வியாழன், பிப்ரவரி 13, 2014

பிச்சை எடுத்தாறாம் பெருமாளு........ புடுங்கி திண்ணாறாம் அனுமாரு.





இணையத்தில் மதிமுக தோழர்களின் பிரச்சாரத்தை பார்க்கும் போது டேய் போதும்டா நிறுத்துங்கடா உங்க அலம்பலை என கத்த வேண்டும் போல் தோனுகிறது. மக்கா அந்தளவுக்கு டென்ஷனாக்குது அவுங்க எழுத்து. ஏதோ நம்பற அளவுக்கு எழுதனா பரவாயில்ல. சுட்டெரிக்கும் சூரியனுக்கு போர்வை போத்த காலையில தான் ஜெட்ல கிளம்பி போனாருங்கற அளவுக்கு இருக்கு அலம்பல்.  

பிரதமர் பதவியை பிடிக்க, இந்தியாவில் காவிகளின் ஆட்சியை மலர வைக்க பெரும் பட்டாளம்மே வேலை செய்கிறது அந்த பட்டாளத்துடன் கலிங்கபட்டியில் பாட்டி வடை சுட்ட கதை முதல் அண்டார்டிகாவில் ஆமை குட்டி போட்டது வரை பேசும் வை.கோவும் கலந்துள்ளார். குஜராத் முதல்வர் பதவியை தக்க வைத்துக்கொள்வதற்காக, தன் மதவெறியை காட்டடி சிறுபான்மையின மக்களான இஸ்லாமியர்கள் ஆயிரக்கணக்கானோரை கொலை செய்ய சூலம் எடுத்து தந்த காவி கும்பலின் மதவெறி மன்னன் நரேந்திரமோடியை பிரதமராக்க தமிழகத்தில் வாக்கு சேகரிக்க தொடங்கியுள்ளார் வை.கோ.

அவர் பி.ஜே.பியுடன் கூட்டணி வைத்துக்கொள்ளட்டும் அவரது விருப்பம். இங்குயென்ன கொள்கை அடிப்படையிலா கூட்டணி வைத்துக்கொள்கிறார்கள். பணத்துக்கும், பதவிக்கும் தான் கூட்டணி வைத்துக்கொள்கிறார்கள். வை.கோயென்ன அரிச்சந்திரன் வீட்டுக்கு பக்கத்து வீட்டுக்காரரா? 20 ஆண்டுகாளமாக கட்சி நடத்தி வருகிறார். அவர் கட்சி நடத்துவது எதற்காக என்பது அவரது கட்சிக்காரர்களுக்கு தெரியாமல் இருக்கலாம். ஆனால் வருமானம்மே பார்க்காமல் எத்தனை ஆண்டுகள் தான் செலவே செய்துக்கொண்டு தொண்டர்கள் இருப்பார்கள். கழுதை தேய்ந்து கட்டெறும்பானது போல தற்போது அவரது கட்சியில் இருப்பதே ஊருக்கு நாலு பேரு தான். இந்த லட்சணத்தில் அவரது கட்சியினரும், ஆதரவாளர்களும் அமெரிக்காவின் அடுத்த அதிபர் கலிங்கப்பட்டி காத்தவராயன் தான் என்கிற ரேஞ்சில் இணையத்தில் எழுதி வருகிறார்கள்.

இதில் தமிழருவி மணியன் வேறு. வை.கோவை தமிழக முதல்வராக்காமல் உண்ணமாட்டேன், உறங்கமாட்டேன் என சபதம்மெல்லாம் போட்டு காந்திய மக்கள் இயக்கத்தை காந்திய மக்கள் கட்சியாக மாற்றியுள்ளார். வை.கோவுக்காவுது ஊருக்கு நாலு பேர் இருக்கிறார்கள். தமிழருவி மணியன் யார் என கேட்டால் எங்கவூர் தாத்தா யார் அந்த கிறுக்கன் என கேட்கிறார்.

கவுன்சிலர் தேர்தல்ல நின்னா கட்டன டெப்பாசிட் பணத்த திரும்ப வாங்கக்கூட மக்கள் செல்வாக்குயில்ல மதிமுகவுக்கு. இதல தமிழ்நாட்ல மதிமுக மட்டுமே போதும்மாம் 40 தொகுதியிலயும் ஜெயிக்க. அந்தளவுக்கு வை.கோவ மக்கள் நம்பறாங்களாம், மோடி அலை வீசுதாம்.

பி.ஜே.பிக்கு போட்டி அதிமுக தான், திமுக கூட்டணியெல்லாம் ஒரு பொருட்டே கிடையாது என்கிறார் மணியன். அதை வை.கோவின் தம்பிகளும் வழிமொழிகிறார்கள். பி.ஜே.பி தலைவர்கள் கேப்டனிடம், பாமகவிடம் கெஞ்ச கூடாது. இப்போது கூட்டணியில் உள்ள மதிமுக, ஐ.ஜே.கே, கொங்கு கட்சிகளுடன் இணைந்து தேர்தலை சந்தித்தாலே 30 இடங்களில் ஜெயித்துவிடலாம் என தினம் தினம் எழுதி வருகிறார் வை.கோவின் போர்வாள்கள். நான் ஊர்ல நிறைய கிறுக்கன்களை பார்த்துயிருக்கன். இப்படியொரு கிறுக்கர பார்த்ததேயில்ல.

அய்யா காவி சாயம் பூசிக்கொண்ட கறுப்பு துண்டுக்காரர்களே தமிழகத்தில் திமுகவுக்கு போட்டி அதிமுக மட்டுமே. இந்த இரண்டு கட்சியை தான் மக்கள் எதிர்பார்ப்பார்கள். பி.ஜே.பியோ, காங்கிரஸ்சோ தனி அணி அமைத்தால் அது மக்களுக்கு ஒரு பொருட்டே கிடையாது. காங்கிரஸ் கட்சியை பற்றி தெரியாத மக்கள் நிறையப்பேர் கிராமங்களில் உள்ளார்கள். பி.ஜே.பியை பற்றி சொல்லவே வேண்டாம். இதில் மோடி அலை வந்துயெல்லாம் கரை சேர்க்காது.


இந்தியா முழுக்கவே மோடியின் மாயாஜால வித்தைகள் ஒவ்வொன்றும் அடித்து நொறுக்கப்படுகின்றன. அது தெரியாதா உங்களுக்கு ?.

அமர்நாத் மழை வெள்ளத்தில் தத்தளித்த 15 ஆயிரம் பக்தர்களை 100 சுமோக்களில் போய் காப்பாற்றினார், மோடியின் பேச்சை ஒபாமா ஒயிட் ஹவுஸ்சில் உட்கார்ந்து பார்த்தார், ஐ.டி கம்பெனிகள் மூலம் போலியாக உருவாக்கப்பட்ட பேஸ்புக் மற்றும் டுவிட்டர் கணக்குகள், பிரபல சினிமா நடிகர் அமிதாப் மோடிக்கு வாய்ஸ் கொடுத்தார் என்ற மோடி மஸ்தான் வேலைகள் அத்தனையும் நிறுபிக்கப்பட்டுவிட்டது. அதுமட்டுமல்ல மோடியின் பொய்யான வரலாற்று தகவல்கள், மீடியாவின் நேர்காணலுக்கு பயந்து பதுக்குவது போன்றவையும் குஜராத் வளர்ந்த மாநிலம் என்ற பிம்பம், கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு ஆயிரக்கணக்கான கோடி மானியமாக வழங்கியது, வரிகளை தள்ளுபடி செய்தது போன்றவையும் வெட்ட வெளிச்சமாகியுள்ளன.

தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியா முழுக்கவே காங்கிரஸ் மீது பெரும் அதிருப்தியுள்ளது. இந்த அதிருப்தியை மீடியாக்கள் மற்றும் பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களின் உதவியோடு அறுவடை செய்ய நினைக்கிறார் மோடி. ஆனால் அவரின் கடந்த கால செயல்பாடுகள் அவருக்கு பெரும் முட்டு கடையாக உள்ளன.

பி.ஜே.பியோடு மதிமுக சேர்ந்ததால் பி.ஜே.பிக்கு ஒரு கோயாபல்ஸ் கிடைத்துள்ளார் அவ்வளவே. மற்றப்படி ஒன்றும்மில்லை. பி.ஜே.பியோடு, மதிமுக, பாமக, தேமுதிக, கொங்கு கட்சிகள் சேர்ந்து தேர்தலை எதிர்க்கொண்டால் உச்சபட்சமாக போராடினால் ஒரு 3 சீட் ஜெயிக்கலாம் அவ்வளவே. ( இந்த கணக்கே அதிகம் தான் ) மத்தப்படி உங்க கணிப்புயெல்லாம் வெறும் வெங்காயம் தான். அதனால லாஜிக்கா யோசிங்க. தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா சினிமா மாதிரி யோசிக்காதிங்க.  

காங்கிரஸ் மீதான அதிருப்தி, மோடிக்கு உருவாக்கப்படும் அலை நடுத்தர மக்கள் மாற்றம் வேண்டும் என நினைக்கிறார்கள். அந்த வாக்குகளை பி.ஜே.பி வாங்கும். இது எங்களுக்கான ஓட்டு என மதிமுக உரிமை கொண்டாடும். இதுக்கு கிராமத்தில் ஒரு பழமொழி சொல்வார்கள். பிச்சை எடுத்துச்சாம் பெருமாளு. அதை புடுங்கி தின்னுச்சாம் அனுமாரு.

2 கருத்துகள்:

  1. மாற்றத்தை விரும்புபவர்கள் ஆம் ஆத்மிக்குத்தான் வாக்களிப்பார்கள் என்பதை மறந்துவிட்டீர்களா?

    பதிலளிநீக்கு
  2. தமிழ்நாட்டு அரசியலில் இனி தாத்தாவிற்கு முதலிரண்டு இடங்கள் இல்லை என்றதும் தமிபிகளுக்கு வரும் ஆத்திரம் இருக்கிறதே அப்பப்பா.

    பதிலளிநீக்கு