சனி, பிப்ரவரி 22, 2014

5. ஆயுத குழுக்கள். ( சிலோன் முதல் ஈழம் வரை )

சிங்கள வெறியர்கள், தமிழ் மக்கள் மீதான கொடூர தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட தமிழ் பேசும் மக்கள் சிங்களர்கள் அடிக்க அடிக்க வாங்கிக் கொண்டே இருந்தனர். ஆனால் படித்த தமிழ் இளைஞர்கள் மனம் மட்டும் கொதிக்க ஆரம்பித்தது. அந்நிலையில் 1970 ஆம் அண்டு இரண்டாவது முறையாக நாட்டின் பிரதமரானார் ஸ்ரீ மா. தமிழ் மக்களின் உயிரை எடுக்க திட்டமிடும் புத்தபிட்சுகள் இந்தமுறை மாணவர்களின் படிப்பில், போட்டி தேர்வில் கை வைத்தது. பிரதமர் ஸ்ரீமாவுக்கு நெருக்கடி தந்து கல்வியமைச்சர் பதியுதின்முகமது மூலம் கல்வி தரப்படுத்தல் என்ற சட்டத்தை கொண்டு வந்து பாராளமன்றத்தில் நிறைவேற்ற முயலும்போதே தமிழ் மாணவர்கள் தமிழ் மக்களுக்காக அரசியல் செய்கிறோம் என கூப்பாடு போட்ட கட்சிகளிடம் ஓடினார்கள். அவர்களோ அறிக்கை மட்டுமே விட்டுவிட்டு சைலண்ட்டாகிவிட தங்கள் உரிமைக்காக தாங்களே தான் போராட வேண்டும் என்ற நிலையை உணர்ந்து போராட ஆரம்பித்தனர். அதை சிங்கள அரசும், சிங்கள கடையர்கள் அடக்க முயன்றபோது தங்களை பாதுகாத்துக் கொள்ளவும், மக்களை பாதுகாக்கவும் ஆயுதங்களை கையிலெடுத்தவர்கள். தங்களை அப்படியே ஆயுத குழுக்களாக மாற்றிக்கொண்டு போராட ஆரம்பித்தனர்.

தமிழ் மாணவர் பேரவை (Tamil Student Union)

உரும்பிராய்யை சேர்ந்த பட்டதாரி வாலிபரான சத்யசீலன் தனது கருத்துடன் ஒத்துபோகும் நண்பர்களையும் தன்னுடன் படித்த இளைஞர்களை யாழ்ப்பாண நகரில் மசால் வடைக்கு பேர்ப்போன மலயன் கபே என்கிற உணவு விடுதியின் மேல் 1970-ஆம் ஆண்டு கார்த்திகை-13 தேதி கூடினர் அதில் உரும்பிராய்யை சேர்ந்த பொன். சிவக்குமரன், முத்து குமாரசாமி, நல்லூர்ரை சேர்ந்த வில்வராயா, ஏழாலையை சேர்ந்த அரியரட்ணம், இலங்கை மன்னன், யாழ்ப்பாண சென்யோன்ஸ் கல்லூரி மாணவர் மகா உத்தமன், கல்வியங்காடு சிவராசா, தவராசா சென்பகறிஸ் கல்லூரி மாணவர் சேயோன், சென்யோன்ஸ் கல்லூரி மாணவர் ஆனந்தன், காவல் துறையில் பணியாற்றிய ஞானம் உட்பட 15 இளைஞர்கள் ஒன்றிணைந்து முதன் முதலில் தமிழ் மாணவர் பேரவையாக உருவான ஆயுத குழுவாகும்.

இவ்வமைப்பிலிருந்தவர்கள் முழு பற்றாளர்கள். உதாரணத்துக்கு ஞானத்தை கூறலாம். காவல்துறையிலிருந்த போது தமிழர்கள் சிங்களம் கற்றால் தான் வேலையே என்கிற சட்டம் கொண்டு வந்தபோது வேலையே வேண்டாம் என ராஜினாமா செய்துவிட்டு வந்தவர். இப்படி பட்டவர்கள் ஒன்றிணைந்து சிங்கள அரசுக்கு எதிராக மாணவர்களை ஒன்றுதிரட்டி ஊர்வலமே நடத்தினர். பிரமாண்டமான ஊர்வலத்துக்கு பின் தம்மக்களை தாக்கும் சிங்களர்களை நாமும் தாக்க வேண்டும் என முடிவு செய்தனர்.

மாணவர் பேரவையின் அமைப்பாளரான சத்யசீலன் திட்டப்படி அப்போது தமிழர்களுக்கு எதிராக வெறியாட்டம் போட்ட கலாச்சாரத்துறை அமைச்சர் சோமவீர சந்திராசிரியின் காருக்கு குண்டு வைத்து தகர்த்தனர். இதில் அதிர்ந்த அரசு குண்டு வைத்தவர்களை தேட ஆரம்பித்து பேரவையை சேர்ந்த பலரையும் ஞ்ல்டித்தது. கடைசியில் குண்டு வைத்த பொன் சிவக்குமரனையும் பிடித்தாலும் சில மாதங்களிலேயே ஒவ்வொருவராக வெளியே வந்தனர். அப்படியும் பேரவையில் ஏற்பட்ட உள்பிரச்சனையில் சிலர் விலகிபோயினர்.

தமிழராட்சி மாநாட்டு பணிகள் நடந்துகொண்டிருந்தபோது பொன்.சிவக்குமரன் தனது தோழர்கள் சிலருடன் போய் மாநாட்டு பணிகள் எங்களுக்கும் பிரித்து தாருங்கள் நாங்கள் உதவிசெய்கிறோம் என்றார்கள். முடியாது என மறுத்தவர்களிடம் உங்களால் பின் மாநாட்டை நடத்த முடியாது என எச்சரிக்கை விட்டபின் மாநாட்டு பணியின் பொறுப்பாளர்களில் ஒருவரானார் பொன்.சிவக்குமாரன். மாநாடு யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றுக்கொண்டிருந்தது. 1974 ஜீன் 10 இறுதிநாள் கூட்டம் அதிகமானதால் இறுதிநாள் நிகழ்வு மண்டபத்துக்கு வெளியே மாற்றப்பட்டது. திருச்சி. பேராசிரியர்.நயினார்முகமது பேசிக்கொண்டிருந்தார். உள்ளே நுழைந்த போலிஸார். கூட்டத்தை கலைக்க முயற்ச்சித்தனர். கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. அந்த சலசலப்பை பயன்படுத்திக்கொண்டு போலிஸார் மின்சார ஒயரை பார்த்து சுட்டதில் அது கீழே விழுந்தது. துப்பாக்கி சூடு சத்தம் கேட்டதும் ஏற்கனவே பதட்டம் பரபரப்பில் இருந்த பொதுமக்கள் ஓட ஆரம்பித்தனர். அப்போது கீழே விழுந்து கிடந்த மின்சார ஒயரை மிதித்ததாலும் கூட்ட நெரிசலில் சிக்கி ஒன்பது பேர் இறந்து போயினர். இதை பார்த்துக்கொண்டிருந்த முன்கோபக்காரரான பொன்.சிவக்குமாரன் எதையும் யோசிக்காமல் ரத்தம் கொதித்துப்போய் மறுநாளே நல்லூர் பாராளமன்ற உறுப்பினர் வீட்டுக்குள் குண்டு வீசியதில் பாதுகாப்புக்கு நின்ற போலிஸார் காயமடைந்தனர். அதனால் தேடப்படும் குற்றவாளியாக பொன்.சிவக்குமாரனை அறிவித்தது போலிஸ்.

தனது தோழர்கள் மகேந்திரன், ஜீவராசா, அரவிந்தன் ஆகியோரோடு அடுத்து குறிக்கு திட்டமிட கூட்டிவைத்து பேச ஆரம்பித்தார். திட்டம் தயார் மாநாட்டு கலவரத்துக்கு காரணமான உதவிபோலிஸ் கண்காணிப்பாளர் சந்தரசேகரை கொல்வது. அதில் போலிஸாரிடம் மாட்டிக்கொல்ல வேண்டிய நிலைவந்தால் மாட்டாமல் தப்ப உயிரை விடுவது என முடிவுஎடுத்தார் பொன்.சிவக்கமாரன். அதற்க்காக டாக்டர் ஒருவர் மூலம் சையனைட் வாங்கி வைத்துக்கொண்டார். சந்திரசேகரை கொல்ல முயன்று தோற்றதால் சிவக்குமாரன் அதிமுக்கிய குற்றவாளியானார். சிவக்குமாரன் தலைக்கு விலை நிர்ணயித்தார்கள். இந்த நிலையில் சிவக்குமாரன் யாழ்ப்பாணத்தில் இருப்பது நல்லதல்ல என எண்ணி கள்ளதோணி மூலம் தமிழகத்திற்க்கு அனுப்ப முடிவு செய்தார்கள். போக-வர அங்கே செலவுக்கு தேவையான பணத்துக்கு என்ன செய்யலாம் என யோசித்தார்கள் தெரிந்தவர்களிடம் கேட்டார்கள் போதிய அளவு கிடைக்கவில்லை. அதனால் கோப்பாய்யில்வுள்ள கிராமிய வங்கியை கொள்ளையடிக்க முடிவுசெய்தனர்.

மகேந்திரன், ஜீவராசா, அரவிந்தன் ஆகியோரோடு திட்டமிட ஆரம்பித்தார். பழைய துப்பாக்கிகளை வைத்துக்கொண்டு திட்டத்துக்கு தயாரானார்கள். ஓரு வாடகை காரையும் அமர்த்திக்கொண்டவர்கள் 1974 ஜூன் 5 ந்தேதி காலை 10.20 க்கு கோப்பாய் வங்கி முன் போய் சுட ஆரம்பித்தார்கள் துப்பாக்கிகள் வெலை செய்யவில்லை அதற்க்குள் பொதுமக்கள் கூட ஆரம்பித்தவர்கள். கோள்ளையர்கள் என நினைத்து துரத்த ஆரம்பித்தார்கள். மக்கள் துரத்துவதை கண்டு ஒட ஆரம்பித்தனர் ஊரக்கு வெளியே ஓடினர். துரத்தி வந்த மக்களை சுடாத துப்பாக்கியை காட்டி நிறுத்தியவர்கள் தாங்கள் யார் என்பதை சொன்னதும் ஒரளவுக்கு சிவக்குமாரன் பெயர் அவ்வூர் இளைஞர்களுக்கு தெரிந்திருந்தது அதனால் விட்டுவிட்டனர். ஆனால் போலிஸ் துரத்த ஆரம்பித்தது. முன்னும் பின்னும்  போலிஸார் மடக்க ஆரம்பித்தனர். சிவக்குமரன் உட்பட நான்கு பேரும் ஆளுக்கு ஒரு புறமாக தப்பி ஓடுவதாக திட்டம் அதன் படி ஓடவும் செய்தார்கள். போலிஸாரின் குறியே சிவக்குமாரன் என்பதால் மற்றவர்களை பற்றி அலட்டிக்கொள்ளமால் சிவக்குமாரனை மட்டும் துரத்த ஆரம்பித்தனர். செம்மண் கழனி இனி தப்ப முடியாது என்ற நிலை போலிஸிடம் மாட்டினால் அவ்வளவு தான் என தெரிந்த சிவக்குமாரன் பாக்கெட்டில் சென்ட் பாட்டிலில் வைத்திருந்த சைனட்டை குடித்து உயிரை விட்டான்.

குப்பியை கடித்து இறத்து போனான் ஆயுதம் எடுத்த முதல் வீரணின் பலி. இறப்புக்கு தமிழ் மக்கள் கூடி கண்ணீர் சிந்தியதோடு வீடுகளில் கறுப்பு கொடியேற்றி துக்கம் அனுஷ்டத்தினர்.

தமிழர் விடுதலை இயக்கம் (TELO -Tamil Elam Liberation organization)

மாணவர் பேரவை காலகட்டத்தில், இயங்கிய மற்றொரு பெயரில்லாத இயக்கம் குட்டிமணி-தங்கதுரையுடையது. 1968 முதல் 25 பேர் கொண்ட ஆயுத குழுவாக செயல்பட்டவர்கள் 1979ல் தமிழர் விடுதலை இயக்கமென பெயர் சூட்டிக்கொண்டது. பொன் சிவக்குமரன் குட்டிமணி தங்கதுரையுடன் சிலகாலம் இருந்தார் வேறு சில நாடுகளின் ரகசிய உதவியுடன் ஆயுதங்களை வாங்கியவர்கள், தாங்களே வெடிகுண்டுகளையும் தயாரித்தனர். போலிஸார் தேடும்போதெல்லாம் தமிழகம் தான் பாதுகாப்பு தந்தது கூடவே தமிழக அரசியல் பிரமுகர்களும் ஆதரவு தந்தனர்.

1974 ஆம் ஆண்டு கடல் மார்க்கமாக வெடிபொருட்கள், ஆயுதங்களோடு படகில் ஏற்றிக்கொண்டு குட்டிமணி போக முயன்றபோது தமிழக போலிஸôர் படகோடு குட்டிமணியை கைது செய்தனர். தங்கதுரை அப்படியே தலைமறைவானார் கைதான குட்டிமணியை தமிழகரசு இலங்கையிடம் ஒப்படைத்தது. தொடர்ந்தார்ப்போல் தங்கதுரை, ஜெகனும் கைதாகி இலங்கையின் கொழும்பிலுள்ள வெலிக்கடை சிறையில் அடைக்கப்பட்டனர். 1983 ஜீலை கலவரத்தின் போது சிங்களர்கைதிகளும், கடையர்களும் கொடூரமாக குட்டிமணி தங்கதுரையை கொன்றாலும் வேறு சிலர் இயக்கத்தை தொடர்ந்து நடத்தினர்.

தமிழீழ விடுதலைப்புலிகள்   (LTTE  – Liberation Tigers Of Tamil Eelam)


வல்வெட்டித்துறையைச் சேர்ந்த மாவட்ட நிலஅலுவலராக பணிபுரிந்த திருவேங்கடம் வேலுப்பிள்ளை பார்வதி ஆகியோரின் கடைக்குட்டியாக பிரபாகரன் 26-11-1954 பிறந்தார். தனது அண்ணன், 2 அக்காமார்களோடு ஜாலியாக இருந்தவருக்கு 4 வயதாகும்போது தனது குடும்பத்திற்கு வேண்டிய விதவை தாய் ஒருத்தி, சிங்கள கடையர்கள் கலவரத்தின் போது கை, கால்களை உடைத்துவிடுவதோடு, தமிழர்களை உயிரோடு எரித்தது, பச்சிளம் குழந்தைகளை கொதிக்கும் தார் டிரம்மில் தூக்கி போட்டதை சொல்லி அழ பிரபாகரன் நெஞ்சில் அப்படியே பதிந்தது.

பிரபாகரனை அவரது தந்தையார் ஆரம்ப கல்வியை முதலில் மட்டகளப்பு அரசடி மக வித்யாலயாவிலும் அதன் பின் பணிமாற்றம் காரணமாக வல்வெட்டித்துறை அருகேயுள்ள ஊரிக்காட்டிலுள்ள சிதம்பரா கல்லூரியில் 10வது வரை படித்தார். படிக்கும் போது அவரின் தமிழாசிரியரும் தமிழரசு கட்சியை சேர்ந்த வேணுகோபால் மாணவர்களிடம் சிங்களர்களின் கொட்டத்தை அடக்க அடிக்கு அடி தர ஆயுத போராட்டம் தான் நமக்கு சரியான பாதை என அடிக்கடி வகுப்பறையில் கூறுவார். அப்போது ஆயுதம் தூக்கிக் கொண்டிருந்த குட்டிமணி தங்கதுரையுடன் போய் சேர்ந்தார். அங்கிருந்த இளைஞர்களில் வயது குறைவானவர் பிரபாகரன் என்பதால் üதம்பிý என அழைக்கலாயினர். குட்டிமணி குருப்பில் வெடிகுண்டு தயாரிப்பவரோடு உதவிக்கு விட்டனர். விரைவில் வெடிகுண்டு தயாரிப்பிலும் துப்பாக்கிகள் அசம்பல் செய்வதில் தேறினார்.

1968ல் தனது 14வது வயதில் தன்னுடன் படிக்கும் 7 நண்பர்களை குழுவாக அமைத்து சிங்கள அரசை எதிர்த்து போராடுவோம் என்ற உறுதிமொழியோடு செயல்பட்டனர். மாணவர் பேரவை சத்யசீலனோடு தொடர்பில் இருந்தவர். 1967ல் சிங்கள மொழி சட்டத்தை எதிர்த்து பஸ் எரிக்கப்படவேண்டும் என்ற தீர்மானத்தின் பேரில் தொண்டானாற்றில் நின்ற பேருந்த எரிக்க முயன்றபோது உதவிக்கு வந்த இரண்டு பேர் பயந்து ஓடிப்போய் விட்டனர். தனியாளக நின்று பஸ்சுக்கு தீ வைத்து சிங்கள அரசுக்கு எதிரான தனது மன தீயை அதிகப்படுத்தினார். 73ல் போலிஸ் தேடியதால் குட்டிமணி தங்கதுரையுடன் முதன் முறையாக தமிழகம் போன பிரபாரகரன் வேதாரண்யத்திலிருந்து பெரியஜோதியோடு சென்னை போய் அரசியல் கட்சி பிரமுகர்களை சந்திக்கலாயினர்.

தமிழராட்சி படுகொலையை கேட்டு மனம் கொதித்து 1974ல் அ.வா. ராசத்தினம் உதவியுடன் யாழ்ப்பாணம் திரும்பிய பிரபாகரன் 9.4.1974ல் புதிய தமிழ் புலிகள் (Tamil New Tigers) என்ற ய்ச்ட்ட்ல்ஹ்;ஹ்ட் அமைப்பை தொடங்கினர். சில தாக்குதலுக்கு பின் மே-5, 1976ல் தமிழீழ விடுதலைப் புலிகள் (எல்.டி.டி.இ) என பெயர் மாற்றம் செய்தவர்கள் மத்திய குழுவையும் அமைத்தனர். ராணுவம், அரசியல், புலனாய்வு என சில பிரிவுகளை உருவாக்கினர். மிக கட்டுப்பாடு மிக்க இதில் தியாக மன்பான்மை உள்ளவர்களை சேர்ந்தனர் சேர்க்கப்பட்டனர்.
ஈழப்புரட்சிக்கார விடுதலை அமைப்பு. ( EROS - Eelam Revolutionary Organization of Students)

உலகத்தின் பல தீவிரவாத குழுக்களோடு தொடர்பிலிருந்த அமைப்பு 1975ல் லண்டன் நகரில் இளையதம்பி ரத்னசபாபதியால் தொடங்கப்பட்டது. இதன் உப அமைப்பாக Central Union af Eelam Students (GUES) அமைப்பை சென்னையில் தொடங்கி நடத்தினர். தனது போராளிகளை லெபனாலில் உள்ள அபுஜாகித்தின் PLO அமைப்பிடம் ஆயுத பயிற்சிக்காக ஒரு லட்ச ரூபாய் பணம் கட்டி அனுப்பியது. இலங்கையில் அருளர் தலைமையிலான குழு செயல்பட்டாலும் பல குழுக்களை அமைத்து இலங்கை தமிழர் பிரச்சனையை உலகின் பார்வைக்கு கொண்டு செல்ல முயன்றது. 1975ல் உலககோப்பை போட்டி மான்செஸ்டர் (ஙஅசஇஏஉநபஉத)நகரில் நடந்த பொழுது இலங்கை சிங்கள அரசை கண்டிக்கும் வாசகங்களை சிறு சிறு தட்டிகளில் எழுதி கேமராவுக்கு காட்டி கவனத்தை ஈர்த்தனர்.

தமிழ் இளைஞர் பேரவை - TYF  (Tamil Youth Forum )

தமிழ் மாணவர் பேரவையிலிருந்து பிரிந்து வந்த சபாலிங்கம், தமிழரசு கட்சியின் இளைஞர் பிரிவிலிருந்த சபாலிங்கம் ஆகியோரை தலைமையாக கொண்டு 1970 ஜனவரியில் இளைஞர் பேரவை ஆரம்பிக்கப்பட்டது. தமிழரசு கட்சியின் தலைவர்களுள் ஒருவரான அமிர்தலிங்கம் பேரவைக்கு ஊட்டம் தந்ததால் செயல்பட தொடங்கிய இதில் 40 பேர் இருந்தனர். ஆயுத குழுவாக செயல்பட்ட இது காலப்போக்கில் காணாமல் போனது. இதில் தான் ஆரம்பத்தில் உமாமகேஸ்வரன் இருந்தார்.
தமிழீழ விடுதலை மக்கள் கழகம் (People’s Liberation Organization of Tamil Eelam PLOT)
தமிழ் இளைஞர் பேரவையின் கொழும்பு நகர செயலாளராகயிருந்த உமா மகேஸ்வரன் ஆங்கிலம், தமிழ் சரளமாக பேசக்கூடியவர். அமிர்தலிங்கம் தான் உமா மகேஸ்வரனை பிரபாகரனுக்கு அறிமுகப்படுத்தி உனக்கு ரொம்ப உபயோகமாயிருப்பான் என்றார். உமாவும் ஆக்ட்டிவ்வாக வேலை பார்த்ததால் இயக்கத்தின் சேர்மனாகவும் ஆனார். அதே வேலை எல்.டி.டி.இ யின் கட்டுப்பாட்டை மீறி இயக்கத்திலிருந்த ஊர்மிளாதேவி என்கிற பெண் போராளியை காதலித்ததால் பிரச்சனை பெருசானது. உமாவுக்கு ஆதரவாக லண்டனிலிருந்ததெல்லாம் ஆதரவு கரம் நீண்டது. அதையெல்லாம் ஒதுக்கிய பிரபாகரன் உமா மகேஸ்வரனை இயக்கத்திலிருந்து நீக்கினார். அதன் பின் சில ஆண்டுகள் கழித்து 1980ல் தமிழீழ விடுதலை மக்கள் கழகம் என்கிற அமைப்பை உருவாக்கினார். பெரிய இயக்கமாக மாற்ற முயன்று தோற்ற உமா இந்திய உளவு அமைப்பான ரா (RAW- Research and Analyse Wing) அதிகாரிகளோடு தொடர்பில் இருந்தார். ரா அமைப்பின் பயிற்சி, பணம் பெரியளவில் கிடைத்தது. ரா திட்டப்படி மாலத்தீவில் ஆட்சி கலைப்பில் ஈடுபட்டார்கள் PLOT அமைப்பினர். அது தோல்வியில் முடிந்தது. பின் அமைப்பில் பிரச்சனை வந்து பல குட்டி தளபதிகள் பிரிந்து போனார்கள். இந்திய இராணுவம் விடுதலைப்புலிகள் மோதலின்போது விடுதலைப்புலிகளை அழிக்க முயன்றனர். இந்திய இராணுவத்துக்கு விடுதலைப்புலிகளின் மறைவிடங்களை காட்டி கொடுத்தார்கள் PLOT அமைப்பினர். உமாமகேஸ்வரன் 1989ல் கொழும்பு கடற்கரையோரம் சுட்டுக்கொல்லப்பட்டு கிடந்தார் அதன் மர்மம் இன்னும் புலப்படாத மர்ம புதிராக உள்ளது.
  
ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (EPRLF-Eelam Peoples Revolutionary Liberation Front )
EROS ல் இருந்து பிரிந்த பத்மநாபன் 1982ஆம் ஆண்டு இடதுசாரி கட்சி மார்க்சிஸ்ட் உதவியோடு EPRLF என்ற அமைப்பை ஏற்படுத்தினார். ஆயுத குழு என காரணம் சொல்லி இலங்கை அரசு அதன் தலைவர் மற்றும் உறுப்பினர்களை கைது செய்து சிறையிலடைத்தது. மே-10-1984ஆம் ஆண்டு இதன் உறுப்பினர்கள் யாழ்ப்பாணத்தில் தங்கி புராஜக்ட் வேலையிலிருந்த 1 அமெரிக்க தம்பதியை ஸ்டான்லி, மேரி அலனை கடத்தி பணயகைதியாக வைத்துக்கொண்டு 20 பேராளிகளை விடுவிக்க வேண்டுமென்றார்கள்.

கடத்தலை கேட்டு ஆடிப்போன அமெரிக்க அதிபர் சினியர் புஷ் சி.ஐ.ஏ அதிகாரிகளை இந்தியாவுக்கு அனுப்பினார். அவர்கள் இந்தியாவின் ரா, ஐ.பி அதிகாரிகளோடு பேச்சு வார்த்தை நடத்தினர். பின் மூன்று உளவு அமைப்பின் அதிகாரிகளும் சேர்ந்து EPRLF உறுப்பினர்களிடம் பேச்சுவர்த்தை நடத்தி மத்திய குழு உறுப்பினர் பத்மநாபனை தவிர மற்றவர்களை விடுவிப்பதோடு 50 மில்லியன் தங்கத்தையும் அவர்களுக்கு தந்து அமெரிக்க ஜோடியை மீட்டனர். காலப்போக்கில் அரசியல் இயக்கமாக மாறிய இவ்வியக்கத்தை சேர்ந்த வரதராஜபெருமாளை இந்திய அமைதிப்படை இலங்கையில் இருந்த போது ராஜிவ்காந்தி-ஜெயவர்தனா திட்டத்தில் உறுவான கூட்டு உடன்படிக்கையின் படி வட-கிழக்கு மாகாண முதல்வராக நியமிக்கப்பட்டார். அமைதிப்படை திரும்பிய பின் விடுதலைப்புலிகள் துரோகிகள் என மாற்று இயக்கத்தினரை கொல்லும் போது இந்தியாவின் ரா அமைப்பு வரதராஜபெருமாளையும் அவரின் ஆதரவாளர்களையும் இந்தியாவுக்கு அழைத்து இன்றும் பாதுகாத்துக்கொண்டது. அவர்களை இன்றளவும் பாதுகாத்து வருது.


Tamil Eelam Army, Tamil National Eelam Army, Tamil Eelam Liberation Army, Eelam National Liberaiton Font, Three Stars, Eelam people’s Democratic party  என பல குழுக்கள் தமிழர்களுக்காக ஆயுதங்களை ஏந்தினாலும் ஒரு சில குழுக்களே தீவிராக செயல்பட்டன. சில குழுக்களை ரா அமைப்பே உருவாக்கியது அதில் குறிப்பிடதக்கது.

ஈழதேசிய விடுதலை முன்னணி : ENTLF –

PLOT அமைப்பில் இருந்தவர் பரந்தன்ராஜன் லெபனாலில் பயிற்சி பெற்றவர். உமாவோடு இருந்தவர் PLOT ஆரம்பித்தபோது ராணுவ தளபதி பதவி தராததால் தன் ஆதரவாளர்களோடு வெளியேறினார். அதேபோல் TELO, EPRLF ல் இருந்து டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் விலகினார்கள். இந்த 3 தரப்பையும் இணைந்த இந்தியாவின் ரா அமைப்பு, 3 ஸ்டார் என்ற அமைப்பை உருவாக்கியது. தொடர்ந்து EPRLF--ல் இருந்து டக்ளஸ் தேவனாந்தாவும் விலகிவர அவர்களை ஒண்றிணைத்து 1987-ல் ENTLF ஆரம்பித்து ஊட்டம் தந்தது. இவர்களின் பணி ரா சொல்வதை செய்வது தான்.

அதிலிருந்து பிரிந்த டக்ளஸ்தேவானந்தா ஈழ மக்கள் ஜனநாயக கட்சி EPDP ( Eelam People's Democratic Party) என்ற கட்சியை தொடங்கி தற்போது சமுக நல துறை அமைச்சராக உள்ள அவர் 1989-ல் சென்னையில் 10வயது பையனை கடத்தி 7 லட்சம் பணம் கேட்டு மிரட்டினர். கீழ்பாக்கம் போலிஸôர் பிடித்து வழக்கு பதிவு செய்து தேசிய பாதுகாப்பு சட்டத்தில் அடைக்க 1 வருடம் சிறையில் இருந்தார்.

முந்தியை பதிவு. 4. இனக்கலவரம்.


1 கருத்து:

  1. கடைசி படம் துப்பாக்கியுடன் ஈழ போராட்டகாரங்க நிற்கிறாங்களே அந்த படத்தை பர்த்தப்பவே ஈழ போராட்டம் என்றா என்ன என்பதை விளங்கிவிட்டது.
    //எல்.டி.டி. யின் கட்டுப்பாட்டை மீறி இயக்கத்திலிருந்த ஊர்மிளாதேவி என்கிற பெண் போராளியை காதலித்ததால் பிரச்சனை பெருசானது. உமாவுக்கு ஆதரவாக லண்டனிலிருந்ததெல்லாம் ஆதரவு கரம் நீண்டது. அதையெல்லாம் ஒதுக்கிய பிரபாகரன் உமா மகேஸ்வரனை இயக்கத்திலிருந்து நீக்கினார்.//

    ஆனா பிரபாகரன் தான் உத்தரவிட்ட கட்டுபாட்டை தானே மீறிய போது தனக்கு விருப்பமான பெண்ணை திருமண செய்யஆசை வந்தபோ தனக்காக புலி சட்டத்தையே மாற்றினார். இப்படிபட்ட பிராபாகரன் தான் தமிழகத்திற்கும் தலைவனாக வேண்டும் என்பது தமிழ்வாதிகளின் கனவு.
    ஊர்மிளாதேவி என்கிற பெண் போராளியை பிரபாகரன் கொலை செய்ததாகவே இலங்கையர் நம்புறாங்க இவ்வளவு அயோக்கியதனமானவர் இதை செய்ததில் வியப்பு ஒன்றுமில்லை.

    பதிலளிநீக்கு