சனி, டிசம்பர் 21, 2013

தேவயானி – சங்கீதா விவகாரத்தில் உள்ள உளவு விவகாரம்.



அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகத்தின் துணை தூதர் தேவயானி கொப்ராகோட் கைது செய்யப்பட்டு, மோசமாக நடத்தப்பட்ட விவகாரம் இந்தியா நாடாளமன்றத்தில் விவாதம் நடத்தும் அளவுக்கு சென்றுள்ளது. 

உத்தம்கோப்ரகடே. மகாராஷ்டிரா மாநில கேடர் ஐ.ஏ.எஸ் அதிகாரி. ஓய்வு பெற்றுவிட்டார். அவரது மகள் தான் தேவயானி. மருத்துவம் படித்தவர். ஐ.எப்.எஸ் தேர்வில் வெற்றி பெற்று 1999ல் வெளியுறவுத்துறையில் பணியில் சேர்ந்துள்ளார். அமெரிக்காவில் பணியாற்றுவதற்க்கு முன் பாகிஸ்தான், ஜெர்மனி, இத்தாலி தூதரகங்களில் அரசியல் பிரிவில் பணியாற்றியுள்ளார். அதன்பின்பே அமெரிக்காவுக்கு வந்துள்ளார். அவர் அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகத்தில் பணியில் சேர்ந்த ஆண்டு 2012. அங்கும் அரசியல், பொருளாதாரம், பெண்கள் விவகாரத்தை கவனிக்கும் துணை தூதர். குடும்பத்துடன் நியூயார்க்கில் வசிக்கும் இவருக்கு வேலைக்காரி தேவைப்படுகிறார். இந்தியாவில் அதற்கான பணியாளை தேடுகிறார். 

மும்பையை சேர்ந்த சங்கீதா ரிச்சர்ட் முன் வருகிறார். அவருக்கான மாத சம்பளம் 25 ஆயிரம், ஓவர் டைம்க்கு 5 ஆயிரம் கூடுதல் சம்பளம் என பேசி முடிக்கிறார்கள். வேலை அமெரிக்காவில் என்பதால் அமெரிக்கா சட்ட திட்டத்தின் படி பணியாளர் ஒப்பந்தம் போடப்படுகிறது. அதில் அமெரிக்க சட்டதிட்டத்தின்படி விசாவில், 8 மணி நேர வேலை, பணியாளுக்கு ஒரு மணி நேரத்துக்கு 690 ரூபாய் சம்பளம் (மாதத்துக்கு 4200 டாலர் சம்பளம்) என குறிப்பிடப்படுகிறது. இந்தளவு சம்பளத்தை துணை தூதர் தேவயானியே பெறமாட்டார். 

2012 நவம்பர் மாதம் அமெரிக்காவில் உள்ள தேவயானி வீட்டில் சங்கீதா வேலைக்கு சேர்கிறார். 

2013 ஜீன் 23ந்தேதி எனது வீட்டில் வேலைகாரியாக இருந்த சங்கீதா காணாமல் போய்விட்டார் என அமெரிக்கா தூதரகத்தில் புகார் தந்துள்ளார் தேவயானி. புகாரை அவர்கள் வாங்காமல் நியூயார்க் போலிஸிடம் அனுப்பியுள்ளார்கள். நியூயார்க் போலிஸாரிடம், காணாமல் போனவர்கள் பட்டியலில் அவரது பெயரை சேருங்கள் என கேட்டுள்ளார். போலிஸ், நீங்கள் புகார் தரமுடியாது அவரது குடும்பத்தார் தந்தால் தான் வழக்கு பதிவு செய்யப்படும் எனச்சொல்லியுள்ளார்கள். டெல்லியில் உள்ள அவரது கணவர் பிலிப்பிடம் புகார் தாங்கள் எனச்சொல்லியுள்ளார் அவரும் மறுத்துள்ளார். 

ஜீலை 1ந்தேதி தேவயானிக்கு போன் செய்த ஒரு பெண்மணி தன்னை யார் என அடையாளப்படுத்திக்கொள்ளாமல் சங்கீதாவுடன் நீங்கள் செய்த பணி ஒப்பந்தத்தை முறித்துக்கொள்ள வேண்டும், அரசு விசாவை சாதாரண விசாவாக மாற்றி தர வேண்டும், 19 மணி நேர பணிக்கு கூடுதல் சம்பளம் இந்த நிபந்தனைக்கு நீங்கள் ஒப்புக்கொண்டால் சங்கீதா கோர்ட்டுக்கு செல்லமாட்டர் எனச்சொல்லியுள்ளார். இதுப்பற்றி நியூயார்க் போலிஸிடம் தகவல் சொல்லியுள்ளார் தேவயானி. போலிஸ் கமுக்கமாக இருந்துள்ளது. 

இதுப்பற்றி, டெல்லி போலிஸில் தேவயானியின் கணவர் பிலிப் ரிச்சர்டு எங்களை ஏமாற்றிவிட்டார். என் வீட்டில் வேலை செய்த சங்கீதாவும், அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியுள்ள அவரது கணவர் பிலிப் ரிச்சர்ட்டும் எங்களது வீட்டில் இருந்து பிளாக்பெர்ரி போன், 2 சிம்கார்டு உட்பட சில பொருட்களை திருடி சென்றுவிட்டார் என புகார் தந்துள்ளார். 

மத்தியரசு சங்கீதாவுக்கு தந்த விசாவை ரத்து செய்கிறது. அதோடு, சங்கீதாவை கண்டுபிடித்து உடனே நாடு கடத்துங்கள் என அமெரிக்க வெளியுறுத்துறைக்கு இந்தியரசு தகவல் அனுப்புகிறது. 

ஜீலை 15ந்தேதி, டெல்லி நீதிமன்றத்தில் என் மனைவி ஜீலை 8ந்தேதி முதல் நியூயார்க் போலிஸ் பாதுகாப்பில் உள்ளார். தேவயானி, ஒப்பந்தப்படி உள்ளுர் சம்பளம் தரவில்லை, கொத்தடிமை போல் நடத்தியுள்ளார் அதனால் இந்திய அரசு மீது புகார் செய்கிறேன் என மனு தாக்கல் செய்துவிட்டு அந்த நகலை அமெரிக்க தூதரகத்துக்கும் அனுப்பியுள்ளார். இதை மையமாக வைத்து இரண்டு நாடுகளுக்கும் இடையே கடித பறிமாற்றங்கள் நடைபெறுகின்றன. 

செப்டம்பர் 4ந்தேதி, அமெரிக்க வெளியுறவு அமைச்சதும், அமெரிக்காவுக்கான இந்திய தூதரகத்துக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளது. அதில், சங்கீதா தந்த புகாரில் கவலை தரும் விஷயங்கள் உள்ளன. அதனால் அதுப்பற்றி விசாரணை நடத்த வேண்டும், சம்பளம் பற்றிய தகவல்கள் வேண்டும் என கேட்கிறது. 

செப்டம்பர் 10ந்தேதி, இந்தியா சார்பில் இதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

செப்டம்பர் 20ந்தேதி டெல்லி நீதிமன்றம் சங்கீதா, பிலிப் இருவரும் தேவயானிக்கு எதிராக எத்தகைய சட்ட நடவடிக்கையும் எடுக்ககூடாது. இந்தியாவுக்கு வெளியே நீதிமன்றம், தீர்ப்பாயம், சட்ட அமைப்பு எதிலும் புகார் செய்யவோ, வழக்கு தொடுக்கவோ கூடாது. இறுதி விசாரணை டிசம்பர் 13ந்தேதி நடைபெறும் என உத்தரவிடுகிறது. 

டிசம்பர் 10ந்தேதி, ரிச்சர்டு அவரது இரண்டு குழந்தைகள் அமெரிக்காவுக்கு ரகசியமாக அழைத்துக்கொள்கிறது அமெரிக்க வெளியுறவு அமைச்சகம். 

டிசம்பர் 12ந்தேதி அமெரிக்காவில் தேவயானி கைது செய்யப்படுகிறார்.

டிசம்பர் 13ந்தேதி ஜாமினில் விடுதலை செய்யப்படுகிறார். 

டிசம்பர் 15ந்தேதி ஐ.நாவுக்கான நிரந்தர தூதராக தேவயானி பணி மாறுதல் செய்யப்படுவதாக இந்தியா அறிவிக்கிறது. 


அமெரிக்காவில் சட்டம் அனைவருக்கும் ஒன்று தான் என அமெரிக்க அரசின் வழக்கறிஞர் சொல்கிறார். இது உட்டாலங்கடி வேலை. தொழிலாளர் நலச்சட்டபடி புகார் தர வேண்டும் என்றால் ஆயிரக்கணக்கானோர் அமெரிக்காவில் புகார் தர முடியும். அத்தனை மோசமான நாடு அமெரிக்கா. தேவயானி விவகாரத்தில் ‘ஏதோ’ ஓரு மர்மம் உள்ளது. அது என்னவாக இருக்கும் என நுணுக்கமாக ஆராய்தால் புடிபடும். அமெரிக்காவில் சங்கீதா வேலை செய்தாலும் அவர் துணை தூதராக உள்ள தேவயானி வீட்டில் வேலை பார்ப்பவர். தூதர் வீட்டில் வேலை பார்க்கும் பெண்மணி காணாமல் போனால் அது எத்தனை ஆபத்தானது என்பது தூதரக பணியில் இருப்பவர்களுக்கு நன்றாக தெரியும். அமெரிக்க இராஜாங்க திணைகளம் காணாமல் போனதாக புகார் வந்தவுடன் பரபரப்பாகி கண்டுபிடிக்க உத்தரவிட்டு இருக்க வேண்டும். அப்படி செய்யவில்லை

அடுத்ததாக நியூயார்க் போலிஸ் காணாமல் போனால் அவரது குடும்பத்தார் தான் புகார் தர வேண்டும் என்கிறது. அது அமெரிக்காவின் குடிமக்களுக்கு பொருந்தலாம். சங்கீதா அங்கு பணியாற்ற தான் சென்றுள்ளார். அதனால் அவர் முழுக்க முழுக்க தேவயானியின் கட்டுப்பாட்டில் வருகிறார். இந்திய அரசாங்கத்தின் சிறப்பு பாஸ்போட் தந்துள்ளது. அதனால் அவர் காணாமல் போனார் என புகார் தந்தவுடன் ஏற்றுக்கொண்டிருக்க வேண்டும். ஆனால் மறுத்துவிடுகிறார்கள். 

அமெரிக்காவில் சட்ட திட்டம் மதிக்கப்படும் என்கிறார் அரசு வழக்கறிஞர். இந்தியாவிலும் சட்ட திட்டங்கள் உள்ளது. இந்தியாவில் சங்கீதா மீது புகார் பதிவாகி இந்திய நீதிமன்றம் சங்கீதாவை இந்தியாவுக்கு அனுப்புங்கள் என உத்தரவிடுகிறது. அதை அமெரிக்கா மதிக்கவில்லை. இந்திய வெளியுறவுத்துறை அரசின் சார்பில் தரப்பட்ட விசாவை ரத்து செய்ததோடு அவரை கண்டுபிடித்து நாடு கடத்துங்கள் என கடிதம் அனுப்புகிறது அதற்கு அமெரிக்கா செவி சாய்க்கவில்லை. 

இந்திய பிரஜையான சங்கீதாவின் கணவர் பிலிப்ரிச்சர்டு, அவரது இரண்டு குழந்தைகளை இந்தியாவுக்கு தெரியாமல் தங்கள் நாட்டுக்கு ரகசியமாக அழைத்துக்கொள்கிறது. கேட்டால், அவர்களை இந்தியாவில் மிரட்டுகிறார்கள் என்கிறார்கள். மிரட்டியது யார் அதுப்பற்றி புகார் தந்துள்ளாரா என்ற விளக்கம்மில்லை. அவர்களை மீடியா முன்பும் நிறுத்தவில்லை. 

உலகில் பின்பற்றப்படும் தூதருக்கான சட்ட திட்டங்களை அமெரிக்கா பின்பற்றவில்லை என்பதே அவரது கைது பற்றி அமெரிக்காவின் ஒவ்வொரு ஏஜென்சியும் தரும் முன்னுக்கு பின் முரணான தகவல்களே நிருபிக்கின்றன.

சங்கீதாபிலிப்ரிச்சர்டு மேல் அமெரிக்காவுக்கு என்ன அக்கறை ?. 

உலக நாடுகள் அனைத்தும் பிற நாடுகளில் தூதரகம் அமைப்பதே உளவு பார்க்கதான். தங்களது உளவு ஆட்களை களமிறக்கி தங்களது நாட்டுக்கு எதிரான சம்பவங்கள், திட்டமிடல்கள் அந்த நாடுகளில் நடக்கிறதா என கண்காணிக்கின்றன. இந்தியா சார்பில் ரா, அமெரிக்காவுக்கு சி.ஐ.ஏ, பாகிஸ்தானுக்கு ஐ.எஸ்.ஐ என ஒவ்வொரு நாட்டுக்கும் ஒவ்வொரு வெளிநாட்டு உளவு அமைப்புகள் உள்ளன. 

உளவாளிகள் அரசியல் கட்சிகள், இராணுவம், தூதரகம், பிரபல செய்தி நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள், ஏன் உளவு அமைப்புகளுக்குள் என எங்கும் உண்டு. உளவாளிகள் எந்த பகுதியில் பணியாற்றுகிறார்களோ அந்த நாட்டை சேர்ந்தவர்களையும் உளவாளிகளாக மாற்றி வைத்திருப்பார்கள். அவர்களுக்கு என்ன தேவையோ அதை செய்து தருவார்கள். தங்களுக்கு தகவல்கள் தரும் உளவாளிகளை பொத்தி பொத்தி பாதுகாப்பார்கள். சிக்கலில் மாட்டிக்கொண்டால் காப்பாற்றுவார்கள். உலகில் உளவாளிகளுக்கு சி.ஐ.ஏ, மொசாத், எம்.ஐ6 போன்றவை நம்பகமான உளவு அமைப்புகள். உலக நாட்டாமையான அமெரிக்காவுக்கு நண்பர்களை விட எதிரிகள் அதிகம். சி.ஐ.ஏ உலகம் முழுவதும் விளையாடிய விளையாட்டு அப்படி. அதனால் சி.ஐ.ஏவின் உளவாளிகள் வான்வெளி வரை உருவாக்கி வைத்துள்ளது.  

சி.ஐ.ஏவுக்கு உளவு சொல்பவராக சங்கீதா இருக்க வாய்ப்புண்டு. சங்கீதா மூலம் தேவயானியை உளவு பார்த்துயிருக்கலாம். காரியமும் சாதித்துக்கொண்டு வந்திருக்கலாம். தேவயானியிடமோ அல்லது இந்திய அதிகாரிகளை கண்காணிக்கும் ‘ரா’ வலையில் சிக்கியிருக்கலாம். இதனை அறிந்த சி.ஐ.ஏ தன் உளவாளியை காப்பாற்ற முயற்சி செய்யலாம். இந்தியாவில் இருந்து சி.ஐ.ஏவுக்கு உளவு பார்த்த சிலரை ரா கண்டறிந்தபோது அவர்களை ரகசியமாக தங்கள் நாட்டுக்கு அழைத்து பாதுகாக்கிறது சி.ஐ.ஏ. சிலரை இந்தியாவும் பிடித்து விசாரணை நடத்துகிறது. சங்கீதா சிக்கினால் ஆபத்து என்பதை உணர்ந்தே அவரை அமொிக்கா பாதுகாக்க முயல்கிறது. 

இல்லையேல் உப்பு சப்பில்லாத விவகாரத்தில் அமெரிக்கா இந்தியாவுடன் இப்படி விளையாடாது. ஏன் எனில் இந்தியா அந்தளவுக்கு அமொிக்காவுக்கு நெருக்கமான அடிமை நாடு. அமொிக்கா இந்தியாவை அதிகமாக உளவு பார்த்தது என விக்கிலீக்ஸ் மற்றும் முன்னால் அமொிக்க உளவாளி தகவலை லீக் செய்தபோது இந்தியா அது சும்மா என்றது. இப்படிப்பட்ட விசுவாச அடிமையை அமொிக்கா விட்டுவிடாது. அடிமைக்கு கோபம் வரும் அளவுக்கு அமெரிக்கா நடந்துக்கொள்கிறது என்றால் இதன் பின்னால் ஏதோ ஒரு மர்ம விளையாட்டு உள்ளது என்பதே உண்மை.

சங்கீதாவை உளவாளி என கூற காரணம், சங்கீதாவின் கணவர் இந்தியாவில் உள்ள மொசாம்பிக் நாட்டின் தூதரகத்தில் கார் ஓட்டுநராக பணியாற்றுகிறார். அவரது அம்மாவும், அப்பாவும் இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரி வீட்டில் அதிகார மட்டத்தில் பணியாற்றுகிறார்கள் இதை அமெரிக்காவும் ஒப்புக்கொள்கிறது.

12 கருத்துகள்:

  1. ஆஹா சங்கீதா பாவம் என்று நினைத்தால் அதன் பின்னால் இப்படி ஒரு நியூசா?? அப்படின்னா தேவயானி தான் பாவமா??தலையே வெடிச்சுடும் போல இருக்கே...

    பதிலளிநீக்கு
  2. சங்கீதா உளவாளி என்றால் அமெரிகாவில் தூதரகத்தில் இருந்தபடியே தொடர்ந்தும் உளவு பார்த்திருக்கலாமே? ஏன் அமெரிக்க பொலிசிடம் போக வேண்டும்?
    தேவயானி உளவாளி என்றறிந்தால் அமெரிகா அவரை உளவு பார்த்த குற்றச்சாட்டில் கைது செய்திருக்கலாமே? ஏன் அவ்வாறு செய்யாமல் சில்லறைக்கேசில் கைது செய்ய்ய வேண்டும்?

    பதிலளிநீக்கு
  3. அமெரிக்கா கைது செய்தால் என்னடா தவறு என்று புரச்சிகரமா கேட்காம ஆழமா ஊடுருவி பார்த்துள்ளீர்கள்.பாராட்டுக்கள்

    பதிலளிநீக்கு
  4. கேட்க நன்றாகத் தான் இருக்கு, இந்திய பிரஜை இந்தியாவில் இருந்து அமெரிக்கா போக எதுக்கு விசாவை இந்தியா தரணும். அது தவறு, திருத்துக. அடுத்து தேவயானியின் கணவர், பிள்ளைகளை தில்லி போலீஸ் விசாரித்து மறியலில் வைத்திருந்தது, அவர்கள் அமெரிக்காவுக்கு போனார்களா? எப்படி போனார்கள் ( ஆதாரம் எங்கே )! சங்கீதா உளவாளி என உங்களுக்கு எப்படி தெரியும் ( ஆதாரம் ). சங்கீதா உளவாளி எனில் ரா-க்கு தெரியாமல் இருந்திருக்குமா? அப்படியே இருந்தாலும் இந்தியா ஏன் தேவ்யானியை காப்பாற்ற முயல்கின்றது? அப்படி எனில் தேவ்யானி அமெரிக்காவை உளவு பார்த்து மாட்டிக்கிட்டு இருப்பாரோ என்றும் எண்ணத் தோன்றுகின்றது.

    எங்கள் கவலை எல்லாம் இது போல எத்தனை லட்சம் இந்திய தொழிலாளர்களை உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் இந்திய முதலாளிகள் சுரண்டிக் கொண்டிருக்கின்றார்களோ? அவர்களை காக்க நம் அரசு முனைய வேண்டும், சுரண்டும் முதலாளிகளைக் காக்கவே இந்த அரசு முனைப்புக் காட்டுவது வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது.

    --- விவரணம். ---

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீலவண்ணன் அவர்களுக்கு, அரசு தந்த சிறப்பு பாஸ்போட்டில் தான் சங்கீதா அமொிக்கா சென்றுள்ளார்.
      சங்கீதாவின் கணவரை டெல்லி போலிஸ் விசாாித்தது தேவயாணி தந்த புகாாின் அடிப்படையில். சங்கீதாவின் கணவர், பிள்ளைகளை அமொிக்காவுக்கு ரகசியமாக அழைத்துக்கொண்டதாக அவர்களே அறிவித்துள்ளார்கள். அமொிக்க வெளியுறவுத்துறை அறிக்கையை வந்துள்ளது பாருங்கள்.

      உளவு சொல்பவர்கள் பற்றி இன்னோரு உளவு அமைப்புக்கு தொிய வேண்டும் என்ற அவசியம்மில்லை. சந்தேகம் வந்து சிக்கினால் மட்டுமே........
      தேவயானி உளவு பார்த்து சிக்கியிருக்கலாம் என கேட்டுயிருக்கலாம் இருக்கலாம். அதோடு, தேவயாணி கட்டுப்பாட்டில் அரசியல், பொருளாதாரம், பெண்கள், குழந்தைகள் பிாிவு வருகிறது என்பதால் அதற்கான சாத்தியமுண்டு.

      நீக்கு
  5. ஒரு மணித்தியால சம்பளம் $9.25,ஒரு நாளில் எட்டு மணித்தியாலங்கள் $75,
    ஒரு வாரத்தில் ஏழு நாட்கள் வேலை என்றாலும் $525

    மாதத்தில் முப்பது நாட்கள் என்று பார்த்தாலும் $2,250 தானே வரும்!

    இது தேவ்யானியை சுத்தவாளியாக்க எழுதப்பட்ட ஒரு கட்டுரை. சங்க்கீதவை ஓர் அமெரிக்க உளவாளியாக்கி தேவ்யானியைக் காப்பாற்ற முற்பட்டிருக்கிறார் கட்டுரையாளர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. sdass அவர்களுக்கு, பணியாளுக்கு அமொிக்க சட்டப்படி மாத சம்பளம் 4500 டாலர் தர வேண்டும் என்கிறது அமொிக்க அரசு. தேவயானிக்கு மாத சம்பளம்மே 4120 டாலர். தேவயானி தந்திருப்பது வெறும் 560 டாலர் தான் என்கிறது. தேவயானி குற்றவாளி தான் சார். அதல என்ன டவுட். தேவயானி எப்படி அமொிக்காவின் பார்வையில் குற்றவாளியோ அதேபோல் சங்கீதாவும் குற்றவாளி தான்.
      அதுப்பற்றி ஒரு கட்டுரை எழுதுகிறேன்.

      நீக்கு
    2. Minimum wage in NY is $7.25/hour. Only after Dec 31st it will be $8/hour.
      Even for 12 hours a day, 30 days per month it will be $2610/month

      நீக்கு
    3. நீங்கள் குறிப்பிடுவது சரி. நான் குறிப்பிடுவது அமெரிக்கா காட்டும் ஒப்பந்தம் பற்றி. ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ள தொகையை ஏன் தரவில்லை என கேட்டு தான் வழக்கு, கைதுயெல்லாம். அதைதான் நான் குறிப்பிட்டுள்ளேன்.

      நீக்கு
  6. Devyani has not completed the MBBS degree. She has discontinued her studies and wrote a special exam conducted by External Affairs Ministry not through IAS exam. She has a flat worth of 12 crore in Adarsh Scam Apartment. At that time her her annual income was 1.2 lakh. Now say who is culprit.

    பதிலளிநீக்கு
  7. If somebody is putting a agreement then they have to follow it. If Devyani is not capable of giving 4500 then why she is going for a agreement. None will accept whether she is capable of giving that salary or not. She is designated in a important post and if she herself not obeying her agreement means what is the point.

    One more thing to notice is Devyani raised a theft complaint against Sangeetha. Don't you realize this is the cheapest method all the people follow when they get some issue with their servants. This way of approach itself proves that Devyani is not a right person.

    பதிலளிநீக்கு