ஞாயிறு, நவம்பர் 15, 2015

தமிழகம் தத்தளிக்க நீ தான் காரணம்.






தமிழகம் முழுவதும் தொடர்ச்சியாக கடந்த 10 நாட்களாக மழை பெய்கிறது. இன்னும் சில தினங்களுக்கு மழை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தின் தலைநகரம் சென்னை மழை நீரால் மிதக்கின்றன. சென்னை மட்டும்மல்ல தமிழகத்தின் பல மாநகரங்கள், நகரங்கள் தத்தளிக்கின்றன. பேய் மழை பெழிகிறது என்கிறார்கள் இணையத்தில் பொழுதை கழிப்பவர்களும், நகரவாசிகளும். அது உண்மையா என்பது கிராமத்தில் வசிப்பவர்களுக்கு மட்டும்மே தெரியும் பெய்வது பேய் மழையல்ல குறைவான மழையென்பது.

தமிழகத்தில் தோராயமாக 20 ஆயிரம் ஏரிகள் உள்ளன. இப்போது பெய்த மழையில் 10 சதவித ஏரிகள் கூட நிரம்பவில்லை. இதிலேயே தெரிந்துக்கொள்ளலாம் மழை எந்தளவுக்கு பெய்துள்ளது என்பதை. குறைந்த மழை பெய்கிறது பின் ஏன் மழை நீர் வீடுகளுக்குள் வருகிறது, சாலைகளில் தேங்குகிறதே என கேட்கலாம். பதில் நமக்கே தெரியும்.

முன்பெல்லாம் இயற்கையை ஆராய்ந்தே நகரங்கள், கிராமங்கள் உருவாக்கப்பட்டன. மழை பெய்தாலும் அந்த நீர் குளம், ஏரி, ஆறு, கால்வாயில் போய் கலக்கும் வகையில் திட்டமிடப்பட்டு குடியிருப்புகள் உருவாக்கப்பட்டது ஒருக்காலத்தில். அந்த திட்டமிடலை கடந்த 20 ஆண்டுகளாக பணம்மே குறிக்கோளாய் கொண்டுள்ள ரியல் எஸ்டேட் அதிபர்கள் மற்றும் அவர்களோடு சேர்ந்த மக்கள் உடைத்துவிட்டார்கள் என்பதே உண்மை.

புதியதாக ஒரு குடியிருப்பு உருவாக்கப்படும் போது நீர் கால்வாய் ரொம்ப முக்கியம். மழைக்காலங்களில் தெருக்களில் வரும் நீர் கால்வாய் வழியாக ஏரிக்கோ, குளத்துக்கோ நீர் போய் சேரும் வகையில் குடியிருப்புகள் அமைக்கப்பட வேண்டும். அதை இப்போது புற்றீசல் போல் உருவாகியுள்ள ரியல்எஸ்டேட் அதிபர்களும் செய்வதில்லை. குடியிருப்புக்கு அனுமதி தரும் அரசு இயந்திரம் அதை கண்டுக்கொள்வதில்லை.

அரசாங்கம்மே ஏரிகளுக்குள் மருத்துவகல்லூரிகளை, பேருந்து நிலையங்களை கட்டி நீர் வராமல் செய்துவிட்டது. மழை காலங்களில் அந்த நீர் எங்கு செல்லும் என்ற யோசனை அரசியல்வாதிகளுக்கு தான் வரவில்லை. அதிகாரிகளுக்கு கூட வராமல் போனது எப்படி என்பது தான் பெரும் கேள்விக்குறி.

அரசியல்வாதிகள் அப்படி செய்வதை கண்டு ரியல் எஸ்டேட் அதிபர்களும் நீராதரங்களை ஆக்ரமித்தார்கள். ரியல்எஸ்டேட் அதிபர்கள் பெரும்பாலும் அரசியல்வாதியாக, அரசியல்வாதி ஆதரவு பெற்றவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் அதிகாரிகளுக்கு லஞ்சம் தந்து ஏரிகள், குளங்களை நிரவி பிளாட் போட்டார்கள். அந்த மனைக்கு செல்ல நீர்கால்வாய்கள் மீது மண் கொட்டி நிரவி பாதையமைத்தார்கள்.

ரியல்எஸ்டேட் அதிபர்களின் பேராசை, அரச இயந்திரத்தின் பணத்தாசை, மக்களின் அலட்சியம் போன்றவற்றால் கடந்த 20 ஆண்டுகளாக நீர் செல்லும் கால்வாய்கள் படிப்படியாக இப்படித்தான் ஆக்ரமிக்கப்பட்டுவிட்டன.

அப்படி ஆக்ரமிக்கப்பட்ட இடங்களில் மனை வாங்குகிறார்கள். உழைத்த பணத்தில் வீட்டு மனை வாங்கும் மக்கள், அது சரியான இடம் தானா?, வீடு கட்டினால் மழை நீர், கழிவு நீர் எங்கு போகும் என பார்த்து வாங்குவதில்லை. விளம்பரங்களை கண்டு மயங்கி ஏமாந்து இடம் வாங்கி, வீடு கட்டி குடிபோகிறார்கள். மழைக்காலங்களில் நீர் அப்படியே தேங்குகிறது. இதனால் புதிய குடியிருப்புகளில் வீடு கட்டியவனுக்கும் பிரச்சனை. பழைய குடியிருப்புகளில் வீடு கட்டி வாழ்பவனுக்கும் பிரச்சனை.




இப்படியாகிவிட்டதே, இது எனக்கு தெரியாது அரசாங்கம் தான் செய்ய வேண்டும், கண்காணிக்க வேண்டும் என சொல்வது முட்டாள் தனமானது. பணம் போடும் நாம் தான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

அதைவிட முக்கியம் நாம் நமக்காக மட்டும் வாழாமல் சமூகத்துக்காக வாழ வேண்டும். ஒரு சமூக பிரச்சனையின் போது வேடிக்கை பார்த்தால் நமும் அந்த பிரச்சனையின் மற்றொரு வடிவில் வந்து சிக்குவோம் என்பதை மக்கள் உணரவேண்டும். 


ஒரு கிராமத்தில் அல்லது நகரத்தில் ஏரிகள், குளங்கள், வழிப்பாதைகள் அதிகாரம்மிக்கவர்கள் ஆக்ரமிக்கும் போது நமக்கேன் வம்பு என பயந்துக்கொண்டு ஒதுங்கி சென்று வேடிக்கை பார்க்கும் மக்களாக இல்லாமல் கேள்வி கேட்க முன்வர வேண்டும். ஆனால் அதை பெரும்பான்மை மக்கள் செய்வதில்லை. அதிலும் இந்த நடுத்தர மக்கள் சுத்த மோசம். ஒரு கிராமத்திலோ, நகரத்திலோ ஏரி, குளம் ஆக்ரமிக்கப்படுவது அனைவருக்கும் தெரியும். வெகு சிலரை தவிர மற்றவர்கள் கேட்பதேயில்லை. ஆக்ரமிக்கப்பட்ட ஏரி, குளம் எதற்கு வெட்டப்படுகிறது. மழைகாலங்களில் நீரை சேமித்து குடிநீராக, விவசாயத்திற்காக பயன்படுத்த தான். அது ஆக்ரமிக்கப்படும்போது அந்த நீர் நம் வீட்டுக்குள் தான் வரும்.

நமது வாழ்க்கைமுறை மற்றும் இயற்கை என்பது சங்கிலி தொடர். அது அறுந்தால் எல்லா விதமான தொல்லைகளையும் எதிர்க்கொண்டு தான் ஆக வேண்டும். அந்த சங்கிலி தொடரை அறுப்பது மழையோ, காற்றோ, பூமியோ கிடையாது. மனித சமூகமான நாம் தான்.

கோடைக்காலத்தில் ஏரி, குளம், நீர்கால்வாய்களை அரசாங்கம் தூர் வார வேண்டும்மே ஏன் செய்யவில்லை?, செய்திருந்தால் மழை நீர் அங்கு போயிருக்கும் வீடுகளுக்குள் தண்ணீர் வந்திருக்காது, ரோடு சரியாக இருந்திருக்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை என கேட்கிறார்கள்.

நீர் கால்வாய் ஆக்ரமித்து கட்டிடம் கட்டியது நமது தவறு. கட்டப்பட்ட கட்டிடத்தை இடிக்க அரசு இயந்திரம் வந்தால் கட்டிட உரிமையாளருக்கு சாதகமாக நூறு பேர் சாலை மறியல் செய்வது யார்?, பாதிக்கப்படுவது அவர்கள் அவர்களுக்கே இல்லாத அக்கறை நமக்கு எதற்கு என சம்திங் வாங்கிக்கொண்டு அதிகாரிகள் போய்விடுகிறார்கள்.

இல்லாதவன் பொறம்போக்கில், கிடைக்கும் இடத்தில் வீடு கட்டுகிறான் என்கிறார்கள். இல்லாதவர்கள் வீடு குடிசை போட்டுக்கொள்கிறார்கள் நிச்சயம் இதனை வரவேற்க்கிறேன். குடிசை வீட்டை ஓட்டு வீடாக, மாடி வீடாக மாற்றி அதே இடத்தில் கட்டுவது எதனால்?,  வீடு கட்டும் அளவுக்கு பணம் வரும்போது அந்தப்பணத்தில் குறைந்த விலையில் ஒரு நல்ல இடத்தில் வீட்டு மனை வாங்கி கட்டலாம்மே கட்டுவதில்லை. பணம் கொடுத்தால் அதிகாரி பட்டா தருவான், அரசியல்வாதி செய்து தருவான் என கட்டுவது, பட்டா வாங்குவது. இயற்கை தன் இயல்பை காட்டும்போது குய்யோ, முய்யோ என கத்துவது எந்த விதத்தில் நியாயம்.

அரசியல்வாதி மாறமாட்டான், அதிகாரிகள் மாறமாட்டார்கள், அரசாங்கம் நடவடிக்கை எடுக்காது. நாங்கள் மட்டும் மாற வேண்டும்மா என கேட்பது ?.

அவர்கள் மாறமாட்டார்கள். நாம் நம்மில்ல் இருந்து மாற்றத்தை துவங்க வேண்டும். நாம் மாறினால் அந்த பயம்மே அதிகாரிகளை, ஆட்சியாளர்களை, அரசியல்வாதிகளை மாற்றும், இல்லையேல் நம்மால் அவர்களை மாற்ற முடியும்.


இங்கு எல்லாம்மே தவறு நம்மிடம்மிருந்து தான் துவங்குகிறது. இதைச்சொன்னால் யாரும் ஒப்புக்கொள்ளமாட்டீர்கள் என்பது தெரியும். இருந்தும் மனதில் இருப்பதை சொல்வது என் உரிமை.

அரசியல்வாதியாகிவிட்ட பாண்டே. ( நீ எம்.பியாகிடுவ தல......)





தந்தி தொலைக்காட்சியின் செய்தி ஆசிரியர் ரங்கராஜ்பாண்டே. அந்த தொலைக்காட்சியில் வரும் கேள்விக்கென்ன பதில்?, ஆயுத எழுத்து என்ற நிகழ்ச்சிகளில் நேர்காணல், விவாதம் நடத்துகிறார்கள். இந்த நிகழ்ச்சிகளில் ரங்கராஜ்பாண்டே நெறியாளராக கலந்துக்கொண்டு நிகழ்ச்சியை நடத்துவது பற்றி அவர் மீது பலவிதமான விமர்சனங்கள் எழுகின்றன, கடுமையான விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன. சமீபகாலங்களில் தமிழகத்தில் ஒரு ஊடகவியாளர் இவ்வளவு தொடர் விமர்சனத்துக்கு ஆளாகியிருப்பாரா என்பது பெரும் கேள்விக்குறியே.

ஒரு ஊடகவியாளன் என்பவன் நான் அறிந்தவரை எப்படி இருக்க வேண்டும் என்றால். ஊடகவியாளனுக்கு ஒரு சார்புயிருக்கலாம். அந்த சார்பை தன் தொழிலில் காட்டக்கூடாது. மோடியை பிடிக்காமல் இருக்கலாம் ஆனால் மோடியிடம் கேள்வி கேட்கும் போது அவரை எதிரியாக நினைத்து கேள்விகள் கேட்ககூடாது. மக்கள் என்ன நினைக்கிறார்கள், அவரது எதிர்ப்பாளர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை தான் கேள்வியாக உருவாக்க வேண்டும். நாம் நம் மனதில் உள்ள குரோதத்தை, வெறுப்பை கேள்வியாக்ககூடாது. எழுதுகோலை கையில் எடுக்கும்போது நமக்கு அவன் நண்பன், எதிரி என்ற கண்ணோட்டத்தை விட்டுவிட்டு உண்மையென்ன என்பதையே செய்தியாக்க வேண்டும் என்பதே நான் அறிந்தது. இதை பாண்டேவுக்கு யாரும் கற்றுதரவில்லை என்பதே அவரது பல நேர்காணல்களை கண்ட வரை நான் கண்டது. அதனால் தான் பல விமர்சனங்களுக்கு ஆளாகியுள்ளார். இதை உணர்ந்தே விமர்சனங்கள் எல்லை மீறி போவதால் அதற்கு விளக்கம் அளிக்கும் விதமாக பாண்டேவிடம் கேள்வி கேளுங்கள் என ஒரு தலைப்பை உருவாக்கி அதனை திராவிடத்தின் போர்வாள் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்களிடம் கேள்வி கேட்கும் பொறுப்பை ஒப்படைத்தார்.

நான் பிறந்தது, வளர்ந்தது, படித்தவது, பணியாற்றியது எல்லாம்மே தமிழகம் தான். பாண்டே என்பது சுதந்திரபோராட்டத்துக்கு வித்திட்ட பாண்டே என்பவரின் நினைவாக அவரது பெயரை தன் பெயருடன் வைத்துக்கொண்டதாக கூறுகிறார். பாண்டே என்பது சாதிப்பெயர் என்பதை ஏனோ லாவகமாக மறைக்கிறார். இதனை கண்டபோது அரசியல்வாதியாக போல் தான் ரங்கராஜ்பாண்டே இனி கேள்விகளுக்கு பதில் சொல்வார் என்பதை யூகிக்கமுடிந்தது. அந்த யூகம் சரி என்பதை அடுத்தடுத்த கேள்வி பதில்கள் நிரூபித்தன.

நிகழ்ச்சியின் ஆரம்பத்திலேயே ஊடகத்துறையில் எனக்கு முன்னோடி என யாரும்மில்லை, எல்லாம்மே நானே கற்றுக்கொண்டது என்கிறார். ஒருவேளை இருந்திருந்தால் அவர்கள் பாண்டேவுக்கு கற்று தந்திருப்பார்கள் என நம்பலாம்.

கேள்வி கேட்கும் போது அறம் சார்ந்துயில்லையே என பேரா.சுப.வீ அவர்கள் பாண்டே விடம் கேள்வி எழுப்பியது, என் முன் இருப்பவர் திமுகவாக இருந்தால் நான் அதிமுகவாக இருக்கிறேன் என்கிறார். பல விவாதங்களில் நான் கண்டவரை, அதிமுகவினரிடம் கேள்வி எழுப்பும்போது பாண்டே அதிமுகவினராக மாறுவது எதனால்?, இந்துத்துவா பற்றி கேள்வி எழுப்பும்போது அவர் இந்துத்துவாவாதியாக மாறி கேள்வி எழுப்புவது எதனால் ?, இது ஒரு சாதாரண பார்வையாளனாக பார்க்கும் நேயர்க்கு தெரியாது. அரசியல் கற்றவர்களுக்கு இது நன்றாகவே தெரியும், நுணக்கமாக ஆராயும்போது தெரிகிறது.

ஒரு கேள்விக்கான பதிலில், ஒருவன் தவறு செய்வது இயல்பு, அந்த தவறை திருத்திக்கொள்வது சிறந்தது என்கிறார் சுப.வீ. தவறு செய்திருப்பதாக குறிப்பிட்டால் திருத்திக்கொள்வேன் என்கிறார். பாராட்ட வேண்டிய ஒன்று இனி தன்னை திருத்திக்கொள்வார் என நினைத்துக்கொண்டு நிகழ்ச்சியை காண்டபோது ஜெ மற்றும் சசிகலா மீதான சொத்து குவிப்பு வழக்கு பற்றி செய்தி வாசிக்கும்போதும், விவாதம் நடத்தும் போது நீங்கள் சொத்து வழக்கு என குறிப்பிட்டு தவறு செய்கிறீர்கள் இது நியாயமா என கேள்வி கேட்டதோடு, நீங்கள் சொல்வதில் பொருள் தவறு இருக்கிறதே என ஆதாரத்தோடு குறிப்பிடுகிறார். ஆங்கில பத்திரிக்கை செய்கிறது, அதனால் நான் செய்கிறேன், அவனை யாரும் கேள்வி எழுப்புவதில்லை, என்னிடம் ஏன் கேட்கிறீர்கள் என கேட்கிறார். தவறு என சுட்டிக்காட்டியதை ஏற்றுக்கொள்ளாமல் இனிமேல் அந்த தவறை தொடர்ந்து செய்வேன் என வெளிப்படையாக சொல்லி பெரியதாக சறுக்குகிறார் பாண்டே.
திராவிடர் கழகம் வீரமணி, இந்து முன்னணி ராமகோபாலனிடம் கேள்வி கேட்கும்போது நடந்துக்கொண்ட விதம் பற்றியும், நேர்காணலின்போது மற்றவர்களை பேசவிடாமல் நீங்களே பேசுவது தவறுயில்லையா என கேள்வி எழுப்பியபோது, வீரமணியின் விளக்கத்தை ஒளிபரப்பினோம்மே என விடப்பிடியாக நின்றதும், ராமகோபாலினிடம் அவரது சீடர் போல் கேள்வி கேட்டது சரியா என்ற கேள்விக்கு, அறியா வயசு என சமாளித்தது இருக்கிறதே அப்பப்பா ஒரு அரசியல்வாதியாக உயர்ந்து நிற்கிறார். 


இதுவரை ஆராய்ந்தது போதும். இந்த நிகழ்ச்சி முடிந்தபின் மனதில் தோன்றியது நேர்காணல், விவாதம் எப்படி நடத்த வேண்டும் என்பதை தந்தி தொலைக்காட்சி ஆசிரியர் ரங்கராஜ்பாண்டேவுக்கு பேரா.சுப.வீ அவர்கள் கற்று தந்துள்ளார்.

நெறியாளர் கேள்வி கேட்டுவிட்டு, கேள்விக்கு விருந்தினர் முழுமையாக பதில் சொல்லி முடிக்கும்முன் குறுக்கிடக்கூடாது என்ற தத்துவத்தின் அடிப்படையில் சுப.வீ  சிறந்த நெறியாளராக நடந்துக்கொண்டார். அதை பாண்டே உணர்ந்திருப்பார் என நம்பலாம்.

ஒரு அரசியல்வாதி தான் தன் மீதான தவறை பொதுத்தளத்தில் ஏற்றுக்கொள்வதில்லை. அதே நிலையை தான் பாண்டே இந்த நேர்காணலில் வெளிப்படுத்தி தானும் ஒரு அரசியல்வாதி என்பதை நிறுபித்தார்.

சமீபத்தில் மறைந்த ஆதித்தனார்க்கு கவர்னர் ஆசை இருந்தது எனச்சொல்வார்கள். அவருக்கு மட்டும்மல்ல அவரது தொலைக்காட்சி ஆசிரியருக்கு எம்.பி ஆசை இருக்கும் போல. நீ இப்படியே நிகழ்ச்சியை நடத்து தல. ஒரு நாளைக்கு எம்.பியாகிடுவ.