செவ்வாய், டிசம்பர் 27, 2011

உணர்வில்லாத பணத்தாசை பிடித்த சினிமா பிசாசுகள்.பணத்தாசை பிடித்த பிசாசுகள் தமிழகத்தில் வாழும் சினிமா நட்சத்திரங்கள். அதற்க்கு தற்போது வெளிப்படை சாட்சியாகி விட்டார்கள் நடிகை சங்கீதா அவரது கணவர் பாடகர் கிரிஷ், சூப்பர் ஸ்டார் ரஜினி, நடிகர் சங்க தலைவர் சரத்குமார் எம்.எல்.ஏ உட்பட சினிமா துறையினர். 

முதலில் நடிகை சங்கீதா விவகாரத்துக்கு வருவோம். ஈழ துரோகியான இலங்கை அமைச்சர் கருணா, விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து விலகிய பின் விடுதலைப்புலிகளின் நடவடிக்கைகளை காட்டிக்கொடுத்ததோடு இராணுவத்துக்கு வழிகாட்டியாக இருந்து போர் காலத்தில் மக்களை கொல்லவும் துணை போனவன். போர் முடிவுக்கு பின் புலம்பெயர் நாடுகளில் உள்ள ஈழத்தமிழர்கள் சிங்கள அதிபர் இராஜபக்சே அன் கோ வுக்கு எதிராக உணர்வுடன் போராடி வருகின்றனர். அதை நசுக்க சிங்கள அரசு பல குறுக்கு வழிகளை செய்து வருகிறது. அதாவது ஈழத்தமிழர்களிடம் புகுந்து பிரித்தாளுவது, நசுக்குவது. 

தமிழர்கள் சினிமா பைத்தியங்கள் என்பதை உணர்ந்தே போராடும் தமிழர்களை பிரிக்க சினிமா நடிகர்களை பயன்படுத்தும் திட்டத்திற்க்கு வந்தனர். இலங்கையில் உள்ள தமிழர்கள் வாழும் அகதி முகாம்க்கு பலநாட்டு இராஜதந்திரிகள், விசாரணை குழுவினர் பார்வையிட வேண்டும் என கேட்டபோது மறுத்த சிங்கள அரசு, தமிழகத்தில் பிரபலமாக உள்ள கேரளா நடிகை அசினை அழைத்தும் போய் முகாமில் இருந்த மக்களுக்கு ஷோ காட்டியது. அடுத்து திரைப்பட விழா நடத்தியது. சிங்கள விழா ஒன்றுக்கு, பாடகர் மனோ, பாடகர் கிரிஷ் ஆகியோர் மக்களை மகிழ்விக்க பாடல் பாட 50 லட்சத்திற்க்கு மேல் தந்து புக் செய்தது. இதெல்லாம் உலக நாடுகளை ஏமாற்ற இந்தியா தரும் திட்டப்படி இலங்கை செய்யும் சூழ்ச்சி என்ற கண்டனம் எழுந்ததும் பாடகர் மனோ பின் வாங்கினார். அப்போது மனோ மட்டும்மே தவறு செய்துவிட்டேன் இனி செய்யமாட்டேன் என்றார். கிரிஷ் கருத்து கூறவில்லை. 

தற்போது புத்தாண்டு கொண்டாட்டத்திற்க்கு சுவிஸர்லாந்தில் புத்தாண்டு விழா நடத்துகிறான் துரோகி கருணா. அதற்க்கு நடிகர் ஜீவா, அவரது நெருங்கிய சினிமா தோழி சங்கீதா, சங்கீதாவின் கணவர் பாடகர் கிரிஷ் ஆகியோர் செல்கின்றனர். இதற்க்காக 1 கோடி ரூபாய் அளவுக்கு இவர்களுக்கு சம்பளம் பேசப்பட்டள்ளதாக கூறப்படுகிறது. 

இதற்க்கு கண்டனம் எழுந்ததும், 26ந்தேதி செய்தியாளர்களை சந்தித்த சங்கீதா. இணைய தளத்தில் எழுதியும், போன் செய்தும் போககூடாது என மிரட்டுகிறார்கள். நான் யார் மிரட்டலுக்கும் பயப்படபோவதில்லை. தமிழ் மக்களுக்காகவே போகிறேன் அந்த மக்களுடன் இருப்பது எனக்கு சந்தோஷமாக உள்ளது. அதனாலயே அங்கே போகிறேன் என்றார். அவரது கணவரோ, நான் ஒரு பாடகன். எனக்கு பாட மட்டுமே தெரியும். அரசியல் தெரியாது. நாளை உங்கள் வீட்டில் ஒரு விழா என்றால் வந்து பாடப்போகிறேன். நாங்கள் கலைஞர்கள் எங்களை எதனால் தடுக்க வேண்டும், மிரட்ட வேண்டும் இது தமிழர்களுக்கான விழா என நிருபிக்கிறார்கள் அதனால் போகப்போகிறோம் என்றார் திமிருடன். மீண்டும் பேசிய சங்கீதா, இதுப்பற்றி நடிகர் சங்க தலைவர் சரத்குமாரிடம் பேசினேன். நீ எங்கு வேண்டுமானாலும் போங்கள் சங்கத்துக்கு ஆட்சேபனையில்லை எனக்கூறிவிட்டார் என்றார்.

அடுத்து ரஜினி விவகாரம். முல்லை பெரியார் விவகாரம் இரண்டு மாதமாக நடந்துக்கொண்டுயிருக்கிறது. இதைப்பற்றி வாய் திறக்காத ரஜினி மேட்டுக்குடி மக்கள் நடத்தும் ஊழலுக்கு எதிரான போராட்டத்துக்கு வாய்ஸ் தருகிறார். தமிழகத்தில் அன்னாஹசாரே அடிப்பொடிகள் உண்ணாவிரதம் இருக்க தனது மண்டபத்தை இலவசமாக தருகிறார். (முதல்ல நீ வாங்கற, சம்பாதிக்கற பணத்துக்கு ஒழுங்கா வரி கட்டுய்யா அப்பறம் ஊழலுக்கு எதிரா குரல் குடுப்ப).

அடுத்து ஆளும்கட்சியின் டிவியான ஜெயா டிவியில் தமிழரான இசைஞானி இளையராஜா மலபார் கோல்ட் நடத்தும் பாட்டு கச்சேரிக்கு ஒப்புக்கொண்டுள்ளார். அடுத்த தமிழக முதல்வர் கனவில் இப்போதே கொடி, இயக்கம் என தொடங்கியுள்ள இளையதளபதி விஜய், ஜாய் ஆலுக்காஸ் விளம்பரத்தில் நடிக்கும் காண்ட்ரக்ட்டை நிறுத்தவில்லை. நடிகர் விக்ரம், மலபார் கோல்ட் பைனான்ஸ் விளம்பரத்தில் நடிப்பதையும் நிறுத்தவில்லை. இப்படி ஒவ்வொரு நடிகர் – நடிகையைப்பற்றியும் சொல்லிக்கொண்டே போகலாம். 

நடிகர் சங்க தலைவராகவும், தமிழக மக்கள் வாக்களித்து தேர்ந்தெடுத்து எம்.எல்.ஏவாக  உள்ள சரத்குமார் போன்ற அல்பங்கள் தமிழகத்தில் உள்ளவரை பக்கத்து மாநிலத்தவன் ஏமாற்றத்தான் செய்வான். தமிழ்நாட்டு ரசிகர்கள் தான் இவர்களை நட்சத்திரங்களாக்கினார்கள். தமிழக மக்கள் வாரி தந்த பணத்தில் கொழுத்துண்டு வாழும் இவர்கள் தமிழர்களுக்கு துரோகம் செய்வார்கள் அதை வேடிக்கை பார்க்க வேண்டும் என்கிறார்கள். கேட்டால் நாங்கள் கலைஞர்கள், எங்களுக்கு மொழி, எல்லை கிடையாது என்கிறார்கள். 

தென்மாவட்ட மக்களின் உயிர் என்றால் அது பெரியார் அணையில் இருந்து வரும் நீர் தான். அதைக்கொண்டு தான் மக்கள் விவசாயம் செய்கிறார்கள். அதற்க்கு அணைப்போட்டு தடுக்கப்பார்க்கிறது கேரளா. இதனை கண்டித்து தென் மாவட்ட மக்கள் உணர்வுடன் போராடி வருகிறார்கள். சில காவல்துறை உயர் அதிகாரிகள் மக்களின் மண்டைகளை பிளக்கிறார்கள். அப்போதும் போராட்டம் ஓயவில்லை. 

கேரளாவில் அனைத்து அரசியல் கட்சிகள், இயக்கங்கள், சினிமா துறையினர் ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்துகின்றனர். தமிழகத்தில் அரசியல் கட்சியினர் மக்களுடன் இணைந்து போராட்டம் நடத்துகின்றனர். ஆனால் மக்களிடம் கோடி கோடியாய் சம்பாதிப்பதோடு, தமிழ் ரசிகனின் பணத்தில் உச்சத்திற்க்கு போகும் தமிழக சினிமாத்துறையினர் ஒரு சின்ன கண்டன அறிக்கை கூட விடவில்லை. இயக்குநர் சங்க தலைவர் பாரதிராஜா உட்பட சிலர் மட்டுமே மே 17 இயக்கம் நடத்திய கண்டன கூட்டத்தில் கலந்துக்கொண்டார்.


பணம் சம்பாதிப்பதில் குறியாக இருக்கும் இந்த தமிழ் சினிமாக்காரர்களுக்கு தமிழனின் உயிரும், உணர்வும் ஒரு பொருட்டே அல்ல. இவர்களை எதிர்த்தால் ஆதரிக்க மற்றொரு தரப்பில் அரசியல் இயகத்திலும், பெரும் அதிகார வர்க்கத்திலும் ஆட்கள் இருக்கிறார்கள் என்ற திமிரும், தமிழன் இளிச்சவாயன் என்ற என்ற எண்ணமும் இருப்பதால் தான் இவர்கள் தமிழர்களுக்கு விரோத சக்திகளுக்கு துணை போகிறார்கள். 

தமிழக மக்களே, முதலில் இந்த சினிமாக்காரர்களை புறக்கணியுங்கள்.  அரசியல்வாதிகளை விட ஆபத்தான பணம் தின்னிகள், உணர்வுகளை மழுங்கடிக்கும் ‘தோல்’வியாபாரிகள் இந்த தமிழ் சினிமாத்துறையினர். 

ஜாக்கிரதை. 

10 கருத்துகள்:

 1. rajini only paid income tax properly. he's got award also. first u know everything and then right

  பதிலளிநீக்கு
 2. முதலீடு இல்லாமல் உங்களாலும் இணயத்தில் சம்பாரிக்க முடியும். இந்த தளம் கடந்த 4 வருடங்களாக மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இது 100 சதவீதம் உண்மை. பணம் பெற்றதற்க்கான Proof உள்ளது.

  http://www.bestaffiliatejobs.blogspot.com/2011/12/get-paid-every-30-seconds.html

  பதிலளிநீக்கு
 3. yenda avan velai avan paarkiraan..sambathikiran

  if u want dont watch their movies..stop taking heroes as gods

  பதிலளிநீக்கு
 4. sariya sonna thalaiva. Velaiya parungappa. Pulambarathe velaiya pochu

  பதிலளிநீக்கு
 5. பைத்தியக்கார தனமான பதிவு.

  பதிலளிநீக்கு
 6. Cine Actors/Actress are after money and fame. We cannot expect moralities from them. Only the Time factor will teach lessons to one and all.

  பதிலளிநீக்கு