காலேஜ் வரும்போது சைன்ஸ் குரூப் பசங்களோட ஏதோ பிரச்சனையாம். காலேஜ்க்கு வெளியில சைன்ஸ் குரூப் சக்தியும் அவனோட டீமும் போட்டு அடிச்சிட்டுயிருக்கானுங்க. பசங்க வந்து சொன்னானுங்க.
அடிச்சானுங்களா என அதிர்ந்து போய் எழுந்ததும் இப்ப ஜான் எங்கடா?.
தெரியல?.
அடிச்சது யார், யார்ன்னு தெரியுமா ?
தெரியாது பாத்தவனுங்க இருக்கானுங்க.
அதல யாராவது ஒருத்தனை அழைச்சிக்கிட்டு வாடா என பல்லை கடிக்க
மச்சான் அதோப்பார் சக்தி வர்றான் என கைகாட்ட கோபத்தின் உச்சத்தில் அருகில் இருந்த புங்க மரத்தின் கிளை ஒன்றை பிச்சி எடுத்துக்கொண்டு அவனை நோக்கி ஓடினேன். நான் அவனை நோக்கி ஒடி வருவதை கண்டு மிரண்டு ஓடியவனை காலேஜ் கேட் க்கு வெளியே மடக்கியிருந்தேன். ஏய் ஏய் எனும்போதே வச்சி விளாச தொடங்கியபோது அவன் என் முகத்தில் ஒரு குத்து குத்தியிருந்தான். அந்த வலியையும் அவனுக்கு திருப்பி தற அவன் கேங்க் பசங்கள் இரண்டு பேர் என்னை தாக்க வந்தனர். அதற்குள் அகிலன் வந்து அவர்களை அடிக்க சண்டை பெருசானது.
………….. யாரை அடிச்சிங்க என கேட்டபடியே அந்த கொம்பை போட்டுவிட்டு சக்தியின் சட்டையை பிடித்து முகம், நெஞ்சு என குத்த அவன் பதிலுக்கு தாக்க அடி இன்னும் வேகமாக அவன்க்கு தந்தேன். ஓரளவு கோபம் தணிந்து ……………… எவனாவது அவன் மேல கைய வச்சிங்க. இப்ப விழுந்தது இல்ல அடி அடிச்ச கையை உடைச்சிடுவன் ஜாக்கிரதை என சக்தியை பிடித்து தள்ளிவிட்டு மிரட்டும் போது ரமேஷ் வேகமாக வந்தவன் என்ன மச்சான்.
நம்ம ஜானை அடிச்சிட்டானுங்களாம். அவன் பங்குக்கு நாலு சாத்து சாத்திவிட்டு அவனுக்கு காயம் ஏதாவதுயிருந்தா அடிச்ச உங்கள ஒழிச்சிடுவோம் என்ற ரமேஷ் இப்ப அவன் எங்கடா இருக்கான் என கேட்டான்.
அப்போது தான் அவன் நினைவு வந்தது. வீட்டுக்கு தான் போயிருப்பான் வாடா போய் பாக்கலாம் எனச்சொன்ன அகிலன் நடக்க தொடங்க வேகவேகமாக அவன் வீட்டை நோக்கி ஓடினோம். மச்சான் என அழைக்க அவனை திரும்பி பார்த்தபோது பின்னாடி நின்றவன் எதிர்பக்கம்மிருந்த கூல்ட்ரிங்ஸ் கடையை வெறித்து பார்த்தபடி நின்றிருந்தான். அவன் பார்வை போன பக்கம் நாங்களும் பார்த்தோம். தலையை குனிந்தபடி அமர்திருந்தான் ஜான். அவன் அருகே ஓடிப்போய் அவன் தோள் மேல் கைவைத்தபோது முகத்தை திருப்பி பார்த்தான்.
என்னடா சண்டை?.
கூட வந்த பையன் சைன்ஸ் குரூப் எடுத்திருந்தா பொண்ணுங்க பின்னாடியே வந்திருக்கும். பி.காம் எடுத்துட்டு ஒருத்தியும் திரும்பி பாக்கமாட்டேன்கிறாளுங்கன்னு வருத்தப்பட்டான்.
என்னடாச்சின்னு கேட்டன்?.
சைன்ஸ் குரூப் பசங்க தான் நல்லா படிக்கறானுங்களாம். முத்தவங்கயெல்லாம் படிக்கறதேயில்லன்னு யாரோ ஒருத்தி அவன்கிட்ட சொன்னதா சொன்னான்.
அதுக்கு நான் அவன்கிட்ட, சைன்ஸ் குரூப் பசங்க பிராக்டிக்கல் மார்க் பாதி வாங்கி பாஸ் பண்றவனுங்க. நாம தான் முழுசா படிச்சி எக்ஸாம் எழுதி பாஸ் பண்றவனுங்க. அதனால அவனுங்கள விட நாம தான் ஓய்தி. அவனுங்க அட்டை பசங்கடான்னு சொல்லிக்கிட்டு வந்தன். இத பின்னாடி வந்த சக்தி கேட்டுட்டு எங்களயா அட்டை கத்தின்னு சொன்னன்னு சொல்லி அடிச்சிட்டான்டா.
இதுக்கு போயா அடிச்சான்.
இல்லடா அவன் தேவி இருக்கற தெருவுல இருக்கான். தேவிய லவ் பண்றது தெரியும். அந்த காண்டுல அடிச்சிட்டான்.
அடிச்சது அவன் வேற யார், யார்?.
கூடயிருந்த இன்னோருத்தன்.
பாக்கறப்ப அடையாளம் காட்டு. ஏதாவது ஒரு பிரச்சனையில அவனுங்கள உள்ள இழுத்து பொலந்து கட்டிடனும் என்றதும். அகிலன் அதை அமோதித்தான்.
எங்கிருந்தோ வந்த ப்ரியா. என்னப்பா அதுக்குள்ள ஒன்னா சேர்ந்துட்டிங்க.
அதனால உனக்குயென்ன?.
இல்ல. அவனை அடிச்சிட்டாங்கன்னதும் அடிச்சவனுங்களை அந்த அடி அடிச்சிட்டிங்க.
வேற எங்கயாவது மாட்டியிருந்தான் அடிச்ச கையை உடைச்சியிருப்பன்.
இங்க பார்றா. இவ்ளோ துடிக்கறவன் அப்பறம் எதுக்கு மூனு மாசமா அவன்கிட்ட பேசாமயிருந்தியாம்.
ஏய். அது வேற இது வேற. எவனோ ஒருத்தன் இவனை அடிப்பான் பாத்துக்கிட்டு சும்மா இருக்க சொல்றியா?. அதுக்கு வேற ஆளைப்பாரு. எங்களுக்குள்ள இருக்கற பிரச்சனை வேற. அதுக்காக எங்களுக்குள்ள எதுவும்மில்லன்னு ஆயிடுமா?
ஏய் இரு இரு என்ன சொல்லிட்டன்னு கோபப்படற.
ஓன்னும் கோப்படல என்றபடி எதிர்பக்கம் திரும்பியபோது தான் அவளை பார்த்தேன். சைக்கிளில் போய்க்கொண்டிருந்தாள். அது அவளே தான். மச்சான் இது உன் சைக்கிள் தானே இதே வந்துடறன் இருங்கடா என்றபடி சைக்கிளை எடுத்துக்கொண்டு வேகவேகமாக அவளை துரத்த தொடங்கினேன். அவளுக்கும் எனக்கும் கொஞ்சம் இடைவெளி விட்டு பின்னாலயே போனேன். ப்ரியா வீடுயிருந்த அதே ஏரியாவுக்குள் தான் அவள் போனால். ஒரு வீட்டின் முன் சைக்கிளை நிறுத்திவிட்டு பூட்டு போட்டுக்கொண்டு உள்ளே போக இதான் அவள் வீடு போல என எண்ணியபடி அட்ரஸ் கிடைச்சாச்சி என விசில் அடித்தபடி மீண்டும் திரும்பினேன்.
திரும்பி வர்ற அரைமணி நேரமானது. அதுவரை எல்லோரும் அந்த கடையிலேயே அமர்ந்திருந்தனர்.
எங்க இவ்ளோ அவசரமா போன என ப்ரியா தான் கேட்டாள்.
ஓன்னும்மில்ல. எங்கப்பாவுக்கு தெரிஞ்சவரு போனாரு. அவரை ரொம்ப நாளா பாக்க முடியல. வுண்டியில போறத பாத்தன். அதான் அவசரமா போய் பாத்து புடிச்சன். பேசி அட்ரஸ் வாங்கிக்கிட்டு வந்தன் என சமாளித்ததும்
அத சொல்லிட்டு போறதுக்கென்ன ஏன்னவோ ஏதோன்னு கவலையாகிடுச்சி என்றாள் ப்ரியா.
இன்னைக்கு வெள்ளிக்கிழமை தானே கோயிலுக்கு போகலாமா என்றதும் குஷியான ப்ரியா போலாமே. ஈவ்னிங் மீட் பண்ணலாம் என்றபடி கிளம்பினால்.
அந்த பொண்ண பாத்தாச்சி என ஜான் தான் கேட்டான். அமைதியாக இருப்பதை பார்த்து ஒரு ஒயிட் சுடிதாரை பாத்துட்டு பின்னாடியே அவசரமா போகும்போதே நினைச்சன் அந்த பொண்ணா தான் இருக்கும்னு. அட்ரஸ் கண்டுபிடிச்சிட்ட போல என்றதும் மெல்ல புன்னகைத்துவிட்டு போலாம்டா.
எங்க ?.
க்ளாஸ்க்கு.
அடிங் கொய்யலா. இப்ப டைம் 12 மணி போறாறாம். வா ரூம்க்கு போலாம் என்றான் ரமேஷ். ரூம்க்கு போயும் அந்த ஒயிட் சுடிதார் புராணமே பாட டேய் பேர் கூட தெரியாது ஆனா ஓவரா நெஞ்ச நக்கற என அகிலன் கடுப்படித்தான்.
அடங்குங்கடா.
அதவிடு. நீ அந்த பொண்ண பாக்க போனத ப்ரியாக்கிட்ட ஏன் சொல்லல.
அதையேன்டா கேட்கறிங்க. அந்த ஒயிட் சுடிதார்னு ஆரம்பிக்கும்போதே அவ முகம் போற போக்க பாக்கனும்மே. எரிஞ்சி விழறா. அவளைப்பத்தி பேசாதங்கறா. அதான் சொல்லல.
அந்த பொண்ணால தான் உங்களுக்குள்ள லடாய் ஆகப்போகுதுன்னு நினைக்கறன் என ரமேஷ் சொல்ல.
மூடு. அவளைப்பத்தி எனக்கு தெரியும். அவளை சமாதானப்படுத்தற வழியும் எனக்கு தெரியும். அத நான் பாத்துக்கறன் நீ கவலைப்படாத.
என்ன திடீர்னு அத கோயிலுக்கு கூப்டும்போற.
சும்மா தான். கோயிலுக்கு நாங்க மட்டும் போறன்னு யார் சொன்னது நாம எல்லாரும் தான் போறோம்.
வேலையிருக்குடா என அகிலன் முரண்டு பண்ண. எந்த வேலையிருந்தாலும் அப்பறம் பாத்துக்கலாம். வர்றன் ஆனா பீர் வாங்கி தரனும் என கண்டிஷன் போட்டான் ரமேஷ்.
எதுக்கு.
இல்ல மச்சான். நீயும் ஜானும் ஒன்னு சேர்ந்துட்டிங்க அதுக்காக.
ஆமாம். நானும் அவனும் அம்பானி பிரதர்ஸ் ஒன்னு சேர்ந்துட்டோம். பீர் வாங்கி தர்றதுக்கு. வெள்ளிக்கிழமையானா பீர் குடிக்கனும்கிறது உங்க சட்டம். அதுக்கு காரணம் தேடறிங்க.
நீ மட்டும் யோக்கியமா என அகிலன் கடுப்படிக்க.
வாடகை தரனும்டா.
அத அப்பறம் பாத்துக்கலாம்.
கொஞ்ச நேரம் யோசித்துவிட்டு ஆளுக்கு ஒன்னுன்னா வாங்கி தர்றன்.
ஓ.கே என்றான்கள்.
மாலை 6 மணி. கோட்டைக்குள் இருந்த ஜலகண்டேஸ்வரர் கோயிலுக்கு வெளியே நான், ஜான், அகிலன், ரமேஷ் அமர்ந்திருந்தோம்.
மச்சான் அந்த ஆன்ட்டி சூப்பராயிருக்குள்ள என அகிலன் கேட்க.
டேய் இது கோயில்டா.
கோயில்ல தான் மச்சான் சைட் அடிக்க முடியும்.
நாளைக்கு உங்க லவ்வர்ங்ககிட்ட சொல்றன் அப்ப தெரியும்.
வந்துட்டாங்கடா என ஜான் சொல்ல கோயிலுக்கு வரும் பாதையை திரும்பி பார்த்தபோது ஆனந்தமும் அதிர்ச்சியும் ஒருசேர என்னை தாக்கியது. ப்ரியா, தேவி வர அவள் அருகில் அவளே தான். நிஜமா? கனவா என என்னால் நம்ப முடியவில்லை. என் தேவதை இன்று ஒயிட் சுடிதார்க்கு பதில் லைட் ப்ளு கலர் சுடிதாரில் வந்தாள். இவ எப்படி இதுங்ககூட என மனம் குழம்பியது.
கூட வர்றது யார்ரா என ஜான் தான் கேட்டான். நாங்களும் உங்கூட தானே இருக்கறோம் என பதில் தந்ததும் அமைதியானான்.
அருகில் வந்தார்கள். ப்ரியா தான் உடன் வந்தவளிடம் இவங்க தான் என் ப்ரண்ட்ஸ் என ஒவ்வொருவராக அறிமுகப்படுத்தி முடித்தாள். என்னை அறிமுகப்படுத்தும் போது மட்டும் புன்னகையுடன் இருந்த அந்த தேவதையின் முகம் ஒரு செகன்ட் வாடியதுபோல் இருந்தது எனக்கு.
அது நீங்க தானா. உங்களப்பத்தி தான் தினமும் ஒரே புராணம். இப்ப வழியில கூட உங்களப்பத்தி தான் பேசிக்கிட்டே வந்துச்சி என்றாள்.
உங்களப்பத்தி சொல்லவேயில்லயே.
இவ என் தங்கச்சி. பேரு கவிதா. டீ.எட் பண்றா என ப்ரியா சொல்லும் போதே நெஞ்சிக்குள் குண்டு வெடித்தது போல்யிருந்தது. ப்ரியாவோட தங்கச்சியா இவ.
சும்மா சொல்லாத நாங்க உன் வீட்டுக்கு வந்தப்பகூட பாக்கவேயில்லையே என ஜான் தான் கேட்டான்.
நீங்க வந்தன்னைக்கு மார்கெட் போயிருந்தா. அதான் அறிமுகப்படுத்த முடியல. இன்னைக்கு வீட்லயிருந்தா அதான் அழைச்சிவந்தன் எனச்சொல்லும் போதுயெல்லாம் மனம் குழப்பத்தில் தவித்துக்கொண்டுயிருந்தது.
என்ன சார் ஒரே யோசனை இருக்கிங்க என ப்ரியா தோள் மீது கைவைத்து உலுக்க
ஒன்னும்மில்ல.
கோயிலுக்குள்ள போகலாம்பா என தேவி கூப்பிட.
நீங்க போய்க்கிட்டேயிருங்க நான் வந்துடறன்;.
கோயிலுக்கு தானே வந்த அப்பறம் ஏன் வர்றமாட்டேன்கிற என ப்ரியா தான் சிடுசிடுத்தாள்.
ஏய் நீங்க சாமி முன்னாடி போறதுக்கு முன்ன வந்து சேர்ந்துக்கறன்.
எங்க போறன்னு சொல்லு.
புரிஞ்சிக்க.
பாத்ரூம் போறயா என ப்ரியா வெளிப்படையா கேட்க.
மானத்த வாங்காத போ வர்றன். ஆனால் அவள் போகாமல் அப்படியே நிற்க போன்னு சொல்றன்யில்ல என கோபமாக சொன்னதும் போகலாம் என அனைவரும் நடந்தனர். நான் மட்டும் உட்கார்திருந்த சைக்கிளை விட்டு இறங்காமல் அப்படியே அமர்ந்திருந்தேன்.
உன் தங்கச்சியத்தான் ரூட்டு விடறன்னு ப்ரியாக்கிட்ட சொன்னோம் நம்மை ஒழிச்சிடுவா. என்னப்பண்ணலாம். நாம காலையில இவள பாலோ பண்ணப்ப வேற வீட்டுக்குள்ள போனாலே?. அப்ப அது வேற ஒருத்தர் வீடு போல என எண்ணியபடி கவிதா நல்ல பேர் தான். ஆனா இவக்கிட்ட லவ் பண்றன்னு சொன்னாலும் பிரச்சனை? சொன்னது ப்ரியாக்கு தெரிஞ்சாலும் பிரச்சனை? என்னப்பண்றத்து என யோசித்தபடியே அமர்ந்திருந்தபோது தான் ஹலோ என்ற குரல் கேட்டு மன குழப்பத்தில் இருந்து வெளியே வந்தேன். எதிரே கவிதா நின்றிருந்தாள்.
என்ன இன்னும் அதிர்சியிலயிருந்து மீளலயோ?
என்ன அதிர்ச்சி.
நான் யாருங்கறது தெரிஞ்சதால தானே இந்த அதிர்ச்சி.
அது வந்து அப்படியெல்லாம் கிடையாதே.
நீங்க காலையில பாத்தது எங்க வீடுயில்ல. என் ப்ரண்டோட வீடு அவளை பாத்து நோட்ஸ் வாங்க போனன்.
நான் அதிர்ச்சியாகி பின்னாடி வந்தத பாத்திங்களா ?
அன்னைக்கு கோயில்லயும் என் பின்னாடியே வலம் வந்ததும் தெரியும்.
ஸாரி அன்னைக்கு அழகாயிருந்திங்களா அதான்.
அப்ப இன்னைக்கு அழகாயில்லயா என இடுப்பில் இரண்டு கைகளையும் வைத்துக்கொண்டு கேட்டாள்.
இல்ல அந்த டிரஸ்ல அழகா இருந்திங்க. இந்த டிரஸ்சும் சூப்பர் தான் என்னயிருந்தாலும் எனக்கு அந்த ஒயிட் கலர் ரொம்ப புடிச்சியிருந்தது என்றதும் ஸார்க்கு அப்ப என் டிரஸ் மேல தான் விருப்பமோ.
அப்படியில்ல
அப்பறம்.
அது வந்து, வந்து நான் உங்கள கல்யாணம் பண்ணிக்கறன்னே என்றதும் அவளின் முகத்தில் அதிர்ச்சியோ அதிர்ச்சி.
இரண்டு நிமிடம் இருவரும் அமைதியாக நின்றோம். நான் கற்பூரம் வாங்கி வர்றன்னு வெளியில வந்தன். நான் போறன் எனச்சொல்லிவிட்டு பதிலை எதிர்பார்க்காமல் கோயிலுக்குள் போக படி இறங்கினாள்.
அவள் பின்னாடியே போன நான் கற்புரம் வாங்கலயா?
திரும்பாமலே தன் உள்ளங்கையை திறந்து காட்டினால். மூன்று கற்புரவில்லைகள் இருந்தன.
கேட்டதுக்கு பதிலே சொல்லாம போறிங்க.
பதிலும் சொல்லவில்லை, திரும்பியும் பார்க்காமல் நடந்தால்.
பிள்ளையார் சந்நதி முன் மற்றவர்கள் காத்திருக்க போய் உடன் கலந்தோம். கோயிலை சுற்றி வரும்போதுயெல்லாம் ப்ரியா தான் ஏன் டல்லா இருக்க என கேட்டு துளைத்தெடுத்தால்.
ஏய் அதெல்லாம் ஒன்னும்மில்ல நல்லா தான் இருக்கன் என சமாளிக்க தொடங்கினேன். கோயிலை வலம் வரும்போது ஜானும், தேவியும் எங்கள் கண்ணில் இருந்து மறைந்துயிருந்தார்கள். அதேபோல் ரமேஷ்சும் அகிலனும் இந்த ரவுண்ட் அடிக்கற வேலையெல்லாம் எங்களுக்கு வேணாம். நீ பேசிட்டு வா நாங்க வெளியில வெயிட் பண்றோம் என காதில் கிசுகிசுத்துவிட்டு எஸ்கேப்பானான்கள்.
ஏய் அவுங்க இரண்டு பேர் தான் லவ் பண்றாங்க. காணாம போனாங்க. இவனுங்க இரண்டு பேரும் எங்க போறான்ங்க?.
தெரியல. வெளியில இருக்கன்னு சொன்னானுங்க.
நீ காலையில நல்லா தானே இருந்த அப்பறம் இப்ப என்ன டல்லா இருக்கற.
நீயும் பலமுறை கேட்டுட்ட உன் ப்ரண்ட் பதில் சொல்ற மாதிரி தெரியல. ஏனக்கு என்ன சந்தேகம்னா உன்கிட்ட எதையோ பெருசா மறைக்கறாரு போல தெரியுது என கவிதா சிண்டு முடிந்தாள்.
நீங்க வேற ஏங்க எரியற நெருப்புல எண்ணெய்ய ஊத்தறிங்க. அதெல்லாம் இல்லடா அவுங்க சொல்றதெல்லாம் காதுல வாங்காத.
நானும் ஜானும் சேர்ந்ததுக்கு பசங்க சரக்கு வாங்கி தாடான்னு நச்சரிச்சானுங்க. நானும் ஓ.கே சொல்லிட்டன். ரூம் வாடகை தான் இருக்கு. அதான் யோசனையா இருக்கு எனச்சொல்லிவிட்டு கவிதாவை பார்த்ததும் நமட்டு சிரிப்போடு முகத்தை திருப்பிக்கொண்டாள்.
நீங்க குடிக்கறிங்களாடா என ப்ரியா அதிர்ச்சியாகிப்போய் கேட்டாள்.
ஆஹா உளறியாச்சே என மனம் தவித்து என்ன சொல்வது என தெரியாமல் தடுமாறா அது அது என வார்த்தை வராமல் தடுமாறா
அதை கண்டுக்கொள்ளாமல் நீயும் குடிக்கறியா?
மவுனமாக இருந்தேன்.
கேட்கறன்யில்ல சொல்லு.
இன்னைக்கு மனசு சரியில்ல குடிக்கலாம்னு இருக்கன் என்றதும் ஓங்கி கன்னத்தில் அடித்தவள். ச்சீ என் முகத்தலயே முழிக்காத என எழுந்து வாடீ என தன் தங்கையின் கையை பிடித்து இழுத்துக்கொண்டு வெளியே நடந்தாள்.
என்னடாயிது இப்படியாகிடுச்சி. நாம குடிக்கறது தெரிஞ்சி கவிதாவும் கோபப்படுவாளோ என எண்ணியபடி அவர்கள் போன பக்கம் திரும்பி பார்த்தபோது, கவிதா ப்ரியாவுக்கு தெரியாமல் டாட்டா காட்டினாள்.
அப்பாடா இவக்கிட்ட பிரச்சனையில்ல. அவளை எப்படி சமாளிக்கறது என யோசிக்கும்போதே ஜானும் தேவியும் அருகே வந்து என்ன இங்கயும் உங்களுக்குள்ள சண்டையா என கேட்ட ஜான். எதுக்குடா சண்டை ?.
ம். எதுக்குன்னு நீயே நாளைக்கு தெரிஞ்சிக்குவ.
அவளுங்க என்னை விட்டுட்டு போய்டுவாளுங்க நான் கிளம்பறன் எனச்சொல்லிவிட்டு வேகவேகமாக போனால் தேவி.
நீ வாடா நாம போகலாம் என்றவன் என்ன மச்சான் சொல்லுது உன் ஆளு?.
ஓன்னும் சொல்லல என்றபடி கோயிலை விட்டு வெளியே வந்து அகிலன், ரமேஷ்சோடு ஒயின்ஷாப்பை நோக்கி நடந்தோம்.
தொடரும்………………