திங்கள், ஏப்ரல் 18, 2022

நெற்றியில் நாமத்தை போடு ஐ.ஏ.எஸ்ஸாக வாய்ப்புண்டு.

 


பாப்பா படிச்சிட்டு என்னவாகப்போற?

கலெக்டர்.

தம்பி உனக்கு என்னவாக ஆசை?

போலிஸ் அதிகாரி.

தமிழ்நாடு மட்டும்மல்ல இந்தியாவின் எந்த பகுதியில் உள்ள அரசுப்பள்ளியோ, தனியார் பள்ளியில் 12வது தேர்வு எழுதிவிட்டு வெளியே வரும் பிள்ளைகளிடம் கேட்டால் மேற்கண்டதைத்தான் சொல்வார்கள். இப்படி சொல்லிய பிள்ளைகள் இனி கடினமாக படித்து தேர்வு எழுதினாலும் அவர்கள் கனவு கானும் அதிகாரியாக வரமுடியுமா என்பது கேள்வி குறியாகியுள்ளது.

ஒன்றியரசின் சிவில் சர்விஸ் அதாவது நிர்வாக பணிகளுக்கு செல்லவேண்டும்மென்றால் குரூப் 1 தேர்வுகளை எழுதவேண்டும். இந்த தேர்வை UPSC ( Union Public Service Commission ) என்கிற அமைப்புதான் அதற்கான தேர்வுகளை நடத்துகிறது. இந்த அமைப்பு தன்னிச்சையான அமைப்பு, அதாவது தேர்தல் ஆணையம் போல் என வைத்துக்கொள்ளுங்கள். இதற்கான தலைவரை ஒன்றியரசின் பரிந்துரைப்படி குடியரசுத்தலைவர் நியமிப்பார்.

இந்தியாவை ஆள்பவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் எனச்சொல்லிக்கொண்டாலும் உண்மையில் அதிகாரம் கொண்டவர்கள் சட்டத்தை நடைமுறைப்படுத்துபவர்கள் இவர்கள்தான். இந்தியாவை ஆட்சி செய்பவர்கள் என்பதால் சிவில் சர்விஸ் தேர்வு என்பது மிககடுமையான தேர்வாக இருக்கும். ஆண்டுதோறும் பலலட்சம் இளைஞர்கள் கனவுகளோடு இந்ததேர்வை எழுதுகின்றனர். இதற்காக பலஆண்டுகளாக தேர்வு எழுதி தோற்றவர்களும் உண்டு, முதல் தேர்விலேயே தேர்ச்சி பெற்றவர்களும் உண்டு.

கடந்த ஏப்ரல் 5 ஆம் தேதி யூ.பி.எஸ்.சி சேர்மனாக மனோஜ்சோனி என்பவரை நியமித்துள்ளது ஒன்றியத்தை ஆளும் மோடி அரசு. இது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

யார் இந்த மனோஜ்சோனி?

மும்பையில் சுவாமி நாராயணன் என்கிற சாமியாரின் அனுபாம் மிஷன் என்கிற அமைப்பில் மனோஜ் தந்தை இணைந்து சேவை செய்துவந்துள்ளார். இவருக்கு 5 வயதாகும்போதே அவர் தந்தை இறந்துவிட்டதால் மனோஜ்கான கல்வி உதவியை அந்த அமைப்பே ஏற்றுக்கொண்டது, அதன் சேவகராக இணைந்துள்ளார். பட்டப்படிப்பு அரசியல் அறிவியல் படித்துள்ளார். படித்து முடித்தும் பேராசிரியராக பணியில் சேர்ந்துள்ளார். வதோராவில் உள்ள மகாராஜா சயாஜீரோ பல்கலைக்கழகத்தில் 40 வயதில் துணைவேந்தராக நியமிக்கப்பட்டு பணியாற்றி ஓய்வு பெற்றவர். சர்ச்சை அதுவல்ல.

ஆர்.எஸ்.எஸ் ஊழியர், சிறுவயது முதலே அந்த இயக்கத்தில் இணைந்து மதப்பணிகள் செய்துவந்துள்ளார். தமிழ்நாட்டில் அரசு மருத்துவராக இருந்துக்கொண்டு பாஜகவின் மாணவர் அமைப்பின் தலைவராக இருந்தாரே, எதிர்வீட்டு வாசலில் மூத்திரம் பெய்த வழக்கில் கைது செய்யப்பட்டாரே டாக்டர் சுப்பையா அவரைப்போலவே இவரும் பேராசிரியாக இருந்துக்கொண்டு பாஜகவுக்கு வெளிப்படையாக வேலை செய்துவந்துள்ளார். மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது, அவர் என்ன பேசவேண்டும், எதைப்பேசவேண்டும் எனச்சொல்லி தந்தவர், எழுதி தந்தவர் சாட்சாத் மனோஜ்சோனி.

குஜராத் கலவரத்துக்கு ஆதரவாக பேசியும், எழுதியும் வந்தவர். குஜராத் கலவரத்தில் முதலமைச்சர் மோடியின் செயலை புகழ்ந்து புத்தகம் எழுதியுள்ளாராம். 2020 ஆம் ஆண்டு நிஷ்கர்ம கர்மயோகி அதாவது துறவி என அறிவித்துக்கொண்டுள்ளார். அவரைத்தான் யூ.பி.எஸ்.சி அமைப்பின் தலைவராக நியமித்துள்ளனர். 2023 ஜீன் வரை அவரது பதவிக்காலம் உள்ளது.

பெரும்பாலும் அந்த பதவியில் சிவில் சர்விஸ் பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்களையே நியமிப்பது வழக்கம். இந்நிலையில் இந்தியாவை வழிநடத்தப்போகும் சிவிஸ் சர்விஸ் அதிகாரிகளை உருவாக்கும் அமைப்புக்கு துறவி என அறிவித்துக்கொண்டவரை தலைவராக்கியுள்ளனர்.

ஆர்.எஸ்.எஸ்சின் மறைமுக துணையுடன் சங்கல்ப் என்கிற அமைப்பு நாடு முழுவதும் குறிப்பாக வடமாநிலங்களின் முக்கிய நகரங்களில் சிவில் சர்விஸ்க்கான பயிற்சி மையங்களை நடத்திவருகிறது. இந்த பயிற்சி மையத்தில் படித்து சிவில் சர்விஸ் தேர்வு எழுதுபவர்கள், எழுத்து தேர்வில் தேவையான மதிப்பெண் எடுக்கவில்லையென்றாலும் நேர்முகத்தேர்வு மூலமாக தேர்ச்சி பெற்றதாக தேர்வு செய்யப்படுகிறார்கள் என்கிற குற்றச்சாட்டு உண்டு. கர்நாடகா முன்னாள் முதல்வர் குமாரசாமி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, நாடு முழுவதும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு தனது தொண்டர்களுக்கு பயிற்சியளித்து அரசு துறைகளில் அவர்களை ஊடுருவச் செய்துள்ளது. இதுவரை 4000 தொண்டர்கள் அரசு அதிகாரியாக நாடு முழுவதும் பணியாற்றி வருகின்றனர். அரசு நிர்வாகத்தின் மீது வெளிப்படையாக முன்னாள் முதல்வர் வைத்த குற்றச்சாட்டை இதுவரை விசாரிக்கப்படவேயில்லை. அந்த சங்கல்ப் பயிற்சி மையத்தில் படித்து தேர்வு எழுதி ஐ.பி.எஸ் அதிகாரியாக கர்நாடகாவில் பணியாற்றியவர், ஆடு வளர்க்கப்போகிறேன் எனச்சொல்லிவிட்டு வந்தவர்தான் தற்போதைய பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை.

பல்கலைக்கழகங்களில் மதவாதிகளை துணைவேந்தராக நியமித்தார்கள் இப்போது அரசு பணிகளுக்கான துறையில் வெளிப்படையாக நுழைந்துள்ளார்கள். இனி கண் விழித்து படிக்க தேவையில்லை, ஆண்டுக்கணக்கில் செலவு செய்து பயிற்சி வகுப்புகளுக்கு போகதேவையில்லை. 10 சதவித பொருளாதார இடஒதுக்கீடு பெற்ற சாதியாகவோ, அவாக்களின் அனுக்கிரகம் பெற்றவர்களாகவோ, நெற்றியில் திருநீறு பட்டை அல்லது நாமம், கழுத்தில் உத்திராட்சக்கொட்டை, கண்டிப்பாக காவி உடை அணிந்துக்கொண்டுபோய் நேர்முகத்தேர்வில், பாரத் மாதாகீ ஜே, ஜெய் அனுமான், ராமர் நமது கடவுள், மனுசாஸ்திரம்மே நமது சட்டப்புத்தகம் என சொன்னால் நேர்முகத்தேர்வில் 100 மதிப்பெண் தந்து ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் ஸாக்கிவிடுவார்கள்.


டீ தான் குடிச்சிங்களா சார்? ஏன் இப்படி பேசறிங்க?

 

மக்களாள் தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்களால் சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட நீட் உட்பட 19 மசோதாக்களில் கையெழுத்திடாமலும், ஒன்றிய அரசுக்கு அனுப்ப வேண்டிய மசோதாக்களை அனுப்பாமலும் தன்னிடம்மே வைத்துக்கொண்டு சட்டவிதிகளை மீறிக்கொண்டு இருக்கிறார் தமிழ்நாட்டின் கவர்னரான ரவி.

கவர்னர் மாளிகையில் வழங்கப்பட்ட டீ பார்டிக்கு தமிழக முதல்வர், அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், திமுக உட்பட அனைத்து கட்சியினருக்கும் கவர்னர் அழைப்பு விடுத்துயிருந்தார். முதல்வர், திமுக, இடதுசாரிகள், விசிக, மமக போன்ற கட்சிகள் மக்களாச்சியை மதிக்காத கவர்னரின் டீ பார்டியை புறக்கணிக்கிறோம் எனச்சொல்லி புறக்கணித்துவிட்டார்கள்.

கவர்னர் வீட்டு காவல்காரர்களான ஓசியில் சோறு போடுகிறார்கள் என்றதும் ஓடிப்போய் முதல் பந்தியில் அமரும் பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை உட்பட அதன் தலைவர்கள், பாஜகவின் கொத்தடிமைகளான அதிமுக, பாமக நிர்வாகிகளும் கலந்துக்கொண்டு டீ குடித்துவிட்டு கும்மாளம்மிட்டுவிட்டு வந்துள்ளார்கள்.

டீ குடிச்சாரோ அல்லது வேறு ஏதாவது குடிச்சாரா எனத்தெரியவில்லை. அண்ணாமலை. டீ செலவு மிச்சம் என உளறியுள்ளார். நாடுயிருக்கும் நிலைக்கு சுயமரியாதையுடன் டீ பார்டியில் கலந்துக்கொள்ளாமல் செலவை குறைத்துள்ளனர் ஆளும்கட்சியினரும், அதன் கூட்டணி கட்சியினரும். ஆனால் பாஜக அண்ணாமலை வாரம் இரண்டுமுறை கவர்னர் மாளிகைக்கு சென்று விருந்து சாப்பிட்டுவிட்டு வருகிறார்.

அண்ணாமலைக்கு தெரியாததில்லை. கவர்னர் அவர் பாக்கெட்டில் இருந்து பணத்தை எடுத்து டீ க்கோ, உங்கள் விருந்துக்கோ பணம் தரவில்லை. தமிழ்நாட்டு மக்களின் பணம். அவன் கட்டிய வரியில் இருந்து சம்பளம் வாங்குபவரே கவர்னர். தமிழ்நாட்டு மக்களின் பணத்தில் ஓசியில் டீ குடித்தும், விருந்து சாப்பிட்டுவிட்டு நக்கல் பேச்சு பேசியுள்ளார் அண்ணாமலை.

டீ பார்டியை முதலமைச்சர் ஸ்டாலின் புறக்கணித்ததும், கவர்னர் தரவேண்டிய மரியாதையை தரவில்லை என கூச்சல் போடுகிறார்கள் பாஜக சங்கிகளும், அதன் எடுபிடிகளும்.

கவர்னர் பதவிக்கான மரியாதை தமிழ்நாட்டில் போய் பல ஆண்டுகளாகிவிட்டது.

தள்ளாடும் வயதில் பதவி வெறிக்கொண்ட அரசியல்வாதிகளுக்கும், உட்கட்சி போட்டியால் அரசியலில் இருந்து ஒதுக்கவேண்டியவர்களுக்கும், நீதித்துறையில், காவல்துறையில் ஒன்றிய ஆட்சியாளர்களுக்கு விசுவாசமாக இருந்தவர்களுக்கு தரப்படுவதாக கவர்னர் பதவி மாறிவிட்டது.  

கேரளா ஐ.பி.எஸ் கேடர் அதிகாரி மத்தியரசு பணியில் பணியாற்றி ஓய்வு பெற்ற ரவி க்கு கவர்னர் பதவி பாஜகவால் தரப்பட்டது என்றால் அவர் கடந்தகாலத்தில் அந்த கட்சிக்கு எவ்வளவு விசுவாசமாக இருந்துயிருப்பார் என்பதை யூகித்துக்கொள்ளுங்கள்.

தமிழ்நாட்டின் கவர்னராக இருந்த சுந்தர்லால் குரானா, பீஷ்மநாராயணன்சிங், சென்னாரெட்டி, பாத்திமாபீவி, வித்தியாசாகர் ராவ், புரோகித் போன்றவர்கள் அந்த பதவிக்கான மாண்மை நாசமாக்கிவிட்டு போய்விட்டார்கள். ஒன்றிய அரசின் ஏஜென்ட்டுக்கு எதற்கு இவ்வளவு மரியாதை தரவேண்டும் என்கிற கேள்வியை ஏறத்தாழ இப்போது எல்லா மாநிலத்தை ஆளும் மாநிலகட்சிகளும் கேட்கத்துவங்கிவிட்டன.

எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்தபோது, வெளிநாட்டு சிகிச்சைக்கு அனுமதி பெற நடிகைகளை அனுப்பி அனுமதி பெற்றார்கள் என்கிற விமர்சனம் உண்டு. அதேவழியில் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது பக்கத்துக்கு மாநில நடிகை கம் அரசியல்வாதியை அனுப்பி குறிப்பிட்டவருக்கு அனுப்பி சந்தோஷப்படுத்தினார்கள் என்பவர்களும் உண்டு.

2002ல் முதல்வர் பதவி ஏற்க முடியாத ஜெயலலிதாவை சட்டவிதிகளை மீறி முதலமைச்சராக பதவி பிரமாணம் செய்துவைத்தார் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்த கவர்னர் பாத்திமாபீவி.

2011ல் ஆந்திரா அரசியல்வாதியான காங்கிரஸ்காரர் ரோசய்யா கவர்னராக நியமிக்கப்பட்டார். ஜெயலலிதா முதல்வரானதும் அவரின் அடிமையாகவே மாறினார். 2014ல் பாஜக ஆட்சிக்கு வந்தபின்பு பலமாநில கவர்னர்கள் மாற்றப்பட்டபோதும் தமிழ்நாடு கவர்னர் ரோசய்யாவை 2016 வரை மாற்றவில்லை.

2016ல் அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா படுத்தபடுக்கையாக இருந்தபோது கவர்னர் வித்தியாசாகர்ராவ், முதலமைச்சர் மர்மமான முறையில் தனியார் மருத்துவமனையில் அட்மிட்டாகிறார். கவர்னர் சட்டவிதிகளின்படி பணிகளை செய்யாமல் சட்டவிதிகளை காற்றில் பறக்கவிட்டதால்தான் இப்போதும் ஜெயலலிதா மரணத்தின் மர்மம் வெளிவராமலே உள்ளது. அதேநபர் அதிமுக உடைந்து எடப்பாடி அணி – ஓ.பி.எஸ் அணி இரண்டாக செயல்பட்டபோது, இருவரையும் பொதுமேடையிலேயே இருவரும் ஒன்றாக இருங்கள் என ஆலமரத்தடி பஞ்சாயத்து செய்தவர்தான் கவர்னர்.

அதன்பின் கவர்னராக வந்த பன்வாரிலால், பாஜகவின் அடிமைகளாக இருந்த அதிமுக மற்றும் எடப்பாடியை நம்பாமல் கவர்னர் மாளிகை ஆட்சி செய்ய துவங்கியதையும் மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருந்தார்கள். அதிமுகவின் உட்கட்சி சண்டையில் பஞ்சாயத்து செய்தபடி இருந்தார்கள்.

கவர்னருக்கான மாண்பை மறந்துவிட்டு, அரசியல் செய்து தமிழ்நாட்டில் விமர்சனத்துக்கு ஆளான கவர்னர்கள் இவர்கள்.

திமுக ஆட்சி அமைந்து ஸ்டாலின் முதல்வரானதும், தமிழகத்தில் தங்களது ஆட்சியை நடத்த பாஜக முடிவு செய்தே ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ் அதிகாரியான ஆர்.எஸ்.எஸ் அடிமையும், சாதிய பாசம் அதிகம் கொண்ட ரவியை தமிழ்நாடு கவர்னராக்கியது. போலிஸ் மூளை தமிழக முதலமைச்சரை அடக்கி ஆளும் என்கிற பாஜக, ஆர்.எஸ்.எஸ் நம்பிக்கையில் அனுப்பிவைத்துள்ளது. ஆர்.எஸ்.எஸ் என அவர்மீது நாம் குற்றச்சாட்டு வைக்ககாரணம் அவரின் செயல்பாடுகள் அனைத்தும் ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தப்படியே உள்ளன.

தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா, ஊழல் ராணியாக வலம்வந்தவர் மீது சு.சாமி தந்த புகார்களின் அடிப்படையில் ஊழல் வழக்கு தொடுக்க அனுமதியளிக்க முயன்றார் கவர்னர் சென்னாரெட்டி. அடுத்த சிலநாட்களில் கவர்னர் என்னிடம் தவறாக நடந்துக்கொள்ள முயன்றார் என அப்போதே மீ டூ புகாரை எழுப்பி அவரது இமேஜ்ஜை காலி செய்தார். தமிழகத்தில் போகும்மிடங்களில் எல்லாம் அதிமுகவினரால் கவர்னர் அவமானப்படுத்தப்பட்டார்.

2018களில் கவர்னர் பன்வாரிலால் புரோகித், முதல்வர் பதவியில் இருந்த எடப்பாடிக்கு போட்டியாக தனிஆட்சி நடத்த முயன்று தமிழகத்தில் சுற்றுப்பயணம் செய்தபோது நிர்மலாதேவி என்கிற பேராசிரியரை கொண்டு அவரை முடக்கினார்கள்.

அப்படிப்பட்ட முதல்வராக ஸ்டாலின் இல்லாமல் கவர்னருக்கு உரிய மரியாதையை தருபவராக, சட்டவிதிகளை மதிப்பவரால் இருப்பதால் முதலமைச்சரும், திமுகவினரும், தமிழ்நாட்டு மக்களும் மொக்கை என நினைத்துக்கொண்டு இருக்கிறார்போல.

ஒன்றியத்தில் பிரதமர் மோடியின் அதிகாரம் இருக்கும்வரைதான் இவர்களின் ஆட்டம்மெல்லாம். அதிகாரத்திலிருந்து பாஜக என்கிற கட்சி விரட்டப்படும்போது, பதவியின் மாண்பை மறந்து சவார்கர் பரம்பரையாக மாறிவிடுவார்கள்.

வெள்ளி, ஏப்ரல் 15, 2022

புயலுக்கு எதிராக சங்கிகளுக்காக களம்மிறங்கியுள்ள ஞானி.


 

இளையராஜா இசைஞானியாக இருக்கலாம், அவர் அங்கீகாரத்துக்காகவே சங்கியாக மாறியவர். இந்திய அரசாங்கத்தின் அதாவது இந்தியாவை மறைமுகமாக இயக்கும் அவாக்களின் அங்கீகாரம் வேண்டும் என விரும்பி சங்கி அவதாரம் எடுத்தவர், பின்பு ஆன்மீகவாதியாகிப்போனார். உலக அழகிகள் நிகழ்வுக்காக இசை அமைத்த இதே இளையராஜாதான், நாத்திகவாதி குறித்த படத்துக்கு திசையமைக்கமாட்டேன் எனச்சொல்லி தந்தைபெரியார் பற்றி எடுக்கப்பட்ட திரைப்படத்துக்கு இசையமைக்க மறுத்தார்.

ஒரு கலைஞன் தான் செய்யும் தொழிலில் சாதி, மதம் பார்க்கமாட்டான். திரைப்படத்துறை என்பது கூட்டு முயற்சியே. இளையராஜா, பெரியார் படத்திற்கு இசையமைக்க மறுத்ததற்கு காரணம், பெரியார் வெறுப்பாளர்களான, அந்த பெயரை கேட்டாலே உடல் முழுக்க எரியும் பார்ப்பனர்களுக்கு, பார்ப்பீனியத்துக்கு பிடிக்காது என்பதற்காகவே இசையமைக்க மறுத்தார்.

ரமணரின் தீவிர பக்தரான இளையராஜா, எனக்கு தெரிந்து கடந்த 30 ஆண்டுகளாக மாதம்தோறும் திருவண்ணாமலை வருபவர் ரமனாஸ்ரமத்தில் தான் தங்குகிறார். ரமணமாலை என்கிற பெயரில் தனி இசைஆல்பம் தயாரித்து, இசையமைத்து  வெளியிட்டவர், தமிழர்கள், திராவிடர்கள் மத்தியில் பெரும் புகழ்பெற்றவர் இங்கு கூஜாவாகவே நடத்தப்படுகிறார். இதை உலகம் முழுவதும்முள்ள ராஜாவின் பக்தர்கள் நம்பமாட்டார்கள், ஏற்றுக்கொள்ளமாட்டார்கள், ஆனால் அதுதான் நிஜம்.

காரணம் அவரின் சாதி.

ரமணர் ஆரிய பார்ப்பனர். ரமணாஸ்ரமத்தை ரமணரால் வாரிசாக நியமிக்கப்பட்ட அவரது குடும்ப உறவுதான் நடத்துகிறார். ரமணாஸ்ரமத்தை எல்லோரும் சாதாரண ஆஸ்ரமம் எனநினைக்கிறார்கள். இல்லை, அது பிறசாதி சாதனையாளர்களை அங்கீகரிக்கும் சாதிய மையம். இங்கு அங்கீகரம் பெற்றாள் உலகம் முழுவதும் அவாக்கள் ஏற்றுக்கொண்டு அங்கீகரிப்பார்கள். காஞ்சி சங்கரமடத்தின் வேலையை வெளியே தெரியாமல் நீண்ட ஆண்டுகளாக செய்துவருகிறது ரமணர் ஆஸ்ரமம்.

அந்த ரமணாஸ்ரமம் தான் ஓடுக்கப்பட்ட, ஒதுக்கப்பட்ட பஞ்ஜமான் என ஆரியர்களால் முத்திரை குத்தப்பட்ட சாதியில் பிறந்தவர் என்பதாலே இளையராஜாவை இன்னும் முழுவதுமாக அங்கீகரிக்கவில்லை. இந்த ஆரியக்கூட்டத்தின் முழுஅங்கீகாரத்துக்காக யார் காலையும் பிடிப்பேன் என்பது போலவே நடந்துக்கொள்கிறார். இளையராஜா.

உலகம் முழுவதும் அறிந்த ஆஸ்கார் விருது பெற்ற இசைப்புயல் என கொண்டாடப்படும் ஏ.ஆர்.ரஹ்மான், தன் செயல்கள் வழியாக, கருத்துக்கள் வழியாக சங்கி கும்பலை கதறவிடுகிறார். மோடி தலைமையிலான ஒன்றிய அரசின் இந்தி திணிப்பை எதிர்த்து தமிழர்கள் பக்கம் நிற்கிறார். இதை பொருத்துக்கொள்ள முடியாத சங்கி கும்பல் இசைஞாணி இளையராஜாவை பேசவைக்கிறது.

தனது தொழில் போட்டியாளரான, எங்கிட்ட கிடார் வாசிச்ச பையன் என நக்கலடித்த ஏ.ஆர்.ரஹ்மானை வெறுக்கும் இளையராஜா, ரஹ்மானின் சமூகநிலைக்கு எதிர்நிலை எடுத்துள்ளார். தான் விரும்பியது நடக்க தனக்கான அங்கீகாரம் அவாக்களிடம் வேண்டும் என்பதற்காக தமிழக, தென்னிந்திய மக்களால் வெறுக்கப்படும் பிரதமர் மோடியை போற்றி புகழ்கிறார். அதுவும் எப்படி புகழ்கிறார், பெருந்தலைவரான அம்பேத்காருடன் ஒப்பிட்டு புகழ்ந்துள்ளார். மோடி பிரதமர் என்பதற்காக யாரை யாருடன் ஒப்பிடுவது?.

குழந்தைகளுக்காக, இஸ்லாமிய பெண்களுகளின் உரிமைக்காக மோடி செயல்பட்டுள்ளார் என பேசியுள்ளார் இளையராஜா.

அந்த குழந்தைகளை பாதுகாத்து என்ன செய்யப்போகிறார்? 5 ஆம் வகுப்பு படித்து முடிக்கும் முன்பே நுழைவு தேர்வு, பின்பு 8 ஆம் வகுப்பில் நுழைவு தேர்வு, 12 ஆம் வகுப்பு முடித்ததும் கல்லூரியில் சேர நுழைவுத்தேர்வு. இதுதான் மோடியின் குழந்தைகளை காக்கும் லட்சணம்.

இஸ்லாமிய பெண்களை காத்துள்ளாறாம் மோடி?

குஜராத் முதலமைச்சராக இருந்தபோது இஸ்லாமியர்களுக்கு எதிரான மோடியின்  மதக்கொலைகளை செலக்டிவ்அம்னிஷீயாவால் நீங்கள் மறந்துயிருக்கலாம். இந்தவாரம் ராமநவமி ஊர்வலம் என்கிற பெயரில் வடஇந்தியாவில் ஊர்வலம் நடத்திய ஆர்.எஸ்.எஸ், வி.எச்.பி போன்ற சங் பரிவார கும்பல், இஸ்லாமியர்களின் வியாபார கடைகள், தொழில் நிறுவனங்களை குறிவைத்து அடித்து நொறுக்கி எரித்துள்ளார்கள். இஸ்லாமியர்கள் இந்து பண்டிகை நடக்கும் இடங்களில் வியாபாரம் செய்யக்கூடாது என வெளிப்படையாக கர்நாடகாவில் மிரட்டுகிறது பாஜகவும், இந்துத்துவா அமைப்புகளும். இதற்கு பிரதமர் என்கிற முறையில் நீங்கள் புகழ்ந்த மோடி என்ன சொல்லியுள்ளார்?

இந்தியா குறித்து இருவரும் பெரிய கனவு கண்டார் என்கிறார் இளையராஜா.

அம்பேத்கர் கண்ட கனவு, இந்திய மக்கள் நல்வாழ்க்கை குறித்தும், சமஉரிமை குறித்தும், சாதி, மத ஏற்றத்தாழ்வு இல்லாத இந்தியா குறித்தும், சட்டம் அனைவருக்கும் சமம் என்பது குறித்து கனவு கண்டார்.

மோடி, மதவெறியராக தன்னைக்காட்டிக்கொண்டு முதல்வராக, பிரதமரானவர். 2014ல் இன்று மோடியை வசைப்படும் இந்தியர்களில் பெரும்பான்மையினர் மோடி பிரதமரானால் இந்தியாவில் பெரிய மாற்றம் வரும் என நம்பி வாக்களித்து பதவிக்கு வரவைத்தவர்கள்.

இன்றைய நிலைமையென்ன?

லட்சகணக்கான கோடிகளை பொதுத்துறை வங்கிகள் வழியாக அம்பானி, அதானி, மிட்டல், டாட்டா கும்பல்களுக்கு வாரி வழங்கவைத்து அதனை வராக்கடன் என தள்ளுபடி செய்த அதே மோடி, ஆர்.எஸ்.எஸ் கும்பல்தான், சில ஆயிரம் வங்கி கடன்களை ஏழை தொழிலாளி, விவசாயி கட்டவில்லை என்பதற்காக தற்கொலைக்கு தூண்டி தற்கொலை செய்ய வைத்தவர்கள்.

கார்ப்பரேட் வரியை குறைத்தவர்கள், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலைகளை தறுமாறாக உயர்த்தி மக்களின் வயிற்றில் அடிக்கிறார். மத ரீதியாக மக்களை பிளக்கிறார், சிறுபான்மையின மக்களை வாழவிடாமல் பயமுறுத்துகிறார்.

அப்படிப்பட்ட மோடியை எப்படி அம்பேத்காருடன் ஒப்பிட முடிந்தது இளையராஜா? பேசியது மட்டும்மல்ல, மோடியும், அம்பேத்கரும் என்கிற தலைப்பு கொண்ட புத்தகத்திற்கு முன்னுரை எழுதியுள்ளாறாம் இளையராஜா. அதன் வெளியிட்டு விழாவில்தான் அம்பேத்காரோடு மோடியை சமப்படுத்தி பேசியுள்ளார். அவரது தம்பி கங்கைஅமரனைப்போல் பாஜகவில் இணைந்துவிட்டு இதனை பேசியிருந்தால் யாரும் இளையராஜாவை விமர்சிக்கபோவதில்லை. இசைஞானி என தமிழகத்தில், தென்னிந்தியாவில் கொண்டாடப்படுபவர், மக்கள் மனநிலைக்கு எதிராக பேசியதால்தான் இந்த விமர்சனம்மே.

வயதானால் …………… புத்தி வந்துவிடும் என கிராமத்தில் சொல்வார்கள், அது அப்படியே இளையராஜாவுக்கு பொருந்துகிறது.


ஆரியர்கள் அவலமாக உருவாக்கிய ஆண்டுகளின் பெயர்கள்.

 


தமிழ்புத்தாண்டு நல்வாழ்த்துகள் என பள்ளி நண்பர்கள் உள்ள வாட்ஸ்அப் குழுவில் வாழ்த்து குறுஞ்செய்திகளை பரிமாறிக்கொண்டுயிருந்தார்கள்.  

தை மாதத்தைதான் நான் தமிழ் புத்தாண்டா கொண்டாடுகிறேன் என பதில் பதிவு செய்தேன்.

சித்திரை மாதம்தான் ஆண்டு தொடக்க நாள் என ஃபோன் செய்து வாதிட்டான் நண்பனொருவன்.

ஆரியர்கள் இந்தியாவிற்கு வந்து ஆட்சி அதிகாரத்தில் இருந்துக்கொண்டு மாமன்னர்களின் ஆலோசகர்கள் என்கிற பெயரில் மறைமுகமாக தங்களது அதிகாரத்தை நடத்தியபோது கி.பி 14ஆம் நூற்றாண்டில் சமஸ்கிருத வழியில் விதவிதமாக புராணங்களை எழுதி இதுதான் நமதுவரலாறு என நம்பவைத்து மன்னர்களை கடைப்பிடிக்க வைத்தார்கள், மன்னர்களே வணங்கியபோது சாதாரண மக்கள் எம்மாத்திரம்.

தமிழ் ஆண்டுகள் என நம்மக்களை நம்ப வைத்த சமஸ்கிருத ஆண்டுகள் எப்படி உருவானது?

கடவுள் எனச்சொல்லப்படும் கிருஷ்ணனுக்கும் நாரதரும் கூடி பெற்றெடுத்த 60 பிள்ளைகளின் பெயரே 60 ஆண்டுகளின் பெயர்கள் எனச்சொல்லப்படுகிறது. அதாவது கிருஷ்ணருக்கு 60 ஆயிரம் மனைவிகள். (ராமாயணத்தில் ராமன் அப்பன் தசரதனுக்கு 60 ஆயிரம் மனைவிகள் என சொல்லப்பட்டுயிருக்கும்) தனக்கு பெண் சுகம் வேண்டும்மென நாரதர் உடலும், மனமும் நினைக்கிறது. எல்லா ஃபிகர்களையும் கிருஷ்ணர் மனைவியாக வைத்திருப்பதால் எனக்கு ஒரு பெண் துணை வேண்டும் எனக்கேட்டாராம். இரவில் ஊரில் உள்ள வீடுகளுக்கு செல், நான் இல்லாத வீட்டில் நீ இரு என்றானாம் கிருஷ்ணன். (அட நன்னாரி பயலே அப்படின்னு வடிவேல் பாணியில் கேட்க தோனுதா?) நாரதர் இரவில் ஒவ்வொரு வீடாக போனபோது எல்லா வீட்டிலும் கிருஷ்ணரே இருந்தாராம். (அப்பவே ஜெராக்ஸ் மிஷின் இருந்துயிருக்கு) கடுப்பான நாரதர் தன் உடலின் காம ஆசையை தீர்க்க கிருஷ்ணனிடம் திரும்பவந்து, என்னய்யா எல்லா வீட்லயும் நீயே இருக்க என சண்டைப்போட்டதும், நீ போய் ஆற்றில் குளித்துவிட்டுவந்தால் பெண்ணாய் மாறுவாய், அழகிய மங்கையாக மாறியதும் என்னிடம் வா என்றானாம் கிருஷ்ணன். நாரதனும் பெண்ணாக மாற, கிருஷ்ணனுடன் கொஞ்சி காமம் செய்ததில் ஒரே பிரசவத்தில் 60 குழந்தைகள் பிறந்ததாம். அந்த குழந்தைகளின் பெயரே ஒவ்வொரு ஆண்டுக்கும் வைக்கப்பட்டுள்ளது. பிரபவ — விபவ — சுக்ல —  பிரமோதூத — பிரசோற்பத்தி — ஆங்கீரச —ஶ்ரீமுக — பவ —யுவ — தாது — ஈஸ்வர — வெகுதானிய — பிரமாதி — விக்கிரம — விஷு — சித்திரபானு — சுபானு — தாரண — பார்த்திப — விய — சர்வசித்து — சர்வதாரி — விரோதி — விக்ருதி — கர — நந்தன — விஜய — ஜய - மன்மத — துன்முகி — ஹேவிளம்பி —விளம்பி — விகாரி — சார்வரி — பிலவ — சுபகிருது — சோபகிருது — குரோதி — விசுவாசுவ — பரபாவ — பிலவங்க — கீலக — சௌமிய — சாதாரண — விரோதகிருது — பரிதாபி — பிரமாதீச — ஆனந்த — ராட்சச — நள — பிங்கள — காளயுக்தி — சித்தார்த்தி — ரௌத்திரி — துன்மதி — துந்துபி — ருத்ரோத்காரி — ரக்தாட்சி — குரோதன — அட்சய .

 

நிமிஷத்துக்கு ஒன்றுயென 60 பிள்ளையை பெண்ணாக மாறிய நாரதர் பெற்றுள்ளார். இந்த ‘மெகாபிரசவத்தை’ தொடர்ந்து அடிப்படையிலேயே ஒருக்கேள்வி எழுகிறது. அதாவது இப்படி ஒரே பிரசவத்தில் 60 பிள்ளைகளை ஒருபெண் பெற முடியுமா? அப்படியாயின் அவரது வயிறு எவ்வளவு பெரியதாக இருந்துயிருக்கும்? (பாகுபலி செட் கூட அவ்வளவு பிரமாண்டமாக இருந்துயிருக்காது) அதெல்லாம் விடுவோம். ஆணும், ஆணும் ‘கூடினால்’ குந்தை பெற்றுக்கொள்ள முடியுமா? இப்போதுபோல் அப்போது ஆப்ரேஷன் செய்துக்கொண்டு பெண்ணாக மாறியிருப்பார் எனச்சொன்னால், கருபப்பை எங்கே என்கிற கேள்வி எழுகிறது?

கருப்பபை இல்லாமல் கடவுள் குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என்றால் எதற்காக சிவன் – பார்வதி, விஷ்ணு – லட்சுமி, பிரம்மன் – சரவஸ்வதி கணவன் – மனைவி என கதை சொல்லவேண்டும். முருகனுக்கு எதற்கு இரண்டு மனைவி? சிவன் விஷ்ணுவையும், பிரம்மனையும் திருமணம் செய்துக்கொண்டு குழந்தைகளாக பெற்றுக்கொண்டுயிருக்கலாம்மே?

இந்த 60 சமஸ்கிருத ஆண்டுகளிலும் சாதி வர்ணம் பார்க்கப்பட்டுள்ளது என குற்றம் சாட்டுகிறார் கடவுள் சிலைகளை உருவாக்கும் தோழர் சிற்பிராஜன். இந்த 60 சமஸ்கிருத பெயர்களின் தமிழ் அர்த்தம் என சிலவற்றை குறிப்பிட்டுள்ளார். விகாரி = அசிங்கமான, சார்வரி = பலாத்கார எழுச்சி, பிலவ = நச்சுத் துளை, குரோதி = வன்மம் பிடித்தவள் என்கிறது. இப்படி ஒவ்வொரு பெயருக்கும் இப்படி அசிங்கமான அர்த்தம் கொண்டதாகவே இருக்கிறது.

இல்லையில்லை இதுதான் தமிழ் ஆண்டுகளுக்கான பெயர்கள் என வாதாடுபவர்களுக்கு அவரே மற்றொரு கேள்வியை எழுப்புகிறார். சார்வரி, விகாரி, பிலவ, குரோதி என்கிற ஆண்டு பெயர்கள் தெலுங்கில், கன்னடத்தில், சமஸ்கிருதத்தில், ஹிந்தியில், சிங்களத்தில் எப்படி இருக்கு? அப்படி இருக்கும் பெயர்கள் எப்படி தமிழ் ஆண்டுகளின் பெயர்களாக இருக்க முடியும் எனக்கேட்கிறார்?

இந்த பெயர்களில் மட்டும்மல்ல சமஸ்கிருத பண்டிட்டுகள் எனச்சொல்லிக்கொள்ளும் சங்கிகள் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு எழுதியதாக சொல்லப்படும் மகாபாரதம், ராமாயணம் போன்றவை இப்படி லாஜிக் இல்லாத கதைகளாகவே உள்ளன. ராமாயண கதை என்பது 50 விதமானதாக உலகத்தில் உள்ளது. சீதையை ராவணன் கடத்தினான் என்கிறது ஒரு ராமாயணம். மற்றொரு ராமாயணம் சீதையை ராவணன் காப்பாற்றினான் என்கிறது, மற்றொரு ராமாயணம் பெண் பித்தனான ராமனை தசரதன் காட்டுக்கு அனுப்பினான் என்கிறது. வால்மீகியின் ராமாயண நாயகன் ராமன் அசைவம் சாப்பிடும் பட்சி என்கிறார். அவரைப்பார்த்து காப்பியடித்த கம்பரின் ராமாயணம் ராமனை சைவ பட்சி என்கிறது. வால்மீகி, சீதை கற்பை நிரூபிக்க தீயில் இறக்கினான் என்கிறான், கம்பன், தன் கற்பை நிரூபிக்க சீதையே தீயில் இறங்கினாள் என்கிறான். அதேபோல் மகாபாரத நாயகி பாஞ்சாலி, கர்ணனின் காதலி என்கிறது. மற்றொரு மகாபாரதம் பழிவாங்கவே ஐவரை திருமணம் செய்தால் என்கிறது.

இப்படி ஆரியர்கள் எழுதிய நூல்களின் பித்தாலட்டங்களை, ஆன்மீகம் என்கிற பெயரில் சாஸ்திரம், சம்பிரதாயம், மந்திரங்களை உருவாக்கி மக்களை அடிமையாக்கியுள்ளார்கள் என்பதை படித்துணர்ந்தபின்பே ஒருநூற்றாண்டுக்கு முன்பு தமிழ் ஆண்டுகள் என தனியே பெயர்களை, ஆண்டுகளை உருவாக்கினார்கள் தமிழறிஞர்கள். 1921ஆம் ஆண்டு தமிழறிஞர் மறைமலை அடிகளார் தமிழ் இலக்கிய நூல்கள், தொல்காப்பியத்தின் பாடல்களின் அடிப்படையில் ஆவணி என இருந்த தமிழ் புத்தாண்டு என்பது பின்பே சித்திரை என மாற்றப்பட்டது. அதனை தை மாதம் என மாற்ற வேண்டும், அதுதான் காலக்கணிப்பின் படி சரியானது என ஆய்வு செய்து அறிவித்த தமிழறிஞர்களின் கருத்து. அதேபோல் திருவள்ளுவர் ஆண்டு என்கிற ஒன்றை உருவாக்கினார்.

1981ஆம் ஆண்டு மதுரையில் நடைபெற்ற உலகதமிழ் மாநட்டில்தான் தமிழறிஞர்கள் ஒன்றுக்கூடி தமிழ்புத்தாண்டு என்பது தை முதலாம் தேதி என அறிவித்தார்கள். அப்போதைய தமிழ்நாடு அரசாங்கம் திருவள்ளுவர் ஆண்டை ஏற்றுக்கொண்டது. தமிழர்களின் புத்தாண்டு என்பதை சித்திரை என்பதை தை என மாற்றவில்லை.

புரட்சிக் கவிஞர் பாரதிதாசன், "நித்திரையில் இருக்கும் தமிழா! சித்திரையல்ல உனக்குத் தமிழ்ப் புத்தாண்டு அண்டிப் பிழைக்கவந்த ஆரியர் கூட்டம் காட்டியதே அறிவுக் கொவ்வாத அறுபது ஆண்டுகள் தரணியாண்ட தமிழருக்கு தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு!" என்றார்.

2008ல் கலைஞர் சட்டம்மியற்றி தை 1 தமிழ்புத்தாண்டு என்றார். பின்னர் ஆட்சிக்கு வந்த பாப்பாத்தி என தன்னை சட்டமன்றத்தில் பிரகடனப்படுத்திய மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சித்திரை என மாற்றினார்.

இயற்கை வாழ்முறைப்படி வெய்யில் காலத்தை யாரும் ஆண்டின் தொடக்க நாளாக அமைக்கமாட்டார்கள். தை மாதம் என்பது மழைக்காலம் ஓய்ந்து விவசாயம் செய்ய ஏற்ற மாதம். தமிழர்கள் காலத்தை இயற்கையை ஆதாரமாகக் கொண்டு பிரித்தார்கள். ஒரு நாளை..... 

 
வைகறை
காலை
நண்பகல்
எற்பாடு
மாலை
யாமம் என பிரித்து வைத்திருந்தார்கள். அந்த ஆறு சிறு பொழுதுகளின் தொகுப்பையும் அறுபது நாழிகைகளாகப் பகுத்துக் கணக்கிட்டார்கள். 

ஒரு நாழிகை என்பது தற்போதைய 24 நிமிடங்களைக் கொண்டதாகும். ஒரு நாளின் அறுபது நாழிகைகள் என்பன தற்போதைய கணக்கீடான 1440 நிமிடங்களோடு, அதாவது 24 மணிநேரத்தோடு அச்சாகப் பொருந்துகின்றன.

1 நாழிகை - 24 நிமிடங்கள்
60 நாழிகை - 1440 நிமிடங்கள்
இதனை இன்றைய கிருத்தவ கணக்கீட்டின் படி பார்த்தால்
1440 நிமிடங்கள் - 24 மணித்தியாலங்கள்
24 மணித்தியாலங்கள் - 1 நாள்

பின்னாளில் வந்த ஆரியர்கள் ஓர் ஆண்டை நான்கு பருவங்களாக மட்டும்தான் வகுத்தார்கள். ஆனால் பண்டைக்காலத் தமிழர்களோ, தமக்குரிய ஆண்டை, அந்த ஆண்டுக்குரிய தமது வாழ்வை, ஆறு பருவங்களாக வகுத்திருந்தார்கள்.

1. இளவேனில் - (தை---மாசி)
2. முதுவேனில் - (பங்குனி - சித்திரை)
3. கார் - (வைகாசி - ஆனி)
4. கூதிர் - (ஆடி - ஆவணி)
5. முன்பனி (புரட்டாசி - ஐப்பசி)
6. பின்பனி (கார்த்திகை - மார்கழி)

மேற்கண்ட மாதக்கணக்கில் இளவேனில் என்பது சித்திரை-  வைகாசி மாதங்களுக்கு உரிய காலம் என சிலர் வாதிடுகிறார்கள். ஆனால் அது முற்றிலும் தவறு.

சித்திரை மாதத்தில் (வேனில்) வெயில் தன் அதிகபட்ச உக்கிரத்தை அடைவதால் அதை முதுவேனில் என்றும் தைமாதத்தில் தொடங்கும் வெயிலை 'இளவேனில்' எனவும் பண்டைத் தமிழர்கள் அழகாகப் பகுத்திருந்தார்கள்.

காலத்தை, அறுபது நாழிகைகளாகவும், ஆறு சிறு பொழுதுகளாகவும், ஆறு பருவங்களாகவும் பகுத்த பண்டைத் தமிழன் தன்னுடைய புத்தாண்டு வாழ்வை இளவேனிற் காலத்தில்தான் (தை) தொடங்குகின்றான். பண்பாட்டுப் பெருமைகொண்ட மற்றைய பல இனத்தவர்களும், தங்களுடைய புத்தாண்டு வாழ்வை, தங்களுடைய இளவேனிற் காலங்களில்தான் ஆரம்பிக்கின்றார்கள்.

தமிழர்கள் மட்டுமல்ல, சீனர்களும், ஜப்பானியர்களும், கொரியர்களும், மஞ்சூரியர்களும் என, பல கோடி இன மக்கள் - தொன்மையான பண்பாட்டு வாழ்வினைக் கொண்ட பெருமை வாய்ந்த மக்கள்- தங்களுடைய இளவேனிற் காலத்தையே தமது புத்தாண்டாகக் கொண்டாடி வருகின்றார்கள்.

தமிழர்கள்  நாம் மட்டும் ஆரியப் பழக்கத்துக்கு மாறிவிட்டோம்! இடையில் வந்த இடைச்செருகலால் வந்த வினை இது. நம் இளவேனில் காலம் தை மாதம் தான். அதனால்தான் தை முதல் நாளைத் தமிழ்ப் புத்தாண்டு என்கிறோம். தமிழர்க்கு எதிரான சக்திகளின் சூழ்ச்சிக்குப் பலியாகாமல், தமிழின், தமிழரின் பெருமையைப் பாதுகாக்கும் பொருட்டுத் தமிழர் யாவரும் தை முதல் நாளையே தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடி மகிழ்வோம்.