வியாழன், டிசம்பர் 29, 2011

ஸாரி மேடம் ( பகுதி 4 )மஞ்சு க்ளாஸ் ரூம்க்குள் நுழையும் போது அவள் அருகில் உட்காரும் அவளது ப்ரண்ட்  தேவி அவளைப்பார்த்து ஹாய் என்றால்

மஞ்சுவோ அவளை முறைத்தபடியே பின்னால் இருந்த பெஞ்ச்சில் போய் உட்கார்ந்தால்.

ஏய் நீ உட்கார்றயிடம் இங்கயிருக்குடீ என தேவி சொல்ல.

முகத்தை உர்ரென வைத்தபடி வேறு பக்கம் திரும்பிக்கொண்டால்.

உள்ளே வந்த நான் தேவியைப்பாத்து மெல்ல ஸ்மையில் செய்தேன். இதைக்கண்டு மஞ்சுவின் முகம் கடுகடுவென மாறியது. 

ஏன் இப்படியிருக்கறா என எண்ணியபடி பசங்களுடன் ஐக்கியமானேன். லஞ்ச் டைமில் வழக்கம்போல் நானும் ஜானும் சாப்பிட்டுவிட்டு வர எதிரே மஞ்சு வந்தால்.

அவளை நிறுத்தி என்னடீ கோபமாயிருக்கற.

என்னை முறைத்துவிட்டு பார்வையை வேறு பக்கம் திருப்பிக்கொண்டால்.

மஞ்சு பின்னாடியே டிபன்பாக்ஸ்சுடன் வந்த தேவி எங்களை பார்த்துவிட்டு வேகமாக அருகில் வந்தவள். என்னிடம் உங்க ஊர்க்காரி இன்னைக்கு சாப்பிடல சாப்பாட்ட கொட்டிட்டு பாக்ஸ கழுவிட்டு வர்றா. எங்கிட்டயும் காலையில இருந்து பேசல. என்னடீன்னு கேட்டா பதில் சொல்லமாட்டேன்கிறா என்றால்.

என்னடீயாச்சி

மவுனமாக நின்றாள்.

எதுக்கு சாப்பிடல.

ஜானையும், தேவியையும் பார்த்து நீங்க க்ளாஸ்க்கு போங்க நான் இவளை சாப்பிட வச்சி கூட்டி வர்றன் என்றன். அவர்கள் கிளம்ப வாடீ என்றேன்.

எனக்கு பசிக்கல என வற மறுத்தால்.

சாயந்தரம் வரைக்கும் சாப்பிடலன்னா வயிறு வலிக்கும் வாடீ என சொல்லிக்கொண்டுயிருக்கும்போதே எங்களது பீ.டி மாஸ்டர் அவரது அறையில் இருந்து வெளியே வந்தவர் நாங்கள் பேசுவதை கவனித்தார். இருவருமே பயந்து போனோம். ஸ்கூலில் கேள்ஸ்சோடு பாய்ஸ் பேசுவது அவருக்கு பிடிக்காது. கூப்பிட்டு வைத்து அடிப்பார். எங்களை பார்த்தவர் திரும்பவும் அறைக்குள் போனார்.

நான் க்ளாஸ்க்கு போறன் என வேகவேகமாக போனாள் மஞ்சு. நானும் பின்னாடியே போனேன்.

கொஞ்ச நேரத்தில் பெல் அடித்து விட வகுப்பு ஆரம்பமானது.

அக்கவுண்ட்ஸ் சார் வந்து க்ளாஸ் எடுக்க ஆரம்பித்தார். எனக்கோ பீ.டி சார் என்ன பண்ணப்போறாறோ என நெஞ்சி திக் திக் என அடித்துக்கொண்டதோடு பாடத்தில் கவனம் போகவில்லை.

சார் என்ற பையனின் குரல் என் நினைவுகளை கலைத்தது. பாடம் நடத்திக்கொண்டிருந்த அக்கவுண்ட்ஸ் சார் வெளியே நின்ற பையனிடம் என்னப்பா என்றார். வெளியே நின்றிருந்த சின்னப்பையன், ராஜா அண்ணனை பீ.டி மாஸ்டர் வரச்சொன்னாரு சார் என்றான்.

ஏன் பக்கம் திரும்பிய அக்கவுண்ட்ஸ் சார், என்னடா பண்ண என கேட்டவர் போய்ட்டு சீக்கிரம் வா என்றார்.

போகும் போது ஜன்னல் வழியாக பார்த்தேன். மஞ்சு அழும் நிலையில் என்னைப்பார்த்தாள். பி.டி மாஸ்டர் ரூம்மை நோக்கி போனேன்.

மை கம் இன் சார்

ம். உள்ள வா.

கட்டுமஸ்தாக போலிஸ் அதிகாரி போல் சேரில் உட்கார்ந்திருந்தார். அவர் முன் கைகட்டி நின்றேன்.

ஒழுங்கா விளையாடுவியாடா ?.

விளையாடுவன் சார்.

ஸ்கூல் விட்டதும் கிரவுண்ட்க்கு வந்துடு. சூ வச்சியிருக்கியா ?

இல்ல சார்.

நாளைக்கு வாங்கிடனும் ?

சரி சார்.

பொண்ணுங்க கூட நிறைய பேசறபோல ?.

இல்ல சார். அதுவும் நானும் ஒரே ஊர் சார். ஒரே க்ளாஸ்ல படிக்கறோம். மதியம் சாப்பிடல அதான் கேட்டுக்கிட்டுயிருந்தன் சார் என இழுத்தேன்…….. சரி சரி போ.

ரூம்மை விட்டு வெளியே வந்தேன். அப்பாடா தப்பிச்சோம். விளையாட்ல சேர்ந்துட்டா எதயும் கண்டுக்கமாட்டார் போல என எண்ணியபடியே க்ளாஸ்க்கு வந்தேன். வகுப்பு முடிந்திருந்தது. சார் வெளியே வந்தார்.

பாத்துட்டியாடா.

பாத்துட்டன் சார்.

என்னவாம்.

கிரவுண்ட்க்கு வரச்சொன்னார் சார்.

நீயும் ஊரை சுத்தப்போறயா என கேட்டபடி நகர்ந்தார்.

வகுப்புக்குள் வந்தேன்.

மஞ்சு தலையில் கை வைத்தபடி குனிந்து டேபிளை பார்த்துக்கொண்டிருந்தாள். அவளை காட்டி என்னாச்சி என் சைகையாலே கேட்டேன்.

உதட்டை பிதுக்கினாள்.

அடுத்து வந்த காமர்ஸ் வகுப்பும் முடிந்ததும் லாங்க் பெல் அடித்தார்கள்.

எல்லோரும் கிளம்பிக்கொண்டிருந்தோம்.

பீ.டி சார் அடிச்சாரா என கிட்டே வந்து கேட்டாள் மஞ்சு.

முகத்தை பார்த்தேன் அழும் நிலையில் இருந்தாள்.

அவர் ஏன் அடிக்கப்போறாரு?

தேவி அவள் இடத்தில் இருந்து எங்களை நோக்கி வந்தாள்.

அவளை பார்த்ததும் நான் கிளம்பறன் என கிளம்பிய மஞ்சுவின் கையை பிடித்து இழுத்த தேவி. இப்ப எதுக்கு நான் வந்ததும் கிளம்பற. காலையில இருந்து எங்கிட்ட ஒரு வார்த்தையும் பேசல. நான் என்னடீ தப்பு பண்ணன் சொல்லிட்டு போடீ என்றாள்.

இவளோ, உங்களுக்குள்ள பேசறதுக்கு ஆயிரம் விஷயம் இருக்கும் நான் எதுக்கு இடையில நந்தி மாதிரி. நான் கிளம்பறன் என்றாள் கோபமாக மஞ்சு.

அவன்க்கிட்ட பேசறதுக்கு எனக்கு என்னயிருக்கு.

அதான் நேத்து சாயந்தரம் சைக்கிள் ஸ்டான்ட்டுக்கு தேடிப்போய் பேசியிருக்கியே. இதல நான் தான் கேனச்சியாயிட்டன் என்றாள் முனகலுடன்.

ஆஹா, ஏதோ வில்லங்கமா நினைக்கறா போல என எண்ணிக்கொண்டு தேவி நீ கிளம்பு. இவ டியூஷன் வருவா அங்க பேசிக்க.

அவ எதுக்கு போகனும் நான் போறன். நீங்க இரண்டு பேரும் ஜாலியா பேசுங்க என்றாள்.

ஏய் லூசா நீ. சாயந்தரம் டியூஷன் போறன்னு சொன்ன இப்ப போகலங்கற. டியூஷன் போவாம எங்க போறா ?

வீட்டுக்கு போறன்.

6 மணிக்கு தான் பஸ்;.

நான் நடந்து போவன்.

சாயந்தரம் டியூஷன்க்கு வர்றியா. எங்கிட்ட சொல்லவேயில்ல என திரும்ப மூக்கை நுழைத்தாள் தேவி.

நீ மட்டும் இவனை காதலிக்கறத எங்க்கிட்ட சொன்னியா?. அவனைத்தானே தேடிப்போய் சொன்ன. 2 மாசத்துக்கு முந்தியே லவ் லட்டர் தந்துயிருக்கான். எங்கிட்ட ஒரு வார்த்தை சொன்னியாடீ நீ. காலையில இவன் சொன்னப்ப தான் தெரிஞ்சிக்கிட்டன் என படபடவென பெரித்து தள்ளினாள்.

இதைக்கேட்டு அதிர்ந்து போன தேவி. என்னிடம் கேபமாக அவக்கிட்ட என்னடா சொன்ன. நீ எப்ப லவ் லட்டர் தந்த, நான் எப்ப உன்னை காதலிக்கறன்னு சொன்னன்.

நான் கடுப்புடன், எப்ப இவக்கிட்ட உன்னை காதலிக்கறன்னு சொன்னன்னு நீயே கேளு.

காலையில நீ தானே சொன்ன 2 மாசத்துக்கு முந்தி லட்டர் தந்தன். நேத்து தான் தேவி வந்து ஒ.கேன்னு சொல்லிட்டு போனா, இனிமே ஜாலின்னு சொன்னயே என்றாள் கேபமாக.

எனக்கு சிரிப்பு வந்துவிட்டது, தேவியும் சிரித்துவிட்டாள்.

சிரித்த எங்களை கேள்விக்குறியோடு பார்த்தாள்.

போடீ இவளே. பி.டீ சார்க்கிட்ட பேஸ்கட் பால் விளையாட நானும் வர்றன் என்னை டீம்ல சேர்த்துக்கங்கன்னு கேட்டு லட்டர் தந்துயிருக்கான். அத சார் இப்பத்தான் ஓ.கே பண்ணியிருக்காரு. எங்கண்ணன் சுரேஷ்தானே பேஸ்கட்பால் டீம் லீடர். அவன்க்கு முன்கூட்டியே தெரிஞ்சியிருக்கு. அவனை பார்க்க நேத்து பி.டீ சார் ரூம்க்கு போயிருந்தன். அப்ப உள்ள பேசிக்கிட்டுயிருந்தாங்க. ராஜாவ சேர்த்துக்கலாம்ன்னு எங்கண்ணன் சொன்னான். சாரும் ஒ.கே பண்ணாரு. அதைத்தான் நேத்து சைக்கிள் ஸ்டாண்ட்ல உனக்காக காத்திருந்தப்ப சொன்னன். அத அவன் உன்கிட்ட அறைகுறையா சொல்ல நான் அவனை காதலிக்கறதா நினைச்சி என்னை முறைக்கற இது நியாயமாடீ என்றாள் தேவி.

அவன் இதெல்லாம் சொல்லலடீ என்றாள் பிரகாசமான முகத்தோடு.

இவனெல்லாம் ஒரு மனுஷன் இவனைப்போய் நான் லவ் பண்றதாவது என நக்கல் அடித்ததாள்.

ஹலோ ஹலோ நிறுத்து  நீ பெரிய அழகின்னு ஒத்துக்கறன் அதுக்காக என்னை ஓட்டாத சரியா. நான் கிரவுண்ட்க்கு போறன். நீ டியூஷன் போய்ட்டு வா பஸ்ல பேசிப்போம் மஞ்சுவிடம் கூறிவிட்டு கிளம்பினேன்.

தொடரும்…………

2 கருத்துகள்:

  1. நண்பரே, தங்கள் பதிவுகள் மிகவும் அருமையாக உள்ளது. உங்கள் பிளாக் மேலும் பல வாசகர்களைச் சென்றடைய http://www.hotlinksin.com/ இணையதளத்தில் உங்கள் பதிவுகளை பகிருங்கள்.

    பதிலளிநீக்கு
  2. நண்பரே, தங்கள் பதிவுகள் மிகவும் அருமையாக உள்ளது. உங்கள் பிளாக் மேலும் பல வாசகர்களைச் சென்றடைய http://www.hotlinksin.com/ இணையதளத்தில் உங்கள் பதிவுகளை பகிருங்கள்.

    பதிலளிநீக்கு