சனி, மார்ச் 31, 2012

சீனாவின் முத்துமாலையை அறுக்க முயலும் அமெரிக்கா.
ஈழத்தில் தமிழினத்தை அழித்த இலங்கை அரசின் போர் குற்றத்தை கண்டித்து ஐ.நாவில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் ஒருவழியாக வெற்றி பெற்றுள்ளது. ஆனால் இந்த வெற்றி ஈழ தமிழினத்துக்கோ அல்லது தாய் தமிழர்கள் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி என சொன்னால் அது பொய். மாறி வரும் உலக கூ+ழலில் அமெரிக்காவின் இராஜதந்திரத்துக்கு கிடைத்த வெற்றி. இந்த தீர்மானத்தை அமெரிக்க கொண்டு வர சிறு ஒரு தூண்டுகோளாக இருந்தவர்கள் மேலை நாடுகளில் வாழும் ஈழத்தமிழர்களின் பிரதிநிதிகள். 

இந்த தீர்மானம் கொண்டுவரப்பட்டதுக்கு பின்னாலும், இதன் வெற்றிக்கு பின்னாலும் இருப்பது உலக நாடுகளின் அரசியல். 

இரண்டாம் உலக போருக்கு பின் நாட்டாமை நீயா? நானா? என்ற போட்டி அமெரிக்காவுக்கும் - ரஷ்யாவுக்கும் இருந்து வந்தது. 1990ல் ஒருங்கிணைந்த ரஷ்யாவை மற்றொரு கம்யூனிச தேசமான சீனா உதவியுடன் அமெரிக்கா சின்னாபின்னமாக்கியது. அதன்பின் உலகின் நாட்டாமை பதவியை அமெரிக்கா கைப்பற்றியது. அந்த பதவியை விட்டு தராமலும் யாரும் அதற்கு போட்டிக்கு வராமலும் பார்த்துக்கொண்டது. 

இன்றைய காலக்கட்டத்தில் பொருளாதார ரீதியாகவும், இராணவ ரீதியாகவும் பலம் வாய்ந்த நாடு அமெரிக்கா. அவர்களுக்கு ஏற்றாறல்போல் உலகின் மற்ற நாடுகள் இயங்க வேண்டும் என நினைத்து செயல்படுகிறார்கள் அதற்கு ஏற்றாற்போல் பிற நாடுகளும் நடந்தும் வருகிறார்கள். ஆனால் 2000க்கு பின் அதில் மாற்றம். அமெரிக்காவின் நாட்டாமை பதவியை பிடிக்க முயல்கிறது செஞ்சீனா. 

ஆரம்பத்தில் சீனாவின் எண்ணத்தை பெரியதாக கண்டுக்கொள்ளாத அமெரிக்கா கொஞ்சம் தாமதமாகவே அதன் வேகத்தை கண்டு சுதகரித்துக்கொண்டது. பொருளாதாரத்தில் சூப்பர் பவர் ராக்கெட் வேகத்தில் பயணிக்கும் அதேநேரத்தில் இராணுவ ரீதியாகவும் அதன் வேகம் மற்ற நாடுகளோடு ஒப்பிடும் போது எக்ஸ்பிரஸ் வேகத்தில் இருக்கிறது. 

தனது பொருளாதார வளர்ச்சிக்காக ஆப்ரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் அதிகளவில் பெரும் முதலீடுகளை செய்துள்ளது சீனா. அங்குள்ள கச்சா பொருட்கள், மூலப்பொருட்கள் சீனாவுக்கு தேவை. அதற்காகவே அங்கு அதிக முதலீடுகளை செய்துள்ளன. முத்திய கிழக்கு நாடுகளில் இருந்து வரும் எண்ணெய் கப்பல்களை பாதுகாப்பாக தன் நாட்டுக்கு கொண்டு வர முத்துமாலை என்ற திட்டத்தை வகுத்தது. அதன்படி எகிப்து, பாகிஸ்தான், பங்களாதேஸ், இலங்கை, நேபாளம், மியான்மார், பூட்டான், தாய்லாந்து, நாடுகளோடு உறவுகளை பலமாக அமைக்க தொடங்கியது. தாமதமாக இதனை உணர்ந்த ( அப்போதும் இந்தியா மங்குணியாக தான் இருந்தது) அமெரிக்கா தனது கழுகு பார்வையை கூர்மையாக்கியபோது, இந்த முத்துமாலை என்ற திட்டம் தனது பொருளாதார வளர்ச்சிக்கு என்றும் தனது முதலீடுகளை பாதுகாக்க என சீனா சொன்னாலும் அதனை அமெரிக்கா நம்பவில்லை. காரணம், சீனாவின் உள் எண்ணம் இராணுவ ரீதியாக கடலை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர துடிக்கிறது என்பதை உணர்ந்ததால் தான். 

முத்துமாலை திட்டம் முழுமை பெற்றால், மேற்கத்திய நாடுகளின் வணிக கப்பல்கள், விமானங்கள் கிழக்கு பகுதிக்கு வருவதை சுலபமாக கண்காணிக்க முடியும், போர்காலங்களில் அவர்களை சுலபமாக வீழ்த்த முடியும் என்பதால் தான் சீனா இந்த முடிவுக்கு வந்தது. இதனைத்தான் தாமதமாக உணர்ந்தது அமெரிக்கா. முத்துமாலை திட்டத்தை உடைக்க திட்டம் தயாரித்தது. 


ஆசியா கண்டத்தில் உள்ள இந்தியா தவிர்த்து மற்ற நாடுகளை தன் கைப்பிடிக்குள் கொண்டு வந்திருந்தது சீனா. கடைசியில் இந்தியாவின் பிடியில் இருந்த இலங்கையை தன் கைப்பிடிக்குள் கொண்டு வர சீனா விரும்பியது. இதிலும் விட்டுவிட்டால் ஆபத்து என்பதை உணர்ந்து இந்தியாவுக்கு எச்சரிக்கை செய்தது அமெரிக்கா. மங்குணிகளால் ஆளப்படும் இந்தியா தாமதமாகவே தீவிரத்தை உணர்ந்து களத்தில் இறங்கியது. இலங்கை தீவு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்தது. அதை இழந்தால் நம்மை சுலபமாக சீனா அழித்து விடும் என கணக்கிட்டது இந்தியா. 

இலங்கையில் தங்களது அதிகாரத்தை பரவலாக்க இந்தியா, அமெரிக்கா, சீனா மற்றும் பிற நாடுகள் போட்டியிட துவங்கின. இதனைத்தான் சரியாக பயன்படுத்திக்கொண்ட இலங்கையின் இராஜபக்சே அரசு, என் நாட்டில் இடம் வேண்டுமா புலிகளை அழிக்க ஆயுதம் தாங்கள் என கேட்டது. சீனா வாரி வாரி தந்தது, இரஷ்யாவும் தந்தன. சீனாவின் ஆதிக்கத்தை குறைக்க இந்தியாவும் வாரி வழங்கின. அமெரிக்காவும் வாரி வழங்கின. நாசகார இன அழிப்பு முடிந்ததும் இலங்கை தன் பாசத்தை சீனா மீது மட்டும் காட்ட துவங்கின. 


அமெரிக்கா, இந்தியா போன்றவை மிரட்டி பார்த்தும் இலங்கை அசரவில்லை. முத்துமாலை திட்டத்துக்கு கைகுலுக்கி அம்பன்தோட்ட துறைமுகத்தை சீனாவுக்கு தாரை வார்த்ததே தவிர இவர்களை மதிக்கவில்லை அதனால் தான் அமெரிக்கா கண்டன தீர்மானம் கொண்டு வர அதை இந்தியாவும் ஆதரித்து இலங்கைக்கு தன் கோபத்தை காட்டியுள்ளது. 

ஏற்கனவே முத்துமாலை திட்டத்துக்கு உதவக்கூடாது என மறைமுகமாக பாகிஸ்தானை அமெரிக்கா மிரட்டி வருகிறது. எகிப்திலும் ஆட்சி மாற்றத்துக்கு வழிவகுத்தது, மியான்மாரின் இராணுவ ஆட்சியாளர்களை மிரட்ட தொடங்கியுள்ளது. இந்தியாவும் தன் பங்குக்கு விளையாட தொடங்கியுள்ளது. முத்துமாலை திட்டத்தை உடைக்க, சீனாவின் நாட்டாமை கனவை தகர்க்க மேற்கத்திய நாடுகளோடு இந்தியாவும் போராட தொடங்கியுள்ளன. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக