திங்கள், பிப்ரவரி 17, 2014

ஆண்களுக்கு பாலியல் துன்புறுத்தல். - இங்கிலாந்தின் அதிர்ச்சி தகவல்.உலகம் முழுவதும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன என்ற செய்தி தான் நம் இதுவரை கேட்டது, படித்தது, பார்த்ததுயெல்லாம். உலகத்தில் இந்தியா போன்ற ஆசிய நாடுகளில் 1 நிமிடத்துக்கு ஒரு பாலியல் துன்புறுத்தல் நடைபெறுவதாக மனித உரிமை அமைப்புகள், பெண்கள் நல அமைப்புகள், மேற்கத்திய நாளிதழ்கள் புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளன. பல நாட்டு அரசாங்கங்களும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் அதிகரித்து வருகின்றன என ஒப்புக்கொண்டுள்ளன. ஐ.நாவின் பெண்கள் அமைப்பு கூட அதைத்தான் சொல்கின்றன.

இந்நிலையில் இங்கிலாந்து அரசாங்கம் சமீபத்தில் ஒரு புள்ளிவிபரம் வெளியிட்டு ஆச்சர்யத்தை தந்துள்ளது. அந்த புள்ளி விவரப்படி, இங்கிலாந்தில் ஆண்டுதோறும் சிறுவர்கள், ஆண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு 72 ஆயிரம் பேர் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். 2013 செப்டம்பர் மாதம் வரையிலான ஒரு புள்ளிவிவரப்படி 2164 ஆண்கள் பெண்களால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகியுள்ளார்கள். பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாகும் குழந்தைகள், ஆண்கள் எண்ணிக்கை ஆண்டு தோறும் அதிகரித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

பெண்களால் ஆண்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டு மனரீதியாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். பலாத்காரத்தால் பாதிக்கப்படும் ஆண்கள் பெரும்பாலும் புகார் தர முன்வருவதில்லை. மனதில் போட்டு குழப்பிக்கொண்டு தனிமையில் வாழ்கிறார்கள். உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள அவர்களை மீட்டு சராசரி வாழ்க்கை வாழ வைக்க அரசு 5 லட்சம் பவுண்ட் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என இங்கிலாந்து அமைச்சர் டேமியன் கிரியன் அறிவித்துள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாதிக்கப்பட்டுள்ள ஆண்கள், குழந்தைகளுக்கு கவுன்சிலிங் தரவும், சாராசரி மனிதர்கள் போல் வாழ்க்கை நடத்த பல தொண்டு நிறுவனங்கள் இயங்குகிறது. இன்னும் பல தொண்டு நிறுவனங்கள் சேவை செய்ய முன்வர வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார் அதே அமைச்சர். குழந்தைகள் மற்றும் ஆண்களை பாலியல் துன்புறுத்தலில் இருந்து பாதுகாக்க சட்டத்தில் கடுமையான தண்டனைகள் வழங்கும் வகையில் மாற்றம் செய்ய முடிவு செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.


மேற்கத்திய நாடுகளில் பாலியல் விவகாரத்தை வெளிப்படையாக விவாதிப்பார்கள். கணவன் - மனைவி தங்களுக்குள் காமத்தின் தேவை, காமத்தில் பிடித்த வகை பற்றி விவாதித்தே காமத்தில் இணைவார்கள் என்கிறது ஒரு ஆய்வு. அப்படியிருக்க அங்கு பாலியல் துன்புறுத்தல் அதுவும் பெண்களால் ஆண்களுக்கு என்பது ஆச்சர்யமாகவுள்ளது.

காமம் பற்றி செக்ஸ்லாஜிஸ்ட்டுகள் பேட்டிகள் மற்றும் காமசாஸ்திரம் என்ற நூல் வழியாக அறிய வருவது, ஆசை ஆண், பெண் என்ற பேதத்தால் மாறாது. இருவருக்கும் காமம் என்பது ஒரே தன்மை கொண்டது தான். பெண்களின் உடல் அமைப்புகளை கணும்போது ஆண்களுக்கு இயற்கையாகவே ஆசை வரும். அதேபோன்று தான் பெண்களுக்கும், ஆண்களின் உடல் அமைப்பு, லட்சணத்தை காணும் போது ஆசை வரும் இது இயற்கை.


ஆண் வெகு எளிதில் ‘உணர்ச்சியால்’ உந்தப்படுவான், பெண் எளிதில் உணர்ச்சியால் உந்தப்படமாட்டாள். பெண்களிடம் காம உணர்ச்சி உருவானபின் கட்டுப்படுத்துவது கடினம் என்கிறது. உலகம் முழுக்கவே பெண்ணை அடிமைப்படுத்தி ஆளுதல் என்பது ஆண்களின் ரத்த அணுக்களில் உறியது என்பதால் காம உணர்ச்சியால் உந்தப்படுபவன் அடங்கிவிடுவாள் என உடனே ‘காரியத்தில்’ இறங்கிவிடுகிறான். இதனால் தான் நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் அதிகரிக்கிறது.

பசி எடுப்பது போலத்தான் காமமும். பதின் வயதுக்கு மேல் நிச்சயம் ஆணுக்கு பெண் சுகமும், பெண்ணுக்கு ஆண் சுகமும் தேவை. அதுயில்லையென்றால் அவர்கள் மனம் மட்டுமல்ல உடலும் சோர்ந்துவிடும் என்கிறது. பசியை பத்து நாள் அதிகபட்சம் ஒரு மாதம் வரை பொறுத்துக்கொள்ளலாம், நிரந்தரமாக பசியை போக்கிக்கொள்ள முடியாது. அதே போன்றது தான் காமமும். ஆணுக்கு பெண்ணும், பெண்ணுக்கு ஆண் துணை நிச்சயம் தேவை. காமத்தை அடக்கிவிட்டேன் எனச்சொன்னால் அது பொய்யான தகவல் என்பதே இயற்கை கூறும் நியாதி.

பஞ்சனையில் ஆண், பெண் இருவரும் போட்டி போட்டுக்கொண்டு தங்கள் உடல் பசியை தீர்த்துக்கொள்ள வேண்டும். ஒரு ஆண் கட்டிலில் தன் பெண் துணையின் தேவையை பூர்த்தி செய்வது போல பெண்ணும் தன் ஆண் துணையின் தேவையை பூர்த்தி செய்ய வேண்டும். காமத்தில் யார் தயங்கினாலும் ஏன், எதனால் என்பதை அறிந்துக்கொள்ள வேண்டும். பிரச்சனை என்றால் அதை தீர்த்துக்கொள்ள வேண்டும். இல்லையேல் அந்த உடல் மற்றொரு உடலை தேடத்துவங்கும் இது இயற்கை என்கிறது. தேட விருப்பம்மில்லாதவர்கள் மனதில் போட்டு குமைந்துக்கொண்டு உளவியல் ரீதியாக பாதிப்படைவார்கள் என்கிறது. இதை நன்கு அறிந்தவர்கள் தான் இங்கிலாந்துவாசிகள்.

அப்படியிருந்தும் எப்படி சொதப்பினார்கள் என்பது ஆச்சர்யமாகவுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக