திங்கள், ஏப்ரல் 18, 2022

டீ தான் குடிச்சிங்களா சார்? ஏன் இப்படி பேசறிங்க?

 

மக்களாள் தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்களால் சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட நீட் உட்பட 19 மசோதாக்களில் கையெழுத்திடாமலும், ஒன்றிய அரசுக்கு அனுப்ப வேண்டிய மசோதாக்களை அனுப்பாமலும் தன்னிடம்மே வைத்துக்கொண்டு சட்டவிதிகளை மீறிக்கொண்டு இருக்கிறார் தமிழ்நாட்டின் கவர்னரான ரவி.

கவர்னர் மாளிகையில் வழங்கப்பட்ட டீ பார்டிக்கு தமிழக முதல்வர், அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், திமுக உட்பட அனைத்து கட்சியினருக்கும் கவர்னர் அழைப்பு விடுத்துயிருந்தார். முதல்வர், திமுக, இடதுசாரிகள், விசிக, மமக போன்ற கட்சிகள் மக்களாச்சியை மதிக்காத கவர்னரின் டீ பார்டியை புறக்கணிக்கிறோம் எனச்சொல்லி புறக்கணித்துவிட்டார்கள்.

கவர்னர் வீட்டு காவல்காரர்களான ஓசியில் சோறு போடுகிறார்கள் என்றதும் ஓடிப்போய் முதல் பந்தியில் அமரும் பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை உட்பட அதன் தலைவர்கள், பாஜகவின் கொத்தடிமைகளான அதிமுக, பாமக நிர்வாகிகளும் கலந்துக்கொண்டு டீ குடித்துவிட்டு கும்மாளம்மிட்டுவிட்டு வந்துள்ளார்கள்.

டீ குடிச்சாரோ அல்லது வேறு ஏதாவது குடிச்சாரா எனத்தெரியவில்லை. அண்ணாமலை. டீ செலவு மிச்சம் என உளறியுள்ளார். நாடுயிருக்கும் நிலைக்கு சுயமரியாதையுடன் டீ பார்டியில் கலந்துக்கொள்ளாமல் செலவை குறைத்துள்ளனர் ஆளும்கட்சியினரும், அதன் கூட்டணி கட்சியினரும். ஆனால் பாஜக அண்ணாமலை வாரம் இரண்டுமுறை கவர்னர் மாளிகைக்கு சென்று விருந்து சாப்பிட்டுவிட்டு வருகிறார்.

அண்ணாமலைக்கு தெரியாததில்லை. கவர்னர் அவர் பாக்கெட்டில் இருந்து பணத்தை எடுத்து டீ க்கோ, உங்கள் விருந்துக்கோ பணம் தரவில்லை. தமிழ்நாட்டு மக்களின் பணம். அவன் கட்டிய வரியில் இருந்து சம்பளம் வாங்குபவரே கவர்னர். தமிழ்நாட்டு மக்களின் பணத்தில் ஓசியில் டீ குடித்தும், விருந்து சாப்பிட்டுவிட்டு நக்கல் பேச்சு பேசியுள்ளார் அண்ணாமலை.

டீ பார்டியை முதலமைச்சர் ஸ்டாலின் புறக்கணித்ததும், கவர்னர் தரவேண்டிய மரியாதையை தரவில்லை என கூச்சல் போடுகிறார்கள் பாஜக சங்கிகளும், அதன் எடுபிடிகளும்.

கவர்னர் பதவிக்கான மரியாதை தமிழ்நாட்டில் போய் பல ஆண்டுகளாகிவிட்டது.

தள்ளாடும் வயதில் பதவி வெறிக்கொண்ட அரசியல்வாதிகளுக்கும், உட்கட்சி போட்டியால் அரசியலில் இருந்து ஒதுக்கவேண்டியவர்களுக்கும், நீதித்துறையில், காவல்துறையில் ஒன்றிய ஆட்சியாளர்களுக்கு விசுவாசமாக இருந்தவர்களுக்கு தரப்படுவதாக கவர்னர் பதவி மாறிவிட்டது.  

கேரளா ஐ.பி.எஸ் கேடர் அதிகாரி மத்தியரசு பணியில் பணியாற்றி ஓய்வு பெற்ற ரவி க்கு கவர்னர் பதவி பாஜகவால் தரப்பட்டது என்றால் அவர் கடந்தகாலத்தில் அந்த கட்சிக்கு எவ்வளவு விசுவாசமாக இருந்துயிருப்பார் என்பதை யூகித்துக்கொள்ளுங்கள்.

தமிழ்நாட்டின் கவர்னராக இருந்த சுந்தர்லால் குரானா, பீஷ்மநாராயணன்சிங், சென்னாரெட்டி, பாத்திமாபீவி, வித்தியாசாகர் ராவ், புரோகித் போன்றவர்கள் அந்த பதவிக்கான மாண்மை நாசமாக்கிவிட்டு போய்விட்டார்கள். ஒன்றிய அரசின் ஏஜென்ட்டுக்கு எதற்கு இவ்வளவு மரியாதை தரவேண்டும் என்கிற கேள்வியை ஏறத்தாழ இப்போது எல்லா மாநிலத்தை ஆளும் மாநிலகட்சிகளும் கேட்கத்துவங்கிவிட்டன.

எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்தபோது, வெளிநாட்டு சிகிச்சைக்கு அனுமதி பெற நடிகைகளை அனுப்பி அனுமதி பெற்றார்கள் என்கிற விமர்சனம் உண்டு. அதேவழியில் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது பக்கத்துக்கு மாநில நடிகை கம் அரசியல்வாதியை அனுப்பி குறிப்பிட்டவருக்கு அனுப்பி சந்தோஷப்படுத்தினார்கள் என்பவர்களும் உண்டு.

2002ல் முதல்வர் பதவி ஏற்க முடியாத ஜெயலலிதாவை சட்டவிதிகளை மீறி முதலமைச்சராக பதவி பிரமாணம் செய்துவைத்தார் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்த கவர்னர் பாத்திமாபீவி.

2011ல் ஆந்திரா அரசியல்வாதியான காங்கிரஸ்காரர் ரோசய்யா கவர்னராக நியமிக்கப்பட்டார். ஜெயலலிதா முதல்வரானதும் அவரின் அடிமையாகவே மாறினார். 2014ல் பாஜக ஆட்சிக்கு வந்தபின்பு பலமாநில கவர்னர்கள் மாற்றப்பட்டபோதும் தமிழ்நாடு கவர்னர் ரோசய்யாவை 2016 வரை மாற்றவில்லை.

2016ல் அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா படுத்தபடுக்கையாக இருந்தபோது கவர்னர் வித்தியாசாகர்ராவ், முதலமைச்சர் மர்மமான முறையில் தனியார் மருத்துவமனையில் அட்மிட்டாகிறார். கவர்னர் சட்டவிதிகளின்படி பணிகளை செய்யாமல் சட்டவிதிகளை காற்றில் பறக்கவிட்டதால்தான் இப்போதும் ஜெயலலிதா மரணத்தின் மர்மம் வெளிவராமலே உள்ளது. அதேநபர் அதிமுக உடைந்து எடப்பாடி அணி – ஓ.பி.எஸ் அணி இரண்டாக செயல்பட்டபோது, இருவரையும் பொதுமேடையிலேயே இருவரும் ஒன்றாக இருங்கள் என ஆலமரத்தடி பஞ்சாயத்து செய்தவர்தான் கவர்னர்.

அதன்பின் கவர்னராக வந்த பன்வாரிலால், பாஜகவின் அடிமைகளாக இருந்த அதிமுக மற்றும் எடப்பாடியை நம்பாமல் கவர்னர் மாளிகை ஆட்சி செய்ய துவங்கியதையும் மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருந்தார்கள். அதிமுகவின் உட்கட்சி சண்டையில் பஞ்சாயத்து செய்தபடி இருந்தார்கள்.

கவர்னருக்கான மாண்பை மறந்துவிட்டு, அரசியல் செய்து தமிழ்நாட்டில் விமர்சனத்துக்கு ஆளான கவர்னர்கள் இவர்கள்.

திமுக ஆட்சி அமைந்து ஸ்டாலின் முதல்வரானதும், தமிழகத்தில் தங்களது ஆட்சியை நடத்த பாஜக முடிவு செய்தே ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ் அதிகாரியான ஆர்.எஸ்.எஸ் அடிமையும், சாதிய பாசம் அதிகம் கொண்ட ரவியை தமிழ்நாடு கவர்னராக்கியது. போலிஸ் மூளை தமிழக முதலமைச்சரை அடக்கி ஆளும் என்கிற பாஜக, ஆர்.எஸ்.எஸ் நம்பிக்கையில் அனுப்பிவைத்துள்ளது. ஆர்.எஸ்.எஸ் என அவர்மீது நாம் குற்றச்சாட்டு வைக்ககாரணம் அவரின் செயல்பாடுகள் அனைத்தும் ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தப்படியே உள்ளன.

தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா, ஊழல் ராணியாக வலம்வந்தவர் மீது சு.சாமி தந்த புகார்களின் அடிப்படையில் ஊழல் வழக்கு தொடுக்க அனுமதியளிக்க முயன்றார் கவர்னர் சென்னாரெட்டி. அடுத்த சிலநாட்களில் கவர்னர் என்னிடம் தவறாக நடந்துக்கொள்ள முயன்றார் என அப்போதே மீ டூ புகாரை எழுப்பி அவரது இமேஜ்ஜை காலி செய்தார். தமிழகத்தில் போகும்மிடங்களில் எல்லாம் அதிமுகவினரால் கவர்னர் அவமானப்படுத்தப்பட்டார்.

2018களில் கவர்னர் பன்வாரிலால் புரோகித், முதல்வர் பதவியில் இருந்த எடப்பாடிக்கு போட்டியாக தனிஆட்சி நடத்த முயன்று தமிழகத்தில் சுற்றுப்பயணம் செய்தபோது நிர்மலாதேவி என்கிற பேராசிரியரை கொண்டு அவரை முடக்கினார்கள்.

அப்படிப்பட்ட முதல்வராக ஸ்டாலின் இல்லாமல் கவர்னருக்கு உரிய மரியாதையை தருபவராக, சட்டவிதிகளை மதிப்பவரால் இருப்பதால் முதலமைச்சரும், திமுகவினரும், தமிழ்நாட்டு மக்களும் மொக்கை என நினைத்துக்கொண்டு இருக்கிறார்போல.

ஒன்றியத்தில் பிரதமர் மோடியின் அதிகாரம் இருக்கும்வரைதான் இவர்களின் ஆட்டம்மெல்லாம். அதிகாரத்திலிருந்து பாஜக என்கிற கட்சி விரட்டப்படும்போது, பதவியின் மாண்பை மறந்து சவார்கர் பரம்பரையாக மாறிவிடுவார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக