறயா இருக்கு. ஒழுங்காயிரு. இல்லன்னா அவ்ளே தான். குளிச்சிட்டு கீழ வந்து சேரு என சொல்லிவிட்டு கையை விடுவித்துக்கொண்டு விறு விறுவென கீழே போனால்.
குளித்துவிட்டு கீழே போனபோது, கவிதாவும் குளித்து முடித்திருந்தாள். டைனிங்டேபிளில் அமர்ந்து அக்காவும் - தங்கையும் ஏதோ பேசிக்கொண்டு இருந்தார்கள். என்னை பார்த்ததும் ப்ரியா எழுந்து நின்றபடியே முறைக்க தொடங்கினார்.
இவக்கிட்ட என்ன சொன்ன…………..
தொடரும்………………