திருவண்ணாமலையில் உள்ள நூற்றாண்டு விழா கொண்டாடிய பள்ளி அரசு
ஆண்கள் மேல்நிலைப்பள்ளி. இந்த பள்ளியில் தற்போது 400க்கும் குறைவான மாணவ – மாணவிகள்
படிப்பதால் அந்த பள்ளி மூடப்படும் அபாயத்தில் உள்ளதாக தகவல் வெளியாகி திருவண்ணாமலைவாசிகள்
பலரையும் கவலையடைய வைத்துள்ளது.
பள்ளி தொடங்கிய இந்த நூறாண்டில் லட்சக்கணக்கான மாணவர்களை உருவாக்கியுள்ளது
இந்த பள்ளி. 30 ஆண்டுகளுக்கு முன்பு வரை திருவண்ணாமலை நகரத்தில் நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,
பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கிருஸ்த்துவ மிஷனரியால் நடத்தப்படும் டேனிஷ்மிஷன் பள்ளி,
தியாகி அண்ணாமலைப்பிள்ளை மேல்நிலைப்பள்ளி தான் பிரபலமானது. இந்த பள்ளிகள் படித்தவர்கள்
பின்னாளில் அரசு ஊழியர்கள், அதிகாரிகள், அரசியல்வாதிகளை உருவாக்கியது. இதில் நகராட்சி
ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு குறிப்பிடதக்க இடம்முண்டு. சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த
பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை குறைந்தது என்பதால் இருபாலர் பள்ளியாக மாற்றப்பட்டது.
அப்படியிருந்தும் மாணவ – மாணவியர் சேர்க்கை குறைந்தேவுள்ளது. ஒரு ந்நேரத்தில் ஆயிரக்கணக்கானோர்
படித்த பள்ளியில் தற்போத வெறும் 400க்கும் குறைவானர்கள்.
இந்த பள்ளி மட்டுமல்ல தமிழகத்தில் நூற்றுக்கணக்கான அரசு மாணவர்
சேர்க்கையில்லாமல் தொடக்கப்பள்ளி முதல் மேல்நிலைப்பள்ளிகள் மூடப்படும் நிலையில் உள்ளது.
தனியார் பள்ளிகளின் அதிகரித்துள்ளதால் அரசு பள்ளிகளில் யாரும் சேர்ப்பதில்லை. அரசு
பள்ளிகளில் யாரும் சரியாக பாடம் நடத்தமாட்டேன்கிறாங்க என்கிறார்கள். அப்படி குற்றம்சாட்டுபவர்கள்
அந்த பள்ளியில் தான் படித்தார்கள் என்பது குறிப்பிடதக்கது. அவர்கள் மட்டுமல்ல அந்த
பள்ளிகளில் படித்துவிட்டு தற்போது ஆசிரியர்களாக, அதிகாரிகளாக, தொழில் அதிபர்களாக உள்ளவர்கள்
யாரும் தங்களது பிள்ளைகளை தாங்கள் படித்த அரசு பள்ளியில் சேர்க்கவில்லை. அரசு பள்ளி
ஆசிரியர்களின் பிள்ளைகள் எதுவும் அரசு பள்ளிகளில் சேர்ப்பதில்லை. தனியார் பள்ளிகளில்
தான் சேர்த்துள்ளனர். வாத்தியார் பிள்ளையே அங்கதான் படிக்குது நம்ம புள்ளைய மட்டும்
ஏன் இதல சேர்க்கனும் என்ற மனநிலையே ஏழைகளையும் தனியார் பள்ளிகள் பக்கம் திரும்ப வைத்தது.
எம்.ஜீ,ஆர் ஆட்சி காலத்தில் சாரயக்கடை நடத்தியவர்கள் கல்வி கடை
நடத்த அனுமதிக்கப்பட்டார்கள். சாராக்கடைக்காரர்கள் கல்வி தந்தையாக மாறியபின் அதிகாரத்தை
வைத்து அரசுப்பள்ளிகளின் தரத்தை குறைக்க தொடங்கினார்கள். தனியார் பள்ளிகள் தான் சிறந்த
பள்ளிகள் என்ற பிம்பம் திட்டமிட்டே உருவாக்கப்பட்டது. அரசு பள்ளிகளின் தரம் குறைந்தது.
இதில் பெரும் பங்கு அரசு ஊழியர்களுக்கும், அரசு பள்ளி ஆசிரியர்களையே சாரும்.
சமீபத்தில் ஒரு அரசு பள்ளி ஆசிரியரிடம், எதுக்குங்க உங்க பிள்ளைங்கள
தனியார் பள்ளியில சேர்க்கறிங்க என கேட்டபோது, கவர்மெண்ட் ஸ்கூல்ல சரியா பாடம் நடத்தமாட்டாங்க,
லேப் வசதி கிடையாது அதனால தான் அங்க சேர்க்கறதில்ல என்றார். அவரிடம், கவர்மெண்ட் ஸ்கூல்ல
சரியா பாடம் நடத்தமாட்டாங்க, லேப் வசதியில்லன்னு சொல்றிங்க. உங்களோட சக ஆசிரியர் தானே
அங்க பணியாற்றுகிறார். அவரிடம் நீங்கள் ஏன் ஓழுங்காக பாடம் நடத்துங்கன்னு சொல்றதில்ல?,
லேப் அமைக்க ஆண்டு தோறும் அரசாங்கம் பணம் ஒதுக்குது. அதை ஏன் முறையா பயன்படுத்தாம இருக்கிங்க?,
அந்த நிதிய தப்பா பயன்படுத்தறவங்க மேல ஏன் நடவடிக்கை எடுக்க குரல் கொடுக்கறதில்ல? பள்ளிக்கு
சரியான நேரத்துக்கு வராத ஆசிரியர்களை தண்டிக்க ஏன் அனுமதிப்பதில்ல என கேட்டதும் கோபமாக
எழுந்து போய்விட்டார். இது அவரிடம் மட்டுமல்ல அரசு பள்ளி ஆசிரியர்களிடம் நான் அடிக்கடி
கேட்கும் கேள்வியிது ?.
கடந்த ஆட்சியின் போது சம்பளத்தை உயர்த்தி தந்தார்கள். சம்பளம்
உயர்வு வந்த அடுத்த மாதம்மே சம்பளம் பத்தல சம்பளத்த ஏத்தனும் என கொடி பிடித்தன ஆசிரியர்
சங்கங்கள். இப்போதுவரை போராட்டம் நடத்துகின்றன. இதே ஆசிரியர் சங்கங்கள் எங்கள் பள்ளியில்
இந்த குறைபாடுள்ளது, ஆசிரியர்கள் பற்றாக்குறை, நிதி ஒதுக்கீடு குறைந்துள்ளது, பள்ளிக்கே
வராத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடு என ஏன் கொடி பிடிப்பதில்லை.
சமச்சீர் கல்வி திட்டம் வந்தப்பின் எல்லா பள்ளிகளுக்கும் ஒரே
பாடத்திட்டம் தான். அப்படியிருந்தும் தனியார் பள்ளிகள் அதிக தேர்ச்சி விகித்த்தை காட்டுகிறது.
ரிசல்ட் குறைந்தால் எந்த பாடத்தில் மாணவர்கள் அதிக மார்க் எடுக்கவில்லை எதனால் என ஆராய்ந்து
பாடம் நடத்தும் ஆசிரியருக்கு எச்சரிக்கை விடுக்கிறது, ஆசிரியர்களை மாற்றுகிறது. அதேபோல்
அரசு பள்ளி ஆசிரியர்கள் மீது அதிகாரிகள் செய்தால் அவுங்க பெயிலா போனா அதுக்கு நாங்க
எப்படி காரணமாக முடியும் என ஆசிரியர் சங்கங்கள் கொடி பிடிக்கின்றன.
ஆயிரம், லட்சங்களில் பணம் தந்து பள்ளிகளில் சேர்க்கும் பெற்றோர்கள்
கேள்வி கேட்பார்கள், ரிசல்ட் இல்லையென்றால் பள்ளிக்கு யாரும் வரமாட்டார்கள் என பயந்து
ஆசிரியர்களை தனியார் பள்ளி நிர்வாகம் விரட்டுகிறது. சில ஆயிரம் சம்பளத்துக்கு தனியாரிடம்
மாங்கு மாங்குயென வேலை பார்க்கும் இவர்களுக்கே அந்த நிலை. மிதமிஞ்சிய சம்பளம் பெரும்
அரசு பள்ளி ஆசிரியர்கள் மீது ரிசல்ட் குறைந்த்து என நடவடிக்கை எடுத்தால் கொடிபிடிக்க
துவங்கிவிடுகிறார்கள். தனியார் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள் அரசு பணி கிடைத்து
அரசு பள்ளிக்கு வந்ததும் ஏமாற்ற தொடங்கிவிடுகிறார்கள். பாடம் நடத்தாமல் பள்ளி நேரத்தில்
வட்டிக்கு பணம் விடுவது, ரியல் எஸ்டேட் தொழில் செய்வது, பள்ளிக்கே வராமல் வந்த்தாக
வருகை பதிவேட்டில் கையெழுத்திடுவது. யாராவது கேள்வி கேட்டால் அவர்கள் மீதே குற்றம்
சாட்டி கொடிபிடிப்பது. இப்படி பட்டவர்களால் எப்படி அரசு பள்ளி முன்னுக்கு வரும்.
அரசு பள்ளிகள் முன்னுக்கு வர ஒரே வழி. அரசின் அனைத்து துறை ஊழியர்களும்
உங்களது பிள்ளைகள் ஒன்றாவது முதல் 12வது வரை அரசு பள்ளியில் தான் படிக்க வைக்க வேண்டும்
என்ற உத்தரவாதம் தந்தால் தான் அரசு பணி கிடைக்கும் என அரசு உத்தரவு போடவேண்டும். அதெல்லாம்
முடியாது எங்க பிள்ளைகளை எங்க படிக்க வைப்பது என்பது எங்களது உரிமை என்பவர்களுக்கு
எதற்கு அரசு பணி தர வேண்டும். உத்தரவாதம் தந்து வேலைக்கு சேர்ந்தபின் உத்தரவாதத்தை
மீறினால் பணியில் இருந்து நீக்க வேண்டும். இந்த நிலை வந்தால் தான் அரசு பள்ளிகள் மூடப்படுவது
தடுக்கப்படும், கல்விக்கொள்ளைகள் தடுக்கப்படும்.
அப்படி உத்தரவு போடும் தைரியம் நிச்சயம் தமிழகத்தில் மட்டுமல்ல
இந்தியாவிலேயே எந்த அரசியல்வாதிக்கும், அதிகாரிகளுக்கும் கிடையாது என்பதே எதார்த்தம்.
வணக்கம் நண்பரே, உங்கள் கோபத்தில் நியாயம் இல்லாமல் இல்லை. அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு வக்காலத்து வாங்கவும் நான் விரும்பவில்லை. ஆனால், நீங்க் சொல்லியிருப்பது ஒருபகுதிதான் அய்யா. அய்யா நீங்கள் முகப்பில் போட்டிருக்கும் பள்ளி நிச்சயமாக அரசுப்பள்ளி வகுப்பறை அல்ல சும்மா அழகுக்காகப் போட்டிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். நிற்க. “சமச்சீர் கல்வி திட்டம் வந்தப்பின் எல்லா பள்ளிகளுக்கும் ஒரே பாடத்திட்டம் தான். அப்படியிருந்தும் தனியார் பள்ளிகள் அதிக தேர்ச்சி விகித்த்தை காட்டுகிறது“ இதற்குப் பல பின்னணிகள் உண்டு. உண்மை அறிய விரும்பினால், எனது வலைப்பக்கம் வருக -
பதிலளிநீக்குhttp://valarumkavithai.blogspot.in/2013/06/blog-post.html http://valarumkavithai.blogspot.in/2012/03/blog-post_10.html
http://valarumkavithai.blogspot.in/2013/12/911.html
பொறுமையாகப் படித்துப் பார்க்க வேண்டுகிறேன். நன்றி வணக்கம்.
அரசு பள்ளிகள் அவசியத்தை சொல்லும் சிறந்த கட்டுரை.
பதிலளிநீக்குஎன் அறிவுக்கு தெரிச்சவரைக்கும் உயர்வான வாழ்கை தரம் மிகுந்த மக்களை கொண்ட ஜனநாயக முதலாளித்துவ நாடுகளிலே அரசு பள்ளிகள் மூலமே சிறப்பாக கல்வி வசதிகளை இலவசமாக மக்களுக்கு செய்து கொடுக்கிறார்கள். ஆனா தமிழகத்தில் அரசு பள்ளிகளில் படிப்பது கவுரவ குறைவனது தனியார் பள்ளிகளில் படிப்பது எங்களை உயர்ந்தவர்களாக காட்டி கொள்ள உதவும் என்ற தமிழக மக்களின் சிந்தனை அடிப்படையிலேயே கல்வி வியாபாரிகள் இங்கே தமிழக்தில் கடைவிரிக்கிறார்கள். தமிழக பொருளாதார வசதி கொண்ட மக்களின் ஒரு பகுதி மக்களின் சிந்தனைகளுக்கு ஏற்ப அரசு செயற்பாடம தமிழக அரசு பள்ளிகளில் தரத்தை கூட்ட வேண்டும்.