திங்கள், அக்டோபர் 31, 2011

கலைஞருக்கு ஒரு வேண்டுகோள்………..


இந்தியாவில் உள்ள சாணக்கிய அரசியல்வாதி கலைஞர் ஒருவர் தான் என்றால் மிகையில்லை. இதை உணர்ந்து தான் ஒருமுறை அறிஞர் அண்ணா கழக மேடையில், திமுகவை காப்பாற்ற கருணாநிதி உள்ளார் என்றார். அவர் கூறியது 100 சதவிதம் உண்மை. 50 ஆண்டுகாலத்தில் திமுக பல ஏற்ற தாழ்வுகளை சந்தித்துள்ளது. பல சோதனையான காலக்கட்டம் திமுக அழிந்தே விட்டது பலரும் முடிவு செய்த நிலையில் பினிக்ஸ் பறவையாக பலமுறை அழிவில் இருந்து கழகத்தை காத்த சாணக்கியர் கலைஞர்.

திமுக தோன்றிய காலத்தில் இந்தியாவில் பல கட்சிகள் தோன்றியது, ஆண்டது, அழிந்தது, தோன்றிய வேகத்திலேயே அழிந்ததும் உண்டு. ஆனால் திமுக மட்டும் சேதராங்களோடு தப்பியது. அதற்க்கு காரணம் கலைஞர், கழகத்தின் கொள்கைகள், அதன் தொண்டர்கள். கழகத்திற்காக தொண்டர்கள் புயல் போல் புறப்பட்ட காலம் ஒன்று உண்டு. ஆனால் இன்று பம்முகிறான் காரணம்மென்ன?.

தலைமை பொறுப்பில் இருப்பவர்கள் திராவிட பற்றாளர்களை, விசுவாச கழக தொண்டர்களை புறக்கணித்தனர். பணம் உள்ளவனுக்கே பதவி என்ற நிலையை கழகத்தில் கொண்டு வந்துவிட்டார்கள். தொண்டர் பலம், மக்கள் செல்வாக்கு உள்ளவர்களுக்கு ஆதரவு வழங்குவதில்லை. கடந்த 20 ஆண்டுகளத்தில் கழகம் போட்டியிட்ட தேர்தல்களின் வேட்பாளர் பட்டியலை நோக்கினால், சில இரண்டாம் கட்ட தலைவர்களை தவிர, மற்றவர்கள் அனைவரும் தங்களுக்கு பின் தங்களது பிள்ளைகளுக்கு, இளவல்களுக்கு சீட் வாங்கி தந்து சட்டமன்றத்துக்கும், பாராளமன்றத்துக்கும் நகராட்சி, பேரூராட்சி, ஒன்றியத்தின் பதவிகளில் வைத்து அழகு பார்க்கிறார்கள். கட்சி பதவிகளிலும் இதே நிலை தான்.

திமுகவில் உழைப்பவனுக்கு பதவியில்லை. பதவியில் இருப்பவனுக்கு பிள்ளையாய் பிறந்தால் பதவி என்ற நிலை. திமுகவில் இருந்து ஓடியவர்களால் உருவான அதிமுகவை பாருங்கள், டீ கடை நடத்திய பன்னீர்செல்வம் முதலமைச்சராகிறார். மாடு மேய்த்தவர் எம்.எல்.ஏவாகிறார். இன்று சட்டமன்றத்தில் உள்ள பல எம்.எல்.ஏக்கள் ஏழைகள். மாநகர மேயர்களாக, நகரமன்ற தலைவர்களாக உள்ளவர்கள் அந்த பதவிகளுக்கு புது முகங்கள். அவர்களுக்கு சீட் தந்து ஜெயிக்க வைத்து அந்த கட்சி தலைமை அழகு பார்க்கிறது. இதை பார்த்து அதிமுகவுக்கு போனால் என்றாவது ஒருநாள் பதவி நிச்சயம், உழைப்புக்கு ஏற்ற பலன் உண்டு என எண்ணுகிறான் அங்கு போகிறார்கள். கட்சி பதவியாவது கிடைக்கிறது.


திமுகவில்?. எல்லா கட்சியிலும் வாரிசு அரசியல் உண்டு. மழைக்காக ஒதுங்கியவன் வீடே எனக்கு சொந்தம் என்பதை போல கலைஞரின் வாரிசுகள் என்ற அடைமொழியோடு பதவிக்கு வருவதை தான் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. கட்சிக்காக ஸ்டாலின் உழைத்தார், உழைக்கிறார். அவருக்கு பதவிகள் தருவது நியாயம். ஆனால் கட்சிக்காக உழைக்காத அழகிரி, கனிமொழி, தயாநிதிக்கு எதற்காக பதவிகள். ஸ்டாலின்க்கு அமைச்சர் பதவி தந்ததும், மூத்த மகன் அழகிரி பதவியில்லாமல் இருந்தால் மதிக்கமாட்டார்கள் என்று தென் மண்டல அமைப்பாளர் பதவியை உருவாக்கி தந்ததோடு, மத்திய அமைச்சராக்கப்பட்டார். மூத்த தாரத்து பிள்ளைகளுக்கு பதவி தந்தோமே என துணைவியானரின் மகளுக்கு எம்.பி பதவி தரப்பட்டது. கழகத்தின் தூண் என வர்ணிக்கப்பட்ட முரசொலிமாறன் இறந்ததும் அவரது பிள்ளையான தயாநிதிக்கு மத்திய அமைச்சர் பதவி.

இந்த மூவரும் கட்சி வளர்ச்சிக்காக எப்போதாவது பாடுபட்டார்களா?, பிரச்சனைக்குரிய சமயத்தில் கட்சியை தாங்கி பிடித்தார்களா?, கட்சிக்காக சிறை சென்றவர்களா?, கட்சிக்காக அடி உதை பட்டவர்களா? ஏதற்காக இவர்களுக்கு பதவி திமுகவில் பதவி வாங்க இவர்களுக்கு என்ன தகுதியிருக்கிறது. பிரச்சனை என்றதும் ஒடிஒலிந்துக்கொண்ட அழகிரி, கட்சிக்கு துரோகம் செய்த தயாநிதியை கட்சி தொண்டனால் ஏற்றுக்கொள்ள முடியுமா?. இவர்களை விட தடியடிப்பட்டு, சிறையில் சித்ரவதைகளை அனுபவித்து கட்சிக்காக கொள்கைக்கா இன்றும் உழைத்துக்கொண்டு இருப்பவர்களுக்கு சீட் தந்திருந்தால் கழகம் இக்கட்டான நிலையை சந்தித்திருக்காது. ஆனால் எதையும் கலைஞர் செய்யவில்லை.

திமுகவின் இளைஞர் அணி அமைப்பாளராக இன்னும் ஸ்டாலினே கோலோச்சுகிறார். கட்சியின் பொறுளாளர் என்ற பதவி தந்ததும் இளைஞர் அணி பதவியை வேறு ஒரு இளைஞரிடம் தந்துயிருக்க வேண்டாமா?. மகளிரணி, மாணவரணி, தொண்டரணி செயல்படுகிறதா என்பது பூத கண்ணாடி வைத்து தேட வேண்டிய நிலையில் உள்ளது. கீழ் மட்டத்தில் உள்ள அந்த அணியினரிடம் ஒரு உத்வேகம் தரப்படுகிறதா என்றால் அதுவும்மில்லை. புதியவர்கள் கட்சியில் சேர்ந்து கட்சியின் பொறுப்புகளுக்க வர நினைப்பவர்களுக்கு அணிகளிலாவது பதவி தரப்படுகிறதா என்றால் அதிலும் சீட் புக்கிங் நடக்கிறது.

இதையெல்லாம் கூட ஏற்றுக்கொள்ளலாம், ஆனால் மாற்று கட்சியிலிருந்து பணத்தை, சொத்தை காப்பாற்றிக்கொள்ள கழகமே கோயில் என ஓடிவருபவர்களுக்கு பதவிகள் தருவதில், சீட்கள் தருவதில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. அப்போ கட்சிக்காக உழைப்பவன் முட்டாளா?. இப்படியிருந்தால் கழகத்தில் எந்த ஒரு விசுவாச தொண்டனும் சேரமாட்டான் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

கலைஞரே, முதலில் கட்சியில், குடும்பத்தில் மாற்றத்தை கொண்டு வாருங்கள். அதன்பின் அணி அணியாக இளையோர்களை சேர்க்க வேண்டும் என்று உடன்பிறப்புகளுக்கு வேண்டுகோள் விடுத்து அறிக்கை விடுங்கள்.

செவ்வாய், அக்டோபர் 25, 2011

மேற்கத்திய நாடுகளின் எண்ணெய் வெறிக்கு கடாபி பலி.


 
42 ஆண்டுகள் லிபியாவின் தலைவராக விளங்கியவர் மும்மர் முஹம்மது அபு மின்யர்ல் கடாபி. சுருக்கமாக கடாபி. 1942 ஜீன் மாதம் அபுதாபியில் பிறந்தவர். இராயல் லிபியன் மிலிட்டரி அகடாமியில் சேர்ந்தார். கேணல் பதவி என உயர்ந்தார். பின் நாட்டின் மோசமான நிலையை கண்டு புரட்சி படையில் சேர்ந்தார். லிபியா புரட்சி படையின் பேரவை பொது செயலாளராக இருந்தார். 1969ல் லிபியாவில் இராணுவ புரட்சியை ஏற்படுத்தி அதன் மூலம் ஜனாதிபதி பதவிக்கு வந்தவர் கடாபி.
 
எண்ணெய் வளம்மிக்க நாடுகளில் ஒன்று லிபியா. இதன் எண்ணெய் வளம் மூலம்  வந்த பெரும்பங்கு வருமானத்தை கடாபி அவரது உறவு வட்டாரத்தை பெரும் செல்வந்தர்களாக்கியது. அதோடு நாட்டை கடாபி பொருளாதாரத்தில் முன்னிலைக்கு கொண்டு சென்றார். இலவச கல்வி, இலவச மருத்துவம், இலவசமாக வீட்டு வசதி போன்றவற்றை மக்களுக்கு தந்தார். அதோடு தொழிற்சாலைகளை உருவாக்கி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை அதிகப்படுத்தி தந்தார். தண்ணீர் வசதி அதிகளவில் ஏற்படுத்தி தந்தார். இவையெல்லாம் வெளிநாட்டு கடன்யில்லாமல் செய்து தந்தார். அதோடு கல்வி வளர்ச்சி 10 சதவித்திலிருந்து 90 சதவிதமாக உயர்த்தினார், அதோடு லிபியாவில் மனிதனின் சாராசரி ஆயுள் 55 வயது என்பதிலிருந்து 70வயதாக்கினார்.
 
அதோடு ஆப்ரிக்க ஒன்றியத்துக்குள் ஏற்படும் பல போர்களுக்கு மேற்கத்திய நாடுகளுக்கு எதிராக எதிர்த்து நிற்க்கும் நாடுகளுக்கு ஆயுதங்களை ஓடிச்சென்று உதவினார். மற்ற நாடுகளில் போராடும் புரட்சி படை, இஸ்லாமிய தீவிரவாத அமைப்புகளுக்கு பண உதவி, ஆயுத உதவியும் செய்தார். இதனால் மேற்கத்திய நாடுகளின் கோபத்துக்கு ஆளானார். லிபியா கடன் வாங்கினால் அதை கொண்டு அடக்கலாம் என நினைத்த மேற்கத்திய நாடுகளுக்கு லிபியாவின் வளர்ச்சி பிடிக்கவில்லை.
 
இதனை உணர்ந்து ஆயுதங்கள் சேகரிப்பும், இரசாயன ஆயுதம்ங்களை தயாரித்து வைப்பதிலும் அதிகம் ஆர்வம் காட்டினார். இதனால் அதிர்ச்சியான மேற்கத்திய நாடுகள் லிபியாவை தனிமைப்படுத்தி தொடங்கின. 1980ல் லிபியாவை ஐ.நா அமைப்பு மூலம் ஒதுக்கப்பட்ட நாடாக அறிவித்தது. இதனால் பொருளாதாரத்தில் சறுக்கல் தொடங்கியது.


 
இதனால் கடாபிக்கு எதிர்ப்புகள் உருவாயின மற்றும் உருவாக்கப்பட்டன. இதனால் மாற்று கருத்துக்கள் உடையவர்களை சிறையில் தள்ளினார், தீவிரமாக இருப்பவர்களை கொல்ல உத்தரவிட்டார் கடாபி. வெளிநாடுகளுக்கு தப்பி போனவர்களையும் கொள்ள உத்தரவிட்டார். அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் அடைக்கலம் கேட்ட லிபியர்களை கொண்டு ஒரு படை உருவாக்கினார்கள்.
 
இதனால் ஆபத்தை உணர்ந்து மேற்க்கத்திய நாடுகளுடன் சமாதானம் பேசினார் கடாபி. உங்களிடம் உள்ள ஆயுதங்களை ஒப்படையுங்கள் என்றது மேற்கத்தய நாடுகள். அவர்களின் வாக்குறுதிகளை நம்பி போர் ஆயுதங்கள், இராசாய ஆயுதங்களை ஒப்படைத்தார். ஆனாலும் மேற்கத்திய நாடுகள் லிபியாவுக்குள் புரட்சி படைகளை உருவாக்கி புரட்சி படைகளுக்கு தேவையான ஆயுதங்களை வாரி வாரி வழங்கியது.
 
2011 பிப்ரவரி முதல் லிபியாவில் புரட்சி படைகளுக்கும் லிபிய அரசின் படைகளுக்கும் மோதல் தொடங்கியது. லிபியாவின் கிழக்கு பகுதிகள் வறுமையில் இருந்தன. அந்த மக்கள் புரட்சி படையோடு கைகோர்த்தனர். ஐ.நா மூலம் வான் பரப்பில் லிபியா அரசின் விமானங்கள் பறக்கதடை, இண்டர்போல் தேடல், பன்னாட்டு நீதிமன்ற விசாரணை, நோட்டோ படைகளின் எதிர்ப்பு போன்றவற்றால் கடாபி திணறினார். அவரது படையிலும் சலசலப்பு எழுந்தது. கடாபிக்கு எதிரான தேசிய இடைக்கால பேரவை என்ற புரட்சிகர அமைப்பினை ஐ.நாவில் பிரதிநியாக உட்கார வைத்தது மேற்கத்திய நாடுகள்.

 
40 ஆண்டுகளுக்கு முன் புரட்சிவாதியாக நாட்டுக்காக ஓடினார். தற்போது தன் உயிரை காப்பாற்றிக்கொள்ள அதிபர் கடாபி ஓடினார். அக்டோபர் 20ந்தேதி கழிவு நீர் குழாய்யில் பதுங்கியிருந்த கடாபியை பிடித்தது புரட்சி படை. மார்பில், முகத்தில், உடலில் காயத்தோடு இருந்தவரை புரட்சி படையினர் அடித்தே கொன்றார்கள். அந்த இறுதி நிமிடம் அவருக்கு மட்டுமல்ல அந்த காட்சியை பார்த்தவர்கள் அனைவருக்கும் கொடுமையாக இருந்தது.
 
எத்தனை தவறுகள் செய்துயிருப்பின் அவர் ஒரு நாட்டின் அதிபராக 4 சகாப்தங்களாக இருந்தவர். நாட்டின் வளர்ச்சிக்காக அதிகம் பாடுபட்டவர், மேற்கத்திய நாடுகளின் சூழ்ச்சியால் நாட்டை விட்டு ஓடும் நிலை. அவருக்கான சிறிய மரியாதை கூட செய்ய அந்த நாடுகள் தவறிவிட்டன. ஏன் லிபியாவின் புதிய தலைமையும் செய்ய தவறி அவரின் கொலையை போரில் இறந்துவிட்டார் என்றது. வரலாற்றில் மறுக்க முடியாத, மன்னிக்க முடியாத நிகழ்வது. மனித உரிமை நாடுகள் இதுவரை வாய்திறக்கவில்லை.
 
மனித உயிர்களின் ரத்தத்தை குடித்த இலங்கை அதிபர் இராஜபக்சே இதை கண்டித்து அறிவித்துள்ளார். 

என்ன கொடுமை சார் இது. ………

துரத்தும் நீதிமன்றம்.


 
1991-1996ல் தமிழக முதல்வராக இருந்த ஜெ, நான் மாதம் ஒரு ரூபாய் தான் சம்பளம் வாங்குகிறேன் என்றார். 96ல் ஆட்சிக்கு வந்த திமுக அரசு, ஜெ மீது சொத்து குவிப்பு வழக்கு போட்டது. வருவமானத்துக்கு அதிகமாக 66 கோடி ரூபாய் சொத்துக்களை பறிமுதல் செய்து அவரை கைது செய்தார்கள். அதன்பின் மீண்டும் ஆட்சிக்கு வந்தார் ஜெ. சொத்து குவிப்பு வழக்கை ஊத்தி மூட என்னன்னவோ செய்தார். இதனால் பேராசிரியர் அன்பழகன், உச்சநீதிமன்றம் சென்று தமிழகத்தில் இவ்வழக்கு சரியாக நடக்காது அதனால் வேறு மாநிலத்துக்கு மாற்ற வேண்டும் என கேட்டார்.
 
இதனால் கர்நாடகா மாநிலம் பெங்களுரூக்கு வழக்கு மாற்றப்பட்டது. அந்த வழக்கு 13 ஆண்டுகளாக நீதிமன்றத்தில் நடந்துவருகிறது. வழக்கு ஆவணங்கள் மொழி பெயர்க்க வேண்டும், ஆங்கிலம் தவறாக உள்ளது, எழுத்துபிழை உள்ளது, ஆங்கில மொழி பெயர்ப்பு சரியில்லை தமிழில் வேண்டும், தலைவலிக்குது, கால்வலி, தேர்தல் பணி, பாதுகாப்புயில்லை என வித்தியாசம் வித்தியாசமாக காரணங்கள் சொல்லி இந்த 13 ஆண்டுகளில் 110 வாய்தாக்களை வாங்கினார்.
 
தற்போது வழக்கு இறுதி கட்டத்துக்கு வந்துள்ளது. ஜெ வந்து ஆஜராகி வாக்குமூலம் தந்துவிட்டால் வழக்கு இறுதி கட்டதுக்கு வந்துவிடும். ஆனால் இன்னும் எத்தனை முறை வேண்டுமானாலும் வாய்தா வாங்குவேனே தவிர நீதிமன்றத்தில் ஆஜராகவே மாட்டேன் என்ற முடிவில் இருந்தார். உச்சநீதிமன்றத்திற்க்கு இந்த பிரச்சனை போனது, பொதுவாழ்வில் உள்ள நீங்கள் ஓடிப்போய் ஒளியக்கூடாது, பாதுகாப்பு சரியாக செய்யப்பட்டுள்ளது இனிமேல் போகாமல் இழுத்தடிப்பது நல்லதல்ல என கண்டித்தது உச்சநீதி மன்றம்.
 
இதனால், கடந்த அக்டோபர் 20, 21ந்தேதிகளில் பெங்களுரூ பார்ப்பர அக்ரஹார நீதிமன்ற வளாகத்தில் அமைக்கப்பட்டுயிருந்த தனி நீதிமன்றத்தில் நீதிபதி மல்லிகார்ஜினா முன் ஆஜரானார். வழக்குக்காக ஜெ சென்றது தனிப்பட்ட விவகாரம். இதில் தேசிய கொடி போட்ட காரில். அதுவும் ஏதோ கட்சி மாநாட்டுக்கு போவது போல் விமான நிலையத்தில் இருந்து 36 கார்களில் ஊர்வலமாக நீதிமன்றத்துக்கு வந்தார். இவருக்கு 2 ஆயிரம் காவலர்கள் பாதுகாப்பு பணியில் இருந்தனர்.
 
இவ்வளவு பெரிய பாதுகாப்பு எதற்க்கு?.
 
என்னை கொல்ல விடுதலைப்புலிகள் சதி செய்துள்ளார்கள் எனக்கூறியே உயர் பாதுகாப்பை பெற்றார். இன்று விடுதலைபுலிகளின் நம்பகமானவன் எனக்கூறிக்கொள்ளும் சீமான் அம்மாவின் செல்லப்பிள்ளை. அப்படியிருக்க புலிகள் எப்படி அவரை கொல்வார்கள். அதைவிடுவோம், இத்தனை பாதுகாப்பில் தடல் புடலாக வந்தவரைப்பற்றி பத்திரிக்கைகள் வாய் திறக்கவில்லை. திமுக ஆட்சி காலத்தில் அமைச்சராக இருந்த வீரபாண்டி ஆறுமுகம் சிறையில் இருந்த தனது உறவினரை அரசின் சைரன் காரில் சென்று பார்த்தார் அதிகார மீறல் என குதித்த ஏடுகள், மீடியாக்கள் ஜெவின் இந்த பயணம் பற்றி வாய்திறக்கவில்லை.
 
ஒரு நடுநிலை நாளிதழ் என பீற்றிக்கொள்ளும் ஒரு பத்திரிக்கை தனது செய்தியில், நீதிமன்ற அறை 20க்கு 20 அளவு. அங்கு மின்விசிறி மட்டுமேயிருந்தது. குளிர்சாதன வசதியில்லாததால் அனைவரும் கஸ்டப்பட்டனர் என எழுதியிருந்தது. ஏதோ தமிழகத்தில் நீதிமன்றங்கள் எல்லாம் ஏசி வசதி செய்யப்பட்டு கார்ப்பரேட் அலுவலகம் போல் செயல்படுவதைப்போலவும் பெங்களுர்ரூ நீதிமன்றம் வேண்டும்மென்றே ஏசி வசதி செய்யவில்லை என்பதை போல செய்தி வெளியிட்டது.
 
விசாரணைக்கு அழைத்த ஜெ வை அழைத்த நீதிபதி, ஜெவுக்கு நாற்காலி தந்து உட்கார வைத்தார். சசிகலா, இளவரசி, பாஸ்கரன் ஆகியோரை கூண்டில் உட்கார வைத்து கேள்விகளை ஆரம்பித்தார். முதல் நாள் 380 கேள்விகள், தொடர்ந்து இரண்டாவது நாளும் கேள்விகள் என திணற திணற கேள்விகளை கேட்ட நீதிபதி ஜெ தந்த பதிலை பதிவு செய்தார். மீண்டும் வரும் 8ந்தேதி ஆஜராகியே தீர வேண்டும் என உத்தரவிட்டு அனுப்பிவைத்தார்.

இதைப்பற்றியெல்லாம் வாய் திறக்கமறுக்கின்றன பல தேசிய, பிராந்திய மீடியாக்களுக்கும், ஏடுகளுக்கும். காரணம், பயத்தால் நடுங்குவது பாதியென்றால், மீதி சாதி பாசம். அதனாலயே வாய் திறக்க மறுக்கின்றன. ஊழலின் உருவமாக உலாவந்து தேச மக்களையும், நீதித்துறையையும் கேலிக்கூத்தாக்கும் இவர் சிறந்த நிர்வாகியாம்?, இவர் மற்றவர்களை பார்த்து ஊழல்வாதிகள் என அறிக்கை விடுகிறார்.
 
மல்லாந்து படுத்துக்கிட்டு எச்சில் துப்பினால் அது தன் மேல் தான் விழும் என்பதை மறந்துவிடுகிறார்கள் அரசியல்வாதிகள். ஆதனால் தான் ஒருவர் மாற்றி ஒருவர் ஊழல்வாதிகள் என குற்றம்சாட்டிக்கொள்கிறார்கள்.
 
யார் தான் இவர்களை திருத்துவதோ?.

ஞாயிறு, அக்டோபர் 23, 2011

காலி பெருங்காய டப்பா.


நாங்கள் தேசிய கட்சி. தனித்து நின்றால் சட்டமன்ற தேர்தலில் 100 இடங்களில் ஜெயிப்போம் என பீலா விட்ட ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், இளைஞர் காங்கிரஸ் யுவராஜா தற்போது ஏதாவது பேசுவார்களா என எதிர்பார்க்கிறேன் ஒரு வார்த்தையும் இந்த காமெடி பீஸ்களிடம்மிருந்து வர மறுக்கிறது.

2006 முதல் 2011வரை திமுகவை நிம்மதியாக ஆட்சி புரியவிடாமல், மெனாரிட்டி திமுக என மிரட்டிக்கொண்டே இருந்தனர். அதிலும் செல்லாகாசுகளான இளங்கோவன், யுவராஜா, காங்கிரஸ் இளவரசன் இராகுல்காந்தி போன்றோர் பேசாத பேச்சில்லை. சகித்துக்கொண்டு ஆட்சி செய்தார் கருணாநிதி.

சட்டமன்ற தேர்தல் நெருக்கத்தில், செட்டிநாட்டு சீமான் அமெரிக்ககாவின் அடிவருடி சிதம்பரம், இளங்கோவன், யுவராஜா போன்றோர் 63 சீட், ஆட்சியில் பங்கு என மிரட்டி திமுகவிடம் ஒப்பந்தம் போட்டார்கள். திமுகவின் தோல்விக்கு இதுவும் ஒரு காரணம். அப்போது அவர்கள், இது எங்களது சக்திக்கு மிகவும் குறைவு என்றார்கள். ஏதோ இவர்களிடம் பாகிஸ்தான் உள்ளாச்சி தேர்தலிலேயே வெற்றி பெறும் அளவுக்கு பலம்மிருப்பதாக பீலா விட்டார்கள். தோல்வியடைந்ததும் திமுக மீது பழி போட்டனர்.


உள்ளாட்சி தேர்தல் வந்தபோது, காங்கிரஸ்சை கழட்டி விடுகிறோம் என்றார் கருணாநிதி. கைவிலங்குகள் உடைக்கப்பட்டன என்றார் இளங்கோவன். இதோ உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் வந்துவிட்டன. காங்கிரஸ்சை எதிர்த்து சீமான் போன்ற சில் வண்டுகள் பிரச்சாரம் செய்யாத நிலையில் அவர்கள் பலம் என்ன என்பதை காட்டிவிட்டன.

லட்சங்களில் ஒட்டு உள்ள மாநகர மன்ற தேர்தல்களில் மேயர் வேட்பாளர்கள் டெப்பாசிட் வாங்கவில்லை. வார்டுகளில் சிலவற்றை தவிர மற்றவற்றில் 200 வாக்குகள்க்கு மேல் தாண்டவில்லை. மக்களுக்கு அறிமுகமேயில்லாத சுயேட்சைகள் கூட காங்கிரஸ் வேட்பாளர்களை விட அதிக வாக்குகள் எல்லா மட்டத்திலும் பெற்றுள்ளனர். நகர மன்ற உறுப்பினர்க்கு போட்டியிட்டவர்கள் பலப்பல இடங்களில் 50 வாக்குகள் கூட வாங்கியிருக்கிறார்கள். இந்த கேவலம் நகரங்கள், மாநகரங்கள், பேரூராட்சிகளில் தான். கிராமங்களுக்குள் போனால் இதை விட கேவலம்.

தமிழகத்தில் சிலயிடங்களில் வார்டுகளில் காங்கிரஸ் வேட்பாளர்கள் வெற்றி பெற்றுயிருக்கிறார்கள். அது அவர்களின் தனிப்பட்ட பலம். மற்றப்படி அந்த காங்கிரஸ் கட்சி காலி பெருங்காய டப்பா என்பதை தேர்தல் முடிவுகள் காட்டியுள்ளன.

இனிமேல், நாங்கள் தேசிய கட்சி அதனால் ஆட்சியில் பங்கு, அமைச்சர் பதவி, 100 சீட், 200 சீட் என கேட்டால் துரத்தி துரத்தி அடிக்க வேண்டும் திமுக, அதிமுக போன்ற கட்சிகள். கூட்டணியில சேர்த்துக்குங்க சி.பி.ஐ கேஸ் இல்லாம பாத்துக்கறோம், உச்சநீதி மன்ற வழக்க ஊத்தி மூடிடலாம் எனக்கூறி கூட்டணிக்கு வந்தால் நாய்க்கு எலும்பு துண்டு போடுவதைப்போல ஏதாவது போட்டு விடுங்கள்.

பின்குறிப்பு: நாய்கள் என்னை மன்னிக்க வேண்டும். நன்றியுள்ள உங்களை நன்றியில்லாத அவர்களுடன் ஒப்பிட்டத்திற்க்கு.

திமுகவை சுவீகரிக்கும் எம்.ஜி.ஆர் விசுவாசிகள்.


திமுக என்ற ஆலமரத்தின் கீழ் வந்து என்னற்ற பறவைகள் சரணடையும். வுந்தவர்களை வராதே என திமுக என்றும் சொன்னது கிடையாது. போகிறவர்களை தடுத்ததும் கிடையாது. எம்.ஜி.ஆர் திமுகவை விட்டு பிரிந்து அதிமுகவை தொடங்கியபோது, தமிழக அரசியல் களம் வேறு ஒரு பாதையை நோக்கி செல்ல தொடங்கியது.

கொள்கையென்று எதுவும்மில்லாமல் ஆரம்பிக்கப்பட்ட அதிமுகவுக்கு பலமே திமுக எதிர்ப்பு வாக்குகளும், எம்.ஜி.ஆர்ரின் சினிமா பிரபலமே. சினிமாவுக்காக எப்படி நடிப்பார்களோ அப்படியோ  எம்.ஜி.ஆர்ரும் நிஜ வாழ்வில் அரசியலில் நடிக்க தொடங்கினார். மக்களை ஏமாற்றி பிழைக்கும் கும்பலுக்கு தலைவரானார். அதாவது முதல்வரானார்.

கருணாநிதி தான் ஊழலின் ஊற்றுக்கண் என்பார்கள். தவறு ஊழலை ஊக்குவித்து அதை அதிகாரிகள் முதல் அடிமட்ட ஊழியர்கள் வரை பரப்பியது எம்.ஜி.ஆர் ஆட்சி காலத்தின் சாதனை. இன்று கர்நாடகா முதல்வராக இருந்த எடியூரப்பாவை பதவியில் இருந்து இறக்க வைத்து, சிறைக்கு அனுப்பிய லோக் ஆயுக்தா நீதிமன்ற அமைப்பை இந்தியாவிலேயே முதல்முறையாக தமிழகத்தில் கொண்டு வந்து சட்டம்மியற்றியவர் கருணாநிதி. அந்த சட்டத்தை முதல் முறையாக ஆட்சிக்கு வந்த எம்.ஜி.ஆர் ரத்து செய்தார். அவர் செய்த தவறு இன்று தமிழகம் ஊழலில் மலிந்து போய்விட்டது. கேட்பாரில்லாமல் ஊழல் நடக்கிறது.

14 ஆண்டுகள் எம்.ஜி.ஆர் அரசாண்டார். இறந்தபின் அதிமுக உடைந்தது. திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தது. 2 ஆண்டில் அது கலைக்கப்பட்டது. இராஜிவ்காந்தி கொல்லப்படுகிறார். அந்த அனுதாபத்தில் 1991ல்p ஜெ தமிழக முதல்வராகிறார். 96 வரை கொடுங்கோல் ஆட்சி. ஜெவுக்கு எதிரானவர்கள் திமுக கூடாரத்திற்க்கு வந்து தங்களை ஐக்கியப்படுத்திக்கொண்டனர். மீண்டும் 2001-2006வரை சர்வாதிகார ஆட்சி செய்தார் ஜெ. 2006க்கு பின் திமுக கூடாரத்திற்க்கு அதிமுகவினர் பலர் வந்துள்ளனர்.

இன்றைய தேதியில், கே.கே.எஸ்.எஸ்.ஆர், ரகுபதி, ஜெகத்ரட்சகன், வேலு, செல்வகணபதி, சேகர்பாபு போன்ற எம்.ஜி.ஆர் விசுவாசிகள் அதிகளவில் உள்ளனர். அவர்கள் திமுகவின் நம்பிக்கை நட்சத்திரம் என அழைக்கப்படும் ஸ்டாலினின் வீக்னஸ்களை தெரிந்துக்கொண்டு அவரை கவிழ்த்தார்கள். அதன்படி கட்சி பதவி, அமைச்சர் பதவியென கலக்குகிறார்கள்.


எம்.ஜி.ஆர் ஆட்சி காலத்தில் திமுகவை காக்க அடிப்பட்டு, மிதிப்பட்டு, சிறைச்சென்று பதவியில்லாமல் இருந்தபோதும் கட்சிக்காக விசுவாசமாக இருந்தவர்கள் கழகத்தில் இன்று இருக்கும் இடம் தெரியவில்லை. ஆனால், பணம் சம்பாதிக்க, கொள்ளையடித்த பணத்தை காப்பாற்றிக்கொள்ள திமுகவுக்குள் வந்த எம்.ஜி.ஆர் விசுவாசிகள் திமுகவை சுவீகரம் செய்துள்ளனர். அவர்கள் சொல்வது தான் ஸ்டாலினின் வார்த்தைகளாக உள்ளன.

இதனால் தான் பல ஆண்டுகளாக திமுகவின் நம்பகமானவர்களாக இருந்த சேலம் வீரபாண்டி ஆறுமுகம், கடலூர் பன்னீர்செல்வம், முரட்டு பக்தர் பெரியசாமி போன்ற பலர் கழகத்தில் கலவரம் செய்யவே காத்திருக்கும் அழகிரியை பவர்க்கு கொண்டு வர துடித்தனர். அவரும் அதை உணர்ந்து பதவிகளை மிரட்டி மிரட்டி வாங்கினார். தனக்கான வட்டத்தை உருவாக்கிக்கொண்டார். இதற்கெல்லாம் காரணம், ஸ்டாலின் கட்சியினரை கையாண்ட விதம். அரசியல் என்பது சாணக்கியத்தனத்தை பயன்படுத்தும்மிடம் என்பதை தெரிந்தே கோட்டைவிட்டார்.

இந்த விவகாரத்தில் ஜெ வை பர்த்து ஸ்டாலின் கற்றுக்கொள்ளவேண்டும், என்னதான் பெரிய ஆளாக இருந்தாலும் அந்த கட்சிக்குள் போனால் விசுவாசமாக சில ஆண்டுகள் இருந்தால் மட்டும்மே பதவிகள் பெற முடியும். ஆனால் திமுகவில் மட்டும் தான் வந்த வேகத்தில் கட்சி பதவிகள், சீட்கள், அமைச்சர் பதவிகள் பெற முடிகின்றன. அதற்க்கு காரணம், ஸ்டாலினிடம் உள்ள வீக்னஸ். இது பாராம்பரிய திமுகவினர் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இன்று திமுகவை மறைமுகமாக எம்.ஜி.ஆர்ரின் விசுவாசிகள் சுவீகரிக்க தொடங்கியுள்ளனர். என்றாவது ஒருநாள் இவர்கள் ஒன்றிணைந்து திமுகவை பிளக்கும் வேலையில் ஈடுபடுவார்கள் அதற்க்கு முன் இவர்கள் விவகாரத்தில் திமுக தலைமை மட்டுமல்ல ஸ்டாலினும் கவனமாக இருப்பது நல்லது.

சனி, அக்டோபர் 22, 2011

உள்ளாட்சி தேர்தல் ஒரு ஆய்வு முடிவு.


2011 உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்துவிட்டது. ஒவ்வொரு கட்சியும் தனித்து நின்று தங்களது பலத்தை இந்த தர்தலில் காட்டியுள்ளன. முன்பே ஒரு பதிவில் குறிப்பிட்டதை போல இதன் மூலம் கட்சிகளின் ஓட்டு வங்கியை அவ்வளவாக கணக்கிட முடியாது என்று குறிப்பிட்டுயிருந்தோம். தற்போதும் அதேநிலை தான். ஆனால், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளின் வெற்றி நிலவரத்தை கொண்டு ஓரளவு மட்டும் கட்சிகளின் பலத்தை தீர்மானிக்க முடியும்.

அப்படிப்பார்த்தால் தமிழகத்தில் உள்ள 10 மாநகராட்சி, 150 நகராட்சி, 559 பேரூராட்சி தலைவர் பதவிகளில் 10 மாநகராட்சியை தலைவர் பதவியை அதிமுக கைப்பற்றியுள்ளது. நகராட்சி, பேரூராட்சிகளில் 3ல் இரண்டு பங்கை ஆளும் கட்சியான அதிமுகவும், 1 பங்கை திமுகவும் கைப்பற்றியுள்ளது. அதேபோல் மாநகர, நகர, பேருராட்சிகளுக்கான கவுன்சிலர்கள் போட்டியில் ஆளும் கட்சியான அதிமுக போல் திமுகவும் பரவலாக சம பலத்துடன் வென்றுள்ளது.

இதில் நாங்கள் தனித்து நின்றால் வடமாவட்டம் எங்கள் கையில் என்ற பாட்டாளிகள், எங்கள் மக்கள் சீறுபவர்கள் என்ற சிறுத்தைகள், கூட்டணி போடும்போதுயெல்லாம் ஆட்சியில் பங்கு கேட்கும் தேசிய கட்சி என பீற்றிக்கொள்ளும் கோமகன்கள் உள்ள காங்கிரஸ், மறுமலர்ச்சி ஏற்படுத்துவோம் என முழங்கும் மதிமுக, நான் தான் அடுத்த முதல்வர் என்ற கனவில் உள்ள சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் விஜயகாந்த் ஆகியோர் ‘சில்லறை’கள் என்பதை இந்த தேர்தல் களம் வெளிப்படுத்தியுள்ளது.

இந்த தேர்தல் களம் திமுக-அதிமுக இடையே தான் சண்டைக்களம். இதில் ஆளும் கட்சியான அதிமுக யானையாக வெற்றி பெற, திமுகவோ அங்குசமளக்குவுக்கு வெற்றி பெற்றுள்ளது. (உள்ளாட்சி தேர்தல் என்பது ஆளும் கட்சிக்கு சாதகமாகவே இருக்கும் என்பது வரலாறு. காரணம் அதிகார பலம், மக்களின் ஆளும் கட்சிக்கான சாதக பலம் போன்றவையே. 2001, 2006ல் நடந்த உள்ளாட்சி தேர்தலோடு 2011 தேர்தலை ஒப்பிட்டு பார்த்தபின்பே இந்த கணிப்பு).

சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு திமுக மீதுயிருந்த எதிர்ப்பு இன்னும் குறையவில்லை என்பதையே இந்த தேர்தல் நிலவரம் காட்டியுள்ளது. அதிமுக ஆட்சிக்கு வந்து 6 மாதத்தில் சமச்சீர்கல்வி, புதிய சட்டமன்ற வளாகம் விவகாரம், பரமக்குடி கலவரம் போன்ற பல பிரச்சனைகள் இருந்தும் எதுவும் எடுபடவில்லை என்பது கண்கூடு.

அதற்க்கு காரணம், அதிமுக நிறுத்துவம் வேட்பாளர்கள் பிரச்சனையில்லாதவர்கள், அதிகம் சம்பாதிக்காதவர்கள் என்ற இமேஜ். அதோடு மக்கள் நிரம்ப யோசிக்கின்றனர். அதனால் தான் அதிமுக மீது பலப்பல குற்றச்சாட்டுகள் இருந்தும் அதை ஆதரித்துள்ளனர். அதேபோல் மாற்றத்துக்கு திமுகவை தவிர்த்து மற்றொரு இயக்கத்தை காணவும் மக்கள் தயாராகயில்லை என்பதும் தேர்தலில் திமுக பெற்றுள்ள வாக்குகள் வெற்றிகள் கொண்டு காண முடிகிறது.

ஆனாலும், சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு திமுகவினர் மீது மக்கள் என்ன நிலைப்பாட்டில் இருந்தார்களோ அதே நிலைப்பாட்டில் தான் இன்றும் மாநகரம், நகராட்சி, பேரூராட்சி, சிற்றுரூராட்சிகளில் உள்ளார்கள் என்பது தெரிகிறது. அதை மாற்ற நடவடிக்கைகள் திமுக தலைமை உடனடியாக எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. அதேபோல் ஆளும் கட்சிக்கு பயந்துக்கொண்டு போய் பதுங்கிய அதிகாரத்தில் ஆட்டம் போட்டவர்கள், கட்சி முக்கியஸ்தர்களான மு.கஅழகிரி, பழனிச்சாமி, கே.கே.எஸ்.எஸ்.ஆர், சுரேஷ்ராஜன், வீரபாண்டி ஆறுமுகம், நேரு, முரட்டு பக்தர் பெரியசாமி, என்.கே.கே.பி.ராஜா போன்ற பலரை கட்சி தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும் இல்லையேல் எதிர்காலம் இன்னும் மோசமான நிலைக்கு போய்விடும்.

வெள்ளி, அக்டோபர் 21, 2011

வை.கோவை சீமான் வெறுப்பது ஏன்?.


 
வை.கோ மீதும், அவரின் பல முடிவுகள் மீது எனக்கு எதிர்மறையான விமர்சனங்கள்  உண்டு. ஆனால் அவர் ஈழ மக்களுக்காக எப்போதும் எந்த காம்பர்மைஸ்சும் செய்துக்கொள்ளாத தீவிர ஈழ ஆதரவாளர். வெளிப்படையாக சொல்ல வேண்டும்மென்றால் விடுதலைப்புலிகள் ஆதரவாளர்.
 
திமுகவில் இருந்து பிரிந்து வந்து மதிமுகவை ஆரம்பித்தபோது கட்சியின் கொள்கையாகவே விடுதலைப்புலிகள் ஆதரவு என்பதனை வைத்த தைரியசாலி. இராஜிவ்கொலைக்கு பின் தமிழகத்தில் சரிந்திருந்த விடுதலைப்புலிகள் செல்வாக்கை பட்டிதொட்டியெல்லாம் போய் பேசிப்பேசியே தமிழக மக்களின் மனதில் நல் விதமாக பதியம் போட்டவர். அரசியல் களத்தில் ஜெ வோடு கூட்டணியில் இருக்கும் போது வேண்டுமானால் அவர் அடக்கி வாசித்திருக்கலாம். மற்றப்படி அவரின் குரல் எப்போதும் ஈழத்துக்காக, விடுதலைப்புலிகளுக்காக ஒலித்துக்கொண்டே தான் இருக்கிறது. கிட்டதட்ட 30 ஆண்டுகளாக தன் நா வலிமையால் தைரியமாக குரல் கொடுப்பவர். அப்படி குரல் கொடுத்ததால் கடந்த காலங்களில் இதே ஜெ அரசாங்கத்தில் பொடா சட்டத்தில் வேலூர் சிறையில் ஒரு ஆண்டு இருந்தவர்.
 

ஆனால் சீமான் இன்று வந்த தமிழ் உணர்வாளர். ஈழத்துக்காக உணர்ச்சியாக பேசி, வார்த்தைகளை அடுக்கி இளைஞர்களிடம் பிரபலமான பாஸ்ட்புட் உணர்வாளர். தனது அரசியல் வளர்ச்சிக்காக ஈழ விரோதிகளை கூட கொண்டாடும் சீமானைப்போல என்றும் வை.கோ இருந்ததில்லை. வை.கோ என்றும் ஈழ போராட்டத்தில் சாதி பார்த்ததில்லை என்பதை உறுதியாக கூறலாம். பேச்சு திறமையில், அரசியல் அனுபவத்தில், ஈழ பிரச்சனையில், விடுதலைப்புலிகள் விவகாரத்தில் வை.கோ ஒரு யானை. சீமான் ஆடு. இந்த ஆடு தான் வை.கோவை கீழே தள்ளி தான் பெரிய யானை என காட்ட முயல்கிறது.
 
சீமானும் அவரது இயக்கத்தினரும் வை.கோ மீது எதிர்ப்பு காட்ட, விரோதமாக இருக்க காரணம் என்ன ?.
 
முதலில் 2011 சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியை விட்டு வை.கோ போனது சீமான்க்கு பிடிக்கவில்லை. அதோடு, தூக்கு தண்டனை விவகாரத்தில் முருகன், சாந்தன், பேரறிவாளன் தூக்குதண்டனையை ரத்து செய்வதில் தமிழ் உணர்வாளர்கள் குழு ஈடுபட்டுள்ளது. அதில் அதிக அக்கறை காட்டியது நாம் தமிழர் கட்சி, வை.கோ.
 
இந்த விவகாரத்தை வைத்து தன்னை மேலும் வளர்த்துக்கொள்ள முயலும் சீமான், என் பிணத்தின் மீது தான் உங்கள் தூக்குதண்டனை நிறைவேறும் என கூறியதாக வெளியான தகவல். அடுத்ததாக முருகன், சாந்தன் தங்களை தூக்கிலிட்டப்பின் எங்களது உடலை சீமானிடம் தர வேண்டும் என எழுதி தந்துள்ளதாக வந்த தகவல்.
 

இது சீமான் தரப்பு அப்படித்தான் எழுதி தர வேண்டும் என கேட்டு எழுதி வாங்கியதாக மதிமுக தரப்பு மறைமுகமாக குற்றம்சாட்டுகிறது. ஒரு விதத்தில் அது உண்மையாகவும் இருக்கலாம். காரணம், பேரறிவாளன் உடலை வாங்க அவரது குடும்பம் உள்ளது, சாந்தன் உடலை வாங்க அவரது குடும்பம் தமிழகத்தில் இல்லை அதனால் சீமான்னிடம் தரச்சொல்லி இருக்கலாம். ஆனால் முருகன்க்கு அந்த நிலையில்லை.
 
காரணம், முருகனின் மனைவி நளினி தமிழகத்தை சார்ந்தவர். நளினி சிறையில் இருந்தாலும், அவரது தாயார் அதாவது முருகனின் மாமியார் வெளியே உள்ளார். அவரிடம் தான் தன் உடலை தரக்கோரியிருப்பார். அதற்க்கு நிறைய காரணங்கள் உள்ளன.

ஒரு வகையில் சீமானிடம் தரும் முடிவில் இருந்தாலும் அதை வெளிப்படுத்தியிருக்க மாட்டார்கள். காரணம், போராட்ட களத்தில் சீமான் மட்டுமல்ல வேறு பலப்பல அமைப்புகள் அவர்களுக்கு உதவியாக இருந்தன. அவர்களை விட்டுவிட்டு சீமானிடம் மட்டும் தரச்சொன்னால் அவர்களின் ஆதரவை தாங்கள் இழக்க வேண்டி வரும் என்பதை உணர்ந்தவர்கள். அப்படிப்பட்டவர்கள் சீமானை மட்டும் ஆதரித்தார்கள் என்பதை தான் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
 
அதோடு, சமீப காலமாக சீமான்க்கு தமிழக உளவுத்துறை அதிக முக்கியத்துவம் தரத்தொடங்கியுள்ளன. அரசியல் ரீதியாக இதை எம்.என் தான் தரச்சொல்கிறார். காரணம், சீமான்க்கு வழிகாட்டியாக நிற்பது சசிகலா கணவர் நடராஜன் தான் எனக்கூறப்படுகிறது. 

மற்றவர்கள் கூறுவது போல் விஜயலட்சுமி விவகாரம்மெல்லாம் ஒரு சிறு பிரச்சனை அவ்வளவே. 

அதோடு, தேர்தல்க்கு முன்பே சீமான் அதிமுக ஆதரவாளர் என்பதை பல முறை நிறுபித்தார். அதை அவரோடு இருப்பவர்கள் உணர தவறிவிட்டார்கள். பாராளமன்ற சட்டமன்ற தேர்தல்க்கு முன் அவர் வெளியே கூறாமல் எம்.என்னை சந்தித்தார். அதோடு உளவுத்துறைகளின் உதவியும் சீமான்க்கு கிடைப்பதாக கூறப்படுகிறது. 

ஜெவுக்கு எதிரானவர்கள் சீமான்க்கு விரோதிகள். இது தான் வை.கோவை சீமான் எதிர்க்க காரணம். அதோடு வருங்காலத்தில் ஈழ போராட்டத்தில் தமிழகத்தில் தான் மட்டுமே என்ற நிலையை உருவாக்க சீமான் நினைக்கிறார். இதையே ஜெ, உளவுத்துறை போன்றவையும் விரும்புவதாக உணர்வாளர்கள் வட்டாரம் பேசுகின்றன.


புதன், அக்டோபர் 19, 2011

திமுக எதிர்ப்பாளர்களுக்கு…….



தமிழக அரசியல் களத்தில் அதிகம் விமர்ச்சிக்கப்படும் ஒரு அரசியல் கட்சி எதுவென்றால் திமுக தான். ஆட்சியில் இருந்தபோதும் அதை விமர்சித்தார்கள், ஆட்சியில் இல்லாமல் போய் 6 மாதமான பின்பும் விமர்சன கனைகளை தொடுத்துக்கொண்டு இருக்கிறார்கள். எதனால் இது?. இன்றைய ஆளும் கட்சியான அதிமுக தவறுகளே செய்யவில்லையா?. என யோசித்தபோது தற்போதைய நிலையில் ஆளும் தலைமை பலப்பல தவறுகள் நம் கண் முன்னே செய்கின்றன.

உதாரணத்திற்க்கு, கேபிள் டிவிக்களை அரசுடமையாக்கப்பட்டுள்ளது. வரவேற்க்கத்தக்கது. ஆனால், சேனல்கள் பாதி வருவதில்லை. லோக்கல் சேனல்கள் தடை செய்கிறோம் என அறிவித்த அரசாங்கம். தற்போது சத்தம்மில்லாமல் பணத்தை வாங்கிக்கொண்டு ஒவ்வொரு ஊரிலும் லோக்கல் சேனல்கள் நடத்த அனுமதி தந்துள்ளது. அதோடு எந்த லோக்கல் சேனல்களிலும் திமுக மற்றும் பிற கட்சியினர் தரும் அரசியல் விளம்பரங்களை உள்ளாட்சி தேர்தல் நேரத்தில் வெளியிடக்கூடாது என்ற கட்டுப்பாடு. ஆனால் ஜெ ஓட்டு கேட்கும் விளம்பரம் கட்டணம்மில்லாமல் ஒளிப்பரப்பாகின்றன. இது அதிகார துஸ்பிரயோகம்மில்லையா? திமுகவை விமர்சிப்பவர்கள் ஏன் இதுப்பற்றி பேசுவதில்லை. ஜெயலலிதா அரசாங்கம் செய்தால் சரியா?.

இரண்டாவது. சென்னையில் அரசுக்கு சொந்தமானயிடத்தை சசிகலா குடும்பத்துக்கு நெருக்கமான தோட்டக்கலை கிருஷ்ணமூர்த்தி கடந்த கால அதிமுக ஆட்சியில் நீண்ட கால குத்தகைக்கு எடுத்தவர் குத்தகை காலம் முடிந்தும் அதை அரசாங்கத்திடம் திருப்பி தரவில்லை. கடந்தமுறை திமுக ஆட்சியில் இருந்தபோது, உச்சநீதிமன்றம் வரை சென்று அந்தயிடத்தை போராடி மீட்டது. அந்தயிடத்தை ஆட்சிக்கு வந்து 5வது மாதத்தில் மீண்டும் அதே தோட்டக்கலை கிருஷ்ணமூர்த்திக்கு தாரை வார்த்துள்ளது அதிமுக. அதன் இன்றைய மதிப்பு 250கோடி. இதை திமுக தலைவர் கண்டித்து அறிக்கை வெளியிட்டபோது, உடனே ரியாக்ட் காட்டினார் ஜெ. எப்படி? திமுக தலைமையகமான அண்ணா அறிவாலய இடம் ஜமின் குடும்ப வாரிசுகளிடம்மிருந்து மிரட்டி பிடுங்கப்பட்டது என்றார். கருணாநிதி அண்ணா அறிவாலயம் நேர்மையாக வாங்கப்பட்டது, அதை உயிர் தந்தாவது காப்போம் என்றார். தோட்டக்கலை விவகாரத்தை மறந்தார். அதற்க்கு காரணம், ஜெ அதிகார போதையில் இருப்பவர். அவர் தான் நினைத்தது நடக்க வேண்டும் என்பதற்க்காக அண்ணா அறிவாலயத்தை இடிக்கவும் செய்வார் என்பதாலயே அதை காக்க போராடுகிறார். திமுகவினர் ஆட்சி காலத்தில் அடித்து உதைத்து இடங்களை வாங்கினார்கள் என காவல்துறையை வைத்து வழக்குகள் பாய்ச்சியபோது சரியான நடவடிக்கை என்றவர்கள் ஜெ வின் இந்த 200 கோடி மதிப்புள்ள இடம் சுவாகா செய்யப்பட்டது பற்றி நடுநிலையாளர்கள் பேச மறுப்பது ஏன்?.

கடந்த காலங்களில் மக்களை பிச்சைக்காரர்களாக்கி வாக்குக்கு பணம் தருகிறார்கள் என திமுக மீது ஜெ குற்றச்சாட்டு வைத்தார், திமுக எதிர்ப்பாளர்களும் திமுக கொள்யைடித்த பணம், பண திமிர் என பேசினார்கள். அதிமுக ஆட்சியில் தற்போது நடக்கும் உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவினர் தான் வாரி இறைக்கிறார்கள். இதை பற்றி மூச் விட மறுக்கிறார்களே ஏன் ?. கடந்த சட்டமன்ற தேர்தலின் போது ஆளும்கட்சியாக இருந்த திமுக காவல்துறையை வைத்து அரசியல் களத்தை குழப்புகிறது என்றார்கள். தற்போது அதிமுக காவல்துறையை வைத்து வெற்றியை நிர்ணயிக்க பார்க்கிறது இதைப்பற்றி பேச மறுப்பது ஏன் ?.

திமுக ஆட்சிகாலத்தில் திமுக அமைச்சர்கள் அரசு ஊழியர்களை மிரட்டினார்கள், அடித்தார்கள் என்றவுடன் கருணாநிதி கம்முனு இருக்கிறார் என குதியோ குதியென குதித்தவர்கள். அதிமுக ஆட்சியாக இருந்திருந்தால் அம்மா அம்மிக்கல் மாதிரி இருக்க மாட்டார். அதிரடி காட்டுவார் என்றார்கள். தற்போது அதிமுக ஆட்சி தான் நடக்கிறது. உள்ளாட்சி தேர்தல் விதி அமுலில் இருக்கும் போதே, அதிமுக அமைச்சர்கள், அவரது அடிப்பொடிகள் அதிகாரிகளை பத்திரிக்கையாளர்கள், மற்ற அரசியல் கட்சியினர் முன்னிலையில் பகிரங்கமாக மிரட்டுகிறார்கள். திமுகவை பாய்ந்து பிராண்டிய பத்திரிக்கைகள் இந்த விவகாரத்தில் ஏன் வாய் மூடிக்கொண்டன. திமுகவை குற்றம் சொல்கிறவர்கள் இதைப்பற்றி பேச மறுப்பது ஏன் ?.

திமுக ஆட்சியில் சட்டமன்றத்தில் வாழ்த்து கோஷங்கள் கேட்டன மறுப்பதற்க்கில்லை. அதேபோல் எதிர்கட்சியான அதிமுகவுக்கு உரிய பிரதிநிதித்துவம் தந்து அவர்கள் கருத்தை பதிவு செய்ய விதிப்படி நேரம் ஒதுக்கப்பட்டது. பேசினார்கள், பதிவுகள் சட்டமன்ற கோப்புகளில் உள்ளது. ஜெ முதல்வாரன பின் சட்டமன்றம் கூடடியது, திமுக உறுப்பினர்கள் தங்களுக்கு ஒரேயிடத்தில் இருக்கை வேண்டும் என கேட்டு கேட்டு சலித்துப்போனார்கள், பேச நேரம் வேண்டும், குற்றச்சாட்டுகளுக்கு பதில் கூற நேரம் கேட்டார்கள் ஆனால் எதற்க்குமே சபாநாயகர் அனுமதி தரவில்லையென திமுக வெளிநடப்பே செய்துக்கொண்டுயிருந்தன. இதை மூன்றாவது முறையாக முதல்வாரன ஜெ வெகுவாக ரசிக்கிறார். தான் மட்டுமே பேச வேண்டும், எதிர்ப்பே வரக்கூடாது என நினைக்கிறார். தான் பேசுவது எல்லாம் சரி என்கிறார். நாங்கள் மக்கள் மனதை பிரிதிபலிக்கிறோம் என திமுகவை விமர்சிப்பவர்கள் இதை ஏற்றுக்கொள்கிறார்களா?.

ஈழ விவகாரத்தில் கருணாநிதி நாடகம் நடத்துகிறார். ஈழ மக்களை கொன்ற கொலைக்காரர் என விமர்சிக்கப்பட்டது. ஈழ போரில் திமுகவுக்கும் பங்குண்டு மறுப்பதற்க்கில்லை. அதேபோல் கச்சத்தீவில் மீன் பிடிக்க போகிறவர்கள் சுட்டுக்கொல்லப்படுகிறார்கள் இதற்க்கு கருணாநிதி கடிதமே எழுதுகிறார். இதுவே ‘அம்மா’ ஆட்சியில் இருந்திருந்தால் ஈழம் மலர்ந்துயிருக்கும் என பேசிய சீமான் உட்பட தமிழ் உணர்வாளர்கள், நடுநிலைமையாளர்கள் இப்போது வாய் மூடி மவுனியாகி கிடப்பது ஏன்?. இப்போது மீனவர்கள் சுடப்படவேயில்லையா, ஈழத்தில் தற்போது பாலும், தேனும் ஓடுகிறதா? ஏன கேட்டால் இப்போதும் திமுக மீதே குற்றச்சாட்டு. ஆட்சியில இருந்தாலும் திமுக மீதே பழி, ஆட்சியில் இல்லாத போதும் திமுக மீதே பழி என்றால். அப்பறம் எதுக்கு அம்மா முதல்வராக வேண்டும் என கேட்டீர்கள். அவர் தான் பாயும் புலியாச்சே. பாய வேண்டியது தானே இலங்கை மீது?.

மெகா மகா வரலாற்று ஊழல் 2ஜி என பேசியவர்களே திமுக ஊழல் கட்சி தான். அதிமுக, தேமுதிக, பாமக, காங்கிரஸ், பி.ஜே.பியில் இருப்பவர்கள் எல்லாம் நேர்மையின் உருவங்களா என்ன?. திமுக ஊழல் செய்தால் வீட்டுக்காக, மற்றவர்கள் செய்தால் நாட்டுக்காகவா செய்கிறார்கள். மக்கள் பணத்தை கொள்ளையடிக்க தான் தற்போது கட்சியே நடத்துகிறார்கள் அப்படியிருக்க ஊழல் நடந்துவிட்டது என கத்துவது வேடிக்கையானது. 10 ஆண்டுகளாக கோர்ட்டுக்கே போகமல் 100 முறைக்கு மேல் வாய்தா வாங்கியதை பற்றி பேசாமல் கிடப்பது ஏன்?.

ஊழல் செய்வதும், அதிகாரிகளை ரவுடிகளை வைத்து அடிப்பதும், ஆசிட் வீசுவது என்பதை தமிழக அரசியல்வாதிகளுக்கு கற்று தந்ததே ஜெ தான் என்பதை யாராவது மறுக்க முடியுமா?. தன் மீதான தீர்ப்பை விலை தந்து, கஞ்சா வழக்கை காட்டி மிரட்டி வாங்கலாம் என்ற உயரிய நீதிமன்ற பண்பாட்டை இந்தியாவில் பகிரங்கமாக கொண்டு வந்தது ஜெ தான் என்பதை யாராவது மறுக்க முடியுமா?. தனக்கு மேல் அதிகாரம் மிக்கவர்கள் தனக்கு ‘படியா’விட்டால் நாலாந்தர பெண் சொல்லும் குற்றச்சாட்டை மக்கள் மன்றத்தில் வைக்கலாம் என்பதை கொண்டு வந்தவர் யார்?.

கருணாநிதி அவரது குடும்பத்தார் அதிகாரத்தில் இருந்தபோது செய்த குற்றங்களை விட ஜெ-சசிகலா குடும்பங்கள் செய்த குற்றங்கள் மிக மிக அதிகம். ஆதார பூர்வமாக விளக்க முடியும்.

இது தெரிந்தும் திமுகவை தொடர்ந்து விமர்சிக்கின்றன பத்திரிக்கைகள், நடுநிலை வேடதாரிகள் உட்பட பலர். இது எதனால் ?.

திமுக மக்களுக்காக செய்யும் என எதிர்பார்த்தார்கள் செய்யவில்லை அதனால் எதிர்க்கிறார்கள் இது ஒரு வகை. ஒருவரைப்பற்றி விமர்சிக்கும் போது அதை சார்ந்த சாதகமான கருத்துகள் வந்தால் அதைப்பற்றியே விமர்சிப்பது. தொடர்ந்து அதைப்பற்றியே அதிகம் பேச வைத்து விடுவது மற்றொரு வகை.( இது ஒரு வகை மனோவியாதி) அடுத்து, திமுகவை அழிக்க வேண்டும் என்ற மேல் சாதி பத்திரிக்கைகள், அதன் சார்ப்பானவர்கள், ஆளும் கட்சியை சார்ந்துயிருந்தால் லாபம் பார்க்கலாம் என்ற பத்திரிக்கைகள். இவர்கள் திமுகவை அழிக்க எந்த அஸ்திரத்தையும் எடுக்க தயங்காதவர்கள். அவர்கள் தங்கள் போக்கை மாற்றிக்கொள்ள மாட்டார்கள். இந்த வகையினர் தான் ஆதரிப்பவர்கள் எந்த தவறு செய்தாலும் தவறே செய்யவில்லை என்பது போல் நடிப்பார்கள் அவர்கள் எதிரில் இருப்பவர்கள் மீது பாய்வார்கள் இந்த வகையினர் தான் தற்போது திமுக மீது பாய்ந்து பிராண்டுகிறார்கள்.

இது திமுகவிற்க்கு வீழ்ச்சியாகாது வளர்ச்சியை தான் தரும்.

கவிதை முத்தங்கள்……..

ஆசை மனைவியே…

வார்த்தை மோதல் நம்மை வௌ;வேறாக்கின….

நமது இதழ்கள் மோதல் நம்மை ஒன்றாக்கின.

இனி அடிக்கடி மோதுவோம் நமது இதழ்களால் . . .


காதலியே !

இனி அடிக்கடி நாம் சண்டையிடுவோம்…….

வார்த்தைகளாலல்ல நமது இதழ்களால்.




வார்த்தை ஜாலம் புரியும் உன் செவ்விதழ்களை விட…….

வர்ணம் பூசிய உன் இதழ்களை தான் அதிகம் நேசிக்கிறேன்…..



காயம்படாமல் சண்டையிடுவது எப்படி என்பதை என் இதழ்களுக்கு

கற்றுதரச்சொல்லி கட்டளையிடு உன் இதழ்களுக்கு……….





அவளின் இதழ்கள் எத்தனைத்தான் கெஞ்சினாலும்

என் இதழ்கள் சண்டையிடவே துடிக்கின்றன.



சண்டை - சமாதானம் - சாந்தம்……….

இதற்கான அர்த்தம் உன் இதழ்களோடு மோதும் போது தான்

என் இதழ்கள் அறிந்து கொண்டன.



பட்டாசாய் வெடிக்கும் உன் வார்த்தைகளை விட….

மத்தாப்பாய் ஜொலிக்கம் உன் விழிகளை விட…..

புஸ்வனமாய் பிரகாசிக்கும் உன் முகத்தை விட

சுங்கு சக்கரமாய் சுழலும் உன் இதழ்கள் தான் …….

ஏன்னை வசியம் செய்கின்றன.



உன் இதழ்கள் என்ன மதுக்கிண்ணாமா?

பார்க்கும் போதே போதையேறுகின்றன.



அறிந்துக்கொள்ளடா அம்மாஞ்சியே……..

நான் உனக்கு கற்று தந்தது சண்டையை மட்டும் தான்

நீ என்னுடன் சண்டையிட வா…….

அப்போது தான் உனக்கு சமாதானத்தை கற்று தர முடியும்.

புதன், அக்டோபர் 12, 2011

ஷேர் மார்க்கெட்டில் தயாநிதி செய்த தில்லாலங்கடி.



கடந்த 10ந்தேதி தென்னிந்தியாவின் பிரபலமான மீடியா மன்னரும், பெரும் தொழிலதிபருமான கலாநிதி, முன்னால் மத்திய அமைச்சர் தயாநிதி ஆகியோரின் வீடுகள், அலுவலகங்களில் 8மணிக்கு மத்திய புலனாய்வு அமைப்பு சோதனைக்கு புகுந்தது. சகோதரர்கள் மீது மோசடி வழக்கு பதிவு செய்தே இந்த விசாரணையை நடத்தியது.
 
மாறன் வீடுகளில் சோதனை தொடங்கிய நேரத்தில், மும்பையில் பங்கு வர்த்தம் தொடங்கியது. பங்கு வர்த்தகத்தில் பட்டியலிடப்பட்டுள்ள சன் நிறுவனம் மற்றும் ஸ்பைஸ் ஜெட் ஏர்வேஸ்சின் பங்குகள்க்கு விலை சோதனை தொடங்கியது. அன்றைய சன் நிறுவனத்தின் ஒரு பங்கு விலை 262 ரூபாயாக இருந்தது. படிப்படியாக மிக வேகமாக 244 ரூபாய்க்கு வந்தது. அதாவது 18 ரூபாய் குறைந்திருந்தது. பங்கு வர்த்தகம் மாலை 3:20க்கு முடியும் போது சன் நிறுவனத்தின் ஒரு பங்கின் விலை 264.50 ரூபாயாக இருந்தது.
 
எப்படி இது சாத்தியமானது ?.
 
சன் நிறுவனம்மல்ல எந்த நிறுவனத்தில் மத்திய புலனாய்வு அமைப்பு சோதனை நடத்த புகுந்தாலும் அந்த நிறுவனத்தின் பங்குகளை வாங்கி வைத்துள்ள பங்குதாரர்கள் அச்சம் ஏற்பட்டு தங்களிடம்முள்ள பங்குகளை அவசர அவசரமாக விற்க்கதொடங்குவார்கள். இதனால் விலை குறைவு ஏற்படும். மீண்டும் அந்த நிறுவனத்தின் பங்கு விலை ஏற சில தினங்கள் பிடிக்கும் இதுதான் நடைமுறை. ஆனால் சன் நிறுவனத்தில் ரெய்டு நடந்துக்கொண்டுயிருக்கும் போதே எப்படி கடும் சரிவை சந்தித்த பங்குகளின் விலை லாபத்தில் போய் நின்றது என்பது பலருக்கும் ஆச்சர்யம்.
 
அது தான் மாறன் சகோதரர்களின் பிஸ்னஸ் அ தில்லாலங்கடி மூளை.

 
சி.பி.ஐ ரெய்டுக்கு வரப்போகிறார்கள் என்பது டெல்லியில் விசாரணையை மாறன் சகோதரர்கள் எதிர்க்கொண்டபோதே அறிந்துக்கொண்டார்கள். விசாரணை என உள்ளே நுழையும் போது மீடியாக்கள் வாயிலாக உலகம் முழுவதும் செய்தி பரவும். அப்போது தங்களது நிறுவனங்களின் பங்குகளின் விலை வீழ்ச்சி தொடங்கும் என்பதை யூகித்தனர். இதை முறியடிப்பது எப்படி என்பதை ஆராய தொடங்கியது இந்த பிஸ்னஸ் பெருச்சாளிகளின் மூளை. சக பெரு முதலாளிகளிடம் இதுப்பற்றி ஆலோசனை நடத்தினர்.
 
முடிவில். ரெய்டு தகவல் மீடியாக்கள் வெளியிடும் போது முதலில் அமைதி காப்பாது. பின் படிப்படியாக தேசிய மீடியாக்களான ஆங்கில சேனல்கள், வர்த்தக சேனல்கள், இந்தி சேனல்களில் ரெய்டு பற்றிய செய்திகளை குறைக்க வைத்து பங்கு வர்த்தகத்தில் அதிகம் ஈடுபட்டுள்ள வடஇந்திய மக்களுக்கு நம்பிக்கை தருவது.
 
அடுத்ததாக ஷேர் மார்க்கெட்டில் விளையாடுவது. விளையாட்டை தயாநிதி பார்த்துக்கொள்வது. அதனால் தான் அவர் ரெய்டு நேரத்தில் வீட்டில் இல்லை. இந்த விளையாட்டு மிகவும் ஆபத்தானது. சறுக்கினால் சாம்ராஜ்யம் சரிந்துவிடும். 

சன் நிறுவனம் வெளியிட்டுள்ள பங்குகளில் 70 சதவிதம் பங்கு அதன் உரிமையாளரான கலாநிதி அவரது மனைவி காவேரி ஆகியோரின் பெயர்களிலேயே உள்ளன. மற்ற 30 சதவித பங்குகள் பொதுமக்களிடம் உள்ளன. இந்த 30 சதவித பங்குகளில் தான் நண்பர்கள் மூலம் ஷேர் மார்க்கெட்டில் விளையாடியுள்ளார்கள். 

எப்படி?. 

பொதுமக்கள் ரெய்டு தகவல் கேள்விப்பட்டு தங்களிடம் உள்ள பங்குகளை விலையை குறைத்து விற்க அறிவிப்பு வெளியிட தொடங்கினர். 11 மணிக்கு சன் நிறுவனத்தின் ஷேர்கள் மதிப்பு கரடி வகையில் அதாவது இறங்கு முகத்தில் இருந்தது. அதனை மாறன்களால் ஏற்பாடு செய்யப்பட்டவர்கள் அந்த பங்குகளை வாங்க முடிவு செய்தனர். விற்பனையாளர்கள் குறிப்பிட்ட விலைக்கே உடனுக்குடன் வாங்க தொடங்கினர். பின் மெல்ல ஷேர் விலையை கொஞ்சம் கொஞ்சமாக ஏற்றி விற்க தொடங்க சன் நிறுவனத்தின் விலை குதிரை மதிப்பாக அதாவது நட்டத்திலிருந்து லாபத்தை நோக்கி போக தொடங்கியது.
 
அதேநேரம், வட இந்திய, ஆங்கில மீடியாக்களில் ரெய்டு பற்றிய தகவல் மெல்ல குறைய ஆரம்பித்ததும் வர்த்தகத்தில் இருந்தவர்களுக்கு ஒரு நம்பிக்கை வந்தது. அவர்களும் ஷேர்களை வாங்க தொடங்கினர். எதிர்பார்த்ததை விட வேகமாகவே சரிவில் இருந்து மீண்டு குதிரை பாய்ச்சல் காட்டியதில் சந்தை மூடும்போது மார்க்கெட் திறந்து 260 ரூபாய் என இருந்த சன் ஷேர் மதிப்பு மூடும் போது 262 ரூபாயாக லாபத்தில் வந்து நின்றது.

இந்த தில்லாலங்கடி வேலையால் 20 ரூபாய் சரிவை ஈடுகட்டி 2 ரூபாய் உயர்த்தியுள்ளது. அன்று மட்டும் 22 ரூபாய் ஒரு பங்கின் விலையை  உயர்ந்தியுள்ளனர். இதே டெக்னிக்கை கலாநிதி தலைவராக உள்ள ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் பங்கு வர்த்தகத்திலும் நடத்தியுள்ளனர். அன்றைய தினத்தில் மட்டும் சர்ச்சையில் சிக்காத பல முன்னணி நிறுவனங்களின் பங்குகள் சரிந்தே இருந்துள்ளன.
 
இந்த பங்கு வர்த்தக தில்லாலங்கடியை செபி எப்படி கண்டுக்கொள்ளாமல் விட்டது என்பது மிகப்பெரிய ஆச்சர்யம். தங்களது சாம்ராஜ்யம் சரியாமல் சேதாரத்தோடு நிறுத்திக்கொண்டுள்ளனர் மாறன் பிரதர்ஸ்.

திங்கள், அக்டோபர் 10, 2011

சி.பி.ஐ ரெய்டு. உயர்ந்தது சன் நிறுவன பங்குகள் விலை.


 
கலைஞர் மாறன்களை நம்பினார் கெட்டுப்போனார். மாறன்கள் காங்கிரஸ்காரர்களை நம்பினார்கள் கெட்டுப்போனார்கள். கலாநிதி, தயாநிதி இருவரும் நம்பிக்கை துரோகிகள். காங்கிரஸ்சுடன் கூட்டு சேர்ந்து திமுக என்ற ஆலமரத்தை அழிக்க திட்டமிட்டவர்கள். திமுக என்ற ஆலமரத்தின் பாதுகாப்பில் தான் தாங்கள் உள்ளோம் என்பதை மறந்தே அதன் வேர்களுக்கு வெண்ணீர் ஊற்றினார்கள். யார் வெண்ணீர் ஊற்றினார்களோ இன்று அவர்கள் மீதே வெண்ணீர் துளியாக விழுந்து அதை அனுபவிக்கிறார்கள்.
 
2ஜி விவகாரத்தை வைத்து திமுகவை அழிக்க காங்கிரஸ், பெரும் முதலாளிகள், திராவிடத்தின் எதிரிகள் கூட்டு சேர்ந்தார்கள். அதில் திமுகவின் எம்.பியாக கலைஞரின் நம்பிக்கை நட்சத்திரமாக இருந்த மாறன் சகோதரர்கள் அந்த கூட்டணியில் தாங்களே போய் இணைந்தார்கள். திமுக என்ற ஆலமரத்திற்க்கு வெண்ணீர் ஊற்ற முயன்றபோது வாலி மூலம் தண்ணீர் மெண்டு தரும் முக்கிய பணியை செய்ததே இந்த நம்பிக்கை துரோகிகள் தான்.
 
சட்டமன்ற தேர்தலின் போது, காங்கிரஸ்சை கழட்டி விட்டபோது, கலைஞரின் முடிவை மாற்றியவர்கள் இருவர். ஒருவர் தயாநிதி மற்றொருவர் அழகிரி. திமுகவை மற்றொரு முறை காங்கிரஸ்சிடம் அடகு வைத்தார்கள் இவர்கள். அதற்க்கு காரணம் இருவரின் சுயநலம். அழகிரிக்கு மத்திய அமைச்சர் என்ற பதவி ஆசை, தயாநிதிக்கு அப்போது 2ஜியில் அடிப்பட்ட தனது விவகாரத்தை அடக்கி விடலாம், காங்கிரஸ்க்கு தனது விசுவாசத்தை காட்டலாம், தனது தொழிலை விரிப்படுத்திக்கொள்ளலாம், தன் மீதான ஊழல் விவகாரங்களை ஊத்தி மூடிவிடலாம் என எண்ணி ஆதரவு வாபஸ்சை வாபஸ் வாங்க வைத்தார்கள்.
 
தேர்தல் தோல்விக்கு பின் ஸ்பெக்ட்ராம் விவகாரத்தில் திருப்பம் ஏற்பட ஆரம்பித்தது. 2ஜி விவகாரத்தில் காங்கிரஸ், தயாநிதி, அம்பானி பிரதர்ஸ்சின் பங்கை திமுக எம்.பி ராசா, அவிழ்க்க, அவிழ்க்க விவாகரம் சூடுபிடிக்க ஆரம்பித்தது. பாட்னர் தயாநிதிமாறனை காப்பாற்ற காங்கிரஸ், பெருமுதலாளிகள் லாபி எவ்வளவோ முயன்றது. இருந்தும் முதலில் மாறனின் அமைச்சர் பதவி பறிபோனது. பாட்டியாலயா நீதிமன்றத்தில் பிரதமர் மன்மோகன்சிங், உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோருக்கு தெரியாமல் எந்த விவகாரமும் நடக்கவில்லை என தேரை இழுத்து தெருவில் விட்டார் ராசா. அரண்டு போனது காங்கிரஸ் தலைமையகம். அவர்களின் வாயை அடைக்க ராசா, கனிமொழி மீது மேலும் மேலும் வழக்குகளை போட்டது சி.பி.ஐ.
 
இப்போது, தான் மட்டும் தப்பினால் போதும்மென பாட்னர் தயாநிதியை நட்டாற்றில் விட தயாராகிவிட்டது காங்கிரஸ். ஆதன் வெளிப்பாடு முதல்கட்டமாக விசாரணை, ரெய்டுக்கு ஒ.கே சொன்னது காங்கிரஸ் அரசு. அதன்படி தயாநிதி, கலாநிதியின் வீடுகள், அலுவலகங்கள் உள்ள சென்னை, டெல்லி, ஐதராபாத் நகரங்களில் இன்று 10.10.11ந்தேதி காலை ஒரே சமயத்தில் ரெய்டு செய்தது சி.பி.ஐ.

 
ரெய்டில் என்ன கிடைத்தாலும் உண்மையை வெளியே சொல்லாது சி.பி.ஐ. ஆனால் காலை 7 மணியில் இருந்து நடக்கும் ரெய்டு பற்றிய தகவல்கள் வெளியே பரவி பிரேக்கிங் நியூஸ்சாக வெளியே பரவியபோது தமிழ் சேனல்கள் தவிர்த்து தேசிய சேனல்கள் முதலில் வாயை மூடிக்கொண்டன. பின் கொஞ்சம் போட்டது. அதற்க்கே சன் நிறுவனத்தின் ஷேர் மதிப்பு 20 ரூபாய் மார்க்கெட் தொடங்கிய 20 நிமிடங்களில் குறைந்தது. அடிவாங்கிக்கொண்டே போன ஷேர் மதிப்பை தடுத்து நிறுத்த ஷேர் மார்க்கெட்டின் தகிடுதத்தத்தின் படி வேலைகள் நடத்தினர் மாறனின் பிள்ளைகள். இதனால் வேகவேகமாக வீழ்ச்சியை தடுத்து நிறுத்தினார்கள் இதனால் சன் நிறுவனத்தின் ஷேர் மதிப்பு மார்க்கெட் மூடியபோது, 2 ரூபாய் உயர்ந்துயிருந்தது.

இராசா, கனிமொழியை உள்ளே அனுப்ப காரணம்மான தயாநிதி உள்ளே சென்று தீபாவளி கொண்டாட வேண்டும்…… அவர் மட்டுமல்ல தப்பிக்க நினைக்கும் காங்கிரஸ்சின் தலைகளும் சிக்கவேண்டும் அப்போது தான் நீதி கொஞ்சமாவுது கிடைக்கும். ஆனால் அதற்கான வாய்ப்புகள் மிக மிக குறைவு.

செவ்வாய், அக்டோபர் 04, 2011

நர மனிதன் நரேந்திரமோடி.



இந்தியாவின் அடுத்த பாராளமன்ற தேர்தல் பி.ஜே.பி நரேந்திரமோடி தலைமையில் சந்திக்க அதாவது பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்த முயல்கிறது. காங்கிரஸ் கட்சி ‘இளவரசர்’ இராகுல்காந்தியை முன்னிறுத்தி தேர்தலை சந்திக்க முயல்கிறது என்பதே கடந்த ஒரு வருடமாக டெல்லி வாலாக்காள் மத்தியில் பேசிக்கொள்கிறார்கள். தற்போது அந்த கட்சிகளின் செயல்பாடுகளால் அப்பேச்சு வேகம் பெற்றுள்ளது.

1996ல் அரசியலில் காலாடி எடுத்து வைத்த போதே…….. இன்னும் கொஞ்சம் அழுத்தி தெளிவாக சொல்ல வேண்டும்மென்றால் அதாவது இராகுல் பிறந்ததுமே அவர் பிரதமர் வேட்பாளராக காங்கிரஸ் முன்னிறுத்தும் என எதிர்பார்த்தது தான். ஒரே குடும்பம் ஒரே பதவி அது பிரதமர் பதவி என வாழும் குடும்பம்மது. அதை எதிர்க்க தற்போதைய நிலையில் காங்கிரஸ்சில் முதுகெலும்பு உள்ளவர்கள் யாரும் கிடையாது.

காங்கிரஸ் மட்டுமல்ல தேசம் முழுக்க பரவி கிடக்கும் பல மாநில கட்சிகளும், ஆளும் கட்சிகளும் தன் வாரிசுகளுக்கு பட்டம் கட்ட துடிக்கிறார்கள். பட்டம் கட்டி வருகிறார்கள். பி.ஜே.பியில் உழைப்பவர்களுக்கு அதாவது இந்து ‘தீவிரவாதிகளுக்கு’ பதவி கிடைத்து வருகிறது. வாரிசு அரசியல் அங்கு இப்போது நுழைய தொடங்கியுள்ளது தவறில்லை. அவர்களும் சராசரி மனிதர்கள் தானே?. ஆனால் நரேந்திரமோடியை பிரதமராக முன்னிறுத்துவதை தான் சகிக்க முடியவில்லை.


நரேந்திரமோடி……. பன்முகம் கொண்ட இந்தியாவை இந்துத்துவா நாடாக மாற்ற வந்த இந்துத்துவா தீவிரவாதி. முதல் முறையாக குஜராத் முதலமைச்சராக இருந்தபோது பதவியை கையில் வைத்துக்கொண்டு இஸ்லாமிய மக்களுக்கு எதிராக கலவரத்தை தூண்டிவிட்டு அம்மக்களை ஆயிரக்கணக்கில் கொன்று குவித்து நர மாமிசத்தை உண்ட இந்த மிருகம் தான் இந்தியாவின் பிரதமர் வேட்பாளராம். இரண்டாவது முறை முதலமைச்சரான போது காவல்துறையை கையில் வைத்துக்கொண்டு வேண்டாதவர்களை சுட்டுக்கொன்ற இந்தபேய்யிடம் நாட்டை ஒப்படைக்க இந்து தீவிரவாதிகள் முயன்று வருகின்றனர்.

குஜராத் மாநிலத்தை போய் பாருங்கள் செல்வம் கொழிக்கிறது, சாலையில் தேனும் பாலும் ஒடுகிறது, குஜராத்தில் இஸ்லாமியர்கள் சந்தோஷமாக சுதந்திரத்துடன் வாழ்கிறார்கள் என்ற பிரச்சாரத்தை இந்தியா முழுவதும் கட்டவிழ்த்துள்ளது பிராமண சக்திகள். ஆனால் உண்மையில் குஜராத்தின் நிலை தலைகீழ். உலக நாடுகளின் முதலாளியாக தன்னை அடையாளம் காட்டும் அமெரிக்கா எப்படி தன் நாட்டில் வறுமையேயில்லை என 50 ஆண்டுகளாக உலக ஏமாற்றி வருவதை போலத்தான் இந்த பிராமண சக்திகள் குஜராத்தை காட்டுகின்றன.

மதம் என்பது வேறு மனிதன் என்பவன் வேறு என்பதை புரிந்துக்கொள்ளதாவன் இந்த நாட்டின் பிரதமரானால் இந்திய தேசத்தின் வரலாற்று பக்கங்களில் நீண்ட பக்கத்திற்க்கு ஒரு ரத்த சரித்திரம் எழுத வேண்டி வரும்.

பல மொழி பேசும் இந்த தேசத்தில் பல கோடி மக்கள் வாழ்ந்தாலும், பலப்பிரச்சனைகள் வந்தாலும் இன்றும் நெல்லிக்காய் மூட்டையாய் இந்தியாவை சிதறடிக்காமல் வைத்திருப்பது மதங்களை கடந்து இங்கு அன்பு, பரிவு, பாசம் கொண்ட இதயங்கள் வாழ்வதால் தான். அதனால் பிராமண சக்திகள், இந்து தீவிரவாதிகள் உருவாக்கும் மாயையை நம்பிவிடாதீர்கள்.

அதற்காக காங்கிரஸ்க்கும் ஆதரவு வழங்கிவிடாதீர்கள். அவர்கள் இவர்களை விட மோசமானவர்கள்.

இஸ்லாமிய இம்சைகள்.



உலகில் இன்னும் ஒரு மதம் தனது வம்சத்தை விருச்சிக்கும் மாதர் குலத்துக்கு மாணிக்கங்களை அடிமையிலும் அடிமையாக வைத்திருக்கிறது என்றால் அது இஸ்லாமிய மதம் தான். பிறந்தது முதல் சுடுகாட்டுக்கு போகும் வரை அவர்கள் வாழ்வு அடிமையாகவே இருட்டிலேயே கிடக்கிறது. வெளிச்ச ரேகைகள் அவர்கள் வாழ்வில் தெரிவதேயில்லை. வெளிச்சத்தை தேடி அவர்களை சொல்லவும் விடுவதில்லை அந்த ஆணாதிக்க மதம்.

கறுப்பு அங்கி என்ற ஒன்றை உடல் முழுக்க போட்டு மறைத்து இன்றளவும் இந்தியாவில் பெண்களை, பெண் குழந்தைகளை சுத்தவிடுகிறது என்றால் அது இஸ்லாமிய சமுகம் மட்டும் தான். கேட்டால், இது எங்களது மதகோட்பாடு என்கிறார்கள். எந்தயிடத்தில் இஸ்லாமிய கேட்பாடு பெண்களை அடிமையாகவே வைத்திருக்க வேண்டும் எனக்கூறியது ?. மசூதிக்கு தொழுகை செய்ய போக கூடாது என்றது. தங்களது ஆணாதிக்கத்தை நிலை நிறுத்திக்கொள்ள கொள்கை என்ற முகமுடியை ஆண் சமுகம் மாட்டிக்கொண்டது. காலப்போக்கில் அது இஸ்லாத்தை தவிர்த்து மற்ற மதத்தில் செல்லா காசாகி வந்தன, வருகின்றன. 

இதை கண்டு, உணர்ந்தே வந்த இஸ்லாமிய சமூக ஆணாதிக்கவாதிகள் படிப்பதால் தான் இந்த நிலையென பெண் பிள்ளைகளை படிக்க அனுப்புவதேயில்லை. ஆண்களும் அதிகம் படிப்பதில்லை என்கின்றனர் இஸ்லாமிய நண்பர்கள். படித்தால் கேள்வி கேட்பார்கள், மத கோட்பாட்டை மீறுவார்கள் என யூகித்து கொள்கை என்ற முகமுடியை இரும்பால் போட்டு மூடி அவர்களை அடிமையாகவே வைத்திருக்கிறார்கள் இஸ்லாமிய பிற்போக்குவாதிகள்.

உலகின் பல நாடுகள் குறிப்பாக மேற்குலக நாடுகள் இந்த அடிமைத்தனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் அங்கி அணிவதை தடை செய்துள்ளன. ஆனால் அப்படி வாதத்தை உருவாக்கக்கூட இந்தியாவில் ஒருவரும் இல்லை என்பதே வேதனைக்குறியது.

அரசியல் கட்சிகளும், சமுக இயக்கங்களும் இந்த விவகாரத்தில் இரட்டை வேடம் தரித்துள்ளன. பெண் விடுதலைக்காக பேசுபவர்கள் இஸ்லாமிய சகோதரிகளின் விடியலுக்காக பேச மறுக்கின்றனர். கேட்டால், அவர்கள் சிறுபான்மையின மக்கள் என்கிறார்கள். சிறுபான்மையின மக்களுக்கு தேவையான அனைத்து பாதுகாப்புகளும் இந்தியாவில் வழங்கப்பட்டுள்ளன. இந்தியாவின் மாநில கட்சிகளாகட்டும், தேசிய கட்சிகளாகட்டும் சிறுபான்மையினத்தை சீண்டுவதுயில்லை. காரணம் வாக்குகள் சிதறிவிடும் என்ற பயம்.

அப்படிப்பட்டவர்கள் இருட்டில் அடைக்கப்பட்டுள்ள இஸ்லாமிய சகோதரிகளுக்காக குரல் கொடுக்கமாட்டார்கள் என்பது நிச்சயம். மீறி தந்தால் இஸ்லாத்தை ஆட்டி வைக்கும் பிற்போக்குவாதிகளான ஆண் சமுகத்தின் எதிர்ப்பை, கோபத்தை சம்பாதிக்க நேரிடுமே என்பதால் பயந்து போய்வுள்ளனர்.

இதனால் மதம் என்ற மந்திரச்சாவியை காட்டி ஆணாதிக்க மத்தின் ஆண்கள், பலதார மணம், மனைவியை கொடுமை செய்வது, சொத்துரிமையில்லை என்பது என அடாவடி செய்கின்றனர். இது மாற வேண்டும் ஆணாதிக்க சமுகத்தின் ஆதிக்கம் ஒழிய வேண்டும். வேண்டும் அம்மத்திற்க்கு ஒரு மறுமலர்ச்சி. அப்பெண்மணிகளுக்கு ஒரு ஒளி கிடைக்கும் ?.