புதன், பிப்ரவரி 26, 2014

6. விடுதலைப்புலிகள் ( சிலோன் முதல் ஈழம் வரை )




     தமிழர்களை நசுக்கிய சிங்கள அரசிடமிருந்தும், சிங்கள மக்களிடமிருந்தும் தன் மக்களை காப்பாற்றவும், உரிமைகளை பெறவும் எழுச்சி பெற்று போராடிய ஆயுத குழுக்களுள் தனித்தன்மை வாய்ந்த ஆயுத குழு விடுதலை புலிகள் அமைப்பு தான். உலக அளவில் பேசப்படுபவர்கள். இலங்கை தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளை கடவுளாக பாôக்கிறார்கள்.

      இலங்கையின் யாழ்பாணம் அருகேயுள்ள வால்வெட்டி துறையை சேர்ந்த 7 சிறுவர்கள் கூட்டாக சேர்ந்து ஆரம்பித்த தமிழ் புதிய புலிகள்மைப்பில் வீரம், நாட்டுக்காக உயிர் அர்ப்பணிப்பு, ஒழுக்கம் தேவை என்பதை பிரதாணமாக வைத்தார் அமைப்பின் தலைவரான 14 வயது பிரபாகரன். சிறு வயதிலேயே அமைப்பை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்ல பெரிய கனவே கண்டார். அக்கனவு வர காரணமாக இருந்தவர்கள் சுபாஷ் சந்திர போஸ், பக்த்சிங்கும் ஆவர்.

         தனது தமிழாசிரியரின் விருப்பப்படி புத்தகங்களை படிக்க ஆரம்பித்த பிரபாகரன்க்கு எதிரியின் வலிமை பற்றி கவலைப்படாமல் இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி இந்தியாவை அடிமை படுத்தி வைத்திருந்த ஆங்கிலேயனை எதிர்த்த நேதாஜியின் வரலாறு பிரபாகரனை மிகவும் கவர்ந்தது. அதேபோல் உயிரைப்பற்றி கவலைப்படாமல் நாட்டுக்காக தூக்கு கயிற்றை முத்தமிட்ட பகத்சிங்கின் அர்ப்பணிப்பால் உருகிபோனார். இதை படித்தவர் தனது அமைப்பிற்கு வீரம், அர்ப்பணிப்பு உள்ளவர்களையே தேர்ந்தெடுத்தார்.

        ஆரம்பத்தால் இளைஞர் பேரவையில் இருந்த பிரபாகரன். குட்டிமணி-தங்கதுரையுடன் இணைந்து குண்டு தயாரிக்கவும் கற்று கொண்டார். அதன் பின் தனது டி.என்.டி அமைப்பை உருவக்கியபோது ஆயுதமென்று எதுவுமில்லை. அப்போது யாழ்பாணத்தில் ஒருவர் தனது ரிவால்வரை விற்க போகிறார் என்ற தகவல் வர பிரபாகரன் தனது நண்பர்களுடன் போய் விலை கேட்டதும் ஏற இறங்க பார்த்த அந்த நபர் சின்ன பசங்க என்பதால் விலையை அதிகப்படுத்தி 300 ரூபாய் என்றார். திரும்பி வந்து பணத்தை புரட்ட ஆரம்பித்தார்கள். பிரபா தனது அக்காவின் செயினை யாருக்கும் தெரியாமல் எடுத்து வந்து விற்று பணம் போட்டும் 300 ரூபாய் சேரவில்லை 180 ரூபாயோடு பேரம் பேச 300 ரூபாய்க்கு கீழே இறங்கி வர மறுத்துவிட்டார் துப்பாக்கிக்காரர். துப்பாக்கி வாங்கும் ஆசை நிராசையானது பிரபா மனதில் அது ஆழமாக பதிந்தது.

துப்பாக்கி இல்லாமல் பயிற்சி செய்ய முடியாது என்பதால் மீண்டும் குட்டிமணி-தங்கதுரை குழுவுடன் பயிற்சி செய்ய ஆரம்பித்தார். அப்போது குட்டிமணி, பிரபாகரனோடு 3 பேர் சேர்ந்த குழுவை தயார் செய்து சிங்கள எழுத்து பொறிக்கப்பட்ட பேருந்தை தீ வைத்து எரிக்கும் வேலையை தந்தார் வெறியுடன் போன 3 பேரும் கிட்டே போக, போக அதில் 2 பேர் பயத்தில் பாதியில் ஓடிவிட்டனர். பிரபாகரன் மட்டும் தனியாளாக போய் பேருந்துக்கு தீ வைத்து தனக்கான முதல் பணியை வெற்றியாக்கினார். அந்த வெற்றி செய்தியை குழுவிடமும், நண்பர்களிடம் மட்டுமே கூற முடிந்தது. காரணம்  ரகசிய குழுவில் இருப்பது குடும்பத்தில் யாருக்கும் தெரியாது. தெரிய படுத்தவும்மில்லை.

                அதே நேரம் இலங்கையின் கலாச்சார துறை துணை அமைச்சராக சந்திராசிரி என்பவர் இருந்தார். தமிழர்கள் என்றால் இவருக்கு எட்டிக்காய் போல தனக்கு பொழுதுபோகல, ஆபிஸ்ல வேலை இல்லைன்னா தமிழனை வெட்டுங்க  என உத்தரவு போட்டுவிட்டு இறப்பு தகவலை கேட்டு மகிழ்ந்து கொள்பவர். அவரை பரலோகம் அனுப்பமுடிவு செய்த பொன்.சிவக்குமரன் அந்த துணை அமைச்சர் கார்க்கு டைம்பாம் வைத்து தகர்த்து புன்னகைத்தார்.

                இது சிங்கள அரசை கோபம் கொள்ள வைத்து ஆயுதம் தூக்கும் தமிழனை தேடி அழிக்க உத்தரவு இடப்பட்டது. காவல்துறை தேடி அலைந்தபோது முக்கிய ஆயுத குழு பிரமுகர்களெல்லாம் தலைமறைவானார்கள். அரசல் புரசலாக கேள்விபட்ட காவல்துறை பிரபாகரன் வீட்டிக்குபோக அதற்கு முன்பே எஸ்கேப் ஆன பிரபாகரன் குட்டிமணி - தங்கதுரையுடன் தலை மறைவானார். பிரபாவை தேடி வந்த அவரது தந்தையாரிடம், நான் உங்களுக்கு பயன்படமாட்டேன், நாட்டுக்காக என்னை அர்பணிச்சிட்டேன் என தீர்க்கமாக கூற உறுதியை கேட்டு திரும்பிவிட்டார்.

                குட்டிமணி, பிரபாகரன், தங்கமணி, பெரிய ஜோதி 4 பேரும் ஒரு தோனியில் ஏறி வேதாரண்யத்தில் இறங்கியவர்களில் குட்டிமணி, தங்கதுரையும் சேலம் பயணமானார்கள், பெரிய ஜோதியும், பிரபாகரனும் மதுரை போய் அங்கிருந்து சென்னை பயணமானார்கள். ஒரு நாள் ஏதோச்சையாக இலங்கையின் டாப் மோஸ்ட் கிரிமினிலான செட்டிதனபால்சிங்கத்தை சந்தித்தார் பிரபாகரன். செட்டியிடம் என்னோட குரூப்ல சேர்ந்துக்க என அழைத்தார் பிரபாகரன். இதைப்பார்த்த பெரியஜோதி வேணாம் தம்பி எனச்சொல்ல இல்லண்ணே திறமையானவன், சொல்றத செய்வான், எனக்கு நம்பிக்கையானவன் என சர்டிப்கெட் தந்து டி.என்.டி அமைப்பில் இணைத்துக் கொண்டார்.

            அதே நேரம் இலங்கையில் 1974 ஜனவரி 3-10ல் யாழ்ப்பாண வீர சிங்கம் மைதானத்தில் நடைபெற்ற உலக தமிழராட்சி மாநாட்டில் போலிஸாரால் 9 பேர் இறந்தனர். இதற்கு காரணமான யாழ்ப்பாண மேயரான ஆல்பிரஃட் துரையப்பா, காவல்துறை அதிகாரி துரையப்பா இருவரையும் கொல்ல முயன்று பொன்.சிவக்குமாரன் தோல்வியை தழுவினார். அடுத்து சில தோல்விகளால் குப்பியை கடித்து இறந்து போயிருந்தார்.

                தமிழகத்தில் சும்மா  இருப்பது பிடிக்காமல் யாழ்பாணம் திரும்பிய பிரபாகரன் மேயர், காவல்துறை அதிகாரியை கொல்லும் பணியை ஏற்றுக்கொண்டார். மேயரை கண்காணித்த டி.என்.டி அமைப்பினர் திட்டம் தீட்ட ஆரம்பித்தனர். அதே நேரம் காங்கேசன் துறை தொகுதியில் இடைத்தேர்தல் தந்தை செல்வாவுக்காக பிரபாகரன் தேர்தல் வேலை செய்ய வேண்டியிருந்தது. தேர்தலில் வெற்றியும் கிடைத்தது. அப்போது ஓரளவு பணமும் இருந்ததால் 2 ரிவால்வர்களை வாங்கினர் பிரபாகரன். குழுவில் உறுப்பினர் எண்ணிக்கை சேர ஆரம்பித்தது. பண தட்டுப்பாடும் வந்தது. வங்கியை கொள்ளயடிக்கலாம். என்றான் செட்டி. நம்ம முதல் தாக்குதல் பணத்துக்காக இருக்ககூடாது என மறுத்தார்.

             ஆனால் செட்டியோ ஒரு வங்கியில் கொள்ளையடித்தான். அப்பணத்தில் சுகபோகமாக வாழ ஆரம்பித்தவன்மேல் போலிஸ் சந்தேகப்பட்டு விசாரித்து பிடித்தது. பிரபாகரன் அதிர்ந்து போனார். நண்பனே ஏமாற்றிய வருத்தம் உடனே அமைப்பினரை தலைமறைவாக சொன்னார். காரணம் செட்டி டி.என்.டி பற்றி கூறிவிட்டால். ஆனால் செட்டி அப்படி எதுவும் சொல்லவில்லை. 

அமைப்பை கூட்டிய பிரபாகரன் மேயரை போட்டு தள்ளும் திட்டத்தை வேக வேகமாக தீட்டினார். திட்டம் தயாரானது. பிரபா தலைமையில் 1975 ஜீலை 27ந்தேதி வரதராஜ பெருமாள் கோயில் அருகே வந்த மேயரின் காரை கை காட்டி நிறுத்திய பிரபா கண் இமைக்கும் நேரத்தில் பிரபாவின் துப்பாக்கி குண்டு மேயரின் உயிரை பரித்தது. அதே காரில் ஏறி பிரபா தனது குழுவோடு தப்பி விட்டார். நமது துரோகி அழிந்தான். அழிச்சது யார்னு தெரியலயே எப்படியும் நம்ம பசங்க தான் செஞ்சியிருக்கனும் அது யாரயிந்தா நமக்கென்ன என தமிழ் மக்கள் மகிழ்ச்சியில் துள்ளி குதித்தனர். சிங்கள மக்களும், சிங்கள அரசு தலைமையும் அதிர்ந்தே போனது. பிரதமர் ஸ்ரீமாவே சுட்டது யார்னு பாத்து தேடி புடிங்க என உத்தரவிட்டார்.

                எதிர் விளைவு எப்படியிருக்குமென திட்டமிட்ட பிரபா, தனது குழுவினரிடம் யாரும் வீட்டுக்கு போககூடாது. போனா வீட்ல தங்க கூடாது. எதிரியிடம் மாட்டிக்காதீங்க என எச்சரிக்கை செய்தார். எச்சரிக்கையை மீறி ஆறுமுகம்கிருபாகரனும், கலாபதியும் வீட்டுக்கு போய் ஆயுதத்தோடு ரோந்துவந்த போலிஸாரிடம் பிடிபட்டனர். விசாரணையில் தமிழ் விடுதலை புலிகள் பற்றி இருவரும் கூற இலங்கை காவல்துறையே அலறியது. வால்வெட்டி துறை பிரபாகரனா பண்றான் என ஆச்சர்யமும், அதிர்ச்சியும் அடைந்தனர். பிரபாகரனை தேட ஆரம்பித்தனர்.

                யாழ்ப்பாண இளைஞர்களே குதூகலித்தனர். பிரபாகரனை தேடி அலைந்து அவரை சந்தித்து இயக்கத்தில் இணைய முன் வந்தனர். வந்த இளைஞர்களில் திறமையானவர்கள் யார் யார் என்பதை கண்டே சேர்ந்தவர் மற்றவர்களை ஆதரவாளர்களாக்கி சோர்ஸ்களாக்கினார், சிலரை புறக்கணிக்கவும் செய்தார். இளைஞர்கள் கூட்டம் அதிகமாக அவர்களுக்கு பாதுகாப்பான பயிற்சி களத்தை அமைக்க இடத்தை தேடலாயினார்.

                வவுனிய நகரிலிருந்து 5கி.மீ தொலைவில் மறைந்த மரங்கள் அடங்கிய காட்டினில் அமைந்த மறைவிடத்தை கண்டறிந்து பூந்தோட்டம் என பெயரிட்டு பயிற்சி களத்தை உருவாக்கினர். இயக்கத்தில் இணைபவர்களுக்கு தற்காப்பு கலைகளாக கராத்தே, மல்யுத்தம், தாக்குதல், துப்பாக்கி சுடுதல், குண்டு தயாரித்தல் உட்பட எல்லாவற்றையும் கற்று தர ஏற்பாடு செய்தவர். மனதில் உறுதியையும் விதைத்தார். எதிரியிடம் மாட்டினால் உயிரை மாய்த்துக்கொள்ள மனதலவில் தயார் செய்தார். பயிற்சியின்போது வீரர்கள் தவறு செய்தால் கத்திவிடுவார். எதிரியை விட நீ திறமைசாலியாக இருக்கவேண்டும் அப்போது தான் நீ வெள்ளமுடியும். தாமதம் வர கூடாது என எச்சரிப்பார்.


       அமைப்பில் இளைஞர்கள் கூட்டம் அதிகமானதால் தேவைகளும் அதிகமானது பணத்தட்டுப்பாட்டால் அமைப்பு கஸ்டப்பட்டது அரசின் புத்தூர் வங்கியில் கொள்ளையடிக்க திட்டமிட்டார்கள். தகவல் திரட்டப்பட்டது வங்கி பணியில் எத்தனை பேர், பாதுகாப்பு ஏற்பாடுகள் எப்படி, வங்கியின் உள்அமைப்பு எப்படியென தகவல் திரட்டப்பட்டவுடன் பக்கவாக ப்ளான் போடப்பட்டது. 1976 மார்ச் 5 புத்தூர் வங்கியில் பிரபா தலைமையில் நுழைந்த பசப அமைப்பினர். 5 லட்ச ரூபாய் நகையாகவும், 2 லட்ச மதிப்பில் நகையாக மூட்டை கட்டிக்கொண்டு கிளம்பினர் மொத்த வேலையுமே 15 நிமிடத்தில் முடிந்தது.

                பணம் கைக்கு வந்ததும் எதிர்கால திட்டத்த தீட்ட ஆரம்பித்தார் பிரபாகரன். 1976 மே 5ல் அமைப்பின் முக்கிய பிரமுகர்களை பூந்தோட்டத்தில் கூடி புதிய தமிழ் புலிகள் என்ற பெயரை தமிழீழ விடுதலைப் புலிகள் என மாற்றினார். அமைப்பிர்காக மதுரையை சேர்ந்த இளம் ஓவியர் ஒருவர் மூலம் கொடியையும் உருவாக்கியிருந்தார். மஞ்சள்-சிவப்பு கலர், எதிரி மீது பாயும் புலி கால்கள், வகையில் அதன் பின்னால் பெருக்கல் குறியில் 2 துப்பாக்கியை நிற்க வைத்தவர் அவைகளை சுற்றி துப்பாக்கி ரவைகளை அடுக்கி வைத்து கொடியை உருவாக்கி தந்திருந்தார். அமைப்பின் உறுப்பினர்கள் மது, மாதுக்களை எண்ண கூடாது, பாக்கு, பீடா, புகைத்தல் ஆகியவையை நோக்க கூடாது. நமது நோக்கம் தமிழீழம் (தனிநாடு) அதற்கென ராணுவம், பொருளாதாரம் (நீதி) கல்வி, அரசியல் துறைகளை உருவாக்க வேண்டும்.

                நமது நோக்கத்தை ஏற்று இயக்க உறுப்பினர்களாக வருபவர்கள். குடும்ப உறவை துரக்க வேண்டும், அமைப்பில் சேர்ந்ததும் சொந்த பெயரை துறந்து இயக்கம் சூட்டும் பெயரை ஏற்றுக்கொள்ள வேண்டும். இயக்கத்தை விட்டு வெளியேறுபவர்கள் மாற்று இயக்கத்தில் சேரகூடாது. இயக்க உறுப்பினர்கள் கல்யாணத்தை பற்றி நினைக்கவே கூடாது. தலைமைக்கு விசுவாசமாகயிருக்க வேண்டும் தலைமையின் கட்டளைகளை சிரமம் மேற்கொண்டு செயல்படுத்த வேண்டும். இயக்கத்தவர்கள் மக்களோடு நெருங்கி பழகி இயக்கத்தை வளர்க்க வேண்டும், நமது எதிரிகள் சிங்கள அரசும்-சிங்கள வெறியர்களும் தான் என போதிக்கப்பட்டார்கள்.

                அமைப்பபை நிர்வகிக்கவும், முடிவுகளை எடுக்க மத்தியகுழு அமைக்கப்பட்டது. மத்திய குழுவில் பிரபாகரன், நாகராஜா, செல்லக்கிளி, ஐயர், விஸ்வேஸ்வரன் ஆகியோர் இருந்தனர். இதில் பிரபாகரனுக்கு அரசியல் மற்றும் ராணுவ பிரிவின் தலைவர் பொறுப்பை எடுத்துக் கொண்டார். மற்றவர்களுக்கு நீதி பிரிவு, ஆட்கள் சேர்ப்பு பிரிவு, பயிற்சி பிரிவு என பிரித்து தரப்பட்டது. முதல் வேலையாக இலங்கை காவல்துறையின் உளவு பிரிவின் செயல்பாடுகளை கண்காணித்தல், உளவு சோர்ஸ் யார், யார்? தமிழனை காட்டி கொடுக்கும் தமிழ் துரோகிகள் யார்? என தேடி கண்டுபிடித்து துரோகிகளை களையெடுத்தனர். தொடர்ந்து போர் திட்டங்களையும் தீட்ட ஆரம்பித்தனர்.

                1977 பொது தேர்தலுக்கு முன் தந்தை செல்வா தமிழ் ஐக்கிய முன்னணியை தமிழ் ஐக்கிய விடுதலை முன்னணி ஆக பெயர் மாற்றினர். அதற்கு முன்பே தீவிரவாத சிந்தனை கொண்டு இளைஞர்களையும், குழுக்களையும் ஆதரித்தவர், ரகசியமாக பண உதவியையும், ஆலோசனையையும் தந்து வந்தார். பிரபாகரன் கூட ஆலோசனை பெற்றார். 1977 ஏப்ரல் 29 தமிழர்களின் நம்பிக்கை நட்சத்திரமாம் பமகஊன் தலைவருமான தந்தை செல்வா மறைந்ததும் அவ்விடத்துக்கு அமிர்தலிங்கம் வந்தார். அப்போது நடந்த தேர்தலில் சிங்கள அரசியல் நரியும், டட்லி அமைச்சரவையில் நிதி அமைச்சராகவும் இருந்த ஜெயவர்த்தனே பிரதமர் ஆனார்.

                தமிழர் பகுதிகளில் தமிழர் நலன், தமிழகம் கோரிக்கையை மக்கள் முன் வைத்த பமகஊ கட்சிக்கு அமோக வெற்றி அதனால் அமிர்தலிங்கம் எதிர் கட்சி தலைவராகும் வாய்ப்பு பலரும் அமிர்தலிங்கம் எதிர்கட்சி தலைவராக மாட்டார் என நினைக்க அதற்கு மாறாய் எதிர்கட்சி தலைவர் பொறுப்பை ஏற்றவர் அரசின் பங்களா, கார்களை பெற்றார். இதற்கு எதிர்ப்பு கிளம்பியதும் அமைதியாக அனைவரிடமும் இது மூலமா நிறைய சாதிக்கலாம் பொருமையாயிருங்க என்றார். புதுசாக பதவியேற்ற ஜெயவர்த்தனே அரசிடம் முன்பிருந்த ஆட்சியாளர்களை விட அதிகமான குரோதமேயிருந்தது. 1977 ஆகஸ்ட் 15 யாழ்ப்பாண நகர் ரோட்டரி கிளப் விழாவில் சிங்கள காவலர்கள் அனுமதி அட்டையோ, அடையாள அட்டையோ எதுவும்மில்லாமல் விழா மண்டபத்தில் நுழைய முயல தமிழ் காவலர்கள் தடுத்து நிறுத்தியதால் பிரச்சனை ஆனது. அது அங்கேயே அடி-தடியாக மாறியதால் பிரச்சனை ஜெயவர்த்தனே காதுக்கு கொண்டுபோகப்பட்டது. கோபமான பிரதமர், அவனுங்கள இவுங்களால திருப்பியடிக்க முடியலன்னா இவுங்கயெதுக்கு என கத்த அதை கேட்டு சிரித்தபடியே வெளியே வந்த சிங்கள அதிகாரிகள் தகவல் அனுப்பினர்.

      அடுத்தடுத்த நாட்களில் யாழ்ப்பாண நகரமே கண்ணீர் விட்டது. திரும்பிய பக்கமெல்லாம் தீ மூட்டமும் புகையும் தான், குப்பைகளை போல யாழ்ப்பாண வீதிகளில் சடலங்கள், ஓடையாக ஓடியது தமிழனின் குருதி இறந்தவர்கள் 350 பேர், தரைமட்டமான வீடுகள் 40 ஆயிரம், கை-கால் இழந்தவர்கள் கணக்கில்லை என அறிவிக்கப்பட்டது. ஓடினார்கள் எல்லோரும் அமிர்தலிங்கத்திடம் கோபத்தில் குமுறியவர்களை வார்த்தை ஜாலத்தில் சாந்தப்படுத்தியவர் கூட்டத்தோடு நின்றிருந்த பிரபாகரனை மட்டும் தனியே அழைத்து போனவர்.

         இவன் பேரு உமாமகேஸ்வரன் கொழும்பு நகரோட இளைஞர் பேரவை பொறுப்பாளர். இவனை உன்னோட சேர்த்துக்க. ஆங்கிலம் சரளமா பேசுவான், எழுதுவான், திறமையானவன், நம்பிக்கையானவன் என சர்டிப்கெட் தர பிரபாவும் உமாவோடு அடுத்தடுத்து 2 முறை பேச இருவருக்கும் எண்ண அலை ஒத்துபோனது. உமாமகேஸ்வரனை தம் பயிற்சி பாசறைக்கு அழைத்து வந்த பிரபாகரன் இயக்கத்தவர்களுக்கு அறிமுகப்படுத்திவிட்டு மத்திய குழுவில் மாற்றம் கொண்டு வந்தவர் திறமைக்கு மதிப்பு தர எண்ணி தனது பொறுப்பிலிருந்து அரசியல் துறையை உமாமகேஸ்வரனுக்கு தந்து அவரின் துறையில் üசுதந்திரம்ý தந்தார். இது தொடக்ககால உறுப்பினர்களுக்கு மனவருத்தத்தை தந்தது.

                அதே நேரம் யாழ்ப்பாண மேயர் துரையப்பாவின் கொலை வழக்கை சீக்கிரம் கண்டு பிடிக்க சொல்லி கருணாநிதி, சண்முகநாதன், மற்றொரு சண்முக நாதன் என 3 தமிழ் காவல்துறை அதிகாரிகளை அரசு நியமித்தது. பிடிப்பட்டால் சுட்டுதள்ளுவோம் என வீரவசனம் பேசிவிட்டு வழக்கை விசாரித்தவர்களின் புகைப்படங்களை தேடிப்பிடித்த பிரபாகரன் திட்டம் போட்டு 1978 பிப்ரவரி 4, கருணாநிதியையும் தொடர்ந்து மே-18 2 சண்முகநாதன்களையும் கொன்றதால் காவல்துறை தலைமை மட்டுமல்ல ஜெயவர்த்தனாவே ஆடிப்போனார்.

      இவுங்கள கொன்னது நாங்க தான் என ஆயுதகுழு ஒவ்வொன்றும் தகவலை மக்களிடத்திலே பரப்பிக் கொண்டிருந்தது. அதை பற்றி கவலைப்படாமல் பிரபாகரன் அம்பாரை தொகுதி எம்.பி கனகரத்தினத்துக்கு குறி வைத்தார். காரணம், அம்பாரை தொகுதி இடை தேர்தலில் தமிழர்களிடம் ஏகப்பட்ட வாக்குறுதி தந்து வென்ற கனகரத்தினம் ஜெயித்ததும் ஜெயவர்த்தனாவின் ஆதரவாளராக மாறிவிட்டார் அதற்காகவே அவர் உயிருக்கு குறி வைக்கப்பட்டது. இப்பணியை பிரபாகரன், உமா ஆகிய இருவரும் கையிலெடுத்தனர். 1978 ஜனவரி 26 (இந்திய குடியரசு தினம்) கொழும்பு போயிருந்த இவரும் கனகரத்தினம் வீட்டருகே கனகரத்தினம் கார் மீது குண்டு வீசிவிட்டு தப்பினர். கொழும்பிலிருந்து பிரபாகரன் கிளம்பும்போது உமா நீ இங்கேயே இருந்து சில பணிகளை கவனி அழைக்கும் போது வந்தா போதும்மென கூறிவிட்டு தனியாளாக பஸ் ஏறினார்.

           பிரபாகரன் ஏறி அமர்ந்த அதே பேருந்தில் ஏறிய 2 சிங்கள காவலர்கள் பிரபாகரனோடு அமர்ந்து எவனோ பிரபாகரனாம் அவன் தான் செய்திருப்பான்னு டிபார்ட்மென்ட்ல சொல்றாங்க அவனை சீக்கிரம் புடிச்சிடலாம். அவனை புடிச்சதும் நான் தான் அவனை கொல்வன் என பேசிக் கொண்டு வர பக்கத்திலிருந்து பிரபாகரன் மெல்ல புன்னகைத்தபடியே யாழ்ப்பாணம் வந்தார். அடுத்த 3 மாதத்தில் கனகரத்தினம் இறந்துபோனார்.

                எம்.பி மேல் குண்டு வீசியது, அதிகாரிகளை கொன்றது. எல்.டி.டி.இ தான் என அறிந்த பிரதமர் ஜெயவர்த்தனே எல்.டி.டி.இ யை அழிக்க பஸ்தியம்பிள்ளை என்ற அதிகாரியை நியமித்தார். அவரும் யாழ்ப்பாண விசாரணையில் எல்.டி.டி.இ யின் மறைவிடத்தை கண்டு பிடித்து சுற்றியும் வளைத்தார். அதில், அமைப்பின் தலைகளான உமா, நாகராஜா, செல்லக்கிளி இன்னும் சிலர் மாட்டிக் கொண்டனர். கவலைப்படாத செல்லக்கிளி சரணடைவதாக கையை தூக்கிக்கொண்டு போனவர் கிட்டே போனதும் திட்டப்படி குனிந்துக் கொள்ள தோட்டாக்கள் பாய்ந்தது பஸ்தியம்பிள்ளை உட்பட நான்கு போர் காலி. சந்தோஷத்தோடு பிரபாகரனை தேடி போனவர்கள் விவகாரத்தை கூறியதும் காட்டி தந்தவனை காலி பண்ணுங்க என உத்தரவு போட்டவர். அவர்களின் சாமார்த்தியத்தை மெச்சியவரிடம் உமா முன்வந்து, தம்பி நாம கஸ்டப்பட்டு பலரை கொல்றோம். ஆனாஅதை வேற சில இயக்கங்கள் தாங்கள் பண்ணதா தகவலை பரப்புது. அதனால நாம தான் அதையெல்லாம் பண்ணாத வெளியிடலாம் அப்பதான் மக்களும் நம்மை ஆதரிப்பாங்க எனக்கூற யோசித்த பிரபா சரியென ஓகே பண்ண வெளிப்படையாக வெளியே வந்தது கபபஉ

                1978 ஏப்ரல் 25 செய்திதாள்களில் டி.என்.டி யாக இருந்து எல்.டி.டி.இ யாக மாறிய நாங்கள் தான் மேயர் முதல் பஸ்தியம் பிள்ளை வரை கொன்றோம் என தேதி வாரியாக அடுக்கியிருந்தவர்கள் இதுக்கு வேற யாராவுது உரிமை கொண்டாடின விளைவு விபரிதபாகியிருக்கும் என உமா கையெழுத்திட்ட கடிதம் செய்தி தாள்கள் மூலம் வெளியாக சிங்கள அரசு தலையில் கை வைத்துக்கொண்டது. பிரதமர் ஜெயவர்த்தனாவோ இலங்கையின் அரசியலமைப்பு சட்டத்தை திருத்துவதில் தீவிரமாக இருந்தார். நாடடில் இனி ஜனாதிபதி பதவி தான் பெரியாது. அதிகார மெல்லாம் அவருக்கே அதோடு முதல் ஜனாதிபதியும் நானே. அதோடு நாட்டின் ஆட்சி, நிர்வாக மொழி சிங்களம் மட்டுமே, மதம் பௌத்தம், வட-கிழக்கு மாகாணங்களில் மட்டும் தமிழ் ஆட்சி மொழி என சட்டத்தை திருந்தி நாடாளுமன்ற ஒப்புதல் பெற 1979 செப்டம்பர் 7,8 தேதியை அறிவித்தார்.

                இச்சட்ட திருத்தத்திற்கு தமிழர்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்பு. அதை பற்றி கவலைப்படவில்லை ஜெயவர்தனாவும் சிங்கள மக்களும் அதனால் அரசுக்கு அதிர்ச்சி தர முடிவு பண்ணியது கபபஉ.  சட்டமாக்கப்படும் நாளான செப்டம்பர் 7ந் தேதி இலங்கையின் ஒரே பயணிகள் விமானமான அமதஞ வை தகர்க்க முடிவு செய்தனர். பிரபா, பேபி இருவரும் குண்டு தயாரிப்பது. உமா, ராகவன் இருவரும் விமானத்தில் குண்டு வைப்பது என திட்டம் தயாரானது. கடைசியில் பேபி, ராகவன் குண்டு வைப்பதாக திட்டம் மாற்றப்பட்டது, விமான டிக்கட் தயாரானது.

                செப்டம்பர் 7 ரத்மலானா டூ பாலை சென்ற ஆரோ என்ற விமானத்தில் இருந்து இறங்கும் போது பேபியும், ராகவனும் சீட்டுக்கு கீழே டைம் பாம் வைத்து விட்டு இறங்கி போய்விட்டனர். விமானம் வெடித்து சிதறியது. அதிர்ச்சியோடு திருத்தப்பட்ட அரசியலமைப்பு சட்டம் நிறைவேறியது. விமானத்தை தகர்த்தது நாங்க தான் என்ற உமா கையெழுத்திட்ட கடிதம் செய்தி தாள்களுக்கு பறந்தது. கோபமான அதிபர் ஜெயவர்த்தனா பயங்கரவாத தடை சட்டத்தை கொண்டு வந்தவர் தீவிரவாத இயக்கங்களை தடை செய்யப்படுகிறது. ஏன், எதற்கு என்ற காரணமில்லாமல் கைது செய்யலாம் விசாரிக்கலாம், கொல்லலாம் என காவல்துறைக்கு அதிகாரங்களை வாரி வழங்கினர். அதுப்பற்றியெல்லாம் கவலைப்படாத தமிழ் இளைஞர்கள் எங்களுக்கு உயிர் வேணாம், தன்மானம் தான் எங்ளது சொத்துயென வீரத்தோடு பிரபாகரனை தேடிவந்த கிட்டு, ரகு, மாத்தையா போன்றோர் அமைப்பில் இணைந்தனர்.

                அமெரிக்காவின் சிம்ம சொப்பனமான குட்டி நாட்டின் உலக நாயகனான பிடல் காஸ்ட்ரோ க்யூபாவின் ஸ்ரீவானாவில் உலக மாணவர் மற்றும் இளைஞர் பேரவையின் மாநாட்டை நடத்தினார். அதில் கபபஉ தனது பிரதிநிதியாக இவரை அனுப்ப முடிவு செய்ததோடு தன் மக்களின் பிரச்சனைகளை உலகத்துக்கு சுட்டிகாட்ட நூல்கள் தேவைப்பட்டது. அப்போது அமைப்பின் லண்டன் பிரதிநிதிகளான கிருஷ்ணனும், ராமச்சந்திரன் (எ) அன்ரன் ராஜா ஆகிய இருவரும் லண்டனில் ஆய்வு மாணவராக மனைவி அடேலுடன் இருந்த பாலசிங்கத்தை சந்தித்து பேசினர். பாலசிங்கம் விடுதலைபோராட்ட இயக்கங்களுக்கு ஆதரவு தந்தவர். கட்டுரைகளையும், ஆலோசனைகளையும் தந்தார். அதற்கு ஏற்கனவே அவர் பார்த்த வீரகேசரி இதழின் துணை ஆசிரியர் பணி அனுபவம் உதவியது.

கிருஷ்ணனும், ராமச்சந்திரனும் விடுதலைப்புலிகள் பற்றியும், கோட்பாடுகள், செயல்பாடுகள் பற்றி விரிவாக எடுத்து கூறியவர்கள். தங்களுக்கான புத்தகம் பற்றி கேட்டனர். அதற்கு சம்மதித்த பாலா, மார்க்சிய லெனினிய பார்வையில் தமிழ்த் தேசிய பிரச்சனை பற்றியும் அதனை தொடர்ந்து சோசலீச தமிழீழத்தை நோக்கி என்ற தலைப்பில் 2 புத்தகங்களை எழுதி தந்தார். பிரபாகரனை ஈர்த்து அப்புத்தகங்கள் ஆண்டன்பாலசிங்கத்தை காண பிரபா ஆசைப்பட்டார் சென்னையில் சந்திப்புக்கு ஏற்பாடானது.

         லெபனாலில் பி.எல்.ஓ அமைப்பினர் பயிற்சி தருகின்றனர். விரும்பினால் வரலாம் இரண்டு பேருக்கு 1 லட்சம் என்றது ஈரோஸ் தலைமை. பிரபாவும், உமா, விஜயேந்திரனை அனுப்பிவைத்தார். சுவரில் அடிக்கப்பட்ட பந்தாக திரும்பியவர்கள் சுத்த வேஸ்ட் என்றனர். கோபமான பிரபா ஈரோஸ் சிடம் பாதி பணத்தையாவது வாங்கிதா என பேசிக் கொண்டிருந்தார். தமிழகத்திற்கு உமாவை அனுப்பிய பிரபாகரன் அமைப்புக்கு சென்னையில் தங்கி ஆதரவு திரட்டுங்க. நம்ம போராட்டம் பற்றி நம் வெளிநாட்டு மக்களிடம் பரப்புரை செய்ய சென்னையை தளமா பயன்படுத்துங்க என்றதால் உமா சென்னையில் சில மூத்த போராளிகளோடு ஒரு வீட்டில் தங்கி அரசியல் வேலை பார்த்து வந்தார். அதோடு பரப்புரை பணிக்காக ஊர்மிளா என்ற பெண்மணியும் அங்குயிருந்தார். அவரின் காதுக்கு வந்த தகவலை நம்ப முடியாமல் நம்பிக்கையானவர்கள் மூலம் ரகசியமாக வேவு வேலையில் இறங்கினார். விசாரித்தவர்கள் அண்ணே üüஉமாவும், ஊர்மிளாவும் காதலிக்கறது மட்டுமில்ல இருவரும் எல்லை மீறிட்டாங்க.


                ஊர்மிளா. விதவை, டி.என்.டியின் முதல் பெண் போராளி. அமைப்பில் செய்தி பிரிவில் இருந்தார். டி.யு.எல்.எப் இளைஞர் பிரிவில் உமாவோடு இருந்தவர். உமா தான் அழைத்து வந்தார்.  கோபத்தோடு யாழ்ப்பாணத்திலிருந்து சென்னை வந்தார். உமாவை அழைத்த பிரபாகரன் காதலிக்கறிங்களாமே?, 

 இல்லையே தம்பி.

பொய் சொல்றீங்க குடும்பமே நடத்தறீங்க அமைப்போட சட்டதிட்டத்த மீறிட்டீங்க எனக்கூறும் போதே இருவருக்கும் தகராறு இயக்கத்தில் குழப்பம், நீயா? நானா? போட்டி ஆரம்பமானது. அமிர்தலிங்கம் பேசினார், லண்டனிலிருந்து எல்லாம் சமாதானம் பேசியும் பிரபாகரன் மசியவில்லை.  சமாதான தூதுவராக, இயக்கத்தின் தவிர்க்க முடியாத சக்தியாக மாறி போயிருந்த பாலசிங்கம் இயக்கத்தினரை காண சென்னை புறப்பட்டார்.

1979 அம் ஆண்டின் கடைசி மாதத்தில் லண்டனிலிருந்து மும்பை வழியாக சென்னைக்கு பாலசிங்கத்தையும் - அடேலையும் அழைத்து வந்த கிருஷணன் புறநகர் பகுதியிலிருந்த விடுதியென்றில் தங்கவைத்து விட்டு போனார். வசதிகள் எதுவும் இல்லாத விடுதி அறையது. அன்றைய நள்ளிரவு நேரம் விடுதி அறைக்கு டிப்-டாப்பாக பிரபாவும், தமிழரின் அடையாளமான வேட்டி சட்டையில் பேபிசுப்ரமணியயமும் வந்தார்கள். முதல்முறையாக பிரபாவும் பாலாவும் சந்தித்துக்கொள்கிறார்கள். பிரபாகரன் பாலாவிடம் இயக்கம் பற்றியும், மக்கள் படும் துயரம் பற்றியும், போராளிகள் பற்றியும், போராளிகளின் வாழ்க்கை பற்றியும், இயக்க போராட்டங்கள் பற்றியும் விளக்கமாக எடுத்துரைத்தார். அதேபோல் பாலாவும் தனது வாழ்வு போராட்டம் பற்றியும் கூறினார். விடிய விடிய இருவரும் பேசியதில் இருவருக்கும் ஒரே மனவோட்டமிருந்ததை இருவருமே அறிந்துக்கொண்டார்கள். விடியற்காலை பிரபாகரன் புறப்படும் போது உங்களுக்கு சவுகரியமான விடுதியை பார்த்து தங்க வைக்க சொல்றன் எனச்சொல்லிவிட்டு புறப்பட்டார்.

   அன்றே விடுதி மாறினார்கள். இயக்கத்தில் அதிகார போட்டியும், உமா காதல் பிரச்சனையும் பெருசாகயிருந்ததால் விடுதிக்கு இயக்கத்தவர் அடிக்கடி வந்துபோக ஆரம்பித்தார்கள். இதனால் விடுதியே பரபரப்பாகயிருந்தது. ரகசிய அமைப்ப்பின் உறுப்பினர்கள் அடிக்கடி விடுதிக்கு வந்து போவது விடுதியில் இருப்பவர்களுக்கு சந்தேகம் வந்தால் பிரச்சனையாகிவிடும் என கவலையடைந்தவர்கள் பாலா-அடேல் தம்பதியினர் தங்க வேறுயிடம் பார்க்கபட்டது. அப்படித்தான் போராளி ஆதரவாளரான அப்போதைய திமுக எம்.எல்.ஏ செஞ்சி.ராமச்சந்திரன் இல்லத்தில் சில நாட்கள் தங்கினார்கள். பின் சட்டமன்ற விடுதியிலும் போய் தங்கினார்கள். இயக்கபிரச்சனை பற்றி பாலா விசாரிக்க ஆரம்பித்தார். உமா - ஊர்மிளா விவகாரம் பற்றிய விசாரணையில் நான் தப்பு பண்ணலயென உமா மறுத்தார். புகார் கூறியவர்களோ, நாங்க எங்க கண்ணால பல முறை பாத்தோம் தப்பு பண்ணாங்க என்றார்கள் உறுதியுடன். விசாரணையின் முடிவில் பிரபாவும் - பாலாவும் கூட்டாக உமாமகேஸ்வரனை அமைப்பை விட்டுநீக்கி இனி உங்களுக்கும் அமைப்புக்கும் சம்மந்தமில்லை என தெளிவாக கூறி அனுப்பினார்கள். உடனே வவுனியா கிளம்பிய உமா, அங்கிருந்து இனி எல்.டி.டி.ஈக்கு நான் தான் தலைவர் என உரிமை கொண்டாடினார். பாலசிங்கம் அடேல் லண்டன் திரும்பினர்.

இயக்கத்தில் போராளிகளிடம் குழப்பம் நீடித்தது. இயக்கமே சிதைந்து போனது. பிரபாகரனும யாழ்ப்பாணம் பயணமானார். இயக்க பிரச்சனை மட்டும் தீரவில்லை. மீண்டும் சென்னை வந்த பிரபாகரன் இயக்க நண்பர்களை தேடினார். அப்போது சிங்கள அரசின் நெருக்கடியால் மாத்தையா, கிட்டு, பேபி, ரகு, ஆகியோர் தமிழகம் வந்திருந்தனர். குழப்பம் தீர ஆரம்பித்தது. பிரபா தலைமையிலே அனைவரும் ஒன்றிணைய ஆரம்பித்தார்கள். சென்னைக்கு இரண்டாவது முறையாக பாலசிக்கத்தை வர வைத்தார்கள்.

                சென்னையில் பிரபாவோடு பேபி சுப்பிரமணியம், பண்டிதர், புலேந்திரன், ரகு, சங்கர், ராகவன், பாலசிங்கம், அடேல் தங்கியிருந்தனர். நம்மகிட்ட பண வசதியில்ல, ஆயுதங்கள்யில்ல அதோடு நமக்கு தமிழகத்தோட ஆதரவு நிச்சயம் தேவை என விவாதிப்பார்கள். அதற்கு என்ன பண்ணலாம் என திட்டமிட்டார்கள். ஆயுதம் வாங்க பணம் தேவை, பணத்தை திரட்டுவோம், தமிழக தலைவர்களின் ஆதரவை திரட்டுவோம் என முடிவு செய்தனர். ஆயுதம் வாங்குவது கிட்டு தலையில் விழுந்தது, பேபி சுப்பிரமணி தமிழக தலைவர்களை சந்திப்பது என வேலைகள் பிரிக்கப்பட்டது. நம்மை தாக்கும் எதிரிகளான காவல்துறையிடமிருந்து ஆயுதங்களை ஞ்ல்டுங்குவோம் என செல்லக்கிளியிடம், சங்கரும் ஐடியா ஓகே ஆகி இருவரும் அடுத்தடுத்து யாழ்ப்பாணம் பயணமானார்கள். ஓய்வு நேரத்தில் குறிப்பாக சனிக்கிழமை பிரபாகரனே பையோடு மார்க்கெட் போய் சிக்கன், மட்டன்யென வாங்கி வந்து சமைப்பார் அசைவ பிரியரான பிரபா.

      1980 மே 19 பாண்டி பஜாரில் பிரபா, ராகவன் இருவரும் நடந்து போய்க் கொண்டிருந்தனர். அதற்கு கொஞ்ச நேரத்துக்கு முன்பு தான் உமாவும், கண்ணனும் ஒரு மோட்டார் சைக்கிளில் அதே ஏரியாவுக்கு வந்தவர்கள் சாப்பிட உட்கார்ந்தார்கள். அதே ஹோட்டலுக்கு சாப்பிட வரும் பிரபாவை கண்ட கண்ணன் உமாவை உஷார்படுத்த உமா கை துப்பாக்கியை இடுப்பிலிருந்து எடுப்பதற்குள். பிரபா கண்ணனை சுட்டு முடித்திருந்தார். 6 புல்லட்டில் 4 புல்லட் பாய்ந்திருந்தது. சுட்டு விட்டு பிரபா, ராகவன் இருவரும் பாண்டி பஜார் காவல்நிலையம் நோக்கி ஓடினார்கள் உமா ரயில் நிலையம் நோக்கி ஓட தொடங்கினார்.

*   ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் விசாரிக்க பேரை கேட்டு இன்ஸ் அதிர்ந்து போனார். தகவல் தலைமைக்கு போனது.
*         கண்ணன் ராய்ப்பேட்டை ஜி.எச்-ல் சேர்க்கப்பட்டார்.
*        2 நாளுக்கு பின் உமாவும் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்டவர்கள் தனித்தனி செல்லில் அடைக்கப்பட்டனர்.

            இருவர் பெயரை கேட்டு தமிழக காவல்துறையே அதிர்ந்தது. தகவல் முதல்வர் எம்.ஜீ.ஆர்க்கு போனது. பசங்ககிட்ட பாத்து நடந்துக்குங்க உஷார இருங்க என்றார். தகவலை கேட்டு சந்தோஷத்தில் திக்கு முக்காடி போனது. இலங்கை அரசு. பாதுகாபபு துறையின் துணை அமைச்சரான ப.ஆ.வீரபத்தியா அவங்கள எங்கக்கிட்ட ஒப்படைங்க 1 மில்லியன் பரிசு உங்களுக்கு என தகவல் அனுப்பினார்கள்.

                பிரபாவை விடுவிக்க வேண்டும்மென களமிறங்கிய தோழர்கள் கிட்டு, புலேந்திரன், பண்டிதர் ஆகியோர் தம்பியை இலங்கையிடம் ஒப்படைத்தால் எல்.ஐ.சி மாடியிலிருந்து குதித்துவிடுவோம் என அதிரடி மிரட்டல் விட்டனர். பேபியோ தமிழக அரசியல் கட்சி தலைவர்களை ஒடி ஓடி சந்தித்தார். இந்திரா காங்கிரஸ் தலைவரான நெடுமாறனையும் சந்தித்தர். பிரபாவின் தந்தை தமிழகம் வந்தவர் எதிர்கட்சி தலைவராகயிருந்த தி.மு.க தலைவர் கலைஞரை சந்தித்தார். பிரதமராகயிருந்த இந்திராவுக்கு கலைஞர் தந்த நெருக்கடி, முதல்வராகயிருந்த எம்.ஜீ.ஆர் விடுதலைப்புலிகளுக்கு தந்த ஆதரவு, நெடுமாறனின் முயற்சி, தமிழர்களின் ஆதரவு, பிரபாவின் தோழர்களின் விடாமுயற்சியால் பிரபா, உமாவுக்கு ஜாமின் கிடைத்தது. இவ்வழக்கு பற்றி ரா ரகசியமாக களமிறங்கி விசாரிக்க ஆரம்பித்தது. டெல்லியில் ஐ.பி அதிகாரியாக இருந்த நாராயணன் சென்னை வந்து இவ்வழக்கு பற்றி விசாரித்தார்.

                பிரபாகரன் நெடுமாறனோடு திருச்சியில் தங்கி கையெழுத்திட்டு வந்தார். உமா மகேஸ்வரன் சென்னையில் இருந்த அவரின் நண்பர் வீட்டில் தங்கிக் கொண்டார். இருவரையும் சமாதானப்படுத்தி சேர்த்துவைக்க டி.யு.எல்.எப் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற எதிர்கட்சி தலைவருமான அமிர்தலிங்கம் சென்னை வந்து இருவரையும் அழைத்து பேச பிரபாகரனோ நான் உமாவ கொல்லமாட்டன் என உறுதி கூறியவர், 2 பேரும் சேர்றது இனி நடக்காது என முடிவாக கூறிவிட்டார். உமாவே இனி எல்.டி.டி.இக்கு நான் உரிமை கொண்டாடமாட்டன் என்றார். வந்தவேலை வெற்றி பெறாததால் அமிர்தலிங்கம் ஏமாற்றத்துடன் இலங்கைக்கு திரும்பி போய்விட்டார் அமிர்தலிங்கம்.

      பிரபாவே, இயக்கத்தை பெரிய அளவில் வளர்க்கவும், அதற்கான ஆயுதங்கள் கொள்முதல் செய்ய பணத்துக்காக அலைந்தார். அப்போது கொரில்லா குழுவாக இருந்த எல்.டி.டியின் பலம் 30 பேர். நாம எதிரியிடமிருந்தே ஆயுதங்களை புடுங்குவோம் என தீர்மாணித்தார்கள். வழக்கு நடந்துக்கொண்டு இருக்கும் போதே தமிழக போலிஸாரின் கண்ணில் மண்ணை தூவி விட்டு திடீரென ஒருநாள் யாழ்ப்பாணம் போய்விட்டார். சில தாக்குதல்கள் அங்கு செய்ததால் சிங்கள காவல்துறையின் தேடல் அதிகமாகமானது. மீண்டும் தமிழகம் திரும்பி ரகசிய பயிற்சி பாசறைகளை அமைத்தார். முதல் பாசறை சேலம் அருகிலுள்ள கொளத்தூரில் அமைக்கப்பட்டது.


                1982 ஜீலை 2 யாழ்ப்பாணத்திலிருந்து 16 கி.மீ. தொலைவிலுள்ள நெல்லியடிபட்டினம் காவல்துறை ரோந்துபடை மீது சங்கர் தலைமையில் போன விடுதலைப்புலிககள் கொரில்லா தாக்குதல் நடத்தி 4 அதிகாரிகளை கொன்றனர். 3 பேர்க்கு பலத்த காயத்தை ஏற்படுத்தினர்.

       1982 அக்டோபர் 27 சாவகச்சேரி கால்நிலையத்திற்குள் புகுந்த ஆசிர், சீலன் தலைமையிலான அணி போலிஸார் மீது தாக்குதல் நடத்தி 2 அதிகாரிகளை கொன்றவர்கள். காவல்நிலையத்தில் இருந்த 28 துப்பாக்கிகள் 2 பழைய ரக இயந்திர துப்பாக்கி, 1 ரிவால்வர், 200 தோட்டாக்கள் வாரிக்கொண்டு சென்றனர். அதேநேரம் அமைப்பில் இளைஞர்கள் கூட்டம் அதிகமாக சேர ஆரம்பித்தது.

                தமிழகத்திலிருந்து பிரபா தகவல் பறிமாற்றத்துக்கு யாழ்ப்பாணம் நகர் நாவலர் வீதியிலிருந்த நிர்மலா வீட்டை பயன்படுத்த சொல்லியிருந்தார். அதன்படி 1980 நவபர் 20ந்தேதி தளபதி சீலன், சங்கரை அழைத்து தகவல் ஒன்றை பிரபாவுக்கு அனுப்பச்சொல்லி அனுப்பிவைத்தார். நிர்மலா வீட்டுக்கு வந்த சங்கர் வேலை முடிந்ததும் புறப்பட தயாரான போது மதியம்மாகிடுச்சி சாப்பிட்டுவிட்டு போப்பா கோழிக்கறி செய்துயிருக்கன் என்றதால் சங்கரும் அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தார். இரண்டு வாய் சாப்பிடும் போதே உளவாளி மூலம் காவல்துறைக்கு தகவல் போய் நிர்மலா வீட்டுக்கு வந்த ஆர்மி சுட ஆரம்பித்ததும் உஷாரான சங்கர் வீட்டின் பின் பக்கமாக தப்ப முயல சங்கர் மீது குண்டு பாய்ந்தது அப்படியும் தப்பிய சங்கர் 3 கி.மீ. கரடு முரடான பாதையில் சிரமம் பாராமல் நிற்காமல் ஓடி தப்பினார்.

                ஆனால், சங்கரின் உடலில் ரத்தபோக்கு அதிகமானதால் தமிழகம் போனால் தான் காப்பாற்ற முடியும் என்ற நிலை. ஆர்மியின் கட்டுப்பாடு, செக்கிங், தேடலால் 5 நாள் தாமதாக 26ந்தேதி வேதாரண்யம் போய் மதுரையில் ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். தனது தோழனை பார்க்க பிரபாவும் மதுரை வந்துவிட்டார். உடன் பேபி, பொன்னம்மன், நெடுமாறன் ஆகியோர் இருந்தனர். சங்கரின் உறுதி பற்றி மற்றவர்களிடம் கூற தொடங்கினார் பிரபாகரன். 1961ல் பிறந்த சத்தியநாதன் எ சங்கர். தனது 16வது வயதில் வீட்டை விட்டு போறன் என கடிதம் எழுதி வைத்து விட்டு 1977 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகள் இயக்கத்தில் சேர அதன் தலைவர் பிரபாகரன் முன் போய் நின்றார். சின்னப்பையன் இவன் போராட்ட களத்தில் தாக்கு பிடிக்கமாட்டான் என முடிவு செய்து வீட்டுக்கு போ என மிரட்டி அனுப்பிவிட்டனர்.

ஒராண்டுக்கு பின் 1978 ஆம் ஆண்டு மீண்டும் காடுகளில் அலைந்து திரிந்து பிரபாகரனை சந்தித்து தன்னையும் இணைத்துக்கொள்ளுமாறு வேண்டிய சங்கரை இயக்கத்தில் இணைத்துக்கொண்டு சங்கர் என பெயரிட்டார் பிரபாகரன். சுங்கர்க்கு ஆயுத பயிற்சி தந்தனர். விடுதலைப்புலிகள் 1979ல் தடை செய்யப்பட்டபோது, சங்கர் பற்றியும் சிங்கள காவல்துறை தெரிந்து வைத்திருந்தது. இதனால் சங்கர் தேடப்படும் குற்றவாளியானார். அதன்பின் இராணுவத்துடன் நடந்த ஒரு மோதலில் சங்கர் தன் வீரத்தை காட்டினார். 1982ல் பிரபாகரன்க்கு முதன் முதலாக இரண்டு மெய்ப்பாதுகாவலர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அதில் சங்கரும் ஒருவர். இப்படி இயக்கத்தில் வளர்ந்த சங்கரை பற்றி தன் நினைவுகளை பிரபாகரன் கூறியுள்ளார்.

                27ந்தேதி காலை 6.50க்கு பிரபாகரனின் மடியில் இருந்த சங்கர், நாம ஜெயிப்போம் தம்பி என்ற படியே உயிரை நீர்த்தான். விடுதலைப்புலி வீரனின் முதல் களபலி பிரபா அதிர்ந்து போய்விட்டார். மனம் கலங்கியவர் மதுரையிலேயே அடக்கம் பண்ண சொன்னவர். சங்கரின் தந்தை செல்வந்திரன் மாஸ்டர்க்கு மட்டும் தகவலை சொன்னார்கள். சங்கர் (எ) சத்தியநாதன் இறந்த தினத்தை மாவீரர் நாளாக பிரகடனப்படுத்தியது இயக்கம். 1989 முதல் மாவீரர் தினம் கொண்டாடப்படுகிறது. ஒரு வாரம் நடைபெறும் விழாவில் கடைசி நாளான 27ந்தேதி முக்கிய அறிவுப்புகளை செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளார் பிரபா.

                1983 ஆம் ஆண்டு தமிழர்களுக்கு மட்டுமல்ல விடுதலை புலிகளுக்கும் மோசமான கறுப்பு ஆண்டாக அமைந்தது முக்கிய தளபதிகளை இவ்வாண்டில் விடுதலை புலிகள் இழந்தனர். பிப்ரவரி 18 காவல்துறை அதிகாரியான விஜயவர்த்தனாவை அவரது கார் டிரைவரோடு சேர்த்து கொன்றனர் வி.பு.

                மார்ச்-4 பரந்தன் உமையாள் புரத்தில் இராணுவ வண்டிக்கு வைத்த குறியில் 5 ராணுவ வீரர்கள் படுகாயமடைந்தனர். அதே நேரம் விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவு 1983 மார்ச் 7,15 தேதிகளில் புதுடெல்லியில் அணி சேர நாடுகளின் 7வது மாநாடு நடந்தது. மாநாட்டில் வி.பு இயக்கம் தேசிய விடுதலைக்கான தமிழின போராட்டம் என்ற தலைப்பில் அறிக்கை தந்து வெளியுலகத்துக்கு தமிழின பிரச்சனையை சுட்டி காட்டினர். இதில் இலங்கைக்கு மற்ற நாடுகளில் நெருக்கடி, உள்நாட்டிலே ஆயுத குழுக்களின் தாக்குதல் இதில் கோபமான அதிபர் ஜெயவர்த்தனா தமிழினமே இந்த நாட்டுல இருக்க கூடாது அழிங்க என சிற ராணுவம், காவல்துறை, ரவுடிகள் களமிறங்கனர். யாழ்ப்பாணத்தில் பற்றிய தீ , மன்னார், மட்டகளப்பு, திருநெல்வேலி, திருகேணமலை, குடநாடு, அம்பாறை, கொழும்பு வரை பரவியது. 7 நாள் கனவிலும் கானமுடியாத உயிர்பலி, சேதரம், ஈழதமிழினமே அகதியானது.  அதிபரோ சும்மா சின்ன கலவரம் தான் என பதில் தந்தார் உலகத்துக்கு. ஒரு நாட்டு முதலாளி (அதிபர்) கூறியதை மற்ற நாட்டு முதலாளிகள் (அதிபர்கள்) கேட்டுக்கொண்டார்கள் அவ்வளவு தான்.

                ஜீலை கலவரத்துக்கு முன்பு ஜீலை 15ந்தேதி யாழ்ப்பாணம் நகரிலிருந்து 15 கி.மீ. தொலைவிலுள்ள மீசோலை கிராமத்திலிருந்த வி.பு முகாமை ராணுவம் சுற்றி வளைத்தது. அதில் தாக்குதல் தளபதியாக சீலன், ஆனந்த மற்றொரு வீரன் என 3 போர் மாட்டிக் கொண்டனர். கடைசி வரை எதிர்த்தனர், தோல்வி வரும் போல என தெரிந்ததும் தன் சக வீரணிடமே தன்னை சுடச்சொல்லி மானத்தோடு சுடப்பட்டு இறந்தார். ஆனந்த் என்ற வீரனும் அதேபோல் சுடப்பட்டு இறந்தார். இதில் கோபமுற்ற பிரபாகரன் ராணுவ வீரர்களுக்கு குறிவைத்தர். ஜீலை 23 மாநகல் ராணுவ முகாமிலிருந்து திருநெல்வேலி ராணுவ முகாம்க்கு ராணுவ டிகாக் வண்டியில் வருகிறார்கள் என அறிந்து கண்ணீர்வெடி வைத்து தாக்குதலுக்கு பிரபாகரன் தலைமை தாங்கினர்.    கண்ணி வெடி மூலம் டிராக் வண்டி வெடித்து கிதறி 14 வீரர்கள் இறந்தனர். உயிரோடு இருந்த சிலர் சுட அதில் செல்லக்கிளி (செல்வ நாயகம்) இறந்து போனர். அடுத்தடுத்து தளபதிகளை இழந்த வி.பு.களுக்கு ஜீலை கலவரம் இந்தியா மூலம் பெரிய மாற்றத்தை கொண்டு வந்தது.

                1983 கடைசி முதல் இலங்கை தீவின் நிலையே மீற ஆரம்பித்தது. தமிழின எதிரிகள் ரத்த கண்ணீர்விட ஆரம்பித்தார்கள் அதற்கு இந்தியாவும் ஒரு காரணம்.

முந்தைய பதிவு. 5. ஆயுத குழக்கள்.

2 கருத்துகள்:

  1. திரு.ராஜ்ப்ரியன்,
    ஏங்க, இந்திய பெருங்கடலில் இந்தியாவிற்கு கீழே உள்ள குட்டி தீவு. நாட்டு கத்தரிக்காய் வடிவில் உள்ள பிரதேசம். லங்கா தீபம், நாகதீபம், தாமதீபம், ஸ்ரீலங்கா என்றும் கிரேக்கர்கள் சின்மோண்டு சேலான் தப்ரபேன் என்றும்அரேபியர்களால் செரெண்டிப் என்றும் ஆங்கிலேயர்களால் சிலோன் என்றும் அழைக்கப்பட்டது 1947க்கு பின் இலங்கை என அழைக்கப்படும் தீவின் வரலாறு 2500 ஆண்டுகள் பழமையானது என்று சொல்லிட்டிங்க. நீங்க சொன்ன பெயர்களுடன் ஈழம் என்ற ஒரு பெரும் இலங்கைக்கு இருந்ததாக இலங்கை நண்பர்கள்( தமிழ்)சிலர் எனக்கு சொன்னாங்க. ஆனா இந்த ஈழம் என்ற பெயரை வெளிநாட்டில் உள்ள விடுதலை புலி ஆதரவாளர்களும் அவர்களின் தமிழக செயல்பாட்டவர்களும் எதற்காக பாவிக்கிக்கிறாங்க?

    பதிலளிநீக்கு
  2. ஈழம் என்பது அத்தீவின் பழைய தமிழ்ப்பெயர். ஈழத்துப்பூதந்தேவனார் என்று சங்கப் புலவர் இருந்தால்.. சங்கப் பாடல்களில் ஈழம் என்ற சொல் ஆளப்பட்டுள்ளது! தமிழ் இலக்கியங்கள், சங்கப்பாடல்கள் புழங்கியோருக்கு இது தெரிந்த ஒரு பழைய சேதி. கிரேக்கர் ஈழத்தை தம்மபண்ணி, சேரந்தீவு எனவும் அழைத்தனர். தமிழீழ ஆதரவாளர்கள் ஈழம் என்பது அத்தீவைக் குறித்த பழந்தமிழ்ச் சொல் என்பதால் அதனைப் பாவிக்கிறார்கள். சிறிலங்கா என்பதில் நிறையச் சிக்கல் உள்ளது, ஸ்ரீ என்ற முத்திரையை சிங்கள வெறியர் அறிமுகப்படுத்தி, தமிழர் முதுகுகளில் கொதிக்கும் தாரால் பொறித்தது எல்லாம் சிறிக் கலவரம் எனப்படும்.

    http://tamilnet.com/art.html?catid=79&artid=36964

    பதிலளிநீக்கு