சனி, டிசம்பர் 14, 2013

வாக்காளனை ஏமாற்றிய அரவிந்த் கெஜ்ரிவால்.வட இந்தியாவில் நடந்த 5 மாநில தேர்தல்களில் 3 மாநிலத்தில் பா.ஜ.கவும், ஒரு மாநிலத்தில் காங்கிரஸ்சும் ஆட்சி அமைத்துள்ளார்கள். டெல்லி யூனியன் பிரதேசத்திற்க்கு நடந்த தேர்தலில் யாருக்கும் ஆட்சி அமைப்பதற்கான மெஜாரிட்டியில்லை. டெல்லி சட்டமன்றம் 70 எம்.எல்.ஏ தொகுதிகளை கொண்டது. நடந்து முடிந்த தேர்தலில் 32 இடங்களில் பா.ஜ.கவும், 28 இடத்தில் ஆமி ஆத்மீ கட்சியும், 8 இடத்தில் காங்கிரஸ்சும், சுயேட்சை, மற்றொரு கட்சி தலா ஒருயிடத்தில் வெற்றி பெற்றுள்ளார்கள். பா.ஜ.க நாங்கள் ஆட்சி அமைக்க விரும்பவில்லை எனக்கூறிவிட்டது. இந்த கட்டுரை வெளியான சமயம் ஆம்ஆத்மி கட்சி பதில் தெரிந்திருக்கும். யாருக்கும் மெஜாரிட்டியில்லை என்பதால் தொங்கு சட்டசபையா?, ஜனாதிபதி ஆட்சியா? மறு தேர்தலா என்ற விவாதம் நடந்துக்கொண்டுயிருக்கிறது.

நடக்கட்டும்.

டெல்லி யூனியன் பிரதேச தேர்தலில் 3 முறை முதல்வராக இருந்த காங்கிரஸ் ஷீலாதீட்ஷீத் தேற்கடிக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ்க்கு படுமோசமான தோல்வி. அதே நேரத்தில் யாரும்மே எதிர்பாராத வகையில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றுள்ளது. பெரும் வெற்றி. கட்சி தொடங்கி ஓராண்டில் யாருடனும் கூட்டணியில்லாமல், முதல்முறையாக தேர்தல் களத்தை சந்தித்து 28 எம்.எல்.ஏக்கள் பெற்றது நிச்சயம் இந்திய தேர்தல் வரலாற்றில் இடம் பெறும்.

ஆனால் நுணுக்கமாக ஆராய்ந்தால் வாக்காளனுக்கு பொய்யான வாக்குறுதிகளை தந்து மற்ற கட்சிகளைப்போலவே நம்பிக்கை மோசடி செய்து வெற்றி பெற்றுள்ளது ஆமி ஆத்மி கட்சி. என்பதே உண்மை. 

டெல்லி தேர்தல் ?


காங்கிரஸ்க்கு எதிர்ப்பாக ஊழல் எதிர்ப்பு இயக்கம் தொடங்கினர்கள் அன்னஹசாரே, கெஜ்ரிவால், சாமியார் பாபாராம்தேவ், பிரசாந்த்பூஷன், கிரன்பேடி, திவாரி போன்றோர். உண்ணாவிரதங்கள், போராட்டங்கள் நடைபெற்றன. அன்னஹசாரேவுடன் ‘நிதி’ மோதல் வர அவரிடம்மிருந்து பிரிந்து வந்து 2012 நவம்பரில் கட்சி தொடங்கினார்கள் கெஜ்ரிவால், பிரசாந்த்பூஷன் போன்றோர். அது ஆமிஆத்மீ கட்சி. ( ஏழை மக்கள் கட்சி ) இவர்களின் தாரக மந்திரம் நாட்டில் ஊழலை ஒழிக்க வேண்டும், மோசடி அரசியல் கட்சிகளை மக்கள் ஒதுக்க வேண்டும் என்பதே இவர்களது கொள்கை. ( இவர்களை பொறுத்தவரை நாட்டில் ஊழல் மட்டுமே பிரச்சனை மற்றப்படி நாடு சுபிக்ஷமாக உள்ளது ). 2013 டெல்லி மாநிலம் தேர்தலை எதிர்க்கொண்டது. காங்கிரஸ், பி.ஜே.பியோடு ஆம்ஆத்மீ கட்சியும் களத்தில் குதித்தது.

ஆம்ஆத்மி வேட்பாளர்கள் தேர்வின் போது, பொது சேவை செய்பவர்களிடம்மிருந்து மனுக்களை பெற்று பொதுமக்கள் பார்வைக்கு இணைய தளம் மூலம் வெளியிட்டு கருத்து கேட்டு ‘பிரச்சனையில்லாதவர்களை’ வேட்பாளர்களாக அறிவித்தது கட்சி. மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 69 இடத்தில் வேட்பாளர்களை நிறுத்தினர். துடைப்பம் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியது. சமூகத்தை தூய்மையாக்க வந்துள்ளோம் என பிரச்சாரத்தை தொடங்கினார்கள்.

தேர்தல் வாக்குறுதியாக.

1.    50 சதவித விலையில் மின்சாரம்.
2.    தினமும் 700 லிட்டர் தண்ணீர் இலவசம்.
3.    தரமான சுகாதாரம் மற்றும் கல்வி.
4.    ஜான்லோக்பால் மசோதா நிறைவேற்றம்.
5.    கமாண்டோ படை மூலம் பெண்களுக்கு பாதுகாப்பு.


இதை மக்களிடம் வாக்குறுதிகளாக தந்தது. ஆட்சிக்கு வந்தால் 15 நாளில் இவைகள் நிறைவேற்றப்படும் எனச்சொல்லி தான் தேர்தலை சந்தித்தது ஆமிஆத்மி கட்சி.


வெற்றியின் ரகசியம்……..

ஏ.ஏ.பி கட்சி வேட்பாளர் தேர்வு, அறிவிப்பு போன்றவற்றில் செய்த புதுமை அவர்களை மக்களிடம் கொண்டு சென்று சேர்த்தது. அதுமட்டுமல்ல, வெங்காயவிலை உயர்வு, டெல்லியில் பேருந்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணுக்காக நடந்த அதீத போராட்டங்கள், காங்கிரஸ் ஆட்சியில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு போன்றவற்றால் மக்கள் பாதிக்கப்பட்டனர். அதனால் ஆட்சி மாற்றம் தேவை என எதிர்பார்த்தனர். டெல்லி பல சமூக மக்கள் வாழும் மாநிலம். பி.ஜே.பியை பிடிக்காதவர்கள், மாற்று அரசியல் பேசிய, கவர்ச்சியான வாக்குறுதி தந்த ஆம்ஆத்மி கட்சியை தேர்வு செய்தனர்.

வாக்காளனை ஏமாற்றிய ஆம்ஆத்மி கட்சி.

சராசரி கட்சிகளை விட தாழ்ந்து தான் தன் வாக்குறுதிகளாக தந்தது ஆம் ஆத்மி கட்சி. அவர்கள் தந்த வாக்குறுதிகளை காங்கிரஸ்சோ, பி.ஜே.பியோ தந்திருந்தால் ஆச்சர்யப்பட வேண்டியதில்லை. (பி.ஜே.பி தந்துள்ளது). மாற்றத்தை கொண்டு வருவோம் என முழங்கி தேர்தலை சந்தித்த ஆமிஆத்மீ கட்சி தந்தது தான் ஆச்சர்யம். கவர்ச்சிகரமான அந்த வாக்குறுதிகள் நிச்சயம் ஒரு சாரார் மனநிலை மாற்றியது. நடைமுறையில் நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகள் அவை.

ஏ.ஏ.பிக்கு அரசியல் கட்சிக்கான கட்டுமானம்மே கிடையாது ஆனாலும் 28 இடங்களில் வெற்றி பெற்று டெல்லியில் 30 சதவித வாக்குகளை பெற்றுள்ளது என்கிறார்கள் விமர்சகர்களும், பார்வையாளர்களும். வெளிப்பார்வைக்கு தான் கட்டுமானம் கிடையாது. ஆனால் அக்கட்சிக்கு கட்டுமானம் பெரியதாகவே இருந்தது.

அந்த கட்டுமானம்?


என்.ஜீ.ஓக்கள். டெல்லி குடிசை வாழ் மக்களிடம் பிரச்சாரம் செய்து ஆம்ஆத்மி கட்சிக்கு வேலை பார்த்தது. அதேபோல் இன்றைய முதல் தலைமுறை வாக்காளர்கள் மாற்றத்தை எதிர்பார்த்தனர். அவர்களின் கனவு நாயகனாக கெஜ்ரிவால் காணப்பட்டார். காணப்பட்டார் என்பதை விட மீடியாக்களால் சித்தரிக்கப்பட்டார். இளைய தலைமுறையினர் மற்றும் நடுத்தர மக்களிடம் இணையதளம், சமூக வலைத்தளம், மொபைல் போன் வாயிலாக பரந்த அளவில் பிரச்சாரம் செய்யப்பட்டது. இதை தடுக்க முடியவில்லை என தேர்தல் ஆணையரே தெரிவித்தார். காங்கிரஸ், பி.ஜே.பிக்கு மாற்று தேவை என எதிர்பார்த்தவர்கள். இதுதான் வெற்றிக்கு வழி ஏற்படுத்தி தந்தது.

குற்றச்சாட்டுகள்.


காங்கிரஸ், பி.ஜே.பி போன்ற கட்சிகளுக்கு நிதி எங்கிருந்து வருகிறது என கேள்வி எழுப்பினார் கெஜ்ரிவால். தேர்தலின் போது எங்கள் கட்சி ஏழ்மையான கட்சி தேர்தல் செலவுக்கு நிதி தாருங்கள் என கேட்டார். நிதிகள் வந்தன. பிரச்சாரத்தின் போது, எனது பிரச்சாரத்துக்கு வெளிநாடு வாழ் இந்தியர்கள் (என்.ஆர்.ஐ) பணம் தருகிறார்கள். அவர்கள் என் பிரச்சாரத்துக்கு வந்து உதவுகிறார்கள். சீனாவில் உள்ள ஒருவர் தன் குடும்பத்துக்கு தெரியாமல் அவர் சேர்ந்து வைத்த 50 லட்சம் பணத்தை நிதியுதவி செய்துள்ளார். தேர்தல் நிதி 20 கோடி வந்துள்ளது. இதுவே போதும். இனியரும் அனுப்ப வேண்டாம் என்றார். இதற்கு கணக்குகள் உள்ளன என்கிறார். சீனாவில் வசிக்கும் ஒருவர் நிதி தரவேண்டியதன் அவசியம் என்ன?. அதுவும் 50 லட்சம்? நிதி தந்தவரின் பின்புலம் ஆய்வு செய்தாரா கெஜ்ரிவால் என கேட்க தோன்றுகிறது.

அரவிந்த் கெஜ்ரிவால் மீது மட்டுமல்ல அவருடன் தற்போது இருக்கும் பலர் மீதும் அறக்கட்டளை சம்மந்தமான நிதி பிரச்சனைகள் உள்ளன. குடிநீரை விற்பனை செய்யும் அரசாங்கம் என பிரச்சாரம் செய்தார்கள். தற்போது வெற்றி பெற்றுள்ள ஆம்ஆத்மி கட்சி எம்.எல்.ஏ ஒருவர் நீண்ட காலமாக மினரல் வாட்டர் கம்பெனி பெரிய அளவில் நடத்தி வருகிறார். இன்னும் சிலர் மீதும் புகார்கள் உள்ளன.

மக்களுக்கு தந்த வாக்குறுதிகளை நிச்சயமாக எந்த காலத்திலும் நிறைவேற்ற முடியாது என தெரிந்தே கெஜ்ரிவால் வாக்குறுதிகளை தந்துள்ளார். இது மோசடியானது என்பதை அறியாதவறா கெஜ்ரிவால்?.

யார் இந்த கெஜ்ரிவால் ?.

45 வயதாகும் கெஜ்ரிவால், ஹரியான மாநிலத்தை சேர்ந்தவர். பணக்கார குடும்பத்தில் பிறந்தவர். ஐ.ஐ.டியில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்துவிட்டு டாடா கம்பெனியில் பணியாற்றினார். பின் சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி இந்திய வருவாய்த்துறை பணிக்கு தேர்வானார். பணியில் இருக்கும்போதே சம்பளத்துடன் கூடிய நீண்ட விடுப்புகளை எடுத்துக்கொண்டு சமூக பணிகளில் கவனம் செலுத்தினார். என்.ஜீ.ஓ நடத்தினார். இது மத்திய பணியாளர் தேர்வாணயத்துக்கும் - கெஜ்ரிவால்க்கும் இடையே நீதிமன்றத்தில் வழக்கு நடந்தது. இணை வருவாய் ஆணையராக டெல்லியில் பணியாற்றியபோது தன் பணியை ராஜினாமா செய்துவிட்டு அன்னஹசாரே ஆரம்பித்த உண்ணாவிரதங்களில் கலந்துக்கொண்டதோடு அமைப்பின் முக்கியஸ்தரனார்.

மத்திய காங்கிரஸ் மற்றும் டெல்லி காங்கிரஸ் செய்த ஊழல்கள் பற்றி பேச மத்தியில் ஆளும் காங்கிரஸ் அவருக்கு குடைச்சல் தந்தது. இதனால் வீ.ஆர்.எஸ் வாங்கிக்கொண்டார். அவரது மனைவி ஐ.ஆர்.எஸ் பணியில் தொடர்கிறார்.

இவர் இந்திய அரசியலை ஆட்டி வைக்கும் பானியா சமூகத்தை சேர்ந்தவர். கூட்டி கழிச்சி பாருங்க கணக்கு சரியா வரும். குல்லா போட்டவன் எல்லாம் நல்லவன் இல்லை சாமீயோவ்……..

4 கருத்துகள்:

 1. ஓட்டு போடரவந்தான் உசாராயிருக்கனும்,அன்னாதுரைக்கூடதான் ருபாயிக்கு மூணு படி அரிசின்னு சொன்னாரு போட்டாரா?

  பதிலளிநீக்கு
 2. Blog Writing is easy ...Politics is not easy
  Letter pad katchi thodakuvathu EASY, Jaipathu is not EASY
  Nalla manitharkal arasiyalukku vanthal varaverpom...
  yelloraiyum nollai sollum neengal vankalen POLITICS -kku

  பதிலளிநீக்கு
 3. Hmmm. You are jumping too fast to too many conclusions. (what is your intention of doing this?....)
  Give him some time before criticizing.

  Basically what you try to say is that Congress, BJP, AAP all are ore kuttaiyil ooriya mattai.
  Am I correct?

  பதிலளிநீக்கு
 4. பெயரில்லாசனி, ஜனவரி 18, 2014

  அரவிந்த் கேஜ்ரிவால் ஏமாற்றுகிறான்

  பதிலளிநீக்கு