ஞாயிறு, டிசம்பர் 30, 2012

வேகத்தில் விவேகமில்லா இளைய சமுதாயம்.இந்திய ஒன்றியத்தின் தலைநகரான டெல்லியில் ஓடும் பேருந்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு பேருந்தில் இருந்து வீசப்பட்ட மாணவிக்கு ஆதரவாக உடனடியாக குற்றவாளிகளுக்கு தண்டனை தர வேண்டும் என மாணவ சமுதாயம் திரண்டுள்ளது. பாராட்ட வேண்டியது. மாணவியின் கொடூர மரணம் கண்டிக்க தக்கது. 

நீதி கேட்டு நடு இரவில் பிரதமர் இல்லம் முற்றுகை, பாராளமன்றம் முற்றுகை, ரயில் மறியல், காவலர்களுடன் மோதல் என தினம் தினம் நடு இரவிலும் பிரச்சனை செய்கிறார்கள். உடடியாக பாலியல் குற்றங்களுக்கு கடுமையாக தண்டனை வழங்க சட்ட திருத்தம் செய்யுங்கள் என்கிறார்கள். 

இப்படி கேட்பது முட்டாள் தனமாக இல்லையா ?.

இதுயென்ன மீடியாவ நீங்கள் சொல்வதை அப்படியே கேட்டுக்கொண்டு ஒளிபரப்ப. பாலியல் குற்றத்துக்கு தூக்குதண்டனை, மரண தண்டனை தாருங்கள் என கோஷமிட்டால் உடனே தந்துவிட முடியாது. சட்டமியற்ற வேண்டும். சட்டம் இயற்றி அதை நடைமுறைக்கு கொண்டு வர பல படிகள் உண்டு. சட்டம்மியற்ற கமிட்டியுண்டு. அந்த கமிட்டி சட்டவிதிகளை உருவாக்க வேண்டும், அதன்பின் அதில் உள்ள நிறை குறைகள் பற்றி விவாதம் செய்ய வேண்டும். மாநிலங்களின் கருத்துக்களை கேட்க வேண்டும். பாராளமன்றத்தன் இரு அவைகளில் அவை விவாதம் செய்ய வேண்டும் அதன்பின் அது சட்டமாக்கப்பட வேண்டும், அதற்கு ஜனாதிபதி ஒப்புதல் அளிக்க வேண்டும். இப்படி எத்தனையோ நடை முறைகள் உண்டு.

ஆனால், இன்றே செய், இப்போதே செய் என்பது அவசரத்தின் கோலம். இளைய சமுதாயத்தினருக்கு உணர்ச்சி வேகத்தில் செயல்படுவார்கள். அதனை ஒருமை படுத்த வேண்டியது வயது முதிர்ந்தவர்களின் கடமை. ஆனால் இந்திய தேசத்தில் அதில் லாபம் பார்க்கவே துடிக்கிறார்கள் அரசியல் கட்சியினர். உணர்ச்சி கொந்தளிப்பில் நடக்கும் இந்த போராட்த்தில் மட்டுமல்ல கடந்த ஆண்டு ஊழலுக்கு எதிராக டெல்லியில் பெரும் போராட்டம் அன்னஹசாரே, பாபாராம்தேவ் தலைமையில் நடத்தினார்கள். அப்போது நாட்டின் தலைநகரை ஸ்தம்பிக்க வைத்தார்கள். சில வாரம் டெல்லியை பரபரப்பாக வைத்திருந்தார்கள். ஊழலை ஒழிக்க உடனே சட்டம் கொண்டு வரவேண்டும், கறுப்பு பணத்தை மீட்டு வர இப்போதே சட்டமியற்ற வேண்டும் என காலக்கெடு நிர்ணயித்து போராடினார்கள்.

இப்போதே நடக்க வேண்டும் என எண்ணி போராடுவது முட்டாள்தனமானது. போராட்டத்தை தூண்டி விடுபவர்களுக்கு வேண்டுமானால் இப்படி செய்வது நன்றாக இருக்கும். உணர்ச்சி வேகத்தில் எடுத்தோம் கவிழ்த்தோம் என செயல்படுவது இளைய சமுதாயத்துக்கு நல்லதல்ல. 


தீர்ப்பை எழுதிவிட்டு அதை நடைமுறைப்படுத்துங்கள் என அரசாங்கத்தை இளைய சமுதாயம் நெருக்குவது அழகல்ல. ஒரு பிரச்சனைக்கு குறிப்பிட்ட கால அளவு தர வேண்டும். அதனை அரசாங்கம் செய்யாவிட்டால் போராட்டம்மென்ன அவர்களை என்ன வேண்டுமானாலும் செய்யலாம். அதனால் உணர்ச்சியை கட்டுப்படுத்திக்கொண்டு அறிவு பூர்வமாக சிந்தியுங்கள் இளையோர்களே. 

வேகம் விவேகமல்ல என்பது சாலை பயணத்துக்கு மட்டுமல்ல........... வாழ்க்கை பயணத்துக்கும் என்பதை உணர்ந்துக்கொள்ளுங்கள். 

சனி, டிசம்பர் 29, 2012

என் தேச பெண்ணே உன்னை வணங்குகிறேன்.


சுதந்தரம் பெற்று 65 ஆண்டுகள் கடந்து விட்டது. என் தேசத்தில் பாலியல் பலாத்காரம் மட்டும் நின்ற பாடில்லை. ஆங்கிலேயனிடம் அடிமையாக இருந்தபோது நடந்த பாலியல் குற்றங்களை விட சுதந்தரத்துக்கு பின் தான் எம் தேச பெண்கள் பாலியல் வன்முறைக்கு அதிகம் பலியாகியுள்ளார்கள், இறையாகியுள்ளார்கள். சுதந்திரமாக கற்பழிக்கவும் சுதந்திரம் பெற்று தந்தார்கள் என எண்ணிவிட்டார்கள் போல.

பல ஆண்டுகளாக எம் தேசத்தின் மலைகிராமங்களில் உள்ள பழங்குடி பெண்களை பெரு நிறுவனங்களை சேர்ந்த பணியாட்களும், சேரிகளில் வாழும் தாழ்த்தப்பட்ட பெண்கள் மீது ஆதிக்க சாதி வெறியர்களும், காஷ்மீர் – வடகிழக்கு மாநிலங்களில் பாதுகாப்பு படையும், இந்தியாவின் ‘கண்ணியம்மிக்க’ ராணுவத்தினரும் நடத்திய பாலியல் துஷ்பிரயோகங்கள் அதிகம். தங்களது இச்சைகள் தீர்ந்ததும் எம் தேச பெண்கள் உறுப்புகள் சிதைக்கப்பட்டும், அதிகார வர்கத்தினரின் துப்பாக்கிகளுக்கு இறையாகி கிடந்தது அதிகம். மானத்துக்கு பயந்து வெளியே சொல்லாமல் மனதில் பாரத்தோடு வாழ்பவர்கள் அதை விட அநேகம்.

எம் தேச பெண்கள் பாலியல்க்கு பலியாவதை எதிர்த்து எத்தனை எத்தனையோ சமூக ஆர்வலர்கள் போராடி வருகிறார்கள். அது பத்தோடு பதினோரு செய்தியாக செய்தித்தாள்களிலும், மீடியாக்களிலும் பதிவாகின. போராடியவர்களாலும் சாதிக்க முடியவில்லை. சட்டமன்றங்களிலும், பாராளமன்றத்திலும் அமர்ந்துள்ள பெண் பிரதிநிதிகளாளும் உரிமைகளை, பாதுகாப்பை உருவாக்கி தர முடியவில்லை. அவர்கள் எல்லோரும் சாதிக்க முடியாததை நீ சாதித்துவிட்டாய்.

இன்று பாலியல் பிரச்சனை எத்தனை பெரியது என்பதை என் தேசத்துக்கு புரிய வைத்தது உன் மீதான பாலியல் வன்முறையும், உன் இறப்பும்மே. இந்த உலகத்தில் நீ சந்தோஷமாக வாழ எவ்வளவோ கனவுகள் கண்டுயிருப்பாய். உன் கனவுகள் அந்த பேருந்தில் வைத்து பொசுக்கிவிட்டார்கள். அந்த மிருகங்கள் உன் உறுப்பை சிதைக்கும்போதே உன் கனவுகளை  சிதைந்துவிட்டார்கள் என்பதை இயற்கை அறிந்திருந்தது.

ஆனாலும் நீ மரணிக்கவில்லை. உன் நிலை இது நாள் வரை பேஸ்புக்கிலும், டுவிட்டரிலும், இணையத்திலும் மூழ்கி வீர வசனம் பேசிக்கொண்டுயிருந்த இளைய சமுதாயத்தை தட்டி எழுப்ப வைத்துவிட்டது. நடு சாமத்தில் நாட்டை ஆள்பவர்களை வீதிக்கு வர வைத்து, மன்னிப்பு கேட்க வைத்தது.


பன்னிரெண்டு நாள் உயிருக்கு போராடி இறுதியில் உன் சுவாசத்தை நிறுத்திக்கொண்ட என் தோழியே, சகோதரியே உன் உறுப்பை சிதைத்தவன்களின் உறுப்பை சிதைக்க வேண்டும். அவன்கள் அதைக்கண்டு தன் வாழ்நாள் முழுக்க அழ வேண்டும். அதுவே அவர்களுக்கு தரும் தண்டனை. இனி பாலியல் வன்முறையில் ஈடுபட நினைப்பவர்களுக்கும் அது ஒரு எச்சரிக்கையாக அமையும்.

இந்த கனவு நீ காணாததாக இருக்கலாம் ஆனால் என் தேசம் அந்த கனவை நனவாக்க வேண்டும் என்கிறது. அந்த கனவை உன் உயிரை தந்து உருவாக்கியுள்ளாய் அதற்காக உன்னை வணங்குகிறேன்.

வியாழன், டிசம்பர் 27, 2012

எதிரியால் புலி என வர்ணிக்கப்பட்ட சச்சின்1973 ஏப்ரல் 27ந்தேதி மும்பையில் பந்தரா பகுதியில் நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர் கிரிக்கெட் உலகின் நட்சத்திரம் சச்சின். பிரபல இந்திப்பட இசையமைப்பாளர் சச்சின் தேவ் பர்மனின் ரசிகரான அவர் தன் பேரன்க்கு சச்சின் என பெயர் வைத்தார்.

சச்சின் அப்பா பேராசிரியர். அவரது அம்மா ஆயுள் காப்பிட்டு நிறுவன ஊழியர். படித்தது கிரிக்கெட்டுக்கு புகழ் பெற்ற சாரதா ஆஸ்ரமம் பள்ளியில். பள்ளி தேர்வில் ஆங்கிலத்தில் தோல்வியை தழுவினார். விளையாட்டில் சுட்டியாக இருந்தார். கிரிக்கெட் மீதான வெறியால் பள்ளி படிப்போடு சச்சினின் நின்றுவிட்டார்.

நட்புக்கு சிறந்த உதாரணமாக விளங்குபவர் சச்சின். தன் வீட்டு வாட்ச்மேன் மகன் ரமேஷ் தான் சச்சினின் நெருங்கிய நண்பர். சச்சின் உதவியாளர் உட்பட எல்லாம் அவரே.

டென்னிஸ் விளையாட்டு தான் சச்சினுக்கு பிடித்த விளையாட்டு. டென்னிஸ் சூப்பர் ஸ்டார் சுவீடன் நாட்டை சேர்ந்த ஜான் மெக்கன்ட்ரோ தான் அவரது ஆஸ்தான ஹீரோ. அவர் ஒரு போட்டியில் தோல்வியை சந்தித்தபின் தான் சச்சின்க்கு கிரிக்கெட் மீது காதல் தொடங்கியது. அதன்பின் எந்த பொருள் கிடைத்தாலும் அது பந்தாக, மட்டையாக மாறியது. சச்சின் பயிற்சியாளர் ராம்காந்த் அச்ரேகர். சச்சினுக்கு கிரிக்கெட் உலகில் ஆதர்ச நட்சத்திரங்கள் கவாஸ்கர், கபில்தேவ். 

சச்சினின் சகோதரர் அஜித் தான் சச்சினுக்கு உந்து சக்தியாக இருந்தவர். 10 வயதிலேயே வயதுக்கு மீறி விளையாட்டில் புலியாக திகழ்ந்தார். இவரின் போட்டி திறமையை கண்டு சச்சினின் 13 வது வயதில் அதாவது 1986ல் மும்பை மிட்டே என்ற பத்திரிக்கை அவரை பேட்டி கண்டது. வெகுவாக அவரை புகழ்ந்தது.

இந்தியாவில் பம்பாய் கிரிக்கெட் சங்கம் பிரபலமான சங்கம். அந்த சங்கம் வீரர்களுக்கு ஆண்டு தோறும் வழங்கும் விருது பெரியது. தனது 14வது வயதில் பலப்பல போட்டிகளில் கலந்துக்கொண்டு மும்பை கிரிக்கெட் ஆர்வலர்களிடம் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தியிருந்தார். அந்த ஆண்டுக்கான இளம் வீரர் என்ற விருதை எதிர்பார்த்தார். ஆனால் இவரை விட திறமை குறைவான ஒருவருக்கு கிடைத்துவிட்டது. இது சச்சினை பெரும் அதிருப்திக்கு உள்ளாக்கியது. பி.சி.ஏ பெரும் சர்ச்சையில் சிக்கியது.

அப்போது கிரிக்கெட் உலகில் பிரபல நட்சத்திரமாக இருந்த கவாஸ்கர் சச்சினுக்கு ஒரு கடிதம் அனுப்பினார். அதில், நீ மன வேதனையில் இருப்பாய் என்பதை நான் அறிவேன். பட்டம், பதவி, பதக்கம் பக்கம் உன் கவனத்தை திருப்பாதே. கடமையை செய் பலனை எதிர்பாராதே என்ற கீதை சொல்படி வாழ கற்றுக்கொள் எனக்குறிப்பிட்டுயிருந்தார். தன் வாழ்க்கையில் அதை அன்று முதல் கடைப்பிடிக்க தொடங்கினார் சச்சின்.

ஸ்டார் கிரிக்கெட் க்ளப் சார்பாக 1988ல் கிரிக்கெட் விளையாட முதன் முறையாக இங்கிலாந்து சென்றார் சச்சின்.

14 வயதில் சச்சினின் திறமை, விளையாடும் முறை போன்றவை பிரபலமான, பழமையான இந்திய கிரிக்கெட் க்ளப்பின் தலைவர் ராஜ்சிங்கை கவர்ந்தது. இதனால் சங்க விதிமுறைகளை தளர்த்தி அந்த பாரம்பரிய க்ளப்பில் உறுப்பினராக்கி சச்சின் திறமைகளை வெளிக்கொண்டு வர உந்து சக்தியாக இருந்தார் ராஜ்சிங். 


1989ல் டெஸ்ட் போட்டிக்காக ஸ்ரீகாந்த் தலைமையில் பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் சென்ற இந்திய அணியில் சச்சின்க்கு வாய்ப்பு தரப்பட்டது. அப்போது அவரது வயது 16. இந்தியா – பாகிஸ்தான் டெஸ்ட் போட்டியில் கலந்துக்கொண்டு விளையாடினார். புhகிஸ்தான் ரசிகர்கள் மட்டுமல்ல அரசியல்வாதிகள், மீடியாக்கள் கூட இந்தியாவை விரோதமாக தான் பார்க்கும். சச்சினின் திறமையான விளையாட்டை கண்ட பாகிஸ்தான் செய்தித்தாள் ஒன்று, இதே ஒரு புலி வந்துவிட்டது என பாராட்டியது.

இங்கிலாந்தில் மேற்கண்ட சுற்றுப்பயணத்தில் முதல் பேட்ஸ்மேனாக களம்மிறக்கப்பட்டார் சச்சின். அங்கு நடந்த டெஸ்ட் போட்டியில் முதல் செஞ்சுரியை பதிவு செய்தார் அப்போது 18 வயதை நெருங்கிக்கொண்டு இருந்தார். ஆட்ட நாயகம் விருது தரப்பட்டது. மைதானத்தில் சச்சினுக்கு ஏற்ற ஜோடி காம்ப்ளி. டீம் கேப்டன், துணை கேப்டன் என பொறுப்பு வகித்தவர் பின் கேப்டன் பதவியே வேண்டாம் என மறுத்தவர் தான் சச்சின்.

1995 முதல் சச்சின் நினைப்பவர்கள் தான் இந்திய கிரிக்கெட் அணியில் கோலோச்ச முடியும் என்ற நிலையை உருவாக்கினார். அவர் தான் அதிக வருமானம் பெறும் விளம்பர தூதர். அந்தளவுக்கு உச்ச அந்தஸ்த்தில் இருந்தாலும் மைதானத்தில் எப்போதும் சோர்ந்து இருந்தது கிடையாது.

சச்சின்க்கு எதிராக மும்பையில் இருந்தே இறக்கிவிட்டார்கள். அவர்கள் சச்சின் முன் தாக்கு பிடிக்க முடியாமல் காணாமல் போய் பல ஆண்டுகள் ஆனப்பின்பே தற்போது ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார் சச்சின்.

