திங்கள், நவம்பர் 28, 2011

தமிழர்களை கேவலப்படுத்திய சீமான்.


நவம்பர் 27 மாவீரர்கள் நாள் என்பது உலகம் முழுவதும் வாழும் ஈழத்தமிழர்களின் விசேஷ நாள். 2009ம் ஆண்டு வரை உலக தமிழர்கள், நாடுகளின் தலைவர்கள், வெளியுறவுத்துறை அதிகாரிகள், அமைச்சர்கள், உலக நாடுகளின் புலனாய்வு அமைப்புகள் எல்லாருமே மாவீரர் தினத்தன்று பிரபாகரன் உரையை கேட்க தவம் கிடப்பார்கள். அந்த உரைக்கு பின் உரையை ஆய்வு செய்யும் பணியும் தொடங்கிவிடும்.
2009க்கு பின் ஈழத்தில் ஆயுதபோராட்டம் ஒரு முடிவுக்கு வந்தபின் பிரபாகரன் உட்பட முக்கிய தலைவர்கள் என்னவானார்கள் என்பது இன்று வரை ஒரு கேள்விக்குறியாகவே உள்ளது. இதனால் 2009க்கு பின் மாவீரர் நாளன்று பிரபாகரனின் தம்பிகள், அவருக்கு நம்பகமானவர்கள் என கூறிக்கொள்ளும் பல ‘தலைவர்கள்’ உரையாற்றவும், அறிக்கை விடவும் தொடங்கியுள்ளார்கள்.
நாம் தமிழர் என்ற அமைப்பை தொடங்கி அதை சட்டமன்ற தேர்தல்க்கு முன் கட்சியாக மாற்றி அதிமுகவுக்கு பிரச்சாரம் செய்த அதன் தலைமை ஒருங்கிணைப்பாளரும், இயக்குநரும், நடிகருமான சீமான், இந்த ஆண்டு(2011) மாவீரர் நாள் உரையை கடலூர் நகரில் ஒரு மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தில் உரையாற்றியுள்ளார்.
அங்கு அவர் பேசியதாக மீனகம் இணையதளம் வெளியிட்டுள்ள ஒரு செய்தி, தமிழர்கள் தமிழகத்தில் உள்ள பல அரசியல் கட்சியிலும் உள்ளனர். ஆனால் தமிழர்களுக்காக போராடும் நாம் தமிழர் கட்சியில் இல்லை. நாம் தமிழர் கட்சியில் இல்லாதவர்கள் ஒரு நல்ல தாய் தகப்பனுக்கு பிறந்தவர்களாக இருக்க முடியாது என கேவலமாக பேசியுள்ளார்.

ஒருவர் எந்த கட்சியில் இருக்க வேண்டும் என முடிவு செய்வது ஒவ்வொருவருடைய தனிப்பட்ட விருப்பம். அதில் யாருமே தலையிட முடியாது. நூன் தமிழர்களுக்காக உழகை;கிறேன், குரல் கொடுக்கிறேன் என்கிற சீமான், அவர் இயக்கிய வாழ்த்துக்கள் படத்தில் மும்பையை சேர்ந்த நடிகர் மாதவனுக்கு ஜோடியாக போட்டது கேரளா நடிகையை, அதன்பின் வந்த தம்பி படத்தில் அதே மாதவனுக்கு சிங்கள நடிகை பூஜாவை ஜோடியாக போட்டார். சீமான் காதலித்து, பலமுறை கர்ப்பத்தை கலைக்க வைத்து கைவிட்ட நடிகை விஜயலட்சுமி கர்நாடகாவில் வாழும் நடிகை. ஏன் தமிழ் நடிகர்கள், நடிகைகள் யாரும் சீமான் கண்ணுக்கு தெரியவில்லையா?.
மற்ற அரசியல் தலைவர்களைப்போலத்தான் சீமானும், அவர்கள் தமிழ்க்காக, தமிழர்களுக்காக ஏதோ ஒன்றை செய்துவிட்டு கொள்ளையடித்தார்கள். சீமான் தனது உணர்ச்சி வார்த்தைகளால் பேசி தமிழ் மக்களை ஏமாற்றினார். சீமான் சோரம் போனதுப்பற்றி பல தகவல்கள் வருகின்றன. சீமான் நம்ப வைத்து கழுத்து அறுத்தவர்கள் யார், யார் என்பது கூறினால் சீமான் தாங்கமாட்டார். அவர் நாம் தமிழர் இயக்கத்தில் சேராதவர்கள், நல்ல தாய் தகப்பனுக்கு பிறந்தவர்களில்லை எனக்கூறியுள்ளார்.
நாக்கு நீளம், வாய் அகலம் என்பதற்காக எதையும் பேசக்கூடாது. உணர்ச்சிகளை கட்டுப்படுத்துபவன் தான் தலைவன். முதல்வராக ஜெயலலிதா வந்தால் ஈழம் பிறக்கும் என பிரச்சாரம் செய்த சீமான் ஜெ முதல்வாரன பின், தமிழனாக பிறந்த ஒவ்வொருவரும் புரட்சிதலைவியை வாழ்த்த வேண்டும் என்றார்.

மூன்று பேரின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியபோது, ஈழத்தாய் என மேடை போட்டு பாராட்டினார். ஆனால் அவற்றின் இன்றைய நிலை.

அரசியல் தெரியாத, பணம் சம்பாதிக்க இயக்கம் தொடங்கி வாய் கிழிய, இளைஞர்களின் உணர்ச்சிகளை தூண்டிவிடும் அளவுக்கு பேசும் சீமான் இனியாவது வார்த்தைகளை அளந்து பேசவேண்டும். இல்லையேல் தமிழர்கள் தக்க பாடம் புகட்டிவிடுவார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக