சனி, பிப்ரவரி 15, 2014

பாலாவை மன்னிக்கமாட்டார் பாலுமகேந்திரா.ஈழ மண் சினிமாவுக்கு தந்த பிள்ளை பாலுமகேந்திரா. (பாலநாதன் பெஞ்சமின் மகேந்திரா) ஈழத்தின் மட்டகளப்பில் பிறந்து புனோவில் ஒளிப்பதிவு துறையில் பட்டம் பெற்றவர் முதன் முதலில் ஒளிப்பதிவு செய்தது ஒரு மலையாளப்படம். 1972ல் ஒளிப்பதிவை தொடங்கினார். முதல் படம் நெல்லு ஒளிப்பதிவுக்கான மலையாள அரசின் விருதை பெற்று தந்தது. 1977வரை ஒளி கவிஞராக மட்டும் வலம் வந்தவர் 1977ல் கோகிலா என்ற கன்னடப்படத்தை இயக்கி இயக்குநராக பரிணாமித்தார். இலக்கியவாதிகளின் கனவு பிம்பம் பாலுமகேந்திரா தான். 99 சதவிதம் நாவல்களை படமாக்குபவர்கள் தோற்று போவார்கள் ஆனால் வெற்றி படம்மாக தந்தவர் பாலுமகேந்திரா. திரைக்கதை வடிவில் வெற்றி என்றாலும் வசூல் ரீதியாக தோல்வி படமாகத்தான் இருக்கும். இருந்தும் தன்னை மாற்றிக்கொள்ளாத சமரசம் செய்துக்கொள்ளாத இயக்குநர் - ஒளிப்பதிவாளர். யாரிடமும் உதவியாளராக இருந்ததில்லை.

1977 முதல் 2013 வரை 46 வருடங்களில் 26 படங்கள் தான் இயக்கியுள்ளார். ஒளிப்பதிவு செய்த படங்கள் 28. ஐந்து முறை தேசிய விருது. கன்னட, மலையாள, தமிழ் மாநில அரசுகளின் விருதுகள் என பல பெற்றுள்ளார். ஒரு படத்துக்கு எடிட்டிங்காகவும் தேசிய விருது பெற்றுள்ளார்.

இப்படிப்பட்ட சாதனை மனிதரின் மறைவில் சர்ச்சையை உருவாக்கிவிட்டார் இயக்குநர் பாலா.

ஓன்றுக்கு மேற்பட்ட மனைவிகள் இருக்கும் குடும்பத்தில் கணவன் இறந்த பின் நடக்கும் தகராறு தான் பாலுமகேந்திரா இறப்பின் போதும் நடந்துள்ளது. பாலுமகேந்திராவுக்கு மூன்று மனைவிகள். ஒருவர் அகிலா. இந்த தம்பதிக்கு ஒரு மகன் உண்டு. இரண்டாவது மனைவி நடிகை ஷோபா. அவர் தற்கொலைக்கு பின் மூன்றாவதாக திருமணம் செய்துக்கொண்டது நடிகை மௌனிகாவை. வண்ண வண்ண பூக்கள் என்ற படத்தில் மௌனிகாவை அறிமுகப்படுத்தியது பாலுமகேந்திரா. இயக்குநர் – நடிகை என்ற பந்தத்தை தாண்டி இருவரும் கணவன் - மனைவியாக வாழ தொடங்கினர். சுமார் 10 ஆண்டுகளுக்கும் மேலாக அப்படி வாழ்ந்தவர்கள் 1998ல் முறைப்படி திருமணம் செய்துக்கொண்டு தம்பதியாகியுள்ளனர். இதை பாலுமகேந்திராவே 2000ல் வெளிப்படையாக ஒப்புக்கொண்ட விவகாரம்.

பாலுமகேந்திரா உடல்நிலை சரியில்லாமல் விஜயா மருத்துவமனைக்கு கொண்டு சென்ற தகவல் கேள்விப்பட்டு மௌனிகா பார்க்க செல்ல முயன்ற போதும், அவர் இறந்த தகவல் கிடைத்தபோது தன் கணவரை பார்க்க மௌனிகா பார்க்க முயன்றபோதும், அவள் வந்தால் நடப்பதே வேறு என இயக்குநர் பாலா மிரட்டியதாக கூறப்படுகிறது. இது நடக்காமல் செய்திருக்க முடியும் ஆனால் தன் விசுவாசத்தை அம்மா என அழைக்கும் அகிலாம்மாவிடம் காட்ட தேவையில்லாமல் பாலா இதை சர்ச்சையாக்கியுள்ளார்.


முதல் மனைவிக்கு எவ்வளவு உரிமை உள்ளதோ அதே உரிமை இரண்டாவது மனைவிக்கும் உள்ளது என்கிறது சட்டம். ஆனால் இயக்குநர் பாலா தன் குருவின் முதல் மனைவியிடம் காட்டிய பக்தி கலந்த மரியாதையை இரண்டாவது மனைவியிடம் காட்டவில்லை. இயக்குநர் பாலா அவரது மாணவர் தான் மறுக்க முடியாது. ஆனால் அதை விட முக்கியம் மௌனிகா பாலுமகேந்திராவின் மனைவி. இதை மாற்ற முடியாது. பாலாவை விட மௌனிகாவுக்கு தான் அதிக உரிமை. அப்படியிருக்க இறந்த கணவரை மனைவி பார்க்க வரக்கூடாது என தடுக்க ஒரு மாணவருக்கு எந்த உரிமையும் கிடையாது. தன் கணவர் இறந்துப்போனதை காதல் திருமணம் செய்துக்கொண்ட ஒரு மனைவியால் எப்படி தாங்கிக்கொள்ள முடியும். எந்த பெண்ணாலும் தாங்கிக்கொள்ள முடியாது. இது அறியாத முட்டாளா பாலா.

பாலா தடுக்கிறார் என்றதும் பாலுமகேந்திராவின் மாணவர்களாக இருந்து இயக்குநாராகியுள்ளவர்கள் பாலாவிடம் எதிர்த்து கேட்கவில்லை, மௌனிகாவின் உரிமையை நிலை நாட்ட முயலவில்லை. மற்ற இயக்குநர்களும் அமைதி காத்துவிட்டனர். ஏன் எனில் பாலா பெரிய இயக்குநர். பெரிய இயக்குநராக இருந்து என்ன புரியோஜனம். ஒரு பெண்ணின் உணர்வுகளை மதிக்க தெரியாதவர்யெல்லாம் பெரிய இயக்குநரா?. எம் பார்வையில் அவர் சராசரி மனிதர் கூட கிடையாது.

தன்னை வரக்கூடாது என மிரட்டுகிறார்கள் என மௌனிகா பேசியபின் அது சர்ச்சையானது. அதன்பின் ஒரு சில மூத்த இயக்குநர்கள் சமாதானம் பேசி மௌனிகா அஞ்சலி செலுத்த மட்டும் அனுமதி வாங்கி தந்துள்ளனர். மௌனிகா தன்னால் பிரச்சனை வரக்கூடாது தன் கணவர் இறப்பு சர்ச்சையாகிவிடக்கூடாது என்பதற்காக தன் கணவரின் முகத்தை பார்த்து சில நிமிடங்கள் அழுதுவிட்டு அங்கிருந்து அழுதபடியே சென்றுள்ளார்.


பாலா, ராம், வெற்றிமாறன், சுகா போன்ற பல நல்ல திரை படைப்பாளிகளை உருவாக்கியுள்ளார் பாலுமகேந்திரா. நல்ல மனிதர்களை உருவாக்கியுள்ளாரா என்ற கேள்விக்கு பாலுமகேந்திரா பதில் சொல்லவில்லை. அவரின் திரைவாரிசுகளில் ஒருவரும், செல்லப்பிள்ளையுமான இயக்குநர் பாலா தெரிவித்துவிட்டார்.

இது குருவுக்கு சிஷ்யர்(கள்) செய்த துரோகமாகவே பார்க்கப்படும். வானில் நட்சத்திரமாக ஜொலிக்கும் பாலுமகேந்திரா நிச்சயம் பாலாவை மன்னிக்கமாட்டார்.

10 கருத்துகள்:

 1. இவருக்கு பாடம் கற்பித்தவராக இருக்கலாம் பணம் சம்பாதிக்க ஆசிரியராய் இருக்கலாம் ஆனால் மௌனிகா மனைவி அவருக்கு உள்ள உரிமையை தெருவில் போவோர் எல்லாம் சட்டம் பேச கூடாது அவர் பேசும் பெண்களிடம் மனைவியை விடுத்து உறவு கொள்வாராம் ஆனால் தன்னை கண்ணியமாய் துணைவி என்று கூறிகொண்டவரை தள்ளி விடுவாராம் நினைத்திருந்தால் முதல் மனைவியை விவாக ரத்து செய்த பின் என்னை தொடு என்றால் இன்றைக்கு இந்த பேச்சே இருந்திருக்காது ஒரு உள்ளார்ந்த காதலின் வலி தெரியதவர்கலெல்லம் என்ன இயக்னுனர்கலொ

  பதிலளிநீக்கு
 2. டேய் ஊரு பேரு தெரியாத வெறும்பயலே ...பாலா மௌனிகாவ உள்ள உடமாட்டேன்னு யாருகிட்ட சொன்னாரு? அவரு தான் சொன்னாருன்னு எவன் சொல்லுறான்? "சொல்லப்படுகிறது" அப்டின்னா என்ன?
  ஒன்னு செய்யி..ஓம் புள்ள குட்டிகளையாவது படிக்க வைய்யி ...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இந்த லிங்க்கில் சென்று படியுங்கள். இன்னும் பல உண்மைகளை அறிந்துக்கொள்ளுங்கள்.............

   http://www.newtamilcinema.com/2014/02/3736/

   நீக்கு
 3. பதில்கள்
  1. அன்வர் அவர்களுக்கு, தவறுதலாக ஷோபனா என டைப் செய்துவிட்டேன். தவறை சுட்டிகாட்டியமைக்கு நன்றி. நடிகை ஷோபா. கேரளாவை சேர்ந்த பிரபல நடிகை பிரேமாவின் மகள் ஷோபா. தமிழில் குழந்தை நட்சத்திரமாக தட்டுங்கள் திறக்கப்படும் படத்தில் நடித்துள்ளார். பசி படத்துக்காக தேசிய விருது பெற்ற நடிகை. மலையாளம், தமிழ், கன்னடம், தெலுங்கு என 62 படங்களில் நடித்தவர் தனது 17வது வயதில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். பாலுமகேந்திரா ஷோபாவை தன் தேவதை என்பார்.

   நீக்கு
 4. நல்ல படைப்பாளிகள் நல்ல மனிதராக இருக்க வேண்டுமா என்ன. நடிகை ஊர்வசி சோபா ( சோபனா அல்ல ) கொலை (தற்கொலையா ? )யில் சம்பந்தப்பட்ட பெரிய மனுஷன் தானே இந்த பாலானந்தா பெஞ்சமின் மகேந்திரா ( பாலு மகேந்திரா ) எல்லாம் அப்படி இப்படி தான் இருக்கும். இதை எல்லாம் ஆ! என பார்த்துகிட்டு இருந்தா நம்ம வீட்டில் சோறு பொங்கி திங்க வேண்டாமா? போய் வேலை வெட்டிய பார்ப்பியா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹிஹிஹி இந்த இலங்கைகாரருக்கு 3 மனைவிகளா!!! :) இரண்டு பெண்டாட்டிகாரனென்று கருணாநிதியை தாக்கும் ஈழத்தை சேர்ந்தவங்க இதுற்கு என்ன சொல்வாங்க.

   நீக்கு
  2. சகோ இக்பால் செல்வன், உங்க கோடங்கி பதிவுக்கு பின்னோட்டமிட முடியல்ல சரிபாருங்க.

   நீக்கு
 5. //ஈழ மண் சினிமாவுக்கு தந்த பிள்ளை பாலுமகேந்திரா. (பாலநாதன் பெஞ்சமின் மகேந்திரா) ஈழத்தின் மட்டகளப்பில் பிறந்து //

  மட்டகளப்பில் இருந்து எதுக்கு இந்தியா வந்தாராம்?

  குடியுரிமை இல்லைனு தொரத்திவிட்டுட்டு இப்போ மட்டும் இலங்கை மட்டக்கிளப்பு ,பட்டயக்கிளப்புனு பேசிக்கிட்டு அவ்வ்!

  சுமார் 10-12 லட்சம் தமிழர்களூக்கு குடியுரிமை இல்லைனு இலங்கையில் இருந்து விரட்டப்பட்டார்கள், அப்படி வந்து ,தமிழ்நாட்டில் பேரு வாங்கினது ஒன்னு "ஆ.ராசா,இன்னொன்னு பாலு மகேந்திரா" :-))

  # //இரண்டாவது மனைவி நடிகை ஷோபனா. அவர் தற்கொலைக்கு பின் மூன்றாவதாக திருமணம் செய்துக்கொண்டது நடிகை மௌனிகாவை. வண்ண வண்ண பூக்கள் என்ற படத்தில் மௌனிகாவை அறிமுகப்படுத்தியது பாலுமகேந்திரா. இயக்குநர் – நடிகை என்ற பந்தத்தை தாண்டி இருவரும் கணவன் - மனைவியாக வாழ தொடங்கினர். சுமார் 10 ஆண்டுகளுக்கும் மேலாக அப்படி வாழ்ந்தவர்கள் 2001ல் முறைப்படி திருமணம் செய்துக்கொண்டு தம்பதியாகியுள்ளனர். இதை பாலுமகேந்திராவே வெளிப்படையாக ஒப்புக்கொண்ட விவகாரம். //

  ஷோப கொலை செய்யப்பட்டார், அது போகட்டும்,மவுனிகா
  முறைப்படி மனைவினா எப்படி?

  அப்போ இயக்குனர் சங்கத்துல இருந்து கொடுக்கும் உதவி தொகையை மவுனிகாவுக்கு கொடுப்பாங்களா? இல்லை பாலுமகேந்திராவோட இன்சுரன்ஸ் கிளெய்ம் செய்ய முடியுமா?

  அவரு துணைக்கு வச்சிக்கிட்டார், இந்தம்மா ஒத்துக்கிட்டாங்க, ,அரசு ஆவணப்படி மனைவினுலாம் கோரவே முடியாது, எல்லாமே குப்பை,அதுல நீர் மோந்து பார்த்து நியாயம் சொல்ல வரீங்களா அவ்வ்!

  #ஹி...ஹி ...அர்ச்சனானு ஒரு பெண்மணி அவங்க கதைய யாரு வந்து சொல்றது அவ்வ்!

  பதிலளிநீக்கு