புதன், நவம்பர் 30, 2011

செய்தியாளரை மிரட்டி ரவுடிஸம் செய்த பெண் மேயர்.அட அந்தம்மாவுக்கு தப்பாமல் இருக்கிறார் இந்த மகளிரணி பிரமுகர். உள்ளாட்சி தேர்தலின் போது மேயர் வேட்பாளர்களை ஜெ அறிவித்த பட்டியலில் ஈரோடு மேயர் வேட்பாளர் மல்லிகா என இருந்ததை கண்டு ரரக்களே அதிர்ச்சியாகினர். காரணம், அவர் 1999ல் விபச்சார வழக்கில் காவல்துறையிடம் சிக்கி வழக்கை எதிர்கொண்டவர் என ஆதாரத்தோடு அவரது கட்சியினரே போஸ்டர் அடித்து ஒட்டினர். இது செய்தியாக அப்போதே சர்ச்சையானது. ஈரோடு மா.செம் அமைச்சராக இருந்த ராஜாவின் அராஜகத்தை விட இது பரவாயில்லை என விபாச்சார வழக்கில் சிக்கிய மல்லிகாவை மேயராக்கினார்கள் ஈரோடுவாசிகள். 

இப்போது அதே ஈரோடுவாசிகள் ராஜா பரவாயில்லை என பேச வைத்துவிடுவார் போல் உள்ளது. ஈரோடு மாநகர மேயர் மல்லிகாபரமசிவம். துணை மேயர் பழனிச்சாமி. இருவரும் அதிமுகவினர். இவர்களுக்குள் மாநகராட்சியில் அடிக்கடி தகராறு ஏற்படுவதை சம்பவத்தோடு காலைக்கதீர் நாளிதழ் தொடர்ந்து செய்தியாக வெளியிட்டு வந்துள்ளது. 

இதனால் கோபமான மேயர் மல்லிகா தன் பரிவாரங்களோடு 30ந்தேதி மதியம் ஈரோட்டில் உள்ள காலைக்கதிர் அலுவலகத்திற்க்கு சென்றவர். அலுவலகத்தில் புகுந்து யார்ரா அவன் என்னைப்பத்தி தொடர்ந்து செய்தி எழுதறது என தகராறு செய்ததோடு, என்னடா ஆபிஸ் நடத்தறிங்க, பெரிய இவனுங்களாடா நீங்க என எகிறியதோடு அங்கிருந்த டெலிபோன், கம்யூட்டரை கீழே தள்ளிவிட்டு இனிமே என்னைபத்தி எழுதன உங்களை ஒழிச்சிடுவன் என மிரட்டிவிட்டு நகர, உடன் வந்திருந்த மகளிரணிகள் அசிங்க அர்ச்சனை வேறு நடத்தியுள்ளனர்.  

இந்த மிரட்டலை உடனே ஈரோடு பத்திரிக்கையாளர்கள் கவனத்துக்கு செல்ல அவர்கள் எஸ்.பி பன்னீர்செல்வத்தை சந்தித்து புகார் வாசித்துள்ளனர். அவர் விசாரிக்கறன் போய்ட்டு வாங்க என்றுள்ளார். ஒரு அதிகாரி வந்து விசாரித்துவிட்டும் சென்றுள்ளார். 


இதற்க்கு மேல் காவல்துறையால் என்ன செய்ய முடியும். கை கட்டி வேடிக்கை பார்க்கலாம் இல்லையேல் மேயர் அல்லது உடன் போன மகளிரணி பிரமுகர்களிடம் செய்தி ஒன்றை தர அலுவலகம் சென்றோம். அங்கே அவர்கள் எங்கள் கையை பிடித்து இழுத்து ‘அதுக்கு’ கூப்பிட்டான் என புகார் வாங்கி காலைக்கதிர் ஊழியர்கள் மீது வழக்கு போடுவார்கள். ஏன் என்றால் மிரட்டியது ஆளும்கட்சி. அதுவும் ஜெவின் மகளிரணி, மேயர். அவர் மீது புகார் தந்தால் நடவடிக்கை எடுக்குமா அடிமை சேவகம் செய்யும் காவல்துறை.

இதே காரியத்தை கலைஞர் ஆட்சி காலத்தில் ஏதோ ஒரு முக்கிய பிரமுகர் செய்திருந்தால், ஜெ குதித்திருப்பார். அவரின் ஆதரவாளர்கள் வானத்துக்கும் பூமிக்கும் நடுநிலை என்ற பிம்பத்தை பூசிக்கிட்டு வாய்கிழிய கத்தியிருப்பார்கள். அறிக்கைகள் பறந்திருக்கும். இது ஜெ ஆட்சி காலம் என்பதால் அடக்கமோ அடக்கம். 

மேயர் மல்லிகாவுக்கு பத்திரிக்கை அலுவலகம் சென்று மிரட்டும் அளவுக்கு தெரியம் வரக்காரணம். அவருக்கு அமைச்சர் இராமலிங்கத்தின் அதீத ஆதரவு இருப்பது மட்டுமல்ல. கடந்த காலத்தில், ஆதாரங்களோடு எழுதியதற்க்கே அதிகார போதையில் பத்திரிக்கை ஆசிரியரை பொடா வில் உள்ளே தள்ளியவர் முதல்வர் நாற்காலியில் வீற்றிருக்கும் ஜெ. பத்திரிக்கை அலுவலககத்துக்குள் புகுந்து ஏவலர்களை விட்டு பத்திரிக்கையாளர்களை தாக்க உத்தரவிட்ட ஜெ வின் மகளிரணி பிரமுகர் எப்படியிருப்பார். அவரைப்போலத்தானே. 

ஒருவரைப்பற்றி தவறாக செய்தி வருகிறது என்றால், தவறான செய்தி என கூறி மன்னிப்பு கேட்க சொல்லியிருக்கலாம் அ மறுப்பு போட சொல்லியிருக்கலாம் அ வழக்கு தொடர்ந்துயிருக்கலாம் அ இந்திய பிரஸ் கவுன்சிலில் முறையிட்டுயிருக்கலாம். இவ்வளவு வழிகள் இருக்க ரவுடிப்போல அலுவலகத்துக்குள் புகுந்து மிரட்டுவது என்பது அதிகார போதை. ஒரு பத்திரிக்கை அலுவலகத்துக்குள் புகுந்து செய்தியாளர்களை மிரட்ட ஆண் அரசியல்வாதிகள் கூட தயங்குவார்கள். ஆனால் அதை இந்த பெண் மேயர் தைரியமாக செய்துள்ளார். இதற்காக வேண்டுமானால் பாராட்டலாம். 

செவ்வாய், நவம்பர் 29, 2011

திருந்தாத ‘காவல்’ நாய்கள்.
தமிழக காவல்துறைக்கு பலப்பல சலுகைகள் ஆட்சியமைத்த 6 மாதத்திலேயே முதல்வர் ஜெயலலிதா வாரி வழங்கியுள்ளார். ஆனால் எவ்வளவு சலுகைகள் கிடைத்தாலும் நாங்கள் மாறமாட்டோம் என்பதை மீண்டும் மீண்டும் நிருபிக்கிறார்கள் காவல்துறையில் உள்ள சில ஓநாய்கள். 

அத்தியூர் விஜயா மானபங்கம், ரீட்டாமேரி கற்பழிப்பு, சிவகாசி ஜெயலட்சுமியிடம் விழுந்த காவல் அதிகாரிகள் என ஒவ்வொரு காலகட்டத்திலும் போலிஸாரின் முகத்திரை கிழிக்கப்படுகிறது. தற்போது, விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூரை அடுத்த மண்டபம் கிராமத்தை சேர்ந்த இருளர் சமூகத்தை சேர்ந்த 4 இளம் பெண்கள் திருக்கோவிலூர் போலிஸார் மீது கற்பழிப்பு புகார் ஒன்றினை மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் தந்து நீதி கேட்டுள்ளார்கள். 

பிரச்சனை பெருசாகி தலைவர்கள் அறிக்கைகள் விட்டதும், புகார் பதிவானது. தாங்கள் கற்பழிக்கப்பட்டது பற்றியும், அது யார் யார் என அப்பெண்கள் நீதிபதியிடம் வாக்குமூலமாக தந்துள்ளார்கள். உடனே காவல்துறை தலைமை, அந்த காவல்நிலைய ஆய்வாளர் உட்பட 5 காவலர்களை இடைக்கால பணி நீக்கம் செய்துள்ளது. 

அடுத்து…………..?

விசாரணை நடக்கும். நியாயமாக நடக்கும்மா என்பது பெரிய கேள்விக்குறி. காரணம், அரசு துறை ஊழியர்களிடத்தில் ஒரு நோய் உள்ளது. அதாவது நீதித்துறை-காவல்துறை-மருத்துவதுறை-வருவாய்துறை இடையே ஒரு இழை போன்ற நட்புயிருக்கும். இவர்களின் நேசம் கரைபுரண்டோடும். 

காவல்துறையை சார்ந்தவர்க்கு ஒரு பிரச்சனை என்றால் வருவாய்துறையும், மருத்துவத்துறையில் பணியாற்றுபவர்க்கு ஒரு சிக்கல் என்றால் காவல்துறையும் நேரடியாக இல்லாவிட்டாலும் மறைமுகமாக உதவுவார்கள். அரசு ஊழியர்கள் தங்களுக்குள் விட்டு தரமாட்டார்கள். நீதி வளையும். உண்மை மறைக்கப்படும். இதற்க்கு எத்தனையோ சம்பவங்கள் இங்கு உண்டு. இதை ர்Pட்டாமேரி, விஜயா வழக்கிலேயே காண முடிந்தது. அதையும் மீறித்தான் மனித உரிமை ஆர்வலர்களின் போராட்டத்தால் நீதி வென்றது. இருள சமுகத்தை சேர்ந்த பெண்களின் விவகாரத்திலும் வழக்கு, வாய்தா என போனாலும் இதை ஒன்னும்மில்லாமல் ஆக்கத்தான் அரசுதுறை முயலும். 

காவல்துறையில் இருக்கும் பெரும்பாலானவர்கள் அந்த காக்கி உடையை மாட்டும் போதே, மனசாட்சியை கழட்டி வீட்டு ஆணியில் தொங்கவிட்டுவிட்டு அதிகார போதை தலைக்கு ஏறிய பின்தான் பணிக்கு வருகிறார்கள். மேலதிகாரி மீதான வெறுப்பை, பணிச்சுமையை திருட்டு வழக்கில் மாட்டும் திருடர்களிடம் காட்டி கோபத்தை தீர்த்துக்கொள்கிறார்கள். இரவில் மனைவியுடன் படுக்கமுடியவில்லை என்பதற்க்காக இப்படி அப்பாவி பெண்களை வேட்டையாடுவது எந்த விதத்தில் நியாயம். 

செக்ஸ் என்பது ஒரு உன்னதமானது. மனிதனுக்கு மட்டுமல்ல மிருகங்களுக்கும், பறக்கும் பறவைகளுக்கும் அந்த மோகம் உண்டு. ஆனால் அது இருமனம் ஒத்து செய்யவேண்டியது. ஊடலின் போது இருவரில் ஒருவருக்கு விருப்பமில்லையென்றாலும் அந்த மோகம் வீணானது. காமத்தை அனுபவிக்கும் போது மனதில் ஒரு புத்துணர்ச்சியிருக்க வேண்டும். வெறி இருக்ககூடாது. காவல்துறையில் இருக்கும் சில கறுப்பாடுகளுக்கு இருப்பது மோகம்மல்ல. வெறி. 

இந்த வெறிநாய்களை விசாரணை என்ற பெயரில் உல்லாசமாக இருப்பதை அனுமதிப்பதை விட மோகம் வந்தால் அனுபவிக்க முடியாத வகையில் ‘அதை’ கட் செய்து விட வேண்டும். அப்போது தான் இதுபோன்ற வெறிநாய்கள் திருந்துவார்கள்.  

திங்கள், நவம்பர் 28, 2011

சினிமாக்காரர்களுக்கு நாவடக்கம் தேவை.
நடிகர் சிவக்குமார், புது இலக்கிய மேடை பேச்சாளர். கம்பன் பற்றியும், திருவள்ளுவர் பற்றியும், இலக்கிய நூல்களை பற்றியும் மேடைகளில் அடுக்கு மொழில் பேசும் இந்த நடிகர் தமிழ் பெண்களை மேடைகளில் கிண்டலடித்து வருகிறார் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதாவது தமிழகத்தில் தியாகராஜபாகதவர் என்ற சூப்பர் ஸ்டார் அந்தஸ்த்து கொண்ட நடிகர் இருந்தார். அவரின் நடிப்பும், அவரின் குரல் வளம், உடல் பலத்தை பார்த்த கேட்ட தமிழ் பெண்கள் தங்களது கணவன்மார்களிடம் உனக்கு பிள்ளைகளை பெற்றேன், ஆனால் இவர் போன்ற ஒரு ஆளிடம் சென்று பிள்ளைகள் பெற வேண்டும் எனச்சொல்லி அவருடன் படுக்க அனுமதி கேட்டார்களாம்.

அதேபோல், காதல் திருமணம் செய்துக்கொண்டு ஐதராபாத்தில் வாழும் ஒரு தம்பதி, அப்பெண் சுகத்துக்காக தனது கணவனின் நண்பரிடம் சுகம் கண்டால், கணவன் தன் மனைவியின் தோழியுடன் அதாவது தனது நண்பனின் மனைவியுடன் சுகம் கண்டான். இது இருவரும் தெரிந்தும் கண்டுக்கொள்ளமால் தங்களது போக்கில் வாழ்கிறார்கள் இதுதான் இன்றைய காதல் என்று பேசி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளாராம்.

ரிட்டையர்டு நடிகரான சிவக்குமார், தனது மூத்த மகன் சூர்யாவுக்கு காதல் திருமணம் செய்து வைத்துள்ளார். அப்போ, அவரின் மகனும் மருமகளும் ஐதராபாத்தில் உள்ள ஜோடிகளைப்போல் தான் நடந்துக்கொள்கிறார்களா?,


அவரது இளைய மகன் நடிகர் கார்த்தியை விட அவரது பெரிய மகன் சிறப்பாக நடிக்கிறார் என்ற பேச்சு உள்ளது. அப்போ கார்த்தியின் மனைவி அவருக்கு பிள்ளை பெற்றுக்கொள்ள ஆசைப்படுகிறா?. என சிவக்குமாரிடம் கேள்வி கேட்கவேண்டும் என்ற எண்ணம் வருகிறது. ஆனால் கேட்க மனம் வரவில்லை. இவர் பேசியதற்க்கு அவர்கள் என்ன செய்வார்கள்.

சிவக்குமார் போன்ற சினிமாக்காரர்களுக்கு முதலில் நாவடக்கம் தேவை. சில ஆண்டுகளுக்கு முன் தமிழ் பெண்கள் கற்புடையவர்களாக இருப்பார்கள் என திருமணம் செய்துக்கொள்ளும் ஆண்கள் எதிர்பார்க்ககூடாது. அதாவது தமிழ் பெண்கள் கற்புடன் இல்லையென்றார். மலையாளத்தில் நடிகராக உள்ள ஜெயராமன், என் வீட்டில் வேலை செய்த தமிழ் பெண்மணி கறுத்த எறுமை போல் இருந்தார் என்றார். மைக் கிடைக்கிறது, பேட்டி கேட்கிறார்கள் என்றால் என்ன வேண்டுமானாலும் சொல்ல துணிகிறது இவர்களின் நாக்கு.

நீங்கள் நடிகர்கள், பணத்துக்காக பல வித வேடங்களில் வந்து திரையை ஆக்ரமிக்கும் நீங்கள் தமிழ் பெண்களைப்பற்றியும், தமிழ் கலாச்சாரத்தை பற்றியும் கருத்து தெரிவிக்கிறீர்கள். உங்களுக்கு என்ன தகுதியிருக்கிறது எம்மக்களை விமர்சனம் செய்ய. சினிமாக்காரர்கள் உலகம் எப்படிப்பட்டது என்பது உலகறியும். பெண்களை போகப்பொருளாக, உங்களின் காம வெறியை தீர்த்துக்கொள்ளும் இடமாகவும், உடலை பணத்துக்காக விற்க்கும் சினிமா விபச்சாரிகளாகவும் தான் இருக்கிறிர்கள். நீங்கள் எம்மக்களை விமர்சனம் செய்கிறிர்கள்.


தியாகராஜபாகவதர் இறந்தபோது, இதே சிவக்குமார் சினிமாவில் தான் இருந்தார். அந்த ஸ்டார் இறந்தபோது இவர் எங்கு போனார்?. அவர் இறப்புக்கு சினிமாக்காரர்கள் ஒரு கை விரல் அளவுக்கு தான் வந்திருந்தார்கள். அவர் கடைசி காலத்தில் அநாதையாக சாலையில் திரிந்து இறந்தார். இன்று அவரைப்பற்றி பேசும் நீங்கள் அவரது பிறந்த நாளோ, இறந்தநாளோ உங்களுக்கு தெரியுமா?. அவர் வந்து உங்களிடம் சொன்னாரா என்னிடம் வந்து பெண்கள் இப்படி கேட்டார்கள் என்று.

யாராவது ஏதாவது சொன்னால் உடனே வந்து மேடையில் ‘வாந்தி’ எடுப்பது என்பது முட்டாள்தனம். ஒருவர் ஒரு விவகாரத்தை கூறுகிறார்கள் என்றால் அது உண்மையா, பொய்யா என்பதை அறிந்தே பேச வேண்டும் என்பதை சிவக்குமார் இனிமேலாவது கற்றுக்கொண்டால் சரி.


தமிழர்களை கேவலப்படுத்திய சீமான்.


நவம்பர் 27 மாவீரர்கள் நாள் என்பது உலகம் முழுவதும் வாழும் ஈழத்தமிழர்களின் விசேஷ நாள். 2009ம் ஆண்டு வரை உலக தமிழர்கள், நாடுகளின் தலைவர்கள், வெளியுறவுத்துறை அதிகாரிகள், அமைச்சர்கள், உலக நாடுகளின் புலனாய்வு அமைப்புகள் எல்லாருமே மாவீரர் தினத்தன்று பிரபாகரன் உரையை கேட்க தவம் கிடப்பார்கள். அந்த உரைக்கு பின் உரையை ஆய்வு செய்யும் பணியும் தொடங்கிவிடும்.
2009க்கு பின் ஈழத்தில் ஆயுதபோராட்டம் ஒரு முடிவுக்கு வந்தபின் பிரபாகரன் உட்பட முக்கிய தலைவர்கள் என்னவானார்கள் என்பது இன்று வரை ஒரு கேள்விக்குறியாகவே உள்ளது. இதனால் 2009க்கு பின் மாவீரர் நாளன்று பிரபாகரனின் தம்பிகள், அவருக்கு நம்பகமானவர்கள் என கூறிக்கொள்ளும் பல ‘தலைவர்கள்’ உரையாற்றவும், அறிக்கை விடவும் தொடங்கியுள்ளார்கள்.
நாம் தமிழர் என்ற அமைப்பை தொடங்கி அதை சட்டமன்ற தேர்தல்க்கு முன் கட்சியாக மாற்றி அதிமுகவுக்கு பிரச்சாரம் செய்த அதன் தலைமை ஒருங்கிணைப்பாளரும், இயக்குநரும், நடிகருமான சீமான், இந்த ஆண்டு(2011) மாவீரர் நாள் உரையை கடலூர் நகரில் ஒரு மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தில் உரையாற்றியுள்ளார்.
அங்கு அவர் பேசியதாக மீனகம் இணையதளம் வெளியிட்டுள்ள ஒரு செய்தி, தமிழர்கள் தமிழகத்தில் உள்ள பல அரசியல் கட்சியிலும் உள்ளனர். ஆனால் தமிழர்களுக்காக போராடும் நாம் தமிழர் கட்சியில் இல்லை. நாம் தமிழர் கட்சியில் இல்லாதவர்கள் ஒரு நல்ல தாய் தகப்பனுக்கு பிறந்தவர்களாக இருக்க முடியாது என கேவலமாக பேசியுள்ளார்.

ஒருவர் எந்த கட்சியில் இருக்க வேண்டும் என முடிவு செய்வது ஒவ்வொருவருடைய தனிப்பட்ட விருப்பம். அதில் யாருமே தலையிட முடியாது. நூன் தமிழர்களுக்காக உழகை;கிறேன், குரல் கொடுக்கிறேன் என்கிற சீமான், அவர் இயக்கிய வாழ்த்துக்கள் படத்தில் மும்பையை சேர்ந்த நடிகர் மாதவனுக்கு ஜோடியாக போட்டது கேரளா நடிகையை, அதன்பின் வந்த தம்பி படத்தில் அதே மாதவனுக்கு சிங்கள நடிகை பூஜாவை ஜோடியாக போட்டார். சீமான் காதலித்து, பலமுறை கர்ப்பத்தை கலைக்க வைத்து கைவிட்ட நடிகை விஜயலட்சுமி கர்நாடகாவில் வாழும் நடிகை. ஏன் தமிழ் நடிகர்கள், நடிகைகள் யாரும் சீமான் கண்ணுக்கு தெரியவில்லையா?.
மற்ற அரசியல் தலைவர்களைப்போலத்தான் சீமானும், அவர்கள் தமிழ்க்காக, தமிழர்களுக்காக ஏதோ ஒன்றை செய்துவிட்டு கொள்ளையடித்தார்கள். சீமான் தனது உணர்ச்சி வார்த்தைகளால் பேசி தமிழ் மக்களை ஏமாற்றினார். சீமான் சோரம் போனதுப்பற்றி பல தகவல்கள் வருகின்றன. சீமான் நம்ப வைத்து கழுத்து அறுத்தவர்கள் யார், யார் என்பது கூறினால் சீமான் தாங்கமாட்டார். அவர் நாம் தமிழர் இயக்கத்தில் சேராதவர்கள், நல்ல தாய் தகப்பனுக்கு பிறந்தவர்களில்லை எனக்கூறியுள்ளார்.
நாக்கு நீளம், வாய் அகலம் என்பதற்காக எதையும் பேசக்கூடாது. உணர்ச்சிகளை கட்டுப்படுத்துபவன் தான் தலைவன். முதல்வராக ஜெயலலிதா வந்தால் ஈழம் பிறக்கும் என பிரச்சாரம் செய்த சீமான் ஜெ முதல்வாரன பின், தமிழனாக பிறந்த ஒவ்வொருவரும் புரட்சிதலைவியை வாழ்த்த வேண்டும் என்றார்.

மூன்று பேரின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியபோது, ஈழத்தாய் என மேடை போட்டு பாராட்டினார். ஆனால் அவற்றின் இன்றைய நிலை.

அரசியல் தெரியாத, பணம் சம்பாதிக்க இயக்கம் தொடங்கி வாய் கிழிய, இளைஞர்களின் உணர்ச்சிகளை தூண்டிவிடும் அளவுக்கு பேசும் சீமான் இனியாவது வார்த்தைகளை அளந்து பேசவேண்டும். இல்லையேல் தமிழர்கள் தக்க பாடம் புகட்டிவிடுவார்கள்.

கனிமொழி பிணையில் வந்தார்.


 
இந்தியாவில் பரபரப்பாக பேசப்பட்ட 2ஜி வழக்கில் மே20ந்தேதி திமுக எம்.பி கனிமொழி சி.பி.ஐயால் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.
 
சிறைச்சாலை அவருக்கு புதுசு. புpறந்தது முதல் பஞ்சனையை தவிர வேறு எதுவும் காணாதவர். முதல்வரின் மகளாக, எதிர்க்கட்சி தலைவரின் மகளாகவே வளர்ந்தவர். கஸ்டம் என்றால் துளியளவும் தெரியாமல் வளர்க்கப்பட்டவர். திமுக தலைவரின் பாசத்திற்க்குறிய புதல்வி சிறைச்சாலையில் என்றதும் கலைஞர் முதல் கனிமொழி மீது பற்று கொண்ட கட்சிக்கு அப்பார்பட்ட மனிதர்கள் கூட பரிதாபப்பட்டனர்.
 
கனிமொழியை பெயிலில் எடுக்க இந்தியாவின் பிரபல வழக்கறிஞர்கள் உச்சநீதிமன்றம் வரை சென்று போராடினர். ஆனால், மீடியாக்கள் திமுக மீது நடத்திய தொடர் போர், அன்ன ஹசரேவின் ஊழலுக்கு எதிரான போராட்டம் போன்றவை ஸ்பெக்ட்ராம் விவகாரத்தில் நீதிதுறையை கண் மூட வைத்துவிட்டது.
 
குற்றம் சாட்டப்பட்டவரை குற்றவாளியாகவே நடத்த தொடங்கின மீடியாக்களும், நீதித்துறையும். திமுக தலைவர் தன் பலம் கொண்ட மட்டும் முயன்றும் காங்கிரஸ் அரசு மனம்மிறங்கவில்லை.
 
2ஜி ஊழலில் காங்கிரஸ்சின் பங்கு, பெரும் முதலாளிகளின் கூட்டு போன்றவை வெளியே வரதொடங்கின. அதோடு, பொது நல வழக்கு ஒன்று இந்த பிரபலத்தை வெளியே கொண்டு வர உதவியது.

நவம்பர் 28 டெல்லி உயர்நீதிமன்றம் கனிமொழி உட்பட 5 பேருக்கு ஜாமீன் தந்துள்ளது. இது திமுக தலைவருக்கு சந்தோஷத்தை தரலாம். ஆனால் கனிமொழிக்கு மகிழ்ச்சி என்பது கிடையாது. அவர் தவறே செய்துயிருந்தாலும் காங்கிரஸ் செய்தது மன்னிக்க முடியாத தவறு. திமுகவின் வரலாற்றில் மறக்க முடியாத கலங்கம், காங்கிரஸ்சின் இந்த துரோகம்.

வெள்ளி, நவம்பர் 25, 2011

சுட்டு கொல்லப்பட்ட போராளி.


கிஷன் ஜீ எ கோட்டீஸ்வரராவ். இந்தியாவில் செயல்படும் மாவோயிஸ்ட்டு அமைப்பின் மத்திய குழுவின் மிக முக்கிய உறுப்பினர். தவீர களப்போராளி. அவர் எங்கிருப்பார் என்பது மற்ற மத்திய குழு உறுப்பினர்களுக்கு கூட அவ்வளாக தெரியாது. அவர்தான் பாதுகாப்பு படையுடன் நடந்த சண்டையில் சுட்டுக்கொள்ளப்பட்டதாக சில ஆங்கில ஊடகங்கள், மத்தியரசு சந்தோஷ கூச்சல் போடுகின்றன. கிஷன்ஜீயை அமைப்பின் மூளை என மத்திய உள்துறை அதிகாரிகள் வர்ணிக்கிறார்கள். அவரின் இறப்பு அந்த அமைப்புக்கு மிகப்பெரிய பின்னடைவு என்றும் கூறுகிறார்கள்.
 
ஆந்திரா மாநிலம் கரிம்நகர் மாவட்டம் பெத்தபல்லியில்; 1956ல் பிறந்த ராவ், பி.எஸ்.சி கணிதம் படித்தவர். ஐதராபாத்தில் சட்டம் பயில வந்தார். அங்கு தெலுங்கான வேண்டி போராடிய தெலுங்கான சங்கர சமிதியின் மாணவர் பிரிவில் தன்னை இணைத்துக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அவருக்கும் மாநில காங்கிரஸ் கமிட்டியின் துணை தலைவரும், சுதந்திரபோராட்ட வீரருமான அவரது அப்பாவுக்கும் இடையே தகராறு ஏற்பாட்டது.
 
மாநிலத்தில், சாதி மற்றும் நிலக்கிழார்களால் ஏழை மக்கள் அடிமையாக கிடப்பதை கண்டு போராட்ட களத்தில் தீவிரமானார். பீப்புல்ஸ்வார் என்ற அமைப்பை தொடங்கி ஆந்திராவில் தீவிரமாக போராட தொடங்கினார். தெலுக்கானா மாநிலம் தேவை என்ற குரல் எழுப்பியவர்களில் மிக முக்கியமானவர். ஆந்திராவில் நக்சல் அமைப்பை பலமாக கட்டமைத்தவர். ஆந்திராவின் பாதுகாப்பு படைக்கும் அரசுக்கும் சிம்ம சொப்பனமாக இருந்தார்.
 
1980களுக்கு பீப்புள்ஸ் வார் அமைப்பை சி.பி.எம் (மாவேயிஸ்ட்) என்ற அமைப்போடு இணைத்து விட்டார். 1974க்குபின் அவருக்கும் அவரது குடும்பத்தார்க்கும் இருந்த உறவு அறுந்து போனது. 1990களில் வடகிழக்கு மாநில அமைப்பு பணிகளுக்கு அனுப்பப்பட்டார். சத்தீஸ்கர், ஜார்கண்ட், ஒரிசா, மேற்குவங்கம், பீகார், பகுதிகளில் தீவிரமாக களப்பணியாற்றி மாவோயிஸ்ட் அமைப்பை கட்டமைத்தவர். 2009 தொடக்கத்தில் ரா அமைப்பு மத்தியரசுக்கு தந்த தகவலின்படி இந்தியாவில் 21 மாநிலங்களில் 220 மாவட்டங்களை தங்களது ஆளுகையின் கீழ் மாவேயிஸ்ட்டுகள் வைத்துள்ளார்கள் என்றது. இதை மத்தியரசும் உறுதி செய்தது.
 

இயக்கத்தில் 50 ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட துப்பாக்கி தூக்கிய போராளிகள் காடுகளுக்குள்ளும், லட்சகணக்கான ஆதரவாளர்கள் நாட்டில் உள்ளனர். அமைப்பின் செயல்பாடுகளை வெளியுலகத்துக்கு அறிவிக்கும் நபராக, மீடியா உலகத்தோடு நட்போடு பழகியவர் கிஷன்ஜீ.
 
53 வயதாகும் கிஷன்ஜீ 19 வயதில் துப்பாக்கி தூக்கியவர். 34 ஆண்டுகள் தன் வாழ்வை ஒரு கொரில்லா போராளியாக காடுகளிலேயே கழித்தவர். அவரது மனைவி சுஜாதாவும் காட்டிலேயே போராளியாக அவருடன் துணை நின்றார். ஒரு மாபெரும் மத்திய மாநில அரசுகளின் தூக்கத்தை கெடுத்த போராளி. உழைக்கும், போராடும் மக்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் என இதுவரை 90க்கும் அதிகமானோரை கொன்றுள்ளதாக சமீபத்தில் ஒருபேட்டியில் கூறியவர்.
 
மக்கள் எதிர்ப்பை மீறி மேற்குவங்க மாநிலத்தில் அமைய இருந்த டாடா தொழிற்சாலையை துரத்தியடித்ததில் மாவேயிஸ்ட் தளபதியான இவரின் பங்கு மிக முக்கியமானது. கம்யூனிஸ்ட் அரசுக்கு எதிராக செயல்பட்ட மாவோயிஸ்ட்டுகளை அப்போதைய மத்தியமைச்சரான திரிணாமுல்காங்கிரஸ் தலைவி மம்தா தீவிரமாக ஆதரித்தார். மேற்கு வங்க மாநில தேர்தலில் வெற்றி பெற்று முதல்வரானதும் தனது முதலாளித்துவ, அதிகார திமிரை காட்ட தொடங்கினார். ஆட்சியமைக்க காரணமாக இருந்த மாவோயிஸ்ட்டுகளை மேற்கு வங்கத்தில் இருந்தே அழிக்க உத்தரவிட்டார் முதல்வர் மம்தா.

 
மத்திய – மாநில பாதுகாப்பு படைகள் அதில் தீவிரமாக இருந்தன. இந்நிலையில் தான் நவம்பர் 24ந்தேதி பாதுகாப்பு படையுடன் நடந்த சண்டையில் கிஷன்ஜீ சுட்டுக்கொள்ளப்பட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. சில ஆண்டுக்கு முன் இதேபோல் ஒரு முறை ஒரு உடலை காட்டி கிஷன்ஜீ என அறிவித்தார்கள் என்பது குறிப்பிடதக்கது.
 
கிஷன்ஜீ கொல்லப்பட்ட விவகாரத்தில் உளவுத்துறை ஒரு தகவலை பரப்பியுள்ளது. அதாவது, சமீபத்தில் பிடிபட்ட ஒரு மாவோயிஸ்ட்டிடம்மிருந்து லேப்டாப் ஒன்று பறிமுதல் செய்யப்பட்டதாம். அதை ஆராய்ந்தபோது அதில் பலதகவல்கள் இருந்தன. கிஷன்ஜீ தங்கியிருந்த இடம்பற்றி அதில் தகவல் இருந்தது. அதை கொண்டே அந்தயிடத்தை சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தினோம். அதில் அவர் கொல்லப்பட்டார் மற்ற தலைவர்கள் தப்பியோடி விட்டார்கள். அதில் அவரது மனைவி சுஜாதாவும் அடக்கம் என்றுள்ளார்கள்.

மாவோயிஸ்ட் ஆதரவாளர்களோ, லேப்டாப்பிலோ, மின்னஞ்சல் மூலமாக தகவல் பறிமாற்றம் நடக்க வாய்ப்பில்லை. இயக்கத்தின் தகவல் பறிமாற்றம் என்பது வேறு வகையானது. உளவுதுறை சொல்வது பச்சை பொய். ‘யாராவது’ காட்டி தந்திருக்க வேண்டும் அ ஏதோச்சையாக சிக்கியிருக்க வேண்டும் என்கின்றனர். மம்தாவை நம்பி மோசம் போனோம் என்ற குரலும் வருகிறது.

வெள்ளி, நவம்பர் 18, 2011

விர்ரென உயர்த்தப்பட்ட விலைவாசி உயர்வு.


பேருந்து கட்டண உயர்வு, மின் கட்டண உயர்வு தேர்தல்க்கு முன்பே எதிர்பார்த்தது தான். அதை தற்போது ஜெ நடைமுறைப்படுத்தியுள்ளார். வரவேற்க்கதக்கது. ஆண்டுக்கு 10 முறை பெட்ரோல், டீசல் விலையேற்றத்தால் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் நட்டத்திலேயே இயங்கி வந்தன. நீண்ட காலமாக பேருந்து கட்டணத்தில் விலையேற்றம் வேண்டும் என அரசு போக்குவரத்து கழகமும், தனியார் பேருந்து முதலாளிகளும் கேட்டு வந்தனர். ஆனால் கடந்த 5 ஆண்டுகளாக திமுக அரசு அதை கண்டுக்கொள்ளவேயில்லை.

அதேபோல், மின் கட்டணத்தை எப்போதே ஏற்றியிருக்க வேண்டும். கடந்த திமுக அரசு யூனிட் கணக்கில் அதை செய்ய முயன்றபோது லபோ திபோ என குதித்தது அதிமுக மற்றும் மீடியாக்கள். மின் உற்பத்தி என்பது நீண்ட கால திட்டத்தில் போடப்படவேண்டியது. ஆனால் இங்கு எல்லாமே குறுகிய கால திட்டமாகவே செயல்படுத்தப்படுகிறது. அதோடு மக்கள் தொகை எதிர்ப்பார்ப்பதை விட அதிகமாக உயர்க்கிறது. அதோடு, மனிதனின் மின் தேவைகள் இன்றைய காலக்கட்டத்தில் அதிகமாக உயர்ந்துக்கொண்டே போகின்றன.

சாதாரண நடுத்தர குடும்பத்தில் டிவி, ஏசி போன்றவை புழங்குகின்றன. அதை பயன்படுத்துபவர்கள் சரியாக செய்கிறார்களா என்றால் இல்லவேயில்லை. 100 வீட்டில் 80 வீடுகள் ஃபேன், டிவி போன்றவை ஆள்யில்லாமலே ஓடிக்கொண்டுயிருக்கின்றன. இதற்க்கு காரணம், குறைந்த அளவு மின் கட்டணம் என்பதால் அவர்கள் அதை ஆப் செய்ய வேண்டும் என்ற அக்கறை இல்லாமல் இருப்பதால் தான்.

அதோடு, காலமாற்றம், பொருhளதார மாற்றம், மூலப்பொருள் விலைகள் ஏறும்போது பேருந்து கட்டணம், மின்சார கட்டணம் போன்றவை உயர்வது என்பது தவிர்க்க முடியாதது. ஒரு புதுப்படம் வருகிறது என்றால் டிக்கட் 250 ரூபாய் என்றாலும் போய் படம் பார்க்க நினைப்பவர்கள் இதுபோன்ற விலைவாசி உயர்வையும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

தற்போது அதிமுக அரசு விலையேற்றத்தை அறிவித்துள்ளது. ஆனால் எதிர்பார்த்ததை விட மிக அதிக விலையேற்றம் என்பது அதிர்ச்சிக்குறியதாக இருக்கிறது. பேருந்து கட்டணம் மற்றும் இரயில் கட்டணம் ஒப்பீடு பார்க்க பெட்டி செய்தி.


சென்னை டூ கன்னியாகுமரி – மதுரை – கோவை – திருநெல்வேலி பயணிகள் இனி பேருந்து பயணத்தை நினைக்கவே மாட்டார்கள். பேருந்து பயணம் செய்வதை விட இரயிலில் ஏசி கோட்ச்சில் பயணம் செய்தால் கூட அவ்வளவு செலவாகாது. அந்தளவுக்கு பேருந்து கட்டணம் உயர்ந்தியுள்ளார்கள். இந்த விலையேற்றத்தின் மூலம் அரசுக்கு ஒரளவுக்கு தான் வருமானம். தனியார் பேருந்து முதலாளிகள் தான் கொழுக்க போகிறார்கள். தனியார் முதலாளிகள் கொழுக்க அதிமுக அரசு அதிகமாக சலுகை காட்டியுள்ளது.


என்ன செய்ய நாம் பிறந்துள்ளது அரசியல்வாதிகளின் நாட்டில். அதனால் எல்லாவற்றையும் ஏற்றுக்கொண்டு தான் ஆக வேண்டும்.

புதன், நவம்பர் 16, 2011

2ஜியில் விலகும் மர்மம்.


2ஜி விவகாரத்தில் ஆரம்பம் முதலே நாம் சொல்லிவந்தது இவ்விவகாரத்தில் எதிர்கட்சிகள், மீடியாக்கள் கூறுவதை போல 1.76 ஆயிரம் கோடி நட்டம் ஏற்பட்டது என்பது பொய். நட்டம் ஏற்பட்டுள்ளது என்பது உண்மை. ஸ்பெக்ட்ராம்மில் அரசுக்கு நட்டத்தை ஏற்படுத்தி அதன் மூலம் லாபம் அதாவது ஊழல் புரிந்துள்ளார்கள் அதிகாரத்தில் இருந்தவர்கள்-இருப்பவர்கள். ஆனால், மத்திய தணிக்கை துறை, மீடியாக்கள் குறிப்பிடும் அளவுக்கல்ல என்பதே நமது வாதம்.
 
திமுகவை அழிக்க வீணாக பழி சுமத்துகிறார்கள் என்றிருந்தோம். இதோ அரசு அதிகாரிகளின் கடித பறிமாற்றம், அப்போது அவர்களுக்குள் நடந்த விவகாரம் தாமதமாக வெளியே வந்து நமது வாதத்திற்க்கு வலு சேர்க்கின்றன.
 
2ஜி விவகாரத்தில் 1.76 ஆயிரம் கோடி நட்டம் ஏற்பட்டது என அறிக்கையில் கையெழுத்திட்டுயிருந்தவர் தற்போது நான் அவ்வளவு ரூபாய் இழப்பு ஏற்பட்டது என எந்தயிடத்திலும் சொல்லவில்லை. எனது மேலதிகாரிகள் அப்படியொரு அறிக்கை தயார் செய்து அதில் மிரட்டி என் கையெழுத்தை வாங்கினார்கள் என பாராளமன்ற குழுவிடம் சாட்சி சொல்லியுள்ளார். அதோடு அவர் சொல்வது உண்மை என்பதை போல அப்போது அதிகாரிகளுக்குள் நடந்த கடித பறிமாற்றங்கள் தற்போது வெளியாகியுள்ளன.

 
ஸ்பெக்ட்ராம் விற்பனையை முழு அளவில் ஆராய்ந்து அறிக்கை தயாரித்தவர் மத்திய தலைமை தணிக்கை துறையில் தொலைதொடர்பு பிரிவுக்கான டைரைக்டர் ஜெனரலாக இருந்த ஆர்.பி.சிங், ஒய்வு பெற்றுவிட்ட அவர் ஸ்பெக்ட்ராம் ஊழலை விசாரிக்கும் பாராளமன்ற குழுவிடம், நான் யூகமாக எந்த கணக்கும் போடவில்லை. யூக கணக்கில் எப்போதும் எனக்கு உடன்பாடில்லை. நான் ஆராய்ந்த வரையில் ஸ்பெக்ட்ராம் விவகாரத்தில் அரசுக்கு நட்டம் 2,645 கோடி.
 
முதலில் வருபவருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் வழக்கியதால் தான் இழப்பு. ஏலம் விட்டுயிருந்தால் இழப்பு ஏற்பட்டுயிருக்காது என்பதே தணிக்கையில் கண்டறியப்பட்டது. அதைத்தான் நான் அறிக்கையாக தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி விநோத்ராய்யிடம் தந்தேன். அந்த அறிக்கையை வாங்கிய அவர் சில தினங்களுக்கு பின் என்னிடம் அவர் கணக்குகளை ஆய்வு செய்ததாக கூறி ஒரு அறிக்கையை அனுப்பினார். அதில், 2ஜி விவகாரத்தில் 1.76 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாக கூறப்பட்டுயிருந்தது. எதன் அடிப்படையில் ஆய்வு செய்தார் என்பது அதில்யில்லை. ஆனால், அதில் கையெழுத்திடுமாறு என்னை கேட்டுயிருந்தார்.
 
அவரோடு, அப்போது தலைமை கணக்கு துணை அதிகாரி ரேகாகுப்தாவும் இதுதான் உண்மையான கணக்கு எனக்கூறி மிரட்டி கையெழுத்து கேட்டார்கள். உண்மையில் அவ்வளவு இழப்பு ஏற்படவில்லை. ஆனால் மதிப்பு மலையளவு உயர்த்தப்பட்டு இருந்தது. இதுப்பற்றி நான் அப்போதே ஆட்சேபம் தெரிவித்தேன். ஆனால் விநோத்ராய், ரேகாகுப்தா இருவருமே என் விளக்கத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. அப்போது எங்களுக்குள் காரசாரமான கடித போக்குவரத்து நடந்தது. ஒருமுறை என் நேர்மையை சந்தேகிக்கும் வகையில் ரேகா கடிதம் எழுதியிருந்தார். கடைசியில் அவர்களின் மிரட்டலாலே நான் கையெழுத்திட வேண்டி வந்தது என்றார். அதற்காக அப்போது இந்த அதிகாரிகளுக்குள் நடந்த கடிதங்களும் ஆதராமாக வைக்கப்பட்டுள்ளது. 

இந்த விநோத்ராய் ஸ்பெக்ராமில் நட்டம் என்ற அறிக்கையை மத்தியரசிடம் தருவதற்க்கு முன் பா.ஜ.கவின் அசைக்க முடியாத காவி தலைவரான முரளிமனோகர்ஜோஷியைப்போய் பார்த்துவிட்டு வந்த சில தினங்களுக்கு பின்பே இந்த நட்ட அறிக்கையை மத்தியரசிடம் தந்துள்ளார். அவரை சந்தித்ததன் நோக்கம்மென்ன என கேள்வி எழும்பியபோது, நான் அவரை சந்திக்கவில்லை என மறுத்தார். ஆனால் சந்தித்ததற்கான ஆதராம் வெளியே வந்தபின் இதுவரை காரணத்தை கூறவில்லை. அதேபோல் அதிகாரிகளுக்குள் நடந்த கடிதங்கள் வெளியே வந்தபின் விநோத்ராய், ரேகாகுப்தாவிடம் இருந்து இதுவரை எந்த பதிலும்மில்லை.

ஞாயிறு, நவம்பர் 13, 2011

ராமதாஸ்சின் “கீழ்“ புத்தி


பாட்டாளி மக்கள் கட்சியை பற்றி எழுதுவது என்பது வேலை வெட்டியில்லாதவனின் வெட்டி செயல். மருத்துவர் சாதியை வைத்து பிழைப்பு நடத்தும் கேவலமான அரசியல்வாதிகளுள் ஒருவர். ஒரு நேரத்தில் அவருக்கு வன்னிய மக்கள் கடமைப்பட்டுயிருந்தார்கள். அதை வைத்து பிழைப்பு நடத்தியதோடு வன்னியர்களின் டீலராக தன்னை மட்டுமே முன்னிலைப்படுத்தி சிறுமைப்பட்டு போய்வுள்ளார்.
 
பதவிகளை பணத்துக்காக மட்டுமே பயன்படுத்திய அரசியல்வாதி யார் என்றால் மருத்துவர் ராமதாசு என்றால் அது மிகையில்லாத வாக்கியம். தனக்காக, கட்சிக்காக உயிர் நீத்த, உழைத்தவர்களை பிடித்து வெளியே தள்ளிய தலைவன் ராமதாஸ்.
 
ஒரு கட்சியென்றால் விமர்சனம் வரும் அதை ஏற்றுக்கொள்பவன் தான் தலைவன். அதேபோல் பவர் இருக்கும் போது கட்சி தலைமைக்கு விசுவாசமாக நடிப்பதும், பவர் இல்லாத போது கட்சி தலைமையை தூற்றுவதும் அரசியலில் சகஜம். இன்று தலைமையை தூற்றுவோர் பட்டியலில் உள்ளவர்கள் எல்லாருமே அப்படித்தான். பதவியை அனுபவித்தவர்கள், சம்பாதித்தவர்கள்.
 
தலைமையை விமர்சித்தார் என வேல்முருகன் கட்சியை விட்டு நீக்கப்பட்டுள்ளார். அது அரசியல். வேல்முருகன்க்கு அதற்க்கு அரசியல் ரீதியாக பதில் அளித்திருக்க வேண்டும். அதை விட்டுவிட்டு எனக்கு பிள்ளை இருக்கிறது வாரிசாக்கினேன், உனக்கு பிள்ளையில்லையேப்பா என கட்சியினர் மத்தியில் வேல்முருகனை ராமதாஸ் கிண்டலடித்ததாக சேலத்தை சேர்ந்த முன்னால் பாட்டாளிகள் செய்தியாளர்களிடம் கூறியுள்ளனர்.
 
இப்படி வேல்முருகனை பார்த்து ராமதாஸ் கூறியிருந்தால், ராமதாசை போல கேவலமான அரசியல்வாதி வேறுயாரும்மில்லை என்பது நிதர்சன உண்மை. குழந்தை இல்லை என குத்தலாக பேசிய ராமதாஸ்சிடம், உன் வாரிசுகள் என்கிறாயே உண்மையில் உனக்கு தான் பிறந்ததா என வேல்முருகன் திருப்பி கேட்டுயிருந்தால் அந்த கூட்டத்தில் ராமதாஸ்சின் மரியாதை என்னவாகியிருக்கும்.

ஒருவர் கட்சியை விட்டு போகிறார், நீக்கப்படுகிறார் என்றால் அதற்க்கு அரசியல் ரீதியாக மட்டும்மே கருத்து கூற வேண்டுமே தவிர தனிப்பட்ட வாழ்க்கையை இழுத்து கருத்து கூற கூடாது அது தலைமைக்கு அழகல்ல. இதை ராமதாஸ் மட்டுமல்ல பிற்காலத்தில் கருத்து கூற விரும்பும் மற்ற தலைவர்களும் புரிந்துக்கொள்ள வேண்டும்.

அழிக்கப்படும் அண்ணா நூற்றாண்டு நூலகம்.


 
அண்ணா நூற்றாண்டு நூலகத்தை குழந்தைகள் மருத்துவமனையாக மாற்றப்போகிறோம் என அரசு அறிவித்தது முதல் தமிழகத்தின் பல பக்கங்களில் இருந்து குய்யோ முய்யோ என்ற சத்தம் காதை பிளக்கிறது. இதைப்பற்றி நண்பர் யுவகிருஷ்ணா தனது இணைய தளத்தில் தெளிவாக பதிவு செய்துயிருந்தார். ஜெயலலிதாவிடம் இதை தவிர்த்து வேறு என்ன எதிர்ப்பார்க்க முடியும். இதை விட்டு வைத்திருந்தால் அவர் மாறிவிட்டார் என்பதை ஏற்றுக்கொண்டுயிருக்க முடியும். அவர் மாற மாட்டார் என்ற ரீதியில் பதிவு செய்துயிருந்தார். அதுதான் உண்மை.
 
தமிழகத்தின் அறிவு களஞ்சியம். உலக வரலாறுகளை உட்கார்ந்தயிடத்தல் படிக்க தமிழகத்தில் ஓர்யிடம் என்றால் அது அண்ணா நூற்றாண்டு நூலகம் தான். ஆசியாவிலேயே இரண்டாவது பெரிய நூலகம் என்ற பெயர் பெற்ற நூலகம் கடந்த 2010 செப்டம்பர் 15 அண்ணா பிறந்த தினத்தன்று தமிழக முதல்வராக இருந்த திமுக தலைவர் கலைஞரால் திறந்து வைக்கப்பட்ட கட்டிடம்.
 
180கோடி ரூபாய் செலவில் அந்த கட்டிடம் தமிழகத்தின் பண்பாட்டையும், உலகத்தின் வரலாறுகளை தன்னுள் வைத்துக்கொண்டு அமைதியாக சென்னை கோட்டூர்புரத்தில் காட்சியளிக்கிறது. 8 ஏக்கர் பரப்பளவில் 9 மாடிகளை கொண்ட இந்த கட்டிடம் முழுவதும் குளு குளு வசதி செய்யப்பட்டுள்ளது. ஐ.நாவின் யுனஸ்கோ மின்னியல் நூலகத்தோடு இணைக்கப்பட்ட நூலகம்மிது. உலகத்தின் பல மொழி புத்தகங்கள், சிறந்த ஆய்வு நூல்கள், லட்சக்கணக்கான விலை மதிப்புள்ள மருத்துவ நூல்கள், செப்பேடுகள், புகைப்படங்கள், ஓலைச்சுவடிகள், பழங்கால நூல்கள், இந்தியாவின் பிற மொழி நூல்கள், பார்வையற்றவர்களுக்கான நூல்கள் என கட்டிடத்தின் ஒவ்வொரு பகுதியிலும் நூல்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ன. ஆடிட்டோரியம், மீட்டிங் ஹால்கள் என அமைக்கப்பட்டுள்ளது. தினமும் 2800பேர் இந்நூலகத்துக்கு வந்து செல்கின்றனர். வரலாற்றில் கலைஞர்க்கு மணிக்கல் என்றால் மிகையில்லை.
 
ஜெயலலிதா அம்மையார் ஆட்சிக்கு வந்ததுமே திமுக தலைவர் கவலைப்பட்ட விவகாரம், அண்ணா நூற்றாண்டு நூலகம் என்னாகுமே என்பது தான். காரணம் பழைய சட்டமன்றத்தில் அமைக்கப்பட்டிருந்த பாவேந்தர் தமிழ் செம்மொழி நூலகத்தை இருந்த இடம் தெரியாமல் ஆக்க உத்தரவிட்டு அதன்படியே ஏவல் அடிமைகள் செய்து முடித்திருந்ததை கண்டதால் தான் அவர் அதிகம் கவலைப்பட்டார். அவர் மட்டுமல்ல தமிழ் உணர்வாளர்கள், எழுத்தாளர்கள், நடுநிலையாளர்கள் அனைவரும்மே கவலைப்பட்டனர். ஆனால் அம்மையார் அதைப்பற்றி கொஞ்சம் கூட எண்ணவில்லை. நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
 
ஒரு நூலகத்தை சிதைப்பது என்பது நூற்றாண்டு கால வரலாற்றை, பண்பாட்டை சிதைப்பதற்க்கு சமம். அதைத்தான் இன்று ஜெ செய்கிறார். அவர் படிப்பாளி, வாசிப்பாளி, எழுத்தாளர் என்பது அவரது வாழ்க்கை வரலாற்றை அறிந்தவர்கள் நன்கறிவார்கள். அவர் ஒரு நூலகத்தை சிதைக்கிறார் என்பதை காணும்போது அவர் என்னத்தை படித்து கிழித்தார் என்பது யோசனையாக உள்ளது. இந்த செயல் வரலாற்றில் அவருக்கு சிறுமை. தமிழக வரலாறு அவரை மன்னிக்காது.
 
ஒரு அரசியல்வாதி தனது பெயரை வரலாற்றில் நிலைநிறுத்திக்கொள்ள வேண்டும்மென்றால் அவர் இப்படிப்பட்ட சாதனைகளை உருவாக்கியிருக்க வேண்டும். இல்லையேல் உருவான சாதனைகளை விட அதிகமாக சாதனைகளை உருவாக்க பாடுபடவேண்டும். கலைஞர், அண்ணா நூலகம் என்ற வரலாற்றை உருவாக்கி வரலாற்றில் இடம்பிடித்துவிட்டார். இதை முறியடிக்க தமிழகத்தின் பெரிய நகரங்களில் இதை விட பெரிய பெரிய நூலகத்தை ஜெ அமைத்திருந்தால் வரலாற்று பக்கங்களில் அவரது பெயர் மின்னியிருக்கும். ஆனால், அவர் இருக்கும் நூலகத்தையே அழிக்க துணிந்துவிட்டார். இதுவும் வரலாறு தரான். வரலாற்றின் பக்கத்தில் அவரது இந்த செயல்கள் மோசமாக தான் இடம்பெறும் என்பதில் ஐயமில்லை.
 
கலைஞருடன் போட்டியிட ஜெவுக்கு எத்தனையோ விவகாரங்கள் உள்ளன. ஆனால் ஜெ தேடித்தேடி கல்வி விவகாரங்களாக பார்த்து பார்த்து கை வைப்பது உண்மையில் அவர் பிராமணீயத்தை தலை தூக்க வைக்க முயல்கிறார் என்பது வெட்டவெளிச்சமாகிறது. சமச்சீர் கல்வி, பொறியியல் கல்வியில் தமிழ், நூலகம் போன்றவற்றை பார்த்து பார்த்து சிதைப்பது என்பது வர்ணாசிரம வெறி தானே தவிர வேறில்லை.

ஜெ மீண்டும் மீண்டும் தான் யார் என்பதை நிறுபிக்கிறார். இதற்க்கு பட்டுத்திரை போட்டு பார்ப்பனர்கள் மூட நினைத்தாலும் வரலாறுகள் நிச்சயம் பதில் சொல்லும்.

அம்மாக்கு குடிகாரர்களின் ஆலோசனை.....


2000ல் மதுக்கடைகள் நகரங்களில் வண்ண வண்ண போர்டுகளில் தனியார் கடைகளாக இருந்தன. 2004ல் தமிழக முதல்வராக இருந்த ஜெ தனியார் மதுக்கடைகளை மூட உத்தரவிட்டவர் நகரத்துக்கு நகரம், கிராமத்திற்க்கு கிராமம் அரசே மதுபான கடைகளை திறக்கும் என்றார். அவர் அறிவிப்பை கேட்டு இப்படி கூட அரசாங்கங்கள் இருக்குமா என குய்யோ முய்யோ என்ற சத்தங்கள் கேட்டது.
எதற்க்கும் அம்மா அசரவில்லை. டாஸ்மாக் கடைகளில் ஊத்தி தரும் வேலைக்கு ஆள் எடுத்தார். ஆரம்பத்தில் சம்பளம் 10 வயது பையன் ஹோட்டலில் வாங்கும் சம்பளம் தான். இருந்தும் அரசாங்க காசாச்சே என டிகிரி முடித்தவர்கள் எல்லாம் க்யூ கட்டி நின்றார்கள். வேலையும் கிடைத்தது.
அடுத்து திமுக ஆட்சிக்கு வந்தது. ஊருக்கு ஊர் இருந்ததை தெருவுக்கு தெரு கொண்டும் போய் சேர்த்தார்கள். டாஸ்மாக்கில் வேலை பார்ப்பவனை கேவலமாக பார்த்த காலம் போய் அங்கு வேலை பார்ப்பவனுக்கும் பெண் தர நான் நீ என போட்டி போடும் நிலைக்கு பணியாளர்களுக்கு சம்பளத்தை வாரி வழங்கினார்  வள்ளள் மகான் கலைஞர்.
2011 ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. மீண்டும் புரட்சி தலைவி அம்மா வந்து அமர்ந்தார். இந்த தீபாவளி டாஸ்மாக் சேல்ஸ் ஒரே நாளில் 260 கோடி தமிழகத்தில் என மகிழ்ச்சி அறிவிப்பு தரும் அளவுக்கு போய்விட்டது அரசாங்கம். பால் புட்டியை மறக்காததுகள் எல்லாம் டாஸ்மாக் வாசலில் நிற்கின்றன.  கடந்த 5 ஆண்டுகளாக குடி எதிராக கும்மியடித்த தமிழ்குடிதாங்கி தற்போதைய ஆட்சியில் எங்கு போனார் என தெரியவில்லை.
டாஸ்மாக் வருமானம் தான் நாட்டை காப்பாற்றுகின்றன என சொன்னவர், தற்போது அந்த வருமானத்தை பெருக்க அதாவது குடிமகன்களுக்கு நல்லது செய்ய முடிவு செய்துவிட்டார் தங்கத்தாய்.
எப்படியென்றால் தற்போது தெருவுக்கு தெரு உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு அருகே உள்ள பார்கள் அந்த கால டூரிங் டாக்கிஸ் கொட்டைகைப்போல் உள்ளதால் குடிமகன்கள் அதிகம் சிரமப்படுகிறார்கள். அவர்களுக்கு வசதி செய்து தர முடிவு செய்த தமிழர்களை பெற்று எடுத்த தங்கத்தாய் குளு குளு பார்களை ஏற்பாடு செய்து தர உத்தரவிட்டுள்ளார். அந்த பார்கள் த்ரி ஸ்டார் ஹோட்டல் ரேஞ்ச்க்கு தரம்மாக இருக்க வேண்டும்மென அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுவிட்டுள்ளார். அதற்கான பூர்வாங்க பணிகள் தொடங்கிவிட்டன. இன்னும் ஓரிரு மாதங்களில் ஏசி பார்களில் ஓய்யாரமாக காலாட்டிக்கொண்டு விதவிதமான சைட்டிஸ்களோடு போதையில் மிதக்கலாம்.

கேட்காமலே குடிமகன்களுக்கு சலுகைகள் செய்து தரும் எங்கள் குல விளக்கே, நீங்கள் நீடூடீ வாழ நெப்போலியனை வேண்டிக்கொண்டு உங்களது மேலான கவனத்திற்க்கு சில கோரிக்கைகளை குடிமகன்கள் சார்பாகவும், தமிழகத்தின் நலன் சார்பாக சில கோரிக்கைகள் வைக்க ஆசைப்படுகிறேன்…..

    நீங்கள் அமைக்கும் குளு குளு பார்களில் தொலைக்காட்சி பெட்டிகளை வைத்துவிட்டால் குத்து பாட்டுகளோடு சரக்கடிப்போம்.
    பெரிய பெரிய ஹோட்டல்களில் தருவதை போல குட்டை பாவாடை போட்டுக்கொண்ட கேள்ஸ் வந்து சப்ளை செய்ய ஆவன செய்தால் சிறப்பாக இருக்கும். இது எங்களுக்காக அல்ல. தமிழகத்தில் வேலை வாய்ப்பு இல்லாமல் ஆயிரக்கணக்கான கன்னிப்பெண்கள் உள்ளார்கள். அவர்களுக்கு தங்களது ஆட்சி காலத்தில் வேலை வாய்ப்பு கிடைக்க வேண்டுமே என்ற நம்பாசை தாயே.
    மனைவியோடு வந்து குடித்தால் 20 சதவிதம், பிள்ளைகளோடு வந்து குடித்தால் 40 சதவிதம் தள்ளுபடி என அறிவித்தீர்கள் என்;றால் தினமும் குடும்பத்தோடு வந்து குடிப்போம். நாட்டுக்கு வருமானம் இன்னும் பெருகும்.
    ரேஷனில் இலவச அரிசி வாங்க வேண்டும் என்றால் முதலில் 1பீர், ஆப் பிராந்தி வாங்க வேண்டும் என சட்டம் போடுங்கள் தாயே.
    பள்ளிகளில் பிள்ளைகளுக்கு காலையில் பீர், மதியம் கட்டிங் தந்தால் சிறப்பாக படிப்பார்கள் என அண்டார்டிகாவில் ஒரு ஆய்வு முடிவு கூறியுள்ளது. அதனால் அம்மா இந்தியாவில் பிள்ளைகளுக்கு இலவசமாக சரக்கு வழக்கும் திட்டத்தை கொண்டு வந்தால் இனி தமிழகத்தில் அம்மா ஆட்சி மட்டுமே.
    குடித்துவிட்டு ரோட்டில் கிடப்பவர்களை, வாகனம் ஓட்ட முடியாதவர்களை வீட்டில் கொண்டும் போய் விட ப்ரி டாக்ஸி சர்விஸ் கொண்டு வரவேண்டும்.
    108 போல 111 சர்வீஸ் ஆரம்பித்து குடிக்க வெளியே வர முடியாதவர்கள் இந்த நம்பர்க்கு கால் செய்தால் விடு தேடி சரக்கு வரும் திட்டம் கொண்டு வரலாம்.

    குடிகாரர்களை உருவாக்கும் சங்கம் தொடங்கவைத்து அதில் சிறப்பாக செயல்படுபவர்களுக்கு தமிழக அரசின் சார்பில் விருது வழங்கினால் சிறப்பாக இருக்கும்.

இந்த கோரிக்கைகளை நிறைவேற்றினீhகள் என்றால் 2020ல் தமிழகம் வல்லரசாகிவிடும். இந்தியாவில் கேரளா படித்தவர்களில் முதல் மாநிலமாகவுள்ளது. நாம் குடிப்பதில் முதல் மாநிலம் என்ற பெருமையை பெற தமிழகத்தில் குடிக்காதவர்களே இல்லை என்ற நிலையை அம்மா அவர்கள் உருவாக்க வேண்டும் அதற்காக உணவு, உறக்கம் இல்லாமல் தினமும் 48 மணி நேரம் கண்ணும் கருத்துமாக செயல்பட வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். அதற்க்கு தங்களுக்கு நாங்கள் எப்போதும் உருதுணையாய் இருப்போம் என்பதை நைன்ட்டி மேல் சத்தியமாக கூறுகிறேன்.