வெள்ளி, டிசம்பர் 02, 2011

காம தேடலில் கண்ணாமூச்சி.


வித்தியாசத்துக்கு பேர்போனவர்கள் மேற்கத்திய நாட்டினர். தொட்டதுக்கெல்லாம் வழக்கு போடுபவர்கள் ஆனால் தொடாததை குத்தம் சொல்லி ஒரு பெண்மணி வழக்கு போட்டுள்ளார். பிரான்ஸ் நைஸ் நகரை சேர்ந்தவர்கள் அத்தம்பதியினர். 1986ல் கல்யாணமாகி 2 குழந்தைகள் பெற்றவர்கள். 2009ஆம் ஆண்டு கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவகாரத்து வாங்கிவிட்டார். விவகாரத்து ஆன சிலமாதங்கள் பொருத்து, என் கணவருடன் நான் சேர்ந்து வாழும் போது என் மனநிலையை புரிந்து என்னுடன் அவர் சந்தோஷமாகயில்லை, செக்ஸ் வைத்துக்கொள்ளவில்லை. அதனால் மனஅழுத்தம் ஏற்பட்டுவிட்டது என வழக்கு தொடர்ந்தார்.
வழக்கு நடந்தது, பணிச்சூழல், டென்ஷன் போன்றவற்றால் அவருடன் சரியாக தொடர்ந்து செக்ஸ் வைத்துக்கொள்ள முடியவில்லை என்றார் கணவர். இதனை நீதிபதிகள் ஏற்றுக்கொள்ளவில்லை. கல்யாணத்திற்க்கு பின், தம்பதிகள் மனம் ஒத்துவாழ வேண்டும். கணவன் மனைவி இருவரும் தங்களது உடல் தேவைகளை புரிந்து மற்றவர்களின் எண்ணத்தை பூர்த்தி செய்யும் வகையில் தாம்பத்திய உறவு கொள்ளவேண்டியது கடமை என தீர்ப்பளித்ததோடு மனைவியின் தேவையை பூர்த்தி செய்யாத அந்த முன்னால் கணவருக்கு 7 லட்சம் அபராதம் விதித்துள்ளது கோர்ட்.

அதேபோல் இன்னோரு மேற்கத்திய நாடான ஆஸ்த்திரியாவின் வியன்னா நகரில் செக்ஸ்சை கற்று தர உலகின் முதல் கல்வி கூடத்தை யுவாமரியா தாம்சன் என்ற பெண்மணி திறந்துள்ளார். இருபாலருக்குமான இந்த கல்விக்கூடத்தில் பாலியல் பாடத்தில் வெற்றி பெறுவது எப்படி என்பதை கற்று தரப்போகிறார்களாம். இங்கு பாடபுத்தகம் மட்டுமல்லாமல், பிராக்டிக்கல் பாடமும் உண்டு. இங்கு சேர 16வயது பூர்த்தியாகியிருக்க வேண்டும். வீட்டு பாடமும் உண்டு. ஆனால் வீட்டுக்கு செல்ல முடியாது. இரவிலும் விடுதியில் தங்கி படிக்க வேண்டும் என்பதே முக்கியவிதி. பாடத்துக்கு பீஸ் 1.5 லட்சம் தான். எக்ஸாமில் பாலியல் கல்வியை பற்றி சிறப்பாக தேர்வு செய்தால் திறமையானவர் என்ற சான்றிதழ் உண்டு. பள்ளியை தொடங்கிய பெண்மணி, பள்ளியில் சேருபவர்களை பாலியலில் சிறந்த மனிதராக உருவாக்க வேண்டுமே என்பதே தலயாய லட்சியம் என்றுள்ளார். 

முதலில் குறிப்பிட்ட வழக்கை போல ஒரு வழக்கு இந்தியாவில் தொடுத்தால் ஏற்றுக்கொள்வார்களா?, இந்தியாவில் கலவி கல்விக்கூடம் யாராவது தொடங்கினால் என்ன நடக்கும் என யோசித்தபோது மலைப்பாக இருந்தது.

கலவி என்பது இந்தியாவில் தீண்டதகாத வார்த்தையாகி பேசுவதும், எழுதுவதும் மாபெரும் குற்றம். அதிலும் செக்ஸ் பற்றி ஒருபெண் எழுதிவிட்டால் உலகமே அழிந்துவிடும் என்பதை போல் விமர்ச்சிக்கப்படுகிறது. இதனை நேர்மையுடன் நோக்கினால், ஒவ்வொரு மனிதனின் உடலிலும், மனதிலும் காமம் உண்டு. அது இல்லாதவர்கள் ஜடம். காமத்தை இருபாலருமே வயது வித்தியாசமின்றி சிலர், நண்பர்கள் மத்தியில் வெளிப்படையாக பேசுவார்கள். பலர் யாரிடமும் அதைப்பற்றி பேசுவதில்லை. காரணம் மற்றவர்கள் எங்கே தன்னை தப்பாக புரிந்துக்கொள்வார்களோ என்ற பயம்.

தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியாவில் கள்ளக்காதல் அதிகமானதற்க்கு காரணம், தம்பதிகள் தங்களது காம ஆசையை தங்களுக்குள் பகிர்ந்துக்கொள்வதில்லை. பெரும்பாலான ஆண்கள். துணையின் தேவையை புரிந்துக்கொள்வதில்லை. இயற்கையாகவே ஆண்களை விட பெண்களுக்கு காம உணர்ச்சி அதிகம். அவர்களை திருப்தி செய்ய உறவின்போது கால தாமதமாகும். இதை ஆணாதிக்க மனம் கொண்ட ஆண்கள் புரிந்துக்கொள்வதில்லை. இதனால் 90 சதவித ஆண்கள் தன் ‘தேவை’ நிறைவேறியதும் குறட்டை விட தொடங்கிவிடுகிறான். இது பெண்களை மனரீதியாகவும். உடல் ரீதியாகவும் வேதனை அடைய செய்கின்றன.

அதேபோல் இன்றைய நவீன யுகத்தில் பெண்களும், அடிக்கடி உறவு கொண்டால் உடல் பருத்துவிடும், அழகு கெட்டு விடும், மந்தாரங்கள் பொலிவிழந்துவிடும் என ஆசையுடன் கணவன் நெருங்கிவரும் போது தவிர்த்து விடுகின்றனர். ஆண்களின் காம தேவைகளை பெண்களும் சில நேரங்களில் புரிந்துக்கொள்வதில்லை.

இப்படி சிலர் இருந்தாலும் முன்பே குறிப்பிட்டதை போல, பெரும்பாலான தம்பதிகள் தங்களுக்குள் பஞ்சனை தேவைகள் பற்றி விவாதிப்பதேயில்லை. இதனால் இருவருக்கும், காமத்தில் முழு சுகமும் கிடைக்காமல் விரக்தியில், தன் தேவையை பூர்த்தி செய்துக்கொள்ள துணையை தவிர்த்து ரகசிய இணையை தேடுகிறார்கள். மற்றான் தோட்டத்து மல்லிகை மேல் ஆசை பொங்குகிறது. துணையுடன் நிறைவேறாத உள்மன ஆசைகள் மாற்றான் தோட்டத்தில் அடையும்போது விதவிதமாக அனுபவிக்கிறார்கள். தம்பதிகளுக்குள் நெருக்கம் குறைய மற்றொரு காரணம், பணத்தை நோக்கி மனிதன் வேகவேகமாக ஓட தொடங்கியபின் காமம் என்பது 5 நிமிட விவகாரம் என நினைக்க தொடங்கிவிட்டான். இது தற்போது அதிகமாக தொடங்கியுள்ளது. அதைத்தான் அந்த பிரான்ஸ் பெண்மணியின் வழக்கு காட்டுகிறது. இந்தியாவிலும் அதிகமாகத்தான் உள்ளது. வெளியே வருவதில்லை.

காமம் என்பது, தடவுதல், முத்தமிடுதல், உணர்ச்சிகளை தூண்டுதல், உறவுக்கொள்ளுதல், தழுவுதல் என்ற பரிமாணங்களை கொண்டது. அதை படிப்படியாக செய்து உச்சத்தை தம்பதிகள் அடைய வேண்டும் என்பது காம சாஸ்த்திரத்தின் கோட்பாடு. உலகத்துக்கு காம சாஸ்த்திரம் என்ற நூலை தந்த இந்தியாவில் தான் காமம் என்பது தீண்டதகாத வார்த்தையாகியுள்ளது.

அய்யா பிரதமர் மன்மோகன்சிங் அவர்களே, வெளிநாட்டு சில்லரை வியாபார நிறுவனங்கள், நிதிநிறுவனங்கள், வங்கிகள், பல்கலைகழகங்களை மேற்கத்திய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்கிறீர்கள். அந்த ஆஸ்த்திரேலியா பெண்மணியிடம் பேசி, அந்த கலவி கல்விச்சாலையின் ஒரு கிளையை இந்தியாவில் தொடங்கச்சொல்லுங்கள்……………

2 கருத்துகள்: