ஞாயிறு, டிசம்பர் 29, 2013

மரத்துப்போன மனம். – சிறுகதை.மஞ்சு எழுந்திரிம்மா என சரளா காபி டம்பளருடன் அறைக்குள் வந்து தன் ஒரே மகளை எழுப்பிக்கொண்டு இருந்தார்.

தூக்க கலக்கத்திலேயே என்னம்மா ?.

ஆறு மணியாச்சி எழுந்திருடா.

எங்கம்மா போகப்போறன் இன்னும் கொஞ்ச நேரம் தூங்கிக்கறன்.

இன்னைக்கு உன்ன பொண்ணு பாக்க வர்றாங்க செல்லம்.

அதை கேட்டதும் தூக்கம் கலைந்து மஞ்சுவின் மனம் தவிக்க ஆரம்பித்தது. முதல் முறையா பொண்ணு பாக்க வர்றாங்க. பக்கத்து வீட்டு அக்காவ புடிக்கலன்னு மாப்பிள்ள சொன்னதைப்போல என்னை சொல்லக்கூடாது கடவுளே என மனதில் வேண்டிக்கொண்டே எழுந்து உட்கார்ந்தாள். அவள் கையில் காபி டம்பளரை தந்த சரளா சீக்கிரம் எழுந்து குளிச்சிட்டு அந்த மஞ்சள் கலர் புடவைய கட்டிக்கடா.

என்னம்மா திடீர்ன்னு புடவை கட்டச்சொல்ற. நான் தான் இதுவரைக்கும் புடவை கட்டனதுயில்லன்னு உனக்கு தெரியும்மில்ல.

உனக்கு புடவை கட்ட தெரியலன்னு பொண்ணு பாக்க வர்றவங்களுக்கு தெரிஞ்சதுன்னா அசிங்கமாயிடும். எதிர்த்த வீட்டு கவிதாவ வரச்சொல்றன் அவ வந்து உன்னை ரெடிப்பண்ணுவா எனச்சொல்லிவிட்டு வெளியே போனார். ஹாலுக்கு வந்து சோபாவில் அமர்ந்தபடி காபி குடித்துவிட்டு பாத்ரூம் சென்ற மஞ்சுவுக்கு குளிக்கும் போது மார்கழி மாத குளிர்ந்த நீரும் சுடு நீர் போல் இருந்தது. குளித்துவிட்டு தன் அறைக்குள் நுழைந்தபோது கட்டிலில் அமர்ந்திருந்த கவிதா எவ்ளோ நேரம்டீ குளிப்ப?.

பயமாயிருக்கு அண்ணி.

என்ன பயம்.

பொண்ணு பாக்க வர்றவங்களுக்கு என்ன புடிக்கும்மில்ல.

என்னடீ கேள்வியிது.

சொல்லுங்க அண்ணீ.

உனக்கென்னடீ. நல்ல கலரா அழகா கொழுக்கு மொழுக்குன்னு இருக்கற. எல்லாம்மே அளவா ஜம்முனு இருக்கு.

ச்சீ……..

என்னடீ ச்சீ. ஏரியா பசங்க உன்ன பாத்து ஜொள்ளு விடறானுங்க. அதவிட முக்கியம் நீ பி.எஸ்.சி பீ.எட் படிச்சியிருக்கற உன்ன கொத்திம்போவ நான் நீன்னு போட்டி போடுவானுங்க. நீ என்னடீன்னா புடிக்குமான்னு கேள்வி கேட்கற.

அதில்ல பக்கத்து வீட்லயிருக்கற மலர் அக்காவ பொண்ணு பாக்க வர்றவங்கயெல்லாம் வேணாம் வேணாம்ன்னிட்டு போறாங்க என்னையும் அப்படி சொல்லிட்டா?.

அவள பாக்க வர்றவங்க நகை அதிகமா கேட்கறாங்க. அத அவுங்களாள போட முடியல அதனால இழுத்தும் போவுது. உனக்கென்ன அழகிருக்கு, படிப்பிருக்கு. அதோட உங்கப்பா ஹெட்மாஸ்டர். வசதியா இருக்கிங்க. அப்பறம்மென்ன வர்றவனுக்கு உன்ன புடிக்கும் சும்மா ரெடியாகு எனச்சொல்ல மஞ்சு அவசர அவசரமாக பாவடை, ஜாக்கெட் அணிந்துக்கொண்டு நின்றாள். கவிதா அவளுக்கு அழகாக புடவை கட்டிவிடவும் வெளியே ஆட்டோ வந்து நிற்கும் சத்தம் கேட்கவும் சரியாக இருந்தது,

மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வந்துட்டாங்கம்மா என மஞ்சுவின் அப்பா சோமசுந்தரம் குரல் தந்துவிட்டு வாசலுக்கு சென்றார். சரளாவும் வெளியே வந்து வாங்க வாங்க என புன்னகையிடன் அழைத்து வந்து சோபாவில் உட்காரவைத்தார்கள். இவர் தான் மாப்பிள்ளை. பேரு குமரன். இது அவரோட அப்பா மோகன், அது அவுங்க அம்மா என புரோக்கர் மணி அறிமுகப்படுத்தியவர் மஞ்சுவின் அப்பாவையும், அம்மாவையும் மாப்பிள்ளை வீட்டாருக்கு அறிமுகப்படுத்தினார்.

காபி எடுத்துவாம்மா என தன் மனைவியிடம் மெல்லிய குரலில் சோமசுந்தரம் சொல்ல மஞ்சு மனதில் பயத்தோடும், வெட்கத்தோடு காபி டம்பளர்களை எடுத்துக்கொண்டு அன்ன நடையோடு வந்து மாப்பிள்ளை வீட்டாருக்கு தரும்போது அடிக்கண்ணால் மாப்பிள்ளையை ஒரு பார்வை பார்த்தால். மனதில் ஒரு குறுகுறுப்பு. எல்லோருக்கும் வணக்கம் வைத்தாள். இரண்டு பேரும் வெட்கப்படாம பாத்துக்குங்க கட்டிக்கிட்டு வாழ போறவங்க நீங்க தான் என புரோக்கர் மணி சொன்னதும் குமரன் மெல்ல அவளை பார்த்தான். அதிகம் உயரமும் இல்லாமல், மொத்தென்று இல்லாமல் அம்சமாக இருந்தாள் மஞ்சு.

பையன் சாப்ட்வேர் இன்ஜினியர் மாசம் முப்பதாயிரம் சம்பாதிக்கறாரு. கம்பெனியிலயிருந்து வெளிநாடு அனுப்புவாங்க. அப்ப பையன் சம்பளம் டபுள் மடங்காகிடும் என்ற மணி, பையனோட அப்பா முன்சிபால்டியில ஹெல்த் இன்ஸ்பெக்டரா இருக்காரு. ஒரு பையன், ஒரு பொண்ணு. பொண்ணு கல்யாணமாகி பெங்களுரூல இருக்கு எனச்சொன்னவர் சற்று இடைவெளி விட்டு இரண்டு குடும்பத்தாரும் சரின்னா ஜாதக பொருத்தம் பாக்கலாம் என்றார். தனது மகளின் ஜாதகத்தை தந்த சோமசுந்தரம் நீங்க பையன் ஜாதகத்தை தாங்க எங்க குடும்ப ஜோசியர்க்கிட்ட கேட்டுட்டு சொல்றோம் என வாங்கிக்கொண்டார்.

மாப்பிள்ளை வீட்டார் போனதும் மஞ்சுவிடம் மாப்பிள்ளைய பாத்தியா உனக்கு புடிச்சியிருக்கா என சரளா பலமுறை கேட்டும் நீயும் அப்பாவும் பாத்து ஓ.கே சொன்னா எனக்கும் ஓ.கே ம்மா என்றாள். மழுப்பாம சொல்லுடீ என கவிதா கேட்டும் கடைசி வரை பதில் சொல்லவேயில்லை. அன்றைய இரவு மஞ்சுவுக்கு தூக்கம் போனது. அழகா தான் இருந்தான் என அவள் மனம் குளிற தொடங்கியது. அப்படியே தூங்கி போனால். அடுத்த இரண்டாவது நாள் ஜாதகம் பொருந்தமில்லைமின்னு ஜோசியர் சொன்னாரு என மனைவியிடம் சோமசுந்தரம் சொன்னது அறைக்குள் இருந்த மஞ்சுவின் காதில் விழுந்தபோது அவளின் மனம் வெறுமையானது.

ஜாதகம் பொருந்தி வரலயாம் அண்ணி.

கல்யாணம்ன்னா அப்படித்தாண்டீ. ஜாகதம் பொருந்தி வந்தாத்தான் அதுக்கப்பறம் பேச ஆரம்பிப்பாங்க என்றாள் கவிதா.

கட்டிலில் படுத்துயிருந்த மஞ்சுவின் விம்மி புடைத்திருந்த அவளின் உடல் பாகத்தை ஒரு கை தீண்டீயது. அவளின் இடுப்பில் விளையாடியது அந்த கை கூச்சத்தில் நெளிந்த இடுப்பிலிருந்து மேல் நோக்கி அந்த கை செல்ல சடாரென முழித்துக்கொண்டாள். வெட்கத்தில் அவளின் முகத்தில் ஒரு நாணல். மீண்டும் படுத்தபோது உடல் சூட்டில் உறக்கம் வரவில்லை. தூக்கம் வராமல் கட்டிலில் புரண்டுகிடந்தாள். காலை அறையை விட்டு எழுந்து வெளியே வந்தவள் அம்மா இன்னைக்கு வெள்ளிக்கிழமை சாயந்தரம் கவிதா அண்ணியோட நான் கோயிலுக்கு போயிட்டு வந்துடறன்ம்மா.


இன்னைக்கு சாயந்தரம் உன்ன பொண்ணு பாக்க வர்றாங்கடா. நீ கோயிலுக்கு போனா லேட்டாகிடும் அடுத்தவாரம் போய்க்கடாம்மா.

மஞ்சுவின் மனதில் மீண்டும் ஒரு குறுகுறுப்பு. காமாட்சி தாயே இப்பவாவுது ஜாதகம் பொருந்தி வரனும் என வேண்டிக்கொண்டால். எதிர்பார்த்தப்படி சாயந்தரம் பெண் பார்க்க ஒரு கூட்டம் வந்திருந்தது. பையன் பேரு சரவணன் என புரோக்கர் மணி அறிமுகப்படுத்த காபி டம்பளர்களுடன் வந்த மஞ்சு மாப்பிள்ளையை பார்த்தவளின் மனதில் முன்ன பார்த்தவனை விட இவன் சுமார் தான் என மனம் கணக்கிட்டது. ஜாதகம் பொருத்தம் வந்தா தாங்க அடுத்து பேச முடியும் என சோமசுந்தரம் சொன்னதும் மாப்பிள்ளையுடன் வந்திருந்தவர் நாங்க ஜாதகம் பாத்துட்டோம் 12 பொருத்ததுல 9 பொருத்தம் வருது. எங்களுக்கு பொண்ணு புடிச்சியிருக்கு. நீங்க ஜாதகம் பாத்துட்டு மணிக்கிட்ட சொல்லிவிடுங்க நாங்க கிளம்பறோம் என கிளம்பினார்கள்.

ஒரு வாரம் கடந்த நிலையில் அப்பா ஜாதகம் பாக்கறன்னு சொன்னாரு. என்னாச்சி மாப்பிள்ளை வீட்டார்க்கிட்ட என்ன சொன்னாருன்னு தெரியலயே என மனம் கேள்வி மேல் கேள்வி கேட்டது. என்னடீயாச்சி என கவிதா கேட்டபோது தெரியல அண்ணீ.

செவ்வாய்கிழமை மஞ்சுவும், கவிதாவும் கோயிலை சுத்தி வந்தவர்கள் பிரகாரத்தில் அமரும் போது ஜாதகம் பொருந்தி வந்துச்சாம் ஆனா பையன் குடும்பம் வசதியா இல்லை. என் பொண்ண நான் செல்லம்மா வளர்த்துயிருக்கன். அங்க போய் கஸ்டப்படக்கூடாதுன்னு சொல்லி உங்கப்பா வேணாம்ன்னிட்டாருன்னு சொன்னதா உங்கம்மா சொன்னாங்க என கவிதா சொன்னதை மஞ்சு அமைதியாக கேட்டுக்கொண்டாலும் அவள் முகம் சோகத்தில் இருப்பதை பார்த்து ஏய் இதுக்கெல்லாம் கவலைப்படாதடீ. கல்யாணம் தள்ளி தள்ளி போகுதுன்னா நல்ல புருஷன் அமைவான்னு அர்த்தம்.

அத விடுங்க அண்ணி என சோகமாக சொல்ல கவிதா தன் மாமியார் பற்றி புகார் சொல்ல ஆரம்பித்தாள். 

அதற்கடுத்து வந்த ஒரு ஞாயிற்றுக்கிழமை காலையில் ஒரு போலிஸ்கார மாப்பிள்ளையும், மாலை லெக்சரர் மாப்பிள்ளையும் வந்தார்கள். இப்படி வாரத்தில் இரண்டு, மூன்று முறை துணிக்கடையில் பொம்மைக்கு துணி மாத்தி மாத்தி கொண்டு வந்து நிறுத்தி வைப்பது போல மஞ்சுவுக்கு புடவையை கட்டி காபி டம்பளரை கையில் தந்து அனுப்புவதும் பெண் பார்க்க வந்தவர்கள் முன்னால் உட்காருவதும் இவன் தான் மாப்பிள்ளை என அறிமுகப்படுத்தும் போது மரக்கட்டையாக அமர்ந்திருந்தாள். பக்கத்து வீட்டு அக்கா மாதிரி ராசியில்லாதவன்னு முத்திரை குத்தப்போறாங்க என மனம் புழுங்கி இரவில் தன் அறையில் வெளியே கேட்க முடியாத சத்தத்தில் அழ தொடங்கியிருந்தாள்.

அண்ணீ அண்ணீ என கவிதாவை சுற்றி வரும் மஞ்சு இப்போதுயெல்லாம் கவிதாவிடமும் சரியாக பேசுவதில்லை. இது கவிதாவுக்கும் புரிந்தேயிருந்தது. நல்ல குடும்பம்மா, மாப்பிள்ளையோட கூட பொறந்தவங்க இல்லாம, வசதியா, அழகா, கவர்மெண்ட் வேலையில இருக்கனம்ன்னு ஒருத்தன்கிட்டயே இவ்வளவும் பாத்தா எப்படி கிடைக்கும். இது இவுங்களுக்கு புரியமாட்டேன்குது. பாவம் அவ என மனதில் நினைத்துக்கொண்டாள் கவிதா.

அன்றும் அப்படித்தான், மஞ்சுவின் வீட்டில் பெண் பார்க்கும் படலம் நடந்தது. மாப்பிள்ளை அருண் சிகப்பாகயில்லை என்றாலும் மாநிறமாக அழகாக இருந்தான். மஞ்சு காபி எடுத்துவாம்மா என்றதும் முகத்தில் எந்தவித உணர்ச்சியும் இல்லாமல் காபி தட்டை எடுத்து வந்தாள். பொண்ண நல்லா பாத்துக்குங்க தம்பி. அப்பறம் சரியா பாக்கலன்னு சொல்லக்கூடாது என உடன் வந்த ஒரு பெருசு சொல்ல அருண் அப்போதும் முகத்தில் எந்தவித உணர்ச்சியும் காட்டாமல் தன் முன் நீட்டிய காபி டம்பளரை எடுக்கும் போது ஒரு முறை பார்த்தான். அந்தப்பெண் தன்னை பார்த்தாளா பார்க்கவில்லையா என்பதை அந்த முகத்தில் அருணால் அறிய முடியவில்லை.

நீயும் பாத்துக்கம்மா என்றதும் வெறுப்பில் இருந்த மஞ்சு கையில் வைத்திருந்த காபி தட்டை எதிரில் இருந்த கண்ணாடி டீப்பா மேல் டமால் என போட சூடான காபி எல்லோர் மீதும் பட்டு தெரிக்க எல்லோரும் அதிர்ச்சியுடன் சடாரென எழுந்திருக்க மஞ்சு கண்ணீருடன் அப்படியே ரூம்க்குள் ஓடிப்போய் கதவை சாத்திவிட்டாள். புடிக்கலன்னா புடிக்கலன்னு சொல்ல வேண்டியதுதானே எதுக்கு பைத்தியம் மாதிரி நடந்துக்குது என பேசியபடி கிளம்பி சென்றனர் பெண் பார்க்க வந்தவர்கள்.

அதிர்ச்சியான சோமசுந்தரமும், சரளாவும் மஞ்சுவின் அறைக்குள் சென்று என்னாச்சி என கெஞ்சி, கொஞ்சி கேட்டும் எதுவும் பதில் சொல்லவில்லை உம்மென மூடி வைத்திருந்த ஜன்னலையே பார்த்துக்கொண்டுயிருந்தாள். பயந்துப்போய் குடும்ப டாக்டர் மிருதளாவிடம் அழைத்து சென்றனர். மஞ்சுவை செக் பண்ணியவர் உடம்புக்கு ஒன்னும்மில்ல. அவ மனசுல ஏதோ பாரம்மிருக்கு. நான் கேட்டன் எதுவும் சொல்லல. சைக்காடிஸ்ட் டாக்டர் அட்ரஸ் தர்றன் அவுங்களைப்போய் பாருங்க. இதுக்கு அவுங்க ட்ரீட்மெண்ட் தர்றது தான் பெஸ்ட்.

என்ன டாக்டர் என் பொண்ணு மெண்டல்ன்னு சொல்றிங்களா என லேசான கோபத்தோடு சோமு கேட்க நான் அப்படி சொல்லல. இது மனசு சம்மந்தப்பட்டது. மருந்து மாத்திரையால குணப்படுத்த முடியாது. சைக்காடிஸ்ட்ன்னா ஏன் பயப்படறிங்க. பயப்படமா போங்க. நான் விஷயத்த சொல்லிடறன் நீங்க போய் பாருங்க என அட்ரஸ் தந்தார். மனநல மருத்துவர் டாக்டர் புனிதாவை சந்தித்தனர். நீங்க வெளியில இருங்க என சோமுவையும், சரளாவையும் வெளியே அனுப்பிவிட்டு மஞ்சுவுடன் பேச தொடங்கினார்.

உன் வயசு பொண்ணுங்க எல்லாம் ஜாலியா இருக்கும்போது நீ மட்டும் ஏன் டல்லா இருக்கற ?.

எனக்கு யாரையும் புடிக்கல மேடம்.

அதனால தான் கோயில்ல ஆடுகளுக்கு மஞ்சத்தண்ணி தெளிக்கற மாதிரி பொண்ணு பாக்க வந்தவங்க மேல நீ தண்ணி தெளிச்சியா?.

அதை கேட்டு லேசாக சிரித்த மஞ்சு. அவுங்க மேல கோபம்மில்ல. எங்கப்பா மேல தான் கோபம். அத அவர் மேல காட்ட முடியல. அதனால தான் அவுங்க மேல காட்ட வேண்டியதா போச்சி.

அப்பா மேல அப்படியென்ன கோபம் ?.

பொண்ணு பாக்க இதுவரை அப்பா இருபது மாப்பிளைங்கள வரவச்சிட்டாரு. சும்மா எங்கிட்ட புடிச்சியிருக்கான்னு கேட்கறாரு. ஆனா அவர் விருப்பத்துக்கு ஏத்த மாதிரி இருக்காறான்னு தான் பாக்கறாரு. ஓவ்வொரு முறை இவர் தான் மாப்பிள்ளை இவர் தான் மாப்பிள்ளைன்னு சொல்லும் போது எனக்கு கூசுது. நிறைய மாப்பிள்ளை வந்துட்டு வந்துட்டு போறதால நானும் பக்கத்து வீட்டு அக்கா மாதிரி ராசியில்லாதவளோன்னு நினைக்க தோணுது. கோயிலுக்கு, மார்க்கெட் போகும்போது தெரிஞ்சவங்க மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வந்தாங்களே என்ன ஆச்சின்னு கேட்கும் போது பதில் சொல்ல முடியல. அப்பாவுக்கு பிடிச்சா அம்மாவுக்கு புடிக்கல, அம்மாவுக்கு புடிச்சா அப்பாவுக்கு புடிக்கல. இரண்டு பேருக்கும் புடிச்சா ஜாதகம் சரியில்ல, பையன் வீட்ல வசதி குறைவு, சம்பளம் குறைவா வாங்கறான்னு ஏதோ ஒரு காரணம் சொல்லி தட்டி கழிக்கறாங்க. அந்த கோபத்தல தான் அப்படி நடந்துக்கிட்டன் என்றவள் ரொம்ப செல்லமா வளக்கறன்னு வெளியில நண்பர்கள உருவாக்கிக்க கூட விடல. மனசுல இருக்கறத பகிர்ந்துக்கற அளவுக்கு கூட நெருக்கமான நண்பர்கள் இல்லாம போய்ட்டாங்க என கண்ணீர் விட.

அழுது முடிக்கட்டும் என காத்திருந்த டாக்டர் புனிதா அழுகை சத்தம் குறைந்ததும், மஞ்சு உன்ன மாதிரி தான் இன்னைக்கு நிறைய பொண்ணுங்க மனசுல பாரத்தோட இருக்காங்க. அப்பா அம்மா சொன்னா கட்டிக்கறன்னு சொல்லதா. வாழப்போறது அவுங்கயில்ல, நீ தான் வாழப்போற. பொண்ணு பாக்க வர்றங்கக்கிட்ட உங்க அப்பா அம்மா பேசறத விட நீ பேசு இரண்டு பேருக்கும் ஒத்துப்போனா மட்டும் கல்யாணத்துக்கு சரின்னு சொல்லு. கல்யாணம் பண்ணிக்க பணம் முக்கியம்மில்ல. வாழ்க்கைக்கு முக்கிய தேவை புரிதல் தான். அடுத்த முறை பொண்ணு பாக்க யார் வந்தாலும் தெளிவா இரு. வாழ்க்கைங்கறது இப்பத்தான் தொடங்குது. அவுங்க அப்படி சொல்லுவாங்க, இவுங்க இப்படி சொல்லுவாங்கன்னு நினைச்சி கவலைப்படாத. நீங்க உங்களுக்காக வாழப்போறிங்க. அதனால ஒரு பிரச்சனை வந்தா தைரியமா எதிர்க்கொள்ளனும். அப்பத்தான் இந்த உலகத்தல வாழ முடியும். படிச்சியிருக்க எதையும் யோசிச்சி முற்போக்கா சிந்திச்சிப்பாரு. அப்பா அம்மா சொல்றத அப்படியே ஏத்துக்காத. அதுக்காக அவுங்க சொல்றத உதாசினமும் படுத்தாத. நீ பேசலன்னா யாருக்கும் எதுவும் தெரியாது. பேசு அப்பத்தான் உன் மனசுல இருக்கறது தெரியும்.

பேச விடமாட்டேங்கிறாங்களே?.

உடனே பேசவிடுவாங்களா. பெண்கள அடக்கி வச்சியிருக்கற சமூகத்தல உடனே பேசவிட்டுடுவாங்களா என்ன?. பேச முயற்சி செய். வுhழ்க்கை வாழப்போறது நீ தான் அதனால நீ தான் முடிவு எடுக்கனும் என்றபோது மஞ்சுவின் மனதில் ஒரு நம்பிக்கை வந்திருந்தது. அது முகத்தில் தெரிந்ததும் மஞ்சுவின் அப்பாவையும் அம்மாவையும் உள்ளே அழைத்தார்.

என்ன டாக்டர் பிரச்சனை ?.

நீங்க தான் பிரச்சனை. பொண்ணு மேல ரொம்ப பாசம் வச்சியிருக்கிங்க. அது எல்லா பெற்றோர்களும் செய்யறதுதான். ஆனா நீங்க உங்க பொண்ணு வாழ்க்கைய பத்தி அளவுக்கு அதிகமா பயப்படறிங்க. உங்க மேல அவுங்க வச்சியிருக்கற மரியாதைய, பாசத்த நீங்க தவற பயன்படுத்தறிங்க. வாரத்துக்கு இரண்டு, மூனு பேரை அழைச்சி வந்து இவர் தான் மாப்பிள்ளைன்னு அறிமுகப்படுத்தினா எப்படிங்க ஒரு பொண்ணால சகிச்சிக்க முடியும். உங்க பொண்ணு மனசுல என்னயிருக்குன்னு பாருங்க. அவுங்க தான் வாழப்போறவங்க. அவுங்க முடிவு எடுக்கட்டும். நீங்களா ஒரு முடிவு எடுத்து இதுதான் சரியா இருக்கும்ன்னு நம்பாதிங்க. ஜாதகம், பொருத்தம் பாக்கறிங்க அது உங்களோட நம்பிக்கை. இது மாடர்ன் உலகம் இங்க இன்னமும் ஜாதகம் சொல்றத உண்மைன்னு நம்பிக்கிட்டு இருக்காதிங்க. பல தம்பதிங்க வாழ்க்கையில ஜாதகம் பொய்ய போயிருக்கு. அதனால உங்க பொண்ணு சந்தோஷமா இருக்கனும்ன்னா மாப்பிள்ளைய தேர்ந்து எடுக்கறதல உங்க பொண்ணோட பங்கு அதிகமா இருக்கட்டும். அதுதான் அவுங்க வாழ்க்கைக்கு நல்லது என சொல்லி அவர்களை அனுப்பிவைத்தார்.

மருத்துவமனையை விட்டு வெளியே வரும்போது சோமுவின் மனம் சின்ன புள்ள அதுக்கு என்ன தெரியும் என பேசியது. மஞ்சுவின் மனம் தெளிவாக இருந்தது.

சனி, டிசம்பர் 21, 2013

தேவயானி – சங்கீதா விவகாரத்தில் உள்ள உளவு விவகாரம்.அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகத்தின் துணை தூதர் தேவயானி கொப்ராகோட் கைது செய்யப்பட்டு, மோசமாக நடத்தப்பட்ட விவகாரம் இந்தியா நாடாளமன்றத்தில் விவாதம் நடத்தும் அளவுக்கு சென்றுள்ளது. 

உத்தம்கோப்ரகடே. மகாராஷ்டிரா மாநில கேடர் ஐ.ஏ.எஸ் அதிகாரி. ஓய்வு பெற்றுவிட்டார். அவரது மகள் தான் தேவயானி. மருத்துவம் படித்தவர். ஐ.எப்.எஸ் தேர்வில் வெற்றி பெற்று 1999ல் வெளியுறவுத்துறையில் பணியில் சேர்ந்துள்ளார். அமெரிக்காவில் பணியாற்றுவதற்க்கு முன் பாகிஸ்தான், ஜெர்மனி, இத்தாலி தூதரகங்களில் அரசியல் பிரிவில் பணியாற்றியுள்ளார். அதன்பின்பே அமெரிக்காவுக்கு வந்துள்ளார். அவர் அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகத்தில் பணியில் சேர்ந்த ஆண்டு 2012. அங்கும் அரசியல், பொருளாதாரம், பெண்கள் விவகாரத்தை கவனிக்கும் துணை தூதர். குடும்பத்துடன் நியூயார்க்கில் வசிக்கும் இவருக்கு வேலைக்காரி தேவைப்படுகிறார். இந்தியாவில் அதற்கான பணியாளை தேடுகிறார். 

மும்பையை சேர்ந்த சங்கீதா ரிச்சர்ட் முன் வருகிறார். அவருக்கான மாத சம்பளம் 25 ஆயிரம், ஓவர் டைம்க்கு 5 ஆயிரம் கூடுதல் சம்பளம் என பேசி முடிக்கிறார்கள். வேலை அமெரிக்காவில் என்பதால் அமெரிக்கா சட்ட திட்டத்தின் படி பணியாளர் ஒப்பந்தம் போடப்படுகிறது. அதில் அமெரிக்க சட்டதிட்டத்தின்படி விசாவில், 8 மணி நேர வேலை, பணியாளுக்கு ஒரு மணி நேரத்துக்கு 690 ரூபாய் சம்பளம் (மாதத்துக்கு 4200 டாலர் சம்பளம்) என குறிப்பிடப்படுகிறது. இந்தளவு சம்பளத்தை துணை தூதர் தேவயானியே பெறமாட்டார். 

2012 நவம்பர் மாதம் அமெரிக்காவில் உள்ள தேவயானி வீட்டில் சங்கீதா வேலைக்கு சேர்கிறார். 

2013 ஜீன் 23ந்தேதி எனது வீட்டில் வேலைகாரியாக இருந்த சங்கீதா காணாமல் போய்விட்டார் என அமெரிக்கா தூதரகத்தில் புகார் தந்துள்ளார் தேவயானி. புகாரை அவர்கள் வாங்காமல் நியூயார்க் போலிஸிடம் அனுப்பியுள்ளார்கள். நியூயார்க் போலிஸாரிடம், காணாமல் போனவர்கள் பட்டியலில் அவரது பெயரை சேருங்கள் என கேட்டுள்ளார். போலிஸ், நீங்கள் புகார் தரமுடியாது அவரது குடும்பத்தார் தந்தால் தான் வழக்கு பதிவு செய்யப்படும் எனச்சொல்லியுள்ளார்கள். டெல்லியில் உள்ள அவரது கணவர் பிலிப்பிடம் புகார் தாங்கள் எனச்சொல்லியுள்ளார் அவரும் மறுத்துள்ளார். 

ஜீலை 1ந்தேதி தேவயானிக்கு போன் செய்த ஒரு பெண்மணி தன்னை யார் என அடையாளப்படுத்திக்கொள்ளாமல் சங்கீதாவுடன் நீங்கள் செய்த பணி ஒப்பந்தத்தை முறித்துக்கொள்ள வேண்டும், அரசு விசாவை சாதாரண விசாவாக மாற்றி தர வேண்டும், 19 மணி நேர பணிக்கு கூடுதல் சம்பளம் இந்த நிபந்தனைக்கு நீங்கள் ஒப்புக்கொண்டால் சங்கீதா கோர்ட்டுக்கு செல்லமாட்டர் எனச்சொல்லியுள்ளார். இதுப்பற்றி நியூயார்க் போலிஸிடம் தகவல் சொல்லியுள்ளார் தேவயானி. போலிஸ் கமுக்கமாக இருந்துள்ளது. 

இதுப்பற்றி, டெல்லி போலிஸில் தேவயானியின் கணவர் பிலிப் ரிச்சர்டு எங்களை ஏமாற்றிவிட்டார். என் வீட்டில் வேலை செய்த சங்கீதாவும், அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியுள்ள அவரது கணவர் பிலிப் ரிச்சர்ட்டும் எங்களது வீட்டில் இருந்து பிளாக்பெர்ரி போன், 2 சிம்கார்டு உட்பட சில பொருட்களை திருடி சென்றுவிட்டார் என புகார் தந்துள்ளார். 

மத்தியரசு சங்கீதாவுக்கு தந்த விசாவை ரத்து செய்கிறது. அதோடு, சங்கீதாவை கண்டுபிடித்து உடனே நாடு கடத்துங்கள் என அமெரிக்க வெளியுறுத்துறைக்கு இந்தியரசு தகவல் அனுப்புகிறது. 

ஜீலை 15ந்தேதி, டெல்லி நீதிமன்றத்தில் என் மனைவி ஜீலை 8ந்தேதி முதல் நியூயார்க் போலிஸ் பாதுகாப்பில் உள்ளார். தேவயானி, ஒப்பந்தப்படி உள்ளுர் சம்பளம் தரவில்லை, கொத்தடிமை போல் நடத்தியுள்ளார் அதனால் இந்திய அரசு மீது புகார் செய்கிறேன் என மனு தாக்கல் செய்துவிட்டு அந்த நகலை அமெரிக்க தூதரகத்துக்கும் அனுப்பியுள்ளார். இதை மையமாக வைத்து இரண்டு நாடுகளுக்கும் இடையே கடித பறிமாற்றங்கள் நடைபெறுகின்றன. 

செப்டம்பர் 4ந்தேதி, அமெரிக்க வெளியுறவு அமைச்சதும், அமெரிக்காவுக்கான இந்திய தூதரகத்துக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளது. அதில், சங்கீதா தந்த புகாரில் கவலை தரும் விஷயங்கள் உள்ளன. அதனால் அதுப்பற்றி விசாரணை நடத்த வேண்டும், சம்பளம் பற்றிய தகவல்கள் வேண்டும் என கேட்கிறது. 

செப்டம்பர் 10ந்தேதி, இந்தியா சார்பில் இதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

செப்டம்பர் 20ந்தேதி டெல்லி நீதிமன்றம் சங்கீதா, பிலிப் இருவரும் தேவயானிக்கு எதிராக எத்தகைய சட்ட நடவடிக்கையும் எடுக்ககூடாது. இந்தியாவுக்கு வெளியே நீதிமன்றம், தீர்ப்பாயம், சட்ட அமைப்பு எதிலும் புகார் செய்யவோ, வழக்கு தொடுக்கவோ கூடாது. இறுதி விசாரணை டிசம்பர் 13ந்தேதி நடைபெறும் என உத்தரவிடுகிறது. 

டிசம்பர் 10ந்தேதி, ரிச்சர்டு அவரது இரண்டு குழந்தைகள் அமெரிக்காவுக்கு ரகசியமாக அழைத்துக்கொள்கிறது அமெரிக்க வெளியுறவு அமைச்சகம். 

டிசம்பர் 12ந்தேதி அமெரிக்காவில் தேவயானி கைது செய்யப்படுகிறார்.

டிசம்பர் 13ந்தேதி ஜாமினில் விடுதலை செய்யப்படுகிறார். 

டிசம்பர் 15ந்தேதி ஐ.நாவுக்கான நிரந்தர தூதராக தேவயானி பணி மாறுதல் செய்யப்படுவதாக இந்தியா அறிவிக்கிறது. 


அமெரிக்காவில் சட்டம் அனைவருக்கும் ஒன்று தான் என அமெரிக்க அரசின் வழக்கறிஞர் சொல்கிறார். இது உட்டாலங்கடி வேலை. தொழிலாளர் நலச்சட்டபடி புகார் தர வேண்டும் என்றால் ஆயிரக்கணக்கானோர் அமெரிக்காவில் புகார் தர முடியும். அத்தனை மோசமான நாடு அமெரிக்கா. தேவயானி விவகாரத்தில் ‘ஏதோ’ ஓரு மர்மம் உள்ளது. அது என்னவாக இருக்கும் என நுணுக்கமாக ஆராய்தால் புடிபடும். அமெரிக்காவில் சங்கீதா வேலை செய்தாலும் அவர் துணை தூதராக உள்ள தேவயானி வீட்டில் வேலை பார்ப்பவர். தூதர் வீட்டில் வேலை பார்க்கும் பெண்மணி காணாமல் போனால் அது எத்தனை ஆபத்தானது என்பது தூதரக பணியில் இருப்பவர்களுக்கு நன்றாக தெரியும். அமெரிக்க இராஜாங்க திணைகளம் காணாமல் போனதாக புகார் வந்தவுடன் பரபரப்பாகி கண்டுபிடிக்க உத்தரவிட்டு இருக்க வேண்டும். அப்படி செய்யவில்லை

அடுத்ததாக நியூயார்க் போலிஸ் காணாமல் போனால் அவரது குடும்பத்தார் தான் புகார் தர வேண்டும் என்கிறது. அது அமெரிக்காவின் குடிமக்களுக்கு பொருந்தலாம். சங்கீதா அங்கு பணியாற்ற தான் சென்றுள்ளார். அதனால் அவர் முழுக்க முழுக்க தேவயானியின் கட்டுப்பாட்டில் வருகிறார். இந்திய அரசாங்கத்தின் சிறப்பு பாஸ்போட் தந்துள்ளது. அதனால் அவர் காணாமல் போனார் என புகார் தந்தவுடன் ஏற்றுக்கொண்டிருக்க வேண்டும். ஆனால் மறுத்துவிடுகிறார்கள். 

அமெரிக்காவில் சட்ட திட்டம் மதிக்கப்படும் என்கிறார் அரசு வழக்கறிஞர். இந்தியாவிலும் சட்ட திட்டங்கள் உள்ளது. இந்தியாவில் சங்கீதா மீது புகார் பதிவாகி இந்திய நீதிமன்றம் சங்கீதாவை இந்தியாவுக்கு அனுப்புங்கள் என உத்தரவிடுகிறது. அதை அமெரிக்கா மதிக்கவில்லை. இந்திய வெளியுறவுத்துறை அரசின் சார்பில் தரப்பட்ட விசாவை ரத்து செய்ததோடு அவரை கண்டுபிடித்து நாடு கடத்துங்கள் என கடிதம் அனுப்புகிறது அதற்கு அமெரிக்கா செவி சாய்க்கவில்லை. 

இந்திய பிரஜையான சங்கீதாவின் கணவர் பிலிப்ரிச்சர்டு, அவரது இரண்டு குழந்தைகளை இந்தியாவுக்கு தெரியாமல் தங்கள் நாட்டுக்கு ரகசியமாக அழைத்துக்கொள்கிறது. கேட்டால், அவர்களை இந்தியாவில் மிரட்டுகிறார்கள் என்கிறார்கள். மிரட்டியது யார் அதுப்பற்றி புகார் தந்துள்ளாரா என்ற விளக்கம்மில்லை. அவர்களை மீடியா முன்பும் நிறுத்தவில்லை. 

உலகில் பின்பற்றப்படும் தூதருக்கான சட்ட திட்டங்களை அமெரிக்கா பின்பற்றவில்லை என்பதே அவரது கைது பற்றி அமெரிக்காவின் ஒவ்வொரு ஏஜென்சியும் தரும் முன்னுக்கு பின் முரணான தகவல்களே நிருபிக்கின்றன.

சங்கீதாபிலிப்ரிச்சர்டு மேல் அமெரிக்காவுக்கு என்ன அக்கறை ?. 

உலக நாடுகள் அனைத்தும் பிற நாடுகளில் தூதரகம் அமைப்பதே உளவு பார்க்கதான். தங்களது உளவு ஆட்களை களமிறக்கி தங்களது நாட்டுக்கு எதிரான சம்பவங்கள், திட்டமிடல்கள் அந்த நாடுகளில் நடக்கிறதா என கண்காணிக்கின்றன. இந்தியா சார்பில் ரா, அமெரிக்காவுக்கு சி.ஐ.ஏ, பாகிஸ்தானுக்கு ஐ.எஸ்.ஐ என ஒவ்வொரு நாட்டுக்கும் ஒவ்வொரு வெளிநாட்டு உளவு அமைப்புகள் உள்ளன. 

உளவாளிகள் அரசியல் கட்சிகள், இராணுவம், தூதரகம், பிரபல செய்தி நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள், ஏன் உளவு அமைப்புகளுக்குள் என எங்கும் உண்டு. உளவாளிகள் எந்த பகுதியில் பணியாற்றுகிறார்களோ அந்த நாட்டை சேர்ந்தவர்களையும் உளவாளிகளாக மாற்றி வைத்திருப்பார்கள். அவர்களுக்கு என்ன தேவையோ அதை செய்து தருவார்கள். தங்களுக்கு தகவல்கள் தரும் உளவாளிகளை பொத்தி பொத்தி பாதுகாப்பார்கள். சிக்கலில் மாட்டிக்கொண்டால் காப்பாற்றுவார்கள். உலகில் உளவாளிகளுக்கு சி.ஐ.ஏ, மொசாத், எம்.ஐ6 போன்றவை நம்பகமான உளவு அமைப்புகள். உலக நாட்டாமையான அமெரிக்காவுக்கு நண்பர்களை விட எதிரிகள் அதிகம். சி.ஐ.ஏ உலகம் முழுவதும் விளையாடிய விளையாட்டு அப்படி. அதனால் சி.ஐ.ஏவின் உளவாளிகள் வான்வெளி வரை உருவாக்கி வைத்துள்ளது.  

சி.ஐ.ஏவுக்கு உளவு சொல்பவராக சங்கீதா இருக்க வாய்ப்புண்டு. சங்கீதா மூலம் தேவயானியை உளவு பார்த்துயிருக்கலாம். காரியமும் சாதித்துக்கொண்டு வந்திருக்கலாம். தேவயானியிடமோ அல்லது இந்திய அதிகாரிகளை கண்காணிக்கும் ‘ரா’ வலையில் சிக்கியிருக்கலாம். இதனை அறிந்த சி.ஐ.ஏ தன் உளவாளியை காப்பாற்ற முயற்சி செய்யலாம். இந்தியாவில் இருந்து சி.ஐ.ஏவுக்கு உளவு பார்த்த சிலரை ரா கண்டறிந்தபோது அவர்களை ரகசியமாக தங்கள் நாட்டுக்கு அழைத்து பாதுகாக்கிறது சி.ஐ.ஏ. சிலரை இந்தியாவும் பிடித்து விசாரணை நடத்துகிறது. சங்கீதா சிக்கினால் ஆபத்து என்பதை உணர்ந்தே அவரை அமொிக்கா பாதுகாக்க முயல்கிறது. 

இல்லையேல் உப்பு சப்பில்லாத விவகாரத்தில் அமெரிக்கா இந்தியாவுடன் இப்படி விளையாடாது. ஏன் எனில் இந்தியா அந்தளவுக்கு அமொிக்காவுக்கு நெருக்கமான அடிமை நாடு. அமொிக்கா இந்தியாவை அதிகமாக உளவு பார்த்தது என விக்கிலீக்ஸ் மற்றும் முன்னால் அமொிக்க உளவாளி தகவலை லீக் செய்தபோது இந்தியா அது சும்மா என்றது. இப்படிப்பட்ட விசுவாச அடிமையை அமொிக்கா விட்டுவிடாது. அடிமைக்கு கோபம் வரும் அளவுக்கு அமெரிக்கா நடந்துக்கொள்கிறது என்றால் இதன் பின்னால் ஏதோ ஒரு மர்ம விளையாட்டு உள்ளது என்பதே உண்மை.

சங்கீதாவை உளவாளி என கூற காரணம், சங்கீதாவின் கணவர் இந்தியாவில் உள்ள மொசாம்பிக் நாட்டின் தூதரகத்தில் கார் ஓட்டுநராக பணியாற்றுகிறார். அவரது அம்மாவும், அப்பாவும் இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரி வீட்டில் அதிகார மட்டத்தில் பணியாற்றுகிறார்கள் இதை அமெரிக்காவும் ஒப்புக்கொள்கிறது.

வெள்ளி, டிசம்பர் 20, 2013

கின்னஸ் ரெக்கார்டு. இளம் பெண்ணின் ‘கில்மா’ அறிவிப்பு.
இந்த செய்தி 18 வயது முடிந்தவர்களுக்கு மட்டுமே. அவர்கள் மட்டும் படித்தால் நன்றாக இருக்கும். முந்தைய கட்டுரைக்கான தகவல்கள் தேடியபோது கண்ணில் பட்டது.


போலந்து நாட்டை சேர்ந்த அனியா லிஸ்விக்சா. வயது 21 தானாம். போலந்தை சேர்ந்த ஒருவரை காதலிக்கிறார். இவருக்கு கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடிக்க தீராத ஆசை. என்ன பண்ணலாம் என யோசித்தது இந்த அழகு தேவதை. (காதலன் சார் ஸாரி).

நீண்ட யோசனைக்கு பின் பல்பு மண்டைக்குள் பிரகாசமாக எரிந்தது. உலகத்தில் அதிக ஆண்களுடன் செக்ஸ் வைத்துக்கொண்டால் கின்னஸ்சில் இடம் பிடித்துவிடலாம் என்பதே அவரது மண்டைக்குள் உதித்த ஐடியா. (அடிப்பாவி) தாமதிக்கவில்லை உடனே இதுப்பற்றி தன் காதலனுடன் விவரித்துள்ளார். (அத அவ சொல்லும் போது அவன் முகத்தை பார்த்திருக்கனும்) காதலியின் திட்டத்தை கேட்டவன் ஆஹா ஓஹோ பிரமாதம் என பாராட்டியுள்ளான் ( அட நன்னாரி பயலே ).

அப்பறம்மென்ன கின்னஸ் நிறுவனத்திடம் ஓரு லட்சம் ஆண்களுடன் உறவு வைத்துக்கொள்வது என்ற திட்டத்தை சொல்லியுள்ளார். அவனுங்களுக்கு என்ன கசக்கவா போகுது. பேஸ் பஸ் நன்னாயிருக்கு போங்கோ என்றனர். அம்மணி இந்த ஆண்டு பிப்ரவரியில் தான் கட்டிலில் ‘குதித்தார்’.

ஒரு ஆணுடன் 20 நிமிடம் என்பது கணக்கு. சிறப்பாக ‘செயல்படும்’ ஆண்களுடன் நேரம் அதிகரிக்கப்படும். தினமும் 9 பேர் வரை மட்டுமே அனுமதி. வாரத்தின் இறுதி நாட்கள் மட்டுமே திட்டத்தை செயல்படுத்தும் நாட்கள். இதுவரை ஐநூறு தொட்டுள்ளார் என்கிறது அவரது முகநூல் கணக்கு. இதனை தனது முகநூல் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அவரது முகநூல் பக்கத்தை இதுவரை 87 ஆயிரம் சொச்சம் லைக் செய்துள்ளார்கள். அவருடன் உறவு கொள்ள விரும்புவர்கள், அவரது முகநூல் மற்றும் இணைய தளம் வாயிலான தங்களைப்பற்றிய தகவல்களை தெரிவிக்க வேண்டும். தன்னுடன் உறவு கொள்பவருக்கு வயது 18ல் இருந்து 45க்குள் மட்டுமே இருக்க வேண்டும் எனச்சொல்லியுள்ளார்.

போலந்து மற்றும் ஐரோப்பிய நாடுகள் மற்றும் உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தன் ‘சேவை’யை செய்யவுள்ளதாக அறிவித்துள்ளார். அவருக்கு பல நாடுகளில் இருந்து அழைப்பு விடுக்கிறார்களாம். (இந்த ஆம்பளைங்கள நம்பவே கூடாது. தேங்ஸ் மோத்வானி).


இவர் அறிவிப்புக்கு பின் இவரை பல நாடுகளின் செய்தித்தாள்கள், மீடியாக்கள் போட்டி போட்டுக்கொண்டு நேர்காணல் செய்கின்றன. ‘அதல’ லட்சத்தை தொடுவதற்க்கு முன் இதில் லட்சத்தை தொட்டு விடுவார் போல. ஒரு நாளைக்கு 10 பேருடன் உறவு வைத்துக்கொண்டால் இத்தனை நாள், 16 பேருடன் உறவுக்கொண்டால் இத்தனை நாட்களில் முடித்துவிடலாம் என ஐடியா தந்து வருகிறார்கள். அவரோ, கூலாக 1 லட்சம் பேரை சந்திக்க எனக்கு 20 ஆண்டுகள் தேவைப்படுகிறது எனச்சொல்லியுள்ளார்.

எனக்கில்ல....... எனக்கில்ல......... என திருவிளையாடல் தருமி போல புலம்பும் தமிழக ஜொல்லர்களே……… அந்த அம்மணியோட இணைய தளத்துல போய் ‘ஜொல்’ விடுங்க அதிஷ்டம் அடிச்சாலும் அடிக்கும்.

வியாழன், டிசம்பர் 19, 2013

ஓரினச்சேர்க்கை போல…. விலங்குகளுடன் செக்ஸ். சட்ட அங்கீகாரம் உண்டா ?.ஓரின சேர்க்கையாளர்களுக்கு எதிரான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு நாட்டில் வாத பிரதிவாதங்களை ஏற்படுத்திவிட்டது. ஆண் - பெண் உறவு நிலைக்கு மாறாக, ஆண் சக ஆணுடனும், பெண் சக பெண்ணுடன் உடல் உறவு வைத்துக்கொள்வதை தான் ஓரினசேர்க்கை என அழைக்கப்படுகிறது.

உலகின் பல நாடுகளில் ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு ஆதரவாகவும், எதிராகவும் சட்டங்கள் உள்ளன. கடுமையான தண்டனை தரும் நாடுகளும் உள்ளன. சலுகைகள் தரும் நாடுகளும் உள்ளன. இந்தியாவின் சட்டம் ஓரினசேர்க்கையாளர்களுக்கு எதிரானது. இந்தியாவில் ஓரின சேர்க்கையில் ஈடுபட்டால், இந்திய தண்டனை சட்டம் 377வது பிரிவின் படி மாபெரும் குற்றம். இதற்கு 7 ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனை வரை தர இடமுண்டு.

இந்தியாவில் அதிகரித்து வரும் ஓரின சேர்க்கையாளர்களை பாதுகாக்கும் பொருட்டு ஓரினசேர்க்கையில் ஈடுபடுவது குற்றமல்ல என அறிவிக்ககோரி டெல்லியில் இயங்கும் நாஸ் என்ற அமைப்பு 2001ல் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தது. 2009 ஜீலை மாதம், டெல்லி உயர்நீதிமன்றம், ஓரின சேர்க்கை குற்றம்மல்ல, இருவரின் சம்மதத்துடன் தனிமையில் உறவு கொள்வது தவறல்ல என தீர்ப்பு வழங்கியது.

இந்த தீர்ப்பை எதிர்த்து இந்து, கிருஸ்த்துவ, இஸ்லாமிய கலாச்சார, மத அமைப்புகள் சில உச்சநீதிமன்றத்துக்கு சென்றன. உச்சநீதிமன்றம், கடந்த 11ந்தேதி ஓரின சேர்க்கை என்பது கிரிமினல் குற்றம். தற்போதைய நிலையில் ஓரின சேர்க்கைக்கு ஆதரவாக உச்சநீதிமன்றத்தால் சட்டம் இயற்ற முடியாது. இந்த முக்கிய பிரச்சனை பற்றி நாடாளமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும். ஓரின சேர்க்கைக்கு எதிரான சட்டத்தை நீக்குவது அல்லது சட்டத்தை தொடர்வது நாடாளமன்றத்தின் கையிலேயே உள்ளது என்றுள்ளார்கள் நீதிபதிகள். உச்சநீதிமன்றம் மக்கள் பிரதிநிதிகளிடம் ‘பொறுப்பை’ அனுப்பியுள்ளார்கள்.

ஓரினச்சேர்க்கை பற்றி, சமூகத்தின் பார்வை எவ்வாறாக உள்ளது என்பதை பார்க்கும் முன் இயற்கையின் நீதியை பார்த்துவிடுவோம்.


செக்ஸ் என்பது மனிதனின் அடிப்படை தேவை. உடலுக்கு உணவு எப்படி அத்தியாவசியம்மோ அதேபோல் குறிப்பிட்ட வயதுக்கு மேல் காமமும் அத்தியாவசியம். குறிப்பிட்ட வயதுக்கு பின் ஆண், பெண் இரு பாலரும் அதை அனுபவிக்க வேண்டும் என்கிறது காமசாஸ்திரம். கலவியில் எந்தந்த விதத்தில் ஈடுபடலாம் என்பதை அலசுகிறது காமசாஸ்திரம். இந்த நூல் இந்தியாவில் எழுதப்பட்டது என்பது குறிப்பிடதக்கது.

ஆண் பெண்ணோடு உடல் உறவு கொள்வது இயற்கை. அதற்கு மாறாக பண்டைய காலம் முதலே ஓரினச்சேர்க்கை என்பது உள்ளது. ஆண் தன் மனம் விரும்பிய ஆணுடனோ, பெண் தன் மனம் விரும்பிய பெண்ணுடனோ கலவியில் ஈடுபட்டுக்கொண்டு இருக்கிறார்கள். சமகாலத்திய பிரபலங்கள் பலரும் ஓரினச்சேர்க்கையாளர்கள். உலகம்மே கொண்டாடும் இந்தியாவின் தேச தந்தை என வர்ணிக்கப்படும் மகாத்மா காந்தியும் ஓரினச்சேர்க்கையாளர் தான். இந்தியாவில் 25 லட்சம் பேர் ஓரின சேர்க்கையாளர்களாக இருக்கலாம் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. (அவ்வளவு தானா ?.).

ஓரினச்சேர்க்கை மட்டுமல்ல, மனித இனம் மிருக இனத்துடன் கலவியில் ஈடுபடுவதும் பண்டைய காலம் தொட்டு இன்று வரை நடைமுறையில் உள்ளது. பழங்காலத்தில் நடைபெற்ற இந்த கலவியை சிற்பங்களும், ஓவியங்களும் பதிவு செய்துள்ளன. தற்காலத்தில் நடப்பவற்றை மீடியா பதிவு செய்து வருகின்றன. 

ஆடு, மாடு, கழுதையுடன் ஆண்களும், நாய்கள், மீன்கள், பாம்புகளுடன் பெண்களும் கலவியில் ஈடுபட்டு வருகிறார்கள். தன்னுடன் செக்ஸ் வைத்துக்கொண்டவனை நீதிமன்றத்தில் வந்து அடையாளம் காட்டியுள்ளது ஒரு ஆடு. ( நம்ப முடியாது தான் ஆனால் நிஜம் ). இப்படி மிருக இனத்துடன் ‘உறவு’ வைத்துக்கொள்பவர்கள் உலக அளவில் குறைவானர்கள் தான்.

ஓரினச்சேர்க்கையாளர்களாகட்டும், மிருகங்கங்களை புனர்பவர்களாகட்டும் இவர்களை மருத்துவ ரீதியாக குறைபாடு உள்ளவர்கள் என்கிறார்கள். ஒரு பெண் தன்னை ஆணாக மனதில் நினைத்துக்கொண்டு வாழும் போது கலவியில் ஈடுபட ஒரு பெண்ணை தான் தேடுவாள். அதேபோல் தான் ஒரு ஆண், மனதில் தன்னை பெண்ணாக கற்பனை செய்துக்கொண்டாள் அவன் கலவிக்கு ஆண் வேண்டும் தான் என நினைப்பான். இது அவர்களுக்கான ஹார்மோன் குறைபாடு என்கிறார்கள் மனநிலை மருத்துவர்களும், செக்ஸ்லாஜிஸ்டுகளும்.

அதேபோல், விலங்குகளுடன் உறவு கொள்வது என்பது, அந்த விலங்கு எதிர்ப்பு தெரிவிக்காது. எவ்வளவு வேகமாக உறவு கொண்டாலும் அது கத்தவோ, திருப்பி தாக்கவோ தாக்காது. இவர்களது வெறியை அதனோடு தீர்த்துக்கொள்ளலாம் என்பதாலே அதனுடன் ஈடுபடுகிறார்கள். இதனை மருத்துவர்கள் ஜீபிலியா என்கிறார்கள். இதுவும் ஒருவித குறைபாடும், காம வெறியும் தான் காரணம்.

இவைகளை சமூகத்தில் ஏற்றுக்கொள்வதில்லை. அதனால் ஓரினச்சேர்க்கையை அங்கீகரித்து சட்டமாக்குவது என்பது தேவையற்றது. இலை மறை காயாக இருப்பது அப்படியே இருந்துவிட்டு போகட்டும். ஓரினச்சேர்க்கையை எதிர்ப்பவர்களை கிண்டலடிக்கும் புரட்சியவாதிகளே ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்கள். அண்ணன், அப்பா, தம்பி, தாய், தங்கை, அக்கா, அண்ணி, மகள், மருமகள் என நெருக்கமான உறவுக்காரர்களில் யாராவது ஒருவருடன் கலவியில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்கள் விருப்பப்பட்டு கலவியில் ஈடுபடுகிறார்கள் என்பதற்காக அதை சட்டம் போட்டு அங்கீகரித்து விடலாமா?.

சனி, டிசம்பர் 14, 2013

வாக்காளனை ஏமாற்றிய அரவிந்த் கெஜ்ரிவால்.வட இந்தியாவில் நடந்த 5 மாநில தேர்தல்களில் 3 மாநிலத்தில் பா.ஜ.கவும், ஒரு மாநிலத்தில் காங்கிரஸ்சும் ஆட்சி அமைத்துள்ளார்கள். டெல்லி யூனியன் பிரதேசத்திற்க்கு நடந்த தேர்தலில் யாருக்கும் ஆட்சி அமைப்பதற்கான மெஜாரிட்டியில்லை. டெல்லி சட்டமன்றம் 70 எம்.எல்.ஏ தொகுதிகளை கொண்டது. நடந்து முடிந்த தேர்தலில் 32 இடங்களில் பா.ஜ.கவும், 28 இடத்தில் ஆமி ஆத்மீ கட்சியும், 8 இடத்தில் காங்கிரஸ்சும், சுயேட்சை, மற்றொரு கட்சி தலா ஒருயிடத்தில் வெற்றி பெற்றுள்ளார்கள். பா.ஜ.க நாங்கள் ஆட்சி அமைக்க விரும்பவில்லை எனக்கூறிவிட்டது. இந்த கட்டுரை வெளியான சமயம் ஆம்ஆத்மி கட்சி பதில் தெரிந்திருக்கும். யாருக்கும் மெஜாரிட்டியில்லை என்பதால் தொங்கு சட்டசபையா?, ஜனாதிபதி ஆட்சியா? மறு தேர்தலா என்ற விவாதம் நடந்துக்கொண்டுயிருக்கிறது.

நடக்கட்டும்.

டெல்லி யூனியன் பிரதேச தேர்தலில் 3 முறை முதல்வராக இருந்த காங்கிரஸ் ஷீலாதீட்ஷீத் தேற்கடிக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ்க்கு படுமோசமான தோல்வி. அதே நேரத்தில் யாரும்மே எதிர்பாராத வகையில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றுள்ளது. பெரும் வெற்றி. கட்சி தொடங்கி ஓராண்டில் யாருடனும் கூட்டணியில்லாமல், முதல்முறையாக தேர்தல் களத்தை சந்தித்து 28 எம்.எல்.ஏக்கள் பெற்றது நிச்சயம் இந்திய தேர்தல் வரலாற்றில் இடம் பெறும்.

ஆனால் நுணுக்கமாக ஆராய்ந்தால் வாக்காளனுக்கு பொய்யான வாக்குறுதிகளை தந்து மற்ற கட்சிகளைப்போலவே நம்பிக்கை மோசடி செய்து வெற்றி பெற்றுள்ளது ஆமி ஆத்மி கட்சி. என்பதே உண்மை. 

டெல்லி தேர்தல் ?


காங்கிரஸ்க்கு எதிர்ப்பாக ஊழல் எதிர்ப்பு இயக்கம் தொடங்கினர்கள் அன்னஹசாரே, கெஜ்ரிவால், சாமியார் பாபாராம்தேவ், பிரசாந்த்பூஷன், கிரன்பேடி, திவாரி போன்றோர். உண்ணாவிரதங்கள், போராட்டங்கள் நடைபெற்றன. அன்னஹசாரேவுடன் ‘நிதி’ மோதல் வர அவரிடம்மிருந்து பிரிந்து வந்து 2012 நவம்பரில் கட்சி தொடங்கினார்கள் கெஜ்ரிவால், பிரசாந்த்பூஷன் போன்றோர். அது ஆமிஆத்மீ கட்சி. ( ஏழை மக்கள் கட்சி ) இவர்களின் தாரக மந்திரம் நாட்டில் ஊழலை ஒழிக்க வேண்டும், மோசடி அரசியல் கட்சிகளை மக்கள் ஒதுக்க வேண்டும் என்பதே இவர்களது கொள்கை. ( இவர்களை பொறுத்தவரை நாட்டில் ஊழல் மட்டுமே பிரச்சனை மற்றப்படி நாடு சுபிக்ஷமாக உள்ளது ). 2013 டெல்லி மாநிலம் தேர்தலை எதிர்க்கொண்டது. காங்கிரஸ், பி.ஜே.பியோடு ஆம்ஆத்மீ கட்சியும் களத்தில் குதித்தது.

ஆம்ஆத்மி வேட்பாளர்கள் தேர்வின் போது, பொது சேவை செய்பவர்களிடம்மிருந்து மனுக்களை பெற்று பொதுமக்கள் பார்வைக்கு இணைய தளம் மூலம் வெளியிட்டு கருத்து கேட்டு ‘பிரச்சனையில்லாதவர்களை’ வேட்பாளர்களாக அறிவித்தது கட்சி. மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 69 இடத்தில் வேட்பாளர்களை நிறுத்தினர். துடைப்பம் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியது. சமூகத்தை தூய்மையாக்க வந்துள்ளோம் என பிரச்சாரத்தை தொடங்கினார்கள்.

தேர்தல் வாக்குறுதியாக.

1.    50 சதவித விலையில் மின்சாரம்.
2.    தினமும் 700 லிட்டர் தண்ணீர் இலவசம்.
3.    தரமான சுகாதாரம் மற்றும் கல்வி.
4.    ஜான்லோக்பால் மசோதா நிறைவேற்றம்.
5.    கமாண்டோ படை மூலம் பெண்களுக்கு பாதுகாப்பு.


இதை மக்களிடம் வாக்குறுதிகளாக தந்தது. ஆட்சிக்கு வந்தால் 15 நாளில் இவைகள் நிறைவேற்றப்படும் எனச்சொல்லி தான் தேர்தலை சந்தித்தது ஆமிஆத்மி கட்சி.


வெற்றியின் ரகசியம்……..

ஏ.ஏ.பி கட்சி வேட்பாளர் தேர்வு, அறிவிப்பு போன்றவற்றில் செய்த புதுமை அவர்களை மக்களிடம் கொண்டு சென்று சேர்த்தது. அதுமட்டுமல்ல, வெங்காயவிலை உயர்வு, டெல்லியில் பேருந்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணுக்காக நடந்த அதீத போராட்டங்கள், காங்கிரஸ் ஆட்சியில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு போன்றவற்றால் மக்கள் பாதிக்கப்பட்டனர். அதனால் ஆட்சி மாற்றம் தேவை என எதிர்பார்த்தனர். டெல்லி பல சமூக மக்கள் வாழும் மாநிலம். பி.ஜே.பியை பிடிக்காதவர்கள், மாற்று அரசியல் பேசிய, கவர்ச்சியான வாக்குறுதி தந்த ஆம்ஆத்மி கட்சியை தேர்வு செய்தனர்.

வாக்காளனை ஏமாற்றிய ஆம்ஆத்மி கட்சி.

சராசரி கட்சிகளை விட தாழ்ந்து தான் தன் வாக்குறுதிகளாக தந்தது ஆம் ஆத்மி கட்சி. அவர்கள் தந்த வாக்குறுதிகளை காங்கிரஸ்சோ, பி.ஜே.பியோ தந்திருந்தால் ஆச்சர்யப்பட வேண்டியதில்லை. (பி.ஜே.பி தந்துள்ளது). மாற்றத்தை கொண்டு வருவோம் என முழங்கி தேர்தலை சந்தித்த ஆமிஆத்மீ கட்சி தந்தது தான் ஆச்சர்யம். கவர்ச்சிகரமான அந்த வாக்குறுதிகள் நிச்சயம் ஒரு சாரார் மனநிலை மாற்றியது. நடைமுறையில் நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகள் அவை.

ஏ.ஏ.பிக்கு அரசியல் கட்சிக்கான கட்டுமானம்மே கிடையாது ஆனாலும் 28 இடங்களில் வெற்றி பெற்று டெல்லியில் 30 சதவித வாக்குகளை பெற்றுள்ளது என்கிறார்கள் விமர்சகர்களும், பார்வையாளர்களும். வெளிப்பார்வைக்கு தான் கட்டுமானம் கிடையாது. ஆனால் அக்கட்சிக்கு கட்டுமானம் பெரியதாகவே இருந்தது.

அந்த கட்டுமானம்?


என்.ஜீ.ஓக்கள். டெல்லி குடிசை வாழ் மக்களிடம் பிரச்சாரம் செய்து ஆம்ஆத்மி கட்சிக்கு வேலை பார்த்தது. அதேபோல் இன்றைய முதல் தலைமுறை வாக்காளர்கள் மாற்றத்தை எதிர்பார்த்தனர். அவர்களின் கனவு நாயகனாக கெஜ்ரிவால் காணப்பட்டார். காணப்பட்டார் என்பதை விட மீடியாக்களால் சித்தரிக்கப்பட்டார். இளைய தலைமுறையினர் மற்றும் நடுத்தர மக்களிடம் இணையதளம், சமூக வலைத்தளம், மொபைல் போன் வாயிலாக பரந்த அளவில் பிரச்சாரம் செய்யப்பட்டது. இதை தடுக்க முடியவில்லை என தேர்தல் ஆணையரே தெரிவித்தார். காங்கிரஸ், பி.ஜே.பிக்கு மாற்று தேவை என எதிர்பார்த்தவர்கள். இதுதான் வெற்றிக்கு வழி ஏற்படுத்தி தந்தது.

குற்றச்சாட்டுகள்.


காங்கிரஸ், பி.ஜே.பி போன்ற கட்சிகளுக்கு நிதி எங்கிருந்து வருகிறது என கேள்வி எழுப்பினார் கெஜ்ரிவால். தேர்தலின் போது எங்கள் கட்சி ஏழ்மையான கட்சி தேர்தல் செலவுக்கு நிதி தாருங்கள் என கேட்டார். நிதிகள் வந்தன. பிரச்சாரத்தின் போது, எனது பிரச்சாரத்துக்கு வெளிநாடு வாழ் இந்தியர்கள் (என்.ஆர்.ஐ) பணம் தருகிறார்கள். அவர்கள் என் பிரச்சாரத்துக்கு வந்து உதவுகிறார்கள். சீனாவில் உள்ள ஒருவர் தன் குடும்பத்துக்கு தெரியாமல் அவர் சேர்ந்து வைத்த 50 லட்சம் பணத்தை நிதியுதவி செய்துள்ளார். தேர்தல் நிதி 20 கோடி வந்துள்ளது. இதுவே போதும். இனியரும் அனுப்ப வேண்டாம் என்றார். இதற்கு கணக்குகள் உள்ளன என்கிறார். சீனாவில் வசிக்கும் ஒருவர் நிதி தரவேண்டியதன் அவசியம் என்ன?. அதுவும் 50 லட்சம்? நிதி தந்தவரின் பின்புலம் ஆய்வு செய்தாரா கெஜ்ரிவால் என கேட்க தோன்றுகிறது.

அரவிந்த் கெஜ்ரிவால் மீது மட்டுமல்ல அவருடன் தற்போது இருக்கும் பலர் மீதும் அறக்கட்டளை சம்மந்தமான நிதி பிரச்சனைகள் உள்ளன. குடிநீரை விற்பனை செய்யும் அரசாங்கம் என பிரச்சாரம் செய்தார்கள். தற்போது வெற்றி பெற்றுள்ள ஆம்ஆத்மி கட்சி எம்.எல்.ஏ ஒருவர் நீண்ட காலமாக மினரல் வாட்டர் கம்பெனி பெரிய அளவில் நடத்தி வருகிறார். இன்னும் சிலர் மீதும் புகார்கள் உள்ளன.

மக்களுக்கு தந்த வாக்குறுதிகளை நிச்சயமாக எந்த காலத்திலும் நிறைவேற்ற முடியாது என தெரிந்தே கெஜ்ரிவால் வாக்குறுதிகளை தந்துள்ளார். இது மோசடியானது என்பதை அறியாதவறா கெஜ்ரிவால்?.

யார் இந்த கெஜ்ரிவால் ?.

45 வயதாகும் கெஜ்ரிவால், ஹரியான மாநிலத்தை சேர்ந்தவர். பணக்கார குடும்பத்தில் பிறந்தவர். ஐ.ஐ.டியில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்துவிட்டு டாடா கம்பெனியில் பணியாற்றினார். பின் சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி இந்திய வருவாய்த்துறை பணிக்கு தேர்வானார். பணியில் இருக்கும்போதே சம்பளத்துடன் கூடிய நீண்ட விடுப்புகளை எடுத்துக்கொண்டு சமூக பணிகளில் கவனம் செலுத்தினார். என்.ஜீ.ஓ நடத்தினார். இது மத்திய பணியாளர் தேர்வாணயத்துக்கும் - கெஜ்ரிவால்க்கும் இடையே நீதிமன்றத்தில் வழக்கு நடந்தது. இணை வருவாய் ஆணையராக டெல்லியில் பணியாற்றியபோது தன் பணியை ராஜினாமா செய்துவிட்டு அன்னஹசாரே ஆரம்பித்த உண்ணாவிரதங்களில் கலந்துக்கொண்டதோடு அமைப்பின் முக்கியஸ்தரனார்.

மத்திய காங்கிரஸ் மற்றும் டெல்லி காங்கிரஸ் செய்த ஊழல்கள் பற்றி பேச மத்தியில் ஆளும் காங்கிரஸ் அவருக்கு குடைச்சல் தந்தது. இதனால் வீ.ஆர்.எஸ் வாங்கிக்கொண்டார். அவரது மனைவி ஐ.ஆர்.எஸ் பணியில் தொடர்கிறார்.

இவர் இந்திய அரசியலை ஆட்டி வைக்கும் பானியா சமூகத்தை சேர்ந்தவர். கூட்டி கழிச்சி பாருங்க கணக்கு சரியா வரும். குல்லா போட்டவன் எல்லாம் நல்லவன் இல்லை சாமீயோவ்……..

வெள்ளி, டிசம்பர் 13, 2013

அன்பே அழகானது. – பகுதி 13.சுதா அந்த ஐஸ்கிரீம் பார்லர் முன் தன் ஸ்கூட்டியை நிறுத்தினாள். இதான் அந்த பார்லர் இறங்குக்கா. பின்னால் அமர்ந்திருந்த ஜானகி இறங்கியபடி என்னடீ சின்ன பார்லரா ?.

பார்லர் சின்னது தான் ஆனா இங்க விக்கறதுயெல்லாம் கம்பெனி ஐஸ்கிரிம்க்கா.

ஜானகியும், சுதாவும் அந்த பார்லருக்குள் சென்று அமர்ந்தனர். அங்கிருந்த நடுத்தர வயதுள்ளவரிடம் ஒரு ஸ்டாபெரி, ஒரு வெண்ணிலா என்றாள். ஐஸ்கிரிம் எடுத்து வந்து வைக்க இருவரும் ஸ்பூனில் எடுத்து சாப்பிட்டபடி ஜானகி சுதாவிடம், எம்.எஸ்.சி முடிச்சிட்ட அதுக்கப்பறம் என்ன கல்யாணம் தானே.

கல்யாணம்மா நோ சான்ஸ்.

என்னடீ நோ ங்கற. யாரையாவது லவ் பண்றியா?.

லவ்வா நீ வேறக்கா அப்பா காதுல கேட்டுச்சி கொன்னு போட்டுடுவாரு.

அப்பான்னா அப்படித்தான் இருப்பாங்க. அதுக்காக லவ் பண்ணாம இருக்க முடியும்மா.

நீ வேற சும்மாயிருக்கா. அடுத்து எம்.பில் பண்ணப்போறன்.

இப்படியே படிச்சிக்கிட்டு இருந்தன்னு வச்சிக்க கிழவியாகிடுவ. ஜாலியா இருக்கற வயசு இதுதான். கல்யாணத்துக்கப்பறம் மாமனார், மாமியார், வீட்டுக்காரர், குழந்தைன்னு லைப் மாறிடும். அதனால காலேஜ் படிக்கறப்பவே ஒரு நல்ல பையனா பாத்து லவ் பண்ணு, ஜாலியா இரு.

அய்யோ அக்கா என் லைப்ல லவ்வுக்கே இடம்மில்ல. அதனால வேற ஏதாவது பேசு.

என்னடீ இப்படி பேசற.

நீ இப்படி கேட்டது அப்பாவுக்கு மட்டும் தெரிஞ்சது பக்கத்து வீட்டு பொண்ணுன்னு பாக்கமாட்டாரு பளார், பளார்ன்னு அடிப்பாரு உஷார்.

உங்க வீட்ல எல்லாரும் ஏன்டீ இப்படி உங்கப்பாவுக்கு பயந்து சாகறிங்க. கொஞ்சமாவுது எதிர்த்து பேசுங்கடீ.

அவர் நல்லவர்க்கா எங்க மேல பாசம்மாயிருக்காரு, என்ன கேட்டாலும் வாங்கி தர்றாரு. இப்பக்கூட அண்ணன் பைக் கேட்டான் வாங்கி தந்தாரு. எனக்கும் இதோ ஸ்கூட்டி வாங்கி தந்துயிருக்காரு. பணம் கேட்டாக்கூட ஏன், எதுக்குன்னு கேட்காம தருவாரு. அவருக்கு எங்க மேல அளவுக்கடந்த பாசம் எங்களுக்கும் அவர் மேல பாசம் நீங்க சொல்றமாதிரி பயம்மெல்லாம்மில்ல.

பாசமானவர் தானே அப்பறம்மென்ன லவ் பண்ணிட்டு உங்கப்பாக்கிட்ட போய் இவனை லவ் பண்றன் இவனைத்தான் கல்யாணம் பண்ணிக்குவன்னு  சொல்லு.

அந்த லவ் மட்டும் தான் அவருக்கு புடிக்காது. அவருக்கு புடிக்காதுங்கறதால எனக்கும் புடிக்காது.

அப்பன் செல்லம்டீ எனச்சொல்ல சிரித்துக்கொண்டே ஃபில் தந்துவிட்டு ஸ்கூட்டியை நோக்கி வந்தார்கள். வேகவேகமாக அப்போது தான் அந்த இளைஞன் ஐஸ்கிரீம் பார்லரை நோக்கி வந்தான். வந்தவன் ஜானகியையும், சுதாவையும் தாண்டி செல்லும் போது ஜானகியின் கை மீது அவனது கை லேசாக உரசிவிட்டது.

ஸாரிங்க எனச்சொல்லியபடி திரும்பிக்கூட பார்க்காமல் சென்றான்.

ஜானகி திரும்பி முறைத்துவிட்டு நடக்க தொடங்கினாள். பார்லர்க்குள் சென்றவன் 4 ஐஸ்கிரீம் வாங்கிக்கொண்டு வேகவேகமாக திரும்பி வரும்போது ஸ்கூட்டி அருகே நின்றிருந்த சுதா மீது உரசிவிட்டான்.

சுதா ஏய் என்றதும் திரும்பி ஸாரிங்க என்றான்.

அதுயெப்படி போகும்போது என்ன இடிப்ப வரும்போது அவள இடிக்கற.

இடிக்கலைங்க லேசா கை பட்டுச்சி அவ்ளோ தான்.

இடிக்கலையா ஏன் இடிச்சிதான் பாறேன் என ஜானகி சொல்ல சும்மாயிருக்கா என கிசுகிசுத்த சுதா. அவனைப்பாத்து கண்ணு தெரியலயா உங்களுக்கு என கேட்க சாக்கடை தண்ணி நிக்கறதால தாண்டி போகும்போது லேசா பட்டுடுச்சி அவ்ளோ தான் என்றவன் வேகவேகமாக நடக்க தொடங்கினான்.

போறதப்பாரு பொறுக்கி மாதிரி என்றாள் ஜானகி.

சரி விடுக்கா என்றபடி ஸ்கூட்டியை கிளப்பியவள், என்னக்கா அவன் இடிக்கலன்னதும் ஏன் இடிச்சி தான் பாறேன்னு கேட்கற என கேட்டால் நக்கலாக.

சும்மாடீ.

உன் உட்பி மட்டும் இத கேட்டுயிருந்தாரு அவ்ளோதான் நீ.

அவனை நீ தான் மெட்சிக்கனும் அது சரியான பேக்கு.

என்னக்கா அவரைப்போய் இப்படி திட்டற.

பின்ன என்னடீ அது ஒரு காலேஜ்ல லெக்சரரா ஜாயின் பண்ணியிருக்கு. லாஸ்ட் சண்டே எங்கயாவது வெளியில அழைச்சிம் போடான்னு கேட்டதுக்கு நான் ஒரு லெக்சரர் காதலியோட வெளியில சுத்தறத பாத்தா பசங்க என்ன நினைப்பாங்கன்னு கேட்கறான்.

சுதா சிரித்தபடி உண்மையாவாக்கா ?.

ஆமாண்டீ.

அப்ப இனிமே கல்யாணத்துக்கப்பறம் தான் ரொமான்ஸ்சா ?.

எல்லாம் என் கஸ்டகாலம்டீ.

இரண்டு வருஷமா ஜாலியா சுத்திக்கிட்டு இருந்திங்க அது பத்தலயா?.

எப்பவும் காதலிச்சிக்கிட்டே இருக்கனும் அப்பத்தான் வாழ்க்கை சுவாரஸ்யமா இருக்கும்.

ரொம்ப காதலிச்சா வெறுப்பாயிடும்க்கா. காதல்ல சண்டை இருக்கனும் அதுக்கப்பறம் சேர்ந்து பாருங்க ஜாலியா இருக்கும்.

என்னடீ லவ்வே புடிக்காதுன்ன அதல பீ.எச்.டி பண்ணவ மாதிரி க்ளாஸ் எடுக்கற. உண்மைய சொல்லு யாரையாவது லவ் பண்றியா ?.

நீ வேறக்கா சத்தியமாயில்ல.

உன்ன நம்பறன் ஆனா உன் வயச நம்பமாட்டன்.

உங்க இரண்டு பேர் வீட்ல தான் காதலுக்கு ஓ.கே சொல்லிட்டாங்களே அப்பறம்மென்ன கல்யாணம் செய்துக்க வேண்டியதானே. ஏதாவது வேலைக்கு போனாதான் கல்யாணம் செய்து வைப்பன்னு எங்கப்பா சொல்லிட்டாரு. அது இப்பத்தான் வேலைக்கு போக ஆரம்பிச்சியிருக்கு. தை மாசம் கல்யாணம் வைப்பாங்கன்னு நினைக்கறன்.

விடுக்கா இன்னும் இரண்டு மாசம் தானே. அதுக்கப்பறம் பார் அவர் உன்னை தினம் தினம் வெளியில கூப்ட்டும் போவாரு. பாக்கலாம் என ஜானகி சொல்ல சுதாவின் வீடு வந்தயிருந்தது. இருவரும் வீட்டுக்குள் செல்ல டிவி பார்த்துக்கொண்டுயிருந்த காவேரி, எங்கடீ போய்ட்டு வர்றிங்க?.


என் ஃபர்த்டேக்கு ட்ரீட் தரலன்னு அக்காவுக்கு கோபம். அதான் ஐஸ்கிரிம் வாங்கி தந்து அக்காவ கூல் பண்ணி அழைச்சிக்கிட்டு வர்றன்.

பொய் சொல்றா அத்தை. ஐஸ்கிரிம் வாங்கி தர்றன் வான்னு கூப்டும் போனவ அங்கப்போய் இவதான் இரண்டு ஐஸ்கிரிம் சாப்பிட்டா.

அவதான் ஐஸ்கிரிம் பைத்தியம்ன்னு தெரியும்மில்ல. அப்பறம் எதுக்கு போன ?.

ஐஸ்கிரிம் சாப்பிட்ட அவள திட்டாம என்னை ஏன் திட்டறிங்க?.

இவளை திட்டனா அவுங்க அப்பாக்கிட்ட சொல்லுவா. அப்பறம்மென்ன வீடே ரெண்டாகற மாதிரி குதிப்பாரு. அதான் அவள எதுவும் சொல்றதில்ல. எங்கயாவது கெட்டு போவட்டும் என சலித்துக்கொண்டவர் அவள விடு உங்கம்மாயெங்க?.

பஜார்க்கு போறன்னு சொன்னாங்க.

வந்ததும் சொல்லுடீ.

ம்.

அக்கா இரு வந்துடறன் எனச்சொல்லியபடி சுதா தன் அறைக்குள் நுழைந்தாள்.

தேவராஜ் வீட்டுக்குள் நுழைந்தபடி நீ இங்க என்ன பண்ற என ஜானகியை பார்த்து கோபமாக கேட்க ஜானகி அமைதியாக காவேரியை பார்த்தாள்.

கேட்கறன்யில்ல.

சும்மா அத்தைய பாத்துட்டு போகலாம்ன்னு வந்தன் என்றாள் பயந்த குரலில்.

பாத்துட்டயில்ல அப்புறம் இங்கயென்ன வேலை என குரலில் கடுமையை காட்டினார்.

அவளை எதுக்கு இப்ப மிரட்டிக்கிட்டு என கேட்டபடி ஜானகி பக்கம் திரும்பி நீ போய்ட்டு அப்பறம் வாடீ எனச்சொல்ல சிட்டாக பறந்துபோனால் ஜானகி.

வயசு பொண்ணுயிருக்கற வீட்ல வீட்டுக்கு அடங்காமா சுத்தற அவளை
எதுக்குடீ சேக்கற.

அவளும் வயசு பொண்ணு தான். நல்லப்பொண்ணு தான்.

எது காதலிக்கறவ நல்ல பொண்ணா ?.

அவுங்க வீட்லயே அத ஏத்துக்கிட்டாங்க. நீங்க எதுக்கு அதப்பத்தி பேசறிங்க. வந்து சாப்பிடுங்க என்றபடி சமையலறைக்குள் சென்றார்.

அப்போது வெளியே வந்த சுதாவை பார்த்து சாப்பிட்டியாம்மா ?.

இல்லப்பா.

டைம்மாச்சி இன்னும் சாப்பிடாம என்ன பண்ற. முகம் கழுவிக்கிட்டு வர்றன். நீ உட்காரு சாப்பிடலாம் என்றபடி பாத்ரூம் சென்றவர் முகத்தை துடைத்தபடி வாடாம்மா சாப்பிடலாம் என மகளை தன் அருகில் உட்கார வைத்துக்கொண்டார். சாப்பிட்டு முடித்தவர் சுதாவிடம் பக்கத்து வீட்டு பொண்ணுக்கூட பழகாதம்மா.

நீங்க கொஞ்சம் சும்மாயிருக்கிங்களா. அவுங்க கூட சேராத, இவுங்க கூட சேராதன்னு சொல்றிங்க. இவளும் யார் கூடயும் பழகறதில்ல. அவளுக்கு ப்ரண்ட்ஸ்ன்னு யாராவது இருக்காங்களா?. பக்கத்து வீட்ல இருக்கறவங்களோடவாவுது பழக்கட்டும். நாலு பேரோட பழகனாதான் அவளுக்கும் நல்லது கெட்டது தெரியும்.

நாம சொல்றதவிடவா மத்தவங்க சொல்லப்போறாங்க.

நாம எப்பவும் கூடவே இருக்க முடியாது. அடுத்த வீட்டுக்கு வாழ போறவங்கறத மனசுல வச்சிக்குங்க.

என் தாய்டீ என் பொண்ணு. அவளுக்கப்பறம் தான் எல்லாம்மே. வீட்டோட மாப்பிள்ளைய தான் பாப்பன்.

வீட்ல பையன் ஒருத்தன் இருக்கான். கடைசி வரைக்கும் அவன் தான் நம்மள காப்பாத்த போறவன்ங்கறத மனசுல வச்சிக்குங்க.

காப்பாத்திட போறான் என சுதா கிண்டல் செய்யவும் ரமேஷ்சின் பைக் வந்து நிற்கவும் சரியாக இருந்தது.

உள்ளே நுழையும் போதே எங்கடா போய்ட்டு வர்ற?

ஆபிஸ்ல தான் இருந்தன்.

நான் வரும்போது இல்லையே?

11 மணிக்கு வந்தன். நீங்க பில்டிங் ஓர்க்க பாக்க போயிருக்கறதா சொன்னாங்க. அதனால நான் ஆபிஸ்ல இருந்தன் என்றவனை பார்த்து பசியோட வர்றவன்கிட்ட உள்ள நுழைஞ்சதும்மே கேள்வி கேட்காதிங்க சாப்பிட்டு முடிக்கட்டும் அப்பறம் கேட்டுக்குங்க எனச்சொல்லியபடி ரமேஷ்சை இழுத்து சென்றாள் காவேரி.

அவனை எதுவும் கேட்ககூடாதுங்கறா என முனுமுனுத்தவரிடம் அப்பா நான் எம்.பில் பண்றம்பா?.

யோசனையில் ஆழ்ந்தார்.

அப்பா?.

எதுக்குடாம்மா நீ படிக்கனும். படிச்சது போதும். உனக்கு கல்யாணம் பண்ணலாம்ன்னு இருக்கறண்டா?.
என்னப்பா திடீர்ன்னு கல்யாணம்.

நான் எம்.பில் முடிச்சதும் பண்ணிக்கறன்ப்பா.

நீ படிச்சது போதும் அப்பா சொல்றத கேளுடாம்மா.

ப்ளீஸ்ப்பா.

மகள் முகத்தை பார்த்தவர் யோசிச்சி சொல்றம்மா என எழுந்து சென்றார்.

தொடரும்………….

சனி, டிசம்பர் 07, 2013

2008வரை நெல்சன் மண்டேலா பயங்கரவாதி. - உலக நாட்டாமை.தென்ஆப்பிரிக்கா மக்களின் விடிவெள்ளியாக திகழ்ந்தவர் தன் மக்களுக்காக மன்னிப்பு என்ற சொல்லை அன்னியனிடம் உபயோகித்து சுகவாழ்வு வாழாத போராளி நெல்சன் ரோபிசலா மண்டேலா. அதிகார பூர்வமாக 5.12.13ந்தேதி இறந்துள்ளார். ஆனால் மீடியாக்கள் சில தினங்களுக்கு முன்பே அவரை கொன்றுவிட்டது.

தென்னாப்பிரிக்காவின் அதிபர் ஜேக்கப் ஸீமா தான் தன் நாட்டின் தந்தையை இறந்ததை உலகத்துக்கு அறிவித்தார். அறிவிப்புக்கு பின் உலகத்தில் உள்ள அனைத்து நாட்டின் தலைவர்களும், பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். வரும் 15ந்தேதி அவரது உடலுக்கு இறுதி மரியாதை அவரது சொந்த கிராமமான குனுவில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இன, நிற வெறியால் ஒடுக்கப்பட்ட கறுப்பின மக்களின் தலைவர் மண்டேலா. 1918 ஜீலை 18 ல் டிரான்ஸ்கே நகரில் பிறந்தார். இவரது தந்தை தென்னாப்பிரிக்காவில் வாழும் தெம்பு என்ற இனத்தின் அரசராக இருந்தார். தந்தை மரணத்துக்கு பின் அந்த பதவி அவருக்கு வந்தது. போர்ட்ஹாரோ என்ற பல்கலைகழகத்தில் சட்டம் படித்தார். ஆரம்பத்தில் அரசாங்கத்தின் பாதுகாப்பு படைப்பரிவில் சுரங்கம் ஒன்றில் பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றியுள்ளார்.

தென் ஆப்பிரிக்காவில் வாழும் மக்களில் 80 சதவிதம் பேர் கறுப்பு நிறத்தை உடைய மக்கள். 20 சதவிதம் வெள்ளை நிறம் உடைய மக்கள். இவர்கள் இருவரும் ஒரே நாட்டை சேர்ந்த பிரஜைகள் தான். ஆனால் நாட்டை ஆண்ட வெள்ளையின மக்கள், கறுப்பின மக்களை அடிமையாக நடத்தினர். கறுப்பின மக்களுக்கு வாக்குரிமை கிடையாது, நில உரிமை கிடையாது, பேருந்தில் பயணம் செய்ய முடியாது, ஒரு ஊரில் இருந்து மற்றொரு ஊருக்கு செல்ல வேண்டும்மென்றால் அதிகாரிகளிடம் அனுமதி பெற வேண்டும். கறுப்பின மக்களுக்கு எந்தவித சலுகைகளும் கிடையாது, அரச அதிகாரம் கிடையாது. இப்படி பல கிடையாதுகள்.

இந்த இனவெறியை எதிர்த்து குரல் கொடுக்க தொடங்கினார் மண்டேலா. கறுப்பின மக்களுக்காக வழக்கறிஞர் அலுவலகம் அமைத்த முதல் வழக்கறிஞர். 1944ல் தென்னாப்பிரிக்கா தேசிய காங்கிரஸ் இளைஞர் லீக் என்ற கட்சியை தொடங்கினார். மண்டேலாவின் கட்சியும், கம்யூனிஸ்ட் கட்சியும் ஒன்றிணைந்து நாட்டின் விடுதலைக்காக, கறுப்பின மக்களின் விடுதலைக்காக போராடியது.

இதனை தென்னாப்பிரிக்காவை ஆண்ட வெள்ளையர்கள் அரசாங்கம் எதிர்த்தது. முதலில் கம்யூனிஸ்ட் கட்சியை தடை செய்து பின் 6 ஆண்டுகள் பொறுத்து நூற்றுக்கும் அதிகமான அரசியல் போராளிகளை தேச துரோக வழக்கில் கைது செய்தது. 4 ஆண்டு சிறை வாசத்துக்கு பின் வழக்கில் இருந்து விடுதலையானார்கள். வெளியே வந்த மண்டேலா மீண்டும் போராட்டத்தை தொடங்க அவர் தலைமை பதவி வகித்த காங்கிரஸ் கட்சியும் தடை செய்யப்பட்டது. அப்போது தென்னாப்பிரிக்காவின் கொடூரம் என வர்ணிக்கப்படும் ஷார்ப்பி படுகொலை நடந்தேறியது. நாட்டை ஆண்ட அரசாங்கம் விடுதலை வேண்டி போராடிய மக்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் 70 பேர் பலியானதாக தகவல் வெளியிடப்பட்டது.

அரசுக்கு எதிராக கொரில்லா அமைப்பு ஒன்றை கட்டமைத்து தாக்குதல் நடத்தினார். ஆனால் ஆயுதம் எம்மின மக்களுக்கு விடுதலை பெற்று தராது என்ற கொள்கையில் இருந்தார். நாட்டில் நெருக்கடி, பல நாடுகள் பயங்கரவாத முத்திரை அவர் மீது குத்தியது. பாதுகாப்பு படை அவரை கைது செய்து தேச துரோக வழக்கை பாய்ச்சியது. ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. 46 வயதில் கைதியாக ரப்பன் தீவில் உள்ள தனிமை சிறையில் அடைக்கப்பட்டார். வெளியுலகத்தின் எந்த தொடர்பும் அவருக்கு கிடையாது. தாய், மகன் இறந்தபோது கூட அவரை வெளியே விடவில்லை. மனைவி சந்திக்க கூட அனுமதிக்கவில்லை. மன்னிப்பு கேட்டால் விடுதலை செய்கிறோம் என்றது அரசாங்கம். என் இனம் தலைகுனிய நான் விரும்பவில்லை என மன்னிப்பு கேட்க மறுத்தார். உலக நாடுகள் எதிர்ப்பு, பொருளாதார தடை, தூதரக துண்டிப்பு போன்றவற்றால் தென்னாப்பிரிக்கா அரசாங்கம் 27 ஆண்டுகளாக சிறைவாசத்தில் இருந்த மண்டேலாவை அவரது 72வது வயதில் 1990ல் விடுதலை செய்தது. இவரின் விடுதலையை உலகின் முக்கிய சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்தன என்பது குறிப்பிடதக்கது.


1993ல் நடந்த முறையான மக்களாட்சி தேர்தல் மூலம் வெற்றி பெற்று அதிபராக பதவியேற்றார். 1994 முதல் 1999 வரை 5 ஆண்டுகள் அதிபராக பதவி வகித்தார். இரண்டாவது முறை போட்டியிட சென்னபோது அவர் மறுத்துவிட்டார். உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் இருந்த மண்டேலா தனது 95வது வயதில் டிசம்பர் 5ந்தேதி இறந்துள்ளார்.

உலக நாடுகளின் அனைத்து உயர் விருதுகளையும் பெற்றுள்ளார். நூற்றுக்கும் அதிகமான விரதுகளின் பெயர்களில் இந்தியாவின் பாரதரத்னாவும், நோபல் பரிசும் உள்ளது. இவரை வாழ்வை மையமாக வைத்து நூற்றுக்கணக்கான குறும்படங்கள், டிவி நிகழ்ச்சிகள், திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. இவரைப்பற்றி நூற்றுக்கணக்கான புத்தகங்கள் பல மொழிகளில் உள்ளன. இங்கிலாந்து பாராளமன்ற வளாகத்தில் நெல்சல் மண்டேலாவுக்கு வெண்கல சிலை வைத்துள்ளது அந்நாட்டு அரசாங்கம்.

உலக நாட்டாமையான அமெரிக்க தேசம் நெல்சன் மண்டேலாவின் பெயரை 2008 வரை பயங்கரவாதிகள் பட்டியலில் வைத்திருந்தது. 2008வரை அவர் அமெரிக்காவுக்குள் நுழைய தடை விதித்து வைத்திருந்தது அமெரிக்க தேசம். அதனால் அவர் அதிபராக இருந்தபோது கூட அவரால் அமெரிக்காவுக்கு செல்ல முடியவில்லை.