செவ்வாய், நவம்பர் 29, 2011

திருந்தாத ‘காவல்’ நாய்கள்.




தமிழக காவல்துறைக்கு பலப்பல சலுகைகள் ஆட்சியமைத்த 6 மாதத்திலேயே முதல்வர் ஜெயலலிதா வாரி வழங்கியுள்ளார். ஆனால் எவ்வளவு சலுகைகள் கிடைத்தாலும் நாங்கள் மாறமாட்டோம் என்பதை மீண்டும் மீண்டும் நிருபிக்கிறார்கள் காவல்துறையில் உள்ள சில ஓநாய்கள். 

அத்தியூர் விஜயா மானபங்கம், ரீட்டாமேரி கற்பழிப்பு, சிவகாசி ஜெயலட்சுமியிடம் விழுந்த காவல் அதிகாரிகள் என ஒவ்வொரு காலகட்டத்திலும் போலிஸாரின் முகத்திரை கிழிக்கப்படுகிறது. தற்போது, விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூரை அடுத்த மண்டபம் கிராமத்தை சேர்ந்த இருளர் சமூகத்தை சேர்ந்த 4 இளம் பெண்கள் திருக்கோவிலூர் போலிஸார் மீது கற்பழிப்பு புகார் ஒன்றினை மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் தந்து நீதி கேட்டுள்ளார்கள். 

பிரச்சனை பெருசாகி தலைவர்கள் அறிக்கைகள் விட்டதும், புகார் பதிவானது. தாங்கள் கற்பழிக்கப்பட்டது பற்றியும், அது யார் யார் என அப்பெண்கள் நீதிபதியிடம் வாக்குமூலமாக தந்துள்ளார்கள். உடனே காவல்துறை தலைமை, அந்த காவல்நிலைய ஆய்வாளர் உட்பட 5 காவலர்களை இடைக்கால பணி நீக்கம் செய்துள்ளது. 

அடுத்து…………..?

விசாரணை நடக்கும். நியாயமாக நடக்கும்மா என்பது பெரிய கேள்விக்குறி. காரணம், அரசு துறை ஊழியர்களிடத்தில் ஒரு நோய் உள்ளது. அதாவது நீதித்துறை-காவல்துறை-மருத்துவதுறை-வருவாய்துறை இடையே ஒரு இழை போன்ற நட்புயிருக்கும். இவர்களின் நேசம் கரைபுரண்டோடும். 

காவல்துறையை சார்ந்தவர்க்கு ஒரு பிரச்சனை என்றால் வருவாய்துறையும், மருத்துவத்துறையில் பணியாற்றுபவர்க்கு ஒரு சிக்கல் என்றால் காவல்துறையும் நேரடியாக இல்லாவிட்டாலும் மறைமுகமாக உதவுவார்கள். அரசு ஊழியர்கள் தங்களுக்குள் விட்டு தரமாட்டார்கள். நீதி வளையும். உண்மை மறைக்கப்படும். இதற்க்கு எத்தனையோ சம்பவங்கள் இங்கு உண்டு. இதை ர்Pட்டாமேரி, விஜயா வழக்கிலேயே காண முடிந்தது. அதையும் மீறித்தான் மனித உரிமை ஆர்வலர்களின் போராட்டத்தால் நீதி வென்றது. இருள சமுகத்தை சேர்ந்த பெண்களின் விவகாரத்திலும் வழக்கு, வாய்தா என போனாலும் இதை ஒன்னும்மில்லாமல் ஆக்கத்தான் அரசுதுறை முயலும். 

காவல்துறையில் இருக்கும் பெரும்பாலானவர்கள் அந்த காக்கி உடையை மாட்டும் போதே, மனசாட்சியை கழட்டி வீட்டு ஆணியில் தொங்கவிட்டுவிட்டு அதிகார போதை தலைக்கு ஏறிய பின்தான் பணிக்கு வருகிறார்கள். மேலதிகாரி மீதான வெறுப்பை, பணிச்சுமையை திருட்டு வழக்கில் மாட்டும் திருடர்களிடம் காட்டி கோபத்தை தீர்த்துக்கொள்கிறார்கள். இரவில் மனைவியுடன் படுக்கமுடியவில்லை என்பதற்க்காக இப்படி அப்பாவி பெண்களை வேட்டையாடுவது எந்த விதத்தில் நியாயம். 

செக்ஸ் என்பது ஒரு உன்னதமானது. மனிதனுக்கு மட்டுமல்ல மிருகங்களுக்கும், பறக்கும் பறவைகளுக்கும் அந்த மோகம் உண்டு. ஆனால் அது இருமனம் ஒத்து செய்யவேண்டியது. ஊடலின் போது இருவரில் ஒருவருக்கு விருப்பமில்லையென்றாலும் அந்த மோகம் வீணானது. காமத்தை அனுபவிக்கும் போது மனதில் ஒரு புத்துணர்ச்சியிருக்க வேண்டும். வெறி இருக்ககூடாது. காவல்துறையில் இருக்கும் சில கறுப்பாடுகளுக்கு இருப்பது மோகம்மல்ல. வெறி. 

இந்த வெறிநாய்களை விசாரணை என்ற பெயரில் உல்லாசமாக இருப்பதை அனுமதிப்பதை விட மோகம் வந்தால் அனுபவிக்க முடியாத வகையில் ‘அதை’ கட் செய்து விட வேண்டும். அப்போது தான் இதுபோன்ற வெறிநாய்கள் திருந்துவார்கள்.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக