குனிய வச்சி குத்தனாலும் திருந்த மாட்டாங்க போல இந்த காவல்துறையினர். சென்னையில் 5 பேரை சுட்டுக்கொன்று ரத்த சுவடுக்கூட கண்ணை விட்டு மறையவில்லை. அதற்குள் திண்டுக்கல் விடுதி ஒன்றில் பிரபல ரவுடி வரிச்சூர்செல்வத்தை பிடிக்க போனயிடத்தில் அவனது கூட்டாளியை சுட்டுக்கொன்றுள்ளது.
தாக்கிவிட்டு தப்பி ஓட பார்த்தான்களாம் அதனால் சுட்டுக்கொன்றோம் என கதை சொல்கிறார்கள். என்னய்யா கதையிது?. தமிழ் சினிமாவுலயே ஒரே மாதிரி கதை கொண்ட படம் வந்தா தூக்கி கடாசப்படுது. நீங்க பல வருஷமா ஒரே கதையை ஜெராக்ஸ் போட்டு பெயரை மட்டும் மாத்தி மாத்தி சொன்னா எப்படியா நம்புவாங்க.
கதையை மாத்துங்க இல்ல. படம் எடுக்கறதயே அதாவது சுட்டுக்கொல்றதுங்கறதையே விட்டு தள்ளுங்க. சும்மா அரைச்ச மாவையே திரும்ப திரும்ப அரைச்சி பேஜார் பண்ணாதிங்க. ரத்தம் கொதிக்குது.
இப்படியே போனால் சட்டத்தை மக்கள் கையில் எடுக்கும் நாள் வந்துவிடும். பின் தற்போது சட்டத்தை காரணம் காட்டி சுடுபவர்கள் அவர்களால் சுட்டுதள்ளப்படும் நிலை வந்துவிடும். ஜாக்கிரதை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக