42 ஆண்டுகள் லிபியாவின் தலைவராக விளங்கியவர் மும்மர் முஹம்மது அபு மின்யர்ல் கடாபி. சுருக்கமாக கடாபி. 1942 ஜீன் மாதம் அபுதாபியில் பிறந்தவர். இராயல் லிபியன் மிலிட்டரி அகடாமியில் சேர்ந்தார். கேணல் பதவி என உயர்ந்தார். பின் நாட்டின் மோசமான நிலையை கண்டு புரட்சி படையில் சேர்ந்தார். லிபியா புரட்சி படையின் பேரவை பொது செயலாளராக இருந்தார். 1969ல் லிபியாவில் இராணுவ புரட்சியை ஏற்படுத்தி அதன் மூலம் ஜனாதிபதி பதவிக்கு வந்தவர் கடாபி.
எண்ணெய் வளம்மிக்க நாடுகளில் ஒன்று லிபியா. இதன் எண்ணெய் வளம் மூலம் வந்த பெரும்பங்கு வருமானத்தை கடாபி அவரது உறவு வட்டாரத்தை பெரும் செல்வந்தர்களாக்கியது. அதோடு நாட்டை கடாபி பொருளாதாரத்தில் முன்னிலைக்கு கொண்டு சென்றார். இலவச கல்வி, இலவச மருத்துவம், இலவசமாக வீட்டு வசதி போன்றவற்றை மக்களுக்கு தந்தார். அதோடு தொழிற்சாலைகளை உருவாக்கி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை அதிகப்படுத்தி தந்தார். தண்ணீர் வசதி அதிகளவில் ஏற்படுத்தி தந்தார். இவையெல்லாம் வெளிநாட்டு கடன்யில்லாமல் செய்து தந்தார். அதோடு கல்வி வளர்ச்சி 10 சதவித்திலிருந்து 90 சதவிதமாக உயர்த்தினார், அதோடு லிபியாவில் மனிதனின் சாராசரி ஆயுள் 55 வயது என்பதிலிருந்து 70வயதாக்கினார்.
அதோடு ஆப்ரிக்க ஒன்றியத்துக்குள் ஏற்படும் பல போர்களுக்கு மேற்கத்திய நாடுகளுக்கு எதிராக எதிர்த்து நிற்க்கும் நாடுகளுக்கு ஆயுதங்களை ஓடிச்சென்று உதவினார். மற்ற நாடுகளில் போராடும் புரட்சி படை, இஸ்லாமிய தீவிரவாத அமைப்புகளுக்கு பண உதவி, ஆயுத உதவியும் செய்தார். இதனால் மேற்கத்திய நாடுகளின் கோபத்துக்கு ஆளானார். லிபியா கடன் வாங்கினால் அதை கொண்டு அடக்கலாம் என நினைத்த மேற்கத்திய நாடுகளுக்கு லிபியாவின் வளர்ச்சி பிடிக்கவில்லை.
இதனை உணர்ந்து ஆயுதங்கள் சேகரிப்பும், இரசாயன ஆயுதம்ங்களை தயாரித்து வைப்பதிலும் அதிகம் ஆர்வம் காட்டினார். இதனால் அதிர்ச்சியான மேற்கத்திய நாடுகள் லிபியாவை தனிமைப்படுத்தி தொடங்கின. 1980ல் லிபியாவை ஐ.நா அமைப்பு மூலம் ஒதுக்கப்பட்ட நாடாக அறிவித்தது. இதனால் பொருளாதாரத்தில் சறுக்கல் தொடங்கியது.
இதனால் கடாபிக்கு எதிர்ப்புகள் உருவாயின மற்றும் உருவாக்கப்பட்டன. இதனால் மாற்று கருத்துக்கள் உடையவர்களை சிறையில் தள்ளினார், தீவிரமாக இருப்பவர்களை கொல்ல உத்தரவிட்டார் கடாபி. வெளிநாடுகளுக்கு தப்பி போனவர்களையும் கொள்ள உத்தரவிட்டார். அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் அடைக்கலம் கேட்ட லிபியர்களை கொண்டு ஒரு படை உருவாக்கினார்கள்.
இதனால் ஆபத்தை உணர்ந்து மேற்க்கத்திய நாடுகளுடன் சமாதானம் பேசினார் கடாபி. உங்களிடம் உள்ள ஆயுதங்களை ஒப்படையுங்கள் என்றது மேற்கத்தய நாடுகள். அவர்களின் வாக்குறுதிகளை நம்பி போர் ஆயுதங்கள், இராசாய ஆயுதங்களை ஒப்படைத்தார். ஆனாலும் மேற்கத்திய நாடுகள் லிபியாவுக்குள் புரட்சி படைகளை உருவாக்கி புரட்சி படைகளுக்கு தேவையான ஆயுதங்களை வாரி வாரி வழங்கியது.
2011 பிப்ரவரி முதல் லிபியாவில் புரட்சி படைகளுக்கும் லிபிய அரசின் படைகளுக்கும் மோதல் தொடங்கியது. லிபியாவின் கிழக்கு பகுதிகள் வறுமையில் இருந்தன. அந்த மக்கள் புரட்சி படையோடு கைகோர்த்தனர். ஐ.நா மூலம் வான் பரப்பில் லிபியா அரசின் விமானங்கள் பறக்கதடை, இண்டர்போல் தேடல், பன்னாட்டு நீதிமன்ற விசாரணை, நோட்டோ படைகளின் எதிர்ப்பு போன்றவற்றால் கடாபி திணறினார். அவரது படையிலும் சலசலப்பு எழுந்தது. கடாபிக்கு எதிரான தேசிய இடைக்கால பேரவை என்ற புரட்சிகர அமைப்பினை ஐ.நாவில் பிரதிநியாக உட்கார வைத்தது மேற்கத்திய நாடுகள்.
40 ஆண்டுகளுக்கு முன் புரட்சிவாதியாக நாட்டுக்காக ஓடினார். தற்போது தன் உயிரை காப்பாற்றிக்கொள்ள அதிபர் கடாபி ஓடினார். அக்டோபர் 20ந்தேதி கழிவு நீர் குழாய்யில் பதுங்கியிருந்த கடாபியை பிடித்தது புரட்சி படை. மார்பில், முகத்தில், உடலில் காயத்தோடு இருந்தவரை புரட்சி படையினர் அடித்தே கொன்றார்கள். அந்த இறுதி நிமிடம் அவருக்கு மட்டுமல்ல அந்த காட்சியை பார்த்தவர்கள் அனைவருக்கும் கொடுமையாக இருந்தது.
எத்தனை தவறுகள் செய்துயிருப்பின் அவர் ஒரு நாட்டின் அதிபராக 4 சகாப்தங்களாக இருந்தவர். நாட்டின் வளர்ச்சிக்காக அதிகம் பாடுபட்டவர், மேற்கத்திய நாடுகளின் சூழ்ச்சியால் நாட்டை விட்டு ஓடும் நிலை. அவருக்கான சிறிய மரியாதை கூட செய்ய அந்த நாடுகள் தவறிவிட்டன. ஏன் லிபியாவின் புதிய தலைமையும் செய்ய தவறி அவரின் கொலையை போரில் இறந்துவிட்டார் என்றது. வரலாற்றில் மறுக்க முடியாத, மன்னிக்க முடியாத நிகழ்வது. மனித உரிமை நாடுகள் இதுவரை வாய்திறக்கவில்லை.
மனித உயிர்களின் ரத்தத்தை குடித்த இலங்கை அதிபர் இராஜபக்சே இதை கண்டித்து அறிவித்துள்ளார்.
என்ன கொடுமை சார் இது. ………
மனித உயிர்களின் ரத்தத்தை குடித்த இலங்கை அதிபர் இராஜபக்சே இதை கண்டித்து அறிவித்துள்ளார். //
பதிலளிநீக்குநல்ல பொருத்தம்...!!!!