ஞாயிறு, நவம்பர் 15, 2015

அரசியல்வாதியாகிவிட்ட பாண்டே. ( நீ எம்.பியாகிடுவ தல......)

தந்தி தொலைக்காட்சியின் செய்தி ஆசிரியர் ரங்கராஜ்பாண்டே. அந்த தொலைக்காட்சியில் வரும் கேள்விக்கென்ன பதில்?, ஆயுத எழுத்து என்ற நிகழ்ச்சிகளில் நேர்காணல், விவாதம் நடத்துகிறார்கள். இந்த நிகழ்ச்சிகளில் ரங்கராஜ்பாண்டே நெறியாளராக கலந்துக்கொண்டு நிகழ்ச்சியை நடத்துவது பற்றி அவர் மீது பலவிதமான விமர்சனங்கள் எழுகின்றன, கடுமையான விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன. சமீபகாலங்களில் தமிழகத்தில் ஒரு ஊடகவியாளர் இவ்வளவு தொடர் விமர்சனத்துக்கு ஆளாகியிருப்பாரா என்பது பெரும் கேள்விக்குறியே.

ஒரு ஊடகவியாளன் என்பவன் நான் அறிந்தவரை எப்படி இருக்க வேண்டும் என்றால். ஊடகவியாளனுக்கு ஒரு சார்புயிருக்கலாம். அந்த சார்பை தன் தொழிலில் காட்டக்கூடாது. மோடியை பிடிக்காமல் இருக்கலாம் ஆனால் மோடியிடம் கேள்வி கேட்கும் போது அவரை எதிரியாக நினைத்து கேள்விகள் கேட்ககூடாது. மக்கள் என்ன நினைக்கிறார்கள், அவரது எதிர்ப்பாளர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை தான் கேள்வியாக உருவாக்க வேண்டும். நாம் நம் மனதில் உள்ள குரோதத்தை, வெறுப்பை கேள்வியாக்ககூடாது. எழுதுகோலை கையில் எடுக்கும்போது நமக்கு அவன் நண்பன், எதிரி என்ற கண்ணோட்டத்தை விட்டுவிட்டு உண்மையென்ன என்பதையே செய்தியாக்க வேண்டும் என்பதே நான் அறிந்தது. இதை பாண்டேவுக்கு யாரும் கற்றுதரவில்லை என்பதே அவரது பல நேர்காணல்களை கண்ட வரை நான் கண்டது. அதனால் தான் பல விமர்சனங்களுக்கு ஆளாகியுள்ளார். இதை உணர்ந்தே விமர்சனங்கள் எல்லை மீறி போவதால் அதற்கு விளக்கம் அளிக்கும் விதமாக பாண்டேவிடம் கேள்வி கேளுங்கள் என ஒரு தலைப்பை உருவாக்கி அதனை திராவிடத்தின் போர்வாள் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்களிடம் கேள்வி கேட்கும் பொறுப்பை ஒப்படைத்தார்.

நான் பிறந்தது, வளர்ந்தது, படித்தவது, பணியாற்றியது எல்லாம்மே தமிழகம் தான். பாண்டே என்பது சுதந்திரபோராட்டத்துக்கு வித்திட்ட பாண்டே என்பவரின் நினைவாக அவரது பெயரை தன் பெயருடன் வைத்துக்கொண்டதாக கூறுகிறார். பாண்டே என்பது சாதிப்பெயர் என்பதை ஏனோ லாவகமாக மறைக்கிறார். இதனை கண்டபோது அரசியல்வாதியாக போல் தான் ரங்கராஜ்பாண்டே இனி கேள்விகளுக்கு பதில் சொல்வார் என்பதை யூகிக்கமுடிந்தது. அந்த யூகம் சரி என்பதை அடுத்தடுத்த கேள்வி பதில்கள் நிரூபித்தன.

நிகழ்ச்சியின் ஆரம்பத்திலேயே ஊடகத்துறையில் எனக்கு முன்னோடி என யாரும்மில்லை, எல்லாம்மே நானே கற்றுக்கொண்டது என்கிறார். ஒருவேளை இருந்திருந்தால் அவர்கள் பாண்டேவுக்கு கற்று தந்திருப்பார்கள் என நம்பலாம்.

கேள்வி கேட்கும் போது அறம் சார்ந்துயில்லையே என பேரா.சுப.வீ அவர்கள் பாண்டே விடம் கேள்வி எழுப்பியது, என் முன் இருப்பவர் திமுகவாக இருந்தால் நான் அதிமுகவாக இருக்கிறேன் என்கிறார். பல விவாதங்களில் நான் கண்டவரை, அதிமுகவினரிடம் கேள்வி எழுப்பும்போது பாண்டே அதிமுகவினராக மாறுவது எதனால்?, இந்துத்துவா பற்றி கேள்வி எழுப்பும்போது அவர் இந்துத்துவாவாதியாக மாறி கேள்வி எழுப்புவது எதனால் ?, இது ஒரு சாதாரண பார்வையாளனாக பார்க்கும் நேயர்க்கு தெரியாது. அரசியல் கற்றவர்களுக்கு இது நன்றாகவே தெரியும், நுணக்கமாக ஆராயும்போது தெரிகிறது.

ஒரு கேள்விக்கான பதிலில், ஒருவன் தவறு செய்வது இயல்பு, அந்த தவறை திருத்திக்கொள்வது சிறந்தது என்கிறார் சுப.வீ. தவறு செய்திருப்பதாக குறிப்பிட்டால் திருத்திக்கொள்வேன் என்கிறார். பாராட்ட வேண்டிய ஒன்று இனி தன்னை திருத்திக்கொள்வார் என நினைத்துக்கொண்டு நிகழ்ச்சியை காண்டபோது ஜெ மற்றும் சசிகலா மீதான சொத்து குவிப்பு வழக்கு பற்றி செய்தி வாசிக்கும்போதும், விவாதம் நடத்தும் போது நீங்கள் சொத்து வழக்கு என குறிப்பிட்டு தவறு செய்கிறீர்கள் இது நியாயமா என கேள்வி கேட்டதோடு, நீங்கள் சொல்வதில் பொருள் தவறு இருக்கிறதே என ஆதாரத்தோடு குறிப்பிடுகிறார். ஆங்கில பத்திரிக்கை செய்கிறது, அதனால் நான் செய்கிறேன், அவனை யாரும் கேள்வி எழுப்புவதில்லை, என்னிடம் ஏன் கேட்கிறீர்கள் என கேட்கிறார். தவறு என சுட்டிக்காட்டியதை ஏற்றுக்கொள்ளாமல் இனிமேல் அந்த தவறை தொடர்ந்து செய்வேன் என வெளிப்படையாக சொல்லி பெரியதாக சறுக்குகிறார் பாண்டே.
திராவிடர் கழகம் வீரமணி, இந்து முன்னணி ராமகோபாலனிடம் கேள்வி கேட்கும்போது நடந்துக்கொண்ட விதம் பற்றியும், நேர்காணலின்போது மற்றவர்களை பேசவிடாமல் நீங்களே பேசுவது தவறுயில்லையா என கேள்வி எழுப்பியபோது, வீரமணியின் விளக்கத்தை ஒளிபரப்பினோம்மே என விடப்பிடியாக நின்றதும், ராமகோபாலினிடம் அவரது சீடர் போல் கேள்வி கேட்டது சரியா என்ற கேள்விக்கு, அறியா வயசு என சமாளித்தது இருக்கிறதே அப்பப்பா ஒரு அரசியல்வாதியாக உயர்ந்து நிற்கிறார். 


இதுவரை ஆராய்ந்தது போதும். இந்த நிகழ்ச்சி முடிந்தபின் மனதில் தோன்றியது நேர்காணல், விவாதம் எப்படி நடத்த வேண்டும் என்பதை தந்தி தொலைக்காட்சி ஆசிரியர் ரங்கராஜ்பாண்டேவுக்கு பேரா.சுப.வீ அவர்கள் கற்று தந்துள்ளார்.

நெறியாளர் கேள்வி கேட்டுவிட்டு, கேள்விக்கு விருந்தினர் முழுமையாக பதில் சொல்லி முடிக்கும்முன் குறுக்கிடக்கூடாது என்ற தத்துவத்தின் அடிப்படையில் சுப.வீ  சிறந்த நெறியாளராக நடந்துக்கொண்டார். அதை பாண்டே உணர்ந்திருப்பார் என நம்பலாம்.

ஒரு அரசியல்வாதி தான் தன் மீதான தவறை பொதுத்தளத்தில் ஏற்றுக்கொள்வதில்லை. அதே நிலையை தான் பாண்டே இந்த நேர்காணலில் வெளிப்படுத்தி தானும் ஒரு அரசியல்வாதி என்பதை நிறுபித்தார்.

சமீபத்தில் மறைந்த ஆதித்தனார்க்கு கவர்னர் ஆசை இருந்தது எனச்சொல்வார்கள். அவருக்கு மட்டும்மல்ல அவரது தொலைக்காட்சி ஆசிரியருக்கு எம்.பி ஆசை இருக்கும் போல. நீ இப்படியே நிகழ்ச்சியை நடத்து தல. ஒரு நாளைக்கு எம்.பியாகிடுவ.

1 கருத்து:

 1. சுபவீ திராவிட போர்வாள் என்பதெல்லாம் அந்த காலம்
  இப்போ அவர் திமுக ஜால்ரா , அல்லக்கை அவ்வளவுதான்
  .
  இது தொடர்பாக மேலும் விவாதிக்கக விரும்பினால் விவாதிக்கலாம
  .
  ரிஷபராஜ் ராஜேந்திரா

  பதிலளிநீக்கு