திங்கள், மார்ச் 25, 2013

சஞ்சய்தத்க்கு மன்னிப்பு. ரஜினியின் போக்கு என்ன ?


1993 மார்ச் மாதம் மும்பையில் கார், டூவீலர்கள் மூலம் மும்பையின் முக்கிய இடங்களில் அடுத்தடுத்து தொடர்ந்து பெரிய அளவில் குண்டுவெடிப்பு நடந்தது. இதில் 257 பேர் கொல்லப்பட்டனர். 700க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். தடா சட்டத்தின் கீழ் இந்த வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்பட்டது. இந்த வழக்கில் மேனன் குரூப், தாவூத்இப்ராஹீம் கேங்க் குற்றவாளிகாக சேர்க்கப்பட்டனர். இருபதுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டனர்.

அதில் முக்கியமானவர் பாலிவுட் நடிகர் சஞ்சய்தத். இவர் மீதான குற்றச்சாட்டு, ஏ.கே57 துப்பாக்கி மற்றும் 9எம்.எம் பிஸ்டல், அதற்கான தோட்டாக்கள் சட்டவிரோதமாக தாவுத் குரூப்பிடம் இருந்து வாங்கினார் என்பதே அவர் மீதான குற்றச்சாட்டு. விசாரணையின் முடிவுக்கு பின் 6 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர் குற்றம்சாட்டப்பட்டவர்கள் அனைவரும்.

ஓராண்டு ஆறு மாதம் ஏற்கனவே தண்டனையை அனுபவித்த சஞ்சய்தத் பெயிலில் வெளியே வந்தார். இதில் உச்சநீதிமன்றம் சஞ்சய் தத்துக்கு 6 ஆண்டுகள் என்பதை 5 ஆண்டுகளாக குறைத்து தீர்ப்பு வழங்கியது. அதன்படி இன்னும் 3.6 ஆண்டுகள் தண்டனையை அவர் அனுபவிக்க வேண்டும். நான்கு வாரகாலத்துக்குள் சரணடைய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் தான் சஞ்சய்தத்தை மன்னிக்க வேண்டும் என்ற குரல் வெளிப்பட்டு வருகிறது. குரல் தருபவர்கள் சாதாரணமானவர்கள் அல்ல. முன்னால் உச்சநீதிமன்ற நீதிபதியும் தற்போதைய இந்திய பத்திரிக்கை கவுன்சில் தலைவருமான மார்கண்டேய கட்ஜீ, மத்திய சட்டத்துறை அமைச்சர், தமிழகத்தின் சூப்பர் ஸ்டார் என வர்ணிக்கப்படும் ரஜினிகாந்த். இந்தி, தெலுங்கு, கன்னடம் உட்பட தற்போது சினிமாவில், அரசியலில் பிரபலமாக உள்ள அத்தனை முன்னால், இந்நாள் நாயகர், நாயகிகள் மன்னிக்க வேண்டும் என கருத்து தெரிவித்துள்ளனர். எம்.பியாக உள்ள பாலிவுட் நடிகை ஜெயாபச்சன், தனிப்பட்ட முறையில் கவர்னரை சந்தித்து மன்னிக்க வேண்டும்மென முறையிடுவேன் எனச்சொல்லியுள்ளார்.

மத்திய – மாநில அரசுகள் என்ன செய்கிறது என்ற கேள்வி உங்களுக்கு எழலாம். இதுயென்ன சாமன்ய மக்களின் விலைவாசி உயர்வு குரலா அலட்சியப்படுத்த சினிமா நடிகர் – நடிகைகளின் குரலாச்சே. அதனால் வேகவேகமாக கருத்து சொல்லியுள்ளார்கள் அமைச்சர்கள். மகாராஷ்ட்டிராவின் உள்துறை அமைச்சர் பட்டீல், கோரிக்கை மனு வரவில்லை. வந்தால் பரிசீலிப்போம். இந்தியா ஒன்றியத்தின் உள்துறை அமைச்சர் ஷிண்டே, மன்னிப்புக்கான அத்தனை வழிகளிலும் அவருக்கு உதவப்படும் எனக்கூறியுள்ளார். இவ்ளோ ஆதரவு கருத்து வந்துவிட்டது. இதற்கு மேல் மகராஷ்ட்டிரா கவர்னர் என்ன முட்டாளா மன்னிக்காமல் விடுவதற்க்கு. கதர் தொப்பி போட்ட அன்ன ஹசாரே, பி.ஜே.பி, சிவசேனா போன்ற கட்சிகள் மட்டும் எதிர்க்கின்றன.


இதன் மூலம் ஒன்று தெளிவாக தெரிகிறது. அதாவது, சட்டம் என்பது பணக்காரர்களுக்கும், பிரபலமானவர்களுக்கும் வலைந்து கொடுக்கும் தன்மை உடையது என்பதே அது. முன்பு மறைமுகமாக வலைந்து கொடுத்த சட்டம் இப்போது வெளிப்படையாக வலைந்து கொடுக்க தொடங்கியுள்ளது.

சஞ்சய்தத் தவறு செய்துள்ளார், பிரபலமானவராக இருந்தால் தவறு செய்யலாம்மா கேட்டால் அவர் குண்டு வைக்கவில்லை, அனுமதி பெறாமல் துப்பாக்கி வைத்திருந்தார் அது சாதாரணமானது என்கிறார்கள்.

முன்னால் பிரதமர் ராஜிவ்காந்தி கொலையில் பேட்டரி வாங்கி தந்த பேரறிவாளன் தூக்குதண்டனை கைதியாக உள்ளார். சந்தனகடத்தல் வீரப்பன்க்கு உதவி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு நான்கு பேர் தூக்கு கயிற்றின் முன் நிற்கிறார்கள். இன்னும் பலர் தடா சட்டத்தின் கீழ் 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள். இந்தியாவின் வேறு மாநிலத்திலும் இப்படி பலர் உள்ளார்கள். இவர்களும் தான் அவர்களுக்கே தெரியாமல் தப்புக்கு துணை போய்வுள்ளார்கள். இவர்களுக்கு தூக்குதண்டனை தரப்பட்டுள்ளது. தப்பு செய்தவனை விட தப்புக்கு துணை போனவன்க்கு அதிக தண்டனை எனச்சொல்வதால் தானே தப்புக்கு துணை போன பலருக்கும் இந்த நீதித்துறை தண்டனை வழங்கியுள்ளது. அப்படியிருக்க சஞ்சய்தத் தை மட்டும் மன்னிக்க வேண்டும் என கேட்பது எந்த விதத்தில் நியாயம்.

சஞ்சய் தத்க்கு மட்டும் தான் மனைவி, பிள்ளைகள் உள்ளதா? தண்டனை பெற்ற மற்றவர்களுக்கு இல்லையா?. இல்லை குண்டு வெடிப்பில் இறந்துப்போன, குண்டு வெடிப்பில் கை, கால்கள் என உடல் பாகங்களை இழந்து நிற்பவர்களுக்கு குடும்பம் இல்லையா ? யாருக்கு இல்லை குடும்பம். அவர்களுக்கும் குடும்பம் இருக்கிறது. இது செவிடன் காதில் ஊதிய சங்காக உள்ளது. இவர்களும் 20 ஆண்டுகளுக்கும் குறையாமல் சிறையில் வாடி வதங்கி வருகிறார்கள். சஞ்சய் தத்தாவது ஆட்டம் பாட்டத்துடன் இருந்தார்.

20 ஆண்டுகளாக தண்டனை அனுபவித்தது போதாதா என அறிக்கை விடுகிறார் ரஜினி. பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி உட்பட பலர் சிறையில் ஆயுள் தண்டனை முடித்தும் உள்ளார்கள். இவர்களுக்கு இந்த தண்டனை போதும் என விடுதலை செய்யவில்லையே ?. 20 ஆண்டுகள் ஒரு வழக்கு இழுத்தது என்றால் நீதித்துறையையும், அரசாங்கத்தின் மீது பாய வேண்டியது தானே. சஞ்சய்தத் பாதிக்கப்பட்டார் என்றவுடன் ஓடி வரும் நாயகர்களே எத்தனை பேர் தப்பே செய்யாமல் தண்டனை அனுபவித்து வருகிறார்கள். ஏத்தனை எத்தனை பேர் 10 ஆண்டு, 20 ஆண்டு, 30 ஆண்டு என வழக்கு இழுத்து வருகிறது. அவர்கள் எவ்வளவு பாதிக்கப்படுகிறார்கள். அதற்காக ஏன் நீங்கள் கவலைப்படுவதில்லை, குரல் கொடுப்பதில்லை ?.

கவலைப்படமாட்டீர்கள் ஏன் என்றால் அவர்கள் உங்களைப்போல நடிகர்கள்ள என்பதால்.

சனி, மார்ச் 23, 2013

மீண்டும் திணிக்கப்படும் இந்தி. – தமிழகம் என்ன செய்ய போகிறது ?.

இந்தி திணிப்பு மக்கள் மீது திணிக்கப்படுகிறது. கடந்த காலங்களில் திணிக்கப்பட்ட இந்தியும் அதற்கான போராட்டங்கள் பற்றிய வரலாறும். 

இந்திய துணை கண்டத்தில் 1652 மொழிகள் பேசப்படுகின்றன. அவை 826 மொழி கூட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்தியாவை முகலாய பேரரசு ஆண்ட காலத்தில் தான் சில காலம் உருது ஆட்சி மொழியாகயிருந்தது. மற்றப்படி அந்தந்த பகுதிகளின் மொழியே அந்தந்த பகுதிகளின் ஆட்சி மொழியாக இருந்தது. ஆங்கிலேயர் காலத்தில் ஆங்கிலம் ஆட்சி மொழி. அப்போதும் அந்தந்த பகுதி மக்களின் மொழியே துணை ஆட்சி மொழியாக இருந்தன. இருந்தும் இந்தியை அனைத்து மாநிலங்களுக்கும் இந்தியாவுக்கான ஒரே மொழியாக்கும் பணிகள் நடைபெற்றன. அதனை எதிர்த்து அப்போதே பிரச்சனைகள், போராட்டங்கள் நடந்தன.



இந்திய விடுதலைக்கு முன்பு.

தந்தை பெரியார் காங்கிரஸ் கட்சியில் இருந்த போது 1922ல் இருந்தே காங்கிரஸில் இருந்த ஆதிக்க சக்திகள் சமஸ்கிருதத்தையம், இந்தியையும் பரவலாக்கினர் இதை உணர்ந்த பெரியார் 1926ல் இருந்தே இந்தியை எதிர்க்க ஆரம்பித்தார்.

1937ல் சென்னை மாகாணத்தில் நடந்த பொது தேர்தலில் நீதிகட்சி தோற்றது. மாகாண பிரதமராக அரியணை ஏறிய ராஜாஜி உத்தரவுப்படி அப்போதைய கல்வி அமைச்சரான டாக்டர் சுப்பராயன் 21.7.1938ல் பள்ளிகளில் இந்தியை கட்டாய பாடமாக்கினார். சென்னை மாகாணத்துக்கு உட்பட்ட தமிழகத்தில் - 60, ஆந்திராவில் 54, கேரளாவில் 7, கர்நாடகாவில் 4 என மொத்தம் 125 பள்ளிகளுக்கு இந்தி கட்டாயம் என்ற உத்தரவு பறந்தது.

ஈழத்து சிவானந்தா அடிகள் தான் முதன் முதலில் தன் எதிர்ப்பை தந்தி மூலம் ராஜாஜிக்கு அனுப்பி வைத்தார்.

1938 சனவரி 3ல் தமிழக பள்ளிகள் முன் மறியில் பேரும் சி.எம் வீட்டு முன்பும் திரண்டு எதிர்பு தெரிவித்து 1271 பர் கைதானார்கள். அதில் 1166 ஆண்கள், 73 பெண்கள், 32 குழந்தைகள் சிறைப்பட்டனர்.

முதல் இந்தி எதிர்ப்பு மாநாடு 27.2.1938 காஞ்சிபுரத்தின் எம்.எல்.ஏவான கான் பகதூர் கலிபுல்லாசாகிபு தலைமையில் நடந்தது.

சுதந்திரத்திற்க்கு பின்

1947ல் சுதந்திர இந்தியாவின் ஆட்சி மொழியாக இந்தியை கட்டாயமாக்கியதால் 17.7.1948ல் பெரியார் இந்தி எதிர்ப்பு மாநாட்டை கூட்டினார். மறைமலையடிகளார் தலைமையில் நடந்த இந்த மாநாட்டை திரு.வி.க அவர்கள் தொடங்கி வைத்தார். அண்ணா, மா.பெ.சி ஆகியோர் இந்தயை எதிர்த்து பேசினர்.

2.8.1948ல் இந்தி எதிர்ப்பு கூட்டடத்தில் இந்தி எதிர்ப்புக்குயென்று ஒரு படை ஒருவாக்கப்பட்டது. அந்த படையின் தளபதியாக பேரறிஞர் அண்ணா தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டத்தை ஒருங்கிணைத்து நடத்தியவர் அண்ணா.

1.8.1952ல் திருச்சியில் இந்தி எதிர்ப்பை முன்னிட்டு இந்தி எழுத்துக்களை தார் பூசி அழிக்கும் போராட்டத்தை பெரியார் தொடங்கி வைத்தார்.

13.10.1957ல் தமிழகத்தில் இந்தி எதிர்ப்பு நாளாக கொண்டாடப்படவேண்டும் என திமுக அறிவித்து வெற்றிகராமாக நடத்தியது. தொடர்ந்து இந்தி எதிர்ப்பு போராட்ட குழு தலைவராக ஈ.வி.கே சம்பத் தேர்வு செய்யப்பட்டார். 1.8.60ல் சென்னை கோடம்பாக்கத்தில் திமுக நடத்திய பொதுக்கூட்டத்தில், பேரறிஞர் அண்ணா நேருவின் முடிவை கண்டித்தார்.

3.8.1960ல் பிரதமர் நேரு, சம்பத்க்கு எழுதிய கடிதத்தில் இந்தி பேசாத மக்கள் விரும்பும்வரை ஆட்சி மொழியாக ஆங்கிலம் இருக்கும் என்றார்.

13.10.1963ல் திமுக மாநாட்டில் அரசியல் சட்டத்தின் 17வது பிரிவை தீயிட்டு கொளுத்துவோம் என தீர்மானம் இயற்றப்பட்டது. கைது செய்யப்பட்டார் அண்ணா.

நேரு தன் உறுதிமொழியை மீறி ஆட்சி மொழி சட்டத்ததை உருவாக்கி 26.1.1965ல் நாடாளமன்றத்தில் இந்தியே ஆட்சிமொழி என்றார். 1965 சனவரி 26 ஐ துக்க நாளாக அண்ணா அறிவித்தார்.

அப்போது நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் தமிழகத்தில் தீக்குளிப்பு சம்பவங்கள் நடந்தன.
திருச்சி கீழப்பழுர் சின்னசாமி – 20.1.1965
கோடம்பாக்கம் த.மு.சிவலிங்கம் - 26.1.1965
விருகம்பாக்கம் 25 வயது அரங்கநாதன் 27.1.1965
திருச்சி ஐயம்பாளையம் ஆசிரியர் வீரப்பன்
விராலிமலை சண்முகம்
கோவை சத்தியமங்களம் முத்து
திருச்சி கீரனூர் முத்து என தீக்குளிப்பு தொடர்ந்தது.

1967 ல் நடந்த பொது தேர்தலில் 9 மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை இழந்தன. ஆட்சி மொழிகள் திருத்தச் சட்டத்தை (ழுககiஉயைட டயபெரஎயபநள யுஅநனெஅநவெ யஉவ 1968 ஏ) கொண்டு வந்த மற்ற மாநிலங்கள் விரும்பும் வரை ஆங்கிலம் கூடுதல் மொழியாகயிருக்கும் என்றார்.



23.1.1968ல் தமிழகத்தின் முதல்வாரன அண்ணா, தமிழகத்தில் மாணவர்கள் தமிழ், ஆங்கிலம் படித்தால் போதும் என்ற தீர்மானத்தை கொண்டு வந்தார்.

தமிழ்மகன் ஒருவன் உயிரோடு இருக்கும் வரை தமிழகத்தில் இந்தி திணிப்பை நுழைய விடமாட்டோம் என்றனர் தமிழ் மற்றும் திராவிட அரசியல் இயக்கத்தினர்.

சில ஆண்டுகள் கமுக்கமாக இருந்த இந்திய ஒன்றியத்தை ஆளும் பொறுப்பில் உள்ள அதிகாரவர்க்கத்தின் இந்தியை பல்வேறு வடிவங்களில் நுழைத்தபடியே வந்தனர். தற்போதைய நிலையில் ஒவ்வொரு சிறிய நகரங்களிலும் பத்துக்கும் குறையாத சி.பி.எஸ்.சி பள்ளிகள் தொடங்க மத்திய அரசு அனுமதித்துள்ளன. இப்பள்ளி உள்ள மாநிலங்களில் கூட அம்மாநில மொழிகள் கற்றுதரப்படுவதில்லை. இந்தி, சமஸ்கிருதம் போன்றவையே கற்று தரப்படுகின்றன. மக்களிடம் சி.பி.எஸ்.சி பாடத்திட்டம் சிறந்த பாடத்திட்டம், அந்த பாடத்திட்டத்தில் படித்த பிள்ளைகள் தான் புத்திசாலிகள் என்ற மாயையை உருவாக்கி வருகிறார்கள். இது பிற மொழியை அழிக்கும் ஒர் மறைமுக யுக்தி.

இந்த வகையில் தான் மத்தியரசின் பணியாளர் தேர்வுகளில் பிராந்திய மொழிக்கான இடத்தினை அழிக்கும் வேலை திட்டத்தின் ஒரு பகுதியாக சமீபத்தில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மத்தியரசின் பணியாளர் தேர்வுகளை இந்தியில் எழுத விரும்பாதவர்கள் தமிழில் அல்லது வேறு பிராந்திய மொழியில் எழுத வேண்டுமானால் குறைந்தது 25 பேர் இருக்க வேண்டும். அதோடு பிராந்திய மொழியில் படித்தவர்கள் மட்டுமே அந்த தேர்வை எழுத முடியும் என விதிகளில் திருத்தம் செய்துள்ளது யு.பி.எஸ்.சி. இது இனி வருங்காலத்தில் இந்தியை படிக்க வைக்க செய்யப்படும் யுக்தி.

இந்தியை கற்றுக்கொள்ளட்டும் பிரச்சனையில்லை. இந்தி திணிப்பை தான் எதிர்க்கிறோம். இந்தியில் தேர்வு எழுதுகிறவர்களைப்பற்றி கவலையில்லை. ஆனால் இந்தியை திணிக்காதீர்கள் என்றுத்தான் கேட்கிறோம். இந்தி படித்தால் தான் அரசாங்க வேலை என பிளாக்மெயில் செய்வது தவறானது.

பட்டும் புத்திவராத கட்சி எதுயென்றால் அது காங்கிரஸ் தான். இந்தி திணிப்பு தான் இந்தியாவின் கதாநயகனாக இருந்த காங்கிரஸ் அரசாங்கத்தின் பிம்பத்தை உடைத்து மாநில கட்சிகளை கதாநாயகர்களாக்கியது. இப்போது நொண்டி குதிரையாக இருக்கும் காங்கிரஸ் மீண்டும் இந்தியை திணிக்க முயல்வதன் மூலம் காணாமல் போகும் சூழ்நிலை வரும்.

( கட்டுரைக்கான தகவல்கள் வழக்கறிஞர் ஆறுமுகம் முப்பது ஆண்டுகளுக்கு முன் எழுதிய இந்தி சிக்கலும் இறுதி தீர்வும் என்ற புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்டது. )

புதன், மார்ச் 20, 2013

பால்தாக்கரேவாக மாற கனவு காணும் சீமான்.




மும்பை பால்தாக்கரே போல் தன்னை உருவாக்கிக்கொள்ள கனவு காண்கிறார் இயக்குநர், நடிகர், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான். 

சமீபத்தில் தினந்தந்தி, பாலிமர் தொலைக்காட்சியில் சீமானின் பேட்டியை காண நேரிட்டது. தினதந்தி தொலைக்காட்சியில் நேர்காணல் நடத்தியவர் சீமானிடம், இளைஞர்களை ஈழ பிரச்சனையை அறிவு பூர்வமாக அனுகாமல், உணர்வு பூர்வமாக அனுகுவது சரிதானா என கேட்டதும், என்னை எதுக்கு அறிவு பூர்வமா சிந்திக்க சொல்றிங்க. நான் உணர்வு பூர்வமா தான் சிந்திப்பன். என்னையெல்லாம் அறிவு பூர்வமா சிந்திக்க சொல்லாதிங்க என குரலை உயர்த்தினார். ( தினதந்தி நேர்காணலை யூ டியூப்பில் காணுங்கள் ). பாலிமர் தொலைக்காட்சியில் மக்களுக்கான நிகழ்ச்சியில், தனி ஈழம் அமைய எந்த உலக நாடும் உதவாது. தமிழ்நாட்டில் திராவிட ஆட்சிகள் போய் தமிழன் என்று ஆள்கிறானோ அன்று தான் ஈழம் கிடைக்கும் என்றார். 

வரலாற்றில் பல சந்தர்பங்களில் சில அரசியல் தலைவர்கள் முட்டாள்கள் போல் இருந்திருக்கிறார்கள். ஆனால், அரசியல் அறிவு இல்லாத முட்டாள்கள் அரசியல் தலைவர்களானால் எப்படி இருப்பார்கள் என்பதை பல சந்தர்பங்களில் சீமான் நமக்கு தெரிவிக்கிறார். இதைத்தான் காரல்மார்கஸ் பல சந்தர்பங்களில் வேறு மாதிரி சொல்லியிருக்கிறார். அதாவது, அறிவாளிகளும், தளபதிகளும், மாமன்னர்களும் வரலாற்றில் பல சந்தர்பங்களில் குப்பை கூடைக்கு அனுப்பபட்டு இருக்கிறார்கள். அதுபோல் குப்பையில் இருக்க வேண்டிய கோமாளிகளும், அறிவிளிகளும் பல சந்தர்பங்களில் கோட்டைகளில் அமர்ந்திருக்கிறார்கள் என்கிறார். இது ஏதோ காரல்மார்க்சின் கடந்த கால வரலாறு குறித்த ஆய்வு மட்டுமல்ல. நம் சமகாலத்திலும் இதுப்போன்ற கோமளித்தனங்களுக்கு சொந்தக்காரர்களாக வலம் வந்துக்கொண்டு இருக்கிறார்கள். 

அரசியல், சமூக அறிவியலோடு சம்மதப்பட்டது. சமூகத்தையும், சமூக அறிவையும் ஒருவர் எந்த அளவுக்கு அறிவு பூர்வமாக கற்று புரிந்துக்கொள்கிறாறோ அந்தளவுக்கு தான் அவரால் ஒரு சிறந்த அரசியல்வாதியாக, நேர்மையாளனாக சமூகத்துக்கு பங்காற்ற முடியும். அரசியல் என்பது வெறும் உணர்வோடு சம்மந்தப்பட்டதல்ல. சீமானிடம் இருப்பது உணர்ச்சி அரசியல் மட்டும் தான். 

எதை வைத்து இதை சொல்கிறேன் என கேட்கலாம். முதலில் சீமான் பற்றி அறிந்துக்கொள்ளலாம். சீமான், தனது பகுதியில் போலிஸ் நண்பர்கள் குழுவிலும் பின் காங்கிரஸ், திமுக, பாமக என வலம் வந்தார். தமிழ்தேசிய அரசியல் பேசி நெடுமாறனோடு நெருக்கமானார். பகுத்தறிவு பேசி பெரியாரின் பேரனாக பெதிகவுடன் வலம் வந்தார். கடைசியில் தான் ஈழ அரசியல் பேச தொடங்கியுள்ளார். 

தமிழ் சமூகத்தில் நிலவும் சினிமா மோகம், சினிமாக்காரர்களால் எதையும் செய்ய முடியும் என்ற மாயையை இவரும் பயன்படுத்திக்கொண்டார். இயல்பிலேயே உணர்ச்சி மயமான பாத்திரங்கள் மீது அனுதாபத்தையும், ஆதரவையும் செலுத்தும் மக்களின் மனங்களில் தன் கருத்துக்களை சினிமா தொழிலில் கற்றுக்கொண்ட வித்தையை மக்கள் மத்தியில் குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் ரசிக்கதக்க வகையில் உணர்ச்சி ததும்ப பேசி உள்ள கிளர்ச்சியை தட்டி எழுப்பி ஈழ மக்களின் அவலத்தை கண்ணீர் மல்க காட்சிப்படுத்தினார். இது ஒரு அருமையான சினிமா போல் மக்கள் மத்தியில் பதிந்தது. இதற்கு வலு சேர்க்கும் வகையில் அவர் மீதான வழக்குகளும், தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அவர் இருந்த சிறை வாழ்க்கையும் நல்ல மூலதனமாக அமைந்தது. இதன் லாபமாக அவர் செந்தமிழன் என்று அடையாளமாக்கப்பட்டார். உண்மையில் அந்த வகையில் சீமான் வெற்றி பெற்றார். அப்புறம்மென ஈழத்தை பேசுவதற்கான அடையாள குறியீடாக அறியப்பட்டு மற்றவர்களிடம்மிருந்த செயலற்ற தன்மை அவர்களை பின்னுக்கு தள்ளவைத்தது.  


ஈழ விவகாரம் மூலம் இளைஞர்களை போராட தூண்டும் சீமான் இளைஞர்களை அரசியல் படுத்துவதற்க்கு பதில் தன் உணர்ச்சிகரமான பேச்சால் இளைஞர்களுக்கு தப்பும் தவறுமான அரசியலை கற்று தருகிறார். ( ஒரே ஒரு உதாரணத்தை பார்ப்போம், “ ஈராக் அதிபர் சதாம்உசேன், அமெரிக்காவால் தூக்கில் போடப்பட்டான். அதுபோல் இராஜபக்சே உன்னை தூக்கில் போடவேண்டும் என்று பலயிடங்களில் சீமான் பேசியிருக்கிறார். இவரின் அரசியல் அறிவு முன் ஒரே ஒரு கேள்வி, சதாம்மை தூக்கில் போட்டதை இவர் ஆதரிக்கின்றாறா?. அமெரிக்கா பற்றியும், சதாம்உசேன் பற்றியும் இவரின் அரசியல் புரிதல் என்ன ?. என்பதை விவாதிக்க தயாரா ?.”) 

ஈழ விவகாரத்தை இளைஞர்களிடம் கொண்டு போய் சேர்ப்பதற்க்கு முன்னால் அவர்களை முதலில் அரசியல் படுத்த வேண்டும். உலக அரசியல் தேவையில்லை, உள்ளுர் அரசியலாவது ஓரளவு தெரிந்தால் மட்டுமே போராட்டம் வெற்றி பெறும். அதை செய்யாமல் இளைஞர்களை உணர்ச்சிக்கு அடிமையாக்குது தற்காலிக வெற்றியாக அமைந்தாலும் அந்த வெற்றிகள் அவர்களை வன்முறை கும்பலாக பரிணாமம் அடைய வைக்கும்.  

இப்படிப்பட்ட உணர்ச்சி அரசியலைத்தான் 45 ஆண்டுகளுக்கு முன்பு மகாராஷ்டிராவில் பால்தாக்கரே செய்தார். மராட்டியம் மராட்டியர்களுக்கே என பேசி மராட்டிய இளைஞர்களை உணர்ச்சிக்கு அடிமையாக்கி பிற மதத்தவரையும், பிற மொழி பேசுபவர்களையும், மதத்தின், மாநிலத்தின், மொழியின் பெயரில் மராட்டியத்தை கலவர பூமியாக்கினார். இன்றளவும் நிம்மதியில்லாத மாநிலமாக மராட்டிய மண் மாறிப்போனது. அதைத்தான் தமிழகத்தில் சீமான் அரங்கேறற்ற கனவு காண்கிறார். 

மராட்டிய மண் மராட்டியருக்கே என்ற கோஷத்தோடு பால்தாக்கரே வலம் வந்ததைபோல  தமிழ்நாடு தமிழருக்கே என்ற கோஷத்தோடு சீமான் வலம் வருகிறார். தமிழக அரசியல் களத்தில் தன்னை நிலை நிறுத்திக்கொள்ள தமிழ்தேசிய அரசியல்வாதியாக தன்னை அடையாளப்படுத்திக்கொள்ள தொடங்கியுள்ளார் சீமான். இதற்காக ஈழத்துக்கு எதிரி திராவிடம் தான் என அதிமுகவை தவிர்த்து பிற திராவிட கட்சிகளை, இயக்கங்களை, தந்தை பெரியாரை தாக்க தொடங்கி உள்ளார். கர்நாடாகா, கேரளாவோடு நதிநீர் பிரச்சனை வந்தபோது அம்மொழி பேசும் மக்களை தாக்க சொன்னார். ஈழம் உருவாக வேண்டும்மென்றால் தமிழன் முதல்வராக வேண்டும் என்கிறார். இதற்காக தமிழ் தவிர பிற மொழி பேசுபவர்களை வெறுக்க வைக்கும் அரசியல் செய்கிறார். இந்த வித்தையெல்லாம் பால்தாக்கரேவுடையது. 

குழப்பமான சந்தர்ப்ப அரசியல்வாதி, ஈழத்தை ஆதரிக்கிறார்கள் என்பதற்காக தீவிர இந்துத்துவாவாதியான பால்தாக்கரேவின் கட்சிக்கு மும்பை சென்று தமிழர்கள் மத்தியில் வாக்கு சேகரித்தார். மொழி பற்றிய வரலாறு தெரியாமல் தனது அரசியல் கட்சியை நடத்துகிறார். அதன்பின்னால் இளைஞர்களை திரட்டுகிறார். 

மொழி, இனம் பற்றி இயக்கம் நடத்துபவர்கள் அதுகுறித்த அரசியல் வகுப்புகள், ஊழியர் கூட்டங்கள், கலந்துரையாடல்கள், விழிப்புணர்வு பிரச்சாரங்கள், அரசியல் நடவடிக்கைகள் மூலம் கட்சி தனது ஊழியர்களை அரசியல் ரீதியாக வளர்த்துயெடுக்கும். ஊழியர்கள் மக்கள் மத்தியில் அரசியல் பணியாற்றுவார்கள் இதுதான் தேசிய இன விடுதலை மற்றும் புரட்சிகர அரசியல் இயக்கங்களின் பொதுவான நடைமுறை. ஆனால் நாம் தமிழர் இயக்கம் தோன்றியது முதல் இப்படிப்பட்ட எதுவும் நடந்ததாக நமக்கு தெரியவில்லை. ஆங்காங்கு நடத்தப்பட்ட நாம் தமிழர்களின் செயல்வீரர்கள் கூட்டம் கூட கோஷ்டி சண்டை, கணக்கு வழக்கு பிரச்சனையாக கலைகட்டியதே தவிர கொள்கை ரீதியான விஷயம் நடந்ததாக தெரியவில்லை. 

நாம் தமிழர் கட்சியையோ அல்லது தனிப்பட்ட முறையில் சீமானையோ தாக்க வேண்டும், விமர்சிக்க வேண்டும் என்பது நமது நோக்கமல்ல. சீமான் பேசுவதற்க்கும், ஆசைப்படுவதற்க்கும் தகுதியான நபர் இல்லை என்பதை சுட்டிக்காட்டவே இந்த கட்டுரை. மற்றப்படி அவர் கனவுக்கு நாம் குறுக்கே நிற்கவில்லை. அவரது கனவு அவரது உரிமை. ஆனால் அதை மக்களை முன் வைத்து கான்பது தான் தவறு என்கிறோம். 

வியாழன், மார்ச் 14, 2013

ஈழம் - துரோகம் - வெளியுறவுக்கொள்கை.


ஈழத்துக்காக திமுக எதுவும்மே செய்யவில்லையா?, வை.கோ, நெடுமாறன், சீமான், தமிழ்தேசியவாதிகள், புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் குற்றம் சாட்டுவது போல திமுக ஈழ துரோக கட்சியா?, டெசோ நடத்துவது நாடகாமா?, இலங்கையில் போர் நடத்தியது இந்தியா என்றால் எதனால் ?, போரில் இலங்கை வெற்றி பெற்றது எப்படி ?, போர் குற்றவாளியான இலங்கைக்கு இந்தியா உட்பட மற்ற நாடுகள் ஆதரவு தருவது ஏன் ஏன் என இப்படி பல கேள்விகள் உள்ளன. அதற்கான விடையாக இந்த கட்டுரை இருக்கும் என்ற நம்பிக்கையில் எழுதப்படும் கட்டுரையிது.

ஈழ விவகாரம் இன்று நேற்று தொடங்கியதல்ல. சுமார் 100 ஆண்டுகளாக நடக்கும் போராட்டம். 1980க்கு பின் ஈழப்போராட்டம் உச்சத்துக்கு வருவதற்க்கு முன்பே ஈழ விவகாரத்தில் திக, திமுக போன்றவை கவனம் செலுத்தியிருந்தன. போராட்டங்கள் நடத்தியிருந்தன. விடுதலைப்புலிகளுக்கு தமிழகத்தில் அடித்தளம் அமைத்து தந்தவர்களே திமுகவினரும், திராவிட கழகத்தினரும் தான். அதன்பின் தான் நெடுமாறன் உட்பட மற்றவர்கள். 83க்கு ஜீலை கலவரத்துக்கு பின் ஈழ விவகாரம் இந்திய – தமிழக அரசியல் சூழலில் சிக்கியது. 1990 வரை ஈழப்போராட்டத்துக்கு தமிழக மக்கள் பெருமளவில் ஆதரவு தந்தார்கள். வட இந்திய தலைவர்களும் அது தமிழ் இனத்துக்கான போராட்;டம் என்பதில் உறுதியான ஆதரவு தந்தனர். காரணம் அப்போது தொடங்கப்பட்ட டெசோ. காலப்போக்கில் நிலைமை மாறியது.

விடுதலைப்புலிகளுக்கு ஆதரவு என்ற காரணத்தை காட்டி திமுக ஆட்சி கலைக்கப்பட்டது.  அடுத்த சில மாதங்களில் தமிழகத்தில் நடந்த இராஜிவ்காந்தி படுகொலையில் திமுக மீதே எல்லா பழியும் சுமத்தப்பட்டன. மக்களும் அதை நம்பி படு தோல்வியை தந்தனர். திமுக இனி இல்லை என்ற நிலையை எதிரிகள் உருவாக்கினார்கள். அதிலிருந்து மீண்ட கழகம் ஈழ விவகாரத்தில் தன் நிலைப்பாடுகளை மாற்றிக்கொண்டது. 2006ல் விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் பிரிகேடியர் தமிழ்செல்வன் சிங்கள இராணுவ குண்டுவீச்சில் கொல்லப்பட்டார். அப்போது முதல்வராக இருந்த கலைஞர் விடுத்த இறங்கல் அறிக்கையை பார்த்து கொதித்துப்போய் காங்கிரஸ்சும், அதிமுகசும் திமுக ஆட்சியை கலைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தன. அப்போது எந்த ஈழ ஆதரவு இயக்கங்களும் கலைஞர்க்கு முட்டு கொடுக்கவில்லை.

2008ல் ஈழத்தில் போர் உச்சத்தில் இருந்தபோதும், 2009ல் தமிழினத்தை சிங்களம் அழித்தபோதும் ஆட்சி அதிகாரத்தில் உள்ள ஒரு கட்சி என்ன செய்ய முடியும்மோ அதை செய்தது. இருந்தும் திமுக நினைத்தால் போரை நிறுத்தியிருக்கலாம், மத்திய அரசின் ஆட்சியை கவிழ்த்து இருக்கலாம் என நெடுமாறன், வை.கோ, சீமான் போன்றவர்கள் பேசினார்கள். 2009 பாராளமன்ற தேர்தல் முடிவு ஈழப்பிரச்சனை ஓட்டாகாது என்பதை உணர்ந்து கலைஞர் பாரமுகமாவே இருந்தார்.

2011 சட்டமன்ற தேர்தலின் போது திமுகவே ஈழமக்கள் கொல்லப்பட காரணம் என பேசியும், எழுதினர். இலை மலர்ந்தால் ஈழம் மலரும் என பேசினர். திமுகவின் படு தோல்விக்கு அதுவும் ஒரு காரணமானது. தோல்விக்கு பின்னும் வை.கோ, நெடுமாறன், சீமான், தமிழ்தேசியவாதிகள் தங்களது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளவில்லை. அதிமுக எதுவும் செய்யவில்லை என்றாலும் அதை விமர்ச்சிக்கவில்லை. திமுகவையே குற்றம் சாட்டினர். மக்களிடம்மிருந்து குறிப்பாக இளைய சமுதாயத்திடம்மிருந்து தங்களை அந்நியப்படுத்த முயல்கிறார்கள் என்பதை உணர்ந்தே திமுக தங்களது ஈழ நிலைப்பாட்டில் இருந்து இறங்கி வந்தது. மீண்டும் ஒரு வலிமையான போராட்ட களத்துக்கு தன்னை தயார் படுத்திக்கொண்டது.

திமுகவை மீண்டும் ஈழத்தமிழர்கள் மீது கரிசணை கொள்ள வைக்க நிச்சயம் 20 ஆண்டுகள் தேவைப்பட்டுள்ளது இதற்கு இங்குள்ள சில ஈழ ஆதரவு அமைப்புகளே காரணம்.

திமுக மீண்டும் டெசோவை உயிர்பித்தது. திமுக தலைவர் கலைஞர், திராவிட கழக தலைவர் வீரமணி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், பேரா.சுப.வீரபாண்டியன் உறுப்பினராக்கி ஈழ விவகாரத்தில் அடுத்து என்ன செய்வது என ஆலோசித்தனர். டெசோ சார்பில் தொடர்ந்து  போராட்டங்களை முன்னெடுப்பது என முடிவு செய்தனர். போராட்டங்களை நடத்த தொடங்கினர். பிற நாட்டு தூதரகங்களுக்கு சென்று ஈழப்பிரச்சனையில் ஈழ மக்களுக்கு ஆதரவாக அந்த நாடுகள் செயல்பட வேண்டும் என கேட்டு கோரிக்கை மனு தருவது, ஐ.நா அவைக்கு சென்று அதன் பிரதிநிதிகளிடம் மனு தருவது என தங்களது முதல் கட்ட பணியை தொடங்கினர்.

இந்திய ஒன்றியத்தின் நாடாளமன்றத்தில் பெரும் கட்சிகளான பி.ஜே.பி, கம்யூனிஸ்ட்டுகள், சமாஜ்வாதி, திரிணாமுல் காங்கிரஸ், சிவசேனா உட்பட எல்லா கட்சிகளும் காங்கிரஸ் அரசாங்கத்தை கேள்வி கேட்டும், இலங்கையை தண்டிக்க வேண்டும் என்றும், இந்தியாவின் வெளியுறவுக்கொள்கையை மாற்ற வேண்டும் என உறுதியான குரலில் பேசின, தொடர்ந்து குரல் கொடுக்க தொடங்கியுள்ளன. ஈழ மக்கள் பிரச்சனை நாடாளமன்றத்தில் ஒரு நீண்ட விவாதத்தை உருவாக்கியுள்ளது. இதற்கு காரணம் டெசோ அல்லது திமுக என குறிப்பிட்டால் அது மிகையில்லை.

இந்த நேரத்தில் சேனல் 4, விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் மகன் பாலச்சந்திரன் மகன் கொல்லப்பட்ட படங்கள், போர்குற்ற ஆவணப்படம் போன்றவைகளை வெளியிட்டன. அதனையும் கையில் எடுத்துக்கொண்டது. டெசோ அமைப்பின் சார்பில் இலங்கை தூதரகம் முற்றுகையிடப்பட்டது. இலங்கையின் போர் குற்றத்தை விசாரிக்க வேண்டும்மென அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என தமிழக கட்சிகள் அனைத்தும் குரல் கொடுத்தன.

இந்திய ஒன்றியத்தின் நாடாளமன்றத்தில் அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை ஆதரியுங்கள் என திமுக எம்.பிக்கள் டி.ஆர்.பாலு, திருச்சி.சிவா, திருமாவளவன் போன்றோர் பேசிய பேச்சு மனித நேயம் உள்ள மனிதர்களின் மனதை நிச்சயம் உருக்கியிருக்கும். தப்பை மறைக்காதீர்கள் என கேட்டுக்கொண்டார்கள். இதில் அதிமுக, மதிமுகவின் பேச்சையும் குறைத்து மதிப்பிட முடியாது. இந்திய ஒன்றியத்தின் தலைநகரம் டெல்லியில் டெசோ அமைப்பு கூட்டம் நடத்தி பிற மாநில கட்சியினரை வரவைத்து ஈழத்தமிழர்களுக்காக நாங்கள் இருக்கிறோம், தமிழ் மக்கள் இருக்கிறார்கள் என காட்டியது. கூட்டத்தில் போர்குற்ற ஆவண வீடியோவை போட்டு காட்டியது. வை.கோ, நெடுமாறனால் சாதிக்க முடியாததை டெசோ சாதித்தது.

ஆளும்கட்சியான திமுக நினைத்திருந்தால் போர் நின்றுயிருக்கும்மா ?.


2009 போர் காலத்தில் மேற்குலக நாடுகளில் வாழும் ஈழ தமிழர்கள் இன அழிப்பை தடுக்ககோரி பெரும் போராட்டங்கள் நடந்தின. இந்தியாவில் தமிழகத்தை தவிர்த்து வேறு எங்கும் போராட்டம் நடக்கவில்லை. அந்த எழுச்சியையும் இந்திய – தமிழக உளவு பிரிவுகள் நசுக்க செய்தன. ஒரு கட்டத்துக்கு மேல் சில நெருக்கடிகள், சில தூதுக்களால் ஈழத்தமிழர் விவகாரத்தில் முதல்வராக இருந்த கலைஞர் இறங்க முயன்றபோது, கருணாநிதி விடுதலைப்புலிகளை காப்பாற்ற முயல்கிறார், ஆளும்கட்சி போராட்டம் நடத்தகூடாது என ஜெ எதிர்த்தார். அதேபோல் கலைஞரை சந்தித்த காங்கிரஸ் மைய அரசின் மூத்த அமைச்சர்கள், இராஜதந்திரிகள், சர்வதேச பிரச்சனைகள், பிற நாடுகளின் உதவிகள் பற்றி பட்டியல் போட்டு இந்தியா இல்லையென்றாலும் இலங்கை போர் நடத்தும், இலங்கையோடு இந்தியா முரண்பட முடியாது அதில் பல வெளியுறவு சிக்கல்கள் உள்ளன என விவரித்ததை நீண்ட அரசியல் அனுபவம் உள்ள கலைஞரால் புரிந்துக்கொள்ள முடிந்தது. (வெளியுறவு விவகாரம் பற்றி புரிந்துக்கொள்ள நிச்சயம் பன்னாட்டு அரசியல், பொருளாதாரம் அறிந்திருக்க வேண்டும்). இது வை.கோ, நெடுமாறன் போன்றவர்களுக்கு தெரியும். இருந்தும் அவர்கள் காங்கிரஸ்சை விட திமுக மீது குற்றச்சாட்டு வைக்க காரணம் பேட்டை அரசியல்க்காக.

அதிகாரத்தில் இருந்தால் என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும் என்ற தப்பான அபிப்பராயத்தில் உள்ளனர் மக்கள். அது அவர்கள் மீதான குற்றமல்ல. அறியாமை. ஆனால் அந்த அறியாமையை பயன்படுத்தி திமுக மீது குற்றச்சாட்டை சில குட்டி அரசியல் கட்சிகள் வைக்க உணர்ச்சி பூர்வமான அந்த குற்றச்சாட்டை மக்கள் நம்பினர். இலங்கைக்கு எல்லா உதவிகளையும் செய்து போரை நடத்திய இந்தியா நினைத்திருந்தால் போரை நிறுத்தியிருக்கலாம், காங்கிரஸ்சோடு திமுக துணை நின்றது. திமுக தான் போரை நடத்தியது என விதவிதமான குற்றச்சாட்டுகள் சொல்லப்பட்டே வருகின்றன. அவர்களுக்கு வெளியுறவு கொள்கைகளை பற்றி தெரியவில்லை என்பதே அர்த்தம்.

மாநிலத்தை ஆளும் பொறுப்புகளில் உள்ளவர்களால் திமுக என்றள்ள தீவிர ஈழ ஆதரவளரான நெடுமாறன் முதல்வராக, மைய அரசில் கூட்டணி அமைச்சரவையில் இருந்தாலும் இலங்கை விவகாரத்தில் இந்தியா தமிழ் மக்களுக்கு ஆதரவான முடிவு எடுக்க வேண்டும் என நிர்பந்திக்கலாமே தவிர உத்தரவிட முடியாது. மைய அரசின் அனுமதியில்லாமல் ஒரு மாநில முதல்வரோ, மைய அமைச்சரோ பிற நாடுகளில் சென்று ஈழத்துக்கு ஆதரவும் திரட்ட முடியாது. உதவவும் முடியாது. மாநில முதல்வர்களால் இராணுவம், வெளியுறவுத்துறை போன்ற சில முக்கிய அமைச்சுகளில் ஆதிக்கம் செலுத்த முடியாது. அது மைய அரசுகளின் கட்டுப்பாட்டில் இருப்பது. மீறி தலையிட்டால் மாநிலங்களின் ஆட்சிக்கே ஆபத்தை கொண்டு வரும். ஒவ்வொரு நாட்டுடனும் எப்படி உறவு வைத்திருக்க வேண்டும் என்பதை முடிவு செய்ய உயர் மட்ட அந்தஸ்திலான பொருளாதார, பாதுகாப்பு, வெளியுறவு, அரசியல் துறையை சேர்ந்த குழுவை அரசு  வைத்துள்ளது. இராஜதந்திரிகள் எனப்படும் இவர்கள் பிறநாடுகளுடன் தன் நாட்டுக்கு உள்ள பொருளாதார, இராணுவ, அரசியல் நட்புகளை கொண்டே முடிவு எடுத்து கொள்கைகளை வகுப்பார்கள். அதன்படி நடப்பார்கள். மாநில அரசுகளின், மக்களின் நெருக்கடி பெரும்பாலும் அதில் எடுபடாது.


அயலுறவுக்கொள்கை.


நேரு கொண்டு வந்தது அணி சேராக்கொள்கை. அதில் முக்கியமானது, பிற நாட்டு உள்விவகாரங்களில் தலையிடுவதில்லை என்பதும் அடக்கம். பாகிஸ்தான் - வங்கதேச பிரச்சனையில் பிரதமராக இருந்த இந்திரா தலையிட்ட பின் அது காற்றில் பறக்கவிடப்பட்டது. அதன்பின், இந்தியா இலங்கை விவகாரத்தில் தலையிட்டது. அதற்கு காரணம், பழா.நெடுமாறன், ஈழ தமிழர்கள் நினைப்பது போல் இலங்கையை உடைத்து ஈழத்தை ஏற்படுத்தி தருவதற்காக அல்ல. அன்றைய நிலையில் உலகம் அமெரிக்கா, ரஷ்யா என்ற இரண்டு நாடுகளின் வல்லாதிக்க போட்டியில் சிக்கியிருந்தது. இந்தியாவை சுற்றியுள்ள சீனா, பாகிஸ்தான், வங்கதேசம் போன்றவையும் அமெரிக்க ஆதரவு நிலை எடுத்துயிருந்தன. குட்டி நாடான இலங்கையும் அமெரிக்கா ஆதரவு நிலை எடுத்துயிருந்தது. இலங்கையில் அமெரிக்க இராணுவம் தளம் அமைக்க இடம் கொடுக்க சம்மதித்துயிருந்தது. அப்படி நடந்தால் இந்தியாவின் பாதுகாப்பு கேள்வி குறியாகும் என எண்ணி இலங்கையை மிரட்ட இராஜதந்திர, உளவு அமைப்புகளை பயன்படுத்தினார் இந்திரா. போராளிகளை ஊக்குவித்தார், அரசியலில் குழப்பத்தை ஏற்படுத்தி வெற்றியும் பெற்றார். இந்திராவுக்கு ஈழம் அமைத்து தருவதில் ஆர்வம் இல்லை என்பதே இந்திய இராஜதந்திரிகள் மற்றும் உளவுதுறைகளின் குறிப்பு.

பிரதமர் இந்திரா படுகொலை, ரஷ்யா சிதைவு, இந்தியாவின் அமெரிக்க பாசம் போன்றவை இராஜதந்திரத்தில் ஓட்டை விழுந்தது. அதே நேரத்தில் அடுத்த பிரதமராக வந்த இராஜிவ் வெளிவிவகாரத்தில் சொதப்ப ஈழப்பிரச்சனை பெரும் சிக்கலை சந்தித்தது. இராஜிவ் படுகொலையை விடுதலைப்புலிகள் செய்தார்கள் என முடிவு எடுக்கப்பட்டு ஈழ விவகாரத்தில் இந்திய ஆட்சியாளர்கள் உளவுத்துறையை முடுக்கிவிட்டார்கள். ஈழ கனவையே சிதைப்பதையே நோக்கமாக கொண்டு நீண்ட கால செயல்திட்டத்தில் செயல்பட்டார்கள் உளவு அமைப்பினர். வாய்ப்புகளும் உளவு அமைப்புகளுக்கு தாராளமாக இருந்தது.

உளவு நிறுவனங்களின் விளையாட்டு.


இராஜிவ் கொலையால் தமிழகத்தில் படுமோசமான ஆதரவு வீழ்ச்சியை சந்தித்தார்கள் புலிகள். ‘அதிக’ ஆதரவு தந்த எம்.ஜீ.ஆர் இறந்து போயிருந்தார், புலிகளை ஜென்ம விரோதியாக பார்க்கும் அதிமுக தலைவியாக, முதல்வராக ஜெ இருந்தது வீழ்ச்சியிலும் வீழ்ச்சி. தமிழகத்தில் ( இந்தியாவில் ) புலிகளுக்கு தடை. திமுகவின் ஆதரவு இழப்பு, மக்கள் ஆதரவு இல்லாமை போன்றவை அரசியல் ரீதியாக ஒரு வெற்றிடத்தை புலிகளுக்கு ஏற்படுத்தியது. அந்த வெற்றிடத்தை நிரப்ப முடியாதபடி செய்தார்கள் உளவு அமைப்பினர். வை.கோபால்சாமியை திமுகவில் இருந்து பிரித்தது, ஈழ ஆதரவு அமைப்புகளை உடைத்தது என உள்நாட்டில் செய்தது. வெளிநாடுகளில் புலம் பெயர் தமிழர் அமைப்புகளை உடைத்தனர்.

அதன்பின் அவர்கள் பார்வை ஈழ களத்துக்கு மாறியது. அதேநேரத்தில் தாயகத்தில் தமிழர் பகுதியில் பெரும் நிலப்பரப்பில் ஆட்சி செய்தனர் விடுதலைப்புலிகள். வெளிநாட்டு இராஜத்திர வட்டாரங்களில் புலம் பெயர் ஈழத்தமிழர்கள், ஆன்டன்பாலசிங்கம், தமிழ்செல்வன் போன்றவர்கள் வைத்திருந்த உறவு அவர்களை கம்பீரமாக இருக்க வைத்தது. விடுதலைப்புலிகள் அமைப்பை உடைக்கும் முயற்சியை இந்திய - இலங்கை புலனாய்வு அமைப்புகள் திட்டமிட்டு செய்தது. கிழக்கு மாகாண தளபதியாக இருந்த கருணாவை பிரித்தனர். அவனை கேரளாவில் தங்க வைத்திருந்தார்கள். ( அப்போது மத்தியில் மாநிலத்தில் யார் ஆட்சி என்பதை வை.கோ, நெடுமாறனிடம் கேட்டு தெரிந்துக்கொள்ளுங்கள். ) இயக்கத்தில் தன் உளவு அமைப்பினர் புகுந்துயிருந்தனர்.

1997ல் விடுதலைப்புலிகள் இயக்கத்தை உலக பயங்கரவாதிகள் பட்டியலில் இணைத்தது அமெரிக்கா. அதன் பின்னணியில் இருந்து இந்தியா. 2000 த்தில் அமெரிக்காவின் இரட்டை கோபுர தகர்ப்புக்கு பின் இனத்துக்காக போராடும் போராளிகளையும் தீவிரவாத பட்டியலில் சேர்த்தது அமெரிக்கா. ஏற்கனவே அந்த பட்டியலில் இருந்த புலிகள் அமைப்பை தீவிரமாக கண்காணித்து அழிக்க துணை போனது. இதில் இந்திய இராஜதந்திரம் அதிகம் உதவின. இலங்கை அதிபராக இருந்த ரனில்விக்ரமசிங்கே, உலக நாடுகளின் வெளிவிவகாரத்துறை அமைச்சர்களிடம், விடுதலைப்புலிகள் தீவிரவாத அமைப்பு என்ற பிரச்சாரத்தை செய்தார். இந்தியா மற்றும் அமெரிக்காவின் தடை உத்தரவுகளை காரணம் காட்டி பிற நாடுகளுடன் பேச ஒவ்வொரு நாடும் விடுதலைப்புலிகளை கறுப்பு பட்டியலில் சேர்த்து தடை செய்தது.

உலக நாடுகளின் தடை, அமைப்பை உடைத்தது போன்றவற்றால் அதிர்ச்சியாகி இரண்டாவது முறையாக ரனில் அதிபர் தேர்தலில் போட்டியிட்டபோது, எதிர் வேட்பாளராக நின்ற இராஜபக்சே மனித உரிமை ஆர்வலர் என முடிவு செய்து புலிகள் தேர்தலில் இராஜபக்சேவை ஆதரித்தனர். ஆனால் அவனே கொத்து குண்டுகளோடு வருவான் என எதிர்பார்க்கவில்லை. விடுதலைப்புலிகளுக்கு எதிராக இராஜபக்சே போர் தொடுத்தபோது உலக நாடுகளின் ஆதரவை பெற வேண்டிய முக்கிய பொறுப்பில் இருந்த தமிழ்செல்வன், ஆன்டன்பாலசிங்கம் போன்றோர் அடுத்தடுத்து இறந்தது புலிகளை பலவீனமடைய செய்தது.

பல நாடுகளின் உளவுத்துறைகள் இந்தியா வழியாக இலங்கைக்கு உதவின. உலக வல்லரசுகளான அமெரிக்கா, சீனா, ரஷ்யா, ஜப்பான் மற்றும் இந்தியா, க்யூபா, பாகிஸ்தான் போன்ற நாடுகளின் ஆயுதங்களோடும், ஆதரவோடும் விடுதலைப்புலிகள் மீது போர் தொடுத்தனர். இங்கு ஒன்றை தெளிவாக புரிந்துக்கொள்ள வேண்டும் இந்தியா இதில் தலையிடாமல் இருந்தாலும் போர் நடந்திருக்கும். காரணம் இந்தியாவை தவிர்த்து வேறு ரூட்டிலும் வெளியுறவு உறவை வளர்த்துக்கொண்டது இலங்கை. சீனா அதற்கு பெரும் உதவியாக இருந்தது.

போர் முடிந்தபின் உதவிக்கு பிரிதிபலன் ஒவ்வொரு நாடும் எதிர்பார்க்கும் அதன்படி இலங்கையில் அதிக உதவி செய்த சீனா பெரும் வேலைகளை செய்கிறது. அடுத்து ஜப்பான், ரஷ்யாவும் செய்கிறது, இந்தியாவும் சில பணிகளை செய்கிறது. அமெரிக்கா தன் பங்குக்கு கேட்கிறது அதன் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாததாலும், சீனாவுக்கு அதிக முக்கியத்துவம் தருவதால் இலங்கையை ஐ.நா சபை மூலம் மிரட்ட தொடங்கியுள்ளது அமெரிக்கா. நுணுக்கமாக பார்த்தால் இதன் பின்னால் உள்ள அரசியல் தெரியும்.


இந்தியாவின் பயம் இலங்கை மட்டுமல்ல….


ஈழத்தை ஒருபோதும் இந்திய ஆட்சி அதிகார மையத்தினர் ஆதரிக்கமாட்டார்கள்.  அதற்கு காரணம், தமிழகம் பிரிந்து போகும் என்ற ஐயம்மில்லை. ஈழம் தனிநாடாக்க சர்வதேச அரங்கில் இந்தியா முயற்சித்தால் காஷ்மீரை தனி நாடாக்க பாகிஸ்தான் முயலும், அருணாச்சல பிரதேசத்தை தனிநாடாக்க சீனா முயலும், இந்த வரிசையில், பஞ்சாப், அசாம், சிக்கிம், நாகாலந்து மாநிலங்களில் நடக்கும் தனிநாடு கோரிக்கை அதிகமாகும். இங்குள்ள பல குழுக்கள் தனிநாட்டுக்காக பல ஆண்டுகளாக ஆயுதம் ஏந்தியும், அரசியல் ரீதியாகவும் போராடி வருகின்றன. அதற்கு உதவ சீனா, அமெரிக்கா, பாகிஸ்தான், ரஷ்யா போன்ற தேசங்கள் தயாராக உள்ளன.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் இலங்கையை பிரிக்க வேறு நாடு முயன்று இந்தியா ஆதரித்தாலும் பிரச்சனை. இந்தியாவில் இருந்து பிரிந்து தனிநாடாக முயலும் முயற்சிக்கும் இந்தியா ஆதரவு தெரிவிக்க வேண்டிய கட்டயாத்துக்கு ஆளாகும். இதுபோன்ற பிரச்சனைகளால் இந்தியா ஈழத்தை நிச்சயமாக ஆதரிக்காது. இது தமிழக அரசியல் தலைவர்கள் அனைவரும் அறிந்ததே.

20 ஆண்டுகளில் இந்தியா சின்னாபின்னமாகிவிடும் என ஒரிரு ஆண்டுகளுக்கு முன் ஒரு அறிக்கை தயாரித்தது சீனா. அதற்கு வழி ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளது இந்திய அரசு.

தமிழகத்தில்………

தமிழகத்தில் அரசியலுக்காக ஈழம் பயன்படுகிறது. 1990களுக்கு பின் பிறந்தவர்களே இன்றைய இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள் இவர்களுக்கு ஈழ விவகாரம் பற்றி நிச்சயம் 90 சதவிதம் தெரியவில்லை. அவர்களுக்கு தெரிந்து 2009 போர் களமும், இழப்பும் தான். 2009ல் மவுனமாக இருந்த திமுக இவர்களுக்கு துரோகியாக தெரிகிறது. ஈழத்தை வைத்து அரசியல் பேசிய வை.கோ, நெடுமாறன், சீமான் போன்றோர் நம்பகமானவர்களாக தெரிகிறார்கள். ஜெ ஈழத்தை காக்க வந்த ரட்சகராக்க பார்க்கிறார்கள். பழைய வரலாறு அவர்களுக்கு தெரியாது என்பதே இது சாட்சி.

காங்கிரஸ் போனால் பி.ஜே.பி வரும் அவர்கள் ஈழம் அமைத்து தருவார்கள் என்கிறார்கள். 2004வரை பி.ஜே.பி ஈழத்துக்கு எதிராக இலங்கைக்கு செய்த உதவிகள் பற்றி முன்னால் பிரதமர் வாஜ்பாயின் நண்பரான வை.கோவுக்கு நன்கு தெரியும்.

2009ல் போராடியதைப்போல இப்போதும் சாலைக்கு வந்து போராடுகிறார்கள், உண்ணாவிரதம் இருக்கிறார்கள். ஆனால், எதுக்காக போராடுகிறோம். இது எவ்வளவு பெரிய இனப்போராட்டம் என்பது அவர்களுக்கு தெரியவில்லை. விளம்பரத்துக்காக நடக்கும் போராட்டங்களாக நடத்தப்படுகின்றன.

அயல் தேசங்களின் பார்வை. 

அமெரிக்கா, நியூசிலாந்து, ஐரோப்பிய நாடுகள் போன்ற பல நாடுகளில் வாழும் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் இராஜதந்திர ரீதியான முயற்சியில் ஈடுபடுகிறார்கள். அதனால் தான் போராட்டங்கள், இராஜதந்திரம் மூலம் தன் இனம் அழிக்கப்பட்டு, அடிமைப்பட்டு வாழ்வதை ஒவ்வொரு நாட்டின் இராஜதந்திரிகளுக்கும் தெரியப்படுத்துகிறார்கள். எங்களுக்கு தனி நாடு வேண்டும் என கேட்கிறார்கள், உரிமை கேட்கிறார்கள், சுதந்திரமாக வாழ ஆசைப்படுவதை கேட்கிறார்கள். அது நடக்க நிச்சயம் நீண்ட நாட்களாகும் என அவர்களுக்கு தெரியும் இருந்தும் முயற்சியை தொடங்கியுள்ளார்கள்.

போர் குற்றம் தொடர்பாக ஐ.நாவில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம்மே இலங்கைக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது. எந்த சர்வதேச நாடும் தமிழ் மக்களுக்கு உதவவில்லை. இருந்தும் இந்த தீர்மானத்தை ஆதரிக்க காரணம் படிப்படியாக எமக்கான நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தான் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அறிவித்துள்ளது.

தாங்கள் போய் உதவி கேட்கும் நாடுகள் எல்லாம் இந்தியாவின் நண்பர்கள், இலங்கை சிங்கள அரசு தன் இனத்தை அழித்தபோது அவர்களுக்கு ஆதரவும், ஆயுதமும், பாதுகாப்பும் தந்தவர்கள் என்பதை நன்கிறந்தவர்கள் இருந்தும் அவர்கள் அந்நாடுகளோடு உறவாட காரணம் தங்களது இராஜதந்திர கொள்கை மூலம் அவர்களை மாற்ற முடியும் என்ற நம்பிக்கையில் தான்.

அவர்கள் உலகத்தை நன்கறிந்து வைத்துள்ளார்கள். உலகத்தின் ஒவ்வொரு நாடும் சுயநலமாகவே சிந்திக்கின்றன. பிற நாட்டுடன் உறவுக்கொண்டால் தனக்கு அதனால் என்ன லாபம் என யோசிக்கின்றன. பிற நாட்டு மக்களுக்காக எந்த நாட்டின் அதிகாரமும் சிந்திப்பதில்லை, உதவுவதில்லை. பிற நாட்டு மக்களுக்காக யோசிப்பது சக மக்கள் தானே தவிர வேறுயாரும்மில்லை.

சனி, மார்ச் 09, 2013

அடங்காத அமீர்.



தன்னை தவிர தமிழ் சினிமாவில் அறிவுடையவர்கள் இல்லை என்ற எண்ணத்தில் இயக்குநர் அமீர் உள்ளார் போல. பாலாவிடம் உதவி இயக்குநராக இருந்தவர் பின் மௌனம் பேசியதே என்ற படத்தை இயக்கினார் அமீர். அதன்பின் ராம், பருத்திவீரன் படம் எடுத்தபோது திரும்பி பார்க்க வைக்கப்பட்டார். 

ஈழ போரின்போது சீமானுடன் சேர்ந்து தன்னை ஈழ போராளியாக காட்டிக்கொண்டார். ஒரு சில நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டபோது இனிமேல் ஈழம் பற்றி பேசமாட்டேன் என வாக்குறுதி தந்து வெளியே வந்தவர். அதன்பின் தமிழ் ஈழம் என்றதும் பதுங்கிக்கொள்ள தொடங்கினார். திரைப்பட இயக்குநர் சங்கத்தில் ஈழ ஆதரவாளராக காட்டிக்கொண்டு செயலாளர் பதவிக்கு வந்தார். 

நடிகர் கமல்ஹாசனின், விஸ்வரூபத்துக்கு சில இஸ்லாமிய இயக்கங்கள், அரசு தடை ஏற்படுத்தியபோது இயக்குநர் சங்க செயலாளராக கருத்து சொல்ல தயங்கிய இந்த கருத்து கந்தசாமி, மிக தாமதமாக படம் வெளிவந்தப்பின் முதல் ஆளாக போய் படம் பார்த்துவிட்டு என் கருத்தை சொல்கிறேன் என வெண்டைக்காய் அறிக்கை வெளியிட்டார். விஸ்வரூம் படம் வெளியாகி பல பகுதிகளில் திரையரங்கை விட்டும் போய்விட்டது. இப்போது வந்து விஸ்பரூபம் இஸ்லாமியர்களை பற்றி பேசவில்லை. தாலிபான்களை பற்றி பேசுகிறது. தாலிபான்கள் தங்கள் நாட்டின் சுய உரிமைக்காக போராடுகிறார்கள். விடுதலைப்புலிகளைப்போல என மாபெரும் விஞ்ஞானியாக அறிக்கை விட்டுள்ளார். 

இப்போது எதற்கு இந்த அறிக்கை ?. 

விஸ்வரூபத்துக்கு சில இஸ்லாமிய இயக்கங்களால் சிக்கல் வந்தபோது இஸ்லாமியரான அமீர் இயக்குநர் சங்க செயலாளராக அறிக்கை விடவில்லை. முதல்வர்க்கு பயந்தும், தன் மதத்துக்கு ஆதரவாக அடங்கிகிடந்தார். ரொம்ப நெருக்கடிக்கு பின் தாமதமாக எதிர்ப்பு அறிக்கை அவரிடம்மிருந்து ஈனஸ்வரத்தல் வந்தது. இதில் வெறுப்பான சில இந்து அமைப்புகள் அமீர்க்கு குடைச்சல் தர தயாரானாயினர். அவர்களும் திரைபடத்தையே கையில் எடுத்தனர். ஒரு இஸ்லாமியர் (அமீர்) எப்படி இந்து கடவுள் ( ஆதிபகவான் ) பெயரை வைக்கலாம் என பிரச்சனை செய்து போலிஸில் புகார் தந்தனர். பஞ்சாயத்து முடிந்து படம் திரைக்கு வந்தது, 

ஒரு சிலரை திருப்திபடுத்த என் படத்துக்கு ஏ சான்றிதழ் தந்துவிட்டார்கள் இது அநியாயம் என குதித்தார். படம் படுதோல்வி. படத்தை ஓட வைக்க திரைப்பட தணிக்கை குழு மாஃபியா கும்பல் என சாடினார். அதில் ஒரு உறுப்பினர் அமீர் மீது புகார் தந்துள்ளார். ஏதாவது ஒன்றை செய்து பிரச்சனை செய்து பிரபலமாகி அதன்வழியில் படத்தை ஓட வைக்கவும், தன்னை நிலை நிறுத்திக்கொள்ளவும் முயல்கிறார். 

இந்நிலையில் தான் விஸ்பரூம் படம் பார்த்துவிட்டு கருத்து சொல்கிறேன் போர்வழி என தாலிபான்களையும் - விடுதலைப்புலிகளையும் ஒரே தராசில் வைத்து அளவிட்டு அறிக்கை விடுகிறார்.  


அமீர் அவர்களே, 

முற்போக்கு தனமாக பேசிய பெண்களை, இளம்பெண்களை விடுதலைப்புலிகள் எத்தனை பேரை கொன்றுள்ளார்கள் என பதில் தர முடியும்மா ?.

விடுதலைப்புலிகள் அப்பாவி மக்களை குறிவைத்து எத்தனை வெடிகுண்டுகளை வெடிக்க வைத்துள்ளார்கள் என பட்டியல் தர முடியுமா ?.

விடுதலைப்புலிகள் எங்கேயாவது பிற்போக்கு தனமாக நடந்துக்கொண்டுள்ளார்கள் என சொல்ல முடியும்மா ?.

விடுதலைப்புலிகள் பெண் கல்வியை, உரிமையை மறுத்துள்ளார்கள் என குற்றம் சாட்ட முடியும்மா ?.

விடுதலைப்புலிகள் தங்களது தேசத்தில் சம உரிமைக்காக, நல் வாழ்வுக்காக பெரும்பான்மை சமூகத்தை சேர்ந்த அரசியல்வாதிகளை எதிர்த்து போராடுகிறார்கள். 

விடுதலைப்புலிகள் மதத்துக்காக, மத வெறியை முன் வைத்து போராடவில்லை. 

தாலிபான்கள் யாரை எதிர்த்து போராடுகிறார்கள், எதற்காக தாலிபான்கள், பெண்கள் என்பவர்கள் தாலிபான்கள் பார்வையில் எப்படி பட்டவர்கள் என சொல்லுங்கள். இப்படி எத்தனையோ கேள்விகளை கேட்க முடியும். 

விடுதலைப்புலிகளையும் - தாலிபான்களையும் ஒரே தராசில் வைப்பதில் இருந்து தெரிகிறது அமீரின் அரசியல், சமூக அறிவு. 

வியாழன், மார்ச் 07, 2013

போராளியாகவே வாழ்ந்து மறைந்த சாவேஸ்.



லத்தின் அமெரிக்கா நாடுகளில் ஒன்றான வெனிசுலாவின் அதிபர் சாவேஸ்.  1954ல் வெனிசுலாவில் உள்ள பாரினாசு என்ற இடத்தில் சாதாரண குடும்பத்தில் பிறந்தவர். சிறு வயது முதலே அமெரிக்க எதிர்ப்புணர்வை மனதில் கொண்டவர். 

இராணுவ கல்லூரியில் சேர்ந்து படித்தவர் அங்கேயே இராணுவ அதிகாரியாக 1975ல் பணியில் சேர்ந்தார். பணியில் இருக்கும்போதே வெனிசுலா அரசு அமெரிக்காவின் அடிவருடியாக இருப்பதை பொறுத்துக்கொள்ள முடியாமல் வெனிசுலா மக்கள் விடுதலை இராணுவம் என்ற ரகசிய இயக்கத்தை தொடங்கினார். கி.பி 18, 19 ஆம் நூற்றாண்டுகளில் வெனிசுலாவில் வாழ்ந்த ஈக்குவல் ஜமேரா, சிமோன் பொலிவர், சிமோன் ரோட்கிரிஸ் என்ற மூன்று வரலாற்று வீரர்களின் வாழ்க்கை, போராட்ட வரலாறுகளால் ஈர்க்கப்பட்டே புரட்சி இயக்கத்தை தொடங்கினார். இராணுவத்தில் அவருக்கு ஆதரவும் கிடைத்தது. 

1992ல் இராணுவத்தில் இருந்தபடி புரட்சி ஏற்பாடு செய்யப்பட்டு ஆரம்பிக்கப்பட்டது. புரட்சி நசுக்கப்பட்டது. இதில் 18 பேர் உயிரிழந்தனர். 60க்கும் மேற்பட்டோர் சிறையில் வாடினர் அதில் சர்வேஸ்சும் ஒருவர். 1992லேயே மற்றொரு புரட்சி முயற்சி நடைபெற்று தோல்வியை தழுவியது. இரண்டாண்டு சிறையில் இருந்த சாவேஸ் சிறையில் உதித்த திட்டப்படி ஒரு அரசியல் கட்சியை தொடங்கினார். 

ஐந்தாம் குடியரசின் இயக்கம் என்ற அரசியல் கட்சியை தொடங்கி இராணுவ தளபதியாக இருந்து அரசியல்வாதியாக மாறினார். மக்கள் இந்த இயக்கத்தை தூக்கி வைத்து கொண்டாடினர். விளைவு 1998ல் அதிபராக வெற்றி பெற்றார். 1998ல் முதல்முறையாக அதிபராக தேர்வு செய்யப்பட்டார். அமெரிக்காவின் கன்னத்தில் அடிப்பதை போன்று அதன் தவறுகளை, கொள்கைகளை வெளிப்படையாக சாடினார். இதனால் இவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டு இரண்டு ஆண்டில் பதவி காலியானது. 

2000ல் நடந்த தேர்தலில் மீண்டும் சாவேஸ்சே அதிபராக தேர்வு செய்யப்பட்டார். அமெரிக்காவின் கண்ணை நீண்ட பல வருடங்களாக உறுத்தும் க்யூபா அதிபர் பிடல்காஸ்ட்ரோவுடன் நட்பு பாராட்டினார். சோசலிசாத்தை தென் அமெரிக்கா நாடுகளில் பரப்ப முயன்றார். இது அமெரிக்காவை ஆத்திரப்படுத்தியது. 

வெனிசுலாவில் கச்சா எண்ணெய் வளம் அதிகம். அதை அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து போன்ற வல்லரசு நாடுகள் அதை சுரண்டிக்கொண்டு இருந்தன. முதலில் இதற்கு தான் தடை விதித்தார். இவைகளால் கோபமான அமெரிக்கா அதிபர் ஜார்ஜ்புஷ், சாவேஸ் கஞ்சா கடத்தல்காரன், தீவிரவாதி என வசைப்பாடினார். 

அதற்கு பதிலடியாக 2006ல் உலக தலைவர்கள் கூடியிருந்த ஐ.நா அவையில் அமெரிக்க அதிபர் புஷ்சை சாத்தான் என்றார் சாவேஸ். உலக சர்வாதிகார நாடாhன அமெரிக்காவின் அதிபரை, நாட்டாமையை சாத்தான் என அழைக்கும் தைரியம் யாருக்கும் வராது. சாவேஸ் அழைத்தார். அமெரிக்க அடிவருடி நாடுகள் இதனை கண்டித்து மன்னிப்பு கேட்க கூறின. அதனை புறந்தள்ளினார். பேசியது பேசியது தான் என்றார். 

2012ல் நான்காவது முறையாக மீண்டும் வெனிசுலா மக்களால் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 13 ஆண்டுகள் வெனிசுலா அதிபராக இருந்தவர் தன்னுடைய சோசலிச கொள்கையை விரிவுப்படுத்தினார்.

அதேநேரத்தில், அவர் உடலில் புற்றுநோய் பரவதொடங்கியது. க்யூபாவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் தனக்கான கேன்சர் கட்டியை அகற்றிக்கொள்ள தொடர்ந்து மூன்று முறை ஆப்ரேஷன் செய்யப்பட்டது. கடந்த பிப்ரவரி மாதம் தான் தகவல் க்யூபாவில் இருந்து வெனிசுலா வந்தார் சாவேஸ். துணை அதிபர் நிக்கோலஸ் மதுரோவ், சாவேஸ் நம்மை விட்டு நாம் யாரும் விரும்பாத இடத்துக்கு சென்றுவிட்டார் என 2013 மார்ச் 5 ந்தேதி அறிவித்தபோது உலக சோசலிசவாதிகள் கண்ணீர் விட்டனர். வெனிசுலா மட்டுமல்ல தென் அமெரிக்காவின் பல நாடுகள் துக்கத்தில் உள்ளன. 

உலகின் பிரபலமான ஆங்கில ஏடுகளான டைம், ஸ்டேட்ஸ்மென் போன்ற பத்திரிக்கைகள் உலகின் மிக முக்கியமான, மக்கள் விரும்பும் தலைவர்கள் 100 பேரில் இவரும் ஒருவர் என அறிவித்தது. 21ஆம் நூற்றாண்டில் சோசலிசவாதியாக அறியப்பட்டவர். இன்று நம்மிடம்மில்லை. ஆனால் அவர் விதைத்த விதை நிச்சயம் மரமாக வளரும். 

செவ்வாய், மார்ச் 05, 2013

சமையல் குறிப்புகள் தர்றிங்களா…….. நிர்வாணம் முக்கியம்.




குறிப்பு. 

இது போன்ற கட்டுரைகளை எழுதக்கூடாது என்பதால் நீண்ட மாதங்களாக எழுதாமல் இருந்தேன். ஆனால் இது கொஞ்சம் வித்தியாசமாக இருந்ததால் எழுதுகிறேன். முடிந்தளவு ஆபாசத்தை தவிர்த்துள்ளேன். மீறி உங்களுக்கு ஆபாசமாக தெரிந்தால் மன்னிக்கவும். விருப்பம் இல்லாதவர்கள் படிக்க வேண்டாம்.

ஹலோ மேடம் நீங்க ரொம்ப அழகா இருக்கிங்க. இன்னைக்கு நான் புதினா சட்னி தயாரிக்க குறிப்பு சொல்லப்போறன் என போன் செய்து வருத்தெடுக்க சேனலை மாற்றினேன். அந்த சேனலில் இன்று நாம் செய்ய போகும் ரெசிபி. மிளகாய் பஜ்ஜி. ஓடிப்போய் வானல் எடுத்து அடுப்பு மேல வைங்க என டிவியில் ஒரு காம்பீயர் வெறுப்பு ஏற்ற வெறுப்பானது சமைக்க குறிப்பு தர்றன்ங்கற பேர்ல ஏன்டா(டீ) இப்படி கொல்றிங்க என கேட்க தோன்றியது.

இதனையும் குறிப்பு எடுத்து நாங்கள் சமையல் புலி என தப்பும் தவறுமாக சமைத்து கணவன், பிள்ளைகளை பேதி போக வைக்கும் குடும்பஸ்திரிகள், குடும்பஸ்தன்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

தமிழகத்தில் மட்டுமல்ல உலகம் முழுவதும் இப்படி இத செய்ய குறிப்பு அத செய்ய குறிப்பு என வாந்தி பேதியாக்க வைக்கும் முயற்சிகள் நடக்கும் போல.

இதில் வெறுப்பாகி சொல்றத ஒழுங்க, கொஞ்சம் டிபரண்டா சொல்லுங்கடா என இரண்டாம் புலிகேசி கழிவறையில் உட்கார்ந்து யோசித்தது போல பத்ரூம்மில் குளிக்கும் போது வந்த யோசனையை புதிய முயற்சியாக செய்துள்ளார்கள் சில இளசுகள்.

அப்படி என்ன செய்தார்கள் ?.

நிர்வாணமாக சமையல் குறிப்புகள் தரும் முறை.

இங்கிலாந்தில் உள்ள மான்செஸ்டர் நகரத்தில் உள்ள ஒரு பல்கலைகழகத்தில் பயிலும் ஜீஸ், கிரிட்டா, சாஜ் என்ற மூன்று மாணவ – மாணவியர் இணைந்து நேக்டு வேகான் குக்கிங் என்ற இணைய தளத்தை தொடங்கியுள்ளார்கள். இந்த இணைய தளத்துக்கு நீங்கள் சமையல் குறிப்புகளை அனுப்பலாம்.

அதை விட முக்கியமானது குறிப்புகளோடு சேர்த்து நீங்கள் நிர்வாணமாக சமைப்பது போன்ற புகைப்படத்தையும் இணைத்து அனுப்ப வேண்டும். சமையல் குறிப்புகளோடு அந்த புகைப்படமும் அது அந்த இணைய தளத்தில் பதியப்படும்.

இதுவரை நூற்றுக்கும் அதிமான சமையல் குறிப்புகள் ஜிலு ஜிலுவென சமைப்பது போன்ற புகைப்படங்களோடு உள்ளன.

அதனால் தயவு செய்து சமையல் கற்றுக்கொள்ள விரும்பவர்கள் அந்த இணைய தளத்துக்கு சென்று குறிப்புகளை மட்டும் படித்து நோட்ஸ் எடுக்குமாறு அவஸ்தையுடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

பார்க்க, படிக்க இலவசம் தான். ஆனாலும் இணைய தளத்தை தொடர்ந்து நடத்தி ‘சேவை’ செய்ய பணம் கேட்கறாங்க. வாரி வழங்கும் வள்ளல்களே கொஞ்சம் பாத்து செய்துட்டு வாங்க. அதவிட முக்கியம், யு.கேவில் வெளியாகும் செய்தித்தாள்கள் அந்த இணைய தளத்துக்குள்ள போகாதிங்க வைரஸ் பிரச்சனையிருக்குன்னு சொல்றாங்க. வேற எதுவும் இல்ல. பாத்து நடந்துக்குங்க.

கட்டுரைக்கு போட்டோ எங்கன்னு கேட்காதிங்க. போட்டோக்களுக்கு சென்சார். ஓரே ஒரு போட்டோவ மாடலா போடறன் பாத்துக்குங்க. சாப்பாட்டுக்கும் இந்த போட்டோவுக்கும் சம்மந்தம்மில்ல. இந்த போட்டோ பேஸ்புக்ல இருந்து டவுன்லோட் பண்ணது.