புதன், ஏப்ரல் 01, 2015

தமிழ்நாட்டுக்கு ஒரு தேவர்மகன் போதும்.......

கொம்பன் படத்தை வெளியிடுவதை தடை செய்ய வேண்டும் என நீதிமன்றத்தை நாடியிருக்கிறார் புதிய தமிழகம் கட்சி நிறுவனர் மருத்துவர் கிருஷ்ணசாமி. திரைப்படத்தின் கருத்தை கருத்தால் எதிர்க்கொள்ள வேண்டும் என்ற நிலைப்பாடு கொண்டவன் நான். கமல்ஹாசனின் விஸ்வரூபம் திரைப்படத்தை பார்க்காமலே முஸ்லிம் அமைப்புகள் சில எதிர்த்தபோது கமல்ஹாசனுக்கு ஆதரவான நிலைப்பாடு எடுத்து கட்டுரை எழுதியவர்களில் நானும் ஒருவன். கத்தி திரைப்படத்தின் போது எதிர்ப்பு வந்தபோது எதற்காக எதிர்க்க வேண்டும் படம் வரட்டும் என்ற கருத்தில் இருந்தவன். 

50 கோடியில் தயாராகும் படங்களை ஐந்தாயிரம் ரூபாய் இருந்தால் லட்டர் பேடு சங்கங்களால் கூட முடக்கிவிட முடிகிறது. வட்டிக்கு கடன் வாங்கி படம் தயாரிக்கும் தயாரிப்பாளர் நிலையை யாரும் கவனத்தில் கொள்வதில்லை. ஒரு படத்தின் கதை எதைப்பற்றியது என்பது தெரியாமலே அறைகுறை விஷயங்களை வைத்துக்கொண்டு தடை செய்ய வேண்டும் என்பது ஏற்க முடியாதது என்பது என் கருத்து அதில் உறுதியாக இருக்கிறேன். 

ஆனால் கொம்பன் படத்துக்கு அப்படி ஆதரவு தர முடியவில்லை. பல பிரபல எழுத்தாளர்கள், கருத்தாளர்கள் கிருஷ்ணசாமியின் நிலைப்பாட்டை ஆதரித்தும் எதிர்த்துக்கொண்டும் இருக்கிறார்கள். கமல்ஹாசனின் சண்டியர் படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பெயர் மாற்ற வைத்த கிருஷ்ணசாமி அதே பெயரில் பின்னால் வந்த திரைப்படத்தை எதிர்க்கவில்லை என்கிறார்கள் சிலர். கமல்ஹாசனும், பெயர் தெரியாத அந்த நடிகனும் ஒன்றாக பார்ப்பது முட்டாள் தனமாகயில்லை. 

தமிழ்நாட்டில் பல பிரச்சனைகள் உள்ள நிலையில் ஒரு சினிமாவை எதிர்த்து ஏன் போராட வேண்டும்மென கேட்கிறார் தராசில் வைத்து தமிழன் யார் என அடையாளம் காணும் சீமான். அதே கேள்வியை அவர் திருப்பி கேட்டால் சீமான் என்ன பதில் சொல்லியிருப்பார் என்பது அவர் தான் சொல்ல வேண்டும். 

திரைப்படத்தை பார்த்து சாதி மோதல் வரும் என்பது முட்டாள் தனமானது என ஒருவர்  சொல்லியிருந்தார். கம்யூட்டர் முன்னால் உட்கார்ந்துக்கொண்டு அதில் வரும் தகவல்கள் உண்மை என நம்பவர்களால் மட்டுமே இப்படி சொல்ல முடியும்.

இவர்களின் கருத்தை ஆழ்ந்து நோக்கினால் சாதி வெறி மனதில் எங்கோ ஒரு ஓரத்தில் இவர்களிடம் உள்ளது என்பதை அறிய முடிகிறது. தென்மாவட்ட சாதி கலவரம் வேண்டும் என நினைக்கும் சாதி வெறியர்களே சாதி ரீதியிலான படத்தை வரவேற்கிறார்கள். 

ஒரு திரைப்படம் என்பது மக்களை சந்தோஷப்படுத்த வேண்டும்மே தவிர சாதி மோதலை உருவாக்குவதாக இருக்ககூடாது. ஆனால் சில ஆண்டுகலாக பல படங்கள் மறைமுகமாக சாதிய வர்ணம் பேசுபவையாக வருகின்றன. அந்த திரைப்படங்கள் ஒன்று தாழ்த்தப்பட்ட சாதி பற்றியோ இல்லையேல் உயர்சாதி பெருமை பேசுகின்றன. நான் அறிந்தவரையில் தென்மாவட்ட சாதி பெருமை, கொங்கு பகுதி சாதி பெருமை பேசும் படங்கள் அதிகளவில் வந்துக்கொண்டு இருக்கின்றன. அந்த வரிசையில் தான் கொம்பனையும் பார்க்க வேண்டியுள்ளது. 

கிருஷ்ணசாமி எதிர்ப்பது படத்தின் கதை சாதி பெருமை, தாழ்த்தப்பட்ட மக்களை எதிர்த்து பேசுகிறது என்கிறார். (அவர் அதை எப்படி அறிந்தார் என்பது தெரியவில்லை. இருந்தாலும் டிரைலரில் சில இடங்களில் சாதி வர்ணம் தூக்கலாக உள்ளது அதை கொண்டே முழு படமும் சாதி பேசுகிறது என கிருஷ்ணசாமி கருதவாய்ப்புள்ளது. அவர் எண்ணுவது தவறில்லை. தமிழகத்துக்கு ஒரு தேவர்மகன் போதும் என்பதால் வரும் முன் காப்போம் என்பதால் எதிர்க்கலாம் )

போற்றி பாடி பெண்ணே......... தேவர் காலடி மண்ணே என்ற பாடல் தென்மாவட்டத்தில் உள்ள ஒரு குறிப்பிட்ட சாதி மக்களின் பாடலாக இன்றளவும் உள்ளது. இந்த பாடல் எத்தனை எத்தனை சாதி மோதல்களை உருவாக்கி எத்தனை எத்தனை குடும்பங்களின் வாழ்வை சின்னாபின்னமாக்கியது என்பது வரலாறு. அந்த வரலாறு தொடர்ந்து கொண்டு தான் உள்ளது. 


இதையெல்லாம் இன்றைய தலைமுறை அறியாதது. சாதி பிரச்சனை பற்றி பேசினால் அது இருக்கிறது இல்லை என சொல்லாமல் விவகாரத்தை திசை திருப்பியுள்ளது கொம்பன் படத்தயாரிப்பாளர் மற்றும் சினிமாத்துறையினர். 

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த சிவக்குமார் குடும்பத்தின் பினாமி ஞானவேல்ராஜா ஏப்ரல் 2ந்தேதி என் படம் வருவதால் தான் இந்த சிக்கல் என விவகாரத்தை அரசியலாக்குகிறார். இதே போன்ற ஒரு கருத்தை தான் செய்தி தொலைக்காட்சி ஒன்றின் நேர்காணலில் ஹீரோ கார்த்தி சொன்னார். அவர்கள் குறிப்பிடும் பின்னணி அதே ஏப்ரல் 2ந்தேதி உதயநிதிஸ்டாலின் படம் வெளிவருகிறது. அதனால் அரசியல் சாயம் பூசுகிறார் என நினைக்கிறேன். 

சாதி சாயம்மில்லையென ஒரேயடியாக இதை ஒதுக்கிவிட முடியாது. படத்தின் தயாரிப்பாளர் சாதி பற்றி பேசுகிறது என மறைமுகமாக நேர்காணல் ஒன்றில் ஒப்புகொண்டுள்ளார், அதை நீக்கவும் செய்துள்ளோம் என்கிறார். அப்படியிருந்தும் இந்த விவகாரத்தை அழகாக திசை திருப்புகிறார்கள். சினிமா அமைப்புகளும் வக்காலத்து வாங்குகிறார்கள். அவர்கள் பிணத்திலும் பணம் தின்னும் கழுகுகள். சாதி மோதல் வந்தால் என்ன, எவன் குடும்பம் அழிந்தால் என்ன அவர்களுக்கு தேவை பணம். அதற்காக அவர்கள் சப்போட் செய்கிறார்கள். 

கிருஷ்ணசாமி ஒரு அரசியல் கட்சியின் தலைவர். தென்மாவட்டத்தில் உள்ள தாழ்த்தப்பட்ட சாதி மக்களின் தலைவராக உள்ளவர், அவருக்கு பணத்தின் மீது ஈர்ப்பு இருந்தாலும் அவரது மக்கள் மீது ஈர்ப்பு உள்ளவர். சினிமாக்காரர்களை பணம் மட்டுமே குறிக்கோளாக வாழ்பவரல்ல.  
நீதிமன்றம் படத்துக்கு தடை விதிக்காத நிலையில், படம் பார்ப்பதில் ஏற்பட்ட பிரச்சனையில் 1ந்தேதி மாலை தீர்ப்பளிக்கப்படும் என நீதிபதி தெரிவித்த நிலையில் படத்தை ஒருநாள் முன்னதாக ரிலிஸ் செய்துள்ளது கொம்பன் படக்குழு.

6 கருத்துகள்:

 1. Tamil Hindu la padam release thalli vaika pattu irukku nu pottu irukku.

  பதிலளிநீக்கு
 2. /// கமல்ஹாசனின் சண்டியர் படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பெயர் மாற்ற வைத்த கிருஷ்ணசாமி அதே பெயரில் பின்னால் வந்த திரைப்படத்தை எதிர்க்கவில்லை என்கிறார்கள் சிலர். கமல்ஹாசனும், பெயர் தெரியாத அந்த நடிகனும் ஒன்றாக பார்ப்பது முட்டாள் தனமாகயில்லை. ///
  அன்று படத்தை எதிர்த்தது கமலஹாசனுக்காக இல்லை. படத்தின் தலைப்புக்காக.
  ஒருவேளை கமலஹாசன் படத்தை எதிர்த்தால் தான் , விளம்பரம் மிக அதிக அளவில் கிடைக்கும் என நினைத்தாரோ என்னமோ

  பதிலளிநீக்கு
 3. // கமல்ஹாசனின் விஸ்வரூபம் திரைப்படத்தை பார்க்காமலே முஸ்லிம் அமைப்புகள் சில எதிர்த்தபோது கமல்ஹாசனுக்கு ஆதரவான நிலைப்பாடு எடுத்து கட்டுரை எழுதியவர்களில் நானும் ஒருவன். கத்தி திரைப்படத்தின் போது எதிர்ப்பு வந்தபோது எதற்காக எதிர்க்க வேண்டும் படம் வரட்டும் என்ற கருத்தில் இருந்தவன். //
  // ஆனால் கொம்பன் படத்துக்கு அப்படி ஆதரவு தர முடியவில்லை. //

  ஏனெனில் இது உங்களை நேரடியாக பாதித்திருக்கலாம் :))

  பதிலளிநீக்கு
 4. // அவர்கள் குறிப்பிடும் பின்னணி அதே ஏப்ரல் 2ந்தேதி உதயநிதிஸ்டாலின் படம் வெளிவருகிறது. அதனால் அரசியல் சாயம் பூசுகிறார் என நினைக்கிறேன். //
  காக்கை உட்கார பனம்பழம் விழுந்தது என்கிறீர்கள். ஆனால் எனக்கு தெரிந்து பலமுறை, காக்கை உட்கார்ந்ததாலேயே தான் பல பனம் பழ்ங்கள் விழுந்திருக்கின்றன

  பதிலளிநீக்கு
 5. // சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த சிவக்குமார் குடும்பத்தின் பினாமி ஞானவேல்ராஜா //
  இதில் எனக்கு எந்தவித அய்யமுமில்லை. அதற்காக நீங்கள் சொல்வடஹி எல்லாம் நம்பமுடியவில்லை

  பதிலளிநீக்கு
 6. /// கிருஷ்ணசாமி ஒரு அரசியல் கட்சியின் தலைவர். தென்மாவட்டத்தில் உள்ள தாழ்த்தப்பட்ட சாதி மக்களின் தலைவராக உள்ளவர், அவருக்கு பணத்தின் மீது ஈர்ப்பு இருந்தாலும் அவரது மக்கள் மீது ஈர்ப்பு உள்ளவர். ///

  Ver wrong. He is one of the castiest and racist politician. He survives by playing sycophant to ruling party.


  Also, it is funny that you supported kathi but resist this. If you really resist caste based fights, first resist people like krishnasamy who is still triggering one Hindu against another Hindu.

  பதிலளிநீக்கு