பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிப்பரப்பான
நாள் முதல் வாத பிரதிவாதங்கள் சமூக வளைத்தளங்களில் எழ துவங்கிவிட்டன. பிக்பாஸ்
நிகழ்ச்சியில் உள்ளவர்களின் உளவியல் வரை ஆய்வு செய்து
முடித்துவிட்டார்கள். அதிலும் நான் மதிக்கும் பல முகநூல் பிரபலங்கள் தினம் தினம்
அதுப்பற்றி பதிவு எழுதி, சமூக, வரலாறு, சாதி வரை அலசுவதை பார்க்கும்போது, கண்ணை
கட்டுகிறது.
இங்கு எல்லோரும்மே அறிந்த
விவகாரம், 100 நாள் அந்த வீட்டுக்குள் யாரும் நுழைய முடியாது. அந்த 15 பேர்
மட்டும்மே இருப்பார்கள் என்பதே. அவர்களை கேமராக்கள் கண்காணித்து தினமும் நடைபெறும்
விவகாரத்தை தொகுத்து இரவில் விஜய் டிவி தனது பார்வையாளர்களுக்கு வழங்கிறது. அதில்,
காயத்திரி சாதி வெறியோடு பேசுவதும், ஓவியா தன் போக்கில் இருப்பதும், பரணி சுவர்
ஏறி குதித்து தப்ப ஓட முயல்வதும், கஞ்சா.கறுப்பு கோபப்படுவதும், ஜீலி அழும் உளவியலை
பலர் எழுதிவிட்டார்கள். நான் அதுப்பற்றி எழுதப்போவதில்லை. இது, பிக்பாஸ்
பார்வையாளர்களுக்கு தெரியாமல் பிக்பாஸ் டீம் நடத்தும் நாடகத்தை, வெளிச்சம் போட்டு
காட்டவே இந்த கட்டுரை.
பிக்பாஸ் வீட்டுக்குள் யாரும்
செல்ல முடியாது என்பதே சுத்தமான. வடிக்கட்டிய பொய். ஒவ்வொரு நாளும் கேமராமேன்கள்
உட்பட பலர் வீட்டுக்குள் போய்விட்டு வருகின்றனர் என்பதே உண்மை. அதுப்பற்றி
பார்க்கும் முன் ஜீலியை பற்றி அலசுவோம். ஜல்லிக்கட்டுக்கான மெரினா போராட்டத்தில், ஆயாம்மா,
ஆயாம்மா நீயென்ன சி.எம்மா என்கிற வீடியோ வெளியே வந்தபிறகு தான் ஜீலி, வீரதமிழச்சி
என சமூக வளைத்தளங்களால் புகழப்பட்டார். அந்த வீடியோக்களை வாய்ப்பிருப்பவர்கள்
மீண்டும் பாருங்கள். ஜீலியின் உடல் மொழிக்கும், அவரது இப்போதைய உடல் மொழிக்கும்
வித்தியாசம்மிருக்கும். அதேபோல், ஜல்லிக்கட்டில் ரைம்மிங்காக அவர் பேசிய
வாக்கியங்களை எழுதும் அளவுக்கு ஓர்த்தானவர்யில்லை என்பது பிக்பாஸ் மூலம் அறியலாம்.
யாரோ எழுதி தந்ததை உடல்மொழியோடு நடித்து, அதை விடியோவாக்கி அதை வைரலாக பரப்பி பிரபலமாக்கப்பட்டுள்ளார்
ஜீலி. ஜீலியை திட்டமிட்டே பிரபலமாக்கியுள்ளார்கள் என்பதே என் எண்ணம். அதற்கான
காரணம்,பிக்பாஸ் ஜீலை மாதம்
தொடங்கியிருந்தாலும், தமிழகத்தில் இந்த நிகழ்ச்சியை நடத்துவதற்கான ஏற்பாடுகள்
குறைந்தபட்சம் 6 மாதங்களுக்கு முன்பு தொடங்கியிருக்கும். கமலுடைய கால்ஷீட்
வாங்கவேண்டும், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெறும் மற்ற பிரபலங்கள் யார் என்பதை
பட்டியலிட்டு பின் அவர்களின் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களின் கால்ஷீட் ஓரே
நேரத்தில் வாங்க வேண்டும். இந்த நிகழ்ச்சியில் நடிக்கும் நடிகர் – நடிகைகளின்
கால்ஷீட் பேச்சுவார்த்தை குறைந்தபட்சம் 4 மாதங்களுக்கு முன்பு தொடங்கியிருக்க
வேண்டும். தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள அவர்களை ஒப்புக்கொள்ள வைக்க
வேண்டும். நடிகர் –நடிகைகள் தேர்வும் அப்படித்தான். அதிமுகவை சேர்ந்த சினேகன்,
வையாபுரி, கஞ்சாகறுப்பு, ஆர்த்தி, நமீதா. பாஜகவை சேர்ந்த காயத்ரி. அரசியல் அறியாத
ஒவியா, ரைஸ்சா போன்றவர்களை தொலைக்காட்சி நிகழ்ச்சிக்குள் கொண்டு வருவது என்பது
கொஞ்சம் கடினமான பணி. அதைவிட முக்கியம் பிக்பாஸ் வீடு உருவாக்க வேண்டும் இப்படி பல
உள்ளன.
இவர்களோடு திட்டமிட்டு
பிரபலமாக்கப்பட்ட ஜீலியை கொண்டு வந்தது தான் விஜய் டிவியின் டெக்னிக். இல்லை
பிரபலமானதால் ஜீலியை கொண்டு வந்தார்கள் பிக்பாஸ்க்குள் என சொல்பவர்கள் இதற்கு
பதில் சொல்லுங்கள்.
ஜல்லிக்கட்டு போராட்டம் கடந்த
ஜனவரி மாதம் தொடங்கியது. பிக்பாஸ் நிகழ்ச்சி ஜீலை முதல் வாரம் தொடங்கியது. இந்த
இரு நிகழ்வுக்கும் இடைப்பட்ட காலம் 5 மாதம். ஜல்லிக்கட்டு போராட்டத்தின் இறுதி
நாட்களில் ஜீலியின் ஜல்லிக்கட்டு ரைமிங் வீடியோ வெளியானபின், ஜுலி ரயிலில்
போகும்போது கொல்லப்பட்டார் என தகவல்கள் போட்டோக்களுடன் வளைத்தளங்களில் வெளியாகின.
அப்போதும் ஜீலி மீடியா முன் வந்து, அது நான்யில்லை எனச்சொல்லவில்லை. அவர்
திருவண்ணாமலை, மதுரை, சென்னை என தகவல்கள் வெளியாகினவே தவிர, யாராலும் அவரை
கண்டுபிடிக்க முடியவில்லை. அதோடு, அவர் திமுக அனுதாபி என்றார்கள், அதற்கும்
பதிலயில்லை. ஜீலியின் ஜாதகத்தை மீடியாவாலும் கண்டுபிடிக்க முயடிவில்லை. சில
நாட்கள் பொருத்து எனக்கு மிரட்டல்கள் வருகின்றன, நான் திமுகயில்லை என முகநூலில்
அழுகாச்சி வீடியோ ஒன்றை வெளியிட்டார் ஜீலி. அவ்வளவு தான், அதன்பின் அவரைப்பற்றி
எந்த தகவலும்மில்லை.
மீடியாவால் கண்டுபிடிக்க முடியாத
ஜீலியை விஜய் டிவி அத்தனை வேகமாக கண்டுபிடித்து எப்படி? இந்த 5 மாதகாலத்தில் ஜீலி
எங்க ஊர், எங்க தெரு என யாரும் சொல்லவில்லை. அப்படி சொல்ல முடியாதவரை விஜய் டிவி
மட்டும் எப்படி கண்பிடித்தது?. தன்னைப்பற்றிய புரளிக்கு மீடியாவிடம் வந்து பதில்
சொல்லாத ஜீலி, பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வாருங்கள் என கேட்டதும் ஒப்புக்கொண்டாரா
என்ன ?. அவர்யென்ன தொழில் முறை நடிகையா என்ன கேட்டதும் ஒப்புக்கொள்ள ?. இல்லை
கேட்டதும் ஒப்புக்கொண்டார் என்றால் ஜனவரி இறுதியில், பிப்ரவரி முதல் வாரத்தில்
ஜீலியை மீடியாக்கள் தேடியபோது, எங்கே போனார்?. சரி இருக்கட்டும் ஜீலி பற்றிய
ஆராய்ச்சியை இங்கே நிறுத்துவோம்.
பிக்பாஸ் வீட்டில் நடப்பது
எல்லாம்மே முன்கூட்டியே எழுதப்பட்டு, எடுக்கப்படும் ஸ்கிரிப்ட் ஒர்க். ஸ்கிரிப்டே
கிடையாது என்பவர்கள் ஒன்றை புரிந்துக்கொள்ள வேண்டும். சினிமா பிரபலங்கள் தங்கள்
இமேஜ்ஜை டெவலப் செய்ய, அதை காத்துக்கொள்ள என்னன்ன செய்வார்கள் என்பது திரைத்துறைக்குள்
இருப்பவர்கள் நன்றாக அறிந்த விஷயம். சினிமாவுக்குள் நுழையும் முன் கார்ப்பரேஷன்
வாட்டரை குடித்து வாழ்ந்தவர்கள், சினிமாவுக்குள் சிறு வாய்ப்பு கிடைத்து
நுழைந்ததும் குடிக்கறது மினரல் வாட்டர், கொப்பளிக்கிறது பன்னீர் என வாழ்வார்கள்,
வாழவைக்கப்படுவார்கள். அவர்களை சுற்றி கேமராக்கள் உள்ளது, அவர்கள் பேசுவதை
துல்லியமாக பதிவு செய்யும் மைக் உள்ளது. அது தினமும் தொலைக்காட்சியில்
ஒளிபரப்பாகும் என்ற நிலையில், தங்களது இயல்பான குணத்தை காட்டவே மாட்டார்கள்,
மனதில் உள்ளதை வெளிப்படையாக பேசக்கூடமாட்டார்கள். அப்படியிருக்க நிகழ்ச்சியில்
குரோதமாக நடந்துக்கொள்கிறார்கள் என்றால் அது பக்கா ஸ்கிரிப்ட் ஒர்க் என்பதை
உணர்ந்துக்கொள்ளுங்கள்.
பிக்பாஸ்
டெக்னிக்கல் அலசல்.
பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த
ஞாயிறன்று சிறந்த போட்டோ – வீடியோ கலைஞரான நண்பர் விவேகானந்தனுடன் பார்த்தபோது,
டெக்னிக்கலாக இதன் பல விவரங்களை தெரிவித்தார்.
பிக்பாஸ் வீட்டுக்குள் 30
கேமராக்கள் உள்ளது. 30 கேமராக்கள் 24 மணி நேரமும் ரெக்கார்டிங் செய்கிறது என்றால்
அதை எடிட் செய்ய குறைந்தது 30 பேர் தேவை. அதை ஒன்னரை மணி நேர வீடியோவாக சுருக்க 2
நாட்களாவுது தேவைப்படும். 40 பேர் எடிட்டிங் அறையில் உள்ளார்கள் என வைத்துக்கொண்டாலும்
ஒருநாள் நிச்சயம் தேவை. அதோடு, ஆடியோவை கேட்க, எடிட் செய்ய வேண்டும். அதோடு எடிட்
செய்யப்பட்ட வீடியோவுக்கு நிகராக, வாய்ச்சை எடிட் செய்து சேர்க்க வேண்டும்.
இதுயெல்லாம் ஒரே நாளில் சாத்தியமில்லாத விவகாரம்.
அதற்கடுத்து, பிக்பாஸ் வீட்டில்
வைக்கப்பட்டுள்ள மேராக்கள் எல்லாம் உயரத்தில், டைனிங் டேபிளில் வைக்கப்பட்ட Fixed
Camaras. இந்த கேமராக்கள் லெப்ட், ரைட், கீழே, மேலே தான் சுழலும்.
செட் போடப்பட்டுள்ள வீட்டில் லைட்
செட்டிங் என்பது உயரத்தில் பிக்ஸ் செய்து வைத்திருப்பது போல் தான் தெரிகிறது.
சுவர்களில் லைட் இருப்பது போல் தெரியவில்லை. ஆனால், ஒளிபரப்படும் வீடியோவில்
முகங்கள் தெளிவாக தெரிகின்றன. அதோடு, கட் ஷாட், குளோசப் ஷாட் நிறைய வருகின்றன.
அதுமட்டும்மல்ல ஒளிபரப்படும் காட்சிகளில் 80 சதவிதம் மேன்வல் புரோகிராமில்
எடுக்கப்பட்ட வீடியோவாக தான் உள்ளன.
பிக்பாஸ் வீட்டுக்குள் இந்த 15 பேரோடு
கேமராமேன்களும், லைட்டிங் ஆட்களும் இருப்பதற்கான சாத்தியம் 200 சதவிதம் உண்டு. அதுப்பற்றி
உறுதியாக கூற காரணம், பிக்பாஸ் வீட்டுக்குள் 2 பேருக்கு மேல் உட்கார்ந்து பேசும்போது
குளோசப் ஷாட் நிறைய வருகிறது. பிக்சடு கேமராவில் குளோசப் ஷாட் எடுத்தால் படம்
கிளாரிட்டி வராது. ஒருவர் திரும்பும் பக்கம்மெல்லாம் பிக்சடு கேமரா உடனுக்குடன்
திரும்பாது. அடுத்ததாக பிக்ஸ் செய்யப்பட்டுள்ள கேமராக்கள் அனைத்தும் ஆட்டோமேட்டிக்
ரெக்கார்டிங் ஆப்சனில் இருக்கும். ஆட்டோமோடுவில் உள்ள ஒரு கேமரா தன் லைன்ஸ்க்கு
அருகே எந்த பொருள் உள்ளதோ அதைத்தான் தெளிவாக படம் பிடிக்கும். மேன்வல்
புரோகிராம்மை பொருத்தவரை இரண்டு பேர் நிற்கிறார்கள் என்றால் நாம் யாரை படம்
பிடிக்க வேண்டும் என செட்டிங் செய்கிறோம்மோ அவர்களை மட்டும்மே தெளிவாக படம்
பிடிக்கும்.
சினேகன், காயத்ரி, சக்தி
உட்கார்ந்து பேசிக்கொண்டு உள்ளார்கள். அவர்களை ஒரு கேமரா படம் பிடித்துக்கொண்டு இருக்கிறது.
குறுக்கே வையாபுரி நடந்து போகிறார். ஆனால் கேமரா உட்கார்ந்துயிருப்பவர்களை தான்
தெளிவாக காட்டுகிறது. லைன்ஸ்க்கு அருகே கடந்து சென்ற வையாபுரியை அவுட் ஆப்
போகஸ்சில் காட்டுகிறது. இப்படி நடக்க ஆட்டோமோடுவில் உள்ள கேமராவில் சாத்தியமல்ல.
கேமராமேன்கள் உட்கார்ந்து ஆப்ரேட் செய்யும் கேமராக்களில் மட்டும்மே சாத்தியம்.
அதேபோல் தலைக்கு மேல் லைட்
செட்டிங் செய்யப்பட்டுள்ளது என்றால் கண்ணுக்கு கீழே, தாடைக்கு கீழே கறுப்பு
அடிக்கும், அதாவது நிழல் படரும். அப்படி காட்சிகள் உள்ளன. ஆனால், குளோசப் ஷாட்டில்
பாருங்கள் யார் முகத்திலும், தாடைக்கு கீழே நிழல் தெரியாது. அதற்கு காரணம், லைட்
முகத்துக்கு நேராக இருந்தால் அந்த வெளிச்சம் தெரியாது. உதாரணத்துக்கு நாம்
பாஸ்போட் போட்டோ எடுக்க ஸ்டூடியோவுக்கு சென்றால் நம்மை உட்கார வைத்து நம்
முகத்துக்கு நேராக, சைடாக லைட் போட்டு வைத்து முகத்தில் நிழல் எங்கும் படாதபடி செய்து
தான் போட்டோ எடுப்பார்கள். பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் இதேதான் நடக்கிறது.
டெக்னிக்கலாக இப்படி இன்னும்
அடுக்கிக்கொண்டே போகலாம். அதனால் தான் உறுதியாக கூறுகிறேன் பிக்பாஸ் வீட்டுக்குள்
அதில் நடிப்பவர்கள் மட்டும்மல்ல உள்ளே ஒரு பெரிய டீம்மே உள்ளது. அதனால் பிக்பாஸ்
நிகழ்ச்சியை முன் வைத்து அடித்துக்கொள்ளாமல் போய் பிள்ளைகளோடு விளையாடி பொழுது
போக்குங்கள்.