இதுவரை கிரிக்கெட் உலகில் இருந்த உலக சாதனைகள் பலவற்றை முறியடித்து சகாப்தம் படைத்தவர் சச்சின். தன் தந்தை இறந்த சில தினங்களிலேயே உலக கோப்பை போட்டியில் கலந்துக்கொண்டு தன் பங்கை சிறப்பாக வெளிப்படுத்தியவர் சச்சின்.

இந்திய ரசிகர்களிடம் மட்டுமல்ல கிரிக்கெட் விளையாட்டு உள்ள நாடுகளில் உள்ள விளையாட்டு பிரியர்களிடம் தனக்கென ஒரு இடத்தை பிடித்து வைத்துள்ளார் சச்சின். தற்போது அவரிடம்முள்ள நாடாளமன்ற உறுப்பினர் என்ற சிம்மாசனத்தை விட சிறந்த சிம்மாசனம்.

ஜெவின் ‘நயவஞ்சக நாடகங்கள்’.
கல்யாண வீட்டுக்கு போனா நீ மாப்பிள்ளையா இரு. சாவு வீட்டுக்கு போனா நீ பிணம்மாயிரு என்பார்கள். அதற்கு காரணம் அந்தயிடங்களுக்கு செல்லும்போது மற்றவர்களை விட அதிகமாக பணியாற்றி உன் மீது கவனத்தை திருப்ப வேண்டும் என்பதற்காக கிராமத்தில் அப்படி சொல்லுவார்கள். 

தற்போது தேசிய வளர்ச்சி கவுன்சில் கூட்டம் பிரதமர் தலைமையில் டெல்லியில் நடக்கிறது. இதில் கலந்துக்கொள்ள தனி விமானத்தில் டெல்லி சென்றார் தமிழக முதல்வாரன ஜெ. இந்தியாவில் உள்ள அனைத்து முதல்வர்களும் இந்த மாநாட்டில் கலந்துக்கொண்டுள்ளனர். 

ஒவ்வொரு மாநில முதல்வரும் தங்கள் மாநில கோரிக்கை பற்றி பத்து நிமிடம் பேச வேண்டும் எனச்சொல்லப்பட்டது. அதன்படி தமிழகத்தின் கோரிக்கையை முதல்வர் வாசிக்கும் போது பத்து நிமிடம் முடிந்ததும் மணி அடிக்கப்பட்டுள்ளது. உடனே கோபமாக கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்த முதல்வர் ஜெ, என்னை அவமதித்து விட்டார்கள் என செய்தியாளர்களிடம் கூறிவிட்டு வந்துவிட்டார். நாட்டின் தலைநகரில் இருந்தப்படி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவிட்டார். அவர் திட்டம் நிறைவேறிவிட்டது. மாநிலத்தின் கோரிக்கை, நலன் கேள்விக்குறியாக நிற்கிறது. 

அரசாங்கத்தின் நிர்வாகத்தை நன்கறிந்தார். எம்.பியாக ஒருமுறை, தமிழகத்தின் முதல்வராக மூன்றாவது முறை உள்ளார். அதற்கு முன்பு எம்.பியாக இருந்தவர்க்கு அரசாங்கத்தின் நடைமுறை தெரியாததல்ல. அதோடு, மாநாடு பற்றிய டைம் டூ டைம் ரிப்போர்ட்டில் யார் முதலில் பேசுவது, டீ டைம், லஞ்ச் டைம் வரை முன் கூட்டியே தகவல் தெரிவிக்கப்படும். சமீபத்தில் முதல்வர் ஜெ தலைமையில் நடந்த மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் கண்காணிப்பாளர்கள், உயர் அதிகாரிகள் கூட்டத்திலும் இந்த நடைமுறை தான் பின்பற்றப்பட்டது. 

புரோட்டாக்கால் என்ற நடைமுறை இருக்க அதை அறிந்தும், அரசாங்க அலுவல்களின் நேர பயன்பாடு அறிந்தும் ஜெ மரியாதை கிடைக்கவில்லை, ஃபெல் அடித்துவிட்டார்கள் என சொல்வது அப்படியிருக்க ஜெயலலிதா எந்த கூட்டத்துக்கு போனாலும் வெளிநடப்பு செய்வதை பொழுது போக்காக வைத்துள்ளார். 

உச்சநீதிமன்றம் காவிரி நதிநீர் பிரச்சனையில் இரண்டு மாநில முதல்வர்களை சந்தித்து பேசச்சொன்னது. அதன்படி பெங்களுரூவுக்கு சென்றார். ஷெட்டருடன் பேச்சு வார்த்தை தொடங்கிய சிறிது நேரத்தில் வெளிநடப்பு செய்துவிட்டேன் என வெளியே வந்து அறிவித்தார். (ஷெட்டர் நாங்கள் மரியாதையாக அனுப்பிவைத்தோம் என்றார்). இதே இப்போது தேசிய வளர்சி கவுன்சில் கூட்டத்தில் இருந்தும் வெளிநடப்பு செய்துள்ளார். இதற்கு முன்பும் இப்படி செய்துள்ளார். 

கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும். ஆனால் அனைவரின் கவனமும் தன் பக்கம் இருக்க வேண்டும் என எண்ணுகிறார். அதோடு, தான் இருக்கும் இடங்களில் தன்னை அனைவரும் புகழ்ந்து பேச வேண்டும் என்ற மனோபாவத்தில் உள்ளார். தான் பேசுவதை அப்படியே கேட்கவேண்டும், எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் அதற்காக எடுத்துக்கொள்ள தனக்கு உரிமை என எண்ணுகிறார். அதன் வெளிப்பாடு தான் இப்படி. இந்த நாடகத்தை தான் அவரது வீரமாக பிரகஸ்கரிக்கிறார்கள். 

அவரின் செயல்பாட்டை நியாயப்படுத்தி மற்றவர்களை குறை சொல்கிறார்கள். முதலில் அவர் சரியாக செயல்படுகிறாறா என மனசாட்சியிடம் கேட்டுவிட்டு பின் மற்றவர்களை குறை சொல்ல வேண்டும். 

வெள்ளி, டிசம்பர் 14, 2012

கமல் புகுத்தியுள்ள வியாபார யுக்தி.
தமிழ் சினிமாவில் புதிய யுக்தியை புகுத்தியுள்ளார் நடிகர் கமல்ஹாசன். அதாவது, படம் திரையரங்குகளில் வெளியிடப்படும் அதே நாளன்று டி.டி.எச் மூலம் ஒளிப்பரப்புவது. இந்தியாவில் முதல் முறையாக என்றுக்கூட சொல்லும் வகையில் இந்த புதிய யுக்தியை செயல்படுத்தியுள்ளார். கமலின் நடிப்பில், இயக்கத்தில் உருவாகியுள்ள விஸ்வரூபம் திரைப்படத்தை தியேட்டரில் வெளியிடப்படும் அதே நாளன்று ஏர்டெல் டி.டி.எச் மூலம் வீட்டில் இருந்தபடியே குடும்பத்தோடு அமர்ந்து படத்தை காணும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

டி.டி.எச் மூலம் ஒருமுறை பார்க்க ஆயிரம் ரூபாய் கட்டணம். படத்தை காப்பி செய்ய முடியாது. செட்டப் பாக்ஸ்சில் ஸ்டோர் செய்து வைத்துக்கொள்ளவும் முடியாத தொழில் நுட்பத்தில் படத்தை திரையிடும் யுக்தி. இதுக்காக பெரும் தொகைக்கு ஏர்டெல்லுடன் ஒப்பந்தம் போட்டுள்ளார் கமல்ஹாசன். இதனைத்தான் திரையரங்க உரிமையாளர்கள் எதிர்க்கிறார்கள். சினிமா பார்க்கும் வரும் கூட்டம்மோ மிகக்குறைவு. தற்போதைய இந்த யுக்தியால் திரையரங்குகள் காணாமல் போய் அழிந்து விடும் என எதிர்ப்பு காட்டுகிறார்கள். 

திரையரங்கங்கள் அழிக்கபடுகிறது என்ற குற்றச்சாட்டு இருக்கட்டும். திரையரங்குக்கு மக்களின் வரத்து குறைந்து போனதற்க்கு காரணம் நல்ல கதையம்சம் கொண்ட சினிமாக்கள் வராதது மட்டும் காரணமல்ல. திரையரங்குகளில் வசூலிக்கப்படும் நுழைவு கட்டணம், பார்க்கிங் கட்டணம், இடைவேளையின் போது அங்குள்ள திண்பண்ட அரங்குகளில் விற்கப்படும் கூல்ட்ரிங்ஸ், ஸ்நாக்ஸ் போன்றவற்றில் அடிக்கப்படும் கொள்ளைகள் போன்றவையே மக்கள் திரையரங்கு பக்கம் வரமுடியாமல் செய்து வைத்துள்ளது. 

கடந்த தீபாவளியன்று திரையரங்குகளில் டிக்கட் கட்டணம் இருநூறு ரூபாய் என விற்கப்பட்டது. இரு சக்கர வாகன பார்க்கிங் கட்டணம் பத்து ரூபாய், வெளியே பத்து ரூபாய்க்கு விற்கப்படும் ஐஸ்கிரிம் உள்ளே 25 ரூபாய், பன்னிரென்டு ரூபாய் கூல்ட்ரிங்ஸ் இருபது ரூபாய். இப்படி எல்லாம்மே அதிக பட்ச விலை. இங்கே குறிப்பிட்டது வேலூர், கடலூர், தருமபுரி, கன்னியாகுமரி போன்ற சின்ன நகரங்களில் தான். சென்னை, மதுரை, திருச்சி, கோவை போன்ற பெரும் நகரங்களில் இதைவிட ரொம்ப அதிகம். அதோடு, தற்போது சிலப்பல சினிமா தியேட்டர்கள் வரும்போது நொறுக்கு தீணிகள் கொண்டு வரக்கூடாது என்ற கண்டிப்பு வேறு. நான்கு பேர் கொண்ட ஒரு குடும்பம் தியேட்டரில் போய் படம் பார்க்க குறைந்தது ஆயிரம் ரூபாய் செலவாகிவிடுகிறது. டிக்கட்டில் பிரிண்ட் செய்துயிருக்கும் கட்டணத்தை விட இருபது மடங்கு அதிகமாக வாங்குகிறார்கள் அரசாங்கத்துக்கு கேளிக்கை வரி, சேவை வரியாக கட்டுவது டிக்கட்டில் குறிப்பிட்டுயிருக்கும் தொகைக்கே. இப்படி அரசாங்கத்தையும், ரசிகர்களை தியேட்டர்காரர்கள் நன்றாக ஏமாற்றி சம்பாதித்து விடுகிறார்கள். 

இதில் பாவப்பட்டவர்கள் படத்தை வெளியிடும் விநியோகஸ்தார்கள், வட்டிக்கு பணத்தை வாங்கி படம் தயாரிக்கும் முதலாளிகள் தான். படம் வெற்றியடைந்தால் மட்டுமே முதலாளிக்கு லாபம். இல்லையேல் நடுத்தெரு நாராயணா தான். இதனை உணர்ந்து தான் தயாரிப்பாளருக்கும் லாபம் தரும் வகையில் இந்த புதிய ஹாலிவுட் யுக்தியை கொண்டு வந்துள்ளார் கமல். 

இந்திய தொலைக்காட்சிகளில் முதன்முறையாக திரைக்கு வந்து நில நாட்களே ஆனா என சேட்டிலைட் சேனல்கள் இன்று கூவுவதற்க்கு பின்னால் கமலின் வியாபார யுக்தியே காரணம். 

திரைப்படங்கள் தியேட்டரில் வெளியிடப்பட்ட பின்பு சில ஆண்டுகள் கழித்து டிவியில் ஒளிப்பரப்பிக்கொள்ள சேட்டிலைட் சேனல்களுக்கு உரிமை தந்து விற்க்கும் முறையை கமல் தான் பதினைந்து ஆண்டுகளுக்கு முன் புகுத்தினார். ( தற்போது படம் வெளியாகும் முன்பே சேட்டிலைட் சேனல்கள் படத்தின் உரிமையை வாங்கி விடுகின்றன, படம் வந்த சில வாரங்கள் பொறுத்து சேனல்கள் ஒளிப்பரப்புகின்றன ). அப்போதும் இதேபோல் தான் பல தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் கிளம்பின. ஆனால் அந்த முறை தான் இன்று பல தயாரிப்பாளர்களை நஸ்டத்தில் இருந்தும், தற்கொலையில் இருந்தும் காப்பாற்றி வருகின்றன. 

திருட்டு டி.வி.டி பற்றி கமல் தனது கருத்தாக, வளரும் தொழில்நுட்பத்தில் அதை தடுக்க முடியாது. அதனை ஒழிக்க ஆடியே சி.டி, டி.வி.டி வெளியிடுவதைப்போல திரைப்படம் திரையரங்கில் வெளியிட்ட ஒரு வாரம் கடந்து தயாரிப்பாளர்களே அத்திரைப்படத்தை டி.வி.டியாக வெளியிட்டால் திரையரங்குக்கு வர முடியாதவர்கள் டி.வி.டி வாங்கி படத்தை பார்ப்பார்கள். ஒர்ஜினல் டி.வி.டி கிடைக்கும் போது யாரும் திருட்டு டி.வி.டி வாங்கி படம் பார்க்கும் நிலை வராது. இதனால் தயாரிப்பாளர்க்கு வருமானம் வரும். அதோடு எந்தப்படத்தையும் தியேட்டரில் போய் பார்த்தால் தான் படம் பார்த்த தன்மையிருக்கும். டிவிடியில் பார்த்தால் படம் பார்த்த தன்மையிருக்காது. அதனால் ரசிகர்கள், தியேட்டரில் படம் பார்க்க விரும்பும் மக்கள் நிச்சயம் திரையரங்கம் வருவார்கள். இதனால் திரையரங்குகள் பாதிக்கப்படாது. இந்த யுக்தியை ஹாலிவுட்டில் பல வருடங்களுக்கு முன்பே புகுத்திவிட்டார்கள் தொழில் நுட்பத்தோடு சேர்ந்து அவர்கள் தங்களை மாற்றிக்கொண்டார்கள் நாமும் காலத்திற்க்கு ஏற்றாற்போல் மாற்றிக்கொள்ள வேண்டும் என்றார். 

அதையேத்தான் இன்றும் கூறுகிறார். வளரும் தொழில் நுட்பத்துக்கு தகுந்தார்போல் நாம் நம்மை மாற்றிக்கொள்ள வேண்டும். நமக்காக தொழில் நுட்பம் வளராமல் இருக்காது. அதோடு சேர்ந்து நாம் பயணம் செய்யும் வகையில் நம்மையும், தொழிலையும் மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என்கிறார்.

தற்போது புகுத்தியுள்ள டி.டி.எச் யுக்தி, தயாரிப்பாளர்களுக்கு லாபத்தை தருவதோடு டி.டி.எச் தொழிலில் உள்ள நிறுவனங்களுக்கு வியாபார போட்டியை உருவாக்கி தந்துள்ளது. இனி ஒரு படம் தொடங்கும் போதே உரிமையை வாங்கிட போட்டி போடுவார்கள் என்பது மட்டும் நிஜம். 

‘முதல் நாளே முதல் ஷோ வீட்டிலேயே அமர்ந்து குடும்பத்தோடு காண எங்கள் நிறுவன டி.டி.எச்யை வாங்குங்கள் என்ற விளம்பரம் வரும் பார்த்துக்கொண்டே இருங்கள். 

செவ்வாய், டிசம்பர் 11, 2012

வெள்ளைரவியும் - வெள்ளைதுரையும்.மறைந்த சாதி தலைவர் ஒருவரின் ஆண்டு அஞ்சலி விழாவுக்காக பாதுகாப்புக்கு சென்ற காவல்துறை உதவி ஆய்வாளர் ஆல்வின் சுதன் ரவுடிகள் பிரபு, பாரதி டீமால் குத்தி கொலை செய்யப்பட்டார். அந்த கொலை வழக்கில் சரண்டரான ரவுடிகள் பிரபு, பாரதி இருவரும் நீதிமன்றம் சென்று வரும் வழியில் தப்பிவிட்டார்கள். வாகன சோதனையின் போது பிடிக்க முயன்றபோது வெட்டவந்தார்கள் தற்காப்புக்காக சுட்டோம் செத்தார்கள் என என்கௌண்டர் செய்யப்பட்டதற்க்கு கதை சொன்னார்கள்.

இந்த என்கௌண்டர் மனித உரிமை மீறல் என மனித உரிமை ஆர்வலர்கள் விமர்சனம் செய்ததற்க்கு எஸ்.ஐ கொல்லப்பட்டபோது உங்கள் கண்ணுக்கு மனித உரிமை தெரியவில்லையா?, அவருக்கும் குடும்பம் உள்ளது என்பதை மறந்து விடுகிறீர்களே?, அவரும் மனிதர் தான் என்ற குரல் காவல்துறை தரப்பில் இருந்து கேள்வி எழுப்பியுள்ளனர். நான்காயிரம் மக்கள் இன்பத்தை கெடுக்கும் நான்கு பேரை நான்காயிரம் மக்களின் சந்தோஷத்துக்காக கொல்வது தவறுயில்லை என கருத்து தெரிவிக்கிறார் மானாமதுரை டி.எஸ்.பியும் என்கௌண்டர் ஸ்பெஷலிஸ்ட் என கொண்டாடப்படும் வெள்ளைத்துரை. நீங்கள் ஒருவரை கொன்றீர்கள் நாங்கள் இருவரை போட்டு தள்ளியள்ளோம் என சந்தோஷப்படுகிறார்கள் இன்னும் சில காவலர்கள். 

அவர்கள் கேட்பது நியாயம். தான் சார்ந்த ஒரு துறையின் ஒரு எஸ்.ஐ கொலை செய்யப்பட்டது அவரது குடும்பத்தாரை விட அவரது சக துறை ஊழியர்களுக்கு அதிக வருத்தம்மிருக்கும். பாதுகாப்பு தரும் எங்களுக்கே பாதுகாப்புயில்லையே எங்கள் உயிர்க்கு என்ன பாதுகாப்பு என கேட்கிறார்கள் அவர்கள் கேட்பது நியாயம்.

என் கேள்வி, கொலை செய்தவனை சட்டத்தின் முன் நிறுத்தி அதிகபட்ச தண்டனை பெற்று தந்து அவன் செய்த தவறை உணர்த்தாமல் கொலை செய்தான் அதனால் கொன்றோம் என சொல்வது எந்த விதத்தில் நியாயம். கொலை செய்வதனை கொலை செய்ய காவல்துறை எதற்கு, சட்டம் எதற்க்கு, நீதிமன்றம் எதற்கு?. காவல்துறை மற்ற உள்ளேயும், வெளியேவும் உலாவும் ரவுடிகள் விவகாரத்தில் இப்படித்தான் நடந்துக்கொள்கிறதா?. எத்தனை கொலைக்காரர்கள் தற்போது ஆயுள் தண்டனை கைதிகளாக, தூக்குதண்டனை கைதிகளாக சிறையில் உள்ளார்கள். அதேபோல் சட்டத்தின் முன் நிறுத்தி அதிகபட்ச தண்டனை பெற்று தந்துயிருக்கலாம்மே ஏன் செய்யவில்லை. செய்யாததற்க்கு காரணம் ?


காவல்துறை தங்களது அதிகாரத்தை தக்க வைத்துக்கொள்ள முயலும் யுக்தி. மக்களுக்கும், ரவுடிகளுக்கும் போலிஸ் என்றால் பயம் இருக்க வேண்டும், யாருக்கும் காவல்துறையை எதிர்க்கும் துணிவு வரக்கூடாது என்பதை உணர்த்தவே என்கௌன்டர் என்ற பெயரில் கொலை செய்துள்ளார்கள். இது மக்கள் மத்தியில் காவல்துறை மீது மக்களுக்கு ஒரு விதமான பயத்தை உருவாக்கும் செயல். இதனால் ரவுடிகளுக்கு வேண்டுமானால் போலிஸ் மீது பயம் வரலாம். ஆனால் மக்களுக்கு பயத்துக்கு பதில் வெறுப்பு நிச்சயமாக வந்துவிடுகிறது. அவர்களை ஒதுக்கி வைக்கும் சூழ்நிலையும், காவல்துறையின் நியாயமான கோரிக்கைகளுக்கு ஆதரவு தராத நிலையும் பொதுமக்களிடம் இருக்கிறது. 

பொதுமக்களின் நண்பர்கள் எனச்சொல்லிக்கொண்டு அதிகார வர்க்கத்துக்கு சேவகம் புரியும் விசுவாசியாய் நடந்துக்கொள்ளும் அனேக காவல்துறையினர் காவல்துறையை அடிமைப்படுத்தி வைத்திருக்கும் அதிகார வர்க்கத்தை எதிர்த்து போராடி தங்களது உரிமையை பெற்றுக்கொண்டால் பாராட்டலாம். ஆனால் அதற்க்கு நேர் எதிராக என்கௌன்டர் பெயரில் கொலை செய்வது, அதிகார வர்க்கத்தை துணிவில்லாமல் பொதுமக்களை, வியாபாரிகளை, ரவுடிகளை, திருடர்களை மிரட்டி பணம் பறிக்கும் இவர்கள் தாங்கள் செய்த கொலைகளை நியாயப்படுத்த மக்கள், சந்தோஷம் என கதையளக்க தொடங்கியுள்ளார்கள். 

என்கௌண்டரில் கொல்லப்பட்ட ரவுடிகள் வெள்ளைரவி, வீரமணி, மணல்மேடு சங்கர் போன்றவர்கள் பணத்துக்காக கட்டைப்பஞ்சாயத்து, கொலைகள் செய்தனர். அவர்கள் சட்டத்துக்கு புறம்பாக செய்ததை வெள்ளைதுரை போன்ற சில அதிகாரிகள் காக்கிச்சட்டை போட்டுக்கொண்டு சட்டத்தின் துணையோடு அதேயே செய்கிறார்கள். இவர்களுக்கு பெயர் காவலர்கள். அவர்களுக்கு பெயர் ரவுடிகள்.

நல்ல சட்டம்.  

வியாழன், நவம்பர் 15, 2012

தாத்தாவை போல பேரன். காதலோ காதல்.
ஹீனாவின் காதலைப்பற்றி எழுதிய வங்க தேச பத்திரிக்கை ஆசிரியர் கைது செய்யப்பட்டதில் மீண்டும் பரபரப்பாகியிருக்கிறது பாகிஸ்தானின் மேல்மட்ட காதல் விவகாரம்.
பாகிஸ்தான் வெளியுறத்துறை அதிபர் ஹீனா ரப்பானி. 35 வயது அழகு பெண்மணி. இரண்டு குழந்தைகளுக்கு தாய். பொருளாதார நிபுணி. 1977ல் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள முல்தான் நகரத்தில் பிறந்த மங்கை. பஞ்சாப் மேல்தட்டு பெண்களுக்கே உள்ள பேரழகு. பஞ்சாப் மாநிலத்தின் முன்னால் கவர்னர் குலாம் முஸ்தபா கார் மகள் தான் இவர். 

பாகிஸ்தான் மக்கள் கட்சியின் சார்பில் 2002ல் பாராளமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். 2008ல் பொருளாதாரத்துறையின் துணை அமைச்சராக முதலில் நியமிக்கப்பட்டார். 2010ல் நிதித்துறையின் இணை அமைச்சராக மாற்றப்பட்டார். 2011ல் வெளியுறவுத்துறையின் இணை அமைச்சராக இருந்தவர் தற்போது அந்த துறையின் அமைச்சராக உயர்ந்து நாடுகளுக்கிடையே கண்டம் விட்டு கண்டம் பறந்து வருகிறார்.

இவர் செல்லும் நாடுகளில் எல்லாம் இவரின் பணிகள் பற்றி கொஞ்சமாக பேசிவிட்டு இவரது அழகை பற்றி வர்ணித்து பக்கங்களை நிரப்புகிறார்கள். இவரின் பேச்சை விட இவரின் அழகை தான் மீடியாக்கள் கவர் செய்கின்றன. இவரின் வயதும், அழகும் தான் செய்தியாகிறது.   

இந்த சிறிய வயதில் அதுவும் மிக முக்கிய துறையான வெளியுறவுத்துறை என்ற பதவி உயர்வுகளுக்கு பின்னால் ஒரு மெல்லிய காதல் கதை ஓடுவதாக பாகிஸ்தான் பரபரத்துக்கிடக்கிறது. ஹீனாவும் அவரது காதலரும் முத்தம் தந்துக்கொண்டு இருக்கும் ரொமான்ஸ் படங்கள் இணையத்தில் பரவியுள்ளன. ஹீனா காதலருடன் நிரந்தரமாக இணைய கணவரை விவாகரத்து செய்யவுள்ளனார் என்கிறது மீடியா உலகம். காதல்யில்லை என ஹீனா ஹீனஸ்வரத்தில் முழங்குகிறார். மீடியாக்கள் சொல்வது பொய் என ஹீனா கணவர் பெரோஸ் குல்கார் உதவிக்கு வருகிறார். ஆனால் ஒரு தரப்பு மட்டும் அமைதியாக இருக்கிறது. அது ஹீனாவின் காதலர் என சுட்டிக்காட்டப்படும் பிலால். ‘மக்கள் தலைவி’ என புகழப்பட்டவரும் எதிரிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட முன்னால் ஜனாதிபதி பெனாசீர்பூட்டோ – இன்னால் ஜனாதிபதி சர்தாரி தம்பதியின் மகன் பிலால். தற்போது பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவர் இந்த பிலால். 1988ல் பிறந்து ஆக்ஸ்போர்டு பல்கலைகழகத்தில் மாடன் அரசியல் படித்த இளைஞன். திருமணம்மாகாத பாகிஸ்தான் பெண்களின் கனவு நாயாகனாக வலம் வர தகுதி படைத்த பேரழகன். ஹீனாவை விட 11 வயது இளையவர். இன்னமும் இவர் ஹீனா மீதான காதலை மறுக்கவில்லை. 

பிலால் தன் தாத்தாவின் வரலாற்றை படித்திருப்பார். அல்லது அவரின் அணுக்கள் இவருக்கும் வந்திருக்கும். அதனால் தான் அவரைப்போலவே ‘வாழ முற்படுகிறார்’. அரசியல் அறிந்தவர்களுக்கு தெரியும் பிலாலின் தாத்தா பூட்டோ என்பது. 

கிழக்கு பாகிஸ்தானில் 1960களில் வசித்த மிகப்பெரிய கோடீஸ்வரர் அப்துல் அஹத். தன் தொழில்க்கு வெளியுறவுத்துறை அமைச்சரின் ‘ஆசி’ இருந்தால் பிற நாட்டு தொழிலதிபர்களின், அதிகாரிகளின் நட்பு கிடைக்கும் என ஆராய்ந்து அப்போது பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த பூட்டோவை அடிக்கடி சந்திப்பார். ஒரு சந்திப்பின் போது தன் இல்லத்துக்கு விருந்துக்கு வர வேண்டும் என அழைப்பு விடுத்தார். பூட்டோ அப்துல்லின் மாபெரும் மாளிகைக்கு சென்றார். அங்கு தான் அந்த அழகியை கண்டார். பேரழகி. ஏற்கனவே இரண்டு திருமணங்கள் செய்திருந்தாலும் வெளிநாட்டில் படித்து, வளர்ந்த அவருக்கு ‘அந்நிய மோகம்’ அதிகமாகவே இருந்தது. 

அப்துல் அஹத் அந்த அழகியை அழைத்தார் இது என் மனைவி ஹஸ்னா என அறிமுகப்படுத்தினார். பூட்டோவின் காதல் மனது குழப்பமானது. இந்த அழகு சிலை இவனின் மனைவியா என தவித்தபோது எதிரில் இருப்பவரின் மனதை நன்கறிந்தவனே நல்ல வர்த்தகன். அதன்படி பூட்டோவின் மனதை அறிந்த வர்த்தகர் அப்துல் தன் மனைவியிடம் இவர் நம் முக்கிய விருந்தாளி இவருக்கு சிறப்பான விருந்து தா என சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்துவிட்டார்.

பூட்டோவின் பார்வையில் அவர் மீதான காதல் ஏக்கத்தை நன்கு அறிந்த ஹஸ்னா தன்னையே விருந்தாக்கினார். தான் இரு பெண்களின் கணவன் என்பதை பூட்டோ மறந்தார். தான் மற்றொருவனின் மனைவி என்பதை ஹசீனா மறந்தார். காதல் இருவருக்குள்ளும் பொங்கியது. கிழக்கு பாகிஸ்தான் பக்கம் எப்போதாவது வந்தவர் இப்போது கிழக்கு பாகிஸ்தானில் ஹஸ்னாவின் இல்லம்மே என் உலகம் என மாறிப்போனார். பாய் விரித்து, அதில் மல்லிப்பூ தூவி, தாகத்துக்கு பால் சொம்பு வரை வைத்த அப்துல்க்கு அதற்கு பிரிதிபலனாக தொழில் வாய்ப்புகளை பெற்றுக்கொண்டார். கோடிகளை சம்பாதித்தார்.

பூட்டோ அமைச்சர் பதவியை துறந்து அரசியல் கட்சி தொடங்கினார். அதுவரை பூட்டோவை சுற்றி சுற்றி வந்த அப்துல் வேறு அதிகாரத்தை தேடிப்போய்விட்டார். அங்கும் தன் மனைவியை பாகடை காயக்கா முயல. ஹஸ்னா – அப்துல் திருமணம் தலாக்கில் முடிந்தது. எதிர்க்கட்சி தலைவராக இருந்த “பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைவர்“ பூட்டோவை காலமும், மக்களும் அவரை பிரதமராக்கினர். அப்போது, கிழக்கு பாகிஸ்தான் மக்கள் தனி நாடு வேண்டும் என கேட்டு போராடினர். 1971ல் பாகிஸ்தானில் இருந்து வங்கதேசம் என்ற நாட்டை உருவாக்கி தந்தார் இந்திராகாந்தி.

எதிர்கட்சி தலைவராக இருந்தாலும், பிரதமராக மாறினாலும் தன் காதலி ஹஸ்னாவை மறக்க முடியாமல் தவித்தார் பூட்டோ. நாடு பிளவுக்கு பின் இந்த ஏக்கம் அதிகரித்தது. 

ஹஸ்னா இருந்தது வங்க தேசத்தில். பூட்டோ பாகிஸ்தான் பிரதமர். ஹஸ்னா பூட்டோவை நினைத்து உருகினார். பூட்டோ வாடினார் வதங்கினார். பூட்டோ அலுவல் ரீதியாக இந்தியா வந்தார். இந்திராகாந்தியை சந்தித்தார். தன் காதலியை பாகிஸ்தானுக்கு அனுப்பிவையுங்கள் என கோரிக்கை விடுத்தார். இந்திரா வங்கதேச பிரதமரிடம் பேசினார். அடுத்த சில தினங்களில் ஹஸ்னா பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் இருந்தார். இரண்டாவது மனைவி நசரேத் கராச்சி, முதல் மனைவி அமீர்பேகம் லார்க்கானா என்ற இடத்தில் தங்கவைத்திருந்தார். ஹஸ்னாவை முறைப்படி திருமணம் செய்துக்கொண்டார் பூட்டோ. நசரேத் எதிர்த்தார், தற்கொலை முயற்சி மேற்க்கொண்டார் பிரதமரின் மனைவி என்கிற பதவி உனக்கு, என் இதயம் ஹஸ்னாவுக்கு என்றார். 

1977 பொது தேர்தலில் வெற்றி பெற்று பிரதமரானாலும் பூட்டோவுக்கு எதிராக எதிர்கட்சிகள் பிரச்சாரம் செய்தன. உடனே ஹஸ்னாவை கோடிகளில் பணம், தங்கத்தை தந்து லண்டனில் பாதுகாப்பாக தங்கவைத்தார். இராணுவப்புரட்சியின் மூலம் ஆட்சிமாற்றம் ஏற்பட்டது. இராணுவ ஆட்சியில் சிறையில் இருந்த பூட்டோ விரும்பி கேட்டது ஒரே ஒருமுறை நான் ஹஸ்னாவை பார்க்க வேண்டும் என்பதே. நசரேத் குடும்பம் அதை முற்றிலும் நிராகரித்தது. பாகிஸ்தான் வந்தால் அவர் விசாரணைக்கு ஆளாவார் என்றது இராணுவ அரசு. தன் காதல் தேவதையை காண முடியாத ஏக்கத்தில் இருந்தவரை தூக்கிலிட்டு கொன்றது இராணுவம். இதோடு நிறுத்துவோம். தாத்தாவை பேல பேரன் உள்ளார். என்ன பிலால் தன்னை விட 11 வயது மூத்தவரை திருமணம் செய்துக்கொள்வது தான் இடிக்கிறது. சரி என்னச்செய்ய அதிகாரம், பணம் இருக்கும் இடத்தில் இது சகஜம். 

புதன், நவம்பர் 14, 2012

சாதியும் வெண்டக்காயும்.
தருமபுரி மாவட்டத்தில் கொல்லன்கொட்டாய் கிராமத்தை சேர்ந்த வன்னிய சமூகத்தை சேர்ந்த ஒருவரின் மகளை, அந்த கிராமத்துக்கு மிக அருகில் உள்ள தலித் சமூகத்தை சேர்ந்த ஒருவரின் மகன் காதலித்து வீட்டுக்கு தெரியாமல் ஓடிப்போய் திருமணம் செய்துக்கொண்டனர். தன் மகளை கடத்தி திருமணம் செய்துக்கொண்டான் என அந்த பெண்ணின் பெற்றோர், ஊராசர் சிலர் காவல்நிலையத்தில் புகார் தந்தபோது, பையன் சார்பாக சிலர் காவல்நிலையத்துக்கு வந்துள்ளனர். இரு தரப்புக்கும் காரசாரமாக பேசிக்கொள்ள அப்போது அங்கு பணியில் இருந்த எஸ்.ஐ, பொண்ண ஒழுங்கா வளக்க தெரியல புகார் தரவந்துட்டான் மானம் போச்சின்னா போய் சாவுடா என ஏச அவமானம் தாங்காமல் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார் பெண்ணின் அப்பா. 

இதில் கோபமான வன்னிய சமூக இளைஞர்கள் இறந்து போனவரின் உடலோடு சாலை மறியல் செய்துள்ளனர். காவல்துறை கண்டுக்கொள்ளாததால் தலித் மக்கள் வசிக்கும் பகுதிக்குள் புகுந்து சில வீடுகளை தாக்கி தீ வைத்துள்ளார்கள் வன்னிய இளைஞர்கள். அதன்பின் காவல்துறை வருகை தலித் மக்கள் வசிக்கும் பகுதிக்கு பாதுகாப்பு. வன்னிய மக்கள் வசிக்கும் பகுதியில் இளைஞர்கள், பள்ளி மாணவர்கள், குடும்பதலைவர்களை கைது செய்ய தேடுதல் வேட்டையென காவலர்கள் நுழைய பதட்ட பரபரப்பில் உள்ளது தருமபுரியின் பென்னாகரம் பகுதியே. அங்கு என்ன நடக்கிறது என தெரியாமலே பெரும்பாலானோர் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஆதரவாகவும், வன்னிய தரப்பு மக்களுக்கு எதிர்ப்பாகவும் களம்மிறக்கி கருத்துக்களை பதிவிட்டு எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றி வருகிறார்கள். 

முதலில் சாதி ஒழிப்பையும் காதலையும் போட்டு குழப்பிக்கொள்வதை நிறுத்துங்கள். காதலித்து சாதி மாறி திருமணம் செய்துக்கொண்டால் சாதி ஒழிந்து விடும் என எண்ணுவது முட்டால் தனமான கற்பனை. காதலித்து திருமணம் செய்துக்கொள்பவர்கள் ஆண் தலித்தாக, பெண் பிராமின் வகுப்பை சார்ந்தவராக இருந்தால் திருமணத்துக்கு பின் அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகள் தாழ்த்தப்பட்ட சமூக குழந்தையாக வளர்கிறது. ஆண் முதலியராக இருந்து பெண் தலித், வன்னியர், செட்டியராக ஏதோ ஒன்றாக இருந்தாலும் அவர்களது குழந்தை முதலியராக பதிவு செய்யப்படுகிறது. அல்லது எந்த சாதியில் சலுகைகள் கிடைக்கிறதோ அந்த சாதியை பதிவிடுகிறார்கள். பிறப்பு சான்றிதழிலும், பள்ளி சேர்ப்பிலும் சாதி குறிக்காமல் இருப்பதில்லை. (சாதி குறிப்பிட தேவையில்லை என சட்டம் கூறுகிறது) ஆக காதல் திருமணங்களால் எந்த நிலையிலும் சாதி அழிக்கப்படுவதில்லை. சாதியை ஏதோ ஒரு வடிவில் உயிர்ப்போடு வைத்திருக்கிறார்கள் காதல் திருமணம் செய்தவர்களும். 

அதுமட்டுமல்ல மேல்சாதி என அழைத்துக்கொள்ளும் முதலியார், நாயுடு, வன்னியர், தேவர், பிராமின் இப்படி எந்த சாதியினராக இருந்தாலும் இந்த சாதிகளுக்குள் உள்ள இளம் தலைமுறையினர் காதலித்தால் அவர்களது பெற்றோர் சாதி மாறி திருமண பந்தம் வைத்துக்கொள்ள முற்படுவதில்லை. இந்து மதத்தில் மட்டுமல்ல இஸ்லாமிய, கிருத்துவ மதத்திலும் இந்த வழக்கம் உள்ளது. தற்போது அதிகரித்து வருகிறது. சாதி பிரச்சனைகளை காதல் திருமணங்களால் மட்டும் முடித்து வைக்க முடியாது. 

காரணம், வர்ணாசிரம் என ஒன்றை காட்டி சாதி பிரிக்கப்பட்டது முதல் நம் உடலில் உள்ள அணுக்களில் பதியமிட்டு வைத்துவிட்டார்கள். தலைமுறைகள் மாறினாலும் அந்த அணுக்களில் எந்த மாற்றமும் ஏற்படாமல் அப்படியே நிலவி வருகிறது. தந்தை பெரியார் தமிழகத்தில் சாதியை எதிர்த்து பலப்பல போராட்டங்களை தன் வாழ்நாள் முழுக்க நடத்தி தமிழகத்தில் சாதியை வெளிப்படையாக பேசும் தன்மையை வெகுவாக குறைத்தார். ஆனால் அரசியல் கட்சிகள் சாதியை அழியவிடாமல் பார்த்துக்கொண்டார்கள்.

தேர்தலில் நிற்க ‘சீட்’ பெற சாதியை முக்கிய காரணியாக, தகுதியாக ஒவ்வொரு கட்சியும் முன் வைக்கிறது. எம்.எல்.ஏ, எம்.பி முதல் அடிமட்ட தொண்டன் வரை ஒவ்வொரு கட்சியிலும் இரண்டு சாதிக்குள் பிரச்சனை என வந்தால் தாங்கள் பிறந்த சாதிக்கே முக்கியத்துவம் தருகிறார்கள். வெளியுலகத்துக்கு சாதிகளே இல்லை என பேசுவது. அரசியல்வாதிகள் மட்டுமல்ல சாதியில்லை என போராடுபவர்கள் பலர் தங்கள் குடும்பத்தில், உறவு வட்டாரங்களில் இப்படி சாதி மாறி காதலிக்கும் தங்களது பிள்ளைகளை மிரட்டுவது இல்லையேல் கவுரவ கொலை செய்கிறார்கள். ஆக அரசியல் கட்சிகள், காதல் திருமணம் செய்துக்கொண்டவர்கள், காதலிப்பவர்கள், சாதி மறுப்பாளர்கள், முற்போக்கு சிந்தனை பேசுபவர்கள், பொதுமக்கள் என எல்லோர் தரப்பிலும் சா’தீ’ உள்ளது. இதனை சாதி சங்கங்கள், இயங்கங்கள், சாதிக்கென கட்சி வைத்துள்ளவர்கள் கன கட்சிதமாக அந்த தீயை அணைய விடாமல் பார்த்துக்கொள்கிறார்கள். 

சாதி அடையாளத்தை தோளில் கிடக்கும் துண்டை போல் வைத்திருக்க வேண்டும். வேண்டாம் என்னும் போது அதை தூக்கி எறியும் மனம் வேண்டும். தங்களது பிள்ளைகளுக்கு பிறப்பு முதல் இறப்பு வரை நான் எந்த சாதியையும் சார்ந்தவனில்லை என குறிப்பிட்டு வளர்க்கும் மனம் இருந்தால் எந்த சாதி தலைவனும் பிரிவை ஏற்படுத்த முடியாது. இரண்டாயிரம் ஆண்டாக உணவு முதல் உடுப்பு வரை மனிதனை பிரித்து வைத்துள்ளதோடு, உயிர்களை பலி வாங்கும் இந்த சாதி தீயை ஒரே நூற்றாண்டில் அணைத்து விடலாம். திங்கள், அக்டோபர் 29, 2012

இணையத்திலும் யுத்தம்.
இன்றைய நவீன யுகத்தில் இணையத்தில் சமூக வளை தளம் வழியாக தனிநபர்கள் மீதான தாக்குதல்கள் அதிகமாக நடந்து வருகின்றன. ஓவ்வொரு காலக்கட்டத்திலும் அந்தந்த காலச்சூழ்நிலைக்கு ஏற்ப இதுபோன்ற தாக்குதல்கள் நடந்தபடிதான் உள்ளன. வழிகள் தான் வௌ;வேறு. பண்டைய காலங்களில் மன்னர்கள் மற்றொரு நாட்டின் மீது படையெடுக்க செல்லும் முன் அந்த நாட்டு மக்களிடம் ஒவ்வொரு மன்னனும் தன் ஆட்சியில் நாட்டில் பாலும் தேனும் ஒடுகிறது, மக்கள் சுபிக்ஷமாக வாழ்கிறார்கள் என ஒற்றர்கள் மூலம் தகவல் பரப்புவார்கள். 

ஹிட்லர் நேச நாடுகள் மீது படையெடுக்கும் முன் ஜெர்மனி பற்றி ஆஹா ஓஹோ என தகவல் பரப்பினார். ஹிட்லர்க்கு எதிர்ப்பாக நேச நாடுகளும் பிரச்சாரம் செய்தன. சீனா திபெத்தை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்க்கு முன் திபெத் அரசியல், மத அமைப்பு பற்றி எதிர்மறை விமர்சனத்தை சீன அரசு செய்தது. கடந்த 50 ஆண்டுகளாக பிடல்காஸ்ட்ரோ பற்றி எதிர்மறை செய்திகளை பரப்பிக்கொண்டு தான் இருக்கிறது அமெரிக்காவின் சி.ஐ.ஏ. இப்படி காலம் காலமாக வந்த பழக்கம் தான் டெக்னாலஜி யுகத்தில் இணைய தளம் வழியாக அதிகமாக பரப்பப்படுகிறது. ஆனால் அது தனி மனித தாக்குதல், குரோதம், விரோதம் போன்றவற்றை தீர்த்துக்கொள்ளும் இடமாக மாறியுள்ளது. 

ஈழ மக்கள் மீது இலங்கை இராணுவம் நடத்திய கொடூர யுத்தத்தை பேசுவதற்க்கு பதில், ஈழ மக்களின் துயரங்களை உலக அளவில் கொண்டு செல்வதற்க்கு பதில் இவர் துரோகி, அவர் துரோகி என எழுதியது தான் அதிகம். தமிழகத்தில் சமூக வளைத்தளத்தில் இங்குதான் தொடங்கின தனிநபர் மீதான தாக்குதல். அதிலும் வெட்ககேடு, ரொம்ப மட்டமான கருத்துகள் தான் அந்த பதிவுகளில் இடம்பெற தொடங்கின. சமூக வளைதளங்களில் யாராவது ஒருவரை தாக்கி பதிவிட்டால் அதற்கு அவரை சார்ந்தவர்களோ அல்லது அவரோ பதில் பதிவு செய்தால் இன, மொழி, பாலியல் துரோகிகளாக்கப்பட்டார்கள். 

தனி நபர் மீதான தாக்குதல்கள் தொடக்கமும் இப்படித்தான். திக, திமுக, அதிமுக, காங்கிரஸ், தேமுதிக, மதிமுக, கம்யூனிஸ்ட், நாம் தமிழர் கட்சியை சார்ந்தவர்கள் மாற்று கட்சி தலைவர்களை வார்த்தைகளில் கண்ணியம்மில்லாமல் தாக்க தொடங்கினர். அதிலும் திமுக தலைவர் கலைஞர், அவரது குடும்பம் உச்சகட்ட விமர்சனத்துக்கு ஆளானது. அதற்கு அடுத்த இடம் ஜெ. 

கலைஞர் டுவிட்டர், பேஸ்புக் உறுப்பினரானபோது அவரது முகப்பு பக்கம் சென்று மோசமாக கமெண்ட் இட்டார்கள். இதனை தொடங்கி வைத்தவர்கள் யார் என்றால் நான் கவனித்த வரை சீமான் தம்பிகள், தமிழர் பற்றாளர் என்பவர்கள் தான். கலைஞர், காங்கிரஸ் எதிர்ப்பு கருத்துக்களை ஆதார பூர்வமாக பதிவிடாமல் அநாகரிக வார்த்தைகளில் பதிவிட தொடங்கினார்கள். திமுக உடன்பிறப்புகளும் வசவு மொழியில் பதிலடி தர அநாகரீகத்தின் உச்சத்தை இரண்டு தரப்புமே தொட்டார்கள். கருத்தை கருத்தியல் ரீதியாக எதிர்க்கொள்ளாமல் ஒருவரை மற்றொருவர் தாக்க தொடங்கி சமூக வளைதளம் பக்கம் வரவே வெறுப்பாக்கும் அளவுக்கு போனது. 

உடன்பிறப்புகள் இணையத்தில் இப்படி பேசுவது தவறு என இணையத்தில் இயங்கும் திமுக, திகவின் அறிவு ஜீவிகள் உடன்பிறப்புகளுக்கு அறிவுரையை திரும்ப திரும்ப சொன்னப்பின் அவர்கள் குறைத்துக்கொண்டார்கள். ஆனால் அதே அறிவுரையை சீமான் தம்பிகளுக்கு சொல்லித்தரத்தான் யாரும்மில்லை. 

அரசியலில் மட்டுமல்ல சினிமாத்துறையினரையும் தாக்கும் போக்கு அதிகரித்துள்ளது. நடிகர் விஜய் பற்றி அஜித் ரசிகர்களும், அஜித் பற்றி விஜய் ரசிர்களும் கில்மாவாக விமர்சனம் செய்கிறார்கள். இது சிம்பு – ஜீவா, நயன்தாரா, அசின், த்ரிஷா என சினிமா உலகில் யாரையும் விட்டு வைக்கவில்லை. இலக்கிய உலகிலும் அப்படியே. மானுஷ்யபுத்திரன், சாருநிவேதா, ஜெயமோகன், ஷோபாசக்தி, குட்டிரேவதி என பலரும் விமர்சனத்துக்கு ஆளாகி வருகிறார்கள். விமர்சனம் செய்கிறார்கள். 

இப்படி அநாகரிக் யுத்தம் ஒரு புறம் நடந்தாலும் மற்றொரு புறம் நல் கருத்துக்களுக்காக பல குழுக்கள் இயங்கி வருகின்றன. அதில் உள்ளவர்கள்  கருத்தை கருத்தாக எதிர்கொள்கிறார்கள். இதேபோல் மற்றவர்கள் செயல்பட்டால் சிறப்பாக இருக்கும். 

இணையம் கட்டற்ற சுதந்திரத்தை தருகிறது. ஆனால் அதனை பெரும்பாலானோர் தவறாகவே பயன்படுத்துகின்றனர். இணையத்தை பயன்படுத்தும் ஒவ்வொருவரும் நல் விதமாக பயன்டுத்த வேண்டும் என எண்ணினால் மட்டுமே இந்த யுத்தத்தை நிறுத்த முடியும். 

இந்த இணைய யுத்தத்தை நிறுத்த நீண்ட காலம் பிடிக்கும்.

ஞாயிறு, அக்டோபர் 28, 2012

பாடகி சின்மாயும் இணையமும்.
சில தினங்களுக்கு முன்பு வரை சின்மாயியை தெரியுமா என கேட்டுயிருந்தால் அவுங்க எந்த நாட்டுக்காரங்க என கேட்டுயிருப்பேன். இப்போது சின்மாயி பெண் சுதந்திரத்தை காக்க வந்த ‘போராளி’யாக அடையாளப்படுத்துகிறார். 

சில தினங்களுக்கு முன் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகம் சென்று என்னை இணையத்தில், சமூக வளைத்தளத்தில் பாலியல், சாதி ரீதியாக மோசமாக சித்தரிக்கிறார்கள், துன்புறுத்துகிறார்கள் என புகார் வாசித்தார். அவரது புகாரை வாங்கிய காவல்துறை அவர் குற்றம் சாட்டிய சிலரை கைது செய்து சிறைக்கு அனுப்பிவிட்டது. குற்றவாளியாக்கப்பட்டவர் நான் தவறு செய்யவில்லை என்பதை நீதிமன்றத்தில் நிருபிக்க வேண்டும். காரணம் நம் சட்டம் அப்படி. 

என்ன பிரச்சனை என இணையத்தில் சமூக வளைத்தளங்களில் தீவிரமாக தேடியபோது இரண்டு தரப்பும்மே அவரவர் கருத்தை மட்டும்மே பதிவு செய்திருந்தார்கள். அவரவர் எழுத்து அவரவர்க்கு நியாயமே. 


கைது செய்யப்பட்டவர்கள் தரப்போ, தமிழக மீனவர்களுக்காக இணையத்தில் குழு ஆரம்பித்து விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தோம். அதில் தொடங்கியது எங்கள் மோதல் அநாகரிகமாக எதுவும் கருத்து கூறவில்லை. மற்றவர்கள் கூறுவதை என் கருத்தாக எடுத்துக்கொள்வது மிக தவறு என்றுள்ளார்கள். 

அய்யங்கார் வம்சத்தில் பிறந்ததாக குறிப்பிடும் சின்மாயி. இடஒதுக்கீடு, இராணுவத்தால் மீனவன் சுட்டுக்கொலை, சாதி வெறி போன்றவற்றை முன்வைத்து சமூக வளைதளங்கில் எனது கருத்துக்களை பதிவிடுகிறேன் அதில் மற்றவர்கள் கருத்தோடு மாறுப்பட்டுயிருப்பதால் என்னை மோசமாக விமர்சிக்கிறார்கள் என்றுள்ளார். 

சின்மாயி இடஒதுக்கீட்டை எதிர்த்து பதிவிடுகிறார். அப்போது இலங்கை கடற்படையால் பாதிக்கப்படும் மீனவர்களுக்காக சிலர் குழு ஆரம்பித்து இணைய தள பிரச்சாரம் செய்கிறார்கள். அப்போது சின்மாயிடம் கருத்து கேட்டுள்ளார்கள். அவர் நாங்கள் (பிராமின்) மீன் சாப்பிடமாட்டோம். மீனை கொல்பவனை இராணுவம் கொல்கிறது அதில் என்ன தவறு. மீனவனுக்காக பரிதாபப்படுபவர்கள் மீனுக்காக பரிதாப்படவேண்டும். மீனும் உயிர்தானே. நான் மீனுக்காக பரிதாப்படுகிறேன் என பதிவிட பிரச்சனை சூடாகிறது. 

இதற்கு குழுவில் உள்ளவர்கள் எதிர்வினையாற்றுகிறார்கள். இதில் கருத்து மோதல் வருகிறது. சின்மாயி கருத்தோடு அனைவரும் ஒத்துபோக வேண்டும் என்பதில்லை. ஆனால் தன் கருத்தோடு மற்றவர்கள் ஒத்து போக வேண்டும்மென எதிர்பார்க்கிறார். அது நடக்கவில்லை. விமர்சனங்கள் இரண்டு தரப்பிலும்மே எல்லை மீற தொடங்குகின்றன. ஒரு கட்டத்தில் சின்மாயி அவர் எழுதிய விமர்சனங்களை அழித்து விட்டு அவருக்கு எதிராக வந்த கருத்துக்களை காப்பி செய்து அதை தனியாக சேமித்து வைத்து என்னை பாலியல் ரீதியாக வார்த்தைகளில் துன்புறுத்துகிறார்கள் என சிலர் மீது புகார் தந்து கண்ணீர் விட அதனை கண்டு ஆணாதிக்கம் இணையத்திலும்மா, இங்கும் பெண்களுக்கு பாதுகாப்பில்லையா, சுதந்திரம்மில்லையா என கேட்க வைத்துவிட்டது. 

சின்மாயி பிறந்த சாதி, அவருக்குள்ள சினிமா பிரபலம், அவரது அழகு, அவர் சார்ந்துள்ள சமூக அதிகாரம், அவற்றையெல்லாம் விட அவர் பெண் என்பதால் அவர் நினைத்ததை செய்ய வைத்துள்ளது. 

இதில் காவல்துறை எடுத்தோம், கவிழ்த்தோம் என செய்தது முட்டாள்தனம். இன்றளவும் தமிழக காவல்துறைக்கு சைபர் கிரைம்மில் போதிய அனுபவமில்லாமையால் தடுமாறுகிறது. அப்படியிருக்க சின்மாயி தந்த ஆதாரத்தை கொண்டு எப்படி நடவடிக்கை எடுத்தார்கள் என புரியவில்லை. சின்மாயி தந்த புகார் உண்மையா இதில் முதலில் யார் தவறு செய்தது என விசாரணை செய்துயிருக்கலாம். அப்படி செய்ததாக தெரியவில்லை. 

இணையத்தில் இன்றைய டெக்னாலஜி யுகத்தில் கருத்துக்கள், புகைப்படம், ஆடியோ, வீடியோ போன்றவற்றை இருப்பதை இல்லாததை போலவும், இல்லாததை இருப்பதை போலவும் உருவாக்குவது மிக மிக சுலபம். அப்படியிருக்க தீர ஆராயாமல் நடவடிக்கை எடுத்துள்ளார்கள். ஓன்று மட்டும் நிச்சயம் சின்மாயி தவறாக பயன்படுத்தியிருக்கலாம். ஆனால் இப்படியும் நடவடிக்கை எடுக்கலாம் என்பதை இணையத்தில் புழங்கும் பெண்களுக்கு கற்று தந்துள்ளார். இதனை அவர்கள் தவறாக பயன்படுத்தாமல் உண்மையாகவே பாதிக்கப்பட்டால் இச்சட்டப்படி அனுகலாம். 

சமூகவளைத்தளத்தில் இயங்கும் பெண்கள் (ஆண்களும்) நீங்கள் பதிவிடும் ஒரு கருத்துக்கு நியாயமான முறையில் எதிர்வினை வந்தால் அவர்களுடன் விவாதியுங்கள். நியாயமற்றதாக இருந்தால் விவாதிக்காதீர்கள். 

தனிப்பட்ட விரோத தாக்குதல் நடத்தினால் சொல்லி புரியவைங்கள். திருந்தவில்லை தாக்குதல் உச்சத்துக்கு சென்றால் அந்த கருத்துக்களை சேமித்து வைத்து பின் நடவடிக்கைக்கு முயலுங்கள். (சின்மாயி போன்று நடந்துக்கொள்ளாதிர்கள். ஏன் எனில் சின்மாயி – எதிர்வினை ஆற்றியவர்கள் இரண்டு தரப்பும்மே சமாதான உடன்படிக்கைக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது.)

ஒருவர் உங்களை அநாவசியமாக அருவருக்கதக்க கருத்துக்களை பதிவிட்டு உங்களை தொந்தரவு செய்தால் அவரை ப்ளாக் செய்துவிடுங்கள். பிரச்சனை முடிந்தது. 

இணையம் வழியாக நாம் பதிவிடும் கருத்துக்களை இந்த உலகம்மே கண்டுக்கொண்டுயிருக்கிறது. நீங்கள் இடும் பதிவுகள், கருத்துக்கள், எதிர்வினைகள் தான் நீங்கள் யார், எப்படிப்பட்டவர் என்பதை வெளிச்சம்மிட்டு காட்டும் அதனால் அதனையும் கவனத்தில் வையுங்கள். 

அறிஞர் அண்ணா குறிப்பிடுவதை போல கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டோடு செயல்படுங்கள். இணையத்தை நல்லதுக்கு மட்டும் பயன்படுத்துங்கள். அறிவை வளர்த்துக்கொள்ளுங்கள். 

சனி, அக்டோபர் 20, 2012

இல்லாமை……….. இயலாமை என்ற கப்ஸா.
தினமணியில் ஒர் தலையங்கம் வந்துள்ளது. அதாவது தமிழகத்தில் நிலவும் மின் தட்டுப்பாட்டால் அங்காங்கு போராட்டம், மின் நிலையம் முற்றுகை என பொதுமக்கள், அரசியல் கட்சிகள் நடத்தி வருகின்றன. மின்சார தட்டுப்பாடு அரசின் இயலாமையால் வந்ததல்ல. இல்லாமையால் வறுவது என ‘அவாள்’ ஆட்சிக்கு ஆதரவாக ஒர் கட்டுரை எழுதப்பட்டுள்ளது. 

கட்டுரையாளரின் தனிப்பட்ட விருப்பம் என்பது வேறு, ஒரு பத்திரிக்கை ஆசிரியரின் விருப்பம் என்பது வேறு. பத்திரிக்கை ஆசிரியரின் நிலைப்பாடு என்பது மக்களுக்கானதாக, நேர்மையின் பக்கமாக, அலசி ஆராயும் தன்மையோடு இருக்க வேண்டும். எடுத்தோம் கவிழ்த்தோம் என்று இருக்ககூடாது. ஆனால் இல்லாமை இயலாமை கட்டுரை முழுக்க முழுக்க பூசி மெழுகும் தன்மையில் எழுதப்பட்டது. 

தமிழகத்தில் சென்னையை தவிர்த்து தற்போது அதிகபட்சம் 18 மணி நேர மின்சார துண்டிப்பு உள்ளது. மீதியுள்ள 6 மணி நேர மின்சாரத்தையும் என்பது ஒழுங்காக தருவதில்லை. 1 மணி நேரம், அரை மணி நேரம் என தருகிறார்கள். இது இல்லாமையால் வந்ததில்லை. இயலாமையால் வந்தது. நிர்வாகம் நடத்த தெரியாததால், பண ஆசையால் வந்தது. கடந்த திமுக ஆட்சியின் போது மின்பற்றாக்குறை ஏற்பட தொடங்கியதும் மத்தியதொகுப்பில் இருந்து கேட்டு வாங்கினார்கள். அதோடு, தனியாரிடம் வாங்கினார்கள். புதிய திட்டங்களை தீட்டினார்கள். 

ஆட்சி மாற்றம் ஏற்பட்டபின் மத்தியதொகுப்பில் இருந்து மின்சாரம் கேட்டுயிருக்க வேண்டும். கடந்த ஆட்சிக்காலத்தில் போடப்பட்ட திட்டங்களை விரைந்து முடிக்க செய்திருக்கவேண்டும், தனியாரிடம் வாங்கியிருக்க வேண்டும் இதை எதையும் ஜெ செய்யவில்லை என்பதை ஏனோ தினமணி சுட்டிக்காட்ட மறுக்கிறது. 

அதோடு, மத்தியரசு தர மறுக்கிறது என்கிற போக்கிலும், கடந்த திமுக ஆட்சியில் எதுவும் செய்யவில்லை என்பதை போல குற்றம் சாட்டுகிறது. மத்திய தொகுப்பில் இருந்து மின்சாரம் கேட்டால் நெய்வேலியில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் பக்கத்து மாநிலங்களுக்கு தரப்படுகிறது. அதை குறைத்து தான் நமக்கு ஒரளவு தருவார்கள். அடுத்ததாக கடந்த காலங்களில் போடப்பட்ட திட்டங்கள் என்னவானது என தினமணி கேட்கவில்லை. கேட்டால் அம்மையார் கோவித்துக்கொள்வார் என்ற பயம்மா? அல்லது இன பாசமா? என தெரியவில்லை. 

கடந்த கால திட்டங்களை நடைமுறைப்படுத்த அம்மையார் தயாரில்லை. அதோடு, தனியாரிடம் வாங்கி எவ்வளவு நாளைக்கு குறைந்த விலைக்கு மின்சாரம் தரமுடியும் என்ற கேள்வியை எழுப்பியுள்ளது தினமணி. கடந்த 15 ஆண்டுகளாக 30 சதவித மின்சாரம் தனியார் நிறுவனங்களிடம் இருந்து வாங்கி தான் தமிழ்நாடு மின்சார வாரியம் வழங்குகிறது. அப்படியிருக்க தினமணி சப்பைகட்டு கட்ட தேவையில்லை. 

அரசு நிறுவனங்களில் எதிர்பார்த்த அளவுக்கு மின் உற்பத்தியில்லை என்றதும் தனியார் நிறுவனங்கள் தங்களது நிறுவனங்களில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்துக்கு அதிக விலை கேட்கிறார்கள். அதை தருகிறது அரசு. அதை குறைக்க வழி செய்வதில்லை காரணம், அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு செல்லும் கமிஷன். அதோடு, அணல் மின் நிலையங்களுக்கு தேவையான நிலக்கரி இறக்குமதியில் நடக்கும் ஊழல் போன்றவற்றால் தான் மின் உற்பத்தி பாதிக்கப்படுகிறது. இது எதனையும் சுட்டிக்காட்ட மறுக்கிறார்கள். ஆக மின்தட்டுப்பாடு இல்லாமையால் வந்ததல்ல. இயாலாமையால் தான் மக்கள் இந்த துன்பத்துக்கு ஆளாகியுள்ளார்கள் என்பதை சுட்டிக்காட்டுங்கள். 

வெள்ளி, செப்டம்பர் 28, 2012

உறவுகளை உதறி தள்ள வைக்கும் சொத்துக்கள்.இந்த கட்டுரையை படிப்பவர்களுக்கு பெண்களுக்கு எதிரான கட்டுரையாக தோனும் வகையில் தான் இந்த கட்டுரையிருக்கும். ஆனால் இதில் உள்ள ஆண் பிள்ளைகள் நியாயத்தை கொஞ்சம் யோசித்து பார்க்க வேண்டும். 

கிராமத்தில் உள்ள ஒரு விவசாயி, தனக்கு பிறந்த இரண்டு ஆண் பிள்ளைகள், இரண்டு பெண் பிள்ளைகளை நன்றாக படிக்க வைப்பார். பசங்கள் படித்து முடித்து வேலைக்கு போனதும் ஆண் பிள்ளைகளை விட பெண் பிள்ளைகள் வயதில் சிறியவர்களாக இருந்தாலும் முதலில் பெண் பிள்ளைகளுக்கு தன் வசதிக்கு தகுந்தயிடத்தில் மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைப்பார். முதல் பெண்ணுக்கு என்ன வரதட்சனை தருகிறாறோ அதே வரதட்சனையை தான் சின்ன பெண்ணுக்கும் செய்வார். சில நேரங்களில் சின்ன பெண்ணுக்கு அதிகமாக செய்தால் முதலில் திருமணம் செய்து வைத்த பெண்ணுக்கு செய்து விடுவார். அதே போல் பண்டிகை நாட்களில் இரு பெண்ணுக்கும் சமமாக தான் சீர் செய்வார். 

அதன்பின் ஆண் பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைப்பார். அந்த விவசாயியால் இனி அதிகமாக உழைக்க முடியாது என்ற நிலை வந்தபின் ஊர் முக்கியஸ்தர்களை வைத்து சொத்துக்களை பிரிக்கச்சொல்வார். அதன்படி உறவினர்கள் சாகிதம் அந்த குடும்ப வாரிசுகள் அனைவரையும் அழைத்து சொத்துக்களை பிரிப்பார்கள். 

நிலம் 10 ஏக்கர் உள்ளது என்றால் ஆளுக்கு 5 ஏக்கர் தருவார்கள். ஒரே வீடாக இருந்தால் இரண்டு பேர் பெயரில் எழுதி வைப்பார்கள். வீட்டில் அந்த குடும்ப தலைவிக்கு உள்ள நகைகள் அந்த குடும்பத்தில் பிறந்து திருமணம் செய்துக்கொண்டு போய்விட்ட பெண்களுக்கு சமமாக பிரித்து தருவார்கள். பண்ட பாத்திரங்களையும் அதேபோல் மகள்களுக்கு பிரித்து தருவார்கள். 

அந்த குடும்ப தலைவர் கடன் பெற்றிருந்தால் அந்த கடன்களை மகன்களுக்கு பிரித்து தருவார்கள். சில நேரங்களில் மகளை கட்டி தந்தயிடத்தில் பிரச்சனையாகி மருமகன் குடிகாரனாக இருந்தால் அந்த பெண்ணின் வாழ்க்கை பாதுகாப்புக்கு சொத்தில் கொஞ்சம் பங்கு தருவார்கள். இதான் நடைமுறை. கடன்களை மகள்களுக்கு தரமாட்டார்கள். இப்படித்தான் இருந்தது தமிழகத்தில். 

திமுக ஆட்சிக்கு வந்தபின் பெண்களுக்கு சொத்தில் பங்குண்டு என்ற பின் நகரங்களில் பெண்களுக்கு சொத்தில் பங்கு தர தொடங்கினார்கள். கொஞ்சம் கொஞ்சமாக கிராமங்களுக்கும் அது வந்தது. 

இப்போது இதன் நிலை ?.

எனது கிராமத்தை சேர்ந்த 27 வயது இளைஞன். அவனுக்கு மூன்று சகோதரிகள். விவசாயம் தான் தொழில். அவனது அப்பா அவருக்கு இருந்த நிலங்களை விற்றதால் அவரது அம்மா மூனு பொட்ட புள்ளைய பெத்து வச்சியிருக்கன். இப்படி சொத்த வித்தா என்ன அர்த்தம் என சண்டை போட்டு 3 ஏக்கர் நிலத்தை மட்டும் தன் பெயரில் எழுதி வாங்கிக்கொண்டார். அதோடு குடியிருந்த வீட்டை தனது மூன்று மகள்கள் பெயரில் எழுதி வைத்தார். அப்போது அவரது உறவினர்கள் ஒரே பையன் அவன் பேர்ல எழுதி வைங்க என கூற அவுங்க அப்பனை போல அவன் விக்கமாட்டான்னு என்ன அர்த்தம் என கேட்டனர். அப்போது அவனுக்கு வயது 15. அவன் அதைப்பற்றி அலட்டிக்கொள்ளாமல் என் தங்கச்சிங்க பேர்லயே இருக்கட்டும். வீடு தானே எங்க போயிடபோகுது என்றான். வீடு அவனது தங்கைகள் மேல் பதியப்பட்டது. 

பத்தாவதுக்கு மேல் அவன் படிக்கவில்லை. விவசாயம் பார்க்க ஆரம்பித்தான், உடன் பால் வியாபாரம் செய்தான். நல்ல வருமானம். அதை தந்தையிடம் தான் தந்தான். அவனுக்கு 21 வயதாகும் போது அவனது முதல் தங்கைக்கு 20 வயது. திருமணம் முடிந்தது. அடுத்த இரண்டு ஆண்டில் அவனது இரண்டாவது தங்கைக்கும் திருமணம் முடிந்தது. அவனது வருமானமும் அதில் உண்டு. அதன்பின் அவனுக்கு திருமணம் செய்துவைத்தார்கள். கொஞ்சம் தடம் மாறி குடிக்க தொடங்கினான். மூன்றாவது தங்கைக்கு நான்கு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இவன் அண்ணன் என்ற முறையில் 2 லட்சம் வரை செலவு செய்தான். 

மகனின் குடி பழக்கத்தால் அவனது அப்பாவும் அம்மாவும் தனிக்குடித்தனம் போனார்கள். குடி பழக்கத்தில் இருந்து கொஞ்சம் மாறினான். விவசாயம் மட்டும் செய்ய தொடங்கினான். 2 பிள்ளைகள் அவனுக்கு. குடும்பத்தை கவனிக்க தொடங்கினான். அவனது தங்கைகளுக்கு திருமணம் செய்து வைத்த வகையில் அவனது அப்பா வாங்கிய சில லட்ச கடன்கள் மகன் என்ற முறையில் இவனிடம் வந்தது. அதை பொறுப்பு ஏற்று அடைக்க தொடங்கினான். மகன் பொறுப்புள்ளவனாக மாறிவிட்டான், கடன்களை அடைக்கிறான் என்றவுடன் அவனது அம்மா தன் மகள்கள் பெயரில் எழுதி வைத்த வீட்டை தன் மகன் மேல் எழுதி வைக்க ஆசைப்பட்டார். 

மகள்களை வரவைத்து உறவினர்கள் மூலம் அண்ணன் மேல வீட்டை எழுதி வைக்கலாம்ன்னு இருக்கன்ம்மா என கேட்டுள்ளார். எங்க பேர்ல இருக்கற வீட்டை நாங்க ஏன் தரனும். அதெல்லாம் தர முடியாது. முதல்ல உன் பேர்ல இருக்கற நிலத்தை நாலு பாகமா பிரி. அதுயென்ன அது மட்டும் பயிர் வைக்கறது என கேட்டுள்ளார்கள் மூவரும் கோரஸாக. அந்த தாய் அதிர்ந்து போய்வுள்ளார். என்னங்கடீ இப்படி பேசறிங்க. உங்களுக்கு கல்யாணம் பண்ணது, புள்ளை பெத்துக்க வீட்டுக்கு வந்திங்களே அப்ப சீர் செய்தது, நல்லது கெட்டதுக்குன்னு அவன் செலவு செய்துயிருக்கான், இனிமே அவன் தான் உங்களுக்கு ஏதாவது செய்யனும் எனச்சொல்ல அதெல்லாம் பேசாத என்றுள்ளார்கள். இதனை கேட்டு உறவினர்களும் அதிர்ந்து போய்வுள்ளார்கள். அந்த தாய் முடிந்த வரை மகள்களிடம் போராடியபோது மருமகன்கள் மனைவிகளுக்கு விடாத என கீ தந்தபடி இருந்துள்ளார்கள். 

கடைசியில் நிலத்தை பிரிச்சித்தர்றன் வீட்ட அவன் பெயர்க்கு எழுதி தாங்க என கேட்டபோது, முடியவே முடியாது. வீடு எங்கள்து. அத பிரிக்க கூடாது. நீ நிலத்த பிரிச்சி தரலன்னா கேஸ் போடுவோம் என்றுள்ளார்கள். 

இதில் கோபமான கணவன் மனைவி இருவரும், இது அவுங்க அப்பன் சம்பாதிச்சது. நானோ, நீங்களோ சம்பதிக்கல. அந்தாளு போனா போகுதுன்னு என் பேர்ல எழுதி வச்சாரு. நான் உங்க பேர்ல எழுதி வச்சன். நீங்க என்ன இப்படி பேசறிங்க. எல்லாத்தலயும் பங்கு வேணும்ன்னா கடன்லயும் பங்கு வாங்கிக்குங்க என்றுள்ளார்கள். 

கடன்யெல்லாம் ஏத்துக்க முடியாது. நீ பிரிக்கலன்னா நாங்க கேஸ் போட்டா எங்களுக்கும் சொத்துல பங்கு வரும் தெரிஞ்சிக்க என்றுள்ளார்கள். அந்த தாய் என்னங்கடி வாய் நீளுது என கேட்க சும்மா பேசாத என்றுள்ளார்கள். 

இறுதியில் வீட்ட பிரிச்சிக்க சம்மதிக்கறோம் அதல அதுக்கும் ( அண்ணன் ) பங்கு தர்றோம் என்றுள்ளார்கள். அந்த பெண்களின் அண்ணன் மூனு பேருக்கும் சேர்த்து 5 லட்சம் தர்றன் வீட்டை எனக்கு தாங்க என கேட்டுள்ளான். ஒரு தங்கை ஒத்துக்கொள்ள மற்ற இரண்டு தங்கைகள் 5 லட்சமா அது எந்த மூலைக்கு ஆளுக்கு 5 லட்சம் வேணும் என கேட்டுள்ளார்கள்.

வீடு அவ்ளோ போகாது என உறவினர்கள் எடுத்து சொல்ல. அதெல்லாம் வீண் பேச்சு. தந்தா 5 லட்சம். இல்லன்னா அத வீட்ட விட்டு அத வெளியில போகச்சொல்லுங்க. இனிமே இருக்கறதா இருந்தா வாடகை தரச்சொல்லுங்க என கேட்க அதிர்ந்து போனவன் எனக்கு எதுவும்மே வேணாம் என வந்துள்ளான். அவனது தாய் இப்போது அழுதுக்கொண்டு இருக்கிறார். 

ஒரு சாதாரண சின்ன கிராமத்தில் தற்போது நடந்துள்ள இன்னும் முடியாத ஒரு சம்பவம். 

அந்த குடும்ப தலைவன் வாங்கிய நிலம். அவர் கட்டிய வீடு. பிள்ளைகளை படிக்க வைத்தார். திருமணம் செய்த வகையில் 10 லட்சம் கடன். மகள்கள் பெயரில் இருக்கட்டும் என எழுதி வைத்த வீட்டை அந்த மகள்கள் இப்போது காலி செய் இல்லையேல் வாடகை தா என கேட்கிறார்கள். இல்லையேல் ஆளுக்கு 5 லட்சம் கேட்கிறார்கள். அந்த வீடே 5 லட்சத்துக்கு மேல்போகாது. 

எங்கே போனது இவர்களது ரத்த பாசம். அந்த குடும்பத்தில் உழைத்ததே அந்த இரண்டு ஆண்கள் தான். சகோதரிகளுக்கு செய்த திருமண கடனை இவனே அடைக்க வேண்டும். கடனில் அந்த சகோதரிகள் பங்கு பெற மாட்டார்கள். ஆனால் சொத்தில் மட்டும் பங்கு வேண்டும் என கேட்பது எந்த விதத்தில் நியாயம் ?. 

பதில் அறிந்தவர்கள் சொல்லுங்கள். 

புதன், ஆகஸ்ட் 29, 2012

அவளின் கேள்விக்கு என்ன பதில்.

அவளின் கேள்விக்கு என்ன பதில்....  என்ற தலைப்பில் நான் எழுதிய சிறுகதை வல்லமை இணைய தளத்தில் வந்துள்ளது. நண்பர்கள் படித்து கருத்து கூறவும்.

கதையை படிக்க மேலே உள்ள தலைப்பை க்ளிக் செய்தால் வல்லமை தளத்திற்க்கு அழைத்து செல்லும்.

நன்றி. 

புதன், ஆகஸ்ட் 15, 2012

சுகமான சுமைகள் …………. 30.
சென்னை வந்ததும் ஜானிடம் நடந்ததை சொன்னதும், மச்சான் என்னாச்சி அதுக்கு.  எதுக்காக இப்ப உங்கள பிரிக்கனம்ன்னு நினைக்குது. உங்க காதலை எல்லாரும் ஒத்துக்கிட்டாங்க. சொந்தக்காரங்க பலருக்கும் நீ தான் அதை கல்யாணம் செய்துக்க போறன்னு தெரியும் அப்பறம் என்ன திடீர்ன்னு இது குட்டைய குழப்புது. 

தெரியலடா. 

கவிதாவ கேட்டியா 

கேட்டன் தெரியலன்னு சொல்றா. 

சரி நீ நேர அவுங்க அம்மாக்கிட்டயே கேட்க வேண்டியதுதானே. 

அவுங்க முன்னமாதிரியில்லடா சரியா பேசறதில்ல. 

நீ தேவிக்கிட்ட சொல்லி என்னன்னு கேட்டுப்பாறேன். 

இரண்டு நாள் பொருத்து தேவி எதுவும் சொல்லமாட்டேன்னிட்டா என்றதாம். 

கவிதாவுக்கும் தெரியவில்லை. 

ஜான் தான் மச்சான் ஒருவேளை, நாம வசதியான இடத்தல கல்யாணம் பண்ணிக்கிட்டோம். அதே மாதிரி தங்கச்சியும் வசதியான மாப்பிள்ளையா பாத்து கல்யாணம் செய்து வைக்கனம்ன்னு யோசிச்சியிருக்குமோ. 

ஏய் ச்சீ. நீயா ஏதாவது கற்பனை பண்ணாத. 

அப்பறம் ஏன் திடீர்ன்னு தடுக்கனும்?. நான் சொல்றது தான் காரணமா இருக்குமோன்னு நினைக்கறன் என்றவன் மச்சான் கவிதா ஸ்ட்ராங்கா தானே இருக்கு. 

ம். அப்பறம் என்ன விடு. அது ஒத்துக்கலன்னா ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்குங்க. அதுக்கப்பறம் பிரச்சனை வராது. 

விடு. அத அப்பறம் பாத்துக்கலாம் என்றபடி வேலை பார்க்க தொடங்கினோம். 

அடுத்த 6 மாதம் ப்ரியாவிடம் பேச நினைத்தாலும் ஏதோ ஒன்று தடுத்துக்கொண்டே இருந்தது. கவிதாவிடம் மட்டும் பேசிக்கொண்டு இருந்தேன். ஆனால் மெல்ல மெல்ல கவிதாவின் போக்கு மாறத்தொடங்கியது. முன்பு போல் பேசுவதில்லை, வாரந்தோறும் பார்த்துக்கொண்டது இப்போது கட்டாயப்படுத்தினால் மட்டுமே அவளை சந்திக்க முடிந்தது. அதேநேரம் கவிதா என்னைப்பற்றி எதிர்மறையாக பேசுகிறாள் வந்த தகவல் வேப்பங்காயாக கசக்க தொடங்கியது. இருந்தும் கவிதா முடிவு எடுத்தால் பிடிவாதமாக இருப்பால் என்பதால் சைலண்டாகவே இருந்தேன். 

கவிதாவின் கல்லூரி படிப்பு முடிந்து ஒரு ஸ்கூலில் டீச்சராக வேலைக்கு போக தொடங்கியபின் அவளிடம் காதல் இல்லையோ என எண்ணத்தோன்றியது. அந்தளவுக்கு என்னை உதாசினப்படுத்துவதாக தோன்றியது. இது மனப்பிரம்மையாக இருக்கும் என எண்ணி அதில் அதிகம் கவனம் செலுத்தவில்லை. ஆனால் நாட்கள் ஆக ஆக தான் புரிந்தது மனப்பிரம்மையல்ல உண்மையென்பது. பல விஷயங்களை கவிதாவின் நண்பர்கள் சொல்லியே அறியவந்தபோது அதிர்ச்சியானது. 

இந்த நேரத்தில் தான் அந்த கல்யாணம் உறவில் பெரும் விரிசலை ஏற்படுத்தும் என நினைக்கவில்லை. கவிதாவின் உறவினர் ஒருவரின் திருமணம் பெங்களுருவில் நடந்தது. அந்த திருமணத்திற்க்கு எனக்கு தனியாக அழைப்பு வந்திருந்தது. இதை அவர்களிடம் கூறவில்லை. அவர்களும் என்னை அழைக்காமல் சென்றுவிட்டனர். சென்னையில் இருந்து ரயில் மூலமாக நானும், ஜானும் போயிருந்தோம். அங்கே எங்களை கண்ட கவிதாவுக்கு அதிர்ச்சி. அதைவிட அதிர்ச்சிக்குள்ளானவர்கள் அவரது பெற்றோரும், ப்ரியாவும் தான். 

மேடைக்கு சென்று அந்த பெண்ணை வாழ்த்திவிட்டு வந்தபோது ப்ரியாவின் கணவர் தான் என்ன பாஸ் கண்டுக்காம போறிங்க என அழைத்தார். ஸாரி சார் கவனிக்கல என்றதும் அருகில் உட்கார வைத்து பேசியவர், வீட்டுக்கு வாங்க இல்ல சார் லீவுயில்ல உடனே போகனும். அப்ப வாங்க சாப்பிட்டுட்டு போகலாம் என்றார். இருவரும் சென்று சாப்பிட்டபோது ப்ரியா பேசவேயில்லை. கவிதா மட்டும் சைகை காட்டி தனியே அழைத்தாள். மண்டபத்தின் ஓரமாக சென்றபோது எதுக்கு வந்த என கேட்டாள். 

அழைப்பிதழ் அனுப்பி கூப்டாங்க வந்தன். 

உனக்கு எதுக்கு அவுங்க இன்விடேஷன் தந்தாங்க.

உனக்கு எதுக்கு தந்தாங்களோ அதுக்கு தான் எனக்கும் தந்தாங்க. நீ வர்றன்னு சொல்லவேயில்ல. நான் போன் பண்ணா ஏதாவது ஒரு காரணம் சொல்லி அதிகம் பேசறதில்ல. நீயும் பேசறதில்ல அப்படியிருக்க நான் என்னத்த சொல்றது. நீ வந்தியே ஒரு வார்த்தை சொன்னியா எனகேட்டபோது அமைதியாக இருந்தாள். சற்று இடைவெளிவிட்டு வேற ஏதாவது கேட்கனுமா என கேட்டபோதும் அமைதியாக நின்றிருந்தாள். 

நான் கிளம்பறன் என அவளிடம் சொல்லிவிட்டு உட்கார்ந்திருந்த ப்ரியாவின் கணவரிடம் வந்து புறப்படறன் சார் என அவரிடமும் கவிதாவின் அப்பா, அம்மாவிடம் சொல்லிவிட்டு வந்தோம். 

என்னடா கேட்டுச்சி. 

எதுக்கு வந்தன்னு கேட்டா. பதில் சொன்னன். 

மச்சான், ப்ரியா வில்லங்கம் பண்ணுது உஷாராயிரு. 

அது எங்க காதலை நேரடியாவே எதிர்க்குது. பேசியாச்சி புரியோஜனம்மில்ல. இனிமே இதல முடிவு எடுக்க வேண்டியது கவிதா தான். ஆனா இப்ப அவ என்னை விட்டு ஒதுங்கி போறா, அவுங்க வீட்லயும் அப்படித்தான். என்ன காரணம்ன்னு தெரியாம என்னன்னு பேச சொல்ற. எதுவும் சொல்லமாட்டேன்கிறாங்க. என்னைப்போய் கெஞ்ச சொல்றியா. போடா அதுக்கு வேற ஆளைப்பாரு என்றாலும் மனம் தவித்தது. 

நாட்கள் போனது கவிதா காதல் ‘பேசுவதை’ சுத்தமாக விட்டுயிருந்தாள். நேரில் பார்க்கும்போது மட்டும் நல்லாயிருக்கியா, சாப்ட்டியா என்ற சாதாரண வார்த்தைகளே வந்தன. 

அன்று சனிக்கிழமை பஸ்சை விட்டு இறங்கி நான் என் வீட்டுக்கு கிளம்ப முயன்றபோது  தான் தயங்கி தயங்கி மச்சான் என அழைத்தான். 

என்னடா. இல்ல ஒரு முக்கியமான விஷயம் எப்படி சொல்றதுன்னு தெரியல. மனசு கேட்கல மச்சான். நீ மனச தைரியப்படுத்திக்க?. என்னடா பெருசா பீடிகை போடற என்ன விஷயம் சொல்லு. 

காலையில தேவி போன் பண்ணியிருந்தது. கவிதாவுக்கு மாப்பிள்ளை பாத்துயிருக்காங்களாம். அவர் வாத்தியாரா இருக்காறாம் என சொல்லச்சொல்ல அந்த வார்த்தைகள் என் இதயத்தில் யாரோ கொதி நீரை ஊற்றியது போல் இருந்தது. நெஞ்செல்லாம் சுட்டது, வயிற்றுக்குள் கூட அமிலம் பரவியது. 

என் முகம் இருளுவதை கண்டவன் 

சத்தியமா மச்சான் கல்யாணத்துக்கே டேட் குறிச்சிட்டாங்களாம் என அவன் சொல்லும் போது கண்ணீல் நீர் தளும்பியது. எத்தனை பெரிய ஏமாற்றம். எல்லாம் அவளாள வந்தது. அன்னைக்கு அவ்வளவு வீராப்பா பேசனா, இப்ப எப்படி கல்யாணத்துக்கு ஒத்துக்கனா, ஒரு வார்த்தை கூட மன்னிடுச்சிடுன்னு கேட்காம எப்படி கல்யாணம் செய்துக்கு முடியுது இவளாள. பேசனது, பழகனது எல்லாமே மறந்துட்டாலா?. ஆப்படி நான் என்ன தப்பு பண்ணன். கடைசியல அக்காளும் தங்கச்சியும் ஒன்னா சேர்ந்துட்டாளுங்களே. ஏமாந்தது நான் தானா என்ற கேள்வி என் மனதில் வந்தபோது சாலை என்றும் பாராமல் அழுதுயிருந்தேன். என்னடா மச்சான் இதுக்கு போய் அழுதுக்கிட்டு இருக்கற. வா என டாஸ்மாக் அழைத்து சென்றான். என்றும்மில்லாமல் அவ்வளவு அதிகமாக குடித்திருந்தேன். நடக்க முடியாமல் தடுமாறினேன். நீ வீட்டுக்கு போக வேணாம் எங்கவீட்டுக்கு போகலாம் என்றான். 

மறுநாள் கவிதா வீட்டுக்கு போனபோது, எதுவுமே நடக்காததை போல் இருந்தார்கள். சகஜமாக நலம் விசாரித்தனர். அப்போது வீட்டுக்கு வந்த கவிதாவின் அப்பா தம்பி கவிதாவுக்கும் மாப்பிள்ளை பாத்து முடிவாகியிருக்கு. கல்யாணத்தப்ப கூடயிருப்ப என்றபோது எனக்கு அதிர்ச்சியெதுவும் ஏற்படவில்லை. ஆனால் கவிதா, அவரது அம்மா முகத்தில் அதிர்ச்சியின் ரேகை பரவியது. அதை கண்டாலும் கண்டு கொள்ளாததைப்போல் அப்படியா நல்லா விஷயம். மாப்பிள்ளை என்ன பண்றாரு மாப்பிள்ளை என பொதுவாக விசாரித்துவிட்டு கிளம்பும்போது கவிதாவிடம் வாழ்த்துக்கள் என கை நீட்டியபோது அமைதியாகவே தலைகுனிந்து நின்றிருந்தாள். கிளம்பறன் எனச்சொல்லிவிட்டு கிளம்பினேன்.

அடுத்த இரண்டு மாதத்தில் திருமணம். திருமண பத்திரிக்கை வீட்டுக்கு வந்திருந்தது. யாரும் போகவில்லை. போகமாட்டேன் என முரண்டு பண்ண ஜானை மட்டும் கட்டாயப்படுத்தி அனுப்பியிருந்தேன். கல்யாணத்துக்கு போய் வந்தவன் ப்ரியா வ பாத்தன் மச்சான். உன்னைப்பத்தி ஒருவார்த்தை கூட பேசலடா. 

சாப்பாடு நல்லாயிருந்ததா ?.
என்ன மச்சான் நான் ஒன்னு சொல்றன். நீ ஒன்னு கேட்கற?.

வேற என்ன பண்ணச்சொல்ற. கேட்கறது கேட்காதது அவுங்க விருப்பம். அவுங்க மறந்துயிருக்கலாம் நான் மறக்கல. தேவி என்னை சந்திச்சியிருந்தா ப்ரியா எப்படி இருக்காங்கன்னு கேட்டுயிருப்பன். அவுங்க கேட்கலங்கறதப்போய் பெருசா எடுத்துக்கிட்டு. நான் இப்ப தனிமரம். அவுங்க தோப்பு. தோப்புல நிறைய பணியிருக்கும். தனிமரத்துக்கு ஒரு வேளையும் இருக்காது. புரிஞ்சதா ?. அவுங்களுக்கு நிறைய வேலை விடு. 

நீ மட்டும் இத எப்படிடா சாதாரணமா எடுத்துக்கற ?. 

இங்கப்பார் ப்ரியாவப்பத்தி எனக்கு நல்லாத்தெரியும். அவுங்க புடிச்ச முயலுக்கு மூனு காலுன்னு சொன்னா நாம அத வழி மொழியனும். இல்லன்னா விடமாட்டா. அது காதலை எதிர்க்கும் போது என் வாழ்க்கையாச்சே போக போக சரியாகிடும்ன்னு நினைச்சன். ஆனா நினைச்சது ஒன்னு நடக்கறது ஒன்னாயிருந்தப்பவே நான் புரிஞ்சிக்கிட்டன். அப்பவே மனசுல ஓரு ஏமாற்றத்த தாங்கிக்கற மனப்பக்குவத்த ஏற்படுத்திக்கிட்டன். இருந்தும் கல்யாணம் பிக்ஸ்சாகிடுச்சின்னப்ப என்னால தாங்க முடியல. ஆனாலும் எதிர்பார்த்தது தானேங்கற எண்ணம் வந்தப்ப மனசு சாந்தமாகிடுச்சி. அதனால தான் பெருசா துயரப்படல. தூடி வளக்கல. 

நானாயிருந்தா செத்துயிருப்பன். 

போடாங்க. பொண்ணுங்க கல்யாணம் செய்துக்கிட்டு வாழ்வாக காதலிச்சதுக்காக நாம சாகனும்மாயென்ன. சில மாசத்துக்கு நம்மளை ஏமாத்திட்டாளேன்னு மனசு துடிக்கும், சரி நல்லாயிருக்கட்டும் அப்படின்னு நினைக்கும், அப்பறம் நம்ம கல்யாணத்தப்பத்தி யோசிக்க ஆரம்பிச்சிடுவோம். இயந்தரதனமான இந்த உலகத்தல எல்லாமே சீக்கிரம் மறந்து மனதின் ஆழத்துக்கு போயிடும். 

என்னடா தத்துவமா பேசற. 

புத்தகங்களை படி. 

எனக்கு இன்னும் மனசு ஆரல மச்சான். உன்னால தான் கல்யாணத்துக்கே போனன். 

அதிருக்கட்டும் எப்ப உன் கல்யாணம். தேவி என்ன சொல்லுது. 

இப்ப என்ன மச்சான் அவசரம். ஒரு வருஷம் போகட்டும் அப்பறம் பாத்துக்கலாம். 

காலாகாலத்துல கல்யாணத்த பண்ணுடா. உனக்கும், அதுக்கும் வசதிக்கு பிரச்சனையில்ல. அப்பறம் எதப்பத்தி யோசிச்சிக்கிட்டு. கல்யாணத்தப்பண்ணிக்கிட்டு குடும்ப வாழ்க்கைக்கு போற வழிய பாரு. 

நீ ?. 

நான் கல்யாணம் பண்ணிக்கமாட்டன்னு யார் சொன்னது. மனசுங்கற கிணத்துல காதல் புதைஞ்சதுக்கப்பறம் நிச்சயமா கல்யாணம் செய்துக்குவன் என அவனிடம் பேசினாலும் அந்த காதல் நினைவுகளை மறக்க கடினமாகவே இருந்தது. 

இந்த இரண்டான்டில் காதலை நினையாத நாட்கள் பல. ஆனால் ப்ரியாவை நினையாத நாளேயில்லை. இந்நிலையில் தான் கம்பெனியில் பணியாற்றுபவர்களை டூர் அனுப்பிவைத்தார்கள். அப்படி போய் வந்தபோது தான் ப்ரியாவிடம் இரயில்வே நிலையத்தில் அடிவாங்க நேர்ந்தது என சொன்னபோது என்ன மச்சான் இவ்ளே நடந்துயிருக்கு சொல்லவேயில்ல என தருண், விநோத், குமார் கேட்டனர். அந்த ஓட்ட வாய் ஜான் கூட சொல்லலையே மச்சான் என ஆளாளுக்கு கேட்டபோது ஒரு சிகரெட் வாய் நுணிக்கு போயிருந்தது. 

எதுக்கு மச்சான் உங்க காதலை அவுங்க பிரிச்சாங்க. 

தோள்பட்டையை குளுக்கியபோது, நீ அவுங்கக்கிட்ட கேட்கலயா. கல்யாணத்துக்கு அப்பறம் அவுங்க இரண்டு பேரை நானும் பார்க்கல. பார்க்க முயற்சிக்கல எனும்போதே ரயில் காட்பாடியை நெருங்கியிருந்தது. மச்சான் நான் இப்படியே ஊருக்கு போய்ட்டு வர்றன்டா. இரண்டு நாள் ஆபிஸ்ல லீவு சொல்லிடுங்கடா எனச்சொல்லிவிட்டு காட்பாடி ஜங்சனில் பெட்டியை விட்டு இறங்கினேன். 

ஆட்டோ பிடித்து ஜான் வீட்டுக்கு போனபோது, டிவி பார்த்துக்கொண்டு உட்கார்ந்துயிருந்தான். என்னடா படுத்த படுக்கையா இருக்கன்னு சொன்ன. பாத்தா அப்படி ஒன்னும் தெரியலயே என கேட்டபோது அமைதியாக இருந்தான். 

மச்சான் லவ் மேட்டர் தேவி வீட்டுக்கு தெரிஞ்சிப்போச்சி, பிரச்சனையாகிடும் போல அதான் உடம்பு சரியில்லன்னு லீவு போட்டு என்ன பண்றத்துன்னு யோசிச்சிக்கிட்டு இருந்தன். யோசிச்சி முடிச்சிட்டியா?. 

ஓரு ஐடியாவும் வரலடா. ஆவன் அண்ணன் என்னை எங்க பாத்தாலும் அடிச்சி கை, காலை உடைப்பன்னு வேற சொல்லியிருக்கானான்டா. 

யார் சொன்னது?

தேவி. 

விடு பாத்துக்கலாம். சரி உங்க வீட்ல சொல்லிட்டியா?. 

இன்னும் இல்ல மச்சான். இங்க அதுக்கு மேல பிரச்சனை வரும். அது இந்து, நான் கிருஸ்டியன். இது வேற பிரச்சனையாகும். ஏன்னப்பண்றத்துன்னு தெரியல. ஏதாவது ஐடியா சொல்லுடா. 

ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்க. 

விளையாடதடா. 

உங்கப்பா எங்க? ரூம்ல இருக்காரு என்னும் போதே வெளியே வந்தவர் என்னப்பா எப்படி இருக்கற. 

நல்லாயிருக்கன்ப்பா. 

என்ன நீ டூர் போய்ட்டு வர்ற, இவன் வீட்லயே இருக்கான். 

அது ஒன்னும்மில்லப்பா. சார் 5 வருஷமா ஒரு பொண்ண லவ் பண்றாரு. அந்த பொண்ணு வீட்ல தெரிஞ்சிப்போச்சாம். அவுங்கண்ணன் கை, காலை உடைப்பன்னு சொல்லியிருக்கானாம். ஆதான் வீட்ட விட்டு வெளியில போகாம காதல்ல எப்படி ஜெயிக்கறதுன்னு யோசிச்சிக்கிட்டு இருக்காரு என சொல்லியபடியே ஜான் முகத்தை பார்த்தபோது அதிர்ச்சியாகிபோயிருந்தான். 

அவனது அப்பாவோ விளையாடதப்பா இவனை ஒரு பொண்ணு காதலிக்குதுன்னா அந்த பொண்ணு தான் பாவம் என்றார். 

நான் ஜோக்கா சொன்னன் ஆனா அதான் உண்மை என்றதும் அவரது முகம் மாறியது. ஜானின் அம்மா உள்ளேயிருந்து வந்து டேய் என்னடாயிது என அதிர்ந்து போய் கேட்டார். 

நீ சும்மாயிரு என்றவர் முழு தகவலையும் கேட்டவரிடம் விலாவரியாக சொன்னதும் கேட்டவர் பொண்ணு வீட்ல ஒத்துக்கிட்ட நான் கல்யாணத்துக்கு ஒத்துக்கறன்ப்பா என்றார். 

அந்த பொண்ணு இந்து மதம்மா நமக்கு ஒத்துவரும்மான்னு யோசிக்காம சரிங்கறங்களே நியாயமா?. 

இங்கப்பாரு. நீ பெத்தது ஒன்னு. நாம என்ன சொன்னாலும் கேட்கமாட்டான். நம்ம மரியாதையை காப்பாத்திக்க நாம கல்யாணம் செய்து வச்சிதான் ஆகனும். இல்லன்னா நான் மேஜர்ன்னு சொல்லி ரிஜிஸ்டர் ஆபிஸ்ல போய் பண்ணிக்குவான். இன்னோன்னு தெரிஞ்சிக்க நம்ம மனச சாந்தப்படுத்திக்கவும், நமக்கு மேல ஒருத்தன் நம்மை கண்காணிச்சிக்கிட்டே இருக்காங்கற பயம் மனிதனோட மனசுல இருக்கனும்கிறதுக்காக கடவுள வணங்கறோம். அந்த கடவைள நாம யோசுபிரான்ங்கறோம், அவுங்க சிவபெருமான்ங்கறங்க இரண்டுமே ஒன்னு தான். எல்லா மதமும் அன்பை தான் போதிக்குது. அதனால அவன் விருப்பப்படி செய்யட்டும். ஆனா அந்த பொண்ணு குடும்பத்தல ஒத்துக்கனும் அப்பத்தான் கல்யாணம் என்றவர் எழுந்து உள்ளே சென்றார் அவனது அம்மாவும் அவரது பின்னாலேயே சென்றார்கள். 

நூன் என்னம்மோன்னு நினைச்சன் சப்புன்னு போயிடுச்சேடா. உங்கப்பா இவ்ளோ நல்லாவரா இருக்காறேடா என்றதும். சிரித்தவன் தேங்ஸ் மச்சான் என்றவன். தேவி வீட்ட எப்படிடா சமாளிக்கறது. 

யோசி அத நாளைக்கு பாக்கலாம். நான் வீட்டுக்கு போய்ட்டு வர்றன் என கிளம்பினேன். வீட்டுக்கு வந்ததும்மே, டேய் புரோக்கர் வந்து பொண்ணுங்க போட்டோ தந்துட்டு போயிருக்காரு. அதல பாத்து ஏதாவது ஒன்ன சொன்னன்னா பேசலாம்டா. 

நீ வேற வந்ததும் வராததும்மா ஏம்மா ?.

இப்ப கல்யாணம் பண்ணாம எப்ப பண்ணபோற. உன் கூட விளையாடனவனுங்களுக்கு கல்யாணமாகி அவன் பசங்க தெருவுல விளையாடுதுங்க தெரிஞ்சிக்க. 

இப்ப வாங்கற சம்பளத்த வச்சி என்ன குடும்பம் நடத்தறது. 

உன்ன யாரு வேலைக்கு போகச்சொன்னது. நமக்கு இருக்கற நிலத்தல பயிர் செய்தாலே யாருக்கும் பதில் சொல்லாம வாழலாம். 

விவசாயம் அதுயிதுன்னு சொல்லாத. கல்யாணம் தானே பண்ணிக்கறன். பொண்ண பாருங்க என சொல்லிவிட்டு கிணத்தடிக்கு சென்றேன். 

மறுநாள் காலையிலேயே தேவிக்கு வீட்டுக்கு போன் செய்தபோது தேவியே எடுத்தது. நலம் விசாரித்துவிட்டு உங்கண்ணன் எங்க என்றதும் இரு தர்றன் என்றது. கொஞ்ச நேரத்தில் ஹாலே என்ற குரல் கேட்டதும், ம் சொல்லுடா. 

உங்கிட்ட கொஞ்சம் நேர்ல பேசனும். எப்ப பாக்கலாம். 

என்னடா விஷயம். 

நேர்ல சொல்றன்னே. 

சரி, 11 மணிக்கா கண்ணா ஹோட்டல் ஜீஸ் கடைக்கா வந்துடேன் என்றான். 

சொன்னது போல் அங்கு போய் காத்திருந்தபோது பைக்கில் வந்தான். இரண்டு ஆரஞ்சி ஜீஸ் ஆர்டர் சொல்லிவிட்டு அங்கிருந்த வேப்பமர நிழலில் நின்றபடி என்னடா பிரச்சனை எதுக்கு ஜானை அடிக்கபோறன்னு சொன்னியாம். 

டேய் உனக்கு தெரியாம அவன் எதையும் பண்ணமாட்டான். அந்த நாயை பாத்தன் அவ்ளோ தான். சொல்லிவை. 

தப்புதாண்டா. இல்லன்னு சொல்லல. நீ நினைக்கற மாதிரி அவன் எங்கிட்ட சொல்லிட்டுயெல்லாம் காதலிக்கல. பைனல் இயர் படிக்கும் போது தான் எனக்கே தெரியும். காலேஜ் சேந்ததுலயிருந்து காதலிக்கறோம்ன்னு சொன்னான். அதுக்கப்பறம் இப்ப 2, 3 வருஷமா காதலிக்கறது தெரியும். அவுங்க இரண்டு பேரும் சேர்ந்து எடுத்த முடிவு. அதனால எம்மேல கோபப்படாத. அவன் நல்ல வேலையில இருக்கான், வசதிக்கு பிரச்சனையில்ல. நல்லா பாத்துக்குவான்டா. அது மேல உயிரையே வச்சியிருக்கான். உங்க வீட்டுக்கு காதல் மேட்டர் தெரிஞ்சி நீங்க தேவிய போட்டு அடிச்சிட்டிங்கன்னு இரண்டு நாளா சாப்பிடாம இருந்திருக்கான். நான் நேத்து தான் டூர் முடிச்சிட்டு வந்தன். அப்பத்தான் எனக்கே விவகாரம் தெரியும். அப்பறம் நைட் அவனை சாப்பிடவச்சிட்டு வீட்டுக்கு போனன். அதான் காலையிலயே வீட்டுக்கு போன் பண்ணன். 

அவளை அடிச்சன்னு யாரு சொன்னது. 

அவன் தான் சொன்னான். 

அடிச்சா கேட்கற ஆளா அவ. 

என்னதான் முடிவு பண்ணியிருக்கிங்க. 

அவன் வேற மதம், நாங்க வேற மதம் அதனால செட்டாகாதுன்னு எங்கப்பா ஃபீல் பண்றாரு. 

நீ சொல்லிப்பாரு. 

நீயும் உடந்தையான்னு செருப்பால அடிப்பாரு. 

என்னடா நீயே இப்படி பேசற. நீ வேன்னா வீட்டுக்கு வா எங்கப்பாக்கிட்ட பேசு. அவர் ஒத்துக்கிட்டா எங்களுக்கும் ஓ.கே. 

நீ ஓ.கே தானே?. 

எங்கப்பாவுக்கு ஓ.கேன்னா எனக்கு ஓ.கே என்றான். ஜீஸ் குடித்துவிட்டு அவன் அப்பா வைத்திருந்த மளிகைகடைக்கு சென்றபோது வியாபாரத்தில் இருந்தார். என்னை அறிமுகப்படுத்தினான். நான் தேவியோட 12வது வரை ஒன்னா படிச்சன். ஒருமுறை வீட்டுக்கு கூட வந்துயிருக்கன். 

சரிப்பா என்ன விஷயம். இவ்ளோ தூரம் வந்துயிருக்க. 

அது வந்து என தயங்கியதும் மதிய சாப்பாட்டுக்கு டைம்மாகிடுச்சி. வீட்டுக்கு வா பேசிக்கலாம் என்றவர் கடை பையனிடம் பாத்துக்கடா வந்துடறன் எனச்சொல்லிவிட்டு அவரது டிவிஎஸ்சில் புறப்பட்டார். 

வீட்டுக்குள் வந்ததும், உனக்கொரு தங்கச்சி இருந்திருந்தா நீ இப்படி தான் நடந்துப்பியா என கேட்டபோது தலைகுனிந்தேன். 

அப்போது தேவியின் அம்மா, தேவி ஆகியோர் ஹாலுக்கு வந்திருந்தனர். 

அவன் நல்ல பையன் சார். 

அவன் நல்ல பையன்னா அவன் எதுக்கு உன்ன அனுப்பறான். அவுங்க அப்பா – அம்மாவை தானே அனுப்பனும்?. 

நீங்க சொல்றது சரிதான் சார். 

நீங்க தேவிய போட்டு அடிச்சி உதைச்சிங்களாம், இவன் வேற அவனை எங்கப்பாத்தாலும் அடிச்சி கை, காலை உடைப்போம்ன்னு சொன்னானாம். பயந்து போய் என்கிட்ட சொன்னான். இப்பக்கூட நான் வந்தது அவனுக்கு தெரியாது வேணும்ன்னா நீங்க போன் பண்ணி கேட்டுப்பாருங்க. நான் வீட்ல இருப்பன்னு தான் சொல்லுவான். 

தம்பீ. நீ அவன் ப்ரண்ட் அதுக்காக வந்துயிருக்கற. ஆனா, இது என் பொண்ணு விஷயம் உன்கிட்டயெல்லாம் பேசமுடியாது. உனக்கெல்லாம் வாழ்க்கையை பத்தி என்ன தெரியும். 


எனக்கு தெரியாதுதாங்க. ஆனா அவன் காதல் தோத்துடக்கூடாதுன்னு தான் வந்தன். உங்களுக்கு எது நல்லது கெட்டதுங்கறது தெரியும். அவன் நல்லவன் யோசிச்சிங்கன்னா நல்லாயிருக்கும். 

வேற ஜாதி, எங்க கடவுளை கும்பிடாத ஒருத்தர் குடும்பத்தல போய் மாப்பிள்ளை எடுத்தா என் பையன்க்கு யார் பொண்ணு தருவாங்க, ஊர்ல கேவலமா பேசமாட்டாங்க. 

சார், நீங்க இருக்கற ஏரியாவுல எத்தனை பேர் எங்கயோ ஒரு நாட்டுல நல்ல வேலையில இருக்கான்னு விசாரிக்காமலே ஜாதி, மதம் பார்க்காம பொண்ணு தர்றாங்க. ஊர்ன்னு இருந்தா ஆளுக்கு ஒன்னு பேசத்தான் செய்வாங்க. அதுக்காக அவுங்க வாழ்க்கையோட பெத்தவங்க நீங்களே விளையாடலாமா சார். யோசிச்சி பாருங்க. சின்னப்பையன் தப்பா பேசியிருந்தா மன்னிச்சிடுங்க சார். 
என்றதும் அமைதியா இருந்தார். மேற்கொண்டு என்ன பேசுவது என தெரியாமல் நிற்க மற்றவர்களும் அவரையே பார்த்துக்கொண்டு இருந்தனர். தேவியின் அம்மாதான் எல்லாம் இவளாள வந்தது என முறைத்தார்கள். 

வீட்ல எல்லாம் பேசிட்டு ஒரு நல்ல முடிவா எடுங்க சார். நான் நாளைக்கா வர்றன் என்றதும் அதற்கும் அமைதி. 

போகலாமா, வேண்டாமா என தயங்கி தயங்கி நின்றபோது சாப்ட்டுட்டு போப்பா. 

நீங்க ஒரு நல்ல முடிவு சொல்லுங்க சார் விருந்தே சாப்பிடறன். 

அதுவேற இதுவேறப்பா. 

இப்ப அவனுக்கு என்னை விட்டா வேற யாரும்மில்ல. நான் உங்க வீட்ல சாப்ட்டுட்டு உங்களுக்கு நன்றியுள்ளவனா மாறிட்டா என்றதும் நீ மாறயெல்லாம் வேணாம். 

புதன்கிழமை அந்த பையனோட அப்பா – அம்மாவை வரச்சொல்லு பேசிப்பாக்கலாம். இதுக்கு மேல நான் எதுக்கு சார் உங்கப்பொண்ணு கேட்டுக்கிட்டு தானே இருக்குது அதுவே அவுங்க மாமானார் – மாமியார்க்கிட்ட போன் பண்ணி வரச்சொல்ல போகுது என்றதும் அனைவரும் சிரித்துவிட்டனர். 

தடதடவென நிச்சயதார்த்தம் வரை வந்துவிட்டது. ரங்கா மஹாலில் இரண்டு வீட்டு பெரியவர்கள், உறவினர்கள், நண்பர்கள் அமர்ந்திருக்க ஜானும் - தேவியும் அலங்காரமான நாற்காலியில் அமர்ந்திருந்தனர். 

திருமண தேதி நிச்சயமானபோது கல்யாணம் யார் முறைப்படி என கேட்டபோது தான் இரண்டு குடும்பத்தாரும் முழித்தனர். இந்து முறைப்படியா, கிருஸ்த்துவ முறைப்படியா என்ற விவாதத்தில் தங்கள் முறைப்படியே வைக்கவேண்டும் என இரண்டு குடும்ப உறவினர்களும் தத்தமது கருத்துக்களை தெரிவித்தனர். நாம எதுக்கு பேசிக்கிட்டு வாழ்க்கை நடத்தப்போறவங்க அவுங்க அவுங்களே சொல்லட்டும் என்றதும் அனைவரின் பார்வையும் அவர்கள் பக்கம் போனது. 

ஜானும், தேவியும் சில நிமிடம் பேசினார்கள். உட்கார்ந்தயிடத்தில் இருந்து எழுந்த ஜான், நான் கோயிலுக்கு போயிருக்கன், அவுங்க சர்ச்க்கும் வந்துயிருக்காங்க. ஆனா கல்யாணம் எந்த முறைப்படின்னு இதுவரை பேசனதில்ல. எங்க இரண்டு பேர் வீட்லயும் காதலை ஏத்துக்கிட்டு கல்யாணம் நடத்தி வைக்கறாங்க. அதனால எங்க இரண்டு குடும்பத்தோட மனசும் நோககூடாதுன்னு ஒரு முடிவு எடுத்துயிருக்கறோம். இதல அவுங்களுக்கு விருப்பம் இருக்குமான்னு தெரியல. கல்யாணத்தல தாலி உண்டு, மோதிரம் உண்டு. ஆனா கோயில்லயோ சர்ச்லயோ நடக்காது. இந்த மண்டபத்தலயே மேடை போட்டு நல்லா அலங்காரம் பண்ணி யாராவது பெரியவங்க தாலியும், மோதிரத்தையும் தர்ற நாங்க சுயமரியாதை கல்யாணம் செய்துக்கறோம் இதான் பிரச்சனையில்லாதது என்றதும் கூட்டத்தில் இருந்த பலர் கைதட்ட ஒரு நிமிடம் அமைதியாக இருந்த ஜான் - தேவியின் பெற்றோர்கள் மலைத்துப்போய் பார்த்தனர். 

டேய் இதெல்லாம் நீயா பேசறது என வாய்விட்டே கேட்டுவிட்டார் ஜானின் அப்பா. 

அருகில் இருந்த நான் தேறிட்டடா என கை தந்ததும் சந்தோஷமானான். 

கல்யாண மண்டபம் கலை கட்டியிருந்தது. விநோத், குமார், தருண்னும் சென்னையில் இருந்து வந்திருந்தனர். ஜீவா, ஏழுமலை, முத்து, அகிலன், ரமேஷ் ஆகியோரும் மனைவி, பிள்ளைகளோடு வந்திருந்தான்கள். 

ஜானிடம் மச்சான் சரக்கு?. 

தேவி இனிமே குடிக்ககூடாதுன்னு சொல்லிடுச்சிடா. 

செருப்பால அடிப்போம். குடிக்க போறது நாங்க என்றான் விநோத். 

குடிக்காதிங்கடா. உடம்பு கெட்டுடும். 

டேய் வெறுப்பேத்ததா. ஓழுங்கு மரியாதையா காசு குடு. இல்ல உன் ஏ.டி.எம் கார்ட தா நாங்க எடுத்துக்கறோம். 

கார்டுல காசுயில்லடா. 

ஏய் வாங்கடா காசு தானே வேணும் நான் ஏற்பாடு பண்றன் என ரமேஷ் அழைக்க எங்கடா என்றபடி அனைவரும் அவன் பின்னால் போக நேராக தேவியின் ரூம் முன் சென்று கதவு தட்டினான். 

சில நொடிகளில் கதவு திறந்தபோது அவள் தான். அவளை பார்த்ததும் அனைவரின் பார்வையும் என் பக்கம் திரும்பியது. அவளின் பார்வையும் தான். யாரும் எதுவும் பேசவில்லை. அவளை கண்ட அந்த நிமிடம் என்ன பேசுவது என அறியாமல் அனைவரும் திகைத்து நின்றனர். அப்போது தேவி யார் என கேட்டு எட்டி பார்க்க இதே வந்துடுச்சேடா புதுப்பொண்ணு என சகஜ நிலைக்கு அந்த இடத்தை மாற்றி. இங்கப்பாரு தேவி வாழ்க்கையில இவனுக்கு கல்யாணம் நடக்கறதே பெரிய விஷயம். பார்ட்டி தாடான்னா காசுயில்ல, தேவி திட்டும், குடிக்காதிங்கடா உடம்பு கெட்டுடும்ன்னு என்னன்வோ கதை சொல்றான். இப்ப எங்களுக்கு நீ தான் வழி சொல்லனும். 

என்ன இந்த விவகாரத்தல இழுக்காதிங்க. நீங்களாச்சி அவராச்சி. 

இங்கப்பார்ற உலக தொலைக்காட்சியில் முதல் முறையாகன்னு சொல்றமாதிரி முதல்முறையா அவர்ன்னு சொன்ன தேவிக்கு ஒரு ஓ போடுங்க என்றதும் பசங்கள் ஓவென கத்த மண்டபம்மே எங்களை வேடிக்கை பார்த்து சிரித்தது. 

டேய்யெ;பபா ஆளை விடுங்க. மச்சான் என்ன வேணும்மோ வாங்கித்தாடா. 

அதெப்படிடா படிக்கும் போதும் நானே வாங்கித்தரனும், வேலை போய் சம்பாதிக்கறப்பவும் நானே வாங்கித்தரனும், உன் கல்யாணத்துக்கும் நானே வாங்கித்தரனம்ன்னு கேட்கறயே வெட்கமாயில்ல. 

மச்சான் இதலயெல்லாம் கணக்கு பாக்கலாம்மா. 

மூடு. உன் ஏ.டி.எம் கார்ட இப்ப தந்தா காலையில கல்யாணம் இல்லன்னா மகனே மாப்பிள்ள ஹாண்டா கார் கேட்கறாருன்னு சொன்னன்னு வச்சிக்க அப்பறம் தேவதாஸ் தான் ஓ.கேவா. 

டேய் சாமி. இந்தப்புடி. மச்சான் இதலப்போய் ஒரு 10 ஆயிரம் எடுத்துக்கிட்டு வந்துடு. 

ஏய் அண்ணன் இருக்கு பாத்து என தேவி சொன்னதும் உங்கண்ணன் இப்பவே முணாவது ரவுண்ட்ல மிதக்கறான் போ போய் வேலையப்பாரு என்றப்படி அகிலன் நகர அனைவரும் கலைய முற்பட்டோம். 

ராஜா என தேவி அழைக்க 

திரும்பி என்ன என்பது போல் பார்த்ததும் 

பேசனும்மாம். அருகில் இருந்தவர்களை பார்த்ததும் அவர்கள் அங்கிருந்து நகர்ந்தனர். 

மணமகளின் அறைக்குள் நாங்கள் மூன்று பேர் தான் இருந்தோம். 

எப்படி இருக்க ?. 

உங்க ஆசிர்வாதத்துல நல்லா இருக்கன். 

நீங்க எப்படி இருக்கிங்க, உன் பொண்ணு, வீட்டுக்காரரை எங்க காணோம்?. 

ம் இருக்கன். வீட்லயிருக்காங்க வந்துடுவாங்க. 

என்ன மன்னிச்சிடுப்பா. 

உங்க மேல உரசிக்கிட்டு போனது போய் தப்பு பண்ணது நான் தான். 

நீங்க அடிச்சது சரிதான். அதுக்கு நீங்கப்போய் எதுக்கு மன்னிப்பு கேட்டுக்கிட்டு. 

நான் அதுக்கு கேட்கல. 

வேற எதப்பத்தியும் நான் பேச விரும்பல. நான் கிளம்பறன் என சடாரென எழுந்ததும் ப்ளீஸ் தயவு செய்து உட்காரு என்றாள். 

உங்க காதலை எல்லாருமே ஏத்துக்கிட்டாங்க. ஆனா உங்களுக்கான பொருத்தம் பத்தி பலன் பாத்தப்ப பொருத்தம்மே வரல. மீறி கல்யாணம் செய்து வச்சா இரண்டு பேர்ல ஒருத்தர் இறந்துடுவிங்கன்னு சொன்னாங்க. பரிகாரம் ஏதாவது இருந்தா சொல்லுங்கன்னு கேட்டோம். எதுவும் இல்லன்னு சொல்லிட்டாங்க. இரண்டு, மூனுயிடத்தல பாத்தோம். எல்லாரும்மே அப்படியே சொன்னாங்க. உங்கிட்ட சொன்னா நீ அத கண்டுக்கமாட்டா. நீங்க இரண்டு பேருமே எங்களுக்கு முக்கியம் அதனால தான் உங்க காதலை எதிர்த்தன். அவ மனச மாத்தனோம். 

அதனால தான் உங்க சொந்தக்காரங்கக்கிட்ட அவன் ஒரு பொம்பள பொறுக்கி அதனால தான் பொண்ணு தரலன்னு சொன்னியாக்கும். 

அப்படி யார் சொன்னது. 

நீ யார்க்கிட்டயெல்லாம் சொன்னீயோ அதல ஒருத்தங்க. 

வேற வழி தெரியல. எல்லாரும்மே உனக்கு சப்போட் பண்ணாங்க. அதனால தான் அப்படி ஒரு பொய் சொல்ல வேண்டியதாப்போச்சி. 

நீ பொய் சொன்ன அதனால என் மனசு என்ன பாடுபட்டுயிருக்கும்ன்னு நினைச்சி பாக்கலயே. 

எல்லாத்தையும் மன்னிச்சிடு. 

மன்னிப்பு கேட்கறவங்க மனுஷன் மன்னிக்கறவன் பெரிய மனுஷன்னு ஊர்ல சொல்லுவாங்க. நீ மன்னிப்பு கேட்டு மனுஷின்னு நிருபிச்சிட்ட. ஆனா பெரிய மனுஷனா மாற விரும்பல. ஸாரி எனச்சொன்னபோது அவள் கை என் கன்னத்தை பதம் பார்த்தது. 

அமைதியாக நான் அந்த அறையை விட்டு வெளியேற கதவருகே வந்தபோது திரும்பி என்னையே அமைதியாக பார்த்துக்கொண்டுயிருந்த அந்த கண்களை பார்த்தேன். 

நீ அடிச்சப்ப உங்கிட்டயிருந்தது உண்மை. அதுக்கு முன்னாடி உன் உதடுகள் பொய் சொன்னது. நீ உன் கல்யாணத்துக்கு முன்னாடி எனக்கு தர்றதுக்காக எழுதி கடைசியில வேண்டாம்ன்னு கிழிச்சி போட்ட அந்த லட்டர் எங்கிட்ட இருக்குதுங்கறது உனக்கு தெரியாது. அது உனக்கு தெரியாமலே இருக்கட்டும். ரகசியம் ரகசியமானதாகவே இருக்கட்டும் சந்தோஷமாக இரு என  மனதில் எண்ணியபடி வெளியே வந்து அந்த கதவை இருக்கமாக சாத்திவிட்டு சென்றேன். 

முற்றும்.