சனி, மார்ச் 17, 2012

நிர்வாண போஸ்கள். குப்புற படுத்து யோசிப்பாங்களோ?




மேற்கத்திய நாட்டினர் அதிரடியாக புதுவிதமாக ஏதாவது செய்து பரபரப்பாக்குவார்கள்.  அதை மிஞ்சிவிட்டார் தென் ஆப்ரிக்காவை சேர்ந்த ஜீன்பால்ரெய்டு. என்ன செய்தாரா ?. நம்மவூரில் பிளம்பர் தேவை, கால் டாக்ஸி தேவை, கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர் தேவை, தோட்டக்காரர், சமையல்காரர் தேவையென்றால் வேலைக்கு ஆள் அனுப்பும் கம்பெனிக்கு போன் செய்தால் ஆள் அனுப்பிவைப்பார்கள். 

ஜீன்பால் ஆரம்பித்துள்ளதும் இதேபோன்ற ஆள் அனுப்பும் கம்பெனி தான். தி நேச்சுரல் கிளினிங் கம்பெனிக்கு நாம் போன் செய்தால் நாம் எந்த பணிக்கு ஆள் கேட்கிறோமே அதற்கான ஆளை தாமதிக்காமல் உடனே அனுப்பிவைப்பார்கள். அந்த ஆள் நம்முன் நிர்வாணமாக வந்து நின்று என்ன வேலை செய்ய வேண்டும் என கேட்பார். என்ன அதிர்ச்சியாகி அந்த மாதிரியாளோ என எண்ண வேண்டாம். 

அவர்கள் வந்தது என்னவோ வேலை செய்யத்தான். ஆனால் என்ன நாம் குறிப்பிடும் வேலையை உடலில் ஒட்டு துணியில்லாமல் நிர்வாணமாக இருந்தபடி செய்து தருவர். (ஏய் ஏய்…….. செல்போனை தேடாதிங்கப்பா இது நம்மவூர்ல இல்லை.).

வேலை நேரத்தில் நிர்வாணமாக இருப்பார்கள். வேலை முடிந்ததும் அவர்களுக்கான கூலியை தந்து அனுப்பிவிட வேண்டும். என்ன நம்மவூரில் ஒரு பொருள் வாங்கினால் பில்லில் சேவை வரி வாங்குவதை போல நிர்வாணமாக பணிச்சேவை செய்வதற்க்கு தனியாக ‘நேக்கட் சர்வீஸ் சார்ஜ்’ வசூலிக்கப்படுகிறது. 

இதுப்பற்றி கம்பெனி தொடங்கியுள்ள ஜீன்பால் கூறும்போது, நான் படிச்சிட்டு வேலை தேடனப்ப வேலை கிடைப்பது ரொம்ப கடினமா இருந்தது. அதனால நாமே ஏன் ஒரு கம்பெனி தொடங்ககூடாதுன்னு முடிவு செய்து தொடங்கப்பட்டது தான் இந்தகம்பெனி. 

இதேமாதிரி நிறைய கம்பெனி இருக்கு நாம ஏதாவது புதுமையா செய்யனம்னு யோசிச்சப்ப வந்த ஐடியா தான் நிர்வாண பணியாளர்கள். எல்லா பணிக்கும் முதல்ல ஆட்களை தேர்வு செய்தப்ப போட்ட முதல் கண்டிஷன் நீங்க செய்ய போறயிடத்தல நிர்வாணமா தான் வேலை பாக்கனும், வாடிக்கையாளர்கள் அரை நிர்வாணமா இருந்து வேலை பாருங்கன்னு சொன்னா அதுக்கு ஏத்தமாதிரி வேலை பாக்கனும்னு சொல்லி தான் வேலைக்கு சேர்த்தன். 

வாடிக்கையாளர்கள் போன் செய்தால் உடனடியாக ஆட்கள் அனுப்பி அவர்கள் கூறும் பணியை செய்துவிட்டு வருவார்கள். வாடிக்கையாளரின் விருப்பப்படி பணியாள் முழு நிர்வாணம் மற்றும் அரை நிர்வாணமாக பணியாற்றுவார்கள். விளம்பரங்கள் மூலம் தகவல் கேள்விப்பட்டு நிறைய வாடிக்கையாளர்கள் போன் செய்கிறார்கள். நாங்களும் சேவை செய்து வருகிறோம். முக்கியமாக விபச்சாரம், செக்ஸ் சேவை போன்றவை செய்வதில்லை என்பது குறிப்பிட தக்கது என்கிறார். 

கவர்மெண்டும் நீ செய்றது சேவைடா கண்ணா என அவரது கம்பெனிக்கு அனுமதி தந்துள்ளது. வாடிக்கையாளர்கள் நாக்கை தொங்க போட்டுக்கொண்டு போன் செய்கிறார்களாம். (கொடுத்து வச்ச நாட்டுக்காரனுங்கன்னு படிச்சிட்டு புலம்பறது கேட்குது.)

படங்கள் இருக்கு. போடலாம்னு தான் பாத்தன். என் பிளாக்கை தடை செய்துட்டா . அதனால தான் போடலைங்கோ.............  இருந்தும் பய புள்ள ஒருத்தன் படத்த மட்டும் போடறன் பாருங்கோ.........



இன்னோரு மேட்டர். 

ஜேர்மனியில் 60 ஆண்டுகளாக வெளிவரும் செய்தித்தாள் பில்டு. ஞாயிறு மற்றும் அரசின் விடுமுறை நாட்களில் இவ்வலுவலகம் விடுமுறை விட்டுவிடும் மற்ற நாட்களில் இந்த தினசரி செய்திப்பத்திரிக்கை வெளிவந்துவிடும். 
காலையில் பாத்ரூம் போகிறார்களோ இல்லையோ ஜொள் மன்னர்கள் இந்த பத்திரிக்கைக்காக காத்துக்கிடந்து அப்பத்திரிக்கை வாங்கி முதல் பக்கத்தை பார்த்தபின் தான் கக்காவே போவார்கள். அப்படியென்ன முதல் பக்கத்தில் என்று கேட்கிறிர்களா ?. 

1952ல் ஆரம்பிக்கப்பட்ட இப்பத்திரிக்கை, 1980ல் விற்பனை குறைந்து சரிவை சந்தித்தது. உடனே ஆசிரியர் இலாகா கூடி விவாதித்தது. விவாதத்தில், முதல் பக்கத்தில் தினமும் ஒரு நிர்வாண படம் போடுவோம் என ஐடியா தந்தார் ஒரு ஐடியா சிகாமணி. ஆஹா செம ஐடியா என அங்கிகரித்த ஆசிரியர் குழு 1984ல் நடைமுறை படுத்த தொடங்கியது. அது முதல் சினிமா, மாடலிங், சின்னத்திரை, உள்நாடு, வெளிநாட்டு அழகிகளின் நிர்வாண படம் தலைப்பு பக்கத்தில் அலங்கரிக்கும். அது முதல் விற்பனை ஏறுமுகம் தான். 

இதற்கு மகளிர் அமைப்புகள் கடும் விமர்சனம் செய்தது, போராட்டங்கள் நடத்தியது. ஆனால் விற்பனை குறையவேயில்லை. (அந்தளவுக்கு ஜொள் மன்னன்கள். நம்ம நாட்லாயா இருந்தா புக்கிங்கள போகும்.) 

28 ஆண்டுகளாக வெளிவந்த முதல் பக்க தரிசனத்துக்கு வேட்டு வைத்துள்ளனர். மார்ச் மாதம் கூடிய ஆசிரியர்கள் குழு, பெண்கள் தினத்தை முன்னிட்டு அவர்களுக்கு மரியாதை (!) செலுத்தும் விதமாக இனி நாம் நிர்வாண படத்தை முதல் பக்கத்தில் வெளியிடுவதை நிறுத்திவிடுவோம் என்றுள்ளனர். விவாதம் பெரிதாக கடைசியில் முதல் பக்கத்தில் இனி தேவையில்லை அதற்கடுத்த பக்கங்களில் வெளியிடுவோம் இல்லையேல் ஆண்களின் சபலத்துக்கு ஸாரி சாபத்துக்கு ஆளாவோம் என ஒரு ஐடியா சிகாமணி சொல்ல அதை ஏற்றுக்கொண்டு இனி முதல் பக்க தரிசனம் கிடையாது அதற்கடுத்த பக்கங்களில் ஏதாவது ஒன்றில் ‘தரிசனம்’ கிட்டும் என முடிவை அறிவித்துள்ளனர். 

எப்படியெல்லாம் யோசிக்கறாங்க………………




2 கருத்துகள்:

  1. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

    பதிலளிநீக்கு
  2. இங்க எப்போ வரும் இந்த மாதிரி...

    உங்களது ஒரு பதிவுக்கு 100 ஹிட்ஸ் வேண்டுமா...? உடனே http://www.hotlinksin.com/ இணையதளத்தில் உங்கள் பதிவுகளை இணைத்திடுங்கள்...

    பதிலளிநீக்கு