அட அந்தம்மாவுக்கு தப்பாமல் இருக்கிறார் இந்த மகளிரணி பிரமுகர். உள்ளாட்சி தேர்தலின் போது மேயர் வேட்பாளர்களை ஜெ அறிவித்த பட்டியலில் ஈரோடு மேயர் வேட்பாளர் மல்லிகா என இருந்ததை கண்டு ரரக்களே அதிர்ச்சியாகினர். காரணம், அவர் 1999ல் விபச்சார வழக்கில் காவல்துறையிடம் சிக்கி வழக்கை எதிர்கொண்டவர் என ஆதாரத்தோடு அவரது கட்சியினரே போஸ்டர் அடித்து ஒட்டினர். இது செய்தியாக அப்போதே சர்ச்சையானது. ஈரோடு மா.செம் அமைச்சராக இருந்த ராஜாவின் அராஜகத்தை விட இது பரவாயில்லை என விபாச்சார வழக்கில் சிக்கிய மல்லிகாவை மேயராக்கினார்கள் ஈரோடுவாசிகள்.
இப்போது அதே ஈரோடுவாசிகள் ராஜா பரவாயில்லை என பேச வைத்துவிடுவார் போல் உள்ளது. ஈரோடு மாநகர மேயர் மல்லிகாபரமசிவம். துணை மேயர் பழனிச்சாமி. இருவரும் அதிமுகவினர். இவர்களுக்குள் மாநகராட்சியில் அடிக்கடி தகராறு ஏற்படுவதை சம்பவத்தோடு காலைக்கதீர் நாளிதழ் தொடர்ந்து செய்தியாக வெளியிட்டு வந்துள்ளது.
இதனால் கோபமான மேயர் மல்லிகா தன் பரிவாரங்களோடு 30ந்தேதி மதியம் ஈரோட்டில் உள்ள காலைக்கதிர் அலுவலகத்திற்க்கு சென்றவர். அலுவலகத்தில் புகுந்து யார்ரா அவன் என்னைப்பத்தி தொடர்ந்து செய்தி எழுதறது என தகராறு செய்ததோடு, என்னடா ஆபிஸ் நடத்தறிங்க, பெரிய இவனுங்களாடா நீங்க என எகிறியதோடு அங்கிருந்த டெலிபோன், கம்யூட்டரை கீழே தள்ளிவிட்டு இனிமே என்னைபத்தி எழுதன உங்களை ஒழிச்சிடுவன் என மிரட்டிவிட்டு நகர, உடன் வந்திருந்த மகளிரணிகள் அசிங்க அர்ச்சனை வேறு நடத்தியுள்ளனர்.
இந்த மிரட்டலை உடனே ஈரோடு பத்திரிக்கையாளர்கள் கவனத்துக்கு செல்ல அவர்கள் எஸ்.பி பன்னீர்செல்வத்தை சந்தித்து புகார் வாசித்துள்ளனர். அவர் விசாரிக்கறன் போய்ட்டு வாங்க என்றுள்ளார். ஒரு அதிகாரி வந்து விசாரித்துவிட்டும் சென்றுள்ளார்.
இதற்க்கு மேல் காவல்துறையால் என்ன செய்ய முடியும். கை கட்டி வேடிக்கை பார்க்கலாம் இல்லையேல் மேயர் அல்லது உடன் போன மகளிரணி பிரமுகர்களிடம் செய்தி ஒன்றை தர அலுவலகம் சென்றோம். அங்கே அவர்கள் எங்கள் கையை பிடித்து இழுத்து ‘அதுக்கு’ கூப்பிட்டான் என புகார் வாங்கி காலைக்கதிர் ஊழியர்கள் மீது வழக்கு போடுவார்கள். ஏன் என்றால் மிரட்டியது ஆளும்கட்சி. அதுவும் ஜெவின் மகளிரணி, மேயர். அவர் மீது புகார் தந்தால் நடவடிக்கை எடுக்குமா அடிமை சேவகம் செய்யும் காவல்துறை.
இதே காரியத்தை கலைஞர் ஆட்சி காலத்தில் ஏதோ ஒரு முக்கிய பிரமுகர் செய்திருந்தால், ஜெ குதித்திருப்பார். அவரின் ஆதரவாளர்கள் வானத்துக்கும் பூமிக்கும் நடுநிலை என்ற பிம்பத்தை பூசிக்கிட்டு வாய்கிழிய கத்தியிருப்பார்கள். அறிக்கைகள் பறந்திருக்கும். இது ஜெ ஆட்சி காலம் என்பதால் அடக்கமோ அடக்கம்.
மேயர் மல்லிகாவுக்கு பத்திரிக்கை அலுவலகம் சென்று மிரட்டும் அளவுக்கு தெரியம் வரக்காரணம். அவருக்கு அமைச்சர் இராமலிங்கத்தின் அதீத ஆதரவு இருப்பது மட்டுமல்ல. கடந்த காலத்தில், ஆதாரங்களோடு எழுதியதற்க்கே அதிகார போதையில் பத்திரிக்கை ஆசிரியரை பொடா வில் உள்ளே தள்ளியவர் முதல்வர் நாற்காலியில் வீற்றிருக்கும் ஜெ. பத்திரிக்கை அலுவலககத்துக்குள் புகுந்து ஏவலர்களை விட்டு பத்திரிக்கையாளர்களை தாக்க உத்தரவிட்ட ஜெ வின் மகளிரணி பிரமுகர் எப்படியிருப்பார். அவரைப்போலத்தானே.
ஒருவரைப்பற்றி தவறாக செய்தி வருகிறது என்றால், தவறான செய்தி என கூறி மன்னிப்பு கேட்க சொல்லியிருக்கலாம் அ மறுப்பு போட சொல்லியிருக்கலாம் அ வழக்கு தொடர்ந்துயிருக்கலாம் அ இந்திய பிரஸ் கவுன்சிலில் முறையிட்டுயிருக்கலாம். இவ்வளவு வழிகள் இருக்க ரவுடிப்போல அலுவலகத்துக்குள் புகுந்து மிரட்டுவது என்பது அதிகார போதை. ஒரு பத்திரிக்கை அலுவலகத்துக்குள் புகுந்து செய்தியாளர்களை மிரட்ட ஆண் அரசியல்வாதிகள் கூட தயங்குவார்கள். ஆனால் அதை இந்த பெண் மேயர் தைரியமாக செய்துள்ளார். இதற்காக வேண்டுமானால் பாராட்டலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